Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

147 வருட டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இலங்கையின் 'குட்டி ப்றட்மன்' கமிந்து மெண்டிஸ்  புதிய  உலக சாதனை; டொன் ப்றட்மன், சுனில் கவாஸ்கரினாலும் கூடாமல் போனது

Published By: VISHNU   26 SEP, 2024 | 07:49 PM

image

(நெவில் அன்தனி)

டெஸ்ட் கிரிக்கெட்டின்  147 வருட வரலாற்றில் இலங்கையின் 'குட்டி ப்றட்மன்' கமிந்து மெண்டிஸ் புதிய உலக சாதனை படைத்து வரலாற்று ஏடுகளில் தனது பெயரைப் பதித்துக்கொண்டுள்ளார்.

2609_Angelo_Mathews___VK95537.jpg

நியூஸிலாந்துக்கு எதிராக காலி சர்வதேச விளையாட்டரங்கில் இன்று வியாழக்கிழமை (26) ஆரம்பமான இரண்டாவது டெஸ்ட்  கிரிக்கெட்  போட்டியில் அரைச் சதம் குவித்ததன் மூலமே 25 வயதான கமிந்து மெண்டிஸ் புதிய உலக சாதனையை படைத்தார்.

2609_dinesh_chandimal.png

இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த இலங்கை முதலாம் நாள் ஆட்ட நேர முடிவில் 3 விக்கெட்களை இழந்து 306 ஓட்டங்களைப் பெற்று பலமான நிலையில் இருக்கிறது.

இலங்கையின் முதலாவது இன்னிங்ஸில் ஆட்டம் இழக்காமல் 51 ஓட்டங்களைப் பெற்ற கமிந்து மெண்டிஸ், டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுமானது முதல் இதுவரை விளையாடிய 8 டெஸ்ட் போட்டிகளிலும் 50க்கும் மேற்பட்ட ஓட்டங்களைப் பெற்ற முதலாவது துடுப்பாட்ட வீரர் என்ற அரிய சாதனையை நிலைநாட்டினார்.

அத்துடன் 8 டெஸ்ட் போட்டிகளில் 9 தடவைகள் 50 அல்லது அதற்கு மேற்பட்ட ஓட்டங்களைப் பெற்ற முதலாவது வீரர் என்ற சாதனைக்குரிய பெருமையையும் அவர் பெற்றுக்கொண்டார்.

இரண்டு வருடங்களுக்கு முன்னர் காலி அரங்கில் அவுஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அறிமுகமானதிலிருந்து இதுவரை விளையாடிய 8 டெஸ்ட் போட்டிகளிலும் கமிந்து மெண்டிஸ் முறையே 

61 (எதிர் அவுஸ்திரேலியா - காலி), 

102, 164 (எதிர் பங்களாதேஷ் - சில்ஹெட்), 

92 ஆ.இ., 9 (எதிர் பங்களாதேஷ் - சட்டோக்ரம்), 

12, 113 (எதிர் இங்கிலாந்து - மென்செஸ்டர்), 

74, 4, (எதிர் இங்கிலாந்து - லோர்ட்ஸ்), 

64 (எதிர் இங்கிலாந்து - தி ஓவல்), 

114, 13 (எதிர் நியூஸிலாந்து - காலி), 

51 ஆ.இ. (எதிர் நியூஸிலாந்து - காலி) என ஓட்டங்களைப் பெற்று இந்த  சாதனையை நிலைநாட்டினார்.

இதுவரை அவர் 8 டெஸ்ட் போட்டிகளில் 13 இன்னிங்ஸ்களில் துடப்பெடுத்தாடி 4 சதங்கள், 5 அரைச் சதங்கள் உட்பட 79.36 என்ற சராசரியுடன் 873 ஓட்டங்களை மொத்தமாக குவித்துள்ளார்.

இதேவேளை, இந்த டெஸ்ட் போட்டியில் அபார சதம் குவித்த முன்னாள் அணித் தலைவர் தினேஷ் சந்திமால் தனது குழந்தைக்கு சமர்ப்பணமாக துடுப்பை இரண்டு கைகளிலும் ஏந்தி தாலாட்டு சமிக்ஞை செய்து தனது சதத்தைக் கொண்டாடினார்.

போட்டியின் முதலாவது ஓவரிலேயே பெத்தும் நிஸ்ஸன்க ஆட்டம் இழந்ததும் இலங்கை அணிக்கு நெருக்கடி ஏற்பட்டது. ஆனால், அடுத்து களம் நுழைந்த தினேஷ் சந்திமால் மிகத் திறமையாகத் துடுப்பெடுத்தாடி அபார சதம் குவித்ததுடன் இரண்டு இணைப்பாட்டங்களை ஏற்படுத்தி அணியைப் பலப்படுத்தினார்.

