Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது
"தோஷமும் விரதமும்" / பகுதி 01
 
 
மனதிற்கு ஒரு நிம்மதி கிடைக்கவும் உடலை கட்டுப்படுத்தவும் உண்மையில் உதவும் விரதம் அல்லது நோன்பு அல்லது உபவாசம் என்ற சடங்கை, பொதுவாக எல்லா சமயங்களும் இறைவனை வேண்டி, தாம் நினைத்த காரியங்கள் சரிவர செய்யும் ஒரு சடங்காக மக்களுக்கு அறிமுகப் படுத்துகிறது.
 
விரதம் என்பது உண்ணாமல் இருத்தல் அல்லது உணவை குறைத்தல் என்று பொருள் கொள்ளலாம். இங்கு புலன்களின் அடக்கம் மிக முக்கியமாகிறது. அல்ல விட்டால் விரதம் முழுமையாக நிறைவேறாமல் போய் விடலாம். இங்கு புலனடக்கம் என்று கூறும் பொழுது மன அடக்கம் மிக முக்கியமாகிறது. அந்த மன அடக்கம் தனிய உணவின் மேல் எழும் ஆசையை, தூண்டலை அடக்குவது அல்ல, மனதை ஒரு நிலை படுத்தி பக்குவப் படுத்துவதையும் கூறலாம். இதனால் தான் இது அந்த காலத்தில் மதத்துடன் இணைத்து இருக்கலாம்? மதம் என்பது அன்று திக்கு திசை இல்லாமல், ஆடு மாடு போல நாகரிகம் அடையாமல் திரிந்த மனிதர்களை ஒரு வழி படுத்தி, ஒரு ஒழுங்கை நிலை நாட்ட ஏற்படுத்திய ஒன்றாகும்.
 
என்றாலும் காலப்போக்கில் அது தன் முதன்மை நோக்கை இழந்து பல மதங்களாக பரிணமித்து, ஒவ்வொரு மதமும் தன் இருப்பை வைத்துக்கொள்ள போட்டிகளிலும், வியாபாரங்களிலும் ஈடுபட்டன. ஆகவே இன்று விரதங்களின் விளக்கம் மதத்துக்கு மதம் வேறுபடுகின்றன எனலாம். மேலும் மனிதனின் பலவீனத்தை தனக்கு சாதகமாக மாற்ற விரதத்தை ஒரு ஆயுதமாகவும் மத குருமார்கள் பாவிக்க தொடங்கினார்கள். உதாரணமாக தோஷம் மற்றும் பரிகாரம் என்ற ஒன்றை ஏற்படுத்தி, ஒவ்வொரு தோஷத்துக்கும் அல்லது குற்றத்துக்கும் விரதத்துடன் சேர்ந்த ஒவ்வொரு பரிகாரத்தையும் எடுத்துக் கூறி தம் இருப்பையும் வியாபாரத்தையும் அதன் மூலம் வலுப்படுத்தி கொண்டார்கள் என்று கூறலாம்.
 
ஆறுமுகநாவலர் விரதம் என்பது,
 
"மனம் பொறிவழி போகாது நிற்றற் பொருட்டு,
உணவை விடுத்தேனுஞ் சுருக்கியேனும் மனம்,
வாக்கு, காயம் என்னும் மூன்றினாலும்
கடவுளை மெய்யன்போடு விதிப்படி வழிபடுதல் விரதமாகும்"
 
என்கிறர். இயற்கை மருத்துவத்தின் அடிப்படையில் நீதிவெண்பாவில்
 
"ஒருவேளை உண்பான் யோகி
இருவேளை உண்பான் போகி
மூவேளை உண்பான் ரோகி
நான்குவேளை உண்பான் பாவி"
 
என்று கூறி இருப்பதும் கவனிக்கத்தக்கது. விரதம் இருப்பது மத நம்பிக்கை என கருத்துக்கள் இருந்தாலும், விரதத்திற்கு பின்னால் இருப்பது உண்மையில் மிகப்பெரிய விஞ்ஞானம் என்பதை இந்த பாடல் மூலம் அறியமுடிகிறது. அத்துடன் 'அன்னத்தை அடக்கியவன் ஐந்தை (கண், காது, மூக்கு, வாய், உடல்) யும் அடக்குவான்' என்பார்கள் பொதுவாக.
 
