Jump to content

இத்தாலியப் பெண்ணை பலாத்காரமாக காரில் ஏற்ற முயன்ற தேரர்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
07 SEP, 2024 | 04:30 PM
image

இத்தாலியப் பெண் ஒருவரை பலாத்காரமாக காரில் ஏற்ற முயன்ற தேரர் ஒருவர் மீது அநுராதபுரம் தலைமையக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடளிக்கப்பட்டுள்ளது. 

இது தொடர்பில் தெரியவருவதாவது, 

இத்தாலியப் பெண் நேற்று (06) அநுராதபுரம் பிரதேசத்தில் உள்ள ருவன்வெலிசாய விகாரைக்கு சென்றுள்ளார்.

இதன்போது, அங்கிருந்த தேரர் இத்தாலியப் பெண்ணிடம் சென்று பேச்சுவார்த்தை நடத்தியுள்ள நிலையில் இத்தாலியப் பெண்ணின் வட்ஸ்அப் இலக்கத்தைப் பெற்றுக்கொண்டு அங்கிருந்த சென்றுள்ளார்.

பின்னர், சிறுது நேரம் கழித்து தேரர் இத்தாலியப் பெண்ணின் வட்ஸ்அப் இலக்கத்திற்கு தொடர்பு கொண்டு தன்னை சந்திப்பதற்கு வருமாறு கூறியுள்ளார். 

இதற்கு மறுப்பு தெரிவித்த இத்தாலியப் பெண் தனது ஹோட்டல் நோக்கி நடந்து சென்று கொண்டிருக்கும் போது காரில் வந்த தேரர் இத்தாலியப் பெண்ணை காரில் ஏறுமாறு வற்புறுத்தியுள்ளார்.

இதன்போது, இந்த காரின் சாரதியும் காரில் ஏறுமாறு அச்சுறுத்தியநிலையில்,  இத்தாலிய பெண் அருகில் இருந்த கடை ஒன்றிற்குள் தப்பிச் சென்றுள்ளார்.

இதனையடுத்து, பாதிக்கப்பட்ட இத்தாலிய பெண் இது தொடர்பில் அநுராதபுரம் தலைமையக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளித்துள்ளார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை அநுராதபுரம் தலைமையக பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

https://www.virakesari.lk/article/193088

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கனநாள்  பிக்குகளின் சேட்டைகளை காணவில்லையே... 
திருந்தி விட்டார்களாக்கும்  என நினைத்தேன். 
நாய் வாலை நிமிர்த்த முடியுமா... 😂

இத்தாலி பொம்பிளை  தப்பினது அருந்தப்பு.  😎
சுற்றுலா பயணிகள் செல்வதற்கு ஆபத்தான இடங்களில் விகாரையும் ஒன்று. 🤣