இரண்டாவது விக்கெட்டில் திமுத் கருணாரட்னவுடன் 122 ஓட்டங்களைப் பகிர்ந்த தினேஷ் சந்திமால், அடுத்த விக்கெட்டில் ஏஞ்சலோ மெத்யூஸுடன் மேலும் 97 ஓட்டங்களைப் பகிர்ந்தார்.

208 பந்துகளை சந்தித்த தினேஷ் சந்திமால் 15 பவுண்டறிகளுடன் 116 ஓட்டங்களைப் பெற்றார்.

தனது 84ஆவது டெஸ்ட் போட்டியில் விளையாடும் தினேஷ் சந்திமால் 16ஆவது சதத்தைக் குவித்ததுடன் காலியில் அவர் பெற்ற 6ஆவது சதம் இதுவாகும்.

திமுத் கருணாரட்ன 46 ஓட்டங்களைப் பெற்றார்.

இதேவேளை, நிதானத்துடன் துடுப்பெடுத்தாடிவரும் ஏஞ்சலோ மெத்யூஸ் 166 பந்துகளில் 6 பவுண்டறிகள் அடங்கலாக  78 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார்.

மறுபக்கத்தில் ஆக்ரோஷமாகத் துடுப்பெடுத்தாடிய சாதனை வீரர் கமிந்து மெண்டிஸ் 56 பந்துகளில் 8 பவுண்டறிகள், ஒரு சிக்ஸ் உட்பட 51 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார்.

அவர்கள் இருவரும் பிரிக்கப்படாத 4ஆவது விக்கெட்டில் 85 ஓட்டங்களைப் பகிர்ந்துள்ளனர்.

இது இவ்வாறிருக்க, காலி விளையாட்டரங்கில் 2000 ஓட்டங்களைப் பூர்த்தி செய்த ஏஞ்சலோ மெத்யூஸ் மைல்கல் சாதனை ஒன்றை நிலைநாட்டினார்.

https://www.virakesari.lk/article/194871

  • கருத்துக்கள உறவுகள்

அடுத்த மட்ச்சில் இரண்டு இன்னிங்ஸ்களிலும் டக் அடிக்க வாழ்த்துகள்!

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, வாலி said:

அடுத்த மட்ச்சில் இரண்டு இன்னிங்ஸ்களிலும் டக் அடிக்க வாழ்த்துகள்!

இண்டைக்கும் சீக்கிர‌ம் அவுட் ஆகி இருப்பார் சிம்பிலா பிடிக்க‌ வேண்டிய‌ க‌ச்சை நியுசிலாந் வீர‌ர் த‌வ‌ற‌ விட்டு விட்டார்😁...........................

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, வாலி said:

அடுத்த மட்ச்சில் இரண்டு இன்னிங்ஸ்களிலும் டக் அடிக்க வாழ்த்துகள்!

ந‌ட‌ந்து முடிந்த‌ இங்லாந் இல‌ங்கை தொட‌ரில் இவ‌ர் தான் இல‌ங்கை அணி சார்பாக‌ அதிக‌ ர‌ன்ஸ் அடித்தார்...................இல‌ங்கை முன்ன‌னி வீர‌ர்க‌ள் அவுட் ஆகினால் அதோட‌ ச‌ரி

பின்ன‌னி வீர‌ர்க‌ளுக்கு ம‌ட்டையால் அடிக்க‌ தெரியாது..............இதை ப‌யிற்ச்சியாள‌ர் ச‌ன‌த் ஜ‌ய‌சூரியா ச‌ரி செய்ய‌னும் இல்லையேன் அணிக்கு தான் பாதிப்பு......................................

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, வாலி said:

அடுத்த மட்ச்சில் இரண்டு இன்னிங்ஸ்களிலும் டக் அடிக்க வாழ்த்துகள்!

முத‌லாவ‌து இனிங்சில் 182 ர‌ன்ஸ் அடித்து நொட் அவுட் 

 

விட்டால் 200 அடிச்சு இருப்பார் அல்ல‌து அத‌ற்க்கு மேலையும்😁

 

இவ‌ர் நேற்று 50 அடிக்க‌ முத‌ல் நியுசிலாந் வீர‌ர் இவ‌ரின் க‌ச்ச‌ விட்டு விட்டார் அத‌னால் தான் இல‌ங்கை 602 பெரிய‌ இஸ்கோர் அடிச்சு இருக்கின‌ம்......................இல‌ங்கை வீர‌ர்க‌ளின் சுழ‌ல் ப‌ந்தில் நியுலாந் வீர‌ர்க‌ள் அவுட் ஆகுவின‌ம்

 

வெற்றி இல‌ங்கைக்கு தான் நியுசிலாந் அணி வீர‌ர்க‌ளால் மூன்று நாள் தாக்கி பிடிக்க‌ முடியாது..................காலி மைதான‌ பிச் 4ம் நாள் 5ம் நாள் மாறுப‌டும் அப்பேக்க‌ நியுசிலாந் வீர‌ர்க‌ள் ஆட்ட‌ம் இழ‌ப்பின‌ம்.................ம‌ழை வ‌ந்தாம் விளையாட்டை ச‌ம‌ நிலை ஆக்க‌லாம்....................................

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எதிரணிகளுக்கு சிம்மசொப்பணமாக விளங்கும் கமிந்து மெண்டிஸ் சாதனை மேல் சாதனை; கிரிக்கெட் ஜாம்பவான் ப்றட்மனின் சாதனையையும் சமன் செய்தார்

Published By: VISHNU   27 SEP, 2024 | 08:50 PM

image

(நெவில் அன்தனி)

டெஸ்ட் கிரிக்கெட் அரங்கில் கமிந்து மெண்டிஸின் அபார துடுப்பாட்ட ஆற்றல்கள் தொடர்வதுடன் சாதனைக்கு மேல் சாதனைகளைக் குவித்தவண்ணம் உள்ளார்.

நியூஸிலாந்துக்கு எதிராக காலி சர்வதேச விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் 2ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் சதம் குவித்த கமிந்து மெண்டிஸ், டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமானது முதல் இதுவரை தான் விளையாடிய 8 டெஸ்ட் போட்டிகளிலும் 50 அல்லது அதற்கு மேற்பட்ட ஓட்டங்ளைப் பெற்ற முதலாவது வீரர் என்ற உலக சாதனையை வியாழன்று நிலைநாட்டியிருந்தார்.

அவர் எட்டு டெஸ்ட் போட்டிகளில் 9 தடவைகள் 50 அல்லது அதற்கு மேற்பட்ட ஓட்டங்களைப் பெற்றுள்ளார்.

நியூஸிலாந்துக்கு எதிரான போட்டியில் ஆட்டம் இழக்காமல் 182 ஓட்டங்களைப் பெற்றதன் மூலம் ஓர் இன்னிங்ஸில் தனது அதிகப்பட்ட எண்ணிக்கையை அவர் இன்று பதிவுசெய்தார்.

அத்துடன் தனது 13ஆவது இன்னிங்ஸில் 1000 ஓட்டங்களைப் பூர்த்திசெய்ததுடன் கடந்த 75 வருடங்களில் மிகக் குறைந்த இன்னிங்ஸ்களில் இந்த மைல்கல் சாதனையை எட்டியவர் என்ற பெருமைக்கு உரித்தானார்.

அது மட்டுமல்லாமல் குறைந்த இன்னிங்ஸ்களில் 1000 ஓட்டங்களைப் பூர்த்திசெய்தவர்கள் வரிசையில் அவுஸ்திரேலியாவின் கிரிக்கெட் ஜாம்பவான் சேர் டொனல்ட் ப்றட்மனின் சாதனையை சமன்செய்தார்.

இங்கிலாந்தின் ஹேர்பட் சட்க்ளிவ் (1925இல்), மேற்கிந்தியத் தீவுகளின் எவர்ட்டன் வீக்ஸ் (1945இல்) ஆகிய இருவரே மிகக் குறைந்த இன்னிங்ஸ்களில் 1000 ஓட்டங்களைப் பூர்த்திசெய்தவர்களாவர். அவர்கள் இருவரும் தலா 12 இன்னிங்ஸ்களில் நிலைநாட்டிய இந்த அரிய சாதனை தொடர்ந்தும் நீடிக்கிறது.

சேர் டொன் ப்றட்மனின் இரண்டு சாதனைகளான குறைந்த (13) இன்னிங்ஸ்களில் 5 சதங்கள், 1000 ஓட்டங்கள் ஆகியவற்றை சமப்படுத்திய கமிந்து மெண்டிஸ் அதன் மூலம் ஆசியாவுக்கான புதிய சாதனைகளைப் படைத்தார்.

நியூஸிலாந்துக்கு எதிரான 2ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் தினேஷ் சந்திமால், கமிந்து மெண்டிஸ், குசல் மெண்டிஸ் ஆகியோர் குவித்த சதங்கள், ஏஞ்சலோ மெத்யூஸின் அரைச் சதம் என்பன இலங்கையை பலமான நிலையில் இட்டுள்ளன.

போட்டியின் இரண்டாம் நாளான இன்றைய தினம் தனது முதலாவது இன்னிங்ஸை 3 விக்கெட் இழப்புக்கு 306 ஓட்டங்களிலிருந்து தொடர்ந்து இலங்கை, 5 விக்கெட்களை இழந்து 602 ஓட்டங்களைப் பெற்றிருந்தபோது நிறுத்திக்கொண்டது.

முதலாம் நாளான வியாழக்கிழமையன்று தினேஷ் சந்திமால் 116 ஓட்டங்களுடனும் திமுக் கருணாரட்ன 46 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழந்தனர்.

இரண்டாம் நாளன்று மூன்று  இணைப்பாட்டங்களில் பங்காற்றிய கமிந்து மெண்டிஸ், மிகவும் அபாரமாகத் துடுப்பெடுத்தாடி 250 பந்துகளை எதிர்கொண்டு 16 பவுண்டறிகள், 4 சிக்ஸ்கள் உட்பட 182 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார்.

4ஆவது விக்கெட்டில் ஏஞ்சலோ மெத்யூஸுடன் 107 ஓட்டங்களையும் 5ஆவது விக்கெட்டில் அணித் தலைவர் தனஞ்சய டி சில்வாவுடன் 74 ஓட்டங்களையும் பிரிக்கப்படாத 6ஆவது விக்கெட்டில் குசல் மெண்டிஸுடன் 200 ஓட்டங்களையும் கமிந்து மெண்டிஸ் பகிர்ந்து இலங்கையை அதிசிறந்த நிலையில் இட்டார்.

ஏஞ்சலோ மெத்யூஸ் 88 ஓட்டங்களுடனும் தனஞ்சய டி சில்வா 44 ஓட்டங்களுடனும்   ஆட்டம் இழந்தனர்.

குசல் மெண்டிஸ் 149 பந்துகளில் 6 பவுண்டறிகள், 3 சிக்ஸ்களுடன் 106 ஓட்டங்களைப் பெற்று ஆட்டம் இழக்காதிருந்தார்.

பந்துவீச்சில் க்லென் பிலிப்ஸ் 141 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களைக் கைப்பற்றினார்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிவரும் நியூஸிலாந்து 2ஆம் நாள் ஆட்டநேர முடிவில் அதன் முதல் இன்னிங்ஸில் 2 விக்கெட்களை இழந்து 22 ஓட்டங்களைப் பெற்று தடுமாற்றத்தை எதிர்கொண்டுள்ளது.

டொம் லெதம் (2), டெவன் கொன்வே (9) ஆகியோர் ஆட்டம் இழந்ததுடன் கேன் வில்லியம்சன் 6 ஓட்டங்களுடனும் இரா காப்பாளன் (Nightwatchman) அஜாஸ் பட்டேல் ஓட்டம் பெறாமலும் இருக்கின்றனர்.

பந்துவீச்சில் ப்ரபாத் ஜயசூரிய 3 ஓட்டங்களுக்கு 1 விக்கெட்டையும் அசித்த பெர்னாண்டோ 5 ஓட்டங்களுக்கு 1 விக்கெட்டையும் கைப்பற்றினர்.

போட்டியின் 3ஆம் நாள் ஆட்டம் நாளை தொடரும்.

https://www.virakesari.lk/article/194952

  • 3 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஐசிசியின் சிறந்த வீரராக கமிந்து

இலங்கை அணியின் சகலதுறை வீரர் கமிந்து மெண்டிஸ், ஐசிசியின் செப்டெம்பர் மாதத்துக்கான சிறந்த வீரராக தெரிவாகியுள்ளார்.

இந்த விருதுக்கு அவுஸ்திரேலிய அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் ட்ரவிஸ் ஹெட், இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளர் பிரபாத் ஜயசூரிய ஆகியோரும் பரிந்துரைக்கப்பட்டிருந்த போதிலும் அவர்கள் இருவரையும் வெற்றிகொண்டு கமிந்து மெண்டிஸ் ஐசிசியின் செப்டெம்பர் மாதத்துக்கான அதி சிறந்த வீரர் விருதை தனதாக்கிக்கொண்டார்.

கமிந்து மெண்டிஸ், 2024ஆம் ஆண்டில் இந்த விருதை பெறும் இரண்டாவது சந்தர்ப்பம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது.

https://thinakkural.lk/article/310701

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.