Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
அடிப்படை அனுபவம்
----------------------------------
பல வருடங்களின் முன் மகனுக்கு எட்டு வயதாக இருந்தது. அன்று ஒரு பிள்ளை எட்டு வயதில் எட்டு வித்தைகளையாவது கற்றுக் கொண்டிருக்க வேண்டும் என்று இந்தச் சூழலில் ஒரு நிர்ப்பந்தம் இருந்தது. எட்டு வயதில் ஒரு அஷ்டாவதானி போல. இன்று சூழலின் நிர்ப்பந்தம் இன்னும் அதிகமாகிவிட்டது. ஒவ்வொரு பிள்ளைகளையும் சதாவதானிகளாக மாற்றாமல் இது ஓயாது போல. எனக்கு இதில் துளியளவும் நம்பிக்கையும் இல்லை, கூட்டத்துடன் சேர்ந்து ஓடுவதற்கான பொறுமையும் அன்று இருந்திருக்கவில்லை.
 
ஊரில் நீச்சலை நானாகவே தான் சிறு வயதில் கற்றுக் கொண்டேன். கடலில் தான். சேர்ந்து போயிருக்கின்றோம், ஆனாலும் அவரவரே நீந்திப் பழகினோம். ஒரு நாள் இரண்டு பாகம் கடலில் கீழே மூழ்கிப் போய்க் கொண்டிருக்கும் போது தான் சுழியோடும் வித்தையை கற்றுக் கொண்டேன். அன்று அக்கணத்தில் நான் அதைக் கற்றுக் கொள்ளாதிருந்தால், இன்று இருந்திருக்கமாட்டேன், ஆனாலும், உலகத்தில் ஒரு இம்மியளவு மாற்றம் கூட இருந்திருக்காது. 99.9999999..... வீதமான மனிதர்களின் நிலை இது தான். நாங்கள் இருந்தால் என்ன, போனால் என்ன, பூமி எந்த மாற்றமும் இல்லாமல் அதே பாதையில்  உருண்டு கொண்டே இருக்கும்.
 
பந்தடி என்றால் என்ன, பனையில் ஏறுவது என்றால் என்ன, எல்லாமே அன்று அங்கே நாங்களாகவே கற்றுக் கொண்டது தான். விரும்பியவர்கள் செய்தார்கள், விரும்பாதவர்கள் செய்யாமல் விட்டார்கள். ஆனாலும் இந்த அணுகுமுறை இன்று இங்கு வேலை செய்யவே செய்யாது, ஒழுங்கு மரியாதையாக பிள்ளைகளை சில இடங்களிற்காவது கூட்டிக் கொண்டு போக வேண்டும் என்று பல முனைகளிலும் இருந்து அழுத்தங்கள் தொடர்ந்தன. முக்கியமாக ஐந்து வயதிலேயே எந்த ஆங்கிலச் சொல்லையும் எழுத்துக் கூட்டத் தெரிந்த ஒரு பிள்ளை மற்றும் அதன் பெற்றோர், கொடியைக் காட்டினால் அந்த நாட்டைச் சொல்லும் பிள்ளை மற்றும் அதன் பெற்றோர், அமெரிக்க ஜனாதிபதிகளை அதே வரிசைகளில் சொல்லும் பிள்ளை மற்றும் அதன் பெற்றோர் என்று பல வித்தைகளும் தெரிந்தோர் சுற்றிவர இருந்தனர்.
 
கால்பந்து எங்களுக்கு இரத்த ஓட்டம் மாதிரி. எப்படியும் மகனுக்கு அது அதுவாகவே வரும், வந்திருக்கும் என்று கால்பந்துப் பயிற்சிக்கு கூட்டிப் போனேன். அந்தப் பயிற்சியாளர் இங்கிலாந்தில் விளையாடினவர் என்றார்கள். அந்த வருடம் முழுவதும் பந்துடனோ அல்லது பந்தின் பின்னாலோ மகன் ஓடவில்லை. பயிற்சியாளரின் பயிற்சியின் படி அவன் எதிரணிகளின் ஒரு வீரரின் பின்னாலேயே ஓடிக் கொண்டிந்தான். மகன் நல்லா ஓடுகின்றார் என்றார் அந்தப் பயிற்சியாளர்.
 