நமது வயிறு ஒரு குறிப்பிட்ட இடைவெளிக்கு ஒருக்கா, ஒருமுறையாவது காலியாக இருக்க வேண்டும். இதனை யொட்டித்தான் எல்லா மதங்களுமே விரத்தை கடைபிடிக்கின்றன எனலாம். விரதமிருப்பதால் வயிறு சுத்தமாகிறது. ஜீரண உறுப்புகள் சீராகிறது. இது ஒரு ஆரோக்கியமான வழி முறை ஆகும். உதாரணமாக, இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு உயிர்நீத்து, உயிர்த்தெழுந்த தினமே ஈஸ்டர் திருநாளாகக் கொண்டாடப்படுகிறது. இந்த பண்டிகைக்கு முன் கிறிஸ்தவர்கள் 40 நாட்கள் விரதம் மேற்கொள்வர். அதேபோல, ரம்ஜான் மாதத்தில் 30 நாள் நோன்பிருப்பது முஸ்லிம்களுக்கு கடமையாக்கப்பட்டுள்ளது. இந்து மாதத்தில் அமாவாசை, பெளர்ணமி எனவும் மற்றும் பல வகையான விரதங்கள் ஒவ்வொரு மாதமும் காணப்படுகின்றன.
 
விரதத்தை இரண்டு முக்கிய வகையாகவும் பிரிகிறார்கள். ஒன்று எதிர் பார்ப்புடன் கடைபிடிப்பது. மற்றது எதிர் பார்ப்பு இன்றி கடைப்பிடிப்பது.
 
உதாரணமாக தோஷ பரிகாரமாக செய்வது முதல் வகையாகும். குறிப்பிட்ட தோஷத்திற்கான பரிகாரத்துடன் கூடிய விரதங்களை தவிர, வாரத்தின் ஏழு நாட்களுக்கும் கூட விரதம் உண்டு. உதாரணமாக, திங்கள் கிழமை விரதம் இருப்பதன் மூலம் கணவனின் முழுமையான அன்பையும், செவ்வாய் கிழமை விரதம் இருப்பதன் மூலம் கணவன் மனைவி தகராறு நீக்கவும், புதன் கிழமை விரதம் இருப்பதன் மூலம் நோய் தீரவும், வியாழன் கிழமை விரதம் இருப்பதன் மூலம் புத்திர பாக்கியம் பெறவும், வெள்ளிக்கிழமை விரதம் இருப்பதன் மூலம் கணவன் நீண்ட ஆயுளைப் பெறவும், சனிக்கிழமை விரதம் இருப்பதன் மூலம் செல்வம் பெருகவும், ஞாயிற்றுக்கிழமை விரதம் இருப்பதன் மூலம் நீடித்த நோயில் இருந்து விடுதலை பெறவும் அல்லது நோய் வராமல் தடுக்கவும் முடியும் என்கிறது இந்து மதம். மேலும் ஆவணி மாதம் அஷ்டமியுடன் சேர்ந்து வரும் வெள்ளிக்கிழமை அன்று மகாலட்சுமி விரதம் இருந்தால் எல்லா நன்மைகளும் கிட்டும் என்றும் கூறுகிறது.
 
இந்த விரதங்களில் ஒன்றை கவனித்தீர்களா ?, மனைவியின் நீண்ட ஆயுளை வேண்டியோ அல்லது மனைவியின் முழு அன்பை வேண்டியோ ஒரு விரதமும் இல்லை. இது என்னத்தை காட்டுகிறது ?
 
