Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

(எம்.நியூட்டன்)

தமிழ் மக்களுக்கான நேர்மையான தீர்வினை வழங்க  ரணில் விக்கிரமசிங்கவால்தான் முடியும். அவருக்கே தமிழ் மக்களின் வாக்கு என பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், 

இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் முடிவைப் பார்த்து மக்கள் தீர்மானிக்க மாட்டார்கள். மக்கள் ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்கவைத்தான் தெரிவு செய்வார்கள். அவரால்தான் தமிழ் மக்களின் பிரச்சினையை நேர்மையாக தீர்க்க  முடியும்.

இலங்கை தமிழ் அரசு கட்சிதான் தமிழ் மக்களின் கட்சி என கூறுவார்கள்.  ஆனால், இன்று இதன் நிலை என்ன? கட்சியில் நேரத்துக்கு ஒரு கதை. 

சிலர்  கட்சியை கைப்பற்றி முடிவுகளை தாமாக அறிவிக்கிறார்கள். முடிவுகளை  ஜனநாயக ரீதியாக எடுக்காமல் தாமே முடிவுகளை எடுத்து மக்கள் மீது திணிக்கிறார்கள். இதனால்தான் எதிர்க்கட்சி தலைவருக்கு வாக்களிக்குமாறு அறிவிக்கிறார்கள். இது மக்களின் முடிவல்ல. தமிழ் மக்களின் முடிவு. 

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை தெரிவு செய்வது என்பது மக்களின் முடிவாக உள்ளது. எதற்காகவென்றால், அவருக்கு நன்றி செலுத்துவதற்காகவே.

கடந்த இரண்டு வருட காலமாக எங்களை மூச்செடுக்க செய்துள்ளார்கள். அடுத்து வரும் ஐந்து வருடங்கள் மிக முக்கியமான காலகட்டமாகும். பொருளாதார ரீதியில் எங்களை மீட்டெடுப்பதற்கு தகுதியான தலைவர் என்ற அடிப்படையில் அவருக்கும் தான் நாங்கள் வாக்களிக்க வேண்டும். அவர் வந்தால்தான் இந்த நாடு முன்னேறும். அதன் மூலம் நாங்கள் முன்னேற முடியும்.

இலங்கை தமிழரசுக் கட்சியின் முடிவை மக்கள் எதிர்பார்த்து காத்திருக்க மாட்டார்கள். அவர்கள் ஏற்கனவே தீர்மானித்துவிட்டார்கள். தமிழ் அரசுக் கட்சி தற்போது குழப்பம் நிறைந்த கட்சியாகவே உள்ளது. அதற்குள் இருக்கும் சுய நலன்கள், ஜனநாயகமற்ற முறையில் எடுக்கின்ற தீர்மானங்கள் மக்களை அவமானப்படுத்துகிறது  மக்களுக்கு தலைமைத்துவம் தேவைப்படும் நேரத்தில் அதிகாரமாக, தன்னிச்சையாக ஒருவர்  எடுத்த முடிவுதான் கட்சியின் முடிவு என்ற அதிகாரத் தொனியில் மக்கள் மீது திணிக்கிறார்கள். இதனை  ஏற்க முடியாது.

இம்முறை ஜனாதிபதியாகவுள்ள ரணில் விக்கிரமசிங்கவுக்கே வடக்கு, கிழக்கில் உள்ள தமிழ் மக்கள் முழுமையான வாக்குகளை அளிப்பார்கள். 

அரசியல் கைதிகள் விடுவிப்பு, காணிகள் விடுவிப்பு என்பவற்றோடு காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதியை நிலைநாட்ட சட்டக் கட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.  நல்லிணக்க செயற்பாடு உறுதியளிக்கப்பட்டுள்ளது. மாகாணங்களுக்கான உச்ச அதிகாரம் பகிர்வதற்கான பணிகள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. வடக்கில் அபிவிருத்தி முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் வடக்கு இளைஞர்களுக்கு  அங்கீகாரம் வழங்கப்பட்டு தொழில் வாய்ப்புக்கள் உருவாக்கப்பட்டு வருகிறது.

இவ்வாறான பல விடயங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இன்னும் ஐந்து வருட காலத்துக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு வாய்ப்புக்களை வழங்குவதன் மூலம் பொருளாதார ரீதியில் மட்டுமன்றி தமிழ் மக்கள் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைக்கு ஒரு நேர்மையான தீர்வினை முன்வைப்பதற்கு அவரால்தான் முடியும். எனவே, அவரை வெற்றி பெறச் செய்வோம் என்றார்.

நேர்மையான தீர்வு வழங்க ரணில் விக்கிரமசிங்கவால் தான் முடியும்; அவருக்கே தமிழ் மக்களின் வாக்கு - அங்கஜன் | Virakesari.lk

  • கருத்துக்கள உறவுகள்
Posted

 அங்கஜன், அப்ப ஏன்… மகிந்த ஜனாதிபதி ஆக இருந்த போது அவரை ஆதரித்தும்,
மைத்திரி ஜனாதிபதியாக இருந்த போது, அவரை ஆதரித்தது மட்டுமல்லாது உங்கள் வீட்டுக்கே கூப்பிட்டு விருந்து வைத்து மகிழ்ந்தீர்கள். உங்களுக்கு காரியம் ஆக வேண்டுமென்றால்… யார் காலிலும் விழுந்து காரியத்தை சாதியுங்கள்.
தமிழ் மக்களையும் அந்தச் சகதிக்குள் இழுக்காதீர்கள்.
முதலில்… நீங்களும், டக்ளசும், வேறு சில தமிழரசு கட்சி அரசியல்வாதிகளும் நிலையான கொள்கையுடன், நேர்மையாக மக்கள் முன் வலம்வரப் பாருங்கள். உங்களின் உபதேசம் இப்போ தேவையில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

உங்க காட்டில எப்பவுமே மழை தான், அங்கஜன் சார்........... மழை பெய்யப் போகிற பக்கமாக பார்த்து உங்க காட்டை நீங்க மூவ் பண்ணிக்கிட்டே இருக்கிறீங்க, சார்........🤣.

ரணில் ஒரு தீர்வும் கொடுக்கமாட்டார், ஆனால் மக்களின் வயிற்றுப்பாட்டுக்கு ஒரு வழி பிறக்கலாம். மற்றவர்கள் வந்தால் தீர்வும் காலி, அதோட சேர்த்து ஆளும் காலி என்ற நிலை தான்......

எல்லாம் சரி, உடுப்பிட்டியில் சஜித்தின் கூட்டத்திற்கு ஒருவரைக் கூட போக விடாமல் எப்படி தடுத்தீர்கள், அங்கஜன் சார்........... பலே கில்லாடி சார் நீங்க.......



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.