Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தமிழக வீரர்களால் குஜராத் அணி முதலிடம், சாய் சுதர்சன் அதிரடியில் வீழ்ந்த ராஜஸ்தான்

ஐபிஎல்

பட மூலாதாரம்,GETTY IMAGES

கட்டுரை தகவல்

  • எழுதியவர், க.போத்திராஜ்

  • பதவி, பிபிசி தமிழுக்காக

  • 4 மணி நேரங்களுக்கு முன்னர்

ஆமதாபாத்தில் நேற்று நடந்த ஐபிஎல் தொடரின் 23வது போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை 58 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது குஜராத் டைட்டன்ஸ் அணி.

முதலில் பேட் செய்த குஜராத் டைட்ன்ஸ் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 217 ரன்கள் சேர்த்தது. 218 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் அணி 19.2 ஓவர்களில் 159 ரன்களுக்கு ஆட்டமிழந்து 58 ரன்களில் தோல்வி அடைந்தது.

இந்த வெற்றியின் மூலம் குஜராத் டைட்டன்ஸ் அணி 5 போட்டிகளில் 4 வெற்றிகளுடன் 8 புள்ளிகள் பெற்று முதலிடத்துக்கு முன்னேறியது. அதோடு, 1.413 என வலுவான நிகர ரன்ரேட்டில் இருக்கிறது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 5 போட்டிகளில் 2 வெற்றிகள் மற்றும் 3 தோல்விகளைப் பெற்று 4 புள்ளிகளுடன் 7வது இடத்துக்குச் சரிந்தது.

குஜராத் அணியின் வெற்றிக்கு தமிழக வீரர்களான சாய் சுதர்சன், சாய் கிஷோர் மற்றும் வேகப்பந்துவீச்சாளர் பிரசித் கிருஷ்ணா மீண்டும் காரணமாகியுள்ளனர். அதிலும் தமிழக பேட்டர் சாய் சுதர்சன் கடந்த 5 போட்டிகளிலும் நிலையான பேட்டிங்கை வெளிப்படுத்தி, ஆரஞ்சு தொப்பியை நோக்கி முன்னேறியுள்ளார்.

சாய் சுதர்சன் 53 பந்துகளில் 82 ரன்கள் சேர்த்து குஜராத் அணியின் ஸ்கோர் உயர்வுக்கு முக்கியக் காரணமாக அமைந்து, ஆட்டநாயகன் விருதையும் வென்றார். பிரசித் கிருஷ்ணா 4 ஓவர்களில் 24 ரன்களுக்கு 3 விக்கெட்டுகள் எனவும், சாய் கிஷோர் 2.2 ஓவர்களில் 20 ரன்களுக்கு 2 விக்கெட்டுகள் எனவும் ராஜஸ்தான் அணியை நெருக்கடியில் தள்ளினர்.

ஐபிஎல்

பட மூலாதாரம்,GETTY IMAGES

ராஜஸ்தான் அணியின் சரியில்லாத பேட்டிங்தான் தோல்விக்கான முக்கியக் காரணம். 3 பேட்டர்கள் மட்டுமே இரட்டை இலக்க ரன்கள் சேர்த்தனர். மற்றவர்கள் யாரும் ஜொலிக்கவில்லை. சிவப்பு மண் கொண்ட ஆடுகளம் பேட்டிங்கிற்கு சொர்க்கபுரியாக இருந்தது. ஆனால் பேட்டர்கள் யாரும் நிதானமாக ஆடவில்லை என்பதுதான் விக்கெட் சரிவுக்கு காரணம்.

அது மட்டுமின்றி ராஜஸ்தான் அணியில் ஹெட்மெயருக்கு அடுத்தார்போல் நடுப்பகுதியில் பெரிதாக பேட்டர்கள் யாருமில்லை. டாப்ஆர்டர் 3 பேர்தான் ஓரளவுக்கு சிறப்பாக ஆடக்கூடியவர்கள். நடுப்பகுதியும், கீழ்வரிசையும் ராஜஸ்தான் அணியில் பலவீனமாக இருக்கிறது.

இதைச் சரிசெய்யாவிட்டால் ராஜஸ்தான் அணி முதல் சுற்றிலேயே வெளியேற்றப்பட்டுவிடும். நடுப்பகுதியில் பெரிய ஷாட்களை ஆடக்கூடிய வகையில் ஆங்கர் ரோல் எடுத்து விளையாடக் கூடிய பேட்டர்கள் யாருமில்லை. ஷுபம் துபே, ஜூரெல் இருவரும் கடந்த சில போட்டிகளாக மோசமாக ஆடி வருகிறார்கள்.

ஷிம்ரன் ஹெட்மயர்(52) மட்டுமே அரைசதம் அடித்தார். கேப்டன் சஞ்ஜூ சாம்ஸன்(41), ரியான் பராக்(26) ஆகியோர் மட்டுமே இரட்டை இலக்க ரன்கள் சேர்த்தனர். மற்ற வகையில் ஜெய்ஸ்வால்(6), நிதிஷ் ராணா(1), ஜூரெல்(5), ஷுபம் துபே(1) ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.

ஐபிஎல்

பட மூலாதாரம்,GETTY IMAGES

ஆர்ச்சரின் அதிரடி பந்துவீச்சு

வெற்றிக்குப் பின் குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டன் சுப்மன் கில் பேசுகையில், "நன்கு ஸ்கோர் செய்திருந்தோம். சேஸிங்கும் எளிதாக இருக்கவில்லை. முதல் 4 ஓவர்களில் நாங்கள் நெருக்கடி கொடுத்துவிட்டோம். சாய், பட்லர் பார்ட்னர்ஷிப் ஆட்டம் அற்புதமாக இருந்தது, அதனால்தான் 200 ரன்களை கடக்க முடிந்தது. எங்கள் வேகப்பந்துவீச்சாளர்களும் அற்புதமாகப் பந்துவீசினர்," என்று தெரிவித்தார்.

அதோடு, ஒவ்வொருவரும் தனது பங்கை உணர்ந்து ஆடியதாகக் குறிப்பிட்ட அவர், "நாம் நினைத்தது போல் பந்துவீச்சாளர்கள் செயல்படும்போது கேப்டன்சி எளிதாகிறது. நான் யாரை பிளேயிங் லெவனில் கொண்டு வந்தாலும் 100 சதவீத பங்களிப்பு செய்கிறார்கள். இஷாந்த் சர்மாவும் கடந்த ஆட்டத்தில் சிறப்பாகப் பந்து வீசினார்," எனத் தெரிவித்தார்.

ராஜஸ்தான் பந்துவீச்சாளர் ஜோஃப்ரா ஆர்ச்சருக்கு இந்த சீசன் சிறப்பாகத் தொடங்கவில்லை. முதல் இரு போட்டிகளில் 6.3 ஓவர்களில் 109 ரன்கள்வரை கொடுத்தார். ஆனால் அடுத்து வந்த போட்டிகளில் மீண்டு வந்த ஆர்ச்சர் 7 ஓவர்களில் 38 ரன்கள் கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தி பந்துவீச்சில் அதிரடியைக் காட்டியுள்ளார்.

இந்த ஆட்டத்திலும் ஆர்ச்சரின் பந்துவீச்சில் அனல் பறந்தது. சாய் சுதர்சன் சந்தித்த முதல் ஓவரில் ஆர்ச்சர் 152 கி.மீ வேகத்தில் பந்துவீசித் திணறடித்தார். 147 கி.மீ வேகத்தில் இன்ஸ்விங் வீசி சுப்மன் கில்லை கிளீ்ன் போல்டாக்கி மகிழ்ச்சியில் ஆர்ச்சர் திளைத்தார்.

அடுத்து வந்த இங்கிலாந்து கேப்டன் ஜோஸ் பட்லருக்கு 2 ஸ்லிப் ஃபீல்டர்களை நிறுத்தி, ஷார்ட் லெக்கில் ஃபீல்டர் அமைத்து ஆர்ச்சர் அவுட் ஸ்விங் வீசியும், பவுன்ஸர் வீசியும் திணறவிட்டார். ஆனால், பட்லர் கடைசியில் பவுண்டரி அடித்து ஆர்ச்சருக்கு பதிலடி கொடுத்தார்.

சாய் சுதர்சன் எனும் நங்கூரம்

ஐபிஎல்

பட மூலாதாரம்,GETTY IMAGES

குஜராத் டைட்ன்ஸ் அணியின் நம்பிக்கை நாயகன், நங்கூரம் என்று தமிழக வீரர் சாய் சுதர்சனை குறிப்பிடலாம். இதுவரை 5 போட்டிகளில் 3 அரைசதங்கள் உள்பட 40க்கும் அதிகமான ரன்களை 4 முறை அடித்துள்ளார். குஜராத் அணி ஒவ்வொரு முறையும் பெரிய ஸ்கோரை எட்டுவதற்கு தொடக்கப் புள்ளியாக சாய் சுதர்சன் ஆட்டம் அமைந்துள்ளது.

தொடக்கத்தில் இருந்தே அதிரடியாக ஆடிய சுதர்சன் ஸ்கூப், டிரைவ், கட்ஷாட் என அடித்து ரன்களை சேர்த்தார். இதன்மூலம் 5.1 ஓவர்களில் குஜராத் 50 ரன்களை எட்டியது. பவர்ப்ளே முடிவில் குஜராத் 56 ரன்கள் சேர்த்தது. அதில் 39 ரன்கள் சாய்சுதர்சன் சேர்த்தது. ஜாஸ் பட்லர் ஒரு கட்டத்தில் திணறி 12 பந்துகளில் 13 ரன்கள் என இருந்தார். அதன் பின்னர், அடுத்த 6 பந்துகளில் 4 பவுண்டரிகளை விளாசி 19 பந்துகளில் 31 ரன்களுக்கு முன்னேறினார்.

பட்லரும், சாய் சுதர்சனும் 2 விக்கெட்டுக்கு 46 பந்துகளில் 86 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்துப் பிரிந்தனர். தீக்சனா பந்துவீச்சில் கால்காப்பில் வாங்கி பட்லர் 36 ரன்களில் ஆட்டமிழந்தார்.

அதன் பிறகு குஜராத் ரன்ரேட் திடீரென சரிந்தநிலையில் மற்றொரு தமிழக வீரர் ஷாருக்கான் களமிறங்கி சிறிய கேமியோ ஆடி 20 பந்துகளில் 36 ரன்கள் சேர்த்து ரன்ரேட்டை உயர்த்திக் கொடுத்து ஆட்டமிழந்தார்.

ஆர்ச்சர் வீசிய 18வது ஓவரில் பவுண்டரி எல்லையில் கிடைத்த கேட்ச் வாய்ப்பை ஷுபம் துபே கைக்கு வந்ததைத் தவறவிட்டார். ஆனால், அதன் பிறகு ஒரு ரன் மட்டுமே சேர்த்த சுதர்சன் 82 ரன்னில் ஆட்டமிழந்தார். சாய் சுதர்சன் 32 பந்துகளில் அரைசதம் அடித்து, 46 பந்துகளில் 82 ரன்கள் சேர்த்து தேஷ்பாண்டே பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். முதல் ஓவரில் களமிறங்கிய சாய் சுதர்சன் 19வது ஓவர் வரை களத்தில் இருந்து ஆங்கர்ரோல் எடுத்தார்.

ராகுல் திவேட்டியா(24) மற்றும் ரஷித்கான்(12) குஜராத் அணி 200 ரன்களை கடக்க உதவினர். 20 ஓவர்களில் குஜராத் அணி 217 ரன்கள் சேர்த்தது.

ராஜஸ்தான் திணறல்

ஐபிஎல்

பட மூலாதாரம்,GETTY IMAGES

ராஜஸ்தான் அணி 218 ரன்கள் எனும் பெரிய இலக்குடன் களமிறங்கியது. ஜெய்ஸ்வால் 3வது முறையாக ஏமாற்றினார். அர்ஷத் கான் வீசிய 2வது ஓவரில் ஆப்சைடு விலகிச் சென்ற பந்தை அடிக்க முயன்று டீப் தேர்டு திசையில் ரஷித் கானிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ராணா ஒரு ரன்னில் சிராஜ் பந்துவீச்சில் டீப் தேர்டு திசையில் கெஜ்ரோலியாவிடம் கேட்ச் கொடுக்கு விக்கெட்டை இழந்தார்.

ரியான் பராக் வந்த வேகத்தில் சிராஜ் பந்துவீச்சில் சிக்ஸர் விளாசினார். சாம்சன், ரியான் பராக் ஓரளவுக்கு ஆடி 26 பந்துகளில் 48 ரன்கள் சேர்த்திருந்தபோது சர்ச்சைக்குரிய வகையில் பராக் ஆட்டமிழந்தார். பவர்ப்ளேவில் ராஜஸ்தான் அணி 2 விக்கெட் இழப்புக்கு 57 ரன்கள் சேர்த்தது.

குல்வந்த் கெஜ்ரோலியா வீசிய 7வது ஓவரில் ரியான் பராக் பந்தை அடிக்க முற்பட்டு பட்லரிடம் கேட்சானது. பேட் தரையில் மோதியபோது சத்தம் கேட்டது, ஆனால், பந்து பேட்டில் பட்ட சத்தமா அல்லது பேட் தரையில் மோதியதால் சத்தம் வந்ததா என்ற குழப்பத்தில் 3வது நடுவர் ரியான் பராக்கிற்கு அவுட் வழங்கினார். இதுகுறித்து கள நடுவரிடம் தனது அதிருப்தியைத் தெரிவித்து பராக் 26 ரன்களில் ஆட்டமிழந்தார்.

ஃபார்முக்கு வந்த ரஷித் கான்

கடந்த 4 போட்டிகளில் ஒரு விக்கெட்டை மட்டும் வீழ்த்தியிருந்த ரஷித் கான் இந்த ஆட்டத்தில் 2 விக்கெட்டுகளை வீழ்த்தி மீண்டும் ஃபார்முக்கு திரும்பினார். தனது முதல் ஓவரிலேயே துருவ் ஜூரெல் விக்கெட்டை எடுத்தார் ரஷித் கான்.

அதன்பின் ஹெட்மெயர் வந்தவுடன் கால்காப்பில் வாங்கியது தெளிவாகத் தெரிந்தது. இருப்பினும் பந்து சிறிது லெக்ஸ்டெம்புக்கு தள்ளி பிட்ச் ஆனதால் அவுட் வழங்கவில்லை. ஆனால் ரஷித் கான் குறிவைத்துப் பந்து வீசியதில் ஹெட்மயர் 12 பந்துகளில் 2 பவுண்டரி, 2 சிக்சர்கள் உள்பட 26 ரன்களை விளாசினார். ஷுபம் துபே ஒரு ரன்னில் ரஷித் கான் பந்துவீச்சில் கால்காப்பில் வாங்கி ஆட்டமிழந்தார்.

நெருக்கடியளித்த சாய் கிஷோர், பிரசித் கிருஷ்ணா

ஐபிஎல்

பட மூலாதாரம்,GETTY IMAGES

நடுப்பகுதியில் சாய் கிஷோர், பிரசித் கிருஷ்ணா இருவரும் கடைசி வரிசை விக்கெட்டுகளை கவனித்துக்கொண்டனர். சாம்சன், ஹெட்மெயர் இருவரும் அணியை மெல்ல வெற்றியை நோக்கி நகர்த்தினர். 12 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 115 ரன்களுடன் ராஜஸ்தான் அணி வலுவாக இருந்தது.

பிரசித் கிருஷ்ணா வீசிய பவுன்சரை அடிக்க முற்பட்டு ஷார்ட் தேர்டு திசையில் கேட்ச் கொடுத்து சாம்சன் 41 ரன்களில் ஆட்டமிழந்தார். பிரசித் கிருஷ்ணா வீசிய 16வது ஓவரில் ஷார்ட் பந்தில் ஆர்ச்சர்(4), ஹெட்மெயர்(52) இருவரும் விக்கெட்டுகளை இழந்தனர்.

ராஜஸ்தான் அணி, 16 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 145 ரன்கள் சேர்த்துத் தடுமாறியது. அதன் பிறகு அடுத்த 14 ரன்களுக்குள் மீதமிருந்த இரு விக்கெட்டுகளையும் சாய் கிஷோரிடம் இழந்து ராஜஸ்தான் அணி 159 ரன்களில் ஆட்டமிழந்தது.

அடுத்த ஆட்டம் யாருக்கு?

இன்றைய ஆட்டம்: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு vs டெல்லி கேபிடல்ஸ்

இடம்: பெங்களூரு

நேரம்: இரவு 7.30

சிஎஸ்கேவின் அடுத்த ஆட்டம்: சென்னை சூப்பர் கிங்ஸ் vs கொல்கத்தா நைட்ரைடர்ஸ்

நாள் - ஏப்ரல் 11

இடம் - சென்னை சேப்பாக்கம்

மும்பையின் அடுத்த ஆட்டம்: மும்பை இந்தியன்ஸ் vs டெல்லி கேபிடல்ஸ்

நாள் - ஏப்ரல் 13

இடம் - டெல்லி

ஆரஞ்சு தொப்பி யாருக்கு?

நிகோலஸ் பூரன் (லக்னெள சூப்பர் ஜெயின்ட்ஸ்) -288 ரன்கள் (5 போட்டிகள்)

சாய் சுதர்சன் (குஜராத் டைட்டன்ஸ்) - 273 ரன்கள் (5 போட்டிகள்)

மிட்ஷெல் மார்ஷ் (லக்னெள சூப்பர் ஜெயின்ட்ஸ்) - 265 ரன்கள் (5 போட்டிகள்)

பர்பிள் தொப்பி யாருக்கு?

நூர் அகமது (சிஎஸ்கே) - 11 விக்கெட்டுகள் (5 போட்டிகள்)

சாய் கிஷோர் (குஜராத் டைட்டன்ஸ்) - 10 விக்கெட்டுகள் (5 போட்டிகள்)

முகமது சிராஜ் (குஜராத் டைட்டன்ஸ்) - 10 விக்கெட்டுகள் (5 போட்டிகள்)

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.

https://www.bbc.com/tamil/articles/cevddnllzgdo

  • Replies 114
  • Views 4k
  • Created
  • Last Reply

Most Popular Posts

  • வீரப் பையன்26
    வீரப் பையன்26

    டூ பிலஸ்சிய‌ விட‌  தென் ஆபிரிக்காவில் ந‌ல்ல‌ இள‌ம் வீர‌ர்க‌ள் இருக்கின‌ம் அவ‌ர்க‌ளை ஏல‌த்தில் எடுக்க‌லாம்   40வ‌ய‌தை தாண்டின‌வ‌ர்க‌ள் ஓய்வை அறிவிப்ப‌து ந‌ல்ல‌ம் இள‌ம் வீர‌ர்க‌ளுக்க

  • ஏராளன்
    ஏராளன்

    சுனில் நரைன் பேட்டால் ஸ்டம்பை உரசியும் கூட அவுட் கொடுக்கப்படாதது ஏன்? முதல் ஆட்டத்திலேயே சர்ச்சை பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 2 மணி நேரங்க

  • ஏராளன்
    ஏராளன்

    ஒரேபோட்டியில் குவிக்கப்பட்ட 528 ரன்கள் ! இஷான் கிஷன் சதத்துடன் ஹைதராபாத் அமர்க்கள ஆரம்பம் பட மூலாதாரம்,SUNRISERSHYDERABAD/X PAGE படக்குறிப்பு, 45 பந்துகளில் முதல் ஐபிஎல் சதத்தை அடித்தார் இஷான் கிஷன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சிஎஸ்கே கேப்டனாக மீண்டும் தோனி; ருதுராஜுக்கு என்ன ஆனது?

சிஎஸ்கே கேப்டனாக மீண்டும் தோனி - ருதுராஜுக்கு என்ன ஆனது?

பட மூலாதாரம்,GETTY IMAGES

2 மணி நேரங்களுக்கு முன்னர்

நடப்பு ஐபிஎல் தொடரில், இனி வரும் ஆட்டங்களில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு, அந்த அணியின் முன்னாள் கேப்டனாக இருந்த மகேந்திர சிங் தோனி மீண்டும் கேப்டனாக செயல்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தொடரில் கேப்டனாக பொறுப்பு வகித்த ருதுராஜ் கெய்க்வாட் காயம் காரணமாக தொடரில் இருந்து விலகுவதாகவும், மீதமுள்ள போட்டிகளில் தோனி தலைமை ஏற்பார் என்றும் சிஎஸ்கே அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங் தெரிவித்துள்ளார்.

ருதுராஜுக்கு இடது முழங்கையில் பந்து தாக்கியதில் லேசான எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. காயம் குணமாக காலம் எடுக்கும் என்பதால், அவர் தொடரிலிருந்து விலகுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவர் விலகியதையடுத்து, ஓர் ஆண்டுக்குப்பின் கேப்டன் பொறுப்பை தோனி மீண்டும் ஏற்கிறார்.

சிஎஸ்கே அணிக்கு தோனி கேப்டனாகியுள்ள நிலையில் நாளை (ஏப்ரல்11) சென்னை அணி சேப்பாக்கத்தில் நடக்கும் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியுடன் மோதுகிறது.

2008-ஆம் ஆண்டு ஐபிஎல் தொடர் தொடங்கியதிலிருந்து சிஎஸ்கே அணியின் கேப்டனாக பதவி வகித்த தோனி 2023-ஆம் ஆண்டு வரை அப்பதவியில் நீடித்தார். இந்த 15 ஆண்டுகளில் சிஎஸ்கே அணிக்கு 5 முறை சாம்பியன்ஷிப் பட்டத்தை தோனி பெற்றுக் கொடுத்துள்ளார்.

சிஎஸ்கே கேப்டனாக மீண்டும் தோனி - ருதுராஜுக்கு என்ன ஆனது?