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தமிழ் பொதுவேட்பாளரை ஆதரிக்கும் பரப்புரைக் கூட்டத்தில்; தமிழின விடுதலைக்கான இலட்சியத்துக்காக அணிதிரண்டுள்ள உங்களைப்போன்று என்னுடைய வாக்கினையும் அளிப்பேன் - மாவை.சோ.சேனாதிராஜா Published By: VISHNU   16 SEP, 2024 | 10:28 PM   தமிழின விடுதலைக்கான இலட்சியத்துக்கான பயணத்தில் அணிதிரண்டுள்ள பெருந்தொகையான உங்களைப்போன்று என்னுடைய வாக்கினையும் அளிப்பேன் என்ற உறுதிப்பாட்டுடன் தெரிவிக்கின்றேன் என்று இலங்கைத் தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை.சோ.சேனாதிராஜா தெரிவித்தார். கிளிநொச்சி பசுமைப்பூங்கவில் திங்கட்கிழமை (16) இலங்கைத் தமிழரசுக் கட்சியின் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரனின் ஏற்பாட்டில் நடைபெற்ற தமிழ் பொதுவேட்பாளர் பா.அரியநேத்திரனை ஆதரித்து ‘தமிழ்த் தேசிய இனத்தின் எழுச்சியே தமிழ்த் தேசத்தின் மீட்சி’ எனும் தொனிப்பொருளில் நடைபெற்ற பரப்புரைக் கூட்டத்தில் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்,  தமிழர்களின் எழுச்சி நிகழ்வான நாளாகவும் தமிழனம் விடுதலை பெறதாத நிலையில் நடைபெறுகின்ற மற்றொரு ஜனாதிபதி தேர்தலாகவும் எதிர்வரும் 21ஆம் திகதி நடைபெறுகின்ற தேர்தல் அமைகின்றது.  அவ்விதமான தேர்தலில் எமது விடுதலையையும், அதற்கான இலட்சியப் பயணதுக்காகவும் எங்களுடைய வாக்குகளை பயன்படுத்துவோம் என்ற உறுதியோடு இந்த எழுச்சி நிகழ்வில் பங்கெடுத்துள்ளீர்கள். விடுதலைக்கான போராட்டத்தில் மக்களையும், போராளிகளையும் பலிகொடுத்துள்ளோம். அந்த வகையில் நாம் எமது பயணத்திலே உறுதியாக இருக்கின்றோம், அந்தப் பயணத்தினை வலுவானதாக மேற்கொள்ள வேண்டும் என்ற இலட்சியத்துடன் இருக்கும் உங்கள் முன்னிலையில் அந்த இலட்சியத்துக்காக என்னுடைய வாக்கினையும் அளிப்பேன் என்ற உறுதிப்பாட்டுடன் வருகைதந்துள்ளேன். அது மட்டுமன்றி, நீங்கள் அனைவரும், தமிழர்களின் இட்சியத்துக்கான எழுச்சியை வெளிப்படுத்தும் வகையில் உங்களது வாக்குகளை எதிர்வரும் 21ஆம் திகதி உங்களுடைய வாக்குகளை அளிக்க வேண்டும் என்றும் நான் வலியுறுத்துகின்றேன். கடந்த காலத்தில் எமது விடுதலைக்காக அர்ப்பணிக்கப்பட்ட உயிர்களை நெஞ்சில் நிறுத்தியவனாக , அதற்காக பயணிக்கும் எமது உயிர்களும் எப்போது வேண்டுமானாலும் போகலாம், பணயம் வைக்கப்படலாம் என்பதை நினைவு படுத்தியவனாக, எதிர்கால எமது இலட்சியத்துக்கான பயணத்தில் அர்ப்பணிப்புச் செய்வதற்கு தயாராக உள்ள மக்களுக்கும் நன்றி உடையவனாக தேசமாக எழுச்சி அடைவோம். அதற்காக உழைப்போம் என்று உரைத்து விடைபெறுகின்றேன் என்றார். https://www.virakesari.lk/article/193882
    • பட மூலாதாரம்,X/M.K.STALIN படக்குறிப்பு, திருமாவளவன் மற்றும் மு.க. ஸ்டாலின் (கோப்புக்காட்சி) கட்டுரை தகவல் எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன் பதவி, பிபிசி தமிழ் 2 மணி நேரங்களுக்கு முன்னர் மதுவிலக்கு மாநாட்டிற்கு அ.தி.மு.கவுக்கு அழைப்பு, ஆட்சி அதிகாரத்தில் பங்கு தொடர்பான வீடியோ வெளியீடு என தி.மு.க. - விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கூட்டணி குறித்த சலசலப்பு எழுந்த நிலையில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலினைச் சந்தித்துப் பேசியிருக்கிறார் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன். என்ன நடந்தது? முதலமைச்சர் மு.