Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தென்னிலங்கை அரசியல்வாதிக்கு ஆதரவு தெரிவித்து பிரச்சாரம் செய்து வரும் தமிழ் அரசியல்வாதிகள் ஆளுநர் பதவிக்கும், அமைச்சர் பதவிக்கும் தமிழ் மக்களை விலை பேசி விட முடியாது என தமிழரசு கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்தார்.

வட்டுக்கோட்டை தொகுதி கிளை நேற்றையதினம்(17)  ஏற்பாடு செய்த பொது வேட்பாளர் அரியநேந்திரனுக்கு ஆதரவு தெரிவித்து இடம்பெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஒவ்வொரு தேர்தல்கள் வருகிற பொழுது நாங்கள் சொல்லுகின்ற வார்த்தைகள்  தேர்தல் முடிவுற்றதும்  எங்களுக்கு ஒரு பயனையும் தரவில்லை என  2009 பின் பல தடவைகள் கூறியிருக்கிறோம்.

காரணம் நாங்கள் ஆயுதம் ஏந்தி போராடிய ஒரு இனம்.  இதே வட்டுக்கோட்டை மண்ணில் நாங்கள் எல்லோரும் இருந்து பேசுகின்ற இந்த மைதானம் சூழ்ந்து இருக்கின்ற  தேசிய விடுதலை மண்ணில் 1970 ஆம் ஆண்டுகளின் ஆரம்பத்தில் ஒரு தீர்மானத்தை எடுத்து இருந்தோம்.

மக்களுக்கு ஒரே தீர்வு தமிழீழம் தான் என.  காரணம் நாங்கள் தொடர்ந்து இனப்படுகொலை செய்யப்பட்ட பொழுது எங்கள் மீது சிங்கள ஆட்சியாளர்கள் தொடர்ந்து எங்கள் உயிர்களை குடித்த பொழுது வேறு வழியின்றி நாங்கள் அறவழியிலே போராடி இனம் ஆயுதம் தூக்கத் துணிக்கப்பட்டது.

பல பேச்சு வார்த்தைகளை நடத்தினோம் பல விட்டுக்கொடுப்புகளை செய்தோம் எல்லாவற்றிலும்  ஏமாற்றப்பட்டோம்.

தந்தை செல்வா வட்டுக்கோட்டையில் வைத்து சொன்னார் நான் எல்லா வழிகளிலும் முயற்சித்து பார்த்தேன்.  எதுவும் நடக்கவில்லை.  இழந்து போதும்  நாங்கள் ஒரு இறைமையுள்ள இனமாக இருந்திருக்கிறோம்.

எங்களுடைய இறைமையை மீட்டெடுக்கும் எங்களுடைய இறுதி தருணமாக  அறவெளிப் போராட்டம் என்றார்.

அவருடைய கருத்து எங்களுக்கு முழுமையான இலக்கு தமிழினம் தான் என்ற செய்தியைச் சொன்ன மண் இந்த மண். அதனால் தான் இந்த மண்ணுக்குரிய மகிமை வித்தியாசமானது .

1977 தேர்தலில்  24 தொகுதிகளில் போட்டியிட்டு இருந்தோம் 18 தொகுதிகளில் எங்களுடைய மக்கள் எங்களை வெல்ல வைத்து மிகப்பெரிய ஆணையை   வழங்கிய காலம்.

ஆனால் 1978 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட பயங்கரவாத தடைச் சட்டத்தின் ஊடாகவும் 1983 இல் எங்கள் மீது ஏவப்பட்ட இனப்படுகொலைகள்  நாங்கள் இந்த மண்ணிலே அனாதைகள் ஆக்கப்பட்டோம் .

நாங்கள் அழிக்கப்படும் அனாதைகள் ஆக்கப்பட்டதை தொடர்ந்து தமிழினம் தன்னைக் காப்பதற்காக ஆயுதப் போராட்டம் ஒன்றை ஆரம்பிக்க வேண்டிய தேவை சிங்கள ஆட்சியாளர்களால் திணிக்கப்பட்டது.

அதனைத் தான் 1985 ஆம் ஆண்டு இந்தியாவினுடைய இந்தியா டுடே பத்திரிகைக்கு  தலைவர் பிரபாகரன் அவர்களை செவ்வியில் நாங்கள் விரும்பி ஆயுதத்தை தூக்கவில்லை எங்கள் பாதுகாப்புக்காகவும்   மக்களின் பாதுகாப்புக்காக நாங்கள் ஆயுதங்களை தூக்க வேண்டி நிர்பந்திக்கப்பட்டோம் என்றார்.

தலைவரின் கருத்தின் ஊடாக ஆயுதங்களை தேடி நாங்கள் போகவில்லை என்ற செய்தியை மிகத் தெளிவாகச் சொல்லி இருந்தார்.

உலகத்தினுடைய வரலாற்றிலேயே இரண்டு செய்திகள் முக்கியத்துவம் பெறுகின்றன ஒன்று1947 ஆம் ஆண்டு

இலங்கை தமிழரசு கட்சியை உருவாக்கி தமிழர்கள் உரிமையுள்ள இனம் .

அவர்களுக்குரிய சுய நிர்ணய உரிமையுடன் கூடிய அரசியல் தீர்வுதான் இந்த மண்ணில் அவர்களுக்கு தனியரசாக தனித்துவமான இனமாக அடையாளப்படுத்தும் என கொழும்பு எழுதும் இளைஞர் சங்கத்தில் தந்தை செல்வா ஆற்றிய உரை  வரலாற்று  முக்கியத்துவம் வாழ்ந்த உரையாகப் பார்க்கப்படுகிறது.

அதேபோல தலைவர் பிரபாகரன் அவர்கள் இந்தியா டுடே ஊடகத்துக்கு வழங்கிய செவ்வி தமிழர்கள் ஏன் ஆயுதம்   தூக்கினார்கள் என்பதற்கான உண்மையைக் கூறியுள்ளார்.

அதனால் தான் அன்புக்குரிய சகோதரர்களே சகோதரிகளே நாங்கள் விரும்பி ஆயுதம் தூக்கவில்லை.  எங்களுக்கு முன்னாள் இருக்கும்  செழியன் காயப்பட்டு நடக்க முடியாமல் மேடையிலே ஏற முடியாமல் இருக்கிறார்.

இந்த மண்ணிலே மக்களுக்காக போராடி  இரத்தம் சிந்தியதால் விழிப்புண் அடைந்தவர்களாக எங்களுடைய தேசிய விடுதலை நேசித்த இனம் அதனால்தான் எங்கள் வீட்டினுடைய ஒவ்வொரு கதவுகளையும் தட்டிப் பாருங்கள்.

வட்டுக்கோட்டை தொகுதியில் இருக்கின்ற  கதவுகள் மட்டுமல்ல வடக்கு கிழக்கில் இருக்கிற தமிழ் மக்களுடைய ஒவ்வொருவருடைய வீட்டு கதவுகளையும் தட்டிப் பாருங்கள் யாரோ ஒரு போராளிகளுடைய வீர சாவு யாரோ ஒரு போராளியின் விழிப்புண் காயங்கள் இருக்கும்.

அதனால்  தான் யுத்தம் முடிவுக்கு வந்த பிற்பாடு எங்கள் மீதான யுத்தம் மொளனிக்கப்பட்ட பிற்பாடு நாங்கள்  இந்த மண்ணிலே நடக்கிற ஒவ்வொரு தேர்தல்களையும் ஒரு போர்க்களமாக பார்க்கிறோம் .

அது ஒரு யுத்த களமாக பார்க்கிறோம் அதனால்தான்  போர்க்களத்தில் நாங்கள் பாவிக்கின்ற ஆயுதம் வெடி மருந்துகள் அல்ல பீரங்கிக் குண்டுகள் அல்ல துப்பாக்கிகள் அல்ல உங்கள் கைகளுக்கு கிடைத்துள்ள வாக்குச் சீட்டு.

21 ஆம் திகதி   வாக்கு சீட்டுகள் தான் உங்களுடைய அந்த மிகப்பெரிய ஆயுதம் அதனை நாங்கள் இனத்துக்காக ப்  பயன்படுத்துகிறோமா அல்லது பணத்திற்காக தெற்கு அரசியல் வாதிகளுக்கும்  பயன்படுத்தப்போகிறோமா?

எல்லா சிந்தனையும் எண்ணமும் எங்களுடைய கைகளில் எங்களுடைய மனங்கள் தான் இருக்கிறது நாங்க வழமையாக 1978 ஆம் ஆண்டிலிருந்து யாரோ ஒரு சிங்களம் வேட்பாளருக்கு  வாக்களித்துவிட்டு கைய கட்டி நின்ற இனம்.

ஒரு அடிமையாக அது ஒரு சிங்கள வேட்பாளருக்கு ஒரு தென்பகுதி வேட்பாளருக்கு அளிக்கிற வாக்குத்தானே என பேசாமலே இருந்து விட்டுப் போன இனம் இன்று எமக்கான வேட்பாளரை களமிறங்கியுள்ளது.

2009 ஆம் ஆண்டு எங்கள் மீது யார் குற்றம் புரிந்தார்களோ எங்கள் மீது யார்  குண்டுகளை வீசினார்களோ எங்கள் மீது யார் கொத்துக் குண்டுகளை வீசினார்களோ எங்கள் மீது யார் பொஸ்பரஸ் குண்டுகளை வீசினார்களோ அந்த வீசிய இராணுவத்தினுடைய தளபதியாக இருந்த பொன்சேகாவுக்கு  வாக்களிக்குமாறு  எங்களுடைய கட்சி கேட்டிருந்தது.

நாங்களும் மறுக்கவில்லை போய்  வாக்களிப்போம் காரணம் எய்தவன் இருக்க அம்பை நோவதா என எங்களை  நாங்கள் ஆறுதல் படுத்திச் சொல்லிக் கொண்டோம்.

மஹிந்த ராஜபக்ஷ என்கிற இனப்படுகொலையாளியை  அகற்றுவதற்காக நாங்கள் பொன்சேகாவுக்கு வாக்களித்தோம் என்ற செய்தியை சொன்னோம் அவர் தோற்றுப் போனார்.

2015 ஆம் ஆண்டு மகிந்த எதிரி  மைத்திரிக்கு வாக்களியுங்கள் என்றோம்  எங்களுடைய மக்கள்  வாக்களித்தார்கள் அவர் வென்றவுடன் சொன்னார் நான் இந்த தேர்தலில் தோற்று இருந்தால் ஆறடி நிலம் கூட எனக்கு மிஞ்சியிருக்காது.

அவரை திருகோணமலையில் மாலை சூடி வரவேற்ற சம்பந்தன் ஐயா  மண்டேலாவாக வந்திருக்கிறார்  என வாழ்த்தினார்.

ஆனால்  நான்கு வருடங்களில் மீண்டும் அதே கோர முகத்தை மைத்திரிபால சிறிசேன காட்டினார்.

எந்த வழியில் வந்தாரோ என்ன அரசியல் தீர்வை செய்வேன் என சொன்னாரோ அவற்றையெல்லாம் விட்டு மீண்டும் மஹிந்த ராஜபக்சேவை பிரதமர் ஆக்கினார்.

2020 ஆம் ஆண்டு நாங்கள் திரும்ப நடந்த ஜனாதிபதி தேர்தலில்  சஜித் பிரேமதாசாவுக்கு எங்களுடைய கட்சி வாக்களிப்பதாக நாங்கள் மக்களிடம் கேட்டோம்  மக்கள் வாக்களித்தார்கள்.

அவரும் தோற்றுப் போனார்  தமிழ் மக்கள் வாக்களித்ததற்காக 2009 ஆம் ஆண்டடு இறுதி யுத்தத்திலே பல்லாயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டதற்கு ஒரு மன்னிப்பு கேட்கக் கூட அவருக்கு மனம் வரவில்லை.

2022 ஆம் ஆண்டு அரகலய போராட்டத்தின்  கோட்டபாய ராஜபக்ஷ ஓட ஓட விரட்டப்பட்ட பொழுது அந்த இடத்திற்கு ரணில் விக்கிரமசிங்கமும் டக்ளஸ் அழகப்பெருமாவும் போட்டியிட்டார்கள்.

அழகப் பெருமாவை ஆதரித்தோம்.  அவரும் தோற்றுப் போனார்  வரலாற்று ரீதியாக அவர்களுக்கு வாக்களித்து வாக்களித்து தோற்றுப்போன இனம் நாங்கள் எதையுமே அடைய முடியவில்லை.

ஒருவரை வெல்ல வைத்தோம்.  அவரும்  எங்களுக்கு எதுவும் செய்யவில்லை.

ஆகவே அன்புக்குரியவர்களே இப்பொழுது வரலாற்றை  திரும்பிப்  பாருங்கள்.

நாங்கள் எவ்வளவு தூரம் மனம் திறந்து  செய்திருந்தோம் ஆனால் அவர்கள் எங்களுக்கு எதையுமே செய்யவில்லை அதனால் தான் இப்பொழுது முடிவுக்கு வந்தோம். பொது வேட்பாளரை ஆதரித்து எங்கள் செய்தியை உலகிற்கு கூறுவதற்கு.

வடக்கு கிழக்கில் இருக்கின்ற 14,40,000 தமிழ் வாக்காளர்களை நோக்கி  தமிழ் பொது வேட்பாளர் நகர்ந்து கொண்டிருக்கிறது.

தெற்கு பயப்படுகிறது.  தமிழ் மக்கள்  பொது வேட்பாளருக்கு தமிழ் மக்கள்  வாக்களிக்க போகிறார்கள். அதனால் தான்  கடைசி  நேரத்திலும் கூட அவர்கள் யாழ்ப்பாணத்திற்கு வருகிறார்கள் .

அவர்களுக்கு பின்னால் தமிழ அரசியல்வாதிகள் சிலர் ஆளுநர் பதவி தருவார். அமைச்சுப் பதவி தருவார் பேரம் பேசிக்கொண்டு தமிழ் மக்களின் வாக்குகளை சிதறடிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளனர்

ஆகவே,  எமது மக்கள் பொது வேட்பாளருக்கு வழங்கும் வாக்குகள் தெற்கு  மட்டும் அல்ல.

பதவிக்கும் பணத்துக்கும் விலை போகும் தமிழ் அரசியல்வாதிகளுக்கும் ஒரு எடுத்துக்காட்டாக அமைய வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.

https://thinakkural.lk/article/309530

  • கருத்துக்கள உறவுகள்

மேலேயுள்ள கட்டுரையை வாசிக்கும் போது ஏற்படும் கேள்வி,...இந்தாள் என்ன லூசா,.....

🤦🏼‍♂️

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kapithan said:

மேலேயுள்ள கட்டுரையை வாசிக்கும் போது ஏற்படும் கேள்வி,...இந்தாள் என்ன லூசா,.....

இன்று காலையில் சிறீதரனின் பேச்சை வாசிக்கும் போது உங்களது எண்ணம்தான் எனக்கும் வந்தது. எழுபதுகளில் எங்கள் நகரத்தில், காலையில ஏழுமணிக்கு ஒருவர் வந்து இப்படி ஏதாவது சொல்லிக் கொண்டேயிருப்பார். இடையிடையே சிரித்தும் கொள்வார். அப்படி ஒரு படத்தைப் போடலாம் என எண்ணியிருந்தேன். நேரம் கிடைக்கவில்லை.  மதியம் படத்தைத் தயார் படுத்திவிட்டுப் பார்த்தால் உங்கள் கருத்து, “இந்தாள் என்ன லூசா” என்றிருக்கிறது.

large.IMG_7052.jpeg.ebdd3640783d084af81a

  • கருத்துக்கள உறவுகள்

இந்தாள்  மட்டுமல்ல இந்த கூட்டமே லூசுகள் தான்.  14 லட்சம்  வாக்குகளில் இரண்டு அல்லது மூன்று  லட்சத்தை பெற்றுவிட்டு வந்து மாபெரும்  பேரெழுச்சி என்று லூசுகள் போல் கத்த தான் போகிறார்கள்.  

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, island said:

இந்தாள்  மட்டுமல்ல இந்த கூட்டமே லூசுகள் தான்.  14 லட்சம்  வாக்குகளில் இரண்டு அல்லது மூன்று  லட்சத்தை பெற்றுவிட்டு வந்து மாபெரும்  பேரெழுச்சி என்று லூசுகள் போல் கத்த தான் போகிறார்கள்.  

சேர்ந்து உடுக்கடிச்சு சன்னதமாட புலம்பெயர் போராட்டக்காரர்களும் இருக்கினமெல்லே! 😂

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, வாலி said:

சேர்ந்து உடுக்கடிச்சு சன்னதமாட புலம்பெயர் போராட்டக்காரர்களும் இருக்கினமெல்லே! 😂

"உடுக்கடித்து சன்னதம் ஆடுதல்" எனும் மரியாதையான வாக்கியம் உந்த பிக்ளிகாப் பசங்களுக்கு கொஞ்சம் அதிகம்தான் ...😁

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.