பட மூலாதாரம்,GETTY IMAGES

ஐபிஎல் தொடரில் இடம் பெற்றுள்ள 10 அணிகளும் தலைமுறை மாற்றத்துக்கு ஏற்ப புதிய கேப்டன்களை நியமித்த நிலையில் சிஎஸ்கே மட்டும் நியமிக்காமல் இருந்தது. அதுமட்டுமின்றி, தோனிக்கு முழங்காலில் செய்யப்பட்ட அறுவை சிகிச்சை காரணமாக கேப்டனாக செயல்படுவதும் சிரமம் என்று கூறப்பட்டது.

தோனிக்கு அடுத்தாற்போல் கேப்டன் பதவிக்கு யாரை கொண்டு வரலாம் என்று யோசித்து, கெய்க்வாட்டை தேர்வு செய்தனர்.

ஆனால், கடந்த சீசனில் கெய்க்வாட் தலைமையில் சிஎஸ்கே அணி ப்ளே ஆஃப் சுற்றுக்குள் கூட செல்லமுடியாமல் கடைசி ஆட்டத்தில் ஆர்சிபியிடம் தோற்று வெளியேறியது.

சிஎஸ்கே அணி தோனி தலைமையில் செயல்பட்டபோது, நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. ஐபிஎல் வரலாற்றில்யே "கன்சிஸ்டென்ட் டீம்" அதாவது நிலைத்தன்மையான அணியாக சிஎஸ்கே வலம் வந்தது.

தோனி தலைமையில் சிஎஸ்கே அணி 235 போட்டிகளில் விளையாடியுள்ளது. அதில் 142 போட்டிகளில், தோனி வெற்றியைப் பெற்றுத் தந்துள்ளார். அதிக போட்டிகளில் கேப்டனாக இருந்தும், ஓர் அணிக்கு அதிக வெற்றிகளைப் பெற்றுக் கொடுத்த கேப்டனாகவும் தோனி வரலாற்று சாதனை படைத்துள்ளார்.

2023-ஆம் ஆண்டு கடைசியாக சிஎஸ்கே அணிக்கு கேப்டனாக தோனி செயல்பட்டு, 5வது சாம்பியன்ஷிப் பட்டத்தை பெற்றுக்கொடுத்தார். அதன்பின் கேப்டன் பதவியிலிருந்து தோனி விலக, ருதுராஜ் கெய்வாட்டிடம் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது.

சிஎஸ்கே கேப்டனாக மீண்டும் தோனி - ருதுராஜுக்கு என்ன ஆனது?

பட மூலாதாரம்,GETTY IMAGES

இந்நிலையில் 2024ம் ஆண்டு அவர் கேப்டனாகப் பொறுப்பேற்று செயல்பட்டார். அந்த சீசனில் அணி ப்ளே ஆஃப் சுற்றுக்குகூட செல்லவில்லை.

தற்போது நடைபெற்று வரும் ஐபிஎல் சீசனில் சிஎஸ்கே அணி மோசமாக விளையாடி வருகிறது. இதுவரை நடைபெற்ற 5 போட்டிகளில் 4 ஆட்டங்களில் தோற்று படுமோசமான நிலையில் உள்ளது.

பஞ்சாப் கிங்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் கெய்க்வாட்டின் இடது முழங்கையில் பந்து தாக்கி, லேசான எலும்பு முறிவு ஏற்பட்டதால் அவரால் தொடர்ந்து விளையாட முடியாத சூழல் ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து அவர் தொடரிலிருந்து விலகியுள்ளார்.

இதையடுத்து, கேப்டன் பொறுப்பை மீண்டும் தோனி ஏற்பதாக சிஎஸ்கே நிர்வாகம் சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளது.

சிஎஸ்கே நிர்வாகம் சார்பில் எக்ஸ் தளத்தில் பதிவிட்ட செய்தியில் " ருதுராஜ் கெய்க்வாட்டின் முழங்கையில் எலும்பு முறிவு ஏற்பட்டதால் அவர் ஐபிஎல் தொடரிலிருந்து விலகுகிறார். அவருக்குப் பதிலாக மகேந்திர சிங் தோனி கேப்டனாக அணியை வழி நடத்துவார். ருதுராஜ் விரைவில் குணமடைய வாழ்த்துகள்," எனத் தெரிவித்துள்ளது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/cly11l08w1po

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வெற்றி நடை போடும் டெல்லி அணி - கே.எல்.ராகுலின் அதிரடிக்கு ஆர்சிபி பணிந்தது ஏன்?

ஐபிஎல்

பட மூலாதாரம்,GETTY IMAGES

கட்டுரை தகவல்

  • எழுதியவர், க.போத்திராஜ்

  • பதவி, பிபிசி தமிழுக்காக

  • 4 மணி நேரங்களுக்கு முன்னர்

பெங்களூருவில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 போட்டியின் 24வது லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது டெல்லி கேபிடல்ஸ் அணி.

முதலில் பேட் செய்த ஆர்சிபி அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 163 ரன்கள் சேர்த்தது. 164 ரன்கள் சேர்த்தால் வெற்றி என்னும் இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணி 13 பந்துகள் மீதமிருக்கையில் 169 ரன்கள் சேர்த்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.

டெல்லி கேபிடல்ஸ் அணி தொடர்ந்து 4 போட்டிகளிலும் வென்று தோல்வியே இல்லாமல் 8 புள்ளிகளுடன் 2வது இடத்தில் இருக்கிறது. ஆர்சிபி அணி 5 போட்டிகளில் தொடர்ந்து 2வது தோல்வியை சொந்த மண்ணில் சந்தித்து 6 புள்ளிகளுடன் 3வது இடத்துக்குச் சரிந்துள்ளது.

ஆட்டத்தை மாற்றிய ஒற்றை மனிதர்

RCB vs DC: வெற்றி நடை போடும் டெல்லி அணி - கே.எல்.ராகுலின் அதிரடிக்கு ஆர்சிபி பணிந்தது ஏன்?

பட மூலாதாரம்,GETTY IMAGES

மிகச்சிறிய பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் இதுபோன்ற குறைந்த ஸ்கோரை அடித்துவிட்டு ஆர்சிபி அணி டிபெண்ட் செய்வது மிகவும் கடினம்.

இரு அணிகளிலும் பிக்ஹிட்டர்கள் அதிகமாக இருக்கிறார்கள். இதில் ஆர்சிபி ஹிட்டர்களை டெல்லி பந்துவீச்சாளர்கள் ஒடுக்கி வெற்றி கண்டனர். டெல்லி அணி தொடக்கத்தில் தடுமாறினாலும் கே.எல்.ராகுல் என்ற ஒற்றை விக்கெட்டை எடுத்திருந்தால் ஆட்டம் தலைகீழாக மாறியிருக்கும். ஆனால், கடைசி வரை ராகுல் விக்கெட்டை ஆர்சிபி பந்துவீச்சாளர்களால் எடுக்க முடியாமல் தோல்வி அடைந்தனர்.

தொடர்ந்து 2வது போட்டியாக டெல்லி அணியின் வெற்றிக்கு காரணமாக கே.எல்.ராகுல் அமைந்துள்ளார். சிஎஸ்கே அணிக்கு எதிராக ராகுல் அடித்த ஸ்கோர் அந்த அணிக்கு சம்மட்டி அடியாக இறங்கியது.

இந்த ஆட்டத்தில் ஆர்சிபி அணிக்கு எதிராக ராகுல் 53 பந்தகளில் 93 ரன்கள்(6 சிக்ஸர், 7 பவுண்டரி) சேர்த்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்து டெல்லி அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றதோடு, ஆட்டநாயகன் விருதையும் வென்றார்.

ஆர்சிபி அணியைப் பற்றி சுருக்கமாகச் சொல்லவதென்றால், முதல் 3 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 53 ரன்கள் சேர்த்தது.

கடைசி இரு ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 36 ரன்கள் சேர்த்தது. நடுப்பகுதி 15 ஓவர்களில் வெறும் 74 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்தது. இதுதான் ஆர்சிபி அணியின் நேற்றைய பேட்டிங்கின் சுருக்கம்.

தொடக்கத்தில் தடுமாறிய டெல்லி

RCB vs DC: வெற்றி நடை போடும் டெல்லி அணி - கே.எல்.ராகுலின் அதிரடிக்கு ஆர்சிபி பணிந்தது ஏன்?

பட மூலாதாரம்,GETTY IMAGES

ஆர்சிபியை 163 ரன்களில் சுருட்டிவிட்டோம் என்று டெல்லி அணி மகிழ்ச்சியாக இருந்தாலும் அது களத்துக்கு வரும்போது நிலைக்கவில்லை.

தொடக்கத்திலேயே ஆர்சிபி அணி 30 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை எடுத்து டெல்லி அணியைத் தடுமாற வைத்தது. 11 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 67 ரன்கள்தான் டெல்லி எடுத்திருந்தது.

ஆனால், டிரிஸ்டன் ஸ்டெப்ஸ், ராகுல் கூட்டணி 5வது விக்கெட்டுக்கு 6.5 ஓவர்களில் 102 ரன்கள் சேர்த்து, 13 பந்துகள் மீதமிருக்கும்போது வெற்றி பெற வைத்தனர். அதாவது 7 ஓவர்களில் 102 ரன்களை இருவரும் சேர்த்துள்ளனர். முதல் 11 ஓவர்களில் டெல்லி அணி 68 ரன்களே சேர்த்தநிலையில் அடுத்த 7 ஓவர்களில் 102 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைந்துள்ளது.

ஆர்சிபி அணி தங்களுக்குக் கிடைத்த தருணத்தைப் பயன்படுத்தத் தவறிவிட்டது. 4 விக்கெட்டுகளை விரைவாக எடுத்த ஆர்சிபியால் அடுத்ததாக ஒரு விக்கெட்டைக்கூட எடுக்க முடியவில்லை. இந்த ஒரு விக்கெட்டில்தான் ஆர்சிபி அணி தோற்றுள்ளது.

வியக்க வைத்த ராகுலின் அற்புதமான ஆட்டம்

கே.எல்.ராகுல் இந்திய அணியில் மட்டுமல்ல ஐபிஎல் தொடரில் எந்த அணியிலும் எந்த இடத்திலும் சிறப்பாக ஆடக்கூடியவர் என்பதை ஒவ்வொரு போட்டியிலும் நிரூபித்துள்ளார். தொடக்க வீரராக வந்து அதிரடியாக ஆடக் கூடியவர், நடுப்பகுதியில் வந்து ஆங்கர் ரோல் எடுத்தும் விளையாட முடியும் என்பதை நேற்றைய ஆட்டத்தில் நிரூபித்துவிட்டார்.

RCB vs DC: வெற்றி நடை போடும் டெல்லி அணி - கே.எல்.ராகுலின் அதிரடிக்கு ஆர்சிபி பணிந்தது ஏன்?

பட மூலாதாரம்,GETTY IMAGES

டெல்லி அணயின் டாப் ஆர்டர் பேட்டர்கள் 3 பேரும் ஒற்றை இலக்க ரன்னில் ஆட்டமிழந்தனர். கடந்த சீசனில் சிறப்பாக ஆடியதை நம்பி ப்ரேசர் மெக்ருக்கை ஏலத்தில் தக்கவைத்து டெல்லி அணி எடுத்தது. இதுவரை ஒரு போட்டியில்கூட அவர் சிறப்பாக பேட் செய்யவில்லை. அபிஷேக் போரெலும் அதே நிலைதான்.

டெல்லி அணி 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியபோது, ராகுல் தனது ரன் வேகத்தைக் குறைத்து 29 பந்துகளில் 29 ரன்கள்தான் சேர்த்திருந்தார். 7 ரன்களுடன் இருந்தபோது ஆர்சிபி கேப்டன் ரஜத் பட்டிதார் கேட்சை நழுவவிட்டு ராகுலுக்கு வாய்ப்பளித்தார். 11வது ஓவரின்போது டெல்லி அணியின் வெற்றி சதவிகிதம் 67 சதவிகிதத்தில் இருந்து 14.31 சதவிகிதமாகக் குறைந்தது. அதன்பின் ராகுலின் அதிரடியால் ஆர்சிபி பந்துவீச்சாளர்கள் எங்காவது ஒளிந்து கொள்ளலாமா என்று கேட்கும் அளவுக்கு பந்துவீச பயந்தனர்.

ராகுல் 29 பந்துகளில் 29 ரன்கள் சேர்த்திருந்த நிலையில் தொடங்கிய அதிரடி ஆட்டத்தால் அடுத்த 8 பந்துகளில் தனது அரைசத்ததை நிறைவு செய்தார். குர்னல் பாண்டியா, லிவிங்ஸ்டோன் ஓவர்களில் சிக்ஸர், பவுண்டரி எனப் பறக்கவிட்டார்.

டெல்லி அணி கடைசி 6 ஓவர்களில் வெற்றிக்கு 65 ரன்கள் தேவைப்பட்டது. யஷ் தயால் பந்துவீச்சில் பவுண்டரி, சிக்ஸர் விளாசிய ராகுல் 22 ரன்கள் சேர்த்து பதற்றத்தைக் குறைத்தார். சூயஷ் ஷர்மா பந்துவீச்சில் ஸ்டெப்ஸ் சிக்ஸர், பவுண்டரி என விளாச வெற்றிக்கு அருகே டெல்லி சென்றது.

யஷ் தயால் வீசிய ஓவரில் ராகுல் 2 சிக்ஸர்கள், பவுண்டரி விளாசி வெற்றிக்கு அழைத்துச் சென்றார். ராகுல் முதல் 29 பந்துகளில் 100 ஸ்ட்ரைக் ரேட்டிலும், அடுத்த 24 பந்துகளில் 64 ரன்கள் என 266 ஸ்ட்ரைக் ரேட்டிலும் ஆடினார். கே.எல்.ராகுலால் இப்படியும் ஆட முடியுமா என அனைவரையும் வியக்க வைத்தார்.

ஆர்சிபியின் நிலையற்ற ஆட்டம்

RCB vs DC: வெற்றி நடை போடும் டெல்லி அணி - கே.எல்.ராகுலின் அதிரடிக்கு ஆர்சிபி பணிந்தது ஏன்?

பட மூலாதாரம்,GETTY IMAGES

ஆர்சிபி அணியின் பில் சால்ட், கோலி ஆட்டத்தைத் தொடங்கிய வேகத்தைப் பார்த்தபோது, 250 ரன்களை எட்டிவிடும் எனக் கருதப்பட்டது. ஸ்டார்க் பந்துவீச்சில் சால்ட் சிக்ஸர், பவுண்டரி என 30 ரன்கள் சேர்த்தார். ஏனென்றால் 3 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி ஆர்சிபி 53 ரன்களை தொட்டது, அதில் 3 சிக்ஸர்களும் அடக்கம். ஆனால் அடுத்த 3 ஓவர்களில் ஆர்சிபி அணி 11 ரன்கள் சேர்த்து 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

விப்ராஜ் நிகம் பவர்ப்ளேவில் பந்துவீச வந்தவுடனே ஆர்சிபியின் ரன்ரேட் படுத்துக் கொண்டது. தடுமாறிய தேவ்தத் படிக்கல் ஒரு ரன்னில் முகேஷ் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார். ஆர்சிபி பவர்ப்ளேவில் 64 ரன்கள் சேர்த்தது.

அதன் பிறகு, விராட் கோலி 22 ரன்னில் விப்ராஜ் பந்துவீச்சில் விக்கெட்டை இழக்கவே அடுத்தடுத்து சீரான இடைவெளியில் ஆர்சிபி விக்கெட்டுகள் சரிந்தன. லிவிங்ஸ்டன் மீது பெரிய எதிர்பார்ப்புடன் ஏலத்தில் எடுத்து இதுவரை ஏமாற்றத்தையே அளித்துள்ளார். ஜிதேஷ் சர்மா(3), க்ருனால் பாண்ட்யா(18), கேப்டன் பட்டிதார்(25) என சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் விழுந்தன.

ஆர்சிபி 74 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்திருந்த நிலையில், அடுத்த 50 ரன்களுக்குள் 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. நடுப்பகுதியில் ரிஸ்ட் ஸ்பின்னர்கள் குல்தீப் யாதவ், விப்ராஜ் நிகம் சேர்ந்து ஆர்சிபி பேட்டர்களை திணறவிட்டனர்.

கடைசியில் களமிறங்கிய டிம் டேவிட் அதிரடியால்தான் ஆர்சிபி அணி மூச்சுவிட்டு கௌரமான ஸ்கோரை பெற்றது. அதிரடியாக ஆடிய டேவிட் 4 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகள் என 37 ரன்கள் சேர்த்து, ஆர்சிபியின் ஸ்கோர் 150 ரன்களை கடக்க வைத்தார். டேவிட் 37 ரன்களுடனும், புவனேஷ்வர் ஒரு ரன்னிலும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

ஆர்சிபியின் டாப் ஆர்டர் பேட்டிங் மற்றும் டிம் டேவிட் பேட்டிங்தான் ஆட்டத்தின் ஹைலைட்டாக இருந்தது. மற்றவகையில் நடுவரிசை பேட்டிங்கும், ஆட்டமும் ஏகச் சொதப்பலாக இருந்தது.

களமாடிய ரிஸ்ட் ஸ்பின்னர்கள்

RCB vs DC: வெற்றி நடை போடும் டெல்லி அணி - கே.எல்.ராகுலின் அதிரடிக்கு ஆர்சிபி பணிந்தது ஏன்?

பட மூலாதாரம்,GETTY IMAGES

சின்னசாமி மைதானத்தில் நேற்று ஹீரோக்களாக இருந்தவர்கள் ரிஸ்ட் ஸ்பின்னர்கள் குல்தீப் யாதவ், விப்ராஜ் நிகம் இருவர்தான். 8 ஓவர்கள் வீசிய இருவரும் 35 ரன்கள் கொடுத்து 4 விக்கெட்டுகளை சாய்த்தனர். இதில் 23 டாட் பந்துகளும் அடக்கம்.

நடுப்பகுதி ஓவர்களில் ஆர்சிபி பேட்டிங் வரிசையை ஆட்டம் காண வைத்தனர். பவர்ப்ளே ஓவரில் பந்துவீசிய நிகம் ஓவரை ஆர்சிபி பேட்டர்களால் அடிக்க முடியவில்லை.

டெல்லி அணியிடம் இருக்கும் அளவுக்கு வலுவான சுழற்பந்துவீச்சு ஆர்சிபி அணியிடம் இல்லை. சூயஷ் சர்மா மட்டுமே ஓரளவுக்கு சிறப்பாகப் பந்துவீசுகிறார், லிவிங்ஸ்டோன் வழக்கமான ஆஃப் ஸ்பின்னை வீசினாலே போதுமானது. ஆனால், தேவையில்லாமல் லெக் ஸ்பின்னுக்கு நேற்று முயன்று வாங்கிக் கட்டிக்கொண்டார். டெல்லியின் வெற்றிக்கு கேஎல் ராகுல் ஒரு முக்கியக் காரணமெனில், ரிஸ்ட் ஸ்பின்னர்கள் மற்றொரு ஹீரோவாக ஜொலித்தனர்.

'என் பணியை எளிதாக்கிய ராகுல்'

வெற்றிக்குப் பின் டெல்லி கேபிடல்ஸ் கேப்டன் அக்ஸர் படேல் பேசுகையில், "4வது போட்டியையும் வென்றுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. ஒவ்வொருவரும் நம்பிக்கையுடன் விளையாடினோம். இந்த ஆடுகளத்தில் சுழற்பந்துவீச்சு நன்றாக எடுபட்டது, நன்றாக பவுன்ஸ் ஆனது.

குல்தீப் எங்கள் அணியில் பல ஆண்டுகளாக விளையாடுகிறார், நிலைத்த பந்துவீச்சை வெளிப்படுத்துகிறார். விப்ராஜ் முதல் இரு போட்டிகளில் பதற்றமாக இருந்தார், ஆனால் கடந்த ஆட்டத்தில் அவரின் பந்துவீச்சு நம்பிக்கையளித்தது. ஒவ்வொரு போட்டியிலும் விப்ராஜ் பந்துவீச்சு மெருகேறுகிறது," என்று தெரிவித்தார்.

மேலும், "கேப்டனின் ஆதரவும், நம்பிக்கையுமே அவருக்குப் போதும். கே.எல்.ராகுல் என் பணியை எளிதாக்கிவிட்டார். அழுத்தமான தருணங்களில் சூழலை ராகுல் மாற்றிவிட்டார். நிதானமான ஆட்டத்தில் இருந்து திடீரென ஆக்ரோஷமாக பேட் செய்வது கடினம். ராகுல் முதிர்ச்சியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அதைச் செய்துள்ளார்" எனத் தெரிவித்தார்.

RCB vs DC: வெற்றி நடை போடும் டெல்லி அணி - கே.எல்.ராகுலின் அதிரடிக்கு ஆர்சிபி பணிந்தது ஏன்?

பட மூலாதாரம்,GETTY IMAGES

ஐபிஎல் தொடரின் எதிர்வரும் முக்கிய ஆட்டங்கள்

இன்றைய ஆட்டம்

  • சென்னை சூப்பர் கிங்ஸ் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

  • இடம்: சென்னை

  • நேரம்: இரவு 7.30

சிஎஸ்கேவின் அடுத்த ஆட்டம்

  • சென்னை சூப்பர் கிங்ஸ் vs லக்னெள சூப்பர் ஜெயின்ட்ஸ்

  • நாள் - ஏப்ரல் 14

  • இடம் – லக்னெள

  • நேரம் - இரவு 7.30

மும்பையின் அடுத்த ஆட்டம்

  • மும்பை இந்தியன்ஸ் vs டெல்லி கேபிடல்ஸ்

  • நாள் - ஏப்ரல் 13

  • இடம் – டெல்லி

  • நேரம் - இரவு 7.30 மணி

ஆர்சிபியின் அடுத்த ஆட்டம்

  • ஆர்சிபி vs ராஜஸ்தான் ராயல்ஸ்

  • நாள் - ஏப்ரல் 13

  • இடம் – ஜெய்பூர்

  • நேரம் - மாலை 3.30 மணி

ஆரஞ்சு தொப்பி யாருக்கு?