விரதங்கள் எல்லாவற்றிற்கும் விதி முறைகளும் உண்டு. உதாரணமாக, விரதத்திற்கு முதல் நாளன்றே வீட்டினை கழுவி சுத்தப்படுத்தி மஞ்சள் நீர் தெளித்தல் அவசியம். விரத நாளன்று அதிகாலையில் துயிலெழுந்து நீராடி தோய்த்துலர்ந்த ஆடைகளை அணிந்து, காலையும் மாலையும் வீட்டின் சுவாமி அறையில் விளக்கேற்றி, வீபூதி பூசி, தேவராங்கள் பாடுதல் வேண்டும். அத்துடன் கோயில் வழிபாடு செய்தல் மிகவும் நன்று என்கிறது. மேலும் ஒவ்வொரு விரதத்திற்கும் வித்தியாசமான உணவு முறைக் கட்டுப்பாடுகளும் உண்டு.
 
மாதவிலக்கான பெண்கள், குழந்தை அண்மையில் பெற்ற பெண்கள், அண்மையில் குடும்ப உறுப்பினரை இழந்த குடும்பத்தினர் போன்றோர் விரதம் கடைபிடிக்க முடியாது என்கிறது. அது மட்டும் அல்ல, விரதம் இருப்பவர்கள் பிறர் மீது கோபப்படுதல், பிறரைப் பற்றி தவறாகப் பேசுதல், பிறர் மனம் புண்படும்படி கேலி செய்தல், பிறரிடம் பேசாதிருத்தல், அதிகமாகப் பேசுதல் ஆகிய எதுவுமே செய்யக் கூடாது என்றும் ஒரு ஒழங்கையும் வரையறுக்கிறது.
 
விரதங்களை மேற்கொள்வதால், மத நம்பிக்கை உள்ளவர்களுக்கு தெய்வ நம்பிக்கையை அது மேலும் அதிகமாக்கிறது. அதேநேரம் அது ஓழுக்கத்தையும் கட்டுப்பாடுகளையும் ஏற்படுத்துகின்றன. உடல் ஆரோக்கியமும் பெறுகிறது. ஆயுள் அதிகமாகிறது பிரச்சினைகள் குறைகின்றன. தனிமனிதன் நன்மை பெறுவதனால் அவன் குடும்பம் நன்மை பெறுகிறது. இரக்க சிந்தனை, தருமம் செய்யும் குணம் ஆகியவை வளருகின்றன. விஞ்ஞான முறைப்படியோ அல்லது எந்த முறைப்படியோ ஆராய்ந்தாலும் விரதங்கள் நமக்கு ஒரு போதும் விரோதமான நிலைமைகளைத் தரவில்லை என்பது மட்டும் உறுதி.
 
[தோஷமும் விரதமும் பிராமண இந்து சமயம் பெரும்பாலும் புகுத்தியதால், இங்கு பல சோதிடர்கள் கையாளும் சமஸ்கிரத சொற்கள், அப்படியே இந்த கட்டுரையில் உள்வாங்கப் பட்டுள்ளன]
 
 
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]
 
 
பகுதி 02 தொடரும்
210077776_10219511082110462_6612530483862825155_n.jpg?stp=dst-jpg_s600x600&_nc_cat=111&ccb=1-7&_nc_sid=f7fc3c&_nc_ohc=4sj_c2ED79cQ7kNvgGVPAlH&_nc_ht=scontent-lhr8-1.xx&_nc_gid=AxTY8alNU_A_JHctCEnk4-G&oh=00_AYAVQbxy0qTl3CUH-VtIXrU6uGXkCh9x9tKfZ7KY4xF0Cw&oe=671E01F9 211260633_10219511082750478_1341182523449547630_n.jpg?stp=dst-jpg_s600x600&_nc_cat=105&ccb=1-7&_nc_sid=f7fc3c&_nc_ohc=I-RKFruhUEIQ7kNvgEUOp_X&_nc_ht=scontent-lhr6-2.xx&_nc_gid=AxTY8alNU_A_JHctCEnk4-G&oh=00_AYBP0LSx_rEqTYTqogPBjXKDXxB-BFwDVtaTCkfD1jVy0g&oe=671E01F9
 
 
210949834_10219511083230490_8006823330430190455_n.jpg?_nc_cat=110&ccb=1-7&_nc_sid=f7fc3c&_nc_ohc=phKCXJm1lhMQ7kNvgHSZAaQ&_nc_ht=scontent-lhr6-1.xx&_nc_gid=AxTY8alNU_A_JHctCEnk4-G&oh=00_AYDYiMjeRLaETkTDixwelMY6hhcFIPUNku2_Sx4PpKccMA&oe=671DF531
 
 
  • Like 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted

நான் சிறுவனாக இருந்த போது பல நாட்கள் வீட்டாருடன் சேர்ந்து விரதங்கள் இருந்திருக்கிறேன்.

