Jump to content

ஜனாதிபதி தேர்தல்-யாழ். மாவட்டத்தில் பொதுமக்கள் ஆர்வத்துடன் பங்கேற்பு!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

IMG-20240921-WA0092.jpg?resize=750,375

ஜனாதிபதி தேர்தல்-யாழ். மாவட்டத்தில் பொதுமக்கள் ஆர்வத்துடன் பங்கேற்பு!

ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்கெடுப்பில் பொதுமக்கள் யாழ்ப்பாண மாவட்டத்தில் ஆர்வத்துடன் பங்கேற்று வருகின்றனர்.

அதன்படி இன்று காலை 7 மணிக்கு வாக்களிப்பு ஆரம்பமான நிலையில் வாக்குச் சாவடிகளில் பொதுமக்கள் வரிசையில் நின்று ஜனநாயக கடமையில் ஈடுபட்டு வருகின்றனர்.

தேர்தல் தினத்தில் வன்முறைகள் மற்றும் சட்டமீறல்களை கட்டுப்படுத்துவதற்காக பொலிஸார் கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதுடன் தேர்தல் கண்காணிப்பு அமைப்புகள் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளன.

https://athavannews.com/2024/1400368

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வவுனியா மாவட்டத்தின் வாக்களிப்பு நிலைவரம்!

வவுனியா மாவட்டத்தின் வாக்களிப்பு நிலைவரம்!

ஒன்பதாவது ஜனாதிபதி தேர்தலிற்கான வாக்குப்பதிவுகள் இன்று காலை 07.00 மணி முதல் ஆரம்பமாகி சுமுகமான முறையில் இடம்பெற்று வருகின்றது.
 
வவுனியா மாவட்டத்தில் பொதுமக்கள் ஆர்வத்துடன் வாக்களிப்பதை அவதானிக்க கூடியதாக உள்ளதுடன், இராஜாங்க அமைச்சர் கே.கே.மஸ்தான் வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயத்தில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கினை செலுத்தியிருந்தார்.

 

##################  ##################    ###################

 

 

மலையக பெருந்தோட்ட மக்கள் ஆர்வத்துடன் வாக்களிப்பு!

மலையக பெருந்தோட்ட மக்கள் ஆர்வத்துடன் வாக்களிப்பு!

 

இலங்கையின் 9வது நிறைவேற்று அதிகாரம் கொண்ட தெரிவு செய்வதற்கான வாக்களிப்பு இன்று காலை 7 மணிக்கு ஆரம்பமாகி தற்போது இடம்பெற்று வருகின்றது.

குறிப்பாக மலையகத்தை பொருத்தவரை பெருந்தோட்ட மக்கள் உட்பட அனைவரும் வாக்களிப்பு நிலையங்களுக்கு சென்று தங்களுடைய வாக்குகளை பயன்படுத்துவதை காணக்கூடியதாக இருக்கின்றது.

அதன்படி நுவரெலியா-மஸ்கெலியா தேர்தல் தொகுதியில் 347,646 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.aகொத்மலை தேர்தல் தொகுதியில் 88219 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். அத்துடன் 90,990 வாக்காளர்கள் வலப்பனை தேர்தல் தொகுதியில் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளதோடு ஹங்குராங்கெத்த தேர்தல் தொகுதியில் 78,437 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.

நுவரெலியா மாவட்டத்தில் 534 வாக்களிப்பு நிலையங்களில் வாக்காளர்கள் வாக்களிக்கவுள்ளனர்.

மேலும், 52 வாக்கு எண்ணும் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. வாக்குகளை எண்ணுவதற்காக நுவரெலியா காமினி தேசிய கல்லூரியில் 41 வாக்கு எண்ணும் நிலையங்களும், நுவரெலியா மாவட்ட செயலகத்தில் தபால் வாக்குகள் எண்ணுவதற்காக 11 வாக்கு எண்ணும் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

அதேபோல் மத்திய மாகாணத்தில் கண்டி, மாத்தளை போன்ற பகுதிகளிலும் ஊவா மாகாணத்தில் பதுளை, பண்டாரவளை ஆகிய பகுதிகளிலும் வாக்களிப்பு மிகவும் நீதியாகவும் சுதந்திரமான முறையிலும் நடைபெற்று வருவதாக தேர்தல் கண்காணிப்பு அமைப்புகள் தெரிவிக்கின்றன.

https://athavannews.com/2024/1400359

#################  ##################    ###################

DSC_0144.jpg?resize=750,375

மன்னாரில் அமைதியான முறையில் வாக்களிப்புகள் ஆரம்பம்!

மன்னாரில் 9 ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி தேர்தலுக்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி ஆகிய நிலையில் இன்றைய தினம் காலை 7 மணி முதல் மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட வாக்களிப்பு நிலையங்களில் வாக்களிப்புகள் இடம்பெற்று வருகின்றது.

இன்னிலையில் வன்னி மாவட்டம் மன்னார் தேர்தல் தொகுதியில் 98 வாக்களிப்பு நிலையங்களில் வாக்களிப்புகள் இடம்பெற்று வருகின்றது.

மன்னார் மாவட்டத்தில் 90 ஆயிரத்து 607 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர் என்றும்
மன்னார் மாவட்டத்தில் உள்ள வாக்களிப்பு நிலையங்களுக்கு உள்ளூர் மற்றும் வெளிநாட்டு தேர்தல் கண்காணிப்பு குழுவினர் சென்று வாக்களிப்பை அவதானித்து வருகின்றனர்.

குறிப்பாக ஐரோப்பிய ஒன்றியத்தின் தேர்தல் கண்காணிப்புக் குழுவினர் விஜயம் செய்து கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் மன்னார் மாவட்டத்தில் அமைதியான முறையில் வாக்களிப்புகள் இடம் பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2024/1400362

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வேட்பாளர்கள் தொடர்பான ஆய்வு நடவடிக்கை – முடிவுகள் தொிவிப்பது என்ன?

ஜனாதிபதித் தேர்தல்-சில மாவட்டங்களில் அளிக்கப்பட்ட வாக்குகளின் சதவீதம்!

ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்களிப்பு நடவடிக்கைகள் இன்று காலை 7 மணி முதல் ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றன.

அதன்படி இன்று மாலை 4 மணி வரை மக்கள் தமது வாக்குகளை அளிக்க முடியும் இருந்த நேரத்தில் திருத்தம் மேற்கொள்வது தொடர்பாக விசேட வர்த்தமானி அறிவித்தலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

அதன்படி மாலை 4 மணியாகும்போது வாக்கெடுப்பு நிலையத்தில் வரிசைகளில் நிற்கின்ற அனைத்து வாக்காளர்களுக்கு வாக்குச்சீட்டு வழங்கப்படும் வரையில் வாக்கெடுப்பு நடத்தப்படும் என அதிவிசேட வர்த்தமானி திருத்தப்பட்டுள்ளது

இதேவேளை இன்று காலை 10 மணி வரையான காலப்பகுதியில் சில மாவட்டங்களில் அளிக்கப்பட்ட மொத்த வாக்குகளின் சதவீதம் பின்வருமாறு அறிவிக்கப்பட்டுள்ளது

களுத்துறை – 32%
கம்பஹா – 25%
கேகாலை – 15%
நுவரெலியா – 30%
இரத்தினபுரி – 20%
அம்பாறை- 30%
மன்னார்- 29%
முல்லைத்தீவு – 25%
வவுனியா – 30%
கொழும்பு – 20%
கண்டி – 20%
காலி – 18%
மாத்தறை – 30%
மட்டக்களப்பு – 17%
குருநாகல் – 30%
பொலனறுவை – 38%
மொனராகலை – 21%
பதுளை – 21%

https://athavannews.com/2024/1400397

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

202108292052266755_arrest_SECVPF.jpg?res

வாக்கு சீட்டை கிழித்த இளைஞன் யாழ்ப்பாணத்தில் கைது!

யாழ்ப்பாணத்தில் வாக்களிக்க வந்த இளைஞன் ஒருவர் வாக்கு சீட்டை கிழித்ததை அடுத்து பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

நாயன்மார்கட்டு மகேஸ்வரி வித்தியாசாலையில் இன்றைய தினம் சனிக்கிழமை வாக்களிக்க சென்ற இளைஞன் ,தனது வாக்காளர் அட்டையை காண்பித்து அடையாளத்தை உறுதிப்படுத்தி , வாக்கு சீட்டினை கைகளில் பெற்ற பின்னர் , வாக்களிக்காது ,அதனை கிழித்துள்ளார்.

அதனை அங்கிருந்த அதிகாரிகள் கவனித்து பொலிஸாருக்கு அறிவித்ததை அடுத்து , பொலிஸார் இளைஞனை கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட இளைஞனிடம் பொலிஸார் மற்றும் தேர்தல் திணைக்கள உத்தியோகஸ்தர்கள் மேற்கொண்ட முதல் கட்ட விசாரணையின் போது , இளைஞன் தேர்தலில் வாக்களிப்பது இதுவே முதல் தடவை என தெரியவந்துள்ளது.

தேர்தல் ஆணைக்குழுவிற்கு சம்பவம் தொடர்பில் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் , ஆணைக்குழுவின் அறிவுறுத்தலுக்கு அமைய அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.

https://athavannews.com/2024/1400407

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாடளாவிய ரீதியில் வாக்குச்சாவடிகளில் விசேட கண்காணிப்பு!

யாழில் தேர்தல் நிலவரம்!

யாழ்ப்பாணத்தில் இன்று  மக்கள் ஆர்வமாக வாக்களித்து வரும் நிலையில்,நண்பகல் 12 மணி வரையிலான காலப்பகுதியில் 35 வீதமான வாக்களிப்பு இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்றைய தினம் மாலை 04 மணி வரையில் வாக்களிக்க முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2024/1400414

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அம்பாறையில் தேர்தல் நிலவரம்!

அம்பாறையில் தேர்தல் நிலவரம்!

அம்பாறை  மாவட்டத்தின்  திகாமடுல்ல  தேர்தல் தொகுதியில்  30 வீதம் வாக்குப்பதிவுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபரும் தெரிவத்தாட்சி அலுவலருமான சிந்தக அபேவிக்ரம தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” அம்பாறை மாவட்டத்தில் 5,55,432 பேர் வாக்களிக்க தகுதி பெற்றிருந்தனர்.

சம்மாந்துறை, பொத்துவில், அம்பாறை, கல்முனை ஆகிய தேர்தல் தொகுதிகளில் வாக்காளர்கள் வாக்களிப்பதற்கான 528 வாக்களிப்பு நிலையங்கள் ஏற்படுத்தப்பட்டிருந்தன.

அம்பாறை மாவட்டத்தின் திகாமடுல்ல தேர்தல் தொகுதியில் 4 ஆசனங்களுக்காக 39 வேட்பாளர்கள் அரசியல் கட்சிகளாகவும் பல சுயேட்சைகளாகவும் களமிறங்கி உள்ளனர்.

இத்தேர்தலில் கல்முனை தேர்தல் தொகுதியில் 82,830 பேரும் சம்மாந்துறை தேர்தல் தொகுதியில் 99727 பேரும் பொத்துவில் தேர்தல் தொகுதியில் 1,84,653 பேரும் அம்பாறை தேர்தல் தொகுதியில் 188222 பேரும் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.

அம்பாறை மாவட்டத்தில் 184 அம்பாறை வாக்களிப்பு நிலையங்கள், 93 சம்மாந்துறை வாக்களிப்பு நிலையங்கள், 74 கல்முனை வாக்களிப்பு நிலையங்கள் மற்றும் 177 பொத்துவில் வாக்களிப்பு நிலையங்கள் உட்பட 528 வாக்களிப்பு நிலையங்கள் நிறுவப்படவுள்ளன.

அத்துடன் சுதந்திரமானதாகவும் நடுநிலையாகவும் தேர்தலை நடத்துவதற்கான சகல நடவடிக்கையும் தேர்தல் திணைக்களம் முன்னெடுத்துள்ளது” இவ்வாறு மன்னார் மாவட்ட அரசாங்க அதிபரும் தெரிவத்தாட்சி அலுவலருமான சிந்தக அபேவிக்ரம தெரிவித்துள்ளார்.

இதே வேளை தமிழ் தேசிய கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன் தனது வாக்கினை விவேகானந்தா மகா வித்தியாலயத்தில் அமைந்துள்ள வாக்களிப்பு நிலையத்தில் செலுத்தியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2024/1400420

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

presidential-election-2024-sri-lanka.web

ஜனாதிபதித் தேர்தல்-சில மாவட்டங்களில் 2 மணி நிலவரம்!

நாட்டின் 9ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்களிப்பு இன்று காலை 7.00 மணிக்கு ஆரம்பமானது.

அதன்படி, நாடு முழுவதிலும் உள்ள சில மாவட்டங்களில் 2 மணி நிலவரப்படி வாக்காளர்களின் வீதம்

கம்பஹா – 52%,
யாழ்ப்பாணம் – 35%,
முல்லைத்தீவு – 46%,
வவுனியா – 51%,
மன்னார் – 40%,
பதுளை – 40%,
இரத்தினபுரி – 58%,
கேகாலை – 49%,
மட்டக்களப்பு – 23%,
திருகோணமலை – 51%

https://athavannews.com/2024/1400437

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Election-1.jpg?resize=600,375&ssl=1

ஜனாதிபதித் தேர்தலில் மொத்தமாக 50 வீதமான வாக்குகள் பயன்படுத்தப்பட்டுள்ள-தேர்தல் ஆணைக்குழு!

ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்குப்பதிவுக்கு இன்னும் ஒன்றரை மணித்தியாலங்கள் உள்ளன என ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.எல்.ஏ.ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

இதேவேளை, ஜனாதிபதித் தேர்தலில் மொத்தமாக 50 வீதமான வாக்குகள் பயன்படுத்தப்பட்டுள்ளதாக மாவட்ட தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதன்படி, கொழும்பு, கம்பஹா, பொலன்னறுவை, திருகோணமலை, குருநாகல் மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களில் வாக்களிப்பு வீதம் 50 வீதத்தை தாண்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் வன்னி, கேகாலை, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் 40 வீதத்தை தாண்டியுள்ளது.

இதற்கு மேலதிகமாக மட்டக்களப்பு மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் 20 வீதத்தை தாண்டியுள்ளதாக தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

https://athavannews.com/2024/1400443

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 4 people

460840869_8163855553702743_8224929402980

460840773_8163855850369380_8228270039523

வாக்களிக்க செல்லும் முதியவர்கள்.

Link to comment
Share on other sites



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.