Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Published By: DIGITAL DESK 7   18 AUG, 2024 | 11:04 AM

image

(நா.தனுஜா)

சர்வதேச வலிந்து காணாமலாக்கப்பட்டோர் தினமான எதிர்வரும் 30ஆம் திகதியன்று வட, கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத்தினால் கிளிநொச்சி கந்தசாமி ஆலயத்திலிருந்து டிப்போ சந்தி வரை விசேட கவனயீர்ப்புப் பேரணி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

யுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டு 15 வருடங்கள் கடந்திருக்கும் நிலையில், கடந்த கால மீறல்கள் மற்றும் மனிதகுலத்துக்கு எதிரான குற்றங்கள் தொடர்பில் இன்னமும் பொறுப்புக்கூறல் உறுதிசெய்யப்படவில்லை. அதேவேளை நாட்டில் யுத்தம் இடம்பெற்ற காலப்பகுதியிலும், இறுதிக்கட்ட யுத்தத்தின்போதும் வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களுக்கு என்ன நேர்ந்தது என்ற உண்மையை வெளிப்படுத்துமாறும், தமக்குரிய நீதியை நிலைநாட்டுமாறும் கோரி வட, கிழக்கு மாகாணங்களில் வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் 2000 மேலாக தொடர் கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.

இவ்வாறானதொரு பின்னணியில் ஆகஸட் மாதம் 30ஆம் திகதி சர்வதேச வலிந்து காணாமலாக்கப்பட்டோர் தினமாக பிரகடனப்படுத்தப்பட்டிருக்கும் நிலையில், அன்றைய தினம் கடந்த வருடங்களைப் போன்று விசேட கவனயீர்ப்புப் பேரணியை முன்னெடுப்பதற்கு வட, கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கம் தீர்மானித்துள்ளது.

அதற்கமைய எதிர்வரும் 30ஆம் திகதி காலை 9.30 மணிக்கு கிளிநொச்சி கந்தசாமி ஆலயம் முன்பாக திரளவுள்ள வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் காலை 10.00 மணிக்கு டிப்போ சந்தியை நோக்கிப் பேரணியாகச் சென்று, அங்குள்ள ஐக்கிய நாடுகள் சபை கிளை அலுவலகத்தின் அதிகாரிகளிடம் தமக்கான நீதியைக் கோரி மகஜரொன்றையும் கையளிக்கவுள்ளனர்.

'வட, கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த தமிழ் உறவுகளினதும், ஏனைய சகல தரப்பினரதும் ஆதரவுடன் 2017ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 20ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட எமது கவனயீர்ப்புப் போராட்டம் எதிர்வரும் 30ஆம் திகதியுடன் 2749ஆவது தினத்தைப் பூர்த்திசெய்யவுள்ள நிலையில், அன்றைய தினம் எமது போராட்டத்தில் கலந்துகொண்டு ஆதரவு வழங்குமாறு சகல தரப்பினரிடமும் கேட்டுக்கொள்கின்றோம்' என வட, கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கம் அழைப்புவிடுத்துள்ளது. 

https://www.virakesari.lk/article/191350

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

30 ஆம் திகதி யாழில் போராட்டம்

Published By: DIGITAL DESK 3   26 AUG, 2024 | 04:10 PM

image
 

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் சர்வதேச தினமான எதிர்வரும் 30ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் மாபெரும் போராட்டத்தினை முன்னெடுக்கவுள்ளதாக வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத்தினர் அறிவித்துள்ளனர். 

யாழ். ஊடக அமையத்தில் இன்று திங்கட்கிழமை (26) நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே போராட்டம் தொடர்பில் அறிவித்துள்ளனர். 

யுத்தம் நிறைவுக்கு வந்த நாட்கள் தொடக்கம் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட எமது உறவுகளை தேடி போராடி வருகிறோம்.இது வரையில் எமக்கான நீதி கிடைக்கப்பெறவில்லை. 

உள்ளக விசாரணைகளின் ஊடாக நீதி கிடைக்கும் என நாங்கள் நம்பவில்லை எனவே தான் நாம் சர்வதேச விசாரணைகளை கோரி போராட்டங்களை முன்னெடுத்து வருகிறோம். 

