Jump to content

2000 கி.மீ தூரம் கடந்து இஸ்ரேலில் விழுந்த ஏவுகணை: கடுமையாக எச்சரித்த நெதன்யாகு


ஏராளன்

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ஈரான் (Iran) ஆதரவு ஹவுதி கிளர்ச்சியாளர்களால் இஸ்ரேல் (Israe) மீது பலஸ்டிக் ஏவுகணை ஒன்று ஏவப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த தாக்குதல் தொடர்பில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு (Benjamin Netanyahu), வடக்கு ஏமனை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் பெரும் பதிலடியை சந்திக்க நேரிடும் என எச்சரித்துள்ளார்.

மத்திய இஸ்ரேலுக்கு ஹவுதி கிளர்ச்சியாளர்கள் இவ்வாறான தாக்குதலை முன்னெடுத்த முதல் தடவையாக இது தெரிவிக்கப்படுகிறது.

2,040 கிலோமீற்றர் தூரம்

இந்த நிலையில், குறித்த தாக்குதலுக்கு 2,040 கிலோமீற்றர் தூரம் சென்று தாக்கும் ஹைபோசோனிக் பாலிஸ்டிக் ஏவுகணை பயன்படுத்தப்பட்டதாக ஹூதியின் செய்தி தொடர்பாளர் யாஹ்யா செரியா தெரிவித்துள்ளார்.

2000 கி.மீ தூரம் கடந்து இஸ்ரேலில் விழுந்த ஏவுகணை: கடுமையாக எச்சரித்த நெதன்யாகு | Houthi Missile From Yemen Lands In Central Israel

ஹைபோசோனிக் பாலிஸ்டிக் ஏவுகணையானது அந்த தூரத்தை கடக்க வெறும் 11 1/2 நிமிடங்கள் மட்டுமே எடுத்ததாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும், ஏவுகணையின் பாகங்கள் மத்திய இஸ்ரேலில் உள்ள பண்ணை ஒன்றில் விழுந்துள்ளதுடன் உயிரிழப்புகள் ஏதும் பதிவாகவில்லை.

இஸ்ரேலின் பதிலடி

இந்த ஆண்டு ஜூலை மாதம், ஹவுதி போராளிகள் முதல் முறையாக இஸ்ரேல் மீது ஆளில்லா விமானம் மூலம் தாக்குதல் நடத்தியதில் ஒருவர் கொல்லப்பட்டதுடன் நான்கு பேர் காயமடைந்தனர்.

2000 கி.மீ தூரம் கடந்து இஸ்ரேலில் விழுந்த ஏவுகணை: கடுமையாக எச்சரித்த நெதன்யாகு | Houthi Missile From Yemen Lands In Central Israel

இதற்கு பதிலடியாக இஸ்ரேல் வான்வழி தாக்குதல் நடத்தியது. அதில் 6 பேர் உயிரிழந்ததுடன், 80 பேர் காயமடைந்தமை குறிப்பிடத்தக்கது.

https://ibctamil.com/article/houthi-missile-from-yemen-lands-in-central-israel-1726403266

Link to comment
Share on other sites



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.