இப்போது விரதமே இருப்பதில்லை.

அதன் முக்கியத்துவம் தெரிந்தும் கண்டு கொள்வதில்லை.

நன்றி தில்லை.

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
6 hours ago, ஈழப்பிரியன் said:

நான் சிறுவனாக இருந்த போது பல நாட்கள் வீட்டாருடன் சேர்ந்து விரதங்கள் இருந்திருக்கிறேன்.

இப்போது விரதமே இருப்பதில்லை.

அதன் முக்கியத்துவம் தெரிந்தும் கண்டு கொள்வதில்லை.

நன்றி தில்லை.

இங்கும் இதே நிலை தான்.சிலர் விழுந்து , விழுந்து சாமி கும்பிடுவார்கள் ஆனால் விரத நாள் எல்லாம் பார்க்க மாட்டார்கள். ஒரே மச்ச சாப்பாடாக இருக்கும்.நமக்கு அதைப் பார்க்கும் போது அருவருக்கும்..ஆனாலும்  எல்லோருமே ஒரு கட்டத்திற்கு மேல் சூழ் நிலை கைதிகள் தான்.

  • Like 1
  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
9 hours ago, kandiah Thillaivinayagalingam said:

'அன்னத்தை அடக்கியவன் ஐந்தை (கண், காது, மூக்கு, வாய், உடல்) யும் அடக்குவான்' என்பார்கள் பொதுவாக.

விரதத்தைப் பற்றிய உங்கள் விளக்கம் நன்றாக இருக்கின்றது.

கண்,காது, மூக்கு, வாய் எல்லாம் உடலில்தானே இருக்கிறது. பறகு ஏன் ஐந்தாவதாக உடல் என்று தனியாகக் குறிப்பிடுகிறீரகள்?

9 hours ago, kandiah Thillaivinayagalingam said:

இந்த விரதங்களில் ஒன்றை கவனித்தீர்களா ?, மனைவியின் நீண்ட ஆயுளை வேண்டியோ அல்லது மனைவியின் முழு அன்பை வேண்டியோ ஒரு விரதமும் இல்லை. இது என்னத்தை காட்டுகிறது ?

சுத்தமான ஆணாதிகத்தை.

 

9 hours ago, kandiah Thillaivinayagalingam said:

செவ்வாய் கிழமை விரதம் இருப்பதன் மூலம் கணவன் மனைவி தகராறு நீக்கவும்,

என் வீட்டிலே இதெல்லாம் எடுபடாது.

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
14 hours ago, Kavi arunasalam said:

விரதத்தைப் பற்றிய உங்கள் விளக்கம் நன்றாக இருக்கின்றது.

கண்,காது, மூக்கு, வாய் எல்லாம் உடலில்தானே இருக்கிறது. பறகு ஏன் ஐந்தாவதாக உடல் என்று தனியாகக் குறிப்பிடுகிறீரகள்?

சுத்தமான ஆணாதிகத்தை.

 

என் வீட்டிலே இதெல்லாம் எடுபடாது.

