Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சேதுகால்வாய், ஈழ தமிழனுக்கு நன்மை பயக்குமா ...?

8 members have voted

  1. 1. ஈழதமிழனுக்கு இந்திய சேதுகால்வாய் கொடுக்க போவது என்ன..???

    • ஈழதமிழனுக்கு இந்திய சேதுகால்வாய் நன்மையும் கொடுக்காது , தீமையும் கொடுக்காது..
      2
    • ஈழதமிழனுக்கு இந்திய சேதுகால்வாய் கெடுதலை கொடுக்கும்.
      3
    • ஈழதமிழனுக்கு இந்திய சேதுகால்வாய் நன்மையை கொடுக்கும்.
      3

Please sign in or register to vote in this poll.

Featured Replies

சேதுகால்வாய் சம்பந்தமான அரசியல்கள், மத நம்பிக்கைகள், வரலாறுகள் எண்று கதை நீண்டு கொண்டே போகின்றது.. இந்திய மத்திய அரசு அரை குறை மனதோடு ஆரம்பித்தாலும், தென்னகத்தில் வைகோ, கலைஞர், தமிழ்குடிதாங்கி எண்று பல தமிழர்களின் ஏகோபித்த வேண்டு கோளும் ஆதரவும் இருக்கிறது...!

விஞ்ஞானிகளும் ,இயற்கை ஆர்வளர்களும் சில எதிர் கருத்துகளை சொல்கிறார்கள்... பலவகையாக கடல் தாவரங்களின் அழிவால், அரியவகை மீன்கள் அழியும் அதனால், மீன்பிடித்துறையும் மீனவர்களும் பாதிக்க படும் எனும் கருத்துக்களும், இயற்கையான சுண்ண பாறைகளின் அழிவு பெரிய அளவான கடல் அரிப்புக்களையும் தரும் எண்றும், மற்றும் பல இயற்கை தாதுக்களும் அழியும் என்கிறார்கள்...

அது எல்லாம் தீர்க்க கூடியது, ஏற்படும் பணச்செலவை வரும் வருமானத்தில் ஈடு கட்ட முடியும்.. மீனவர்களுக்கு துறைமுகங்களில் அதிக வருமானம் தரும் வேலைகளும், கப்பல் கட்டுமான துறை முகங்களுன் அமைக்கப்படுவதால் யாருக்கும் தீங்கு வராது என்கிறது அரசுதுறை, அதோடு வெறும் குறைந்த அகலமான பிரதேசங்களும், 13 மீற்றர் மட்டுமே ஆழப்படுத்த இருப்பதால் மீதமான மண்ணும் கல்லும் கடல் அரிப்பை தடுக்கும் வண்ணம் பயன் படும் என்கிறது சேதுகால்வாய் துறை...

இது இந்திய தமிழர்களுக்கும் வேலை வாய்ப்பினை தரும்... துறைமுகங்கள் மத்திய அரசின் கட்டுக்குள் இருப்பதால், இந்திய அரசுக்கும் பணம் பெருக்கும் வளியாகவும் இருக்கும்... அதில் சந்தேகம் இல்லை...!!

ஆனால் ஈழதமிழருக்கு என்ன நன்மையை தரும்...?? அரசியல் அழுத்தங்களும், போராட்டம் மீதான அழுதங்களையும் இந்திய அரசு ஏற்படுத்தாமல் இருக்கும் என்பதுக்கு என்ன நிச்சயம் இருக்கிறது..?? சில அரசியல் ஆதாயங்கள் எண்று வரும்பொழுதே ஈழதமிழருக்கு ஆப்பு வைக்க பின் நிற்காத இந்தியா சேது கால்வாய் பணம் வரும்பொழுது சும்மா இருந்து விடுமா..?? இல்லை எதையாவது ஈழதமிழருக்கு விட்டு கொடுத்துதான் விடுமா.?

சேது கால்வாயால் யாராவது பயணம் செய்ய வேண்டுமானால் அந்த பகுதி அமைதியாக இருக்க வேண்டும். அப்படி அமைதியாக இருக்க, இந்திய அரசு யாருடனாவது ஒப்பந்தம் செய்து கொண்டு பாதுகாப்பை பலப்படுத்தவே முன் நிக்கும்.. அப்படி ஒப்பந்தம் செய்வது தமிழர் தரப்புடனாக இருக்காது , இலங்கை அரசுடன் தானாக இருக்கும் என்பது எனது கருத்து.. தமிழர் தலைமையை அங்கீகரிக்காத இந்தியா அவர்களுடன் ஒப்பந்தம் செய்யும் எண்று நான் கருதவில்லை...

சேது கடல் என்பது ஈழதமிழருக்கும் சம உரிமை உள்ள கடல், அதில் ஒருவர் பயன் பெறுவதும். மற்றவர் சுறண்ட பட போகிறார்கள் என்பதும்தான் உண்மையாக எனக்கு படுகிறது..

இராமர் மீதும், இராமர் பாலம் மீதும், பார்ப்பணர் மீதும், உள்ள கோபத்தை எல்லாம் மூட்டை கட்டிவிட்டு.. ஒரு ஈழதமிழனாய், ஒரு தமிழனாய் சிந்தியுங்கள்... உங்களின் கருத்துகளையும் சொல்லுங்கள்..!

Edited by தயா

இந்தியா தீமை செய்யும் எண்டு தோண்றவில்லை . ஆனால் நன்மையும் செய்யாது. எங்களின் நன்மையை நாங்கள்தான் தேடிகொள்ள வேண்டும்.

*********

Edited by harikalan

இந்த திட்டத்தால் தீமை என சொல்லமுடியாது இந்த திட்டம் நிறைவேறினாலும் நிறைவேறாட்டியும் நமக்கு ஒன்றே.ஆனால் திட்டம் நிறைவேறினால் சென்னை துறைமுகம் வருமாணம் ஈட்டும் சிறீலங்காவின் இந்து சமுத்திரத்தின் முத்து என்னும் இமேஜ் டமேஜாகும்.அதுமட்டுமல்ல இந்த பாதையில் இருக்கும் காங்கேஸன் துறை துறைமுகம் வழம் பெறும் கிழக்கு ஆசியாபக்கம் செல்லும் கப்பல்களுக்கு எரிபொருள் நிரப்புவதுக்கு சாதகமான இடமாக அமையும் அதாவது சென்னைக்கு செல்வதை விட காங்கேசன் துறை அருகிலேயே இருகின்றது.சிங்கள தேசத்தின் பொருளாதாரம் படுக்கும் எதிரி பலனடைவதை விட எம் சகோதரர்களான தமிழக மக்கள் பலனடைவது எமக்கு நன்மையே அதேபோல மன்னாரில் தமிழீழ தனியரசு எண்ணை அகழ்வு மேற்கொள்ளும் போதும் இந்த திட்டம் போக்குவரத்துக்கு சிறந்த இடமாக இருக்கும் என்பது எனது எண்ணம்

  • தொடங்கியவர்

நன்மைகள்

காங்கேசந்துறை துறைமுகம் முக்கியம் பெறும் கொழும்பு விழும்

காங்கேசன் துறை முகத்தை முக்கியம் பெற விடுவோம் எண்று இந்திய அரசு உறுதி சொல்லி விட்டதா.??

அப்படியும் காங்காசந்துறை முக்கியம் பெறுமாக இருந்தால் இந்திய துறைமுகம் ஒண்றுக்குதான் நேரடி போட்டியாக இருக்குமே தவிர, கொழும்பு துறைமுகத்துக்கு இல்லை... கொழும்புக்கு போட்டி எண்டால் அவை தென்னிந்திய துறைமுகங்கள் மட்டும்தான்...

இப்ப எனது கேள்வியே கால்வாயை வெட்டுபவர் இந்திய அரசு... தாங்கள் அடையவேண்டிய முழுபயனில் கொஞ்சத்தை நீங்கள் அடைய விடுவானா என்பதுதான்...?? அதை பத்தி என்ன நினைக்கிறீங்கள்..??

நீங்கள் சொல்வது சாத்தியம்தான்..... அது எப்போது எண்றால். அந்த வாய்க்காலை ஈழத்தமிழன் வெட்டினான் எண்றால்... போனால் போகட்டும் இந்திய தமிழர்களும் பய்யன் பெறட்டும் எண்று விட்டுவிடலாம்... ஆனால் வெட்டுவது இந்திய மத்திய அரசாங்கம் என்பதை கவனத்தில் கொள்ளுங்கோ....!!

Edited by தயா

நன்மை தீமை பற்றி இப்ப நாங்கள் அவசரப்பட்டு சொல்லமுடியாது....ஆனால் நாங்கள் எங்களுக்கு எவ்வளவு நன்மையளிக்குமோ அந்த வழிகளை சரியாக பயன்படுத்தவேண்டும்..வேறு ஒன்றும் நாம் செய்யமுடியாது!!! இது ஒரு தவிர்க்கமுடியாத தேவையாக எதிர்காலத்தில் அமையும்!!!

தயா அண்ணா கால்வாயினை பாவிப்பதுக்குத்தான் காசு அறவிடப்படும் என நினைகின்றேன் இந்த துறைமுகத்தை பாவி என கட்டாயப்படுத்த முடியாது.இந்த திட்டமானது இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இஅடையில் இருக்கும் கடற்பகுதியை 12 மீற்றர் ஆழமாக தோண்டெஅப்பட போகின்றது 300 மீற்றர் அகலமும் 89 கிலோ மீற்றர் தூரமும் கொண்டதே இந்த திட்டம்

AlignChannel.jpg

sscp.jpg

இரண்டாவது படதினை பார்த்தீர்களாயின் சென்னை துறைமுகமும் காங்கேஸன் துறை துறைமுகமும் ஒரே அளவான தூரத்திலேயே இருகின்றது ஆகவே நிச்சயம் காங்கேஸன் துறை துறைமுகம் பயனடையும்

  • தொடங்கியவர்

ஈழவா..

வரை படத்தை மட்டும் வைத்து எந்த முடிவுக்கும் வரமுடியாது.... கால்வாய் என்பது இந்திய கடல் எல்லைக்குள் வெட்டப்படுகிறது ஏன்பதை கவனத்தில் கொள்ளுங்கள்... இந்திய ஈழ கடல் எல்லையில் வெட்ட படவில்லை.....

அந்த பிரதேசமே ஆளம் குறைந்த பகுதி.. அந்த கால்வாயில் ஆரம்ப முகப்பு சென்னை துறைமுகத்துக்கோ இல்லை தூத்து குடிக்கோ அண்மையில் அமைந்துவிட்டால் அவ்வளவு தூரம் சுற்றி கங்கேசன் துறைக்கு வர வேண்டிய அவசியம் இல்லை...

கால்வாயை கட்டுக்குள் வைத்து இருக்க இந்திய கடல்படை, அல்லது சுங்கதுறை எப்போதும் வாயில் களில் நிற்பார்கள்... ஆதலால் தமிழர்கள் ஓசியில் பாவிக்க முடியாது... அதாவது மன்னாரில் இருந்து ஒரு தமிழனின் கப்பல் திருகோண மலைக்கோ, இல்லை முல்லை தீவிற்கோ, அல்லது காங்கேசன் துறைக்கோ போனால் இலவசமாக, சுதந்திரமாக அந்த கால்வாயை உபயோகிக்க முடியுமா..?? (இந்திய கப்பல்கள் கூட காசு கொடுக்க வேண்டி இருக்கும் என்பதை நீங்கள் சொல்ல முடியும்... ஆனால் வரி அறவீட்டு முறையில் உள்ள வளிகளில் அவர்கள் அதனை திரும்ப பெற்று விடுவர்)

அதையும் விட அப்படி கடற்படை நடமாட்டம் என்பது போராட்ட காலத்தில் எங்களின் மக்களுக்கும் (இடம்பெயரும் ) போராளிகளுக்கும் எவ்வளவு இன்னைலை கொடுக்கும்...??

மற்றும் இந்திய துறைகளை உபயோகிப்பவர்கள் கால்வாயின் ஊடாக சலுகை அடிப்படையில் போக முடியும் எனும் அறிவிப்பை இந்திய அரசு அறிவிக்க மாட்டார்கள் என்பதில் சந்தேகம் இல்லை... அப்படி அதையும் மீறி எங்களின் துறைமுகங்கள் வளம் பெற வைப்பதும் இப்போது செய்வதுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை...!

Edited by தயா

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.