  • நிகோலஸ் பூரன்(லக்னெள சூப்பர் ஜெயின்ட்ஸ்) - 288 ரன்கள் (5போட்டிகள்)

  • சாய் சுதர்சன் (குஜராத் டைட்டன்ஸ்) - 273 ரன்கள் (5 போட்டிகள்)

  • மிட்ஷெல் மார்ஷ் (லக்னெள சூப்பர் ஜெயின்ட்ஸ்) - 265 ரன்கள் (5 போட்டிகள்)

பர்ப்பிள் தொப்பி யாருக்கு?

  • நூர் அகமது (சிஎஸ்கே) - 11 விக்கெட்டுகள் (5 போட்டிகள்)

  • சாய் கிஷோர் (குஜராத் டைட்டன்ஸ்) - 10 விக்கெட்டுகள் (5 போட்டிகள்)

  • முகமது சிராஜ் (குஜராத் டைட்டன்ஸ்) - 10 விக்கெட்டுகள் (5 போட்டிகள்)

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/ce8205nj4kno

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நடப்பு சீசனில் வேறெந்த அணியும் செய்யாததை செய்த சிஎஸ்கே - சேப்பாக்கத்தின் வரலாற்றுப் பதிவுகள்

ஐபிஎல், சென்னை சூப்பர் கிங்ஸ், தோனி, கொல்கத்தா நைட் ரைடர்ஸ், சேப்பாக்கம் மைதானம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

கட்டுரை தகவல்

  • எழுதியவர், போத்திராஜ்

  • பதவி, பிபிசி தமிழுக்காக

  • 12 ஏப்ரல் 2025, 02:36 GMT

சிஎஸ்கே அணியின் நேற்றைய பேட்டிங் ரசிகர்கள், வர்ணனையாளர்கள் என அனைவரையும் வெறுப்பின் உச்சத்துக்கு கொண்டு சென்றது. ஓர் ஆண்டு இடைவெளிக்குப்பின் தோனி கேப்டன் பொறுப்பை ஏற்பதால் கூடுதல் உற்சாகத்தோடு வந்திருந்த ரசிகர்கள் வெறுப்பின் உச்சத்துக்குச் சென்று சமூக வலைத்தளங்களில் தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தினர்.

சேப்பாக்கத்தில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 போட்டியின் 25-வது லீக் ஆட்டத்தில் சிஎஸ்கே அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி.

முதலில் பேட் செய்த சிஎஸ்கே அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 103 ரன்கள் சேர்த்தது. 104 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய கொல்கத்தா அணி 10.1 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 107 ரன்கள் சேர்த்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.

20 ரன்களுக்குள் 7 விக்கெட்

சிஎஸ்கே அணியில் டேவன் கான்வே(12), திரிபாதி(16), விஜய் சங்கர்(29), துபே(31) ஆகியோர் மட்டுமே இரட்டை இலக்க ரன்கள் சேர்த்தனர். மற்ற அனைத்து பேட்டர்களும் ஒற்றை இலக்க ரன்னில் ஆட்டமிழந்து ரசிகர்களின் பொறுமையை சோதித்தனர்.

59 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்திருந்த சிஎஸ்கே அணி அடுத்த 20 ரன்களுக்குள் 7 விக்கெட்டுகளை இழந்ததன் மூலம் பேட்டிங்கை மறந்தவாறு பேட்டர்கள் ஆடியது போல் தெரிந்தது.

விஜய் சங்கர் களத்துக்கு வந்தவுடனே டக்அவுட்டில் ஆட்டமிழக்க வேண்டியவர் ஆனால் வெங்கடேஷ் கேட்சை நழுவவிட்டதால் தப்பித்தார். விஜய் சங்கர் போராடியும் பெரிய ஸ்கோர் எடுக்க முடியவில்லை. சிஎஸ்கே அணியின் ஒரே பிக்ஹிட்டர் என்று அறியப்படும் ஷிவம் துபே நேற்றைய ஆட்டத்தில் களத்துக்கு வந்து 17 பந்துகளாக ஒரு பவுண்டரிகூட அடிக்கவில்லை. அதன்பின்புதான் முதல் பவுண்டரி, சிக்ஸரை அடித்தார்.

பேட்டிங்கில் ஃபார்மில் இல்லாத வீரர்களான திரிபாதி, விஜய் சங்கர், தீபக் ஹூடா, கான்வே ஆகியோரை அணியில் சேர்த்து தோல்விக்கு மேல் தோல்வியை சிஎஸ்கே சந்தித்து வருகிறது.

ஒட்டுமொத்தத்தில் சிஎஸ்கேயின் பேட்டிங் திறமை, திறன் என்ன என்பதை கொல்கத்தா அணி வெளிப்படுத்தி(எக்ஸ்போஸ்) செய்துவிட்டது. இது சிஎஸ்கே அணிக்கு இன்னமும் ஆபத்தாக அமையப்போகிறது. வரும் ஆட்டங்களில் சிஎஸ்கேயின் பலவீனத்தை மற்ற அணிகள் இன்னும் ஆழமாகப் பயன்படுத்தப் போகின்றன.

வந்தார், சென்றார் தோனி

சிஎஸ்கே அணியில் விக்கெட்டுகள் மளமள சரிந்தநிலையில்கூட தோனி 8-வது விக்கெட்டுக்குதான் களமிறங்கினார். சிஎஸ்கே அணி டாப்ஆர்டர்களை இழந்தவுடனே தோனி களமிறங்கி இருந்தால், ஓரளவுக்கு கவுரமான ஸ்கோரை கொண்டு வந்திருக்லாம். ஆனால், தொடர்ந்து தோனி ஏன் கடைசி வரிசையில் களமிறங்குவது புரியவில்லை என கிரிக்கெட் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

அதுமட்டுமல்லாமல் ஐபிஎல் வரலாற்றில் நரைன் பந்துவீச்சில் தோனி இதுவரை ஒரு பவுண்டரிகூட அடித்தது இல்லை. அதனை உணர்ந்து, கேகேஆர் அணி நரைனையே தோனிக்கு எதிராகப் பந்துவீச வைத்தது.

அதற்கு ஏற்றபடி தோனி கால்காப்பில் வாங்கி ஆட்டமிழந்தார். தோனி கால்காப்பில் ஆட்டமிழந்த விதம் சர்ச்சையானது. தோனி களத்துக்கு வந்த வேகத்தில் 4 பந்துகளில் ஒரு ரன்னுடன் நடையைக் கட்டினார்.

ஒரு பவுண்டரிக்காக காத்திருந்த ரசிகர்கள்

ஐபிஎல், சென்னை சூப்பர் கிங்ஸ், தோனி, கொல்கத்தா நைட் ரைடர்ஸ், சேப்பாக்கம் மைதானம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

சிஎஸ்கே பேட்டர்கள் நேற்று பவுண்டரி அடிக்கும் திறமையை மறந்துவிட்டதுபோல் பேட் செய்தனர். 8வது ஓவருக்குப் பின் சிஎஸ்கே அணி அடுத்த பவுண்டரியை அடிக்க 63 பந்துகளை எடுத்துக்கொண்டது. 18.3 ஓவரில்தான் அடுத்த பவுண்டரியை ஷிவம் துபே அடித்தார். ஐபிஎல் வரலாற்றில் ஒரு பவுண்டரி அடிக்க அதிக பந்துகளை எடுத்துக்கொண்ட 3வது அணியாக சிஎஸ்கே மாறியது.

இம்பாக்ட் ப்ளேயராக களமிறக்கப்பட்ட தீபக் ஹூடா எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தாமல் டக்அவுட்டில் ஆட்டமிழந்தார். ஜடேஜா ரன் ஏதும் சேர்க்காமல் நரைன் பந்துவீச்சில் விக்கெட் கீப்பர் டீகாக்கிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். இந்த ஆட்டத்தில் சிஎஸ்கே தரப்பில் மொத்தமே 8 பவுண்டரிகளும், ஒரு சிக்ஸர் மட்டுமே அடிக்கப்பட்டிருந்தது.

பேட்டிங் கற்றுக்கொடுத்த கொல்கத்தா

ஐபிஎல், சென்னை சூப்பர் கிங்ஸ், தோனி, கொல்கத்தா நைட் ரைடர்ஸ், சேப்பாக்கம் மைதானம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

எளிய இலக்கை துரத்திய கொல்கத்தா அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் சுனில் நரைன், டீகாக் இருவரும் சிஎஸ்கே பந்துவீச்சை நொறுக்கித்தள்ளினர். சிக்ஸர் எப்படி அடிக்க வேண்டும் என்று சிஎஸ்கே பேட்டர்களுக்கு பாடம் எடுப்பது போன்று விளாசித்தள்ளினர். பவர்ப்ளேயில் ஒரு விக்கெட் இழப்புக்கு 71 ரன்கள் சேர்த்து ஏறக்குறைய ஆட்டத்தையே கொல்கத்தா அணி முடித்துவிட்டது. டீகாக் 21 ரன்னில் 3 சிக்ஸர்களுடன் கம்போஜ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

சுனில் நரைன் 5 சிக்ஸர்கள் உள்பட 18 பந்துகளில் 44 ரன்கள் சேர்த்து நூர் அகமது பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார். ரஹானே(20) ரிங்கு சிங்(15) ஆட்டமிழக்காமல் இருந்து அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர்.

சேப்பாக்கத்தில் ஹாட்ரிக் தோல்வி

ஐபிஎல், சென்னை சூப்பர் கிங்ஸ், தோனி, கொல்கத்தா நைட் ரைடர்ஸ், சேப்பாக்கம் மைதானம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

சென்னை சேப்பாக்கம் ஒரு காலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கோட்டையாக கருதப்பட்ட நிலையில் முதல்முறையாக ஒரு சீசனில் சேப்பாக்கம் மைதானத்தில் முதல்முறையாக ஹாட்ரிக் தோல்வியை சிஎஸ்கே அணி சந்தித்துள்ளது.

அத்துடன், ஐபிஎல் தொடரில் முன்னெப்போதும் இல்லாத வகையில் தொடர்ந்து 5 போட்டிகளில் சிஎஸ்கே அணி தோல்வியை சந்தித்துள்ளது.

சிஎஸ்கேவை சிதைத்த சுழற்பந்து வீச்சாளர்கள்

ஐபிஎல், சென்னை சூப்பர் கிங்ஸ், தோனி, கொல்கத்தா நைட் ரைடர்ஸ், சேப்பாக்கம் மைதானம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

சிஎஸ்கே அணியின் பேட்டிங் வரிசையை கொல்கத்தா அணியின் சுனில் நரைன், மொயீன் அலி, வருண் சக்ரவர்த்தி ஆகிய 3 சுழற்பந்துவீ்ச்சாளர்களும் சிதைத்துவிட்டனர். சிஎஸ்கே அணியில் அஸ்வின், ஜடேஜா, நூர் முகமது ஆகியோர் இருந்த போதிலும் எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. பேட்டிங்கில் 44 ரன்கள், 3 விக்கெட்டுகளை வீழ்த்திய சுனில் நரைன் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்

மொயின் அலி, சுனில் நரைன், வருண் ஆகியோர் சேர்ந்து 12 ஓவர்கள் வீசி 55 ரன்கள் கொடுத்து, 6 விக்கெட்டுகளை வீழ்த்தினர், இதில் 34 டாட் பந்துகள் அடங்கும். அதாவது 12 ஓவர்களில் ஏறக்குறைய 6 ஓவர்கள் மெய்டன்கள். இதில் சுனில் நரைன் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி, தனது ஓவரில் ஒரு பவுண்டரிகூட அடிக்க விடவில்லை. ஐபிஎல் தொடரில் 16-வது முறையாக சுனில் நரைன் 4 ஓவர்களை முழுமையாக வீசி எதிரணியை ஒரு பவுண்டரிகூட அடிக்கவிடாமல் கட்டுப்படுத்தியுள்ளார்.

சேப்பாக்கத்தில் குறைந்த ஸ்கோர்

ஐபிஎல், சென்னை சூப்பர் கிங்ஸ், தோனி, கொல்கத்தா நைட் ரைடர்ஸ், சேப்பாக்கம் மைதானம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சிஎஸ்கே அணி எடுத்து மிகக்குறைவான ஸ்கோர் இதுவாகும். ஐபிஎல் தொடரைப் பொருத்தவரை சிஎஸ்கே அணி இதைவிட மோசமாக ஸ்கோர்களை எடுத்துள்ளது.

அந்த வகையில் 103 ரன்கள் என்பது 3வது மோசமான ஸ்கோராகும். இதற்கு முன் 2013ல் மும்பையிடம் 79 ரன்களிலும், 2022ல் மும்பையிடம் 97 ரன்களுக்கும் சிஎஸ்கே ஆல்அவுட் ஆகியது குறிப்பிடத்தக்கது.

சேப்பாக்கம் மைதானத்தில் முதல்முறையாக ஹாட்ரிக் தோல்வியை சிஎஸ்கே சந்தித்துள்ளது, முதல்முறையாகவும் இந்த சீசனிலும் தொடர்ந்து 5வது தோல்வியையும் சிஎஸ்கே அணி எதிர்கொள்கிறது. சேப்பாக்கம் மைதானத்தில் கொல்கத்தா அணியிடம் 3வது முறையாக சிஎஸ்கே தோற்றுள்ளது. கொல்கத்தா அணியும் ஐபிஎல் வரலாற்றில் ஒரு அணிக்கு எதிராக 2வது அதிகமான பந்துகள் வித்தியாசத்தில் வெற்றியைப் பதிவு செய்துள்ளது. இதற்கு முன் ஆர்சிபி அணிக்கு எதிராக 60 பந்துகள் வித்தியாசத்தில் கொல்கத்தா வெற்றி பெற்றிருந்தது.

இந்த ஆட்டத்தில் சிஎஸ்கே அணி 59 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றதுதான் ஐபிஎல் தொடரில் அந்த அணிக்கு மிகப்பெரிய ரன்கள் வித்தியாசத்திலான தோல்வியாகும். இதற்கு முன் மும்பைக்கு எதிராக 2020ம் ஆண்டில் 46 பந்துகள் மீதமிருக்கையில் சிஎஸ்கே தோற்றிருந்தது.

3வது முறை 10 ஓவர்களில் சேஸிங்

ஐபிஎல் வரலாற்றில் எதிரணி அடித்த ஸ்கோரை 10 ஓவர்களுக்குள் சேஸிங் செய்த ஆட்டங்கள் 3வதுமுறையாக நடந்துள்ளன. இதற்கு முன் 2021ம் ஆண்டில் ராஜஸ்தான் அணிக்கு எதிராக 90 ரன்களை 8.2 ஓவர்களில் மும்பை அணி சேஸ் செய்தது. 2024 சீசனில் லக்னெள அணியின் 165 ரன்களை சன்ரைசர்ஸ் அணி 9.4 ஓவர்களில் சேஸ் செய்தது. இப்போது சிஎஸ்கேயின் 103 ரன்களை 10.1 ஓவர்களில் கொல்கத்தா சேஸ் செய்துள்ளது.

கொல்கத்தாவுக்கு சாதகமான மைதானம்

ஐபிஎல், சென்னை சூப்பர் கிங்ஸ், தோனி, கொல்கத்தா நைட் ரைடர்ஸ், சேப்பாக்கம் மைதானம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

சென்னை சேப்பாக்கத்தில் அமைக்கப்பட்ட கருப்பு மண் கொண்ட மைதானம், கொல்கத்தா ஈடன் கார்டன் ஆடுகளத்தில் பயன்படுத்தப்பட்ட அதே மண் கொண்டு உருவாக்கப்பட்டது. இதனால் தங்கள் சொந்த மண்ணில் விளையாடும்போது கிடைக்கும் சவுகரியத்தை கொல்கத்தா அணி நேற்று பெற்றது.

கொல்கத்தா அணியின் வேகப்பந்துவீச்சாளர்கள் வைபவ் அரோரா, ஹர்சித் ராணா இருவரும் மிகத்துல்லியமான லென்த்தில் பந்துவீசி சிஎஸ்கே பேட்டர்களை நடுங்க வைத்தனர்.

சிவப்பு மண் ஆடுகளத்தில் பந்து வேகமாக பேட்டரை நோக்கி வரும் அப்போது அடித்து ஆட வசதியாக இருக்கும். ஆனால், கருப்பு மண் அதாவது களிமண் ஆடுகளத்தில் பந்து சற்று நின்று பேட்டரை நோக்கி மெதுவாக வரும். இத்தகைய சூழலில் பேட்டர் ஆங்கர் ரோல் எடுத்து, சற்று நிதானமாக ஷாட்களை அடிக்க வேண்டும். பந்து வரும்வேகத்தைவிட பேட்டை சுழற்றினால் விக்கெட்டை இழக்க நேரிடும்.

இந்த மைதானத்தின் தன்மையைத்தான் கொல்கத்தா கேப்டன் ரஹானே தெரிந்து கொண்டு அதுகுறித்து எதுவும் பேசவில்லை மைதானத்தை தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்தும் நோக்கில் 2வது ஓவரிலேயே மொயின் அலியை இடதுகை பேட்டர்களுக்கு எதிராகப் பயன்படுத்தினார்.

அதற்கு ஏற்றார்போல் தடுமாறிய கான்வே விக்கெட்டை பறிகொடுத்தார். அடுத்த ஓவரில் ரச்சின் ரவீந்திரா காலியானார். பவர்ப்ளே முடிவில் சிஎஸ்கே 31 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்திருந்தது.

ஐபிஎல், சென்னை சூப்பர் கிங்ஸ், தோனி, கொல்கத்தா நைட் ரைடர்ஸ், சேப்பாக்கம் மைதானம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

அஸ்வின், ஜடேஜாவுக்கு என்ன ஆச்சு?

ஐபிஎல், சென்னை சூப்பர் கிங்ஸ், தோனி, கொல்கத்தா நைட் ரைடர்ஸ், சேப்பாக்கம் மைதானம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

சிஎஸ்கே அணிக்கு நீண்ட இடைவெளிக்குப்பின் வந்துள்ள ரவிச்சந்திரன் அஸ்வின் மீது ரசிகர்களுக்கும், அணி நிர்வாகத்துக்கும் பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், முதல் போட்டியைத் தவிர்த்து அதன்பின் 5 போட்டிகளாக அஸ்வின் தனது பந்துவீச்சில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.

இந்த ஆட்டத்தி்கூடஅஸ்வின் ஓவருக்கு 10 ரன்ரேட்டில் வீசினார். 2012 முதல் 2015வரை அஸ்வின், ஜடேஜாவும் சேர்ந்து தலா 55 விக்கெட்டுகளை சிஎஸ்கே அணிக்காக எடுத்தனர். சேப்பாக்கத்தை சிஎஸ்கேவின் கோட்டையாக வைத்திருந்தனர். இப்போது இருவரும் மீண்டும் இணைந்தபோதிலும் எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை.

இந்த சீசனில் அஸ்வின் இதுவரை ஓவருக்கு 10 ரன்கள் சராசரியாக கொடுத்திருந்தநிலையில் ஜடேஜா 8 ரன்களை வழங்கியுள்ளார். இதுவரை அஸ்வின் 5 விக்கெட்டுகள் மட்டுமே வீழ்த்தியுள்ளார்.

பவர்ப்ளே ஸ்பெஷலிஸ்ட் என்று அறியப்பட்ட அஸ்வின் இந்த சீசனில் பவர் பிளே ஓவர்களில் 30 பந்துகள் வீசி 78 ரன்களை வாரி வழங்கியுள்ளார். 2012 முதல் 2015 வரை அஸ்வினின் பவர்ப்ளே எக்னாமி ரேட் 6.25 ஆக இருந்தநிலையில் தற்போது 15.60 அதிகரித்துள்ளது.

"யாருடனும் ஒப்பிட விரும்பவில்லை"

தோல்விக்குப்பின் சிஎஸ்கே கேப்டன் தோனி கூறுகையில் " சில போட்டிகள் நாங்கள் விரும்பியபடிஇல்லை. அணியின் தோல்வியை ஆழமாக ஆலோசிக்க, ஆய்வு செய்ய வேண்டும். சவால்கள் இருக்கின்றன அதை சமாளிப்பது அவசியம். இன்று எதிர்பார்த்த ரன்களை நாங்கள் சேர்க்கவில்லை.

பந்து களத்தில் நின்று வந்தது, 2வது இன்னிங்ஸிலும் அப்படித்தான் இருந்தது. பார்ட்னர்ஷிப்பும் எங்களுக்கு அமையவில்லை. எங்கள் ஆட்டத்தை மற்ற அணியுடன் ஒப்பிட்டு பார்க்கவிரும்பவில்லை. எங்களிடமும் தரமான தொடக்க வீரர்கள் இருக்கிறார்கள், ஆனால், அடிக்கடி ஸ்கோர் போர்டைப் பார்த்து வெறுப்படையக்கூடாது.

சில பவுண்டரிகள் அடித்தால் ஸ்கோர் நகர்ந்துவிடும். நடுப்பகுதியில் அதிக விக்கெட்டுகளை இழந்தோம். இந்த தொய்வு ஒருபோதும் வரக்கூடாது" எனத் தெரிவித்தார்.

நடப்பு சீசனில் வேறெந்த அணியும் செய்யாததைச் செய்த சிஎஸ்கே

சிஎஸ்கே அணி படுதோல்வியைச் சந்தித்தாலும், ஒரு ஆறுதலான அம்சம் நடந்துள்ளது. அதுஎன்னவென்றால், இந்த ஐபிஎல் சீசனில் ஒரே போட்டியில் ஒரு அணியால் 30,500 மரங்களை நடுவதற்கு உதவி செய்ததில்.

சிஎஸ்கே அணி நேற்று 61 டாட் பந்துகளை சந்தித்து, ஒவ்வொரு டாட் பந்துக்கும் 500 மரங்கள் வீதம் 30,500 மரங்களை நடுவதற்கு உதவி செய்தது. இந்த சீசனில் இதுவரை எந்த அணியும் இதுபோல் டாட்பந்துகளை ஒரு போட்டியில் விட்டதில்லை.

