Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சனத் ஜயசூரியவின் பதவிக்காலம் நீடிப்பு

இலங்கை தேசிய கிரிக்கெட் அணியின் இடைக்கால தலைமை பயிற்றுவிப்பாளரான சனத் ஜயசூரியவின் பதவிக்காலம் நீடிக்கப்பட்டுள்ளதாக ஶ்ரீலங்கா கிரிக்கட் அறிவித்துள்ளது.

அதற்கமைய, சனத் ஜயசூரியவின் பதவிக்காலம் மேலும் ஒரு வருடத்திற்கு நீடிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை அணியின் தலைமை பயிற்றுவிப்பாளராக செயற்பட்டுவந்த கிரிஸ் சில்வர்வூட் ஐசிசி T20 உலகக்கிண்ணத்துடன் தலைமை பயிற்றுவிப்பாளர் பதவியிலிருந்து விலகியதைத் தொடர்ந்து, சனத் ஜயசூரிய இடைக்கால தலைமை பயிற்றுவிப்பாளராக நியமிக்கப்பட்டார்.

சனத் ஜயசூரியவின் தலைமை பயிற்றுவிப்பின் கீழ் இலங்கை அணி இந்திய அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை கைப்பற்றியதோடு, இங்கிலாந்து மண்ணில் டெஸ்ட் போட்டியொன்றிலும் வெற்றியீட்டியமை குறிப்பிடத்தக்கது.

https://tamil.adaderana.lk/news.php?nid=193711

  • கருத்துக்கள உறவுகள்

ந‌ல்ல‌ ப‌யிற்ச்சியாள‌ர்

நீடிப்ப‌து வ‌ர‌வேற்க்க‌ த‌க்க‌து............................

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சனத் ஜெயசூரிய இலங்கை அணியின் தலைமை பயிற்றுவிப்பாளராக நியமனம்

29 SEP, 2024 | 12:21 PM
image

இலங்கை அணியின் தலைமை பயிற்றுவிப்பாளராக முன்னாள் அணித்தலைவர் சனத்ஜெயசூரிய நியமிக்கப்பட்டுள்ளார்.

இடைக்கால பயிற்றுவிப்பாளராக பணியாற்றிய அவர் சமீபத்தைய வெற்றிகளை தொடர்ந்து தலைமை பயிற்றுவிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

நியுசிலாந்து அணியுடனான சமீபத்தைய தொடரில் ஆரம்பித்து ஒரு வருடகாலத்திற்கு அவர் தலைமை பயிற்றுவிப்பாளராக பணியாற்றுவார்.

அவரது அணுகுமுறை குறித்து நாங்கள் பெரும் மகிழ்ச்சியடைந்துள்ளோம், அவர் வீரர்களின் திறமையை ஆகக்கூடியளவிற்கு பயன்படுத்தியுள்ளார், ஒழுக்கத்தை நிலைநாட்டியுள்ளார், என  ஸ்ரீலங்கா கிரிக்கெட்டின் பிரதம நிறைவேற்று அதிகாரி ஆஸ்லி டிசில்வா தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/195040

  • கருத்துக்கள உறவுகள்

டெஸ்ட் வரிசையில்  சிறிலங்கா அணி 3 ம் இடத்துக்கு முன்னேறி உள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்
47 minutes ago, nunavilan said:

டெஸ்ட் வரிசையில்  சிறிலங்கா அணி 3 ம் இடத்துக்கு முன்னேறி உள்ளது.

ஓம்

ந‌ல்லா விளையாடுகின‌ம் அது தான் 3ம் இட‌ம்...............................

  • கருத்துக்கள உறவுகள்

 

ஒரு  தகவலுக்காக ...............

461575048_122176253696219449_54902176245

  • கருத்துக்கள உறவுகள்
38 minutes ago, nunavilan said:

 

ஒரு  தகவலுக்காக ...............

461575048_122176253696219449_54902176245

லாரா என‌க்கு மிக‌வும் பிடிச்ச‌ விளையாட்டு வீர‌ர்......................

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை கிரிக்கெட் அணியின் நிரந்தர தலைமைப் பயிற்றுநரானார் சனத் ஜயசூரிய

Published By: DIGITAL DESK 3   07 OCT, 2024 | 01:14 PM

image

(நெவில் அன்தனி)

இலங்கை கிரிக்கெட் அணியின்  நிரந்தர  தலைமைப் பயிற்றுராக சனத் ஜயசூரியவை ஸ்ரீ லங்கா கிரிக்கெட் இன்று திங்கட்கிழமை நியமித்தது.

2026ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஐசிசி ரி20 உலகக் கிண்ணப் போட்டிவரை இலங்கை அணியின் தலைமைப் பயிற்றுநராக சனத் ஜயசூரிய பதவி வகிப்பார் என ஸ்ரீலங்கா கிரிக்கெட் அறிவித்தது.

இந்தியா, இங்கிலாந்து, நியூஸிலாந்து ஆகிய அணிகளுக்கு எதிரான கிரிக்கெட் தொடர்களில் சனத் ஜயசூரியவின் பயிற்றுவிப்பில் இலங்கை அணி மிகச் சிறப்பாக விளையாடியதை அடுத்து அவரை தொடர்ந்து பயிற்றுநராக நியமிக்க ஸ்ரீ லங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் நிறைவேற்றுக் குழு தீர்மானித்தது.

