Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

உக்ரைன் விமானப்படைத் தளபதி பதவியிலிருந்து நீக்கம்.

உக்ரைனின் விலையுயர்ந்த புதிய எப் – 16 போர் விமானம் ஒன்று அழிக்கப்பட்டது தொடர்பான விவாதத்திற்கு மத்தியில் உக்ரைன் விமானப்படை தளபதியை ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி பதவியில் இருந்து  நீக்கம் செய்துள்ளார்.

லெப்டினன்ட் ஜெனரல் மைகோலா ஓலேஷ்சுக்கை பணிநீக்கம் செய்ததற்கான காரணத்தை ஜெலென்ஸ்கி குறிப்பிடவில்லை, ஆனால், அனைத்து வீரர்களையும் கவனித்துக் கொள்ளும் பொறுப்பு தனக்கு இருப்பதாக தெரிவித்துள்ளார்.

இதேவேளை, உக்ரைனின் விமானப்படையின் இடைக்கால தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் அனடோலி கிரிவோனோஷ்கோ  நியமிக்கப்பட்டுள்ளார் என இராணுவத்தின் பொது ஊழியர்கள் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2024/1397688

  • கருத்துக்கள உறவுகள்

உக்ரைன் ஜனாதிபதி அதிரடி : விமானப்படைத் தளபதி பதவி நீக்கம்

உக்ரைனின்(ukraine) விலையுயர்ந்த புதிய எப் 16 ( F-16) போர் விமானம் ஒன்று அழிக்கப்பட்டது தொடர்பான விவாதத்திற்கு மத்தியில் உக்ரைன் விமானப்படை தளபதியை ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி(Volodymyr Zelensky) பதவி நீக்கம் செய்துள்ளார்.

லெப்டினன்ட் ஜெனரல் மைகோலா ஓலேஷ்சுக்கை(Lt Gen Mykola Oleshchuk) பணிநீக்கம் செய்ததற்கான காரணத்தை ஜெலென்ஸ்கி குறிப்பிடவில்லை, ஆனால் "எங்கள் அனைத்து வீரர்களையும் கவனித்துக் கொள்ளும்" பொறுப்பு தனக்கு இருப்பதாக கூறினார்.

கட்டளை மட்டத்தில் மாற்றம்

டெலிகிராமில் ஒரு இடுகையில், ஜெலென்ஸ்கி, லெப்டினன்ட் ஜெனரல் ஓலெஸ்சுக்கை மாற்ற முடிவு செய்ததாகக் கூறினார், "கட்டளை மட்டத்தில், நாம் நம்மைப் பலப்படுத்திக் கொள்ள வேண்டும் மற்றும் எங்கள் மக்களைப் பாதுகாக்க வேண்டும்" என்று குறிப்பிட்டார்.

உக்ரைன் ஜனாதிபதி அதிரடி : விமானப்படைத் தளபதி பதவி நீக்கம் | Zelensky Sacks Ukraine Air Force Chief

உக்ரைனின் விமானப்படையின் இடைக்கால தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் அனடோலி கிரிவோனோஷ்கோ(Lt Gen Anatolii Kryvonozhko ) நியமிக்கப்பட்டுள்ளதாக இராணுவத்தின் பொது ஊழியர்கள் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

பல தளபதிகள் மாற்றம்

பெப்ரவரி 2022 இல் ரஷ்யா(russia) தனது முழு அளவிலான படையெடுப்பைத் தொடங்கியதிலிருந்து ஜெலென்ஸ்கி பல இராணுவத் தளபதிகளை பதவி நீக்கம் செய்துள்ளார். இந்த ஆண்டு பெப்ரவரியில், அவர் நாட்டின் ஆயுதப் படைகளின் தளபதி வலேரி ஜலுஷ்னியை பதவி நீக்கம் செய்தார்.

உக்ரைன் ஜனாதிபதி அதிரடி : விமானப்படைத் தளபதி பதவி நீக்கம் | Zelensky Sacks Ukraine Air Force Chief

மேலும் ஜூன் மாதம், அவர் லெப்டினன்ட் ஜெனரல் யூரி சோடோலை, அதிகப்படியான உயிரிழப்புகள் மற்றும் திறமையின்மை குற்றச்சாட்டுகள் பற்றிய பொது விமர்சனத்திற்குப் பிறகு பதவி நீக்கம் செய்தார். 

