Jump to content

மஸ்கெலியா மாணவி அபிநயாவின் மனிதநேயம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

Editorial   / 2024 செப்டெம்பர் 24 , பி.ப. 01:29 - 0      - 103

print sharing button
twitter sharing button
facebook sharing button
meneame sharing button

image_2882433b01.jpg

செ.தி.பெருமாள்

எல்லோராலும் அதை செய்ய முடியாது. அதற்கென ஒரு மனது வேண்டும் என்பார்கள். அதை மஸ்கெலியா சென் ஜோசப் தேசிய பாடசாலையில் உயர்தரத்தில் கல்வி பயிலும் மாணவி பாலகிருஷ்ணன் அபிநயா செய்துகாட்டி ஏனைய சகல மாணவர் சமூகத்திற்கும் ஒரு முன்மாதிரியான மாணவியாக எடுத்துக்காட்டியுள்ளார்.

நெடுஞ்சாலையில் கிடந்த அரைப் பவுன் தங்க தாலி , 3,000 ரூபாய் பணத்தை உரியவரிடம் ஒப்படைத்துள்ளார் மாணவி பாலகிருஷ்ணன் அபிநயா

மஸ்கெலியா- சாமிமலை வீதியில் உள்ள அம்மன் ஆலய பகுதியில் உள்ள பிரதான வீதியில், செவ்வாய்க்கிழமை (24) காலை கிடந்த அரைப் பவுன் தங்க தாலி மற்றும் 3000 ரூபாய் பணம் ஆகியவை அந்த மாணவி கண்டெடுத்துள்ளார்.

அவற்றை அப்பகுதியில் கடமையில் இருந்த காவல் துறை உத்தியோகத்தர்  ஜீ.விக்னேஸ்வரனிடம் ஒப்படைத்துவிட்டு, இது தொடர்பில்  பாடசாலை அதிபர் என்.பரமேஸ்வரனிடம் அறிவித்துள்ளார்.  

 இது குறித்து மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எஸ்.ஏ.எஸ். புஸ்பகுமாரவின் கவனத்துக்கு கொண்டு வரப்பட்டது.

 நடத்திய விசாரணையின் போது, மஸ்கெலியா பிரவுன்ஸ்வீக்   தோட்ட ராணி பிரிவில் உள்ள ரெங்கன் புவனலோஜினி ( வயது 46) என்பவரே அந்த பொருட்களின் உரிமையாளர் என அடையாளம் காணப்பட்டார்.

அந்த பொருட்கள், மஸ்கெலியா பொலிஸ் நிலையத்தில் வைத்து பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி புஷ்பகுமார முன்னிலையில் உரிமையாளரிடம் ஒப்படைக்கபட்டது.

மஸ்கெலியா ராணி பிரிவில் இருந்து கொழும்புக்கு  முச்சக்கர வண்டியில் செவ்வாய்க்கிழமை (24) காலை 6 மணிக்கு பணிக்கு சென்று கொண்டிருந்த போது இந்த பொருட்கள் அடங்கிய பொதி தவறவிடப்பட்டுள்ளது.

 அவற்றை கண்டெடுத்து ஒப்படைத்த மாணவியை மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, பொலிஸ் அதிகாரிகள், பாடசாலை அதிபர் உள்ளிட்ட ஆசிரியர்கள் பாராட்டியுள்ளனர். பொருட்களுக்கான உரிமையாளரும் நன்றி தெரிவித்துள்ளார்.  

Tamilmirror Online || மஸ்கெலியா மாணவி அபிநயாவின் மனிதநேயம்

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மாணவிக்கு பாராட்டுக்கள் . ........!  👍

Link to comment
Share on other sites



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.