கண் - பார்க்க , காது - கேட்க , மூக்கு - நுகர , வாய் - பேச , உடல் - ஒரு மனிதனின் முழுப்பாகமும் , அதில் அந்த நாலும் உண்டு, ஆனால் அவற்றை விட மேலும் பல உண்டு . உதாரணமாக உடல் இல்லையேல் உயிர் இல்லை, ஆனால் அந்த நாலும் அப்படி அல்ல, உதாரணமாக கண் இல்லை என்றால் குருடு மட்டுமே . அது தான் வித்தியாசம்  

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
"தோஷமும் விரதமும்" / பகுதி 02
 
 
தமிழரின் ஆதி மதம் என கூறப்படும் சைவ மதத்தை எடுத்துக் கொண்டால், அது இந்து மதத்திற்குள் உள் வாங்கப் பட்டிருப்பதாலும், அங்கு இன்று பல வகையான விரதங்களை காணக்கூடியதாக உள்ளன. சிவ விரதம் பிடித்தலை திருமந்திரம் 557 இல் சுட்டிக்காட்டி,
 
"தவஞ்செபஞ் சந்தோடம் ஆத்திகந் தானஞ்
சிவன்றன் விரதமே சித்தாந்தக் கேள்வி
மகஞ்சிவ பூசையொண் மதிசொல்லீர் ஐந்து
நிவம்பல செய்யின் நியமத்த னாமே."
 
தவம், செபம், சந்தோஷம், தெய்வ நம்பிக்கை, அடுத்தவர்க்குக் கொடுத்து உதவுவது, சிவ விரதம், சித்தாந்த அறிவு, யாகம், சிவபூஜை, தூய்மையான தெளிந்த ஞானம் ஆகிய பத்தும் உயர்வு தரும். இவற்றைக் கடைப்பிடித்து வாழ்பவனே உண்மையான ஆன்மிகவாதி என்று கூறுகிறார் திருமூலர்.
 
விரதத்தை, எந்த தெய்வத்திற்காக, எதற்காக அனுஷ்டிக்க வேண்டும் என்று ஒரு நீண்ட பட்டியலையும் இந்து மதம் தருகிறது. உதாரணமாக, சிவபெருமானைக் குறித்து அனுஷ்டிக்கப்படும் கார்த்திகை மாத திங்கள் கிழமைகளில் கடைப் பிடிக்கப்படும் சோமவார விரதம், தேய்பிறை, வளர்பிறை திரயோதசி திதிகளில் [அமாவாசை நாளையும், பூரணை நாளையும் அடுத்து வரும் பதின் மூன்றாவது திதிகளில்] சிவபெருமான், நந்திதேவரின் அருள் வேண்டி கடைபிடிக்கப்படும் பிரதோஷ விரதம், மற்றும் மறைந்த முன்னோர் பாவம் நீங்கி பிறப்பற்ற நிலையை அடைய சித்ரா பவுர்ணமி விரதம், முன்னோர்களுக்கு முக்தி கிடைக்கவும், குடும்பமும் அபிவிருத்தி அடையவும் தை அமாவாசை விரதம், அப்படியே கந்தசஷ்டி விரதம், தைப்பூச விரதம், நவராத்திரி விரதம் என நீள்கின்றன.
 
பிறந்த சாதக அமைப்பில் அல்லது கட்டத்தில், 2, 4, 7, 8, 12 ஆகிய இடங்களில் சூரியன், செய்வாய், சனி, ராகு மாற்று கேது போன்ற கோள்கள் இருந்தால் அவை தோஷத்தை அல்லது பாவத்தை ஏற்படுத்தும் என் நம்பப் படுகிறது. எனினும் இதற்கும் தோஷ விலக்குகளும் உண்டு. உதாரணமாக, ஒரு திருமண பொருத்தத்தை கருத்தில் எடுத்தால், ஆணின் தோஷம் பெண்ணை விட கூடுதலாக அல்லது சமனாக இருந்தால் திருமணம் செய்யலாம்.
 
இங்கு மீண்டும் ஆணாதிக்கத்தை பார்க்கிறோம் ?
 
இருவரின் சாதகமும் தோஷம் இல்லை என்றால் அது உண்மையில் சரியான முறையாகும். மற்றும் சம தோஷம் சாதகம் தோஷ நிவர்த்திக்கு பரிகாரமாக சொல்லப்படுகிறது. உதாரணமாக செய்வாய் தோஷம் உள்ள சாதகம் இன்னும் ஒரு செய்வாய் தோஷ சாதகத்துடன் தான் பொருத்தம் செய்யவேண்டும். இது முதலாவது விதி. மற்றது ஒருவருக்கு புத்திர தோஷம் உள்ளது என்றால், இன்னுமொரு புத்திர தோஷம் உள்ள சாதகத்துடன் கட்டாயம் பொருத்தம் பார்க்க கூடாது. ஏன் என்றால், அது மகா புத்திர தோஷத்தை ஏற்படுத்தும் . இது இரண்டாவது விதியாகும்.
 