இன்றைய ஆட்டங்கள்

முதல் ஆட்டம்

  • லக்னெள சூப்பர்ஜெயின்ட்ஸ் vs குஜராத் டைட்டன்ஸ்

  • இடம்: லக்னெள

  • நேரம்: மாலை 3.30

இரண்டாவது ஆட்டம்

  • சன்ரைசர்ஸ் vs பஞ்சாப் கிங்ஸ்

  • இடம்: ஹைதராபாத்

  • நேரம்: இரவு 7.30

சிஎஸ்கேவின் அடுத்த ஆட்டம்

  • சென்னை சூப்பர் கிங்ஸ் vs லக்னெள சூப்பர் ஜெயின்ட்ஸ்

  • நாள் - ஏப்ரல் 14

  • நேரம்- இரவு 7.30

  • இடம் – லக்னெள

மும்பையின் அடுத்த ஆட்டம்

  • மும்பை இந்தியன்ஸ் vs டெல்லி கேபிடல்ஸ்

  • நாள் - ஏப்ரல் 13

  • நேரம்- இரவு 7.30 மணி

  • இடம் – டெல்லி

ஆர்சிபியின் அடுத்த ஆட்டம்

ஆர்சிபி vs ராஜஸ்தான் ராயல்ஸ்

நாள் - ஏப்ரல் 13

இடம் – ஜெய்பூர்

நேரம்- மாலை 3.30 மணி

ஐபிஎல், சென்னை சூப்பர் கிங்ஸ், தோனி, கொல்கத்தா நைட் ரைடர்ஸ், சேப்பாக்கம் மைதானம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

ஆரஞ்சு தொப்பி யாருக்கு?

  • நிகோலஸ் பூரன்(லக்னெள சூப்பர் ஜெயின்ட்ஸ்)-288 ரன்கள்(5போட்டிகள்)

  • சாய் சுதர்சன்(குஜராத் டைட்டன்ஸ்)-273 ரன்கள்(5 போட்டிகள்)

  • மிட்ஷெல் மார்ஷ்(லக்னெள சூப்பர் ஜெயின்ட்ஸ்) 265 ரன்கள்(5 போட்டிகள்)

நீலத் தொப்பி யாருக்கு?

  • நூர் அகமது(சிஎஸ்கே)12 விக்கெட்டுகள்(6 போட்டிகள்)

  • சாய் கிஷோர்(குஜராத் டைட்டன்ஸ்) 10 விக்கெட்டுகள்(5 போட்டிகள்)

  • முகமது சிராஜ்(குஜராத் டைட்டன்ஸ்) 10 விக்கெட்டுகள்(5 போட்டிகள்)

இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/c1jx5yz1nn3o

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சாதனைமேல் சாதனை: அபிஷேக் சிக்சர் மழையால் 246 ரன் இலக்கை அநாயசமாக எட்டிப் பிடித்த சன்ரைசர்ஸ்

SRH vs PBKS, அபிஷேக் சர்மா

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,சதம் அடித்த மகிழ்ச்சியில் அபிஷேக் சர்மா

2 மணி நேரங்களுக்கு முன்னர்

ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் அணி தனது தொடர் தோல்விகளுக்கு முடிவு கட்டியுள்ளது. 4 போட்டிகளில் அடுத்தடுத்து தோற்றிருந்த அந்த அணி, நேற்றைய ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணி நிர்ணயித்த 246 ரன் இலக்கை எளிதில் எட்டிப் பிடித்து ரசிகர்களை வியக்க வைத்தது.

அந்த அணியின் தொடக்க ஜோடியான அபிஷேக் சர்மா - டிராவிஸ் ஹெட், இந்த தொடரில் முதன் முறையாக மிரட்டல் ஆட்டத்தை வெளிப்படுத்தியது. குறிப்பாக, அபிஷேக் சர்மா சிக்சர் மழை பொழிந்து சாதனை சதத்துடன் அந்த அணியை எளிதாக வெற்றி பெறவும் வைத்தார்.

இந்த வெற்றியின் மூலம் சன்ரைசர்ஸ் அணி புள்ளிப் பட்டியலிலும் ஏற்றம் கண்டுள்ளது. அதிரடியால் மிரட்டிய அபிஷேக் சர்மா பல சாதனைகளையும் படைத்துள்ளார்.

பஞ்சாப் கிங்ஸ் அதிரடி

ஐதராபாத்தில் ராஜிவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தது. பேட்டிங்கிற்கு சொர்க்கபுரியாக இருந்த அந்த மைதானத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணி தொடக்கம் முதலே அதிரடியில் மிரட்டியது. முந்தைய போட்டியில் வெறும் 39 பந்துகளில் சதம் அடித்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை தோல்வியில் தள்ளிய இளம் வீரர் பிரியான்ஷ் ஆர்யா இந்த போட்டியிலும் தொடக்கம் முதலே மிரட்டினார்.

முகமது ஷமி வீசிய முதல் ஓவரின் கடைசி 3 பந்துகளையும் பிரப்சிம்ரன் பவுண்டரிக்கு விரட்ட, அவரது அடுத்த ஓவரின் முதல் பந்தை கிரீசுக்கு வெளியே வந்து சிக்சருக்கு விளாசினார் ஆர்யா. ஷமியின் அடுத்த பந்தில் அவர் பவுண்டரி அடித்தார். இருவரது அதிரடியால் பஞ்சாப் கிங்ஸ் அணி மூன்றாவது ஓவரிலேயே 50 ரன்களைக் கடந்தது.

ஆனால் ஆர்யாவின் வாண வேடிக்கை நீண்ட நேரம் நிலைக்கவில்லை. சன்ரைசர்ஸ் அணியில் வழக்கமாக இறுதிக்கட்ட ஓவர்களை வீசும் ஹர்ஷல் படேல் நேற்றைய ஆட்டத்தின் போக்கால் தொடக்கத்திலேயே கொண்டு வரப்பட்டார். அதற்கு சன்ரைசர்ஸ் அணிக்க பலனும் கிடைத்தது. 13 பந்துகளில் 4 சிக்சர், 2 பவுண்டரிகளுடன் 36 ரன்களை விளாசியிருந்த ஆர்யா, ஹர்ஷல் படேல் பந்தில் நிதிஷ் குமாரிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த பஞ்சாப் கிங்ஸ் அணி கேப்டன் ஸ்ரேயாசும் தொடக்கம் முதலே பட்டாசாய் வெடித்தார்.

SRH vs PBKS, அபிஷேக் சர்மா

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,பிரப்சிம்ரன்

ஸ்ரேயாஸ் விளாசல்

பஞ்சாப் கிங்ஸ் அணி தனக்கு கிடைத்த சிறப்பான தொடக்கத்தை நன்றாக பயன்படுத்திக் கொண்டது. ஆர்யா அவுட்டான பிறகு ஜோடி சேர்ந்த பிரப்சிம்ரனும் கேப்டன் ஸ்ரேயாசும் ரன்ரேட்டை அதிகபட்ச நிலையில் அப்படியே பராமரித்தனர். இருவரது பேட்டில் இருந்தும் பந்துகள் சிக்சருக்கும் பவுண்டரிக்கும் சென்ற வண்ணம் இருந்தன.

ஸ்ரேயாஸ் தனது ஐபிஎல் வரலாற்றில் மிக வேகமான அரைசதத்தை எட்டினார். 22 பந்துகளை எதிர்கொண்ட அவர் அரைசதம் கண்டார். மறுபுறம் சன்ரைசர்ஸ் சார்பில் ஐபிஎல் அறிமுகம் கண்ட ஈஷான் மலிங்கா தனது முதல் ஓவரிலேயே பிரப்சிம்ரனை ஆட்டமிழக்கச் செய்தார். பிரப்சிம்ரன் 23 பந்துகளில் 1 சிக்சர், 7 பவுண்டரிகளுடன் 42 ரன்களை சேர்த்தார்.

SRH vs PBKS, அபிஷேக் சர்மா

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,ஸ்ரேயாஸ்

ஹர்ஷல் படேல் இம்பாக்ட்

சன்ரைசர்ஸ் அணிக்கு தனது முதல் ஓவரிலேயே விக்கெட்டை வீழ்த்திக் கொடுத்த ஹர்ஷல் படேல் இறுதிக்கட்ட ஓவர்களிலும் தாக்கம் செலுத்தினார். ஒரு கட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணி 250 ரன்களை எளிதாக தாண்டிவிடும் என்று கணிக்கப்பட்ட நிலையில், அதற்கு அணை போட்டவர் ஹர்ஷல் படேல்தான். ஆட்டத்தின் 15-வது ஓவராக தனது மூன்றாவது ஓவரை வீச வந்த ஹர்ஷல் படேல் அதிரடியில் எதிரணிகளை மிரட்டக் கூடிய ஷஷாங்க் சிங் விக்கெட்டை வீழ்த்தினார்.

அதேபோல், 18-வது ஓவரில் பஞ்சாப் கேப்டன் ஸ்ரேயாஸ் மற்றும் தடாலடி வீரர் மேக்ஸ்வெல் ஆகிய இருவரையும் ஹர்ஷல் பெவிலியனுக்கு அனுப்பினார். ஸ்ரேயாஸ் 36 பந்துகளில் 6 சிக்சர், 6 பவுண்டரிகளுடன் 82 ரன் எடுத்தார். அந்த ஓவரில் வெறும் 5 ரன்களை மட்டுமே அவர் விட்டுக் கொடுத்தார்.

முகமது ஷமி வீசிய கடைசி ஓவரில் ஸ்டாய்னிஸ் அடுத்தடுத்து 4 சிக்சர்களை பறக்கவிட்டு அவரது அணி ரசிகர்களை குஷிப்படுத்தினார். முடிவில் பஞ்சாப் கிங்ஸ் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 246 ரன்களை குவித்தது. ஹர்ஷல் படேல் 4 ஓவர்களில் 42 ரன்களை விட்டுக் கொடுத்து 4 முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

SRH vs PBKS, அபிஷேக் சர்மா

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,ஹர்ஷல் படேல் (பவுலர்)

சன்ரைசர்ஸ் பதிலடி

246 ரன் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் சன்ரைசர்ஸ் அணி களம் புகுந்தது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான டிராவிஸ் ஹெட் - அபிஷேக் சர்மா ஜோடி இந்த சீசனில் முதன் முறையாக சிறப்பான தொடக்கம் தந்தது. யான்சென் வீசிய இரண்டாவது ஓவரில் அபிஷேக் சர்மா ஹாட்ரிக் பவுண்டரிகளை விளாசி வாண வேடிக்கையை தொடங்கி வைத்தார்.

அர்ஷ்தீப் வீசிய அடுத்த ஓவரில் டிராவிஸ் ஹெட் ஹாட்ரிக் பவுண்டரி விளாசி அசத்தினார். நடப்பு சீசனில் முந்தைய போட்டிகளில் ஜொலிக்காத அபிஷேக் அதற்கெல்லாம் சேர்த்து இந்தப் போட்டியில் அதிரடியில் மிரட்டினார். அவர் 2 முறை அவுட்டாகும் வாய்ப்பில் இருந்து தப்பவும் செய்தார்.

28 ரன்களை எடுத்திருந்த போது டீப் பாயிண்டில் அவர் கொடுத்த கேட்ச் வாய்ப்பை யாஷ் தாகூர் தவறவிட்டார். அதேபோல், 57 ரன்கள் எடுத்திருந்த போது, சாஹல் வீசிய ஓவரில் அபிஷேக் கொடுத்த கேட்ச் வாய்ப்பை சாஹல் தவறவிட்டார். இரு கண்டங்களில் இருந்தும் தப்பிய அபிஷேக் தனது அதிரடியை ஆட்டத்தின் எந்தவொரு கட்டத்தில் தொய்வடைய விடவே இல்லை.

SRH vs PBKS, அபிஷேக் சர்மா

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,டிராவிஸ் ஹெட்

டிராவிஸ் ஹெட் - மேக்ஸ்வெல் வாக்குவாதம்

19 பந்துகளில் 3 சிக்சர், 7 பவுண்டரிகளுடன் அரைசதம் கடந்து அவர் அசத்தினார். அபிஷேக் - ஹெட் அதிரடியால் சன்ரைசர்ஸ் அணி 7.3 ஓவரிலயே சதத்தை எட்டிவிட்டது. டிராவிட் ஹெட் 31 பந்துகளில் அரைசதம் கண்டார். அவர் மேக்ஸ்வெல் ஓவரில் அடுத்தடுத்து 2 சிக்சர்களை பறக்கவிட்டார். அப்போது மேக்ஸ்வெல் ஏதோ சொல்ல இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ஸ்டாய்னிஸ் வந்து இருவரையும் சமாதானப்படுத்தினார்.

சேஸிங்கில் 9-வது ஓவரிலேயே சன்ரைசர்ஸ் அணி வெற்றிக்குத் தேவையான ரன்னில் பாதியை எடுத்துவிட்டது. சன்ரைசர்ஸ் அணி 171 ரன்களை எட்டிய போது ஒருவழியாக முதல் விக்கெட்டை பஞ்சாப் கிங்ஸ் அணி வீழ்த்தியது. 13-வது ஓவரில் சாஹல் வீசிய இரண்டாவது பந்தில் டிராவிஸ் ஹெட் அடித்த பந்தை மேக்ஸ்வெல் கேட்ச் செய்தார். எனினும், இதனை பெரிய அளவில் கொண்டாடும் மனநிலையில் பஞ்சாப் கிங்ஸ் அணி இருக்கவில்லை. காரணம், முதல் விக்கெட்டை பஞ்சாப் கிங்ஸ் வீழ்த்திய போது சன்ரைசர்ஸ் அணி சாத்தியமில்லாததாக கருதப்பட்ட வெற்றியை சாத்தியமான ஒன்றாக ஆக்கியிருந்தது. டிராவிஸ் ஹெட் 37 பந்துகளில் 66 ரன்களை சேர்த்தார்.

SRH vs PBKS, அபிஷேக் சர்மா

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,அபிஷேக் சர்மா மற்றும் டிராவிஸ் ஹெட்

அபிஷேக் சர்மா சதம்

டிராவிஸ் ஹெட் அவுட்டானதும் அடுத்த 4 பந்துகளில் அபிஷேக் சர்மா சதம் அடித்தார். ஐபிஎல்லில் அவரது முதல் சதம் இதுவாகும். தொடக்கம் முதலே வாண வேடிக்கை நிகழ்த்திய அபிஷேக் 40 பந்துகளில் தனது முதல் சதத்தை அதுவும், சேஸிங்கில் அடித்தார். சதம் அடித்ததும் தனது ஸ்டைலில் கொண்டாடினார். அத்துடன், 'இது ஆரஞ்சுப் படைக்கானது' என்று ஒரு பேப்பரை பெவிலியனை நோக்கி காட்டினார்.

இந்த சீசனில் முந்தைய போட்டிகளில் ஒரு சிக்ஸர் கூட அடிக்காத அபிஷேக் இந்தப் போட்டியில் சிக்ஸர் மழை பொழிந்தார். வெறும் 55 பந்துகளை மட்டுமே எதிர்கொண்ட அவர் 10 சிக்சர், 14 பவுண்டரிகளை விளாசி, 141 ரன்களில் ஆட்டமிழந்தார். அந்த கட்டத்தில் ஆட்டம் கிட்டத்தட்ட முடியும் தருவாயில் இருந்தது.

கிளாசனும், இஷான் கிஷனும் எளிதான வெற்றியை விரைவிலேயே தங்களது அணிக்கு பெற்றுக் கொடுத்தனர். பஞ்சாப் கிங்ஸ் அணி நிர்ணயித்த இமாலய இலக்கை 9 பந்துகள் மீதமிருக்கும் நிலையிலேயே சன்ரைசர்ஸ் அணி எட்டியது. சன்ரைசர்ஸ் வெற்றிக்கு வழிவகுத்த அபிஷேக் சர்மா ஆட்டநாயகன் விருது பெற்றார்.

SRH vs PBKS, அபிஷேக் சர்மா

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,அபிஷேக் சர்மா

சாதனைமேல் சாதனை

  • அபிஷேக் சர்மா அடித்த 141 ரன்களே ஐபிஎல் வரலாற்றில் இந்தியர் ஒருவர் சேர்த்த அதிகபட்ச ரன்னாகும். இதற்கு முன் லோகேஷ் ராகுல் அடித்த 132 ரன்களே ஐபிஎல்லில் இந்தியர் ஒருவரின் அதிகபட்ச ரன்னாக இருந்தது.

  • அபிஷேக் சர்மா சேர்த்த 141 ரன்களே ஐபிஎல் வரலாற்றில் சன்ரைசர்ஸ் அணி பேட்டர் ஒருவர் எடுத்த அதிகபட்ச ரன்களாகும்.

  • அபிஷேக் சர்மா மூன்றாவது முறையாக 20 பந்துகளுக்குள் அரைசதம் கண்டுள்ளார். அந்த வரிசையில், நிகோலஸ் பூரனுக்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்தில் அவர் இருக்கிறார்.

  • இந்த ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணி மூன்றாவது ஓவரிலேயே 50 ரன்களை கடந்தது. அந்த வகையில், ஆர்சிபி அணியுடன் இந்த சாதனையை அந்த அணி பகிர்ந்து கொண்டுள்ளது.

SRH vs PBKS, அபிஷேக் சர்மா

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,அபிஷேக் சர்மா

இன்றைய ஆட்டங்கள்

முதல் ஆட்டம்

  • ராஜஸ்தான் ராயல்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு

  • இடம்: ஜெய்ப்பூர்

  • நேரம்: மாலை 3.30

இரண்டாவது ஆட்டம்

  • டெல்லி கேபிட்டல்ஸ் vs மும்பை இந்தியன்ஸ்

  • இடம்: டெல்லி

  • நேரம்: இரவு 7.30

SRH vs PBKS, அபிஷேக் சர்மா

பட மூலாதாரம்,GETTY IMAGES

சிஎஸ்கேவின் அடுத்த ஆட்டம்

  • சென்னை சூப்பர் கிங்ஸ் vs லக்னெள சூப்பர் ஜெயின்ட்ஸ்

  • நாள் - ஏப்ரல் 14

  • நேரம்- இரவு 7.30

  • இடம் – லக்னெள

ஆரஞ்சு தொப்பி யாருக்கு?

  • நிகோலஸ் பூரன்(லக்னெள சூப்பர் ஜெயின்ட்ஸ்)- 349 ரன்கள் (6 போட்டிகள்)

  • சாய் சுதர்சன்(குஜராத் டைட்டன்ஸ்)-329 ரன்கள்(6 போட்டிகள்)

  • மிட்ஷெல் மார்ஷ்(லக்னெள சூப்பர் ஜெயின்ட்ஸ்) 265 ரன்கள்(5 போட்டிகள்)

இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/c5y477r00g7o

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

20 ஓவர் போட்டிகளில் கோலியின் 100 வது அரை சதம் - வெற்றிப்பாதைக்கு திரும்பிய பெங்களூரு

பெங்களூருவை மீண்டும் வெற்றிப் பாதைக்கு திரும்பிய கோலி

பட மூலாதாரம்,GETTY IMAGES

20 நிமிடங்களுக்கு முன்னர்

ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுக்கிடையிலான இன்றைய ஐபிஎல் போட்டியில், பெங்களூரு அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

ஜெய்ப்பூரில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனால் முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி, 4 விக்கெட்டுகளை இழந்து 173 ரன்களை குவித்தது.

தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கிய சஞ்சு சாம்சன் - யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஜோடி, முதல் நான்கு ஓவர்களில் ஓவருக்கு ஒரு பவுண்டரி என நிதானமாக ஆட்டத்தை தொடங்கினர். ஐந்தாம் ஓவரில் ஒரு சிக்ஸும் அடுத்த பந்தில் ஒரு ஃபோரும் அடித்த ஜெய்ஸ்வால், பின்னர் நிதானத்தை கடைபிடித்தார். மறுபக்கம் மெதுவாக ஆடிய சஞ்சு சாம்சன், 19 பந்துகளில் 15 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

அடுத்து களம் இறங்கிய ரியான் பராக், ஜெய்ஸ்வாலுடன் சேர்ந்து 14வது ஓவர் வரை ஓவருக்கு ஒரு பவுண்டரி என தாக்கமின்றி ஆடினார். அதே ஓவரிலேயே ரியான் பராக் தனது விக்கெட்டையும் இழந்தார்.

அடுத்த ஓவர்களில் ஜெய்ஸ்வால் தன்னுடைய அதிரடியை ஆரம்பித்து, ஹேசில்வுட் வீசிய பந்தில் கேட்ச் கொடுத்து 75 ரன்களில் வெளியேறினார். அப்போது 16 ஓவர்களில் 3 விக்கெட்டிற்கு 126 ரன்கள் எடுத்திருந்தது ராஜஸ்தான். அப்போதும் துருவ் ஜுரெல் அதிரடியாக ஆடவில்லை என்றாலும், மற்ற ஆட்டக்காரர்களுக்கு ஸ்டிரைக் மாற்றி முக்கிய பங்கு வகித்தார்.

ரன் வேகம் தேவைப்படும் நேரத்தில் ஹெட்மெயர் களத்தில் வந்து, துருவ் ஜுரெலுடன் சேர்ந்து ரன்களை விரைவாக குவிக்க முயன்றார். 17வது ஓவரில் சிக்ஸ் அடித்த துருவ், 19வது ஓவரில் ஒரு சிக்ஸும் ஒரு ஃபோரும் அடித்து கடைசி கட்டத்தில் அதிரடியை வெளிப்படுத்தினார். இரண்டு சிக்ஸும், இரண்டு ஃபோரும் அடித்து, 35 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இன்பேக்ட் பிளேயராக களத்தில் இறங்கிய ஹெட்மெயர் , தனது முதல் பந்திலேயே ஃபோர் அடித்து அசத்தினார்.

பெங்களூரு பந்துவீச்சாளர்களில் புவனேஷ்வர் குமார், யாஷ் தயால், ஹேசில்வுட், க்ருணால் பாண்ட்யா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர்.