அந்த வகையில் எதிர்வரும் 30ஆம் திகதி வடக்கில் யாழ்ப்பாணத்திலும் கிழக்கில் திருகோணமலையிலும் போராட்டங்களை முன்னெடுக்கவுள்ளோம். 

எமது போராட்டத்திற்கு தமது அரசியல் நிலைப்பாடுகளை கடந்து கட்சி பேதங்கள் இன்றி அனைத்து தரப்பினரும் ஆதரவு வழங்க வேண்டும். 

அரசில் கட்சிகள், சிவில் அமைப்புக்கள், பல்கலைக்கழக மாணவர்கள், சங்கங்கள் என அனைத்து தரப்பினரனும் எமது போராட்டத்திற்கு வலு சேர்க்க தமது ஆதரவுகளை வழங்கி போராட்டத்தில் கலந்து கொண்டு எமது குரலை சர்வதேசத்திற்கு கேட்குமாறு கூற வேண்டும் என வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் கேட்டுக்கொண்டுள்ளன. 

அதேவேளை, குரல் அற்றவர்களின் குரல் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் முருகையா கோமகன்,  அகில இலங்கை தொழிலாளர் சமூகங்களின் கூட்டமைப்பின் தேசிய அமைப்பாளர் என்.வி.சுப்பிரமணியன் மற்றும் அகில இலங்கை மீனவர் மக்கள் தொழிற்சங்க வடமாகாண இணைப்பாளர் அன்னலிங்கம் அன்னராசா ஆகியோரும் குறித்த ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு போராட்டத்திற்கு தமது அமைப்புக்கள் சார்ந்த ஆதரவை தெரிவித்துள்ளனர். 

https://www.virakesari.lk/article/192035

  • கருத்துக்கள உறவுகள்

யாழில் 30ஆம் திகதி மாபெரும் போராட்டத்திற்கு அழைப்பு-காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள்!

யாழில் 30ஆம் திகதி மாபெரும் போராட்டத்திற்கு அழைப்பு-காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள்!

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் சர்வதேச தினமான எதிர்வரும் 30ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் மாபெரும் போராட்டத்தினை முன்னெடுக்கவுள்ளதாக வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.

யாழ் . ஊடக அமையத்தில் இன்றைய தினம் திங்கட்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே போராட்டம் தொடர்பில் அறிவித்துள்ளனர்.

அதன்படி யுத்தம் நிறைவுக்கு வந்த நாட்கள் தொடக்கம் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட எமது உறவுகளை தேடி போராடி வருகிறோம்.இது வரையில் எமக்கான நீதி கிடைக்கப்பெறவில்லை.

உள்ளக விசாரணைகளின் ஊடாக நீதி கிடைக்கும் என நாங்கள் நம்பவில்லை எனவே தான் நாம் சர்வதேச விசாரணைகளை கோரி போராட்டங்களை முன்னெடுத்து வருகிறோம்

அந்த வகையில் எதிர்வரும் 30ஆம் திகதி வடக்கில் யாழ்ப்பாணத்திலும் கிழக்கில் திருகோணமலையிலும் போராட்டங்களை முன்னெடுக்கவுள்ளோம்.

மேலும் எமது போராட்டத்திற்கு தமது அரசியல் நிலைப்பாடுகளை கடந்து கட்சி பேதங்கள் இன்றி அனைத்து தரப்பினரும் ஆதரவு வழங்க வேண்டும் என அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

https://athavannews.com/2024/1397129

  • கருத்துக்கள உறவுகள்
On 18/8/2024 at 12:30, ஏராளன் said:

'வட, கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த தமிழ் உறவுகளினதும், ஏனைய சகல தரப்பினரதும் ஆதரவுடன் 2017ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 20ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட எமது கவனயீர்ப்புப் போராட்டம் எதிர்வரும் 30ஆம் திகதியுடன் 2749ஆவது தினத்தைப் பூர்த்திசெய்யவுள்ள நிலையில், அன்றைய தினம் எமது போராட்டத்தில் கலந்துகொண்டு ஆதரவு வழங்குமாறு சகல தரப்பினரிடமும் கேட்டுக்கொள்கின்றோம்' என வட, கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கம் அழைப்புவிடுத்துள்ளது. 

ஆஹா, அருமையான சந்தர்ப்பம். இந்தியப் பெரியண்ணாவுக்கும் சர்வதேச ஜனநாயகவாதிகளுக்கும் தமிழர்களது பலத்தையும் ஒற்றுமையையும் காட்ட அரிதான சந்தர்ப்பம் கிடைத்துருக்கிறது. எல்லோரும் ஒன்றாக, குறிப்பாக பொது வேட்பாளர், அவரை முன் மொழிந்த முதிர்ந்த பழுத்த அரசியல்வாதிகள், சிவில் அமைப்புக்கள், அரசியல் வித்தகர் நிலாந்தன் எல்லோரும் வாருங்கள். 30ந் திகதி வீதியில் இறங்கிப் போராட  ஒன்றாகத் திரண்டு வாருங்கள். எந்த மக்களை ஒற்றுமையாக ஓரணியில் திரளச் சொன்னீர்களோ அவர்களே உங்களை அழைக்கிறார்கள். வாருங்கள். வந்து மக்களுக்காகப் போராடுங்கள். ஒருவேளை நீங்கள் வருவீர்களானால், 50 வீத வாக்குகள் கிடைக்கும்  என்று சிவசக்தி ஆனந்தன் சொன்ன மாதிரி இல்லாமல்  80 வீதமான வாக்குகளோ அதற்கு மேலான வாக்குகள் கூடக் கிடைக்க வாய்ப்பிருக்கு.

வெல்க தமிழ் என்று  முழங்கு சங்கே

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் சர்வதேச தினமான ஆகஸ்ட் 30ஆம் திகதி கிளிநொச்சியில் மாபெரும் போராட்டம்

Published By: VISHNU   28 AUG, 2024 | 02:38 AM

image

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் சர்வதேச தினமான ஆகஸ்ட் 30ஆம் திகதி கிளிநொச்சியில் மாபெரும் போராட்டத்தினை முன்னெடுக்கவுள்ளதாக வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் வடகிழக்கு மாகாண சங்கம் அறிவித்துள்ளது.

யாழ்.ஊடக அமையத்தில் செவ்வாய்க்கிழமை (27) நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அறிவித்துள்ளனர்.

எதிர்வரும் 30ஆம் திகதி காலை 9.30 மணிக்கு கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயம் முன்பாக போரட்டம் ஆரம்பமாகி, அங்கிருந்து பேரணியாக டிப்போ சந்தியை நோக்கி சென்று, அங்கு ஐக்கிய நாடுகள் மனிதவுரிமை சபைக்கான மகஜர் கையளிக்கப்படவுள்ளது.

குறித்த போராட்டத்தில் கட்சி பேதங்களை கடந்து, அனைத்து அரசியல் கட்சியினரும், சிவில் சமூகங்கள், பொது அமைப்புக்கள், பல்கலைக்கழக மாணவர்கள், சங்கங்கள் என அனைத்து தரப்பினரும் கலந்து கொண்டு ஆதரவு தர வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளனர். 

அதேவேளை எதிர்வரும் 30ஆம் திகதி யாழ்ப்பாணம் மற்றும் திருகோணமலையில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் போராட்டங்களை முன்னெடுக்க உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/192176

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் திருகோணமலையில் போராட்டம்

Published By: DIGITAL DESK 7   30 AUG, 2024 | 12:16 PM

image
 

திருகோணமலையில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினர் இன்று வெள்ளிக்கிழமை (30) போராட்டத்தில் ஈடுபட்டனர். 

இந்த போராட்டத்தில் கிழக்கு மாகாணத்தை சேர்ந்த உறவுகள் கலந்துகொண்டனர்.

பன்னாட்டு சமூகத்தின் நீதிக்கான தலையிடலை வலியுறுத்தி இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டவர்களின் தினத்தை முன்னிட்டு இந்த போராட்டம் திருகோணமலை கடற்கரைக்கு முன்னால் இடம்பெற்றது.

“OMP ஒரு ஏமாற்று நாடகம்”, ”காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு இன்னும் நீதி இல்லை”, “சர்வதேச நீதி மற்றும் பொறுப்புக்கூறலை நாங்கள் கோருகிறோம்” உள்ளிட்ட வாசகங்களை ஏந்தியும், ஈகைச் சுடரினை ஏற்றியும் கண்ணீருடன் நீதி கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன்போது பொலிஸாருக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையில் முறுகல் நிலையும் ஏற்பட்டது. 

IMG_20240830_112655.jpg

https://www.virakesari.lk/article/192375

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வலிந்து காணாமலாக்கப்பட்டோர் தினத்தில் ஆர்ப்பாட்டம் - திருகோணமலையில் ரஜீவ்காந் கைது

30 AUG, 2024 | 12:46 PM
image
 

திருகோணாமலையில் வலிந்து காணாமலாக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட  அரகலய செயற்பாட்டாளர் ரஜீவ்காந் ராஜ்குமார் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

https://www.virakesari.lk/article/192380

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினம்; யாழில் மாபெரும் ஆர்ப்பாட்டம்

Published By: DIGITAL DESK 7   30 AUG, 2024 | 02:45 PM

image
 

சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தில், வடமாகாணத்தின் ஐந்து மாவட்டங்களையும் சேர்ந்த வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளால் யாழ்ப்பாணத்தில் இன்று வெள்ளிக்கிழமை (30) மாபெரும் ஆர்ப்பாட்டப் பேரணியொன்று முன்னெடுக்கப்பட்டது.

அந்தவகையில், யாழ்ப்பாணம் - ஸ்ரான்லி வீதியில் அமைந்துள் ஆரியகுளம் ஸ்ரீ ஞானவைரவர் ஆலய வளாகத்திலிருந்து ஆரம்பமான குறித்த ஆர்ப்பாட்டப்பேரணி, முனியப்பர் கோவில் வரையில் இடம்பெற்றது.

குறித்த, ஆர்ப்பாட்டப் பேரணியில் ஈடுபட்ட ஆர்ப்பாட்டக்காரர்கள், வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளை கையளிக்க வலியுறுத்தும் வகையிலான பதாதைகளைத் தாங்கியவாறும், கோசங்களை எழுப்பியவாறும் ஆர்ப்பாட்டப் பேரணியில் ஈடுபட்டனர்.

அத்தோடு, ஐந்து மாவட்டங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தி காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் ஐவர் தீச்சட்டி ஏந்தி ஆர்ப்பாட்டப் பேரணியில் ஈடுபட்டிருந்தனர். ஆர்ப்பாட்டபேரணியின் முடிவில் 'நீதி?'  என எழுதப்பட்ட பாத்திரமொன்றினுள் ஆர்ப்பாட்டக் காரர்களால் தீச்சுடரேற்றப்பட்டு தமக்கான நீதியை வலியுறுத்தும் செயற்பாட்டிலும் ஈடுபட்டிருந்தனர்.

மேலும், இவ்வார்ப்பாட்டப்பேரணியில் வடமாகாணத்தின் ஐந்து மாவட்டங்களைச் சேர்ந்த வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளுடன், அரசியல் பிரதிநிதிகள், சமூகமட்ட பிரதிநிதிகள், உள்ளிட்ட பெருமளவானோர் பங்கேற்றிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/192387

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு நீதி வேண்டி யாழ். பல்கலைக்கழகத்தில் போராட்டம்

Published By: DIGITAL DESK 7  30 AUG, 2024 | 03:37 PM

image
 

அனைத்துலக வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரது தினமானது இன்று வெள்ளிக்கிழமை (30)  சர்வதேச ரீதியாக அனுஷ்டிக்கப்படுகிறது.

அந்தவகையில் யாழ்ப்பாணம் பல்கலைக் கழகத்திற்கு முன்னால், காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு நீதி வேண்டி போராட்டம் ஒன்று இன்று மதியம் முன்னெடுக்கப்பட்டது. இந்த போராட்டமானது யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்டது.

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பதாதைகளை ஏந்தி, வாய்களை கறுப்பு துணியால் கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தலைவர் துவாரகன், பல்கலைக்கழக ஒன்றியத்தின் செயலாளர் சிந்துஜன், கலைப்பீட மாணவர் ஒன்றியம் தலைவர் நெவில்குமார், விஞ்ஞானபீட மாணவர் ஒன்றியத்தின் தலைவர் விதுசன் மற்றும் மாணவர்கள் இந்த போராட்டத்தில் கலந்துகொண்டனர்.

IMG-20240830-WA0140.jpg

IMG-20240830-WA0143.jpg

IMG-20240830-WA0137.jpg

IMG-20240830-WA0142.jpg

IMG-20240830-WA0149.jpg

IMG-20240830-WA0139.jpg

IMG-20240830-WA0141.jpg

IMG-20240830-WA0145__1_.jpg

https://www.virakesari.lk/article/192391

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தில் வவுனியாவில் மாபெரும் போராட்டம்

Published By: DIGITAL DESK 7   30 AUG, 2024 | 02:48 PM

image
 

சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினமான இன்று வெள்ளிக்கிழமை (30)  தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்டோரின் சங்கத்தினரால் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது.

குறித்த போராட்டமானது வவுனியா தபால் திணைக்களத்தின் அருகில் 2,750வது நாளாக காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் சுழற்சிமுறை போராட்டத்தில் ஈடுபடும் கொட்டகைக்கு முன்பாக இடம்பெற்றது.

இதன் போது எங்கே எங்கே உறவுகள் எங்கே கையில் ஒப்படைக்கப்பட்ட உறவுகள் எங்கே என்று கோஷங்களை எழுப்பியிருந்ததுடன், ஐரோப்பிய ஒன்றிய மற்றும் அமெரிக்க கொடிகளை தாங்கியவாறும், காணாமல் ஆக்கப்பட்ட தங்களது உறவுகளின் படங்களை ஏந்தியவாறும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

IMG_20240830_112357.jpg

IMG_20240830_112544.jpg

IMG_20240830_112459.jpg

IMG_20240830_112523.jpg

IMG_20240830_112152.jpg

https://www.virakesari.lk/article/192397

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

யாழில் இடம்பெற்ற காணாமல் ஆக்கப்பட்டோரது போராட்டம்!

Published By: DIGITAL DESK 7    30 AUG, 2024 | 03:55 PM

image
 

சர்வதேச வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் தினமான இன்று யாழ்ப்பாணத்தில் வடக்கு கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகள் சங்கத்தின் ஏற்பாட்டில் பேரணி முன்னெடுக்கப்பட்டது.

யாழ்ப்பாணம் ஆரிய குளம் சந்தியில் இன்று வெள்ளிக்கிழமை (30)  காலை 11 மணியளவில் ஆரம்பமான பேரணி பருத்தித்துறை வீதி - ஆஸ்பத்திரி வீதி - காங்கேசன்துறை வீதி ஊடாக முனியப்பர் கோவிலடியை அடைந்தது.

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு என்ன நடந்தது என்பதற்கு சர்வதேச விசாரணையை வலியுறுத்தி பேரணி இடம்பெற்றது.

பேரணியில் வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகள், சிவில் சமூகத்தினர், அரசியல்வாதிகள், பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

IMG-20240830-WA0195.jpg

IMG-20240830-WA0187.jpg

IMG-20240830-WA0185.jpg

IMG-20240830-WA0188.jpg

IMG-20240830-WA0191.jpg

IMG-20240830-WA0184.jpg

IMG-20240830-WA0194.jpg

455824001_487928364199983_70599307341520

IMG-20240830-WA0186.jpg

https://www.virakesari.lk/article/192402

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வலிந்து காணாமலாக்கப்படல்களால் பாதிக்கப்பட்டோருக்கான சர்வதேச தினத்தை முன்னிட்டு வட, கிழக்கில் கவனயீர்ப்புப் போராட்டங்கள்

Published By: VISHNU   30 AUG, 2024 | 08:54 PM

image
 

வலிந்து காணாமலாக்கப்படல்களால் பாதிக்கப்பட்டோருக்கான சர்வதேச தினமான வெள்ளிக்கிழமை (30) வடக்கு, கிழக்கு மாகாணங்களைச்சேர்ந்த வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளால் கிளிநொச்சி, யாழ்ப்பாணம், வவுனியா, திருகோணமலை உள்ளிட்ட பகுதிகளில் ஒன்றிணைந்தும், குழுக்களாகவும் கவனயீர்ப்புப்போராட்டங்களும், பேரணிகளும் முன்னெடுக்கப்பட்டன.

யாழ்ப்பாணம்

அதன்படி வடக்கு, கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத்தின் ஏற்பாட்டில் வெள்ளிக்கிழமை (30) மு.ப 11 மணியளவில் யாழ்ப்பாணம், ஆரிய குளம் சந்தியில் ஆர்மபமான பேரணி பருத்தித்துறை வீதி - ஆஸ்பத்திரி வீதி - கங்கேசன்துறை வீதி ஊடாக முனியப்பர் கோவிலடியை அடைந்தது. பேரணியில் கலந்துகொண்ட வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் தீச்சட்டி ஏந்திச் சென்றதுடன், பேரணியின் முடிவில் தமக்கான நீதி கிடைக்கும் வரை போராட்டங்களைத் தொடர்வதாக அக்கினி சாட்சியாக உறுதி எடுத்தனர்.

கிளிநொச்சி

வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளால் கிளிநொச்சி கந்தசாமி கோவில் முன்பாகக் கவனயீர்ப்புப்போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து அங்கு கூடியிருந்தவர்கள் கிளிநொச்சி மீனாட்சி அம்மன் ஆலயம் வரை பேரணியாகச்சென்று, காணாமலாக்கப்பட்டவர்கள் மீளத்திரும்பிவரவேண்டும் எனப் பிரார்த்தித்து தேங்காய் உடைத்தனர்.

 வவுனியா

அதேபோன்று வவுனியா தபால் திணைக்களத்துக்கு அருகில் வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் சுழற்சிமுறை போராட்டத்தில் ஈடுபடும் கொட்டகைக்கு முன்பாக நேற்றைய தினமும் கவனயீர்ப்புப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இதன்போது ஐரோப்பிய ஒன்றிய மற்றும் அமெரிக்கக் கொடிகளையும், வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் புகைப்படங்களையும் கைகளில் ஏந்தியவாறு 'எங்கே எமது உறவுகள்?', 'கையில் ஒப்படைக்கப்பட்ட உறவுகள் எங்கே?' எனக் கோஷங்களை எழுப்பியவாறு அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருகோணமலை

 கிழக்கு மாகாணத்தின் திருகோணமலை, மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களைச்சேர்ந்த வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்களால் வெள்ளிக்கிழமை (30) திருகோணமலை கடற்கரையில் அமைந்துள்ள வெலிக்கடை தியாகிகள் நினைவு திறந்தவெளி அரங்கிற்கு அண்மையில் பொலிஸாரின் தடையுத்தரவையும் மீறி கவனயீர்ப்புப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

 இதன்போது 'எமது உறவுகளுக்கு நீதி வேண்டும்', 'காணாமலாக்கப்பட்ட எமது உறவுகள் எங்கே?', 'சர்வதேச விசாரணையே வேண்டும்', 'காணாமல்போனோர் பற்றி அலுவலகம் வேண்டாம்' 'மரணச்சான்றிதழ் வேண்டாம்' என்ற கோஷங்களை எழுப்பியும், தமது உறவுகளின் புகைப்படங்கள், பதாதைகள் மற்றும் தீச்சட்டிகளை ஏந்தியும் அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டக்காரர்கள் பிரட்ரிக் கோட்டை வீதி வழியாக வெலிக்கடை தியாகிகள் நினைவு திறந்த வெளி அரங்கிற்கு செல்ல முற்பட்டபோது பொலிசாரினால் தடுத்து நிறுத்தப்பட்டனர். இதனால் அவ்விடத்தில் சில மணிநேரம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஆர்ப்பாட்டக்காரர்கள் பின்னர் அங்கிருந்து திரும்பி வந்து கடற்கரை ஓரமாக வெலிக்கடை தியாகிகள் அரங்கிற்கு சென்று தீபச்சுடர் ஏற்றி காணாமலாக்கப்பட்ட தமது உறவுகளுக்கான நீதிகோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதுடன் குறித்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டிருந்தபோது பொலிசாரினால் கைதுசெய்யப்பட்ட ரஜீவ்காந்த் என்பவரை விடுதலை செய்யக்கோரியும் விடுதலை செய்யும்வரை அவ்விடத்தில் இருந்து நகரமாட்டோம் என அவ்விடத்தில் அமர்ந்தவாறு கோசங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்ட ரஜீவ் காந்தை விடுதலை செய்யப்பட்ட பின்னர் வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கங்களின் தலைவிமார்களினால் மகஜர் ஒன்றும் வாசிக்கப்பட்டு திருகோணமலை மாவட்ட மறைமாவட்ட ஆயரின் ஊடாக ஐக்கிய நாடுகள் சபைக்கு அனுப்பிவைக்குமாறு அவ்விடத்திற்கு வருகை தந்திருந்த அருட்தந்தையர்களிடம் கையளிக்கப்பட்டது.

 கொழும்பு

அதேவேளை 1980 களில் ஜனதா விமுக்தி பெரமுன (மக்கள் விடுதலை முன்னணி) கிளர்ச்சியின்போது வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் காணாமல்போனோர் ஒன்றியத்தினால் வெள்ளிக்கிழமை (30) கொழும்பில் கவனயீர்ப்புப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டதுடன், கொழும்பில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் சபை அலுவலகம் மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட சர்வதேச நாடுகளின் தூதரகங்களிடம் பாதிக்கப்பட்ட தரப்பினருக்கான நீதிகோரி மகஜரொன்றும் கையளிக்கப்பட்டது.

இவ்வாறு நாட்டின் வட, கிழக்கு மாகாணங்களிலும், கொழும்பிலும் முன்னெடுக்கப்பட்ட கவனயீர்ப்புப்போராட்டங்கள் மற்றும் பேரணிகளில் வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள், மதகுருமார், சிவில் சமூகப்பிரதிநிதிகள், அரசியல்வாதிகள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/192433

  • கருத்துக்கள உறவுகள்

457733165_525776636789509_91264958966487

என் வீட்டில் திருடன் வந்து திருடினான்.
நான் “திருடன்” “திருடன்” என்று கத்தினேன்.
உடனே பொலிசார் என்னை கைது செய்தார்கள்.
நான் அமைதிக்கு பங்கம் விளைவித்ததாக என் மீது குற்றம் சுமத்தப்பட்டது.
இது ஒரு கவிஞரின் கவிதை வரிகள்.

ஆனால் இதே போன்ற சம்பவங்கள் உண்மையாகவே எம் நிலத்தில் நடக்கின்றது.
காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் கடந்த 2500 நாட்களுக்கு மேலாக போராடி வருகின்றனர்.
இதுவரை அவர்களுக்கு எந்த அரசும் பதில் வழங்கவில்லை. நீதி வழங்கவில்லை.
ஆனால் அவர்களின் அடையாள நிகழ்வில் பங்குபற்றியவர்களை கைது செய்து மிரட்டுகின்றனர்.
திருமலையில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் நிகழ்வில் பங்குபற்றிய ராஜீவ்காந்த் என்பவரை கைது செய்துள்ளனர்.
இதற்கு முன்னரும் இவர் கொழும்பில் மக்கள் ஆர்ப்பாட்டத்தில் பங்கு பற்றியபோது பொலிசாரால் கைது செய்யப்பட்டிருக்கிறார்.
மக்களுக்காக போராடுபவர்களை கைது செய்வதன் மூலம் மக்கள் போராட்டங்களை அடக்க முனைகிறது சிங்கள அரசு.

தோழர் பாலன்

  • கருத்துக்கள உறவுகள்

 

யாழ் . பல்கலை முன்றலில் போராட்டம்

adminAugust 31, 2024
4-3-1170x659.jpg

சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரது தினமான நேற்றையதினம் யாழ்ப்பாணம் பல்கலைக் கழகத்திற்கு முன்னால், காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு நீதி வேண்டி போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பதாதைகளை ஏந்தி, வாய்களை கறுப்பு துணியால் கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பல்கலைக்கழக மாணவர்கள் , விரிவுரையாளர்கள், காணாமல் ஆக்கப்பட்டோரது உறவுகள், ஊழியர் சங்கத்தினர் ஆகியோர் இந்த போராட்டத்தில் கலந்துகொண்டனர்

4-1-800x450.jpg4-2-800x450.jpg

 



https://globaltamilnews.net/2024/206267/

 

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.