புத்திர தோஷம் என்பது, குழந்தை பிறப்பதற்கு தடை அல்லது திடீர் கருக்கலைப்பு அல்லது மலட்டுத் தன்மை போன்றவற்றை ஏற்படுத்துவது ஆகும். எனவே இப்படியான தோஷத்தை கொண்ட ஒருவரது சாதகத்துக்கு, அவரை திருமணம் செய்ய இருக்கும் மற்றவரது சாதகம், அதை சரிபடுத்துவதற்கு, வலுத்த புத்திர யோகம் கொண்டதாக கட்டாயம் இருக்க வேண்டும் என பரிந்துரைக்கப் படுகிறது. அப்ப தான் ஒரு சில பரிகார தோஷ நிவர்த்தி கொண்டு, தோஷத்தை விலத்தி, புத்திர பாக்கியத்தை ஏற்படுத்தலாம் என கருதப் படுகிறது.
 
இந்து தொன்மவியலில் [Hindu mythology] கூறப்படும் நவக்கிரகங்களில் செவ்வாய் கிரகத்தின் அதிபதியான அங்காரகன் மூலம் ஏற்படும் செவ்வாய் தோஷம். ராகு, கேது மூலம் உண்டாகும் சர்ப்ப தோஷம், களத்திர தோஷம், புத்திர தோஷம். எட்டாம் இடத்து கிரகங்களால் உண்டாகும் மாங்கல்ய தோஷம். களத்திர காரகன் சுக்கிரனால் ஏற்படும் களத்திர தோஷம். தனித்த குருவினால் உண்டாகும் இல்லற தோஷம். ஏழாம் இடத்து கிரகங்களால் ஏற்படும் பாபகத்ரி நீச்ச தோஷம். சூரிய தோஷம். விஷக் கன்யா தோஷம். சந்திரன், சனி மூலம் உண்டாகும் புனர்பூ தோஷம்.
 
மேலும் 6, 8, 12 க் கிடையே கிரகங்களின் மூலம் ஏற்படும் தோஷங்கள் என பல வகையான கிரக தோஷங்கள் இருப்பதாக நம்புகிறார்கள். தோஷங்களில் மிகப் பிரபலமாக உள்ளது ராகு, கேது எனப்படும் சர்ப்ப தோஷமும், செவ்வாய் தோஷமும் மட்டும் தான். இந்த செவ்வாய் தோஷம். சமூகத்தில் ஒரு வித அச்சத்துடன் பார்க்கப்படுகிறது.
 
மங்களன் என்று அழைக்கப்படும் செவ்வாய் உடலில் ரத்த ஓட்டத்திற்கு காரணகர்த்தா. உடலில் வெப்பத்தை தரக் கூடியவர், உஷ்ண தேகவாகு [உடல்] உள்ளவர்கள். செவ்வாய் ஆதிக்கத்தில் பிறந்திருப்பார்கள். ஒரு ஆண் மகனின் ஜாதகத்தில் செவ்வாய் பலமாக இருந்தால் தான் தன்னம்பிக்கை, திட தைரிய வீரியம், ஊக்கம். ஆண்மை போன்ற லட்சணங்கள் இருக்கும்.
 