க. ஸ்டாலினைச் சந்தித்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்த மாநாட்டில் தி.மு.க.வின் சார்பில் அக்கட்சியின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதியும் செய்தித் தொடர்புப் பிரிவின் செயலர் டி.கே.எஸ். இளங்கோவனும் பங்கேற்பார்கள் என்று முதலமைச்சர் கூறியதாக தெரிவித்திருக்கிறார். விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மது விலக்கை வலியுறுத்தி மாநாடு நடத்தப்போவதாகவும் அதில் அ.தி.மு.கவும் கலந்துகொள்ளலாம் என செய்தியாளர் சந்திப்பில் திருமாவளவன் பேசியதும் சலசலப்பை ஏற்படுத்தியது. இந்த மாநாடு தொடர்பான அழைப்பையும் தேர்தல் கூட்டணியையும் இணைத்துப் பார்க்க வேண்டாம் என அவர் குறிப்பிட்டாலும் இந்த விவகாரம் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.   மதுவிலக்கு விவகாரத்தை வைத்து தி.மு.க. கூட்டணிக்கு விடுதலைச் சிறுத்தைகள் அழுத்தம் கொடுக்கிறதா என்பதில் துவங்கி, கூட்டணியைவிட்டு வெளியேறுகிறதா என்பதுவரை பல்வேறு கருத்துகள் இதனைச் சுற்றி எழுந்தன. உள்ளூர் தொலைக்காட்சி சேனல்களும் இந்த விவகாரத்தை வைத்து விவாதங்களை நடத்தின.   செப்டம்பர் 14-ஆம் தேதி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அமெரிக்காவிலிருந்து நாடு திரும்பியபோது, இது குறித்து செய்தியாளர்கள் கேட்டபோது, இதற்கு அவரே (திருமாவளவன்) விளக்கமளித்துவிட்டார், அதற்கு மேல் ஏதும் சொல்ல வேண்டியதில்லை என்று கூறினார். ஆனால், அதே நாளில், "ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு" என்பது குறித்து திருமாவளவன் பேசிய வீடியோ ஒன்று அவரது எக்ஸ் பக்கத்தில் பதிவேற்றப்பட்டது. விரைவிலேயே அது நீக்கப்பட்டது. பிறகு மீண்டும் பதிவேற்றம் செய்யப்பட்டது. இதையடுத்து, மீண்டும் தி.மு.க. - வி.சி.க. கூட்டணி குறித்த பரபரப்பு ஏற்பட்டது. இந்த நிலையில்தான், திங்கட்கிழமையன்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை சந்தித்துப்பேசியிருக்கிறார் திருமாவளவன். காலை 11.30 மணியளவில் இந்த சந்திப்பு நடைபெற்றது. இதற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், "கள்ளக்குறிச்சியில் வரும் அக்டோபர் 2-ஆம் தேதி நடைபெறவுள்ள 'மது மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு மகளிர் மாநாடு' தொடர்பாக கோரிக்கை மனு ஒன்றை முதல்வரிடம் வழங்கினோம். அதில் இடம்பெற்றுள்ள முதலாவது கோரிக்கை, தமிழ்நாட்டில் அரசு மதுபானக் கடைகளின் விற்பனை இலக்கை படிப்படியாகக் குறைக்க வேண்டும் என்பதாகும். இரண்டாவது கோரிக்கை தேசிய அளவிலானது. அரசமைப்புச் சட்டம் உறுப்பு எண் 47ன் படி, படிப்படியாக மதுவிலக்கை இந்தியா அளவில் கொண்டு வருவதற்கு அனைத்து மாநில அரசுகளும் முன்வர வேண்டும் என்பதாகும். கோரிக்கையை படித்துப் பார்த்த முதல்வர் மதுவிலக்கு தமிழ்நாட்டில் அமலுக்கு வரவேண்டும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. நிர்வாகச் சிக்கலைக் கருத்தில் கொண்டு அதைப் படிப்படியாக எவ்வாறு நிறைவேற்ற முடியுமோ அவ்வாறு செய்வோம். வி.சி.கவின் மாநாட்டில் தி.மு.