இந்த மூன்று கிரிக்கெட் தொடர்களிலும் இடைக்காலப் பயிற்றுநராக பதவி வகித்த சனத் ஜயசூரிய, இன்று முதல் 2026 மார்ச் 31ஆம் திகதிவரை இலங்கை கிரிக்கெட் அணியின் நிரந்தர தலைமைப் பயிற்றுநராக பதவி வகிக்கவுள்ளார்.

சனத் ஜயசூரியவின் பயிற்றுவிப்பில் இலங்கை அணி கடந்த 27 வருடங்களில் இந்தியாவுக்கு எதரான முதலாவது ஒருநாள் தொடரைக் கைப்பற்றியிருந்தது. தொடர்ந்து இங்கிலாந்தை அதன் சொந்த மண்ணில் 10 வருடங்களுக்குப் பின்னர் டெஸ்ட் போட்டி ஒன்றில் இலங்கை வெற்றிகொண்டிருந்தது.

இறுதியாக நியூஸிலாந்துக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட தொடரில் இலங்கை முழுமையாக வெற்றிகொண்டிருந்தது.

தலைமைப் பயிற்றுநராக சனத் ஜயசூரிய தனது பணியை மேற்கிந்தியத் தீவுகளுடனான சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடருடன் ஆரம்பிக்கவுள்ளார்.

Sanath_Jayasuriya_appointed_Head_Coach__

https://www.virakesari.lk/article/195677

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அணிக்குள் தன்னம்பிக்கையையும் மற்றையவர்கள் மீதான நம்பிக்கையையும்  கட்டி எழுப்பியுள்ளதாக சனத் ஜயசூரிய கூறுகிறார்

Published By: VISHNU   08 OCT, 2024 | 02:03 AM

image

(நெவில் அன்தனி)

கிரிக்கெட் அரங்கில் சகலமும் தன்னம்பிக்கை, மற்றையவர் மீதான நம்பிக்கை, கொஞ்சம் அதிர்ஷ்டம் என்பனவாகும் என இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்றுநர் சனத் ஜயசூரிய தெரிவித்தார்.

இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்றுநராக நியமிக்கப்பட்ட பின்னர் ஸ்ரீலங்கா கிரிக்கெட் தலைமையகத்தில் இன்று பிற்பகல் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டார்.

'நான் எப்போதும் கூறுவது என்னவென்றால், தன்னம்பிக்கை, மற்றவர் மீது நம்பிக்கை வைத்தல் என்பதாகும். இதனை அணிக்குள் ஏற்படுத்தியுள்ளேன். அது மிகவும் முக்கியமாகும். இதில் கொஞ்சம் அதிர்ஷ்டம் அடங்கியிருக்கிறது என நான் நினைக்கிறேன். நாம் எவ்வளவு கடினமாகவும் உழைக்கலாம். ஆனால், சிலவேளைகளில் அதிர்ஷ்டமும் நமக்கு தேவை' என அவர் குறிப்பிட்டார்.

'வீரர்கள் அனைவரும் திறமையாக விளையாடவேண்டும் என்பதில் அர்ப்பணிப்படன் இருக்கின்றனர். கடந்த இரண்டு வருடங்களில் அவர்கள் எதை எதிர்கொண்டனர் என்பதை அறிவர். அவர்கள் துவண்டு போயிருந்தனர். இதனால் இலங்கை வீரர்களை ஆதரிக்குமாறு பொது மக்களைக் கேட்டுக்கொண்டேன். அவர்கள் ஒரு சிறந்த கிரிக்கெட் குழுவினராவர். அவர்களிடம் திறமை இருக்கிறது. அவர்களுக்கு நான் நம்பிக்கை ஊட்டினேன். நான் அவர்களுடனேயே இருக்கிறேன். அவர்கள் என்னோடு எதையும் கலந்துரையாடலாம்' என சனத் ஜயசூரிய மேலும் தெரிவித்தார்.

'உள்ளூர் பயிற்றுநர் என்ற வகையில் வீரர்களுடன் இலகுவகாக கலந்துரையாட முடியும் என்பது முக்கிய விடயமாகும். அவர்களுக்கு என்ன பிரச்சினை இருந்தாலும் என்னுடன் சுதந்திரமாக பேசலாம். அதனைத் தீர்த்துவைப்பது சுலபமானது. அதனை செய்வதற்கான தன்னம்பிக்கை அவர்களுக்கு இருக்கிறது. நான் என்னவகையான கிரிக்கெட் விளையாடினேன் என்பது அவர்களுக்கு தெரியும். எனவே நான் முன்வைக்கும் பெறுமதியான விடயங்களை அவர்கள் அறிவார்கள்,

'உள்ளூர் பயிற்றுநர் என்ற வகையில் எனக்கென்று பொறுப்பு இருக்கிறது. எனக்கு விருப்பமானர்கள் என யாரும் இல்லை. பாரபட்சம் எதுவும் என்னிடம் இல்லை. சுயாதீனமாக செயற்படுவதையே விரும்புகிறேன். எனக்கு பின்னர் உள்ளூர் பயிற்றுநர் ஒருவருக்கு  இந்த பதவி கிடைக்கும் என்பதை நான் அறிவேன்' என்றார் அவர்.