பெங்களூருவை மீண்டும் வெற்றிப் பாதைக்கு திருப்பிய கோலி

பட மூலாதாரம்,GETTY IMAGES

அதிரடியுடன் தொடங்கிய பெங்களூரு

174 ரன்கள் என்ற இலக்குடன் களம் இறங்கிய பெங்களூரு அணிக்கு, தொடக்க ஆட்டக்காரர்களான பில் சால்ட் மற்றும் விராட் கோலி ஜோடி மிகச் சிறப்பான தொடக்கத்தை வழங்கினர்.

ஜோப்ரா ஆர்ச்சர் வீசிய முதல் ஓவரின் முதல் பந்திலேயே ஃபோர் அடித்த பில் சால்ட், நான்காவது பந்தில் சிக்ஸர் அடித்தார். பின்னர் ஆர்ச்சரின் மூன்றாவது ஓவரிலும் ஒரு ஃபோர் மற்றும் சிக்ஸர் அடித்து தனது அதிரடியை தொடர்ந்தார். மறுபக்கம் ஓவருக்கு ஒரு பவுண்டரி வீதமாக ரன்கள் சேர்க்கும் பணியை கோலி நிதானமாக செய்தார்.

ஐந்தாவது மற்றும் ஆறாவது ஓவரிலும் பில் சால்ட் தனது அதிரடியை காட்டினார். ஃபோர் மற்றும் சிக்ஸரை தொடர்ச்சியாக விளாசினார். இந்த ஜோடியை பிரிக்க நினைத்த ராஜஸ்தான் அணியின் பந்துவீச்சாளர்கள் தொடர்ந்தும் தோல்வியைச் சந்தித்தனர்.

ஒன்பதாவது ஓவரில் கார்த்திகேய சிங் பந்துவீச்சில், பில் சால்ட் தனது விக்கெட்டை இழந்தார். அவர் 33 பந்துகளில் 65 ரன்கள் குவித்தார். அவரது கேட்ச் யஷஸ்வி ஜெய்ஸ்வால் கையில் பட்டது.

அடுத்து களம் இறங்கிய தேவ் தத் படிக்கல், பத்தாவது ஓவரில் ஒரு பவுண்டரி அடித்தார். ஆனால் 11வது ஓவரில் எந்தவொரு பவுண்டரியும் எடுக்கவில்லை.

இந்நிலையில் விராட் கோலி தனது அதிரடியை தொடங்கி ராஜஸ்தான் அணிக்கு மீண்டும் அச்சத்தை ஏற்படுத்தத் தொடங்கினார். சிக்ஸர், ஃபோர் என அதிரடியாக விளாசிய அவரை கட்டுப்படுத்த ராஜஸ்தான் பந்துவீச்சாளர்கள் முடியாமல் தவித்தனர்.

ஜோப்ரா ஆர்ச்சர், ஹசரங்கா, தீக்ஷனா என பல மாற்றங்களைச் செய்தும், கேப்டன் சாம்சனுக்கு எந்தவொரு பயனும் கிடைக்கவில்லை. கோலியுடன் தேவ் தத் படிக்கலும் அதிரடியை தொடர்ந்து 17.3 ஓவர்களில் 175 ரன்கள் எடுத்து பெங்களூரு அபார வெற்றி பெற்றது.

ராஜஸ்தான் பந்துவீச்சாளர்கள் இந்த போட்டியில் ஒரே ஒரு விக்கெட்டை மட்டுமே வீழ்த்த முடிந்தது.

இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்த விராட் கோலி 62 ரன்கள் மற்றும் தேவ் தத் படிக்கல் 40 ரன்கள் எடுத்தனர்.

பெங்களூரு அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச்சென்ற கோலியின் இந்த அரைச்சதம், டி20 கிரிக்கெட்டில் அவர் அடித்த 100 வது அரைச்சதமாகும்.

இந்த வெற்றியின் மூலம், பெங்களூரு அணி புள்ளிப் பட்டியலில் மூன்றாம் இடத்திற்கு முன்னேறியுள்ளது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/cy5rw2ydwe7o

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தோல்வியின் பிடியில் இருந்த மும்பையை காப்பாற்றிய அபூர்வ நிகழ்வு - அந்த 3 பந்துகளில் என்ன நடந்தது?

MI vs DC, ஹாட்ரிக் ரன்அவுட், கருண் நாயர்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,குல்தீப் யாதவ் ரன்அவுட் ஆன காட்சி

கட்டுரை தகவல்

  • எழுதியவர், க.போத்திராஜ்

  • பதவி, பிபிசி தமிழுக்காக

  • 4 மணி நேரங்களுக்கு முன்னர்

டெல்லியில் நேற்று (ஏப்ரல் 13) நடந்த ஐபிஎல் டி20 போட்டியின் 29வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியை 12 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது மும்பை இந்தியன்ஸ் அணி.

முதலில் பேட் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி 5 விக்கெட் இழப்புக்கு 205 ரன்கள் சேர்த்தது. 206 ரன்கள் சேர்த்தால் வெற்றி என்னும் இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணி 19 ஓவர்களில் 193 ரன்களுக்கு ஆட்டமிழந்து 12 ரன்களில் தோற்றது.

மும்பை அணியின் தோல்வி நிச்சயமாகிவிட்டதாக ரசிகர்கள் கருதிய போதுதான் அந்த அபூர்வ நிகழ்வு நடந்தது. நேரிலும், நேரலையிலும் ஆட்டத்தை பார்த்துக் கொண்டிருந்த ரசிகர்கள் மற்றும் கிரிக்கெட் நிபுணர்கள் கணிப்புக்கு மாறாக, மூன்றே பந்துகளில் டெல்லியிடம் இருந்து வெற்றியை மும்பை அணி பறித்தது.

ரோஹித் மீண்டும் ஏமாற்றம், கைகொடுத்த திலக் வர்மா

மும்பை அணிக்கு 5வது போட்டியிலும் ரோஹித் சர்மா(18) நல்ல தொடக்கத்தை இந்த ஆட்டத்திலும் வழங்கவில்லை. பவர்ப்ளேயில் மும்பை அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 59 ரன்கள் சேர்த்தது. 2வது விக்கெட்டுக்கு ரிக்கெல்டன்(41), சூர்யகுமார்(40) ஆகியோர் 38 ரன்கள் சேர்த்தனர். 3வது விக்கெட்டுக்கு சூர்யகுமார், திலக் வர்மா ஜோடி 60 ரன்கள் சேர்தது நல்ல பார்ட்னர்ஷிப் அமைந்தது.

ஹர்திக் பாண்டியா ஒரு ரன் மட்டுமே எடுத்தார். 6 பந்துகள் இடைவெளியில் ஹர்திக், சூர்யகுமாரின் விக்கெட்டுகள் போனதால் மும்பை சற்று தடுமாறியது நமன்திர் 38 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.

மும்பை அணியில் திலக் வர்மா அதிகபட்சமாக 59 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். திலக் வர்மா, நமன் திர் ஜோடி கடைசி நேரத்தில் 33 பந்துகளில் 60 ரன்கள் சேர்த்து ஸ்கோர் 200 ரன்களைக் கடக்க உதவினர்.

திலக் வர்மாவைப் பொருத்தவரை இதுவரை மும்பை அணிக்காக ஐபிஎல் தொடரில் 5 அரைசதங்களை விளாசியிருந்தார் ஆனால் ஒருமுறைகூட மும்பை அணி வென்றதில்லை. இந்த முறைதான் திலக் வர்மா அரைசதம் அடித்து மும்பை அணி வென்றுள்ளது.

டெல்லி அணியின் ரி்ஸ்ட் ஸ்பின்னர்கள் குல்தீப், விப்ராஜ் நிகம் 8 ஓவர்கள் வீசி 64 ரன்கள் கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

MI vs DC, ஹாட்ரிக் ரன்அவுட், கருண் நாயர்

பட மூலாதாரம்,GETTY IMAGES

7ஆண்டுகளுக்குப் பின் அரைசதம்

டெல்லி கேபிடல்ஸ் அணிக்காக களமிறங்கிய கருண் நாயர், 3 ஆண்டுகளுக்குப்பின் ஐபிஎல் தொடரில் நேற்று ஆடினார். ஏறக்குறைய 7ஆண்டுகளுக்குப்பின் கருண் நாயர் நேற்று அரைசதம் அடித்தார்.

அதிரடி ஆட்டம் ஆடிய கருண் நாயர் 22 பந்துகளில் அரைசதம் அடித்து 40 பந்துகளில் 5 சிக்ஸர்கள், 12 பவுண்டரிகள் என 89 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார்.

உள்நாட்டுப் போட்டிகளில் சிறப்பாக ஆடி அசுரத்தனமான ஃபார்மில் இருந்த கருண் நாயர் மும்பை பந்துவீச்சை துவம்சம் செய்தார். கருண் நாயர் இதுபோன்று அதிரடியாக ஆடுவார் என யாரும் எதிர்பார்க்கவில்லை. மும்பை அணியில் பும்ரா, ஹர்திக், சான்ட்னர் என யார் பந்துவீசினாலும் சிக்ஸருக்கும், பவுண்டரிக்கும் கருண் நாயர் பேட்டிலிருந்து பறந்தன.

MI vs DC, ஹாட்ரிக் ரன்அவுட், கருண் நாயர்

பட மூலாதாரம்,GETTY IMAGES

பும்ராவின் பந்துவீச்சையும் விளாசிய கருண் நாயர் பவர்ப்ளேயில் 9 பந்துகளில் 3 பவுண்டரி, 2 சிக்ஸர் என 28 ரன்கள் சேர்த்தார். கருண் நாயர் களத்தில் இருந்த வரை டெல்லி ரன்ரேட் ராக்கெட் வேகத்தில் சென்றது.

டெல்லி அணி பவர்ப்ளேயில் ஒருவிக்கெட் இழப்புக்கு 72 ரன்களும், 9வது ஓவரில் 100 ரன்களையும் எட்டியது. 2வது விக்கெட்டுக்கு அபிஷேக் போரெல், கருண் நாயர் 100 ரன்கள் சேர்த்தனர். சதத்தை நோக்கி நகர்ந்த கருண் நாயர் 89 ரன்களில் சான்ட்னர் பந்துவீச்சில் போல்டாகினார். 119 ரன்கள்வரை டெல்லி அணி ஒரு விக்கெட்டை இழந்து வலுவாக இருந்தது.

அடுத்த 10 ஓவர்களில் வெற்றிக்கு 86 ரன்கள்தான் தேவைப்பட்டது, கைவசம் 9 விக்கெட்டுகள் இருந்தன. ஆனால், அடுத்த 26 ரன்களுக்குள் அபிஷேக் போரெல், கருண் நாயர், அக்ஸர் படேல், ஸ்டெப்ஸ் ஆகியோரின் விக்கெட்டை இழக்கவே ஆட்டம் தலைகீழானது. டெல்லி அணி 145 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்தது.

MI vs DC, ஹாட்ரிக் ரன்அவுட், கருண் நாயர்

பட மூலாதாரம்,GETTY IMAGES

ஆட்டத்தை மாற்றிய 3 பந்துகள்

18-வது ஓவர்கள் முடிவில் டெல்லி வெற்றிக்கு 12 பந்துகளில் 23 ரன்கள் தேவைப்பட்டது. அசுதோஷ் சர்மா ஸ்டார்க் களத்தில் இருந்தனர். இதுபோன்ற சூழலில் பலமுறை அசுதோஷ் சர்மா ஆட்டத்தை வென்று கொடுத்ததால் நம்பிக்கை இருந்தது. பும்ரா வீசிய 19-வது ஓவரில் அடுத்தடுத்து 2 பவுண்டரிகளை அசுதோஷ் அடிக்கவே, வெற்றிக்கு 15 ரன்களே தேவைப்பட்டன.

பும்ரா வீசிய 4வது பந்தில் அசுதோஷ் 17 ரன்னில் ஜேக்ஸால் ரன்அவுட் ஆகினார், அடுத்துவந்த குல்தீப் யாதவ் ராஜ்பாவாவால் ரன் அவுட் ஆகினார், கடைசி விக்கெட்டுக்கு வந்த மோகித் சர்மா சான்ட்னரால் ரன்அவுட் ஆகவே மும்பை அணி த்ரில் வெற்றி பெற்றது.

டெல்லி கைகளில் இருந்த ஆட்டம், வெற்றி வாய்ப்பு மூன்றே பந்துகளில் மும்பை அணியின் கரங்களுக்கு மாறியது எப்படி? என்பது அவர்களுக்கே புரியவில்லை. மாயாஜால வித்தை போன்று 3 பந்துகளில் ஒட்டுமொத்த ஆட்டத்தின் முடிவும் தலைகீழாக மாறியது

ஐபிஎல் வரலாற்றிலேயே தொடர்ந்து 3 பந்துகளில் 3 ரன்அவுட் நடந்தது இதுதான் முதல்முறையாகும்.

MI vs DC, ஹாட்ரிக் ரன்அவுட், கருண் நாயர்

பட மூலாதாரம்,GETTY IMAGES

டெல்லியின் தோல்விக்கு காரணம்

ஐபிஎல் தொடரில் இந்த சீசனில் பனிப்பொழிவு இருந்தால் 11வது ஓவர் முடிந்தபின் பந்தை மாற்றும் விதி அறிமுகமானது. இது டெல்லி ஆட்டத்தில் பெரிய திருப்பத்தை ஏற்படுத்தியது.

11வது ஓவர் முடிந்தபின் பனிப்பொழிவை ஆய்வு செய்து நடுவர்கள் பந்தின் தன்மையையும் ஆய்வு செய்து புதிய பந்து அறிமுகப்படுத்தினர்.

புதிய பந்து மும்பைக்கு கிடைத்தபின் ஆட்டம் மும்பையின் கரங்களுக்கு மாறியது. அடுத்த 4 ஓவர்களில் டெல்லி அணியின் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினர். கருண் நாயர், அக்ஸர் படேல் (9), டிரிஸ்டன் ஸ்டெப்ஸ்(1), கே.எல். ராகுல் (15) என 12வது ஓவரில் இருந்து ஓவருக்கு ஒரு விக்கெட்டை டெல்லி இழந்தது.

24 பந்துகளில் டெல்லி வெற்றிக்கு 42 ரன்கள் தேவைப்பட்டது. அசுதோஷ் சர்மா, விப்ராஜ் நிகம் களத்தில் இருந்தனர். அசுதோஷ் இருந்ததால் டெல்லி அணிக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் என கருதப்பட்டது.

17-வது ஓவரை வீசிய டிரன்ட் போல்ட் 5 யார்கறை வீசி டெல்லி பேட்டர்களை திணறவிட்டு 3 ரன்கள் மட்டுமே கொடுத்தார். சான்ட்னர் வீசிய 18வது ஓவரில் விப்ராஜ் ஒரு சிக்ஸர், பவுண்டரி விளாசி அவுட் ஆகினார். கடைசி இரு ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 24 ரன்கள் தேவைப்பட்டது.

MI vs DC, ஹாட்ரிக் ரன்அவுட், கருண் நாயர்

பட மூலாதாரம்,GETTY IMAGES

200 ரன்களும் வெற்றியும்

மும்பை அணியும், டெல்லி அணியும் 200 ரன்களை அடித்தவிட்டால் அதை இந்த ஆட்டம் வரை டிபென்ட் செய்து வெற்றி பெறும் வரலாற்றை தக்கவைத்துள்ளன. மும்பை அணி 15 முறை 200 ரன்களுக்கு மேல் அடித்து அனைத்திலும் வென்றுள்ளது.

அதேபோல டெல்லி அணியும் 13 முறை 200 ரன்களுக்கு மேல் அடித்து அதை வெற்றிகரமாக டிபெண்ட் செய்து வென்றுள்ளது.

இந்த போட்டியில் ஆட்டம் 18-வது ஓவர் வரை டெல்லியின் பக்கம்தான் இருந்தது. பும்ரா வீசிய 19 வது ஓவரில் ஆட்டம் தலைகீழாக மாறி ஒரே ஓவரில் ஹாட்ரிக் ரன்அவுட் நடந்து, டெல்லியின் வெற்றி 3 பந்துகளில் மும்பைக்கு கைமாறியது.

மும்பை அணியின் சுழற்பந்துவீச்சாளர் கரன் சர்மா 4 ஓவர்கள் வீசி 36 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆட்டநாயகன் விருது வென்றார்.

மும்பை அணி தொடர்ந்து தோல்விகளைச் சந்தித்து வந்த நிலையில் 2வது வெற்றியைப் பெற்று, 4 புள்ளிகளுடன் 7வது இடத்தில் இருக்கிறது. டெல்லிகேபிடல்ஸ் அணி தொடர்ந்து வெற்றி பெற்ற நிலையில் முதல் தோல்வியைச் சந்தித்து 8 புள்ளிகளுடன் 2வது இடத்தில் இருக்கிறது.

MI vs DC, ஹாட்ரிக் ரன்அவுட், கருண் நாயர்

பட மூலாதாரம்,GETTY IMAGES

"எங்கே தோற்றோம் எனப் புரியவில்லை"

தோல்வி அடைந்த டெல்லி கேபிடல்ஸ் கேப்டன் அக்ஸர் படேல் கூறுகையில் " ஆட்டம் எப்படி முடிந்தது, எந்த இடத்தில் தோற்றோம் என்று எங்களுக்கே புரியவில்லை. ஆட்டம் எங்களிடம் இருந்ததுஎப்படி மும்பை கரங்களுக்கு மாறியது, வென்று என்பது பிரமிப்பாக இருக்கிறது.

நடுப்பகுதியில் பல விக்கெட்டுகளை சாப்ட் டிஸ்மிசல்களில் இழந்தது தோல்விக்கான காரணமாக இருக்கலாம். 12 ரன்னில் தோற்றுள்ளோம், ஒரு ஓவர்வரை மிச்சம் இருந்ததால் நாங்கள் விக்கெட்டை இழக்காமல் இருந்தால் வெற்றி பெற்றிருப்போம். டெய்லெண்டர் பேட்டர்கள் சேஸிங்கின்போது ஒவ்வொரு முறையும் அணியை காப்பாற்றுவார்கள் என எதிர்பார்ப்பது தவறு.

சில நேரங்களில் தவறான ஷாட்களும், தவறான முடிவைக் கொடுக்கும். ஆடுகளம் சேஸிங்கிற்கு ஏற்றதாக இருந்தது, பனிப்பொழிவு இருந்து புதிய மாற்றியதும் ஆட்டத்தில் திருப்புமுனையை ஏற்படுத்தியது.

எங்கள் சுழற்பந்துவீச்சு திருப்தியாக இருக்கிறது, பவர்ப்ளேயில் 2 பேர் வரை பந்துவீசுகிறோம். குல்தீப் இந்த சீசனில் மிரட்டலாக பந்துவீசுகிரார்.

விக்கெட் தேவைப்படும்போதெல்லாம் குல்தீப்பை அழைத்தால் விக்கெட் கிடைக்கிறது. இந்த ஆட்டத்தில் ஏராளமான நல்ல அம்சங்கள் இருந்தன, தோல்வியை மறந்துவிட்டு நகர்கிறோம்" எனத் தெரிவித்தார்.

MI vs DC, ஹாட்ரிக் ரன்அவுட், கருண் நாயர்

பட மூலாதாரம்,GETTY IMAGES

இன்றைய ஆட்டங்கள்

லக்னெள சூப்பர்ஜெயின்ட்ஸ் vs சென்னை சூப்பர் கிங்ஸ்

இடம்: லக்னெள

நேரம்: இரவு 7.30

சிஎஸ்கேவின் அடுத்த ஆட்டம்

சென்னை சூப்பர் கிங்ஸ் vs மும்பை இந்தியன்ஸ்

நாள் - ஏப்ரல் 20

இடம் – மும்பை

நேரம்- இரவு 7.30

மும்பையின் அடுத்த ஆட்டம்

மும்பை இந்தியன்ஸ் vs சன்ரைசர்ஸ் ஹைதராபாத்

நாள் - ஏப்ரல் 17

இடம் – மும்பை

நேரம்- இரவு 7.30 மணி

ஆர்சிபியின் அடுத்த ஆட்டம்

ஆர்சிபி vs பஞ்சாப் கிங்ஸ்

நாள் - ஏப்ரல் 18

இடம் – பெங்களூரு

நேரம்- மாலை 7.30 மணி

ஆரஞ்சு தொப்பி யாருக்கு?

நிகோலஸ் பூரன் (லக்னெள சூப்பர் ஜெயின்ட்ஸ்)-349 ரன்கள்(6 போட்டிகள்)

சாய் சுதர்சன் (குஜராத் டைட்டன்ஸ்)-329 ரன்கள்(6 போட்டிகள்)

மிட்செல் மார்ஷ் (லக்னெள சூப்பர் ஜெயின்ட்ஸ்) 265 ரன்கள்(5 போட்டிகள்)

பரப்பிள் தொப்பி யாருக்கு?

நூர் அகமது (சிஎஸ்கே)12 விக்கெட்டுகள் (6 போட்டிகள்)

ஷர்துல் தாக்கூர் (லக்னெள) 11 விக்கெட்டுகள் (6 போட்டிகள்)

குல்தீப் யாதவ் (டெல்லி கேபிடல்ஸ்) 10 விக்கெட்டுகள் (5 போட்டிகள்)

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.

https://www.bbc.com/tamil/articles/crm3vgvjwlvo

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தோனி புதிய சாதனை: தொடர் தோல்விகளுக்கு முடிவு கட்டி சிஎஸ்கே அணிக்கு ஏற்றம் தந்த 'ஆட்டநாயகன்'

CSK vs LSG, தோனி

பட மூலாதாரம்,GETTY IMAGES

கட்டுரை தகவல்

  • எழுதியவர், க.போத்திராஜ்

  • பதவி, பிபிசி தமிழுக்காக

  • 15 ஏப்ரல் 2025, 02:06 GMT

லக்னெளவில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 போட்டியின் 30-வது லீக் ஆட்டத்தில் லக்னெள சூப்பர் ஜெயின்ட்ஸ் அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.

