Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

சுவிட்சர்லாந்து (Switzerland) தமிழ் அமைப்புகளிடையே நடு வீதியில் ஏற்பட்ட சண்டை காரணமாக அப்பகுதியில் குழப்பமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் நேற்றையதினம் (09.09.2024) இடம்பெற்றுள்ளது.

தமிழ் அமைப்புகளிடையே நடக்கவிருந்த கூட்டம் தொடர்பாக ஏற்பட்ட குழப்பத்தின் காரணமாகவே இந்த சண்டை ஏற்பட்டுள்ளது.

இந்த சம்பவம், அப்பகுதியில் வசிக்கும் தமிழர்களிடையே பேசுபொருளாக மாறியுள்ளது.

https://www.facebook.com/LankasriTv/videos/1196935188021042/?ref=embed_video&t=1

https://ibctamil.com/article/tamil-organizations-fight-on-road-in-switzerland-1725930743#google_vignette

  • கருத்துக்கள உறவுகள்
Posted

சுவிட்சலாந்தில் புலிகள் மீதான தடை இருக்காவிட்டால்  நிலைமை  இன்னும் மோசமடைந்திருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

செய்தியில் தமிழ் எனும் பெயரை நீக்கிவிடலாமே. 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
11 hours ago, நியாயம் said:

செய்தியில் தமிழ் எனும் பெயரை நீக்கிவிடலாமே. 

சுவிட்லந்தில் மட்டும் இல்லை இலங்கையில் நடந்தாலும் பெயரை மறைத்து எழுதலாம்.  இலங்கை தமிழரசு கட்சி கூட்டத்தில் சண்டை நடந்தால் அதை இலங்கை அரசியல் கட்சி ஒன்றின்  கூட்டத்தில் சண்டை நடந்தது என்று  செய்தி  எழுதலாம்

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
53 minutes ago, விளங்க நினைப்பவன் said:

சுவிட்லந்தில் மட்டும் இல்லை இலங்கையில் நடந்தாலும் பெயரை மறைத்து எழுதலாம்.  இலங்கை தமிழரசு கட்சி கூட்டத்தில் சண்டை நடந்தால் அதை இலங்கை அரசியல் கட்சி ஒன்றின்  கூட்டத்தில் சண்டை நடந்தது என்று  செய்தி  எழுதலாம்

ஒம் எழுதலாம்   யார் வாசிப்பார்கள்??     இதை நீங்கள் தமிழ் பத்திரிகையில் போடும் போது   வாசிப்போர்கள்.  குறையும்  

தமிழ் என்று போடும் போது அதிகம் பேர்  வாசிப்பார்கள்   இல்லையா??

  • கருத்துக்கள உறவுகள்
Posted
59 minutes ago, Kandiah57 said:

ஒம் எழுதலாம்   யார் வாசிப்பார்கள்??     இதை நீங்கள் தமிழ் பத்திரிகையில் போடும் போது   வாசிப்போர்கள்.  குறையும்  

தமிழ் என்று போடும் போது அதிகம் பேர்  வாசிப்பார்கள்   இல்லையா??

ஓம்

  • கருத்துக்கள உறவுகள்
Posted

முகப்புத்தக வீடியோவை பார்ததாலே தெளிவாக    தெரிகிறது, தமிழ் மக்களின் சொத்துக்களை கொள்ளையடித்த தீவிர தமிழ் தேசியவாதிகளின் பங்கு பிரிப்புச் சண்டை என்பது. 

ஐரோப்பிய யூனியனும் இந்தியாவும் தடையை எடுத்தார்களானால் இந்த  திருட்டு காவாலிகளின் அட்டகாசம் இன்னும் அதிகரிக்கும். 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
10 hours ago, விளங்க நினைப்பவன் said:
11 hours ago, Kandiah57 said:

ஒம் எழுதலாம்   யார் வாசிப்பார்கள்??     இதை நீங்கள் தமிழ் பத்திரிகையில் போடும் போது   வாசிப்போர்கள்.  குறையும்  

தமிழ் என்று போடும் போது அதிகம் பேர்  வாசிப்பார்கள்   இல்லையா??

ஓம்

தமிழர் என்பதை மறைத்து சந்தோசம்பட்டுகொள்ளலாம்  பயன் ஒன்றும்இல்லை என்று நண்பர்களும் சொன்னார்கள் உண்மை தான்.

கனடா மாதிரி ஒரு தமிழர் விழா யேர்மனியிலும் நடத்தினார்களாம் ஆனால் குழப்பி அடிக்க தமிழ் காடையர்கள் இல்லை இனிதாக நடந்தது என்று பேசி கொண்டார்கள் மகிழ்ச்சியாக இருந்தது

  • Confused 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
24 minutes ago, விளங்க நினைப்பவன் said:

தமிழர் என்பதை மறைத்து சந்தோசம்பட்டுகொள்ளலாம்  பயன் ஒன்றும்இல்லை என்று நண்பர்களும் சொன்னார்கள் உண்மை தான்.

