Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

தமிழ் பொது வேட்பாளர் என்ற கருத்தை அடியோடு நிராகரிக்கின்றோம் - செல்வராஜா கஜேந்திரன்

இந்தத் தேர்தலிலே தமிழர்களுடைய வாக்குகளை பெற்றுக் கொள்ள விரும்புகின்ற, வெற்றி பெறக் கூடிய வேட்பாளர்களிடத்தில் தமிழர்களுடைய கோரிக்கைகளை ஏற்றுக் கொள்ளக் கூடிய சூழலை உருவாக்குவதும், அதேபோன்று இலங்கையில் தமக்கு சார்பான ஆட்சியாளர்களை தெரிவு செய்ய விரும்புகின்ற இந்திய, அமெரிக்க, ஐரோப்பிய தரப்புக்கள் தாங்கள் விரும்பிய ஒருவருக்கு தமிழர்களது வாக்குகள் செல்ல வேண்டுமாக இருந்தால் தமிழர்களுடைய கோரிக்கைகளை அங்கீகரிப்பதற்கான நிலைமைகளை ஏற்படுத்த அவர்கள் மீது ஒரு அழுத்தங்களை ஏற்படுத்த இந்த பகிஸ்கரிப்பு என்ற ஆயுதத்தை நாங்கள் கையில் எடுத்திருக்கின்றோம் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராஜா கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.

இன்றையதினம் யாழ்ப்பாணம் – கொக்குவில் பகுதியில் உள்ள அவரது கட்சி அலுவலகத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

பகிஷ்கரிப்பு என்ற முயற்சியை முழுமையாக தோற்கடித்து, தமிழர்களை ஏதோ ஒரு வகையில் இந்த தேர்தலில் வாக்களிக்க செய்வதற்கான முயற்சிகளில் பலதரப்புகளும் ஈடுபட்டு இருக்கின்றார்கள். அதிலே ஒரு சாரார் நேரடியாக பேரினவாத வேட்பாளர்களுக்கு வாக்குகளை பெற்றுக் கொடுப்பதிலும், இன்னுமொரு சாரார் தமிழ் பொது வேட்பாளர் என்ற பெயரிலே தமிழர்களுடைய வாக்குகளை குறிப்பிட்ட நபருக்கு திரட்டி கொடுக்கும் நோக்கத்தோடும் முயற்சிகளில் இறங்கி இருக்கின்றார்கள்.

அந்தவகையில் சிவில் அமைப்புகளும், காட்சிகளும் இணைந்து பொது கட்டமைப்பு என்ற பெயரிலே பொது வேட்பாளர் ஒருவரை தாங்கள் அறிமுகப்படுத்திருப்பதாக அறிவித்திருக்கின்றார்கள். தமிழரசு கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அரியனேந்திரன் அவர்களுடைய பெயர் அறிவிக்கப்பட்டிருக்கின்றது.

தமிழ் பொது வேட்பாளர் என்ற கருத்தை நாங்கள் அடியோடு நிராகரிக்கின்றோம். இவர்களுக்கும் தமிழ் மக்களுக்கும் இடையே எந்த விதமான சம்பந்தமும் கிடையாது. இதிலே ஒரு சில தரப்புகள் தம்மை சிவில் அமைப்புகள் என்று சொல்லிக் கொண்டு, ஒரு சில அரசியல் கட்சிகள் இந்திய நிகழ்ச்சி நிரலிலே, இயங்கிக் கொண்டிருக்கின்ற ஒற்றையாட்சிக்குள் தமிழர்களுடைய அரசியலை முடக்குவதற்காக கடந்த 15 வருடங்களாக செயற்பட்டு கொண்டிருக்கின்ற தரப்புக்கள், தமிழ் மக்களுடைய அபிலாசைகளுக்கு மாறாக செயல்படுகின்ற தரப்புக்கள் ஒன்று கூடி இந்த தமிழ் தேசிய அரசியலுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கின்ற நோக்கோடு, தமிழர்களை நிரந்தரமாக தோல்வியடை செய்கின்ற நோக்கத்தோடு இங்கே ஒரு வேட்பாளரை கொண்டு வந்து நிறுத்திவிட்டு அவரை பொது வேட்பாளர் என்று சொல்வதை எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது.