அடுத்த வருடம், இந்தக் கொடுமைக்கு நானே பயிற்சியாளராகலாம் என்று அதற்கான வகுப்புகளை முடித்து பயிற்சியாளர் ஆகினேன். எல்லோரையும் விட உயரமாகவும், பருமனாகவும் ஒரு சிறுவனும் அணியில் இருந்தார். அந்தச் சிறுவன் தடபுட தடபுட என்று ஓடினாலேயே மற்ற எல்லா சிறுவர்களும், எதிரணி உட்பட, வழிவிட்டு ஒதுங்கினர். இடிபட்டால் சேதம் எங்கே என்று தெரிந்தே எல்லோரும் ஒதுங்கி வழிவிட்டனர்.  அந்தச் சிறுவன் மூன்றாம் நம்பர் பந்தை கால் பெருவிரலால் குத்தி  ஒரு பக்கத்திலிருந்து மற்ற பக்கத்திற்கு அனுப்பிக் கொண்டிருந்தான்.
 
இப்படி விளையாடுவதில்லை, பந்தை குத்தக் கூடாது, அடிக்க வேண்டும் என்று நான் அச் சிறுவனுடன் பகீரதப் பிரயத்தனம் செய்து கொண்டிருந்தேன். ஆனால், அவனின் பெற்றோர்களோ அல்லது மற்ற சிறுவர்களின் பெற்றோர்களோ அந்தச் சிறுவன் நல்லாகவே விளையாடுவதாக நினைத்தார்கள். சிலர் எனக்கு அதை மறைமுகமாக சொல்லக்கூட முயன்றார்கள். நான் எதையும் மாற்றத் தேவையில்லை, மாறாக அந்த பெருவிரலால் பந்தை குத்துகின்ற சிறுவனை ஊக்கப்படுத்த வேண்டும் என்றனர்.
 
இங்கு பலருக்கும் கால்பந்து விளையாட்டு தெரியாது. அதன் அடிப்படைகள் தெரியாது. மூன்றாம் நம்பர் பந்தை காலால் குத்தலாம், நாலாம் நம்பர் பந்தைக் கூட குத்தி விடலாம், ஆனால் ஐந்தாம் நம்பர் பந்தை குத்த முடியாது என்றேன். ஒவ்வொரு சந்தர்ப்பத்திற்கும், ஒவ்வொரு தூரத்திற்கும் பந்தை அடிக்கும் முறைகளே வித்தியாசமானவை என்றேன். வெளிப்பக்கம், உட்பக்கம், நடுப்பக்கம் என்று பந்தை அடிக்கும் முறைகளைத் தெரிந்து கொண்டு, அவற்றை பழக வேண்டும் என்றேன். அது எல்லாம் அனுபவத்தில் வரும் என்றனர்.
 
அடிப்படை வேறு, அனுபவம் வேறு. அடிப்படைகளை தெரிந்து கொள்ளாமல் அனுபவத்தில் எதுவும் வராது என்றேன். வெறும் கால ஓட்டம் என்பது அனுபவமே கிடையாது.
 
பதினாலு வயதின் பின் நான் அந்தச் சிறுவனை கால்பந்து விளையாட்டில் காணவேயில்லை. அந்தச் சிறுவனால் இனி இந்த விளையாட்டை விளையாடவும் முடியாது.
 
காலப்போக்கில், அனுபவம் வரவர சரியாவார்கள் என்று நாங்கள் நினைக்கும் சில மனிதர்கள், அவர்களின் அடிப்படையே தவறாக இருப்பதால், பெரும் ஏமாற்றமாகவே இறுதியில் முடிவார்கள்.
  • கருத்துக்கள உறவுகள்

கால்பந்து எங்களுக்கு இரத்த ஓட்டம் மாதிரி. 

உங்களூர் உதைபந்தாட்ட ஜம்பாவன்கள் .. எனக்கு முன்மாதிரி...வல்வை புளூசில் விளையாடிய ..அருணாசல்ம், கோல்தடுப்பளர் கார்த்தி.. ..யோகச்சந்திரன் (பீலி) ,கட்டியண்ணா... இப்படிப்பலர்...இவர்கள்   எமது மைதானத்துக்கு வருவதே ஆடம்பரமாகத்தன்..விளைய்யடுவதும் அழகுதான்..நான் கோல்காப்பளன்..சின்ன வயதிலேயே கார்த்தி என்றுதான் பட்டப்பெயர்...இந்த உதைபந்தாட்ட ஆர்வம் பதின்ம வயதிலேயே ..கோல்காப்பளனக்கிவிட்டது...வடமராட்சி  என்ன வடமாகாணம் முழுவதும் விளையாடி இருக்கின்றேன்..வடமராட்சி ஜம்பாவான்கள் றட்ணசிங்கம்..ஜோதிரவி,வேதாபர்ணம், ஜேசுதாஸ்,நேசதுரை,தருமசிறீ...இப்படிப் பலர்..அனைவரிடமும் சிறுவயதிலையே பராட்டும் பெற்றிருக்கின்றேன்...உங்கள் கதையை வாசித்ததும் பழைய நினைவுகள்   எட்டிப் பார்த்தன... கனடாவந்தும் விளையாடினேன்....