கவின் சார்பில் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, செய்தித் தொடர்பு செலாளர் டிகேஎஸ் இளங்கோவன் பங்கேற்பார்கள் என்று சொன்னார்" என்று தெரிவித்தார். மேலும், தி.மு.க. - வி.சி.க. கூட்டணியில் எந்த நெருடலும் இல்லை என்றும் கூறினார்.   படக்குறிப்பு, ஸ்டாலின் உடனான சந்திப்புக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன். "மதுவிலக்கு மாநாடு தொடர்பான செய்தியாளர் சந்திப்பில் எல்லாக் கட்சிகளும் வரலாம், அ.தி.மு.கவும் வரலாம் என திருமாவளவன் பேசியது, எதிர்பாராத அளவில் மிகப் பெரிய சலசலப்பை ஏற்படுத்திவிட்டது. அதற்குப் பிறகு, அமெரிக்காவிலிருந்து முதல்வர் தமிழ்நாட்டிற்குத் திரும்பும் நாளில், 'அதிகாரத்தில் பங்கு' குறித்த வீடியோ ஒன்றை தனது அதிகாரபூர்வ எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டு, நீக்கி பிறகு மீண்டும் வெளியிடப்பட்டது. இதெல்லாம் சேர்த்து திருமா கூட்டணி மாறப்போகிறாரோ என்ற தோற்றத்தை ஏற்படுத்திவிட்டது. வி.சி.க.விற்குள்ளேயே தி.மு.கவுக்கு கூடுதல் அழுத்தம் அளிக்கவேண்டும் எனக் கருதும் சக்திகள் இருக்கலாம். அவர்கள் இதனைச் செய்திருக்கலாம். ஆனால், இப்போது அந்த மதுவிலக்கு மாநாட்டில் கலந்துகொள்வதாக அறிவித்ததன் மூலம், கூட்டணிக்கு வெளியில் உள்ள கட்சிகள் யாரும் இந்த மாநாட்டில் கலந்துகொள்ள முடியாதபடி செய்துவிட்டது தி.மு.க.. தி.மு.க. தலைமையகத்தில் வந்து முதல்வரைச் சந்தித்ததைப் போல, கூட்டணிக்கு வெளியில் உள்ள கட்சிகளின் தலைவர்களைப் போய் திருமாவளவன் சந்திப்பதற்கான வாய்ப்பு இல்லை. ஆகவே, கூட்டணியைப் பொறுத்தவரை இப்போதைக்கு போர் நிறுத்தம் வந்திருப்பதாகச் சொல்லலாம்" என்கிறார் மூத்த பத்திரிகையாளரான ப்ரியன். மதுவிலக்கு மாநாட்டில் அ.தி.மு.கவும் கலந்துகொள்ளலாம்; தேர்தல் அரசியலுக்கும் அதற்கும் சம்பந்தமில்லை என திருமாவளவன் சொல்வதை ஏற்கலாம் என்றாலும் வீடியோ வெளியிடப்பட்டதுதான் கூட்டணி தொடர்பான கேள்விகளை எழுப்புகிறது என்கிறார் மூத்த பத்திரிகையாளர் குபேந்திரன். "மதுவிலக்கு குறித்து பலரும் பேசினாலும் இப்போதைக்கு அது நடைமுறை சாத்தியமில்லாதது என்பது எல்லோருக்குமே தெரியும். மதுவிலக்கு மாநாட்டிற்கு தி.மு.கவின் கூட்டணிக் கட்சியாக இருந்தபடி, தி.மு.க., அ.தி.மு.க. ஆகிய இரு கட்சிகளையும் அழைப்பது என்பதே வித்தியாசமாக இருந்தது. அ.தி.மு.கவின் சார்பில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கலந்துகொள்வதாகவே வைத்துக்கொள்வோம். அவர் பேசிய பிறகு ஆர்.எஸ். பாரதி பேசினால் என்னவாகும்? இது ஒருபுறமிருக்க, அதிகாரத்தில் பங்கு குறித்து பேசிய வீடியோவை இந்தத் தருணத்தில் வெளியிட்டு, நீக்கி, மீண்டும் வெளியிட்டதும் ஏன் என்ற கேள்வியும் இருக்கிறது" என்கிறார் குபேந்திரன். ஆனால், கூட்டணி மாற்றம் தொடர்பாக, இந்தத் தருணத்திலேயே ஒரு முடிவுக்கு வருவது சரியாக இருக்காது என்கிறார் அவர். மதுவிலக்கு மாநாட்டை ஒட்டி எழுந்த யூகங்கள் அனைத்தும் தவறானவை என்கிறார் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச் செயலாளரான வன்னியரசு. "இந்த விவகாரத்தில் என்ன நடந்தது என்பதை ஆரம்பத்தில் இருந்து சொல்கிறேன். ஒவ்வொரு ஆண்டும் தலைவரின் பிறந்த நாளை ஒட்டி ஒரு மாநாட்டை நடத்துவோம். அதுவும் ஒரு கருப்பொருளை மையமாக வைத்து நடத்துவோம். கடந்த ஆண்டு 'வெல்லும் ஜனநாயகம்' என்ற பெயரில் நடத்தினோம். அதற்கு முந்தைய ஆண்டு, 'சமூக நீதி சமூகங்களுடைய ஒற்றுமை மாநாடு' என்ற பெயரில் நடந்தினோம். இந்த ஆண்டு 'மது மற்றும் போதை ஒழிப்பு மகளிர் மாநாடு' என்ற பெயரில் நடத்த முடிவுசெய்யப்பட்டது. இது தொடர்பான செய்தியாளர் சந்திப்பில் நாங்களாக அ.