கனடா மாதிரி ஒரு தமிழர் விழா யேர்மனியிலும் நடத்தினார்களாம் ஆனால் குழப்பி அடிக்க தமிழ் காடையர்கள் இல்லை இனிதாக நடந்தது என்று பேசி கொண்டார்கள் மகிழ்ச்சியாக இருந்தது

ஆமாம் உண்மை தான்  

ஜேர்மனியில் உள்ள தமிழ் அமைப்புக்கள் லண்டன் சுரேன் 

உடன் இணைந்து   இலங்கை பௌத்த புக்குகளுடன். உடன்படிக்கை செய்யவில்லை  அதாவது இமயமலை 

பிரகடத்தில். ஒப்பமிடவில்லை / கையெழுத்திட்டதில்லை  

ஜேர்மன் தமிழருக்கு நன்றாகவே தெரியும் 

எதையும் கேட்கலாம் ஆனால் எதுவும் கிடையாது இது தெரியமால். கனடா தமிழ் அமைப்பு ஏமாற்றமடைந்து விட்டார்கள்  கனடா வாழ். தமிழ் மக்கள் அருமையானவர்கள். அவர்கள் விரும்பி குழப்பவில்லை 

ஆனால்  எதிர்ப்புகள் தெரிவிப்பதற்கான சந்தர்ப்பங்கள்  வழிமுறைக்கள்.  அவர்களுக்கு வழங்கப்படவில்லை எனவேதான் 

தெரு விழாவை குழப்பினார்கள் 🙏

  • கருத்துக்கள உறவுகள்
Posted
5 hours ago, விளங்க நினைப்பவன் said:

தமிழர் என்பதை மறைத்து சந்தோசம்பட்டுகொள்ளலாம்  பயன் ஒன்றும்இல்லை என்று நண்பர்களும் சொன்னார்கள் உண்மை தான்.

கனடா மாதிரி ஒரு தமிழர் விழா யேர்மனியிலும் நடத்தினார்களாம் ஆனால் குழப்பி அடிக்க தமிழ் காடையர்கள் இல்லை இனிதாக நடந்தது என்று பேசி கொண்டார்கள் மகிழ்ச்சியாக இருந்தது

இங்கு நடந்ததும் ஒரு தெருவிழா தானே. தமிழ் அமைப்புக்களின் தெருவிழா இப்படி தானே இருக்கும். கனடாவிலும் மக்கள் விழாவை குழப்பவில்லையே. இதே போல அமைப்புகளுனுள் இருந்த ஈகோ பிரச்சனை முற்றியதால்  சில அமைப்புகளில் இருந்த காடையர்களே அங்கும்  குழப்பங்களில் ஈடுபட்டனர். 

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
On 10/9/2024 at 08:35, விளங்க நினைப்பவன் said:

சுவிட்சலாந்தில் புலிகள் மீதான தடை இருக்காவிட்டால்  நிலைமை  இன்னும் மோசமடைந்திருக்கும்.

தேசிய தலைவரின் தலைமையின் கீழ் புலிகள் இருந்த போது இப்படி நடக்கவில்லையே. பிறகேன்.. புலிகள் மீது இப்பவும் காழ்பை கொட்டுவதில் குறியாக அலைகிறீர்கள் நீங்கள் சிலர்.

பங்கு பிரிப்பதில்.. இந்தக் குழுக்கள் மட்டுமல்ல.. புளொட்.. ஈபிடிபி.. ரெலோ.. தமிழர் விடுதலை கூட்டணி.. ஈபி.. என்று எந்த தமிழ் குழுவும்.. பாரபட்சமின்றி வெளிநாட்டு வீதிகளில் அடிபட்டதை காணவில்லையோ..!

அது உங்கள் இனத்தின் ஜீன். புலிகளின் தவறல்ல.

புலிகள் மீதான தடை அடாத்தானது.. அநாவசியமானது.. மொத்த ஈழத்தமிழர்களையும் அடிமையாக்கியது.. இதனை செய்த மேற்குலகம்.. ஏதோ ஒரு வகையில்.. ஈழத்தமிழர்களுக்கு எதிராக பெரும் இன அழிப்பு அநியாயத்தை செய்யவும் அடக்குமுறை கோலோஞ்சவும் தான் வழி சமைத்துள்ளன.

இதில்.. உக்ரைனில்.. நேட்டோவுக்காக.. வக்காளத்து. 

Edited by nedukkalapoovan
  • Like 1
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
6 hours ago, island said:

கனடாவிலும் மக்கள் விழாவை குழப்பவில்லையே.

உண்மை தான். காடையர்கள் குழப்பிதால் மக்கள்  கவலையடைந்தனர்.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.