பெருவிரலால் குத்தல்....மிக அபாயகரமானது....அது தேவை ஏற்படும் போதும் மட்டும் பாவிக்கலாம் ..ஏன் அந்தப் பையன் காலணி பாவிப்பதில்லையா...இங்குதானே 5 வயதுப் பொடிமுதல் வளர்ந்தோர் வரை பாவிப்பினமே..

என்ன சொன்னாலும் உங்கள் குறுங்கதைகள்.. பழைய நினைவுகளை மீட்டுக் கவலைப்பட வைக்கின்றன..தொடருங்கள்..தொடர்வாசகனாக  தொடர்கின்றேன்

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, ரசோதரன் said:

காலப்போக்கில், அனுபவம் வரவர சரியாவார்கள் என்று நாங்கள் நினைக்கும் சில மனிதர்கள், அவர்களின் அடிப்படையே தவறாக இருப்பதால், பெரும் ஏமாற்றமாகவே இறுதியில் முடிவார்கள்.

அடிப்படை எவ்வளவு முக்கியமோ அதே அளவு அனுப்வமும் முக்கியம் என்பதனை நீங்களே பல வித்தைகளை நீங்களாகவே கற்றதாக கூறியுள்ளீர்கள் இந்த கதையின் போக்கில் கூறியுள்ளீர்கள்.

இவ்வாறு பயிற்றுனர்கள் பயிற்றிவிப்பதனை Explicit learning என கூறுகிறார்கள், ஆனால் சொந்த அனுபவத்தில் பயில்பவர்கள் சூழ்நிலைக்கேற்ப தம்மை தகவமைப்பவர்களாக உருவாகுவார்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, alvayan said:

கால்பந்து எங்களுக்கு இரத்த ஓட்டம் மாதிரி. 

உங்களூர் உதைபந்தாட்ட ஜம்பாவன்கள் .. எனக்கு முன்மாதிரி...வல்வை புளூசில் விளையாடிய ..அருணாசல்ம், கோல்தடுப்பளர் கார்த்தி.. ..யோகச்சந்திரன் (பீலி) ,கட்டியண்ணா... இப்படிப்பலர்...இவர்கள்   எமது மைதானத்துக்கு வருவதே ஆடம்பரமாகத்தன்..விளைய்யடுவதும் அழகுதான்..நான் கோல்காப்பளன்..சின்ன வயதிலேயே கார்த்தி என்றுதான் பட்டப்பெயர்...இந்த உதைபந்தாட்ட ஆர்வம் பதின்ம வயதிலேயே ..கோல்காப்பளனக்கிவிட்டது...வடமராட்சி  என்ன வடமாகாணம் முழுவதும் விளையாடி இருக்கின்றேன்..வடமராட்சி ஜம்பாவான்கள் றட்ணசிங்கம்..ஜோதிரவி,வேதாபர்ணம், ஜேசுதாஸ்,நேசதுரை,தருமசிறீ...இப்படிப் பலர்..அனைவரிடமும் சிறுவயதிலையே பராட்டும் பெற்றிருக்கின்றேன்...உங்கள் கதையை வாசித்ததும் பழைய நினைவுகள்   எட்டிப் பார்த்தன... கனடாவந்தும் விளையாடினேன்....

பெருவிரலால் குத்தல்....மிக அபாயகரமானது....அது தேவை ஏற்படும் போதும் மட்டும் பாவிக்கலாம் ..ஏன் அந்தப் பையன் காலணி பாவிப்பதில்லையா...இங்குதானே 5 வயதுப் பொடிமுதல் வளர்ந்தோர் வரை பாவிப்பினமே..

என்ன சொன்னாலும் உங்கள் குறுங்கதைகள்.. பழைய நினைவுகளை மீட்டுக் கவலைப்பட வைக்கின்றன..தொடருங்கள்..தொடர்வாசகனாக  தொடர்கின்றேன்

❤️.............

நீங்கள் விளையாடியதை நான் ஒரு ஓரத்தில் இருந்து கட்டாயம் பார்த்திருப்பேன் என்றே நினைக்கின்றேன், ஏனென்றால் இதில் நீங்கள் குறிப்பிட்டிருக்கும் அனைவரையும் பார்த்திருக்கின்றேன்.