பெண்களின் ஜாதகத்தில் செவ்வாய் முக்கிய பங்கு வகிக்கிறார். பெண்கள் பூப்படைவது செவ்வாயின் அருளினால் தான். மாதவிடாய் சரியான சுழற்சி முறையில் வருவதற்கு செவ்வாயும், சந்திரனும் காரணமாக இருக்கிறார்கள். ஆசை, காமம், சம்போகம் [புணர்ச்சி, உடலுறவு], உறவில் இன்பம், உள்ளக் கிளர்ச்சி, பாலுணர்வு ஆகியவற்றை தூண்டக் கூடியவர் செவ்வாய். செவ்வாயின் இந்த ஆதிக்கத்தை கணக்கில் எடுத்துக் கொண்டு தான் தோஷம் என்ற பெயரில் ஆண், பெண் ஜாதகங்களை பொருத்தம் பார்த்து சூட்சுமமாக சேர்த்தார்கள்.
 
இல்லறம் என்ற திருமண பந்தத்தில் ஆண், பெண் உடல் உறவு சேர்க்கையே முக்கிய அம்சமாகும். இதன் வழியாகத்தான் வம்சம் விருத்தியாகிறது இதற்கான வீரியத்தையும், ஆற்றலையும் தரக்கூடியவர் செவ்வாய் அதன் காரணமாக உள்ளமும், உடலும் சாந்தி அடைகின்றது. ஆகையால் தான் ஜோதிட சாஸ்திரத்தில் செவ்வாய்க்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. இத்தகைய வீரியம் மிக்க செவ்வாய் ஜாதகங்களில் லக்னத்திற்கு 2, 4, 7, 8, 12 ஆகிய இடங்களில் இருந்தால் செவ்வாய் தோஷம் என்று சொல்கிறோம். இதற்கேற்ப ஆண், பெண் இரு ஜாதகங்களிலும் 2, 4, 7, 8,12 ஆகிய இடங்களில் இருக்கும் ஜாதகங்களை ஒன்று சேர்ப்பதன் மூலம் தோஷம் சமன் அடைகிறது.
 
தோஷம் என்பது ஒரு சமஸ்கிருத சொல். இது குற்றம் அல்லது பாவம் அல்லது குறை என பொருள்படும். உலக வாழ்க்கையில் ஒவ்வொருவருடைய வாழ்க்கையும் ஒவ்வொருவிதமாக அமைகின்றது. ஒரு சிலருக்கு வெற்றித் திருமகள் தேடிவந்து மாலை அணிவிக்கிறாள். ஒரு சிலருக்கு என்ன உழைத்தாலும், அதற்கு உரிய பலன்கள் கிடைக்காமல் போகின்றன. இதற்கு பலவகையான தோஷங்கள் காரணமாகும் என்கிறார்கள்.
 
ஜாதகத்தில் உள்ள தோஷங்களின் வகைகள் : 1.செவ்வாய் தோஷம். 2.பித்ரு தோஷம். 3.புத்திர தோஷம். 4.மாங்கல்ய தோஷம். 5.சர்ப்ப தோஷம். 6.களத்திர தோஷம். 7.பிரம்மஹத்தி தோஷம். 8.நாக தோஷம்.9.இராகு-கேது தோஷம். 10 நவக்கிரக தோஷம், 11 சகட தோஷம் ஆகும்.
 
தோஷங்களுக்கு பரிகாரம் கூறப்பட்டாலும், பலர் அதன்படி வழிபாடு, பரிகாரம் செய்தாலும், அவரின் துன்பங்கள் நீங்காமல், அதற்கான பலன்கள் கிடைக்காமல் போவதை பலநேரம் நீங்கள் பார்த்திருப்பீர்கள்.
 
இதற்கும் சோதிடர்கள் பதில் தயாராக வைத்திருக்கிறார்கள். அதாவது நாம் பரிகாரம் செய்வதற்கு முன் எந்த கர்மவினை [வினைப்பயன்] நடக்கிறது என்பதை நாம் தெரிந்து கொண்டு நாம் அதற்கேற்றாற் போல பரிகாரங்கள் செய்தால் மட்டுமே நல்ல பலன் கிடைக்கும் என்பது ஜோதிடர்களின் அறிவுரையாக இருக்கிறது.
 