தி.மு.கவுக்கு அழைப்புவிடுக்கவில்லை. எல்லோரும் வரலாம் என்று சொன்னபோது, அ.தி.மு.கவும் பங்குபெறலாமா எனக் கேட்டபோது, பங்கு பெறலாம் என திருமாவளவன் பதிலளித்தார். மதுவிலக்கு தொடர்பாக, எல்லா கட்சிகளுமே தங்கள் நிலைப்பாட்டை தெளிவுபடுத்த வேண்டும் என்பதுதான் எங்கள் கோரிக்கை. அ.தி.மு.கவும் அதனைச் சொல்ல வேண்டும். தி.மு.க. கூட்டணி தற்போது வலிமையாக இருக்கிறது. ஆகவே அந்தக் கூட்டணியைச் சிதைக்க வேண்டும், அதற்காக அந்தக் கூட்டணியிலிருந்து வி.சி.கவை வெளியேற்ற வேண்டும் என்று நினைப்பவர்கள்தான் இப்படி கிளப்பிவிடுகிறார்கள்" என்கிறார் வன்னியரசு. வீடியோ பதிவேற்றம் செய்யப்பட்டு பிறகு நீக்கப்பட்டது குறித்து கேட்டபோது, "அதிகாரத்தில் பங்கு என்பது 1999ஆம் ஆண்டிலிருந்து வி.சி.க. முன்வைத்துவரும் கருத்துதான். அதில் புதிதாக ஏதும் இல்லை. செப்டம்பர் 13-ஆம் தேதி நடந்த மண்டல செயற்குழு கூட்டத்திலும் அதைத்தான் திருமாவளவன் பேசினார். அந்த வீடியோதான் பதிவேற்றப்பட்டது. ஆனால், அதன் ஒரு பகுதி மட்டும் பதிவேற்றப்பட்டதால் முழுவதையும் பதிவேற்றும்படி சொன்னார். ஆகவே, அது நீக்கப்பட்டு மீண்டும் பதிவேற்றப்பட்டது. அதில் வேறு எதுவும் இல்லை" என்றார் அவர்.   படக்குறிப்பு, தி.மு.க. கூட்டணி தற்போது வலிமையாக இருக்கிறது என்கிறார் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச் செயலாளரான வன்னியரசு வி.சி.கவின் கூட்டணி 1999ஆம் ஆண்டில் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ் மாநில காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியில் வி.சி.க. இடம்பெற்று, த.மா.கா. சின்னத்திலேயே 2 இடங்களில் போட்டியிட்டது. 2001-ஆம் ஆண்டில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்று 8 இடங்களில் போட்டியிட்டது. 2004-ஆம் ஆண்டில் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் மக்கள் கூட்டணி என்ற பெயரில் ஜனதா தளம், புதிய தமிழகம் ஆகிய கட்சிகளுடன் இணைந்து 8 இடங்களில் போட்டியிட்டது. 2006-ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. கூட்ணியில் போட்டியிட்டது. 2009-ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க. தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் 2 இடங்களில் போட்டியிட்டது. 2011 சட்டமன்றத் தேர்தலிலும் அதே கூட்டணியில் இடம்பெற்றது. 2014ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலிலும் அதே கூட்டணி. 2 இடங்களில் போட்டியிட்டது. 2016 சட்டமன்றத் தேர்தலில் வி.சி.க., தே.மு.தி.க., ம.தி.மு.க., இடதுசாரிகள் ஆகியவை இணைந்து மக்கள் நலக் கூட்டணி என்ற பெயரில் போட்டியிட்டன. இந்தத் தேர்தலில் வி.சி.க. 25 இடங்களில் போட்டியிட்டது. 2019, 2024 ஆகிய ஆண்டுகளில் நடந்த நாடாளுமன்றத் தேர்தல்களிலும் தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் வி.சி.க இடம்பெற்றது. 2021ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலிலும் தி.மு.க. கூட்டணியில் விசிக தொடர்ந்தது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு. https://www.bbc.com/tamil/articles/cr7551evjyjo