பயிற்சிகளின்போது நாங்கள் வித்தியாசமானவற்றை முயற்சி செய்வோம். அவர்கள் ஆர்வமாக இருக்கவேண்டும் என விரும்புகிறேன். பயிற்சிகளை ஆரம்பிப்பதற்கு முன்னர் ஆரோக்கியமான சூழ்நிலையை உருவாக்கிக்கொள்வோம் எனவும் அவர் கூறினார்.

ஐசிசி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் விளையாட தகுதி பெறுவதற்கு இலங்கைக்கு நல்ல வாய்ப்பு இருப்பதாக சனத் ஜயசூரிய தெரிவித்தார்.

ஆனால், தென் ஆபிரிக்கா, அவுஸ்திரேலியா ஆகிய அணிகளுக்கு எதிராக நடைபெறவுள்ள 4 டெஸ்ட் போட்டிகளில் குறைந்தது 3இல் வெற்றிபெற்றாக வேண்டும் என அவர் குறிப்பிட்டார்.,

'இலங்கை அணிக்கு உலக டெஸ்ட் சம்பியன்ஷிப்பில் இன்னும் நான்கு போட்டிகள் மீதம் உள்ளன. தென் ஆபிரிக்காவில் தென் ஆபிரிக்காவுக்கு எதிராக 2 போட்டிகளும் இலங்கையில் அவுஸ்திரேலியாவுக்கு எதிராக 2 போட்டிகளும் உள்ளன. இந்த நான்கு போட்டிகளில் 3இல் வெற்றிபெற்றால் இலங்கையினால் இறுதிப் போட்டிக்கு முன்னேறக்கூடியதாக இருக்கும்.

'தென் ஆபிரிக்காவுக்கு எதிராக டேர்பனிலும் போர்ட் எலிஸபெத்திலும் 2 டெஸ்ட் போட்டிகள் நடைபெறவுள்ளன. அந்த இரண்டு மைதானங்களும் இலங்கைக்கு சாதகமானவையாகும். எனவே இலங்கை அணி முழு த்   திறமையுடன் விளையாடி வெற்றிபெற முயற்சிக்கும். அதற்காக இலங்கை அணியை தயார்படுத்தவுள்ளேன். அதனைத் தொடர்ந்து அவுஸ்திரேலியாவுக்கு எதிராக 2 டெஸ்ட் போட்டிகள் எமது சொந்த நாட்டில் நடைபெறவுள்ளன. எனவே இலங்கை அணிக்கு நல்ல வாய்ப்பு இருக்கிறது' என்றார்.

இது இவ்வாறிருக்க, தலைமைப் பயிற்றுநர் பணியானது சவால்மிக்கது என அவர் குறிப்பிட்டார்.

'இந்தப் பதவியை நான் எனது வாழ்நாளில் ஒருபோதும் எதிர்பார்க்கவில்லை. ஆனால், எனக்கு இந்த சந்தர்ப்பம் கிடைத்ததையிட்டு மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். இது ஒரு சவால் மிக்க பணி என்பதை நான் அறிவேன். அது ஒரு இலகுவான தொழில் அல்ல. ஆனால், அந்த சவாலை ஏற்று இலங்கை அணியினருடன் முன்னோக்கி நகர்வேன்' என சனத் ஜயசூரிய தெரிவித்தார்.

இது இவ்வாறிருக்க, 'வெளிநாட்டுப் பயிற்றுநர்களுக்கு போன்றே சனத் ஜயசூரியவுக்கு சம்பளம் வழங்கப்படுகிறது. இப் பதவிக்கு பலர் விண்ணப்பித்திருந்தனர். ஆனால், கடந்த 3 தொடர்களில் இலங்கைக்கு சனத் ஜயசூரிய சிறந்த பெறுபேறுகளை ஈட்டிக்கொடுத்துள்ளதால் அவரையே முழு நேரப் பயிற்றுநராக நியமிப்பதற்கு எமது நிறைவேற்றுக்குழு தீர்மானித்தது' என ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி ஏஷ்லி டி சில்வா தெரிவித்தார்.

இந்தியா, இங்கிலாந்து, நியூஸிலாந்து ஆகிய நாடுகளுக்கு எதிரான மூவகை கிரிக்கெட் தொடர்களின்போது இலங்கை கிரிக்கெட் அணியின் இடைக்காலப் பயிற்றுநராக சனத் ஜயசூரிய கடமையாற்றி இருந்தார்.

https://www.virakesari.lk/article/195722

  • கருத்துக்கள உறவுகள்

இந்த‌ கிழ‌மை 

வெஸ்சின்டீஸ் கூட‌ விளையாட‌ போகின‌ம் பாப்போம் இல‌ங்கை வீர‌ர்க‌ளின் திற‌மைய‌.............................

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.