ஒற்றையாட்சியை ஏற்றுக்கொண்ட தரப்பினருடைய வேட்பாளராக அரியனேந்திரனை அவர்கள் ஏற்றுக்கொள்ளலாமே தவிர, அவரை தமிழ் மக்களுடைய ஒரு பொது வேட்பாளர் என ஏற்றுக்கொள்ள முடியாது என்றார்.
 

https://thinakkural.lk/article/307609

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

அதுசரி அரியனேந்திரன் பிரித்தானியாவில் அடித்த அசைலத்துக்கு என்னானது..?!

  • கருத்துக்கள உறவுகள்
Posted
12 minutes ago, nedukkalapoovan said:

அதுசரி அரியனேந்திரன் பிரித்தானியாவில் அடித்த அசைலத்துக்கு என்னானது..?!

ஏன் கோத்தபாயா அமெரிக்க சிற்றிசனாக இருந்து சனாதிபதியாகி ஆட்சி செய்யவில்லையா?🙃

  • கருத்துக்கள உறவுகள்
Posted

என்னடா? எதிர்ப்பு, மாற்று திட்டம், ஏட்டா போட்டியா கிளம்பலையே, திருந்தி விட்டார்களோ என்று நினைத்து ஆச்சரியப்பட்டேன்!  அந்தா... வந்து விட்டார்கள்! நாங்கள் தேர்தலை பகிஷ்கரித்தால்; கள்ள வாக்கு போட சந்தர்ப்பம் அளிக்கிறோம். அல்லது அப்படி நடைபெறாது என்பதற்கு உத்தரவாதம் ஏதும் உண்டா இவரிடம்? முதலில் வாக்குப்போடும் மக்களுக்காக ஒரே நேர்கோட்டில் இவர்களை பயணிக்க பயிற்சி அளியுங்கள் மக்களே! மக்களை வெறும் மந்தைக்கூட்டங்களாக அலைக்கழிக்கிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 hours ago, satan said:

என்னடா? எதிர்ப்பு, மாற்று திட்டம், ஏட்டா போட்டியா கிளம்பலையே, திருந்தி விட்டார்களோ என்று நினைத்து ஆச்சரியப்பட்டேன்!  அந்தா... வந்து விட்டார்கள்! நாங்கள் தேர்தலை பகிஷ்கரித்தால்; கள்ள வாக்கு போட சந்தர்ப்பம் அளிக்கிறோம். அல்லது அப்படி நடைபெறாது என்பதற்கு உத்தரவாதம் ஏதும் உண்டா இவரிடம்? முதலில் வாக்குப்போடும் மக்களுக்காக ஒரே நேர்கோட்டில் இவர்களை பயணிக்க பயிற்சி அளியுங்கள் மக்களே! மக்களை வெறும் மந்தைக்கூட்டங்களாக அலைக்கழிக்கிறார்கள்.

அண்ண்னிடம் எத்தினை வாக்கு இருக்கென்று கேளுங்க சாத்தான்...அப்புறம் பகிஸ்கரிப்பதை யோசிப்பம்..

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஹாஹா ....எதுவும் இல்லாதவர்கள் தான் எல்லாம்  இருப்பதாக பாவ்லா காட்டி, மக்களை  திசை திருப்புவது. மக்கள் தான் வாக்களிப்பது, இவர்கள் மக்களை கேட்டு அறிக்கை விடுவதுமில்லை, மக்கள்  பேரம் பேசச்சொல்லி இவர்களை  கேட்பதுமில்லை.  இவர்கள் சொல்வதையெல்லாம் கேட்கும் காலம் கடந்துவிட்டது, இவர்கள் தமக்காக ஒன்று சேராதவரை. 



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.