    • தமிழ் பொது வேட்பாளர் அரியநேத்திரனை ஆதரித்து மேடையேறிய மாவை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் தமிழ்ப் பொது வேட்பாளர் பாக்கியசெல்வம் அரியநேத்திரனை ஆதரித்து இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா மேடையேறி உரையாற்றியுள்ளார். தமிழ்ப் பொது வேட்பாளரை ஆதரிக்கும் கூட்டம் கிளிநொச்சியில் இன்று பிற்பகல் இடம்பெற்றது. தமிழரசுக்கட்சியின் தீர்மான அறிக்கை இந்த கூட்டத்தில் மேடையேறிய தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, தமிழ்ப் பொது வேட்பாளர் அரியநேத்திரனுக்கு ஆதரவு தெரிவித்து உரையாற்றியுள்ளார். இதேவேளை, ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய மக்கள் கூட்டணியின் வேட்பாளர் சஜித் பிரேமதாஸவை ஆதரிக்கும் தமிழரசுக் கட்சியின் தீர்மான அறிக்கையை வவுனியாவில் இன்று முற்பகல் நடைபெற்ற கட்சியின் விசேட குழு கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்கள் முன்னிலையில் மாவை சேனாதிராஜா வாசித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. https://tamilwin.com/article/mavai-senathiraja-support-in-ariyanendren-1726495223#google_vignette
    • Published By: VISHNU   16 SEP, 2024 | 07:34 PM   முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு, மந்துவில் படுகொலையின் 25 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை (15) உணர்வெழுச்சியுடன் முன்னெடுக்கப்பட்டது. குறிப்பாக கடந்த 1999ஆம் ஆண்டு செப்டெம்பர் 15ஆம் திகதியன்று மந்துவில் சந்திப் பகுதியில் இலங்கை வான்படையினர் மேற்கொண்ட விமானத் தாக்குதலில் 24 அப்பாவி தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்டிருந்தனர். இவ்வாறு படுகொலை செய்யப்பட்ட அப்பாவித் தமிழ் மக்களின் 24ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு தாய்த் தமிழ் பேரவை அமைப்பின், தாய்த்தமிழ் நினைவேந்தல் குழுவால் மேற்கொள்ளப்பட்டது. குறித்த படுகொலைச் சம்பவம் இடம்பெற்ற மந்துவில் சந்தி வளாகத்தில் இந்த நினைவேந்தல் நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன. அந்தவகையில் பொதுச்சுடர் ஏற்றப்பட்டு இந்த நினைவேந்தல் நிகழ்வு ஆரம்பிக்கப்பட்டது. இந்த படுகொலைச் சம்பவத்தின்போது உயிரிழந்தவர்களின் உறவுகள்  பொதுச்சுடரை ஏற்றி, நிகழ்வேந்தல் நிகழ்வை ஆரம்பித்துவைத்தனர். தொடர்ந்து குறித்த படுகொலைச் சம்பவத்தின்போது உயிர்நீத்தவர்களின் திருவுருவப் படங்களுக்கு, உயிர்நீத்தவர்களின் உறவுகள் மலர்மாலை அணிவித்து, ஈகைச்சடேரேற்றி, மலர்தூவி, கண்ணீர் சொரிந்து உணர்வெழுச்சியுடன் தமது அஞ்சலிகளைச் செலுத்தியிருந்தனர். மேலும் இந்த அஞ்சலி நிகழ்வுகளில் தாய்த்தமிழ் பேரவை அமைப்பின் ஸ்தாபகர் எஸ்.சத்தியரூபன், தாய்த் தமிழ் பேரவை அமைப்பு நிர்வாகிகள், படுகொலைச் சம்பவத்தின்போது உயிர்நீத்தவர்களின் உறவுகள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/193880
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 1 reply
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.