'சாராதாஸ் இலவசம்' என்னும் இரண்டாவது குறுங்கதையில் வருவது இதில் ஒருவரே.........

அந்தச் சிறுவன் காலணியைப் போட்டுக் கொண்டே பெருவிரல் பகுதியால் குத்திக் கொண்டிருந்தார். பந்தை அடிக்க முன், ஒரு காலை ஊன்றி, உடலை சமநிலைக்கு கொண்டு வரும் அடிப்படை அந்தச் சிறுவனுக்கு கடைசிவரை வரவில்லை.  

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, vasee said:

அடிப்படை எவ்வளவு முக்கியமோ அதே அளவு அனுப்வமும் முக்கியம் என்பதனை நீங்களே பல வித்தைகளை நீங்களாகவே கற்றதாக கூறியுள்ளீர்கள் இந்த கதையின் போக்கில் கூறியுள்ளீர்கள்.

இவ்வாறு பயிற்றுனர்கள் பயிற்றிவிப்பதனை Explicit learning என கூறுகிறார்கள், ஆனால் சொந்த அனுபவத்தில் பயில்பவர்கள் சூழ்நிலைக்கேற்ப தம்மை தகவமைப்பவர்களாக உருவாகுவார்கள்.

👍.........

மிகவும் சரியான கூற்று, வசீ. அனுபவம் மிக அவசியமானது.

பல சிவில் பொறியியலாளர்களுடன் கதைக்கும் போது, இந்த இரண்டுக்கும் இடையேயான சில மோதல்களை சொல்லுவார்கள். 'என்னுடைய அனுபவம் உன்னுடைய வயதை விட அதிகம்.........' என்ற வழமையான வசனத்துடன் நிற்கும் சிலருக்கும், இவர்களுக்கும் நடக்கும் சின்ன சின்ன மோதல்கள் பற்றிச் சொல்வார்கள். வேலை முடிவில், குழாயில் தண்ணீர் எதிர்ப் பக்கமாக ஓடியது, நடுவிலேயே நின்றது போன்ற கதைகளும் உண்டு.

நீண்ட கால அனுபவம் இருந்தாலும், அதை இன்னொரு, புதிய சூழ்நிலைக்கும் ஏற்ற விதத்தில் மாற்றும் தகமை வேண்டும். அதுவே திறமை என்று சொல்லலாம்.

ஆனால், நான் சொல்ல வந்த விசயம் பந்தடி பற்றியோ அல்லது கட்டுமானம் பற்றியோ அல்ல. இன்றைய நாட்டு நடப்பை பற்றியே சொல்ல வந்தேன். ' அவர் புதிசு, அனுபவம் வர சரியாகி விடுவார், .....' என்று பலரும் சொல்கின்றனர். ஆனால் அவரின் அடிப்படையே தப்பாகத் தோன்றுகின்றது என்றே சொல்ல வந்தேன்.       

  • கருத்துக்கள உறவுகள்

எங்கள் வாழ்க்கையே யாழ் இந்துக்கல்லூரி மைதானத்துக்குள்ளேயே தொடங்கி அங்கேயே வேரூன்றி நாட்டை விட்டு வெளியேறும் வரை வேரோடு பிடுங்கி எறியப்பட்டோம் .......!

எங்களிடம் "ஸ்ரீஸ் கந்தா ஸ்போர்ட்ஸ் கிளப்" இருந்தது ........எங்கள் பொடியங்களில் நான்தான் குள்ளம் ........அதனால் கால்பந்து என்றால் நான்தான் கோல்கீப்பர் ,  கிரிக்கட் என்றால் நான்தான் அம்பயர் ......சிலசமயம் எதிரணிக்கும் நான் அம்பயர் ஆக இருப்பேன் ......(அப்பவே அவ்வளவு நேர்மை என்னிடம் வாழ்ந்து கொண்டிருந்தது) ........பின் பெரியவர்கள் கொஞ்சம் கொஞ்சமாய் மாறிப்போக கிளப்பில் தவிர்க்கமுடியாத ஆல்ரவுண்டராய் ஆனேன் .......!

நினைவுகளை மீட்டியதற்கு நன்றி ரசோ .........!  😂

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ரசோதரன் said:

❤️.............

நீங்கள் விளையாடியதை நான் ஒரு ஓரத்தில் இருந்து கட்டாயம் பார்த்திருப்பேன் என்றே நினைக்கின்றேன், ஏனென்றால் இதில் நீங்கள் குறிப்பிட்டிருக்கும் அனைவரையும் பார்த்திருக்கின்றேன்.

'சாராதாஸ் இலவசம்' என்னும் இரண்டாவது குறுங்கதையில் வருவது இதில் ஒருவரே.........

 இதில் என்ன விசேசம் என்றால்..தகப்பன்மாருடனும்  ..விளையாடி அவர்களின் பிள்ளகளுடன் நீண்டகாலம் எதிர்த்து சமர் புரிந்திருக்கின்றேன்...இந்தப்பிள்ளகளுடன் நீங்களும் சேர்ந்து விளையாடி இருந்தால்...உங்களுடனும்  விளையாடி இருப்பேன்...யாரறிவார்..

வல்வையில் இருந்து புளூசும்..உதயசூரியனும்..பிரபமான ரீம்கள்..அவர்கள்  வந்து மைதானத்துள் இறங்குவதே அழகு..தடித பவுண்  சங்கிலியும் ...பெட்டிமோதிரமும் அணிந்திருப்பார்கள்..ஜேசிகள் புதிதுபுதிதாய் மிளிரும்..புளூசில் காத்தி கோலிக்குநிற்க பழமும் அருணசல்மும் புல்பாக்..மத்தியில் மயிலேறியும் ..இடது எக்ஸ்ரீம்..பீலி..மற்றவர்களின் பெயர் மறந்துவிட்டது..

பூட்ஸ்  போட்டபின்பும் ரோவால் (பெருவிரல்) குத்துவது கள்ள இடி என்பார்கள்...சிலவேளை தண்டஉதையைக்கூட இப்படிக்குத்துவார்கல்..அது போஸ்டின்  மூலைக்குள் சென்றுவிழும்....தூரத்திற்கு அடிக்க நினைப்பது..அறியாமைதான்..

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, suvy said:

எங்கள் பொடியங்களில் நான்தான் குள்ளம் ........

🤣............

எங்கள் இருவருக்கும் சில ஒற்றுமைகள் இருக்கின்றது போல, சுவி ஐயா........

தலையையும் நீட்டாக வளர்த்துக் கொண்டு, உயரமும் சரியாகவே வரும்,  மரடோனா என்றிருக்க, இழுத்துக் கொண்டு வந்து ஃபுல் பாக்காக நிற்க வைத்துவிட்டார்கள். விளையாடிய எல்லா இடங்களிலும் இது நடந்தது.

இங்கு தென்னமெரிக்கர்கள் தான் அதிகமாக அணிகளில் இருப்பார்கள். ஒரு கடுகதிப் புகையிரதம் போல நேர வந்து மோதுவார்கள்............. உள்ளிருக்கும் ஈகோ, செருக்கு விழ விடாது.  அடி எவ்வளவு விழுந்தாலும் வீட்டில் சொல்லவும் முடியாது, அதிகமாக நொண்டவும் முடியாது.........😃.    

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, alvayan said:

இதில் என்ன விசேசம் என்றால்..தகப்பன்மாருடனும்  ..விளையாடி அவர்களின் பிள்ளகளுடன் நீண்டகாலம் எதிர்த்து சமர் புரிந்திருக்கின்றேன்...இந்தப்பிள்ளகளுடன் நீங்களும் சேர்ந்து விளையாடி இருந்தால்...உங்களுடனும்  விளையாடி இருப்பேன்...யாரறிவார்..

வல்வையில் இருந்து புளூசும்..உதயசூரியனும்..பிரபமான ரீம்கள்..அவர்கள்  வந்து மைதானத்துள் இறங்குவதே அழகு..தடித பவுண்  சங்கிலியும் ...பெட்டிமோதிரமும் அணிந்திருப்பார்கள்..

👍....

என்னுடைய காலத்தில் ஊரில் இருந்த கழகங்களில் உதயசூரியனின் விளையாட்டுத் திறமை முன் போன்று இருக்கவில்லை. ஆதிசக்தி, ஒற்றுமை, ரெயின்போ என்பன நன்றாக விளையாடிக் கொண்டிருந்தன. ஆனால், உதயசூரியன் வீரர்களின் சங்கிலிகளும், மோதிரங்களும் என்றும் மாறவில்லை..........🤣

புளூஸ் எப்போதும் போல நல்ல அணியே, எல்லா ஊர்க் கழகங்களில் இருந்தும் சிறந்த வீரர்களைத் தேர்ந்தெடுத்து உருவாக்கப்படும் அணி என்பதால்.

கழகங்களுக்கு விளையாட ஆரம்பித்து, பின் மிக விரைவிலேயே ஊரிலிருந்து வெளிக்கிட வேண்டியதாகப் போய் விட்டது.............😌

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.