முதலில் பேட் செய்த லக்னெள அணி 7 விக்கெட் இழப்புக்கு 166 ரன்கள் சேர்த்தது. 167 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய சிஎஸ்கே அணி 3 பந்துகள் மீதமிருக்கையில் 5 விக்கெட் இழப்புக்கு 168 ரன்கள் சேர்த்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.

நடப்பு சீசனில் சிஎஸ்கே அணியின் தொடர் தோல்விகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து ஆட்டநாயகனாக ஜொலித்த கேப்டன் தோனி, புதிய சாதனை ஒன்றையும் படைத்துள்ளார்.

லக்னெளவை ஏமாற்றிய பேட்டர்கள்

லக்னெள அணிக்கு நேற்று பேட்டர்கள் எதிர்பார்த்த பங்களிப்பை செய்யவில்லை. மார்க்ரம்(6), நிகோலஸ் பூரன்(8) இருவரும் விரைவாக விக்கெட்டுகளை இழந்தனர். இந்த சீசனில் ஆரஞ்சு தொப்பியுடன் முன்னணியில் இருக்கும் பூரன் விரைவாக விக்கெட்டை இழந்தது சிஎஸ்கேவின் நல்லநேரம்.

அதேபோல மார்ஷ் 30 ரன்னில் விக்கெட்டை பறிகொடுத்ததும், லக்னெளவுக்கு பெரிய ஸ்கோரை வழங்க முடியவில்லை. பூரன், மார்ஷ் இருவரும் களத்தில் நின்றிருந்தால், சிஎஸ்கேவுக்கு 6வது தோல்வி கிடைத்திருப்பது உறுதியாகியிருக்கும்.

கேப்டன் ரிஷப் பந்த் இந்த சீசனில் லக்னெள அணிக்காக முதல் அரைசதத்தை அடித்து 63 ரன்களில் ஆட்டமிழந்தார். சிஎஸ்கே சுழற்பந்துவீச்சாளர்கள் பந்துவீசியவரை ரிஷப்பந்த் பேட்டிலிருந்து பெரிதாக ரன்கள் வரவில்லை. அதன்பின் ரிஷப் பந்த் இயல்பான ஆட்டத்துக்கு திரும்பி லக்னெள ஸ்கோரை உயர்த்தினார். பதிரானா, கலீல் அகமது ஓவர்களை குறிவைத்த ரிஷப் பந்த் பவுண்டரி, சிக்ஸர்களை விளாசி லக்னெள அணியை 150 ரன்கள் கடக்க உதவினார்.

CSK vs LSG, தோனி

பட மூலாதாரம்,GETTY IMAGES

மில்லர் ஏன் விரைவாக வரவில்லை?

அதேபோல நெருக்கடியான நேரத்தில் அனுபவம் வாய்ந்த அதிரடி ஆட்டக்காரர் டேவிட் மில்லரை களமிறக்காமல், அப்துல் சமதையும், ஷர்துல் தாக்கூரையும் களமிறக்கி லக்னெள அணி தவறு செய்துவிட்டது. அப்துல் சமது களமிறங்க வேண்டிய இடத்தில் மில்லர் களமிறங்கி இருந்தால், லக்னெள ஸ்கோர் இன்னும் கூடுதலாக 20 ரன்கள் சேர்த்திருக்கும். அப்துல் சமது 20 ரன்கள் சேர்த்தும் அதில் 2 சிக்ஸர்கள் மட்டுமே சிரமப்பட்டு அடித்தார், 'ஷாட்' ஏதும் சிக்கவில்லை.

ஆனால், மில்லரை அணியில் வைத்திருந்தும் அவரை நடுவரிசையில் களமிறக்காமல் கடைசிவரிசையில் களமிறக்கி லக்னெள அணி அவரை வீணாக்கியது.

சிறப்பான அறிமுகம்

சிஎஸ்கே அணியில் நீண்டகாலம் பெஞ்சில் அமர வைக்கப்பட்டிருந்த உலகக்கோப்பையை வென்ற 19வயதுக்குட்பட்டோர் அணியின் துணைக் கேப்டன் ஷேக் ரஷீத் நேற்று அறிமுகமாகினார். 2023ம் ஆண்டு சீசனில் இருந்து இவரை சிஎஸ்கே பாதுகாத்தாலும், விளையாட வாய்ப்பு வழங்கவில்லை.

ஆனால், ரஷீத் தனக்குக் கிடைத்த வாய்ப்பை நேற்று பயன்படுத்தினார். ஆகாஷ் தீப் பந்துவீச்சில் 3 பவுண்டரிகள், விராட் கோலி ஸ்டைலில் பிளிக் ஷாட்டில் சூப்பர் பவுண்டரி என 6 பவுண்டரிகள் உள்பட 27 ரன்களில் ஆட்டமிழந்தார்.

முதல் போட்டியில் விளையாடுகிறோம் என்ற எந்த பதற்றமும், அச்சமும் இல்லாமல் மிகவும் கூலாக ரஷித் பேட் செய்தார். கெய்க்வாட் பேட்டிங் ஸ்டைலில் ரஷீத் பேட் செய்ததாக வர்ணனையாளர்கள் தெரிவித்தாலும், ரஷீத்தின் ஆட்டம் நேற்று சிஎஸ்கே அணிக்கு பவர்ப்ளேயில் நல்ல தொடக்கத்தை அளிக்க உதவியது.

CSK vs LSG, தோனி

பட மூலாதாரம்,GETTY IMAGES

சிஎஸ்கே அணி பவர்ப்ளேயில் ஒரு விக்கெட் இழப்புக்கு 59 ரன்கள் என நல்ல தொடக்கத்தை அளித்தாலும் நடுப்பகுதியில் விக்கெட்டுகளையும் இழந்து, ரன் சேர்க்கும் வேகத்தையும் குறைத்தது.

ரச்சின் ரவீந்திரா 37 ரன்களில் மார்க்ரம் பந்துவீச்சில் கால்காப்பில் வாங்கி ஆட்டமிழந்தார். ராகுல் திரிபாதிக்கு கிடைத்த 5வது வாய்ப்பையும் வீணடித்து 9 ரன்கள் சேர்த்து சிஎஸ்கே அணிக்கு சுமையாக மாறிவருகிறார். ஜடேஜா 7, விஜய் சங்கர் 9 ரன்களில் தவறான ஷாட்களால் ஆட்டமிழந்தனர். 15வது ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 111 ரன்கள் என்று சிஎஸ்கே தடுமாறியது. கடைசி 5 ஓவர்களில் 57 ரன்கள் தேவைப்பட்டதால், சிஎஸ்கே வெற்றி மதில்மேல் பூனையாக மாறியது.

CSK vs LSG, தோனி

பட மூலாதாரம்,GETTY IMAGES

தோனி, துபே சிரமப்படவில்லை

ஷிவம் துபே களத்தில் இருந்தபோது, அவருக்கு லக்னெள சுழற்பந்துவீச்சாளர்கள் பந்துவீசியவரை ரன் சேர்க்கக் கடும் சிரமப்பட்டு, 20 பந்துகளில் 17 ரன்கள் சேர்த்திருந்தார். விஜய் சங்கர், ஜடேஜா ஆட்டமிழந்தபின் துபேயின் ரன்சேர்ப்பில் தொய்வு ஏற்பட்டது. தோனி களமிறங்கியபின், லக்னெள கேப்டன் ரிஷப் பந்த் ஏன் வேகப்பந்துவீச்சுக்கு வாய்ப்புக் கொடுத்தார் எனப் புரியவில்லை.

2024 ஐபிஎல் தொடரிலிருந்து வேகப்பந்துவீச்சுக்கு எதிராக தோனி 222 ஸ்ட்ரைக் ரேட் வைத்துள்ளார். ஆனால் சுழற்பந்துவீச்சுக்கு எதிராக மோசமாக ஆடியுள்ளார். ஆனால் ரவி பிஸ்னாய்க்கு வாய்ப்பு வழங்காமல் தாக்குர், ஆவேஷ்கானை வைத்து வைடு யார்கர், ஃபுல்டாஸ், ஷார்ட் பிட்ச்சில் பந்துவீச வைத்து தோனி, துபே ரன் சேர்ப்பை லக்னெள எளிதாக்கியது.

ஷர்துல் வீசிய 19-வது ஓவரில் துபே 2 பவுண்டரி, நோபாலில் சிக்ஸர் என 19 ரன்கள் சேர்த்தபோது வெற்றி லக்னெளவின் கைகளைவிட்டு சென்றுவிட்டது. 6-வது விக்கெட்டுக்கு தோனி, துபே கூட்டணி 28 பந்துகளில் 57 ரன்கள் சேர்த்தனர். துபே 43, தோனி 26 ரன்களுடன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

CSK vs LSG, தோனி

பட மூலாதாரம்,GETTY IMAGES

சிஎஸ்கே வெற்றிக்கான காரணம்

சிஎஸ்கே அணியின் வெற்றிக்கு முக்கியக் காரணம் சுழற்பந்துவீச்சாளர்கள் ஜடேஜா, நூர் முகமது இருவரும்தான். இருவரும் சேர்ந்து 7 ஓவர்கள் வீசி 37 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தி நடுப்பகுதியில் லக்னெள ரன்ரேட்டை இழுத்துப் பிடித்தனர். நூர் முகமது விக்கெட்டுகள் வீழ்த்தாவிட்டாலும், 4 ஓவர்களில் 13 ரன்கள் மட்டுமே வழங்கினார். ஜடேஜா 24 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

ஆனால் வேகப்பந்துவீச்சாளர்கள் பதிராணா, கலீல் அகமது, ஓவர்டன் ஆகியோர் எதிர்பார்த்த அளவுக்கு கட்டுக்கோப்புடன் வீசவில்லை, கம்போஜ் 3 ஓவர்கள் வீசி 20 ரன்களுடன் ஒரு விக்கெட்டையும் எடுத்தார். இந்த ஆட்டத்தில் திருப்புமுனையாக அமைந்தது, நூர் முகமது, ஜடேஜாவின் பந்துவீச்சுதான்.

CSK vs LSG, தோனி

பட மூலாதாரம்,GETTY IMAGES

சிஎஸ்கே தொடர் தோல்விகளுக்கு முடிவு கட்டியது எப்படி?

வெற்றிக்குப்பின் சிஎஸ்கே கேப்டன் தோனி பேசுகையில், "வெற்றி பெற்றது மகிழ்ச்சி. கடந்த போட்டிகள் துரதிர்ஷ்டமாக நாங்கள் எதிர்பார்த்தவாறு செல்லவில்லை. இந்த வெற்றி அணிக்கு அதிக நம்பிக்கையை அளித்துள்ளது. இந்த ஆட்டம் கடினமாக இருந்தது, எங்கள் தருணத்தை மீண்டும் மீட்டெடுத்துள்ளோம். கடந்த போட்டிகளில் தொடக்க ஓவர்களில் சிறிது சிரமப்பட்டுள்ளோம் ஆனால் நடுப்பகுதியில் மீண்டு வந்துள்ளோம் சென்னை ஆடுகளமாக இருந்ததால் அவ்வாறு நடந்திருக்கலாம். சிறந்த ஆடுகளத்தில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவோம்" என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், "முதல் 6 ஓவர்களில் அதிக பந்துவீச்சாளர்கள் தேவை, அஸ்வினை பவர்ப்ளேயில் பந்துவீச வைத்து அதிக அழுத்தம் கொடுப்போம், எதிரணிக்கு நெருக்கடி கொடுத்த பந்துவீச்சாளர்களை மாற்றுவோம். அந்த வகையில் பந்துவீச்சு என்பது இன்று பேட்டிங்கைவிட சிறப்பாக இருந்தது.

ரஷித் உண்மையாகவே நன்றாக பேட் செய்தார், கடந்த சில ஆண்டுகளாகவே எங்களுடன் பயணிக்கிறார். வலைப்பயிற்சியில் ரஷீத் பேட்டிங் சிறப்பாக இருந்தது, முன்னேற்றம் காணப்பட்டது. பேட்டிங் வரிசையிலும் எங்களுக்கு மாற்றம் தேவைப்பட்டதால் ரஷீத்தை கொண்டுவந்தோம்" எனத் தெரிவித்தார்.

CSK vs LSG, தோனி

பட மூலாதாரம்,GETTY IMAGES

வெற்றியை தாரை வார்த்த ரிஷப் பந்த்

லக்னெள அணி இன்னும் கூடுதலாக 10 முதல் 15 ரன்கள் சேர்த்திருந்தால் வெற்றி பெற்றிருக்கும் என கேப்டன் ரிஷப் பந்த் தெரிவித்துள்ளார். உண்மையில் இன்னும் 40 ரன்கள் கூடுதாக அடித்திருந்தாலும், ரிஷப் பந்தின் தவறான, மோசமான கேப்டன்சியால் லக்னெள அணி தோற்றிருக்கும்.

சிஎஸ்கே அணியை சுருட்டுவதற்கு, லக்னெளவின் கருப்பு மண் ஆடுகளத்தில் இந்த ஸ்கோர் போதுமானது. ஆனால், கடைசி நேரத்தில் பந்துவீச்சாளர்களை திட்டமிட்டு பயன்படுத்தாமல் ரிஷப் பந்த் செய்த கேப்டன்சி தவறுதான் இந்த விலையைக் கொடுத்தது.

கடைசி 4 ஓவர்களில் சிஎஸ்கே வெற்றிக்கு 44 ரன்கள் தேவை என்ற கடினமான நிலையில் ஆட்டம் லக்னெளவின் பக்கம்தான் இருந்தது. கடைசி 18 பந்துகளில் சிஎஸ்கேவுக்கு 31 ரன்கள் தேவை என்கிற வரையிலும் லக்னெளவின் கைகளில்தான் வெற்றி இருந்தது.

2 ஓவர்களில் 24 ரன்கள் என்ற ரீதியில் சிஎஸ்கேவுக்கு கடின இலக்கு வைக்கப்பட்டிருந்தது. அப்போதும் லக்னெள அணி விழிக்கவில்லை. தேவையின்றி கடைசி இரு ஓவர்களை ஷர்துல் தாக்கூர், ஆவேஷ் கானுக்கு வழங்கி, அணியின் வெற்றியை தனது குருநாதர் தோனிக்கு பரிசாக ரிஷப் பந்த் அளித்துள்ளார். லக்னெள அணி வெற்றிக்கு உரித்தானது, நடுப்பகுதி ஓவர்களில் கட்டுக்கோப்புடன் பந்துவீசி வெற்றிக்கு அருகே வந்துவிட்டனர்,

லக்னெள அணியின் சுழற்பந்துவீச்சாளர்கள் திக்வேஷ் ராதி, ரவி பிஸ்னாய், மார்க்ரம் ஆகியோர் 11 ஓவர்கள் வீசி 80 ரன்கள் கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தினர். ஆனால், 19வது ஓவரில் ஷர்துல் தாக்கூர் 19 ரன்கள் கொடுத்ததுதான் லக்னெளவை தோல்விக்குழியில் தள்ளியது. ரவி பிஸ்னோய்க்கு 3 ஓவர்கள் மட்டுமே வழங்கிய நிலையில் ஏன் 4வது ஓவரை ரிஷப்பந்த் வழங்கவில்லை என்பது கேள்வியாக இருக்கிறது. ஆனால், ரிஷப்பந்தின் தவறான கேப்டன்சி சிஎஸ்கேவுக்கு சாதகமாக அமைந்தது.

CSK vs LSG, தோனி

பட மூலாதாரம்,GETTY IMAGES

ரிஷப் பந்த் செய்த தவறு என்ன?

லக்னெள சுழற்பந்துவீச்சாளர் ரவி பிஸ்னோய் நேற்றைய ஆட்டத்தில் 3 ஓவர்கள் வீசி 18 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகள் வீழ்த்தி கட்டுக்கோப்புடன் பந்துவீசியிருந்தார். ஆனால், அவருக்கு 4வது ஓவரை ரிஷப் பந்த் ஏன் வழங்கவில்லை என்பது கேள்வியாக வர்ணனையாளர்கள் வைத்தனர். ரிஷப்பந்தின் இந்த தவறான முடிவுதான் லக்னெள அணியின் தோல்விக்கு காரணமாக அமைந்தது.

166 ரன்களை லக்னெள அணி சொந்த மைதானத்தில் டிபெண்ட் செய்திருக்க முடியும். இந்த ஸ்கோரையே கடைசி 3 பந்துகள் இருக்கும்போதுதான் தோனி, துபேயால் அடிக்க முடிந்தது. அப்படியிருக்கும்போது, ஏதேனும் ஒரு ஓவரை கட்டுக்கோப்பாக வீசியிருந்தால் ஆட்டம் தலைகீழாக மாறியிருக்கும்

ரவி பிஸ்னோய் 13வது, 9வது ஓவரில் திரிபாதி, ஜடேஜா விக்கெட்டுகளை வீழ்த்தினரார். இவர் வீசிய 18 பந்துகளில் 9 பந்துகள் டாட் பந்துகள். அனுபவம் இல்லாத திக்வேஷ் ராதிக்கும், மார்க்ரமுக்கும் 4 ஓவர்களை முழுமையாக வழங்கிய ரிஷப் பந்த் ஏன் அனுபவம் வாய்ந்த லெக் ஸ்பின்னர் ரவி பிஸ்னோய்க்கு 4வது ஓவரை வழங்கவில்லை என்பது கேள்வியாக இருக்கிறது.

கடைசி 30 பந்துகளில் சிஎஸ்கே வெற்றிக்கு 56 ரன்கள் என்பது லக்னெள மைதானத்தில் கடின இலக்குதான். ஆவேஷ்கானுக்கு 3 ஓவர்களும், தாக்கூருக்கு 2 ஓவர்களும் மீதம் இருந்தன, பிஸ்னோய்க்கு ஒரு ஓவர் இருந்தது. ஆவேஷ் கானுக்கு 16வது ஓவரை வழங்கிய நிலையில் 12 ரன்களை வாரி வழங்கினார்.

பனியின் தாக்கத்தால் பந்து மாற்றப்பட்டு புதிய பந்து தரப்பட்டது. ஆனால் புதிய பந்தை சுழற்பந்துவீச்சாளர் பிஸ்னோய்க்கு ரிஷப் பந்த் வழங்கவில்லை. பெரும்பாலும் புதிய பந்து மாற்றப்பட்டவுடன் தோனி களத்தில் இருந்தால் சுழற்பந்துவீச்சைத்தான் பெரும்பாலான கேப்டன்கள் தேர்ந்தெடுப்பார்கள்.

CSK vs LSG, தோனி

பட மூலாதாரம்,GETTY IMAGES

கடந்த போட்டியில் கெளகாத்தியில் நடந்த ராஜஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் சிஎஸ்கே அணிக்கு 18 பந்துகளில் 45 ரன்கள் தேவை என்றபோது, ராஜஸ்தான் கேப்டன் சாம்ஸன், தீக்சனாவுக்கு ஓவரை வழங்கினார்.

டெல்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் 18 பந்துகளில் சிஎஸ்கே வெற்றிக்கு 72 ரன்கள் தேவை என்ற போது அக்ஸர் படேல் பந்துவீசி 5 ரன்கள் மட்டுமே கொடுத்தார்.

பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சிஎஸ்கே சேஸ் செய்யும்போது, 24 பந்துகளில் 68 ரன்கள் தேவை இருந்தது. களத்தில் தோனி இருந்ததால், கேப்டன் ஸ்ரேயாஸ் உடனடியாக யஜுவேந்தி சஹலுக்கு ஓவரை வழங்கினார், தோனியால் ஒரு பவுண்டரிகூட அடிக்க முடியவில்லை.

2020 ஐபிஎல் சீசனில் இருந்து சுழற்பந்துவீச்சுக்கு எதிராக தோனியின் ஸ்ட்ரைக் ரேட் 94 மட்டும்தான், 243 பந்துகளைச் சந்தித்த தோனி 14 பவுண்டரிகள், 9 சிக்ஸர்கள்தான் அடித்துள்ளார். ஆனால் 2024 ஐபிஎல் சீசனில் இருந்து வேகப்பந்துவீச்சுக்கு எதிராக தோனி 222 ஸ்ட்ரைக் ரேட் வைத்துள்ளார்.

தோனிக்கு ஒரு ஓவரை ரவி பிஸ்னோய் மூலம் பந்துவீச வைத்திருந்தால், ரன் நெருக்கடி அதிகமாகி சிஎஸ்கே தோல்வியில் விழந்திருக்கலாம். லக்னெள அணிக்கு கிடைக்க வேண்டிய வெற்றியை கேப்டன் ரிஷப் பந்த் தனது குருநாதர் தோனிக்கு தாரை வார்த்துவிட்டார்.

தோனி புதிய சாதனை

இந்த போட்டியில் ஒரு கேட்ச், ஒரு ரன்-அவுட், ஸ்டெம்பிங் செய்து 11 பந்துகளில் அதிரடியாக 26 ரன்கள் சேர்த்த கேப்டன் மகிகேந்திர சிங் தோனி ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 2019ம் ஆண்டுக்குப்பின் தோனி ஐபிஎல் தொடரில் ஆட்டநாயகன் விருது வென்றார்.

ரவீந்திர ஜடேஜா வீசிய ஆட்டத்தின் 14-வது ஓவரில் லக்னெள வீரர் ஆயுஷ் படோனி இறங்கி அடிக்க முற்பட, பந்து அவரை ஏமாற்றி விக்கெட் கீப்பர் தோனியிடம் தஞ்சம் அடைந்தது. அவர் சற்றும் தாமதிக்காமல் மின்னல் வேகத்தில் ஸ்டெம்பிங் செய்து படோனியை பெவிலியனுக்கு அனுப்பி வைத்தார்.

இதன் மூலம் ஐபிஎல் போட்டிகளில் பீல்டிங்கில் 200-வது வீரரை ஆட்டமிழக்கச் செய்தவர் என்ற சாதனையை தோனி படைத்துள்ளார். அதன் பிறகு கடைசி ஓவரில் லக்னௌ கேப்டன் ரிஷப் பந்தை கேட்ச் செய்து ஆட்டமிழக்கச் செய்தார் தோனி.