உதாரணமாக, குறைந்தபட்சம் ஏழை, எளிய மக்களுக்கு அன்னதானம் செய்வதும், அதன் மூலம் அவர்களின் வாழ்த்து கிடைத்து, அதனால் அடுத்த தலைமுறையினருக்காவது அந்த பாவம் தொடராமல் இருக்க ஓரளவு வழிசமைக்கலாம் என்கின்றனர். இங்கு தான் அவர்களின் கெட்டித்தனம் வெளிப்படுகிறது. உங்களிடம் ஏமாளித்தனம், அதாவது எதையும் எளிதில் நம்புகிற குணம் இருக்கும் வரை, அவர்களின் பயணமும் வியாபாரமும் என்றும் தொடரும் !
 
[தோஷமும் விரதமும் பிராமண இந்து சமயம் பெரும்பாலும் புகுத்தியதால், இங்கு பல சோதிடர்கள் கையாளும் சமஸ்கிரத சொற்கள், அப்படியே இந்த கட்டுரையில் உள்வாங்கப் பட்டுள்ளன]
 
 
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்
அத்தியடி, யாழ்ப்பாணம்]
 
 
முற்றிற்று
216487908_10219546287310570_3378171006597843590_n.jpg?stp=dst-jpg_s600x600&_nc_cat=103&ccb=1-7&_nc_sid=33274f&_nc_ohc=Zhui8fM-9_gQ7kNvgHAKS6S&_nc_ht=scontent-lhr8-2.xx&oh=00_AYCC1KIbuIsBWmhq319QNtlq0Eduld3FAHMP7FgHWSEISA&oe=66FEE570 216770903_10219546285910535_8406588536059930466_n.jpg?stp=dst-jpg_s600x600&_nc_cat=100&ccb=1-7&_nc_sid=33274f&_nc_ohc=3R8ZlRAhaRoQ7kNvgGSSw7m&_nc_ht=scontent-lhr6-2.xx&oh=00_AYCGrAcNfQrcd2XYQd_4emC9svI4qNB2jX-dH96un0mawQ&oe=66FEE4DD
 
 
  • நியானி changed the title to "தோஷமும் விரதமும்"


  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வீட்டில் செயற்கையாக தேனீ/தேன்கூடு வளர்ப்பவர்கள் தேனீக்கு சீனிப்பாணி கொடுக்கின்றார்கள் என கேள்விப்பட்டேன். கடையில் விற்பனை செய்யப்படும் தேன் எப்படிப்பட்ட தேனீக்களால் உற்பத்தி செய்யப்பட்டதோ யார் அறிவார். உண்மையான தேன் குளிர்காலத்தில் கட்டியாகாது என நினைக்கின்றேன்.
    • இசை அரசனும்..... நடிப்பு அரசனும்....  
    • திண்ணையில் ஒரு நாளைக்கு பத்து கருக்கு மட்டைக்கு மேல் வைக்க முடியாது என்ற கட்டுப்பாடுடன் திண்ணையை துறப்பதில் எந்த ஆட்சேபமும் இல்லை 😄
    • பாவம் அந்த தாதியர், அவர் உங்களின் உறவினராகவும் உண்மையை பேசியதாலும் சத்திய மூர்த்தியின் உளவுத்துறையால் பின்தொடரப்பட்டு பழிவாங்கப்படும் சாத்தியமுண்டு.  
    • முன்னர் திண்ணையில் பாய் விரித்து படுத்த ஒருவர் என்றால் அது நீங்களாய்த்தான் இருக்கும்....அடுத்தது நாதமுனி..😂திண்ணை இல்லாததின் பின் அவரும் இல்லை. நாதமுனி   நல்ல மனிதர். அவரை பல தடவைகள் சந்தித்திருக்கின்றேன். கருத்துக்களம் இருக்க திண்ணையில்  பிரயோசனமான உரையாடல்களை ஏன் நிர்வாகம் விரும்புகின்றது என தெரியவில்லை. பல தடவைகள் என்னையும் திண்ணையில் தடை செய்திருந்தார்கள். அது போல் மட்டுறுத்தப்பட்ட உறவுகளை திண்ணை தடையுடன் திண்ணையை ஏனைய உறவுகளுக்கு திறந்து விடலாம் என்பது என் கருத்து. இது நாதமுனிக்காக.....😂🙂  
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.