https://ibctamil.com/article/zelensky-sacks-ukraine-air-force-chief-1725114010

  • கருத்துக்கள உறவுகள்

இந்த தளபதியினை ஒரு மாதம் கூட தனது பதவியினை நிறைவு செய்ய அனுமதிக்கவில்லை, முப்படைகளின்  தலமையாக உள்ள செலன்ஸ்கி புதிய தொழில்னுட்பங்களும் பயிற்சிகளும் போரில் மாற்றம் ஏற்படுத்தும் எனும் நம்பிக்கையில் அனைத்து முயற்சிகளிலும் ஈடுபடுகின்றார், உக்கிரேன் படையினருக்கு நேட்டோவின் அதி சிறந்த இராணுவ தளபாடங்களுக்கும் இராணுவ பயிற்சிகளும் வழங்கி போரினை முன்னெடுத்தாலும் போரில் எதிர்பார்த்த மாற்றம் ஏற்படவில்லை, அதற்கான காரணக்களை உதவி வழ்ங்கும் நாடுகளுக்கு கூற வேன்டிய நிலையில் இவ்வாறான பலிக்கடாக்கள் தேவைப்படுகிறது. 
பல தளபதிகளை வேலை நீக்கம் செய்து தவறு தளபதிகளின் மேல் என்பதாக காட்ட முயற்சிப்பது ஒரு புறம் இராணுவ முக்கியத்துவம் அற்ற சாகச இராணுவ நடவடிக்கைகளை ஒரு சினிமா சாசகசம் போல செய்து மென்மேலும் இராணுவத்திற்கு நெருக்கடி கொடுப்பது என ஒரு குழப்பகரமான் சூழ்நிலைக்குள் உக்கிரேனிய படையினரை வைத்துள்ளார், ஒவ்வொரு மேற்கு இராணுவ தளபாடம் வரும் போது அது தொடர்பான மிகைப்படுத்தலுடன் போரில் குதிக்கும் உக்கிரேனிய படைகளை சோவியத் கால இராணுவ சாதனங்களை வைத்தே இரஸ்ஸியா, அவற்றினை வெற்றி கொள்வதற்கு T72 இரக டாங்கிகளின் சாதனைகளை உதாரணமாக கூறலாம்.

புதிய தளபாடங்களும் பயிற்சிகளும் ஆரம்பத்தில் ஊடக கவனம் பெற்றாலும் காலப்போக்கில் அவை காணாமல் போவதற்கு காரணம் இரஸ்சியாவின் தகவமைப்பு திறமைதான் காரணம்.

போரில் இந்த தளபாடங்கள் உக்கிரேனிய துருப்பினர்களை குழப்பத்தினை உருவாக்குவதாக கூறுகிறார்கள்.

Flight Instrument Presentation of Aircraft Attitude | SKYbrary ...

இறந்துபோன உக்கிரேனிய F-16 விமானி ஒரு அனுபவமிக்க விமானி என கூறுகிறார்கள், அவர் F-16 பயிற்சி பெற்றவர், உக்கிரேன் கூறுவது போல விமானியின் தவறு என கூறி அந்த வீரரை அவமானப்படுத்தியுள்ளார்கள், அதற்கான நொண்டிச்சாட்டாக இரு வேறுபட்ட கருவிகளின் அமைப்புகளுக்கு தகவமைக்க முடியாமை என ஒரு புறம் கூறினாலும் வானிலிருந்து வானிற்கு பாயும் ஏவுகணை தாக்குதலை வேறுபட்ட வேக இலக்குகளின் மீதான தாக்குதலை சரியாக கணிக்கமுடியாமையினாலேயே இந்த தவறு நிகழ்ந்ததாக கூறப்படுகின்றது, இவ்வாறான குற்றச்சாட்டு இதுதான முதல் தடவை அல்ல, இவரைப்போல ஒரு சிறந்த விமானியின் இறப்பிற்கும் இவ்வாறான குற்றச்சாட்டே முன்னரும் வைக்கப்பட்டிருந்தது,

இது ஒரு உக்கிரேனிய வழமையான நொண்டிச்சாட்டாக உள்ளது போல இருக்கிறது.

மறுவளமாக மேற்கு தன்னிடம் உள்ள அனைத்து சிறந்த அதி நவீன ஆயுதங்களையும் உக்கிரேனிற்கு வழங்கிவிட்டு அதற்கான பலனை எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கிறது, இது மேற்கின் பொறுமையினை சோதிப்பதாக உள்ளது, மேற்கிற்கு நேரடி வாக்குறுதிகளை கொடுத்துவிட்டு அதனை நிறைவேற்ற முடியாத நிலையில் பல சிறந்த வீரர்களை அவர்கள் இறந்த பின்னரும் அவமானப்படுத்துவதும் தளபதிகளை மாற்றுவதும் தொடர்வதால் ஒரு கட்டத்தின் பின் மேற்கு பொறுமையிழந்து போரை முடிவிற்கு கொண்டு வர முனையலாம், ஆனால் கரீசு அம்மையார் (இவர்தான் வெல்வார் என நான் கணிக்கிறேன்) தொடர்ந்து உக்கிரேனிற்கான உதவி தொடரும் என கூறியுள்ளார்.

இந்த போரை மேற்கு நாடுகள் அனுசரிப்பதற்கு காரணம் அமெரிக்க நிர்பந்தம், இந்த போரில் யார் வென்றாலும் தோற்றாலும் இவர்கள் அனுப்புகின்ற ஆயுதங்கள் ஒரு நாள் தம் தாய் நாட்டிற்கே திரும்ப வரும்.

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, vasee said:

கொடுத்த கடனுக்கு வட்டியும் முதலும் எடுக்காமல் விடமாட்டானுக. 

😀

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.