இதுவரை 271 ஐபிஎல் போட்டிகளில் விளையாடியுள்ள தோனி 201 பேட்டர்கள் ஆட்டமிழக்க காரணமாக இருந்துள்ளார். அதில், 155 கேட்ச்களும், 46 மின்னல் வேக ஸ்டம்பிங்குகளும் அடங்கும்.

CSK vs LSG, தோனி

பட மூலாதாரம்,GETTY IMAGES

புள்ளிப் பட்டியலில் சிஎஸ்கே எங்கே?

சிஎஸ்கே அணி தொடர்ந்து 5 தோல்விகளைச் சந்தித்த நிலையில் தோனி கேப்டன்ஷிப் ஏற்றபின் முதல் வெற்றி கிடைத்துள்ளது. இந்த வெற்றியால் புள்ளிப்பட்டியலில் சிஎஸ்கே அணியால் எந்த மாற்றத்தையும் கொண்டுவரமுடியவில்லை, தொடர்ந்து கடைசி இடத்தில்தான் இருக்கிறது. அடுத்தடுத்து வெற்றிகள் கிடைத்தால் சிஎஸ்கே அணியின் நிலை மாறும். லக்னெள அணி 8 புள்ளிகளுடன் 4வது இடத்தில் இருக்கிறது.

இன்றைய ஆட்டம்

  • பஞ்சாப் கிங்ஸ் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

  • இடம்: முலான்பூர்

  • நேரம்: இரவு 7.30

சிஎஸ்கேவின் அடுத்த ஆட்டம்

  • சென்னை சூப்பர் கிங்ஸ் vs மும்பை இந்தியன்ஸ்

  • நாள் - ஏப்ரல் 20

  • இடம் – மும்பை

  • நேரம்- இரவு 7.30

மும்பையின் அடுத்த ஆட்டம்

  • மும்பை இந்தியன்ஸ் vs சன்ரைசர்ஸ் ஹைதராபாத்

  • நாள் - ஏப்ரல் 17

  • இடம் – மும்பை

  • நேரம்- இரவு 7.30 மணி

ஆர்சிபியின் அடுத்த ஆட்டம்

  • ஆர்சிபி vs பஞ்சாப் கிங்ஸ்

  • நாள் - ஏப்ரல் 18

  • இடம் – பெங்களூரு

  • நேரம்- மாலை 7.30 மணி

ஆரஞ்சு தொப்பி யாருக்கு?

  • நிகோலஸ் பூரன்(லக்னெள சூப்பர் ஜெயின்ட்ஸ்)-357 ரன்கள்(7 போட்டிகள்)

  • சாய் சுதர்சன்(குஜராத் டைட்டன்ஸ்)-329 ரன்கள்(6 போட்டிகள்)

  • மிட்ஷெல் மார்ஷ்(லக்னெள சூப்பர் ஜெயின்ட்ஸ்) 295 ரன்கள்(6 போட்டிகள்)

நீலத் தொப்பி

  • நூர் அகமது(சிஎஸ்கே)12 விக்கெட்டுகள்(6 போட்டிகள்)

  • கலீல் அகமது(சிஎஸ்கே) 11 விக்கெட்டுகள்(7 போட்டிகள்)

  • ஷர்துல் தாக்கூர்(லக்னெள) 11 விக்கெட்டுகள்(7 போட்டிகள்)

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.

https://www.bbc.com/tamil/articles/cly1vzy80mko

  • கருத்துக்கள உறவுகள்

ராஜ‌ஸ்தான் கொச்

ராகுல் ராவிட் காய‌ம் கார‌ண‌மாய் ந‌ட‌க்க‌ முடியாம‌ சிர‌ம‌ப் ப‌டுகிறார்.................

ராஜ‌ஸ்தான் அணி வேண்டின‌ 13வ‌ய‌து திற‌மையான‌ சின்ன‌ப் பெடிய‌னை இன்னும் விளையாட‌ விட‌ வில்லை

அந்த‌ சின்ன‌ப் பெடிய‌ன் சிக்ஸ் அடிப்ப‌தில் திற‌மையான‌ பெடிய‌ன்....................................

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எதிர்பாராத கிளைமாக்ஸ்: 112 ரன் இலக்கை எட்ட விடாமல் கேகேஆரை சுருட்டிய பஞ்சாப் கேப்டன் ஸ்ரேயாசின் வியூகம்

PBKS vs KKR, ஸ்ரேயாஸ்

பட மூலாதாரம்,GETTY IMAGES

கட்டுரை தகவல்

  • எழுதியவர்,க. போத்திராஜ்

  • பதவி,பிபிசி தமிழுக்காக

  • 4 மணி நேரங்களுக்கு முன்னர்

முலான்பூரில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 போட்டியின் 31-வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை 16 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது பஞ்சாப் கிங்ஸ்.

முதலில் பேட் செய்த பஞ்சாப் கிங்ஸ் அணி 15.3 ஓவர்களில் 111 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. எளிய இலக்குடன் களமிறங்கிய கொல்கத்தா அணி, 15.1 ஓவர்களில் 95 ரன்களுக்கு ஆட்டமிழந்து 16 ரன்களில் தோல்வி அடைந்தது.

ஐபிஎல் ரசிகர்களுக்கு மற்றொரு அருமையான விருந்தாக இந்தப் போட்டி அமைந்தது. கொல்கத்தாவின் வெற்றியை எதிர்பார்த்த ரசிகர்களுக்கு ஆட்டம் நகர நகர இருக்கையின் நுனியில் முடிவு அமரவைத்து சுவாரஸ்யத்தை அதிகப்படுத்தி முடிவில் பஞ்சாப் அணி வென்றபோது யாருமே எதிர்பாராத முடிவாக அமைந்தது.

கடந்த போட்டியில் பஞ்சாப் அணி 245 ரன்கள் சேர்த்து, அதை சன்ரைசர்ஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் சேஸ் செய்தது. இந்த ஆட்டத்தில் அதே பஞ்சாப் அணி குறைந்த ஸ்கோரை எடுத்து டிபெண்ட் செய்து வெற்றி கண்டுள்ளது இதுதான் ஐபிஎல் தொடரின் அழகு.

PBKS vs KKR, ஸ்ரேயாஸ்

பட மூலாதாரம்,GETTY IMAGES

கொல்கத்தாவின் திட்டமிட்ட பந்துவீச்சு

கொல்கத்தா அணி நேற்றைய ஆட்டத்தில் வைபவ் அரோரா, ஹர்சித் ராணா, ஆன்ரிச் நோர்க்கியா ஆகிய 3 வேகப்பந்துவீச்சாளர்களுடன் பஞ்சாப் அணியின் பேட்டர்களை தாக்கியது. இதனால் பவர்ப்ளே ஓவர்களுக்குள் பஞ்சாப் அணி 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. பிரியன்ஸ் ஆர்யா(22), பிரப்சிம்ரன் சிங்(30) நல்ல தொடக்கத்தை அளித்தாலும், அதிவேகப்பந்துவீச்சில் இருவராலும் துல்லியமான ஷாட்களை அடிக்க முடியாமல் விக்கெட்டுகளை இழந்தனர். கேப்டன் ஸ்ரேயாஸ்(0), ஜோஸ் இங்கிலிஸ்(2) என நடுவரிசை பேட்டர்களும் ஏமாற்றினர்.

நடுப்பகுதி ஓவர்களில் சுனில் நரைன், வருண் இருவரும் சேர்ந்து பஞ்சாப் பேட்டர்களை மிரட்டினர். கடந்த போட்டிகளில் சிறப்பாக ஆடிய நேஹல் வதேரா(10), மேக்ஸ்வெல்(7), சஷாங் சிஹ்(18) என வரிசையாக சீரான இடைவெளியில் பஞ்சாப் அணி விக்கெட்டுகளை இழந்தது. 54 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்திருந்த பஞ்சாப் அணி, 57 ரன்களுக்குள் மீதமிருந்த 6 விக்கெட்டுகளையும் இழந்தது. வருண், நரைன் இருவரும் 7 ஓவர்கள் பந்துவீசி, 35 ரன்கள் கொடுத்து 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். ஹர்சித் ராணா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

PBKS vs KKR, ஸ்ரேயாஸ்

பட மூலாதாரம்,GETTY IMAGES

பஞ்சாப் அணியின் பதிலடி

111 ரன்களை டிபெண்ட் செய்வது கடினமானது என்ற போதிலும் பஞ்சாப் அணி முயன்று பார்க்கலாம் எனக் களமிறங்கியது. யான்சென், பார்ட்லென்ட் இருவரின் பந்துவீச்சும் துல்லியமாக இருந்தது. யான்சென் வீசிய முதல் ஓவரில் பந்து லேசாக ஸ்விங் ஆகி ஸ்டெம்பை தாக்கவே நரேன் 5 ரன்னில் ஆட்டமிழந்தார்.

பார்லெட் வீசிய ஓவரில் டீகாக் பெரிய ஷாட்டுக்கு முயலவே சூர்யான்ஷிடம் கேட்சானது. 3வதுவிக்கெட்டுக்கு ரகுவன்ஷி, ரஹானே கூட்டணி நம்பிக்கையளித்து ஆட்டத்தை வெற்றி நோக்கி நகர்த்தி, 55 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர்.

PBKS vs KKR, ஸ்ரேயாஸ்

பட மூலாதாரம்,GETTY IMAGES

திருப்பம் தந்த சஹல்

சஹல் வீசிய 8வது ஓவரில்தான் ஆட்டத்தின் திருப்புமுனை ஏற்பட்டது. சஹல் வீசிய ஓவரில் கால்காப்பில் வாங்கி ரஹானே 17 ரன்னில் ஆட்டமிழந்தார். ரஹானே ஆட்டமிழந்தவிதம் சந்தேகத்தை ஏற்படுத்தியது, களநடுவர் தவறான முடிவை வழங்கினார் என ரீப்ளேயில் தெரிந்தநிலையில், ரஹானே டிஆர்எஸ் அப்பீல் செய்யாமல் வெளியேறினார். இந்த தருணத்தை சஹல் பயன்படுத்தி ஆட்டத்தை வசப்படுத்தினார். நிதானமாக ஆடிய ரகுவன்சி 37 ரன்களில் சஹல் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

சஹலின் பந்துவீச்சு வழக்கத்துக்கு மாறாக வேகம் குறைவாகவும் பந்துவீச்சில் வேகத்தை மாற்றி அமைத்து வேரியேஷனோடு வீசியதால், பேட்டர்கள் ஆடுவதற்கு சிரமப்பட்டனர். இதனால் ரிங்குசிங் (2) ரன்னில் சஹல் பந்துவீச்சில் ஸ்டெம்பிங் செய்யப்பட்டா், ராமன்தீப் சிங் வந்தவேகத்தில் ஸ்ரேயாஸிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். வெங்கடேஷ் அய்யர்(7) கால்காப்பில் வாங்கி மேக்ஸ்வெல் பந்துவீச்சில் வெளியேறினார்.

62 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்திருந்த கொல்கத்தா அணி அடுத்த 14 ரன்களுக்குள் 5 விக்கெட்டுகளை பறிகொடுத்து 76 ரன்களுக்கு 7 விக்கெட்டுகள் என்ற இக்கட்டான நிலையை அடைந்தது. வெற்றி பெற்றுவிடுவோம் என நினைத்த கொல்கத்தா அணியினருக்கு இந்த நிலைமை பதற்றத்தை அளித்தது.

PBKS vs KKR, ஸ்ரேயாஸ்

பட மூலாதாரம்,GETTY IMAGES

மிரட்டிய ரஸ்ஸல்

கொல்கத்தா அணியில் ஆந்த்ரே ரஸ்ஸல் ஆட்டமிழக்கால் இருந்ததால் அந்த அணிக்கு நம்பிக்கை சற்று உயிருடன் இருந்தது. ரஸ்ஸல் கடந்த 25 போட்டிகளில் ஸ்ட்ரைக் ரேட் 92 ஆக இருந்ததால் எவ்வாறு பேட் செய்யப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. ஹர்சித் ராணா 3 ரன்னில் யான்சென் பந்தில் க்ளீன் போல்டாகினார்.

கொல்கத்தா அணியின் வெற்றிக்கு 33 ரன்கள் தேவை, 2 விக்கெட்டுகள் கைவசம் இருந்தது. சஹல் வீசிய ஓவரில் ரஸ்ஸல் 2 சிக்ஸர்கள், ஒரு பவுண்டரி விளாசி பரபரப்பை ஏற்படுத்தினார்.

PBKS vs KKR, ஸ்ரேயாஸ்

பட மூலாதாரம்,GETTY IMAGES

ஆனால் அடுத்த ஓவரில் ஸ்ட்ரைக்கில் வைபவ் அரோரா இருந்தார், அரோராவை அந்த ஓவரின் கடைசிப் பந்தில் அர்ஷ்தீப் வீழ்த்தினார்.

15வது ஓவரை யான்சென் வீசினார், முதல் பந்தை ஆப்சைடு விலக்கி வீசவே அதை கிராஸ்பேட் மூலம் சிக்ஸருக்கு ரஸல் அடிக்க முயன்றபோது இன்சைட் எட்ஜ் மூலம் போல்டாகினார். 17 ரன்னில் ரஸல் ஆட்டமிழக்கவே பஞ்சாப் அணி அபாரமான வெற்றியைப் பெற்றது.

PBKS vs KKR, ஸ்ரேயாஸ்

பட மூலாதாரம்,GETTY IMAGES

பஞ்சாப் அணி அசத்தல்

கடந்த சீசனில் இரு அணிகளும் மோதியபின் இப்போதுதான் விளையாடுகிறார்கள். கடந்த சீசனில் பஞ்சாப் அணி அதிகபட்ச ரன்களை சேஸ் செய்து சாதனை படைத்தது, ஈடன் கார்டனில் நடந்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 262 ரன்களை சேஸ் செய்து பஞ்சாப் அணி வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

இந்த சீசனில் குறைந்த ஸ்கோரை அடித்து அதை டிபெண்ட் செய்து வரலாற்றில் பதிவு செய்துள்ளது. ஐபிஎல் வரலாற்றிலேயே 111 ரன்கள் எனும் குறைந்த ஸ்கோரை அடித்து அதை வெற்றிகரமாக டிபெண்ட் செய்த அணி என்ற வரலாற்றை பஞ்சாப் கிங்ஸ் அணி பதிவு செய்தது. இதற்கு முன் சிஎஸ்கே அணி 9 விக்கெட் இழப்புக்கு 116 ரன்கள் சேர்த்து பஞ்சாப் அணியை டிபெண்ட் செய்ததுதான் சாதனையாக இருந்தது அதை பஞ்சாப் முறியடித்துவிட்டது.

வெற்றியை தவறவிட்ட கொல்கத்தா

ஒரு கட்டத்தில் கொல்கத்தா அணி 8 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 62 ரன்கள் என்று வலுவாக இருந்தது, 98% கொல்கத்தா வெற்றி என்று கணினியின் கணிப்பு தெரிவித்தது. ஆனால், அர்ஷ்தீப் சிங், யான்சென், சஹல் ஆகியோரின் கட்டுக்கோப்பான பந்துவீச்சு ஆட்டத்தையே திருப்பியது.

பஞ்சாப் அணியின் வெற்றிக்கு பந்துவீச்சாளர்களும், கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யரின் நுனுக்கமான கேப்டன்சியும்தான் காரணம். யுவேந்திர சஹல் மீண்டும் ஒரு அற்புதமான பந்துவீச்சை வெளிப்படுத்தி 4 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆட்டநாயகன் விருதையும் வென்றார். மார்கோ யான்சென் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி கொல்கத்தா அணியை நிலைகுலையச் செய்தார். இருவரின் பங்களிப்பு பஞ்சாப் அணியின் வெற்றியில் குறிப்பிடத்தக்கதாகும்.

PBKS vs KKR, ஸ்ரேயாஸ்

பட மூலாதாரம்,GETTY IMAGES

கணிக்க முடியாத ஆடுகளம்

ஆடுகளத்தில் எந்தவிதமான பிரச்னையும் இல்லை. சராசரியாக 0.5 டிகிரிதான் சீமிங் இருந்தது. பேட்டிங்கிற்கு சாதகமான இருந்தாலும் பந்துவீச்சுக்கு நன்கு ஒத்துழைத்தது. இரு அணிகளிலும் பேட்டர்களும் பெரிய எதிர்பார்ப்புடன்தான் ஆட்டத்தை அணுகினாலும் ஆடுகளத்தின் தன்மையை விரைவாக உணர முடியவில்லை.

பஞ்சாப் அணி முதல் 19 பந்துகளில் 39 ரன்கள் எடுத்து நல்ல தொடக்கத்தை அளித்தது, ஆனால், அடுத்த 17 பந்துகளில் 15 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது, கடைசி 5 விக்கெட்டுகளை 37 ரன்களுக்குள் பஞ்சாப் இழந்தது. கொல்கத்தா அணியும் 7 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்திருந்தது, அடுத்த 38 பந்துகளில் 55 ரன்களைச் சேர்த்து 2 விக்கெட் இழப்புக்கு 62 ரன்கள் என வெற்றிக்கு அருகே சென்றது. ஆனால் சஹல், யான்சென் பந்துவீச்சில் அடுத்த 33 ரன்களில் மீதமிருந்த 8 விக்கெட்டுகளையும் இழந்தது கொல்கத்தா.

கொல்கத்தா அணி ஐபிஎல் தொடரில் சேஸிங்கில் சேர்த்த 3வது குறைந்தபட்சமாகும். 2009ம் ஆண்டுக்குப்பின் 100 ரன்களுக்குள் கொல்கத்தா அணி ஆட்டமிழந்துள்ளது. பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராகவும் கொல்கத்தா சேர்த்த மிகக்குறைந்த ஸ்கோராகும்.

PBKS vs KKR, ஸ்ரேயாஸ்

பட மூலாதாரம்,GETTY IMAGES

"தோல்விக்கு நானே காரணம்"

தோல்வி அடைந்த கொல்கத்தா அணியின் கேப்டன் ரஹானே கூறுகையில், "இந்த தோல்விக்கு நான்தான் காரணம். தவறான ஷாட்களை ஆடமுற்பட்டு ஆட்டமிழந்தேன். இதிலிருந்துதான் சரிவு தொடங்கியது. அந்த நேரத்தில் நான் டிஆர்எஸ் எடுத்திருக்க வேண்டும் தவறவிட்டேன். ஆடுகளம் பேட்டிங் செய்ய கடினமாக இருந்தது, 111 ரன்கள் சேஸ் செய்யக்கூடியதுதான். ஆனால் நாங்கள் மோசமாக பேட் செய்தோம் என ஒப்புக்கொள்கிறோம்.

ஆனால் எங்கள் பந்துவீச்சாளர்கள் சிறப்பான பணியைச் செய்தனர். வலுவான பேட்டிங் வரிசையை கொண்டிருந்த பஞ்சாபை குறைந்த ரன்னில் சுருட்டியது பாராட்டுக்குரியது. நாங்கள் கவனக்குறைவாக இருந்துவிட்டோம், அணியாக தோல்விக்கு பொறுப்பேற்கிறோம். பல விஷயங்கள் என் தலைக்கு மேல் இருக்கிறது, வேதனையாக இருக்கிறது இந்த தோல்வி, நான் என்னை அமைதிப்படுத்திக்கொண்டு, வீரர்களிடம் என்ன பேச வேண்டும் என்பதை சிந்திக்க வேண்டும்" எனத் தெரிவித்தார்.

இந்த வெற்றியால் பஞ்சாப் கிங்ஸ் அணி 6 போட்டிகளில் 4 வெற்றி 8 புள்ளிகளுடன் 4வது இடத்துக்கு நகர்ந்துள்ளது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 7 போட்டிகளில் 3 வெற்றி, 4 தோல்விகள் என 6 புள்ளிகளுடன் 6வது இடத்தில் இருக்கிறது.

PBKS vs KKR, ஸ்ரேயாஸ்

பட மூலாதாரம்,GETTY IMAGES

பஞ்சாப் கேப்டன் ஸ்ரேயாசின் அபார வியூகம்

போட்டிக்கு பின்னர் பரிசளிப்பு நிகழ்ச்சியில் பேசிய பஞ்சாப் கிங்ஸ் கேப்டன் ஸ்ரேயாஸ்,"ஆடுகளத்தில் பந்து சற்று திரும்புவதை நான் பார்த்தேன். சாஹலிடம் முடிந்தவரை நாம் தாக்குதல் ஆட்டத்தை கையில் எடுக்க வேண்டும் என்று சொன்னேன். நான் பேட்டிங் செய்யச் சென்ற போது இரண்டு பந்துகளை எதிர்கொண்டேன், ஒன்று சற்று தாழ்வாக வந்தது. ஆடுகளத்தில் பந்து நன்றாக பவுன்ஸ் ஆனது. நாங்கள் 16 ரன்கள் வித்தியாசத்தில் வென்றதைக் கருத்தில் கொண்டு பார்த்தால் இந்த ஆடுகளத்தில் நாங்கள் நல்ல ஸ்கோரையே எடுத்துள்ளோம். ஆடுகளத்தில் பந்து ஒரே போல் பவுன்ஸ் ஆகவில்லை இரண்டு ஓவர்களில் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தியது எங்களுக்கு உத்வேகத்தைக் கொடுத்தது. ஆனால் அடுத்து வந்த அவர்களின் இரண்டு பேட்டர்கள் ஆட்டத்தை எதிரணியை நோக்கி திருப்பத் தொடங்கினர். ஆனால் சாஹலின் பந்தைத் திருப்பத் தொடங்கிய போது, எங்கள் எதிர்பார்ப்புகளும் நம்பிக்கைகளும் அதிகரித்தன. ஃபீல்டர்கள் பேட்ஸ்மேன்களைச் சுற்றி நெருக்கமாக இருக்க வேண்டும் என்று நான் விரும்பினேன். இதனால் அவர்கள் வெவ்வேறு ஷாட்களுக்கு முயற்சித்து எங்கள் வலையில் வீழ்வார்கள் என்று கணித்தேன். இந்த வெற்றி எங்களுக்கு ஒரு ஊக்கத்தை அளிக்கும்." என்று கூறினார்.

PBKS vs KKR, ஸ்ரேயாஸ்

பட மூலாதாரம்,GETTY IMAGES

ஐபிஎல் கூடுதல் தகவல்கள்

இன்றைய ஆட்டம்

  • டெல்லி கேபிடல்ஸ் vs ராஜஸ்தான் ராயல்ஸ்

  • இடம்: டெல்லி

  • நேரம்: இரவு 7.30

சிஎஸ்கேவின் அடுத்த ஆட்டம்

  • சென்னை சூப்பர் கிங்ஸ் vs மும்பை இந்தியன்ஸ்

  • நாள் - ஏப்ரல் 20

  • இடம் – மும்பை

  • நேரம்- இரவு 7.30

மும்பையின் அடுத்த ஆட்டம்

  • மும்பை இந்தியன்ஸ் vs சன்ரைசர்ஸ் ஹைதராபாத்

  • நாள் - ஏப்ரல் 17

  • இடம் – மும்பை

  • நேரம்- இரவு 7.30 மணி

ஆர்சிபியின் அடுத்த ஆட்டம்

  • ஆர்சிபி vs பஞ்சாப் கிங்ஸ்

  • நாள் - ஏப்ரல் 18

  • இடம் – பெங்களூரு

  • நேரம்- மாலை 7.30 மணி

ஆரஞ்சு தொப்பி யாருக்கு?

  • நிகோலஸ் பூரன்(லக்னெள சூப்பர் ஜெயின்ட்ஸ்)- 357 ரன்கள்(7 போட்டிகள்)

  • சாய் சுதர்சன்(குஜராத் டைட்டன்ஸ்)- 329 ரன்கள் (6 போட்டிகள்)

  • மிட்ஷெல் மார்ஷ்(லக்னெள சூப்பர் ஜெயின்ட்ஸ்)- 295 ரன்கள் (6 போட்டிகள்)

நீலத் தொப்பி யாருக்கு?

  • நூர் அகமது(சிஎஸ்கே) 12 விக்கெட்டுகள் (6 போட்டிகள்)

  • கலீல் அகமது(சிஎஸ்கே) 11 விக்கெட்டுகள் (7 போட்டிகள்)

  • ஷர்துல் தாக்கூர்(லக்னெள) 11 விக்கெட்டுகள் (7 போட்டிகள்)

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.

https://www.bbc.com/tamil/articles/c078v9p5xg5o

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஐபிஎல்: ஒவ்வொரு வீரரின் பேட்டையும் களத்திலேயே நடுவர்கள் பரிசோதிப்பது ஏன்? விதிகள் கூறுவது என்ன?

கிரிக்கெட், பேட்டிங், ஐபிஎல் 2025, பிசிசிஐ, விதிகள்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,இப்போது மட்டையின் அளவுகள் ஐபிஎல் போட்டிகளில் சரிபார்க்கப்படும் (சித்தரிப்புப் படம்)

16 ஏப்ரல் 2025, 08:22 GMT

புதுப்பிக்கப்பட்டது 8 மணி நேரங்களுக்கு முன்னர்

இந்த ஆண்டு ஐபிஎல் தொடரின் தொடக்கத்தில், தென்னாப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் ககிசோ ரபாடா, ஐபிஎல்-இல் பேட்டிங் மற்றும் பந்துவீச்சுக்கு இடையில் சமநிலையின்மை இருப்பதாக கவலை தெரிவித்திருந்தார்.

மேலும் பலர் இந்தக் கவலையை வெளிப்படுத்தினர்.

ஐபிஎல்-இல் பேட்டிங் செய்யும் அணிகள் இருபது ஓவர்களில் 300 ரன்களை எட்ட முயற்சிக்கின்றன. அது நடந்தால் இந்த ஆட்டத்தை 'கிரிக்கெட்' என்று அழைக்காமல் வெறும் 'பேட்டிங்' என்று அழைக்க வேண்டும் என்று ரபாடா கூறியிருந்தார்.

இப்போது பிசிசிஐ ஒரு சமநிலையை ஏற்படுத்த முயற்சிப்பதாகத் தெரிகிறது.

மட்டை (பேட்) இனி சோதனை செய்யப்படும்

கிரிக்கெட், பேட்டிங், ஐபிஎல் 2025, பிசிசிஐ, விதிகள்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,தென்னாப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் ககிசோ ரபாடா ஐபிஎல்-இல் குவிக்கப்படும் ரன்கள் குறித்து கருத்து தெரிவித்திருந்தார்

இனி ஒவ்வொரு பேட்ஸ்மேனும் பேட்டிங்கிற்கு 'கார்டு' அணிவதற்கு முன்பு அவர் பயன்படுத்தப் போகும் மட்டையைப் பரிசோதிக்க வேண்டும். அதாவது பேட்ஸ்மேன், பேட்டிங் செய்யத் தொடங்குவதற்கு முன்பு ஒரு நடுவர் மட்டையைச் சரிபார்ப்பார்.

இப்போது, நான்காவது நடுவர் தொடக்க பேட்ஸ்மேன்கள் ஆடுகளத்தில் கால் வைப்பதற்கு முன்பு அவர்களின் மட்டைகளை சோதனை செய்வார். அதன் பின்னர் மைதானத்திற்கு வரும் பேட்ஸ்மேன்களின் மட்டைகளை மைதானத்தில் இருக்கும் நடுவர்கள் சரிபார்ப்பார்கள்.

ஐபிஎல்-இல் பல பேட்ஸ்மேன்கள் நிர்ணயிக்கப்பட்ட வரம்பை விட பெரிய மட்டைகளைப் பயன்படுத்திய சம்பவங்கள் வெளிச்சத்திற்கு வந்ததைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதுவரை, ஐபிஎல்-இல் இதைச் செய்த பேட்ஸ்மேன்களுக்கு எச்சரிக்கை மட்டுமே விடுக்கப்பட்டது.

களத்தில் வெளிப்படைத்தன்மை மற்றும் சமத்துவத்தைக் கொண்டுவர ஐபிஎல் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.

கடந்த ஆண்டு, இங்கிலீஷ் கவுண்டி சர்க்யூட் அணியான நாட்டிங்ஹாம்ஷயர் மட்டைகளைப் பயன்படுத்துவதில் விதிகளை மீறியதால் சில புள்ளிகளை இழக்க வேண்டியிருந்தது.

விதிகள் என்ன சொல்கின்றன?

கிரிக்கெட், பேட்டிங், ஐபிஎல் 2025, பிசிசிஐ, விதிகள்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,கிரிக்கெட் மட்டையின் அளவு குறித்து விதிகள் தெளிவாக வழங்கப்பட்டுள்ளன.

கிரிக்கெட்டில், ஒரு பேட்டர் பயன்படுத்தும் பேட் எவ்வளவு அகலமாகவும் கனமாகவும் இருக்க வேண்டும் என்பது குறித்த விதிகள் தெளிவாக உள்ளன.

கிரிக்கெட்டில் மட்டைக்கு இரண்டு பாகங்கள் உள்ளன, ஒன்று பிளேடு (Blade), மற்றொன்று கைப்பிடி (Handle).

மட்டையின் கைப்பிடி கேன் (Cane- மூங்கில் போன்ற) அல்லது மரத்தால் செய்யப்பட வேண்டும். பேட்டர் தனது கைகளால் இறுக்கிப் பிடிக்க உதவும் வகையில், கைப்பிடியில் ஒரு 'கிரிப்' (Grip) பொருத்தலாம். பொதுவாக இந்த 'கிரிப்' ரப்பரால் ஆனதாக இருக்கும்.

மட்டையின் கைப்பிடியைத் தவிர மற்ற பகுதி பிளேடு என்று அழைக்கப்படுகிறது. இது தொடர்பான விதிகளும் தெளிவாக உள்ளன.

MCC விதிகளின்படி, அதாவது லண்டனின் மார்லுபன் கிரிக்கெட் கிளப் விதிகளின்படி, கைப்பிடி உட்பட மட்டையின் மொத்த நீளம் 38 அங்குலம் அல்லது 96.52 செ.மீ-க்கு மிகாமல் இருக்க வேண்டும்.

மட்டையின் பிளேட்டின் அதிகபட்ச அகலம் 4.25 அங்குலம் அதாவது 10.8 செ.மீ இருக்கலாம்.

இதன் தடிமன் (Depth) 2.64 அங்குலம் அதாவது 6.7 சென்டிமீட்டர் வரை இருக்கலாம். விளிம்புகள் 1.56 அங்குலம் அதாவது 4.0 சென்டிமீட்டர் வரை இருக்கலாம்.

இவை MCC- இன் விதிகள். ஐபிஎல்-இல் நடுவர்களுக்கு வழங்கப்படும் முக்கோண ஸ்கேலில், ஒரு மட்டையின் முறையான அளவுகள் அச்சிடப்பட்டுள்ளன.

மட்டை 2.68 அங்குல தடிமனும், 4.33 அங்குல அகலமும், விளிம்புகள் 1.61 அங்குலமும் இருக்க வேண்டும். மட்டையின் கீழ் பகுதி, அதாவது வளைந்த பகுதி (Curve) 0.20 அங்குலம் வரை இருக்கலாம்.

ஐபிஎல் போட்டிகளில், மட்டைகளை அளவிடுவதற்கு இந்த தரநிலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒரு மட்டை இந்த தரத்தை பூர்த்தி செய்வது கட்டாயமாகும்.

இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) போட்டிகளில் பயன்படுத்தப்படும் மட்டைகளின் அளவு குறித்து கேள்விகள் எழுந்துவரும் நிலையில், மட்டைகளை அளவிடுவதற்காக நடுவர்கள் பரிசோதனை செய்யும் முறையை ஐபிஎல் நிர்வாகம் தொடங்கியுள்ளது.

போட்டியின் போது நடந்த சோதனைகள்

கிரிக்கெட், பேட்டிங், ஐபிஎல் 2025, பிசிசிஐ, விதிகள்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,மைதானத்தில் ஹர்திக் பாண்டியா உட்பட பல கிரிக்கெட் வீரர்களின் பேட்களை நடுவர்கள் சரிபார்த்துள்ளனர் (கோப்புப்படம்)

இந்த ஐபிஎல் சீசனுக்கு முன்பு, போட்டி நடக்கும் நாளில் மட்டைகளை சோதனை செய்யும் வழக்கம் இல்லை. அதிகாரிகள் போட்டிக்கு ஒரு நாள் முன்பு மட்டைகளை சோதித்துப் பார்ப்பார்கள். ஆனால் இந்த முறையில் ஒரு சிக்கல் இருந்தது, அதாவது பேட்டர் போட்டி நடைபெறும் நாளில் மற்றொரு மட்டையுடன் மைதானத்திற்குள் நுழைய முடியும்.

கிரிக்கெட்டில், பல பேட்டர்கள் நிர்ணயிக்கப்பட்ட வரம்பை விட அகலமான அல்லது தடிமனான மட்டையுடன் விளையாடியுள்ளனர்.

மட்டையின் அடிப்பகுதியில் ஒரு முக்கிய இடம் உள்ளது,

அதன் மூலம் தான் பேட்ஸ்மேன்கள் தங்களது பெரும்பாலான சிறந்த ஷாட்களை அடிப்பார்கள். அந்தப் பகுதி மேல் பகுதியை விட கனமாகவோ அல்லது அகலமாகவோ இருந்தால், மிகவும் சக்தி வாய்ந்த ஸ்ட்ரோக் அல்லது ஷாட்களை அடிக்க முடியும்.

அதிரடியாக பேட்டிங் செய்யும் பேட்ஸ்மேன்கள் அகலமான விளிம்புகளைக் கொண்ட மட்டைகளை விரும்புகிறார்கள்.

பெரும்பாலும் இதுபோன்ற சூழ்நிலையில், பந்து எதிர்பார்த்த வகையில் பேட்டில் படவில்லை என்றாலும் கூட அல்லது பந்து பேட்டின் விளிம்பில் பட்டாலும் கூட அது பவுண்டரியை தொடுகிறது.

இருப்பினும், இப்போது மட்டைகளை அதிகமாகக் கண்காணிப்பதால், எந்தவொரு பேட்ஸ்மேனும் நிர்ணயிக்கப்பட்ட வரம்பை விட பெரிய அல்லது அகலமான மட்டையுடன் மைதானத்திற்குள் நுழைய மாட்டார்கள் என்று எதிர்பார்க்கலாம்.

நடப்பு சீசனில் போட்டி நடக்கும் போது, ஹர்திக் பாண்டியா, ஷிம்ரான் ஹெட்மயர், நிதேஷ் ராணா மற்றும் பில் சால்ட் உள்ளிட்ட பல பேட்ஸ்மேன்களின் பேட்களை நடுவர்கள் சோதனை செய்துள்ளனர்.

மைதானத்தில் மட்டைகளை சோதனை செய்வது ஆட்டத்தை சீர்குலைக்கக் கூடும் என்ற அச்சமும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐபிஎல் தொடரில் பேட் அளவு தொடர்பான விதிகளை பேட்ஸ்மேன்கள் யாராவது மீறியுள்ளனரா என்பது இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.

https://www.bbc.com/tamil/articles/cwy7ndy4e47o

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ராஜஸ்தானுக்கு பயம் காட்டிய ஸ்டார்க் - த்ரில் ஆட்டத்தில் சூப்பர் ஓவரில் வென்ற டெல்லி

ராஜஸ்தானுக்கு ஆட்டம் காட்டிய ஸ்டார்க் -  த்ரில் ஆட்டத்தில் சூப்பர் ஓவரில் வென்ற டெல்லி

பட மூலாதாரம்,GETTY IMAGES

கட்டுரை தகவல்

  • எழுதியவர், க.போத்திராஜ்

  • பதவி, பிபிசி தமிழுக்காக

  • 2 மணி நேரங்களுக்கு முன்னர்

டெல்லியில் நேற்று (ஏப்ரல் 16) நடந்த ஐபிஎல் டி20 போட்டியின் 32வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை சூப்பர் ஓவரில் வென்றது டெல்லி கேபிடல்ஸ் அணி.

கடந்த 4 ஐபிஎல் சீசனில் முதல் சூப்பர் ஓவர் போட்டி நேற்று நடந்தது. மிகப் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு இடையே சூப்பர் ஓவரில் டெல்லி அணி வென்றது.

முதலில் பேட் செய்த டெல்லி கேபிடல்ஸ் அணி 5 விக்கெட் இழப்புக்கு 188 ரன்கள் சேர்த்தது. 189 ரன்கள் சேர்த்தால் வெற்றி என்னும் இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 188 ரன்கள் மட்டுமே சேர்த்ததால் ஆட்டம் சூப்பர் ஓவருக்கு சென்றது.

ஐபிஎல்

பட மூலாதாரம்,GETTY IMAGES

முதல் சூப்பர் ஓவர்

இந்த சீசனில் முதல் சூப்பர் ஓவரில் பேட் செய்த ராஜஸ்தான் அணியின் பேட்டர்கள் ஜெய்ஸ்வால், ரியான் பராக் ஆகியோர் ரன்அவுட் ஆகவே 2 விக்கெட் இழப்புக்கு அந்த அணி 11 ரன்கள் சேர்த்தது.

டெல்லி அணி, 12 ரன்கள் எடுத்தால் வெற்றி என்னும் இலக்குடன் களமிறங்கியது. ராஜஸ்தான் அணி சார்பாக சந்தீப் சர்மா பந்து வீசினார்.

கே.எல். ராகுல் ஒரு பவுண்டரி உள்பட 3 பந்துகளில் 7 ரன்கள் சேர்க்கவே டெல்லி அணிக்கு மீதமிருந்த 3 பந்துகளில் 5 ரன்கள் தேவைப்பட்டது.

களத்தில் இருந்த டிரிஸ்டன் ஸ்டெப்ஸ், மிட் விக்கெட்டில் சிக்ஸர் விளாசவே 4வது பந்திலேயே டெல்லி இலக்கை அடைந்து வென்றது.

டெல்லி அணி தோற்க வேண்டிய ஆட்டத்தை சூப்பர் ஓவருக்கு இழுத்துச் சென்ற மிட்செல் ஸ்டார்க் ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.

நான்கு ஓவர்கள் வீசிய ஸ்டார்க் 36 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார்.

பேட்டர்களின் மெத்தனம்

ஐபிஎல்

பட மூலாதாரம்,GETTY IMAGES

ராஜஸ்தான் அணியின் பக்கம்தான் வெற்றி வாய்ப்பு இருந்தது. களத்தில் இருந்த பேட்டர்கள் பெரிய ஷாட்டுக்கு முயலவில்லை, கைவசம் 5 விக்கெட்டுகள் வரை இருக்கும் நிலையில் டெத் ஓவர்களில் நிதானமாக ஆடியது ராஜஸ்தானை தோல்விக்கு இட்டுச் சென்றது.

ஹெட்மெயர், துருவ் ஜூரெல் பேட்டிலிருந்து பெரிய ஷாட் வந்திருந்தால் சூப்பர் ஓவர் வரை போட்டி சென்றிருக்க வாய்பில்லை.

இருபதாவது ஓவரை ஸ்டார்க் வீசும்போது, ராஜஸ்தான் அணியின் வெற்றிக்கு 9 ரன்கள் தேவைப்பட்டன. கைவசம் 6 விக்கெட்டுகள் இருந்தன. ஆனால் ஸ்டார்க் துல்லியமாக 5 யார்கர்களை வீசி 8 ரன்களை மட்டுமே கொடுத்தார். கடைசிப் பந்தில் 2 ரன்கள் ஓட முயன்ற துருவ் ஜூரெல் ரன் அவுட் ஆகவே ஆட்டம் சூப்பர் ஓவருக்கு சென்றது.

டெல்லி அணியை தோல்வியிலிருந்து மீட்ட ஆபத்பாந்தவனாக ஸ்டார்க் நேற்று திகழ்ந்தார். இந்த வெற்றியால் டெல்லி கேப்டல்ஸ் அணி 6 போட்டிகளில் 5இல் வெற்றி பெற்று, 10 புள்ளிகளுடன் முதலிடத்துக்கு முன்னேறியுள்ளது. ராஜஸ்தான் அணி 4 புள்ளிகளுடன் 8வது இடத்தில் இருக்கிறது.

ஸ்டெப்ஸ், அக்ஸர் அபாரம்

டெல்லி அணிக்கு 6வது போட்டியாக தொடக்க ஆட்டக்காரர் ப்ரேசர் மெக்ருக் சிறப்பான தொடக்கத்தை அளிக்காமல் ஏமாற்றி 9 ரன்களில் ஆர்ச்சர் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். கடந்த போட்டியில் அதிரடியாக ஆடிய கருண் நாயர் இந்த முறை டக்-அவுட் ஆகி வெளியேறினார்.

ஆனால் துஷார் தேஷ்பாண்டே வீசிய 2வது ஓவரில் அபிஷேக் போரெல் 23 ரன்களை விளாசி ரன்ரேட்டை குறையவிடாமல் கொண்டு சென்றார். 34 ரன்களுக்கு டெல்லி 2 விக்கெட்டுகளை இழந்தது.

மூன்றாவது விக்கெட்டுக்கு கே.எல்.ராகுல் களமிறங்கி, அபிஷேக்குடன் சேர்ந்தார். பவர்ப்ளேவில் டெல்லி 2 விக்கெட் இழப்புக்கு 46 ரன்கள் சேர்த்தது. கே.எல்.ராகுல் நிதானமாக பேட் செய்து 17 பந்துகளில் 18 ரன்கள் என மெதுவாக ஆடினார். நீண்ட நேரம் நிலைக்காத ராகுல் 32 பந்துகளில் 38 ரன்கள் சேர்த்து ஆர்ச்சர் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார். 3வது விக்கெட்டுக்கு இருவரும் 63 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர்.

விக்கெட்டுகள் சரிந்த போதிலும் அரைசதம் நோக்கி நகர்ந்த அபிஷேக் போரெல் 49 ரன்களில் ஹசரங்கா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். 5வது விக்கெட்டுக்கு கேப்டன் அக்ஸர் படேல், டிரிஸ்டன் ஸ்டெப்ஸ் கூட்டணிதான் ஆட்டத்தின் போக்கை மாற்றியது.

அருமையான கேமியோ ஆடிய அக்ஸர் படேல் 14 பந்துகளில் 2 சிக்ஸர், 4 பவுண்டரிகள் என 34 ரன்கள் சேர்த்து தீக்சனா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். 14 ஓவர்களில் 105 ரன்களுக்கு 4 விக்கெட்டுகள் என இருந்த டெல்லி அணி, அக்ஸரின் அதிரடியாக அடுத்த 2 ஓவர்களில் 146 ரன்களை எட்டியது, அக்ஸரும் 34 ரன்களில் வெளியேறினார்.

அஷுதோஷ் சர்மா, ஸ்டெப்ஸ் கூட்டணி கடைசி நேரத்தில் அதிரடியாக ஆடினர். ஆர்ச்சர் வீசிய 19வது ஓவரில் ஸ்டெப்ஸ் 3 பவுண்டரிகள் உள்பட 16 ரன்கள் சேர்த்தார். 20வது ஓவரை வீசிய சந்தீப் சர்மா 4 வைடுகள், ஒரு நோ பால் என 11 பந்துகளை வீசி பவுண்டரி, சிக்ஸர் என 19 ரன்களை வாரி வழங்கினார்.

ஐபிஎல் வரலாற்றிலேயே ஒரு ஓவரில் அதிகமான பந்துகளை வீசிய பெருமையை சந்தீப் பெற்றார். 19 பந்துகளில் இருவரும் சேர்ந்து 42 ரன்கள் சேர்த்தனர். ஸ்டெப்ஸ் 14 பந்துகளில் 34 ரன்களுடனும், அஷுதோஷ் சர்மