Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

gender-equality.jpg?resize=750,375

பால் சமநிலையை பேணத் தவறிய தமிழ் அரசியல்! நிலாந்தன்.

அண்மையில், தமிழ் கட்சிகளையும் குடிமக்கள் சமூகத்தின் பிரதிநிதிகளையும் சந்தித்த ஐரோப்பிய நாடு ஒன்றின் ராஜதந்திரிகள் தங்களைச் சந்தித்த தமிழ் அரசியல்வாதிகள் மற்றும் சிவில் சமூகப் பிரதிநிதிகள் மத்தியில் ஏன் ஒரு பெண்கூட இல்லை என்று கேட்டிருக்கிறார்கள்.

அவரை சந்தித்து குழுவில் மட்டுமல்ல, அண்மையில் உருவாக்கப்பட்டுள்ள தமிழ்த் தேசியப் பொதுக் கட்டமைப்பு என்று அழைக்கப்படுகின்ற மக்கள் அமைப்புக்கும் கட்சிகளுக்கும் இடையிலான கட்டமைப்புக்குள் மொத்தம் 14 பேர்கள் உண்டு. அதில் ஒருவர் கூட பெண் இல்லை. அதுபோலவே தமிழ் கட்சிகள் மத்தியில் தலைமை பொறுப்பில் உள்ளவர்கள் என்று பார்த்தால் அனந்தி சசிதரனின் கட்சியைத் தவிர ஏனைய பெரும்பாலான கட்சிகளில் மேல்நிலைப் பொறுப்புகளில் பெண்கள் இல்லை.

இவை விட முக்கியமாக அண்மையில் ஜனாதிபதித் தேர்தலுக்காக வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்த மொத்தம் 39 பேர்களில் ஒருவர் கூட பெண் இல்லை என்பதையும் இங்கு சுட்டிக்காட்ட வேண்டும்.

அதே சமயம் சிவில் சமூகங்கள்,செயற்பாட்டாளர்கள்,மாணவர்கள், தொழிற்சங்கங்கள் போன்றவற்றை ஒன்றிணைத்து உருவாக்கப்பட்ட தமிழ் மக்கள் பொதுச்சபை என்ற தமிழ் மக்கள் மத்தியில் தோன்றிய ஆகப்பிந்திய மக்கள் அமைப்புக்குள் ஒப்பிட்டுளவில் பெண்களின் தொகை அதிகமாக உள்ளது.அந்த அமைப்பு ஒப்பிட்டுளவில் பால் சமநிலையைப் பேண முயற்சிக்கின்றது.ஆனால் கட்சி அரசியல்வாதிகளின் மத்தியில் பால் சமநிலை மிக குறைவாகவே காணப்படுகின்றது.

வெளிநாட்டுத் தூதரகங்களின் சந்திப்புகளில் அல்லது வெளிநாட்டு தூதுவர்கள் வரும்போதெல்லாம் ஆகக்கூடியபட்சம் பால் சமநிலையைப் பேண முயற்சிக்கிறார்கள்.

தமிழ் அரசியலில் பெண்களின் வகிபாகம் என்பது கடந்த 15 ஆண்டுகளில் ஒப்பீட்டளவில் குறைவாக உள்ளது எனலாம். உள்ளூராட்சி மன்றங்களில் 25 வீதம் பெண் வேட்பாளர்களுக்கு ஒதுக்கப்பட வேண்டும் என்ற சட்டம் உண்டு. அந்தச் சட்டம் காரணமாகவே பெண்களை அதிகமாக உள்வாங்க வேண்டிய ஒரு தேவை கட்சிகளுக்கு ஏற்பட்டது. ஆனால் எத்தனை கட்சிகள் பொருத்தமான பெண் ஆளுமைகளை உள்வாங்கியுள்ளன? என்ற கேள்வி உண்டு. பெண்கள் மத்தியில் தலைமைத்துவ பண்பு மிக்கவர்கள் குறைவு என்று யாராவது சொல்வார்களாக இருந்தால், திருப்பிக் கேட்கலாம் ஆண்கள் மத்தியில் மட்டும் அவ்வாறு தலைமை பண்புள்ளவர்கள் அதிகமாக உண்டா? அப்படி இருந்திருந்தால் ஏன் கட்சிகள் இப்படிச் சிதறிக் காணப்படுகின்றன? ஏன் கட்சிகள் நீதிமன்றம் ஏறுகின்றன?

ஆனால் 2009க்கு முன்பு ஆயுதப் போராட்டத்தில் கணிசமான அளவுக்கு பெண் போராளிகள் காணப்பட்டார்கள்.யுத்த களங்களில் பெண்கள் வீரதீரச் செயல்களைச் செய்தார்கள். பெருமளவுக்கு ஆண் மையச் சமூகமாகிய தமிழ்ச் சமூகத்தில் பெண்கள் அவ்வாறு துணிந்து முன்வந்தமையும் கற்பனை செய்ய முடியாத வீரத்தை வெளிக்காட்டியமையும் தியாகங்களை செய்தமையும் தமிழ் நவீன வரலாற்றில் ஒரு பெருந்திரூப்பம் என்றே கூறலாம். ஆனால் ஆயுதப் போராட்டம் தோற்கடிக்கப்பட்ட பின் நிலைமை தலைகீழாகிவிட்டது.

புனர்வாழ்வு பெற்ற ஒரு பெண் போராளி ஒரு முறை ஒரு கதிரையை வைத்து அதில் ஏறி,ஓரமாக நின்ற பப்பா மரத்தில் ஒரு பழத்தைப் பிடுங்க முயற்சித்திருக்கிறார். அவருடைய தாயார் அவரை எச்சரித்திருக்கிறார். “அயலில் இருப்பவர்கள் கண்டால் என்ன நினைப்பார்கள் இறங்கு, அதில் ஏறி நிக்காதே” என்று. அந்தப் பெண் தனது நண்பர் ஒருவரிடம் கூறியுள்ளார் “இயக்கத்தில் இருந்த காலத்தில் தென்னை மரம் ஏறிதேங்காய் பிடுங்கியவர்கள் நாங்கள். ஆனால் கதிரை வைத்து மதிலில் ஏறி பப்பாப் பழம் பிடுங்க வேண்டாம் என்று எனது தாயார் கூறுகிறார்” என்று.

அவருடைய கவலை நியாயமானது. ஆனால் எந்தக் குடும்பங்களில் இருந்து பெண்கள் ஆயுதப் போராட்டத்திற்கு போனார்களோ,அதே குடும்பங்களில் பால் சமத்துவம் தொடர்பான விழிப்பு உருவாக்கப்பட்டுள்ளதா என்று கேள்வி இங்கு முக்கியம். குடும்ப மட்டத்திலும் அந்த விழிப்பு ஏற்படவில்லை. சமூகத்தின் ஏனைய எல்லா நிறுவன மட்டங்களிலும் அது பெருமளவுக்கு ஏற்படவில்லை. அரசு சார்பற்ற நிறுவனங்கள், அனைத்துலக அரசு சார்பற்ற நிறுவனங்களில் பால் சமத்துவத்தைப் பேண வேண்டிய ஒரு நிலைமை உண்டு. ஏனென்றால் அவை அனைத்துலக நியமங்களுக்கு உட்பட்டு பால் சமநிலையை பேண வேண்டும். ஆனால் உள்ளூர் நிறுவனங்கள் எல்லாவற்றிலும் அந்த நிலைமை இல்லை.

பள்ளிக்கூடங்களில் பால் சமத்துவம் முழுமையாகப் பேணப்படுகிறது என்று எடுத்துக் கொள்ள முடியாது. பிள்ளைகளை உருவாக்கும் பள்ளிக்கூடங்களில் பேணப்படாத பால் சமத்துவத்தை சமூகத்தில் ஏனைய மட்டங்களில் எப்படி எதிர்பார்ப்பது? சில முன்னணிப் பாடசாலைகளில் பெண்கள் முன்னிலையில் மிடுக்காகக் காணப்படுகிறார்கள்.ஆனால் அது எல்லாப் பள்ளிக்கூடங்களுக்கும் பொருந்தாது. குறிப்பாக ஆசிரியைகள் பண்பாட்டு ஆடைகளைத்தான் அணிய வேண்டும் என்று கல்வி அமைச்சு வற்புறுத்துகிறது.அதற்கு கீழ் உள்ள திணைக்களங்கள் வற்புறுத்துகின்றன.பாடசாலை வேளை அல்லாத வேளைகளில் பிள்ளைகளுக்கு ஏதாவது பயிற்சியைக் கொடுப்பதற்காக பாடசாலைகளுக்குச் செல்லும் ஆசிரியைகள் சேலை அணிந்து வருமாறு நிர்பந்திக்கப்படுகின்றார்கள்.
சேலையும் பிளவுஸும் ஒரு பண்பாட்டு உடுப்பா என்ற கேள்வி தனியாக ஆராயப்பட வேண்டும். ஆனால் கல்வித் திணைக்களம் பெண்களை பண்பாட்டு உடுப்போடு வருமாறு நிர்பந்திக்கின்றது.அதே சமயம் ஆண்கள் மேலைத்தே உடுப்புகளான சேட்,லோங்ஸ் என்பவற்றோடு வருகிறார்கள். அதை யாரும் பிரச்சினையாகப் பார்ப்பதில்லை.அப்படியென்றால் பெண்கள் மட்டுமா கலாச்சார காவிகள் ?இந்த விடயத்தில் தொழிற்சங்கங்களின் எதிர்ப்பையும் அரசாங்கம் பொருட்படுத்தவில்லை.

இவ்வாறாக பிள்ளைகளின் ஆளுமையை உருவாக்கும் கல்விப் புலத்திலேயே பால் சமத்துவம் பேணப்படாத ஒரு நிலை. இங்கிருந்து தொடங்குகிறது எல்லாம்.. பிள்ளை படிக்கும் பொழுதே பால் சமத்துவத்தை கற்றுக் கொள்ள தவறுகின்றது. அது பின்னர் வளர்ந்து ஆளாகும் பொழுது தான் கற்றுக் கொண்டதை பிரயோகிக்கின்றது. குறிப்பாக அரசியலில் அதுவும் ஆயுதப் போராட்டம் ஒன்றுக்குப் பின்னரான அரசியலில் பால் சமத்துவத்தைப் பேணுவதில், பால் சமநிலையை பேணுவதில் ஏற்பட்டுள்ள தடைகளுக்கு அதுவும் ஒரு காரணம்.

அதோடு ஆயுதப் போராட்டம் தோற்கடிக்கப்பட்ட பின் போராட்டத்தில் ஈடுபட்ட பெண் போராளிகள் எதிர்கொண்ட பாலியல் சார்ந்த இன்னல்கள் காரணமாகவும் பெண்கள் பெருமளவுக்கு பின்வாங்கும் ஒரு நிலைமை காணப்படுகிறது.அது ஆயுதப் போராட்டம் தோற்கடிக்கப்பட்டதன் நேரடி விளைவு என்னலாம்.

எதுவாயினும், கடந்த 15 ஆண்டு கால தமிழ் அரசியலில் பெண் ஆளுமைகளை அரிதிலும் அரிதாகவே காண முடிகின்றது. அண்மையில் தமிழ் பொது வேட்பாளராகிய அரியநேத்திரன் யாழ்ப்பாணத்தில் உள்ள ஒரு விருந்தினர் விடுதியில் ஒரு தொகுதி ஊடகவியலாளர்களைச் சந்தித்தார். அது ஒரு சிநேக பூர்வமான சந்திப்பு. அதில் ஒரு மூத்த ஊடகவியலாளர் கேட்டார்… “இங்குள்ள ஊடகவியலாளர்களில் எத்தனை பேர் பெண்கள்? ஒருவருமில்லை. உங்களுடைய பொதுக் கட்டமைப்பில் எத்தனை பேர் பெண்கள் ? ஒருவரும் இல்லை. உங்கள் மேடைகளில் ஏறும் பேச்சாளர்களில் எத்தனை பேர் பெண்கள்? ஒருவரும் இல்லை.” என்று.

அது நியாயமான கேள்வி. ஆயுதப் போராட்டத்திற்கு முந்தைய மிதவாத அரசியலில் மங்கையற்கரசி போன்ற பெண் ஆளுமைகள் இருந்தார்கள். அவர்கள் மீதும் பெண்கள் என்ற காரணத்திற்காகவே அவதூறுகள் அதிகமாக முன்வைக்கப்பட்டன. ஆயுதப் போராட்டம் பல பெண் பேச்சாளர்களை உற்பத்தி செய்தது. சமாதானப் பேச்சுவார்த்தை மேசைகளிலும் பெண்கள் காணப்பட்டார்கள். வெளிநாட்டு தூதுக் குழுக்களிலும் பெண்கள் காணப்பட்டார்கள்.ஆனால் ஆயுதப் போராட்டத்தின் வீழ்ச்சியோடு பெண் ஆளுமைகளை அரசியலில் அரிதாகவே காண முடிகிறது.வடக்கில்,அனந்தி,வாசுகி கிழக்கில் ரஞ்சனி…போன்ற சிலரைத் தவிர.

இந்த விடயத்தில் உள்ளூராட்சி சபைகளில் 25% பெண்களாக இருக்க வேண்டும் என்ற சட்டம் வரவேற்கத்தக்கது. அதை ஒரு பண்பாடாக வளர்த்தெடுக்க வேண்டும். சமூகத்தையும் அரசியலையும் அதை நோக்கிப் பண்படுத்த வேண்டும். எல்லாக் கட்சிகளும் மக்கள் அமைப்புகளும் பால் சமநிலையை பேண வேண்டும் என்பதனை ஒரு விதியாக,பண்பாடாக பின்பற்ற வேண்டும். ஆளுமை மிக்க பெண்கள் இல்லை என்பதனை ஒரு சாட்டாகக் கூறாமல் பெண்களை ஆளுமை மிக்கவர்களாக எப்படி உருவாக்கலாம் என்று யோசிக்க வேண்டும். ஆண் தலைவர்கள் மட்டும் என்ன ஆளுமையாகாவா இருக்கிறார்கள்? எனவே தலைமைத்துவ பண்பை வளர்த்தெடுப்பது என்ற விடயத்தில் பால் சமநிலையை பேணினால் அரசியல் கட்சிகளின் மத்தியில் அதனை ஒரு ஒழுக்கமாக உருவாக்கலாம். வெளிநாட்டுத் தூதுவர்கள் தமிழ் மக்களின் பிரதிநிதிகளைப் பார்த்து ஏன் உங்கள் மத்தியில் பெண்கள் இல்லை என்று கேட்கும் ஒரு நிலை தொடரக்கூடாது.

https://athavannews.com/2024/1397065



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 24 மணித்தியாலயத்தில் 10 வீதி விபத்துக்களில் 13 பேர் உயிரிழப்பு Published By: Vishnu 23 Dec, 2024 | 04:05 AM   நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற 10 வீதி விபத்துகளில் 13 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க தெரிவித்தார். மட்க்களப்பு, ஹட்டன், சீதுவ, பின்னதுவ, மாரவில, ஹம்பலாந்தோட்டை, மிரிஹான, கம்பளை,  ஹெட்டிபொல,  கெப்பத்திகொல்லாவ ஆகிய பகுதிகளில் கடந்த 24 மணித்தியாலயத்தில் இந்த வீதி விபத்துக்கள் இடம்பெற்றுள்ளது இதில் 4 பாதசாரிகள் உட்பட 13 பேர் உயிரிழந்துள்ளனர்.   எனவே பண்டிகைக் காலங்களில் வீதிகளில் பயணிக்கும் போது அதிக கவனம் செலுத்த வேண்டும் என அவர் தெரிவித்தார்.    
    • கல்வித்துறையின் சவால்களை வெற்றிக்கொள்ள தொடர்ச்சியான ஒத்துழைப்பு - ஆசிய அபிவிருத்தி வங்கி Published By: Vishnu 23 Dec, 2024 | 02:57 AM   தொடர்ச்சியான ஒத்துழைப்புக்கள் ஊடாக கல்வித்துறையில் தோற்றம் பெற்றுள்ள சவால்களை வெற்றிக் கொள்வதற்கு ஒத்துழைப்பு வழங்குவதாக ஆசிய அபிவிருத்தி வங்கியின் பிரதிநிதிகள் பிரதமரிடம் உறுதியளித்துள்ளனர். ஆசிய அபிவிருத்தி வங்கியின் இலங்கைக்கான வதிவிட தூதுக்குழுவின் பணிப்பாளர் டகாபுமி கடோனோவுக்கும், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவுக்கும் இடையிலான சந்திப்பு ஞாயிற்றுக்கிழமை (22) கல்வி அமைச்சில் நடைபெற்றது. இலங்கையின் அபிவிருத்தியில் பிரதான செயற்பாட்டு பங்குதாரராக ஆசிய அபிவிருத்தி வங்கி செயற்படுவது இதன்போது சுட்டிக்காட்டப்பட்டது. இலங்கையின் தேசிய அபிவிருத்தியின் முதற் கட்டமாக புதிய கல்வி முறைமை மறுசீரமைப்பு குறித்து இதன்போது விசேட கவனம் செலுத்தப்பட்டது. அதேபோல் புதிய கல்வி கொள்கையை வெற்றிகரமான முறையில் செயற்படுத்துவதற்காக பாடசாலைகளின் உட்கட்டமைப்பு மேம்பாடு,ஆசிரியர் - அதிபர் பயிற்சி மற்றும் தொழில்நுட்ப பயன்பாட்டின் முக்கியத்துவம் குறித்து பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய இந்த கலந்துரையாடலின் போது எடுத்துரைத்துள்ளார். தொடர்ச்சியான ஒத்துழைப்புக்கள் ஊடாக கல்வித்துறையில் தோற்றம் பெற்றுள்ள சவால்களை வெற்றிக் கொள்வதற்கு ஒத்துழைப்பு வழங்குவதாக ஆசிய அபிவிருத்தி வங்கியின் பிரதிநிதிகள் பிரதமரிடம் உறுதியளித்துள்ளனர்.    
    • இனப்பிரச்சினை என்பதே இல்லை, பொருளாதார பிரச்சினைதான் இருக்கு என சொல்வதனை கேட்டு  எல்லோரும் நம்புகிறார்கள், ஆனால் ஒரு சிலர் (நீங்கள் உட்பட) மட்டும் நம்ப மறுக்கிறீர்கள், ஆகையால் நீங்கள்தான் மாறவேண்டும்😁.
    • அது வேற ஒன்றுமில்லை இந்த இரண்டு தரப்பும் குளிர்காய நாங்கள் சாக வேண்டியிருந்தது, அதனால இந்த இரண்டு தரப்பினையும் கோர்த்டுவிடுவம் என்று ஒரு முயற்சிதான்.😁
    • இந்திய மீனவர்கள் செய்வது திருட்டு , திருட்டுக்கு எப்படி நட்டஈடு கோருவது?  திருட்டுக்கு தண்டனை அடி உதை , சிறை,பறிமுதல்தான். மஹிந்த ஆட்சிக்காலத்தில் சுப்பிரமணி சுவாமி கொடுத்த ஐடியாவில் படகுகளை பறிமுதல் செய்து இலங்கை மீனவர்களுக்கு ஏலம் விடுவது,கடற்படை பாவனைக்கு வழங்குவது, கரைகளில் நிறுத்தி வைத்து ஒன்றுக்கும் உதவாமல் பண்ணுவது என்று அது ஒரு சிறந்த திட்டம்தான். இந்திய இழுவைப்படகுகள் வலைகள்  இலங்கை பெறுமதியில் கோடிகளில் பெறுமதியானவை, ஓரிரு லட்சம் பெறுமதியான மீனை திருட வந்து குத்தகைக்கு எடுத்துவரும் கோடி பெறுமதியான படகை இழப்பது மீனவர்களுக்கும், ஆபத்து படகின் உரிமையாளர்களுக்கும் ஆபத்து & பெரு நஷ்டம். பின்னாளில் இந்திய அரசின் அழுத்தத்தால் அது கைவிடப்பட்டது. அது ஒருகாலமும் சாத்தியம் இல்லை, யுத்தம் நடக்கும் ஒருநாட்டுக்குள் நுழைந்து திருட்டில் ஈடுபடும்போது அந்நாட்டு படைகளால் கொல்லப்பட்டால் அதற்கு இருநாட்டு அரசுகளும் எந்த பொறுப்பும் ஏற்காது. எந்த நட்ட ஈடும் தராது. யுத்த பூமிக்குள் அத்துமீறி நுழைந்து உயிரைவிட்டுவிட்டு, செத்துபோனோம் காசு தாருங்கள் என்றால் எந்த தெய்வம்கூட அவர்களுக்கு உதவாது. இலங்கை மீனவர்களை  சிங்களவன் கொத்தி குதறி மீன்பிடியை முற்றாக தடை செய்த காலத்தில் அந்த இடைவெளியை பயன்படுத்தி இந்திய மீனவர்கள் இலங்கை பரப்பில் வந்து மீனள்ளி போவது ஒருவகையில் தண்டிக்கப்படவேண்டிய இரக்கமற்ற நியாயம்தான். சில தமிழக செய்தி தளங்களில், இலங்கை அகதிகளுக்கு எப்படியெல்லாம் நாங்கள் உதவி செய்தோம், அவர்கள் நன்றிகெட்ட தனமாக இப்போது இலங்கை கடற்படைக்கு ஆதரவாக நின்று எம்மை கொல்கிறார்கள், கைது செய்கிறார்கள் என்று பின்னூட்டம் இடுகிறார்கள். அதாவது பசிக்கு சோறுபோட்டால், அவனை பட்டினிபோட்டு கொல்லவும் நமக்கு உரிமை இருக்கு என்கிறார்கள். பட்டினி போட்டு கொல்வதை நீங்கள் நியாயப்படுத்தினால் அப்புறம் ஏன் அவன் பசிக்கு சோறு போட்டதை பெருமையாக சொல்கிறீர்கள் என்பதை அவர்களிடம் கேட்டுத்தான் தெளிவு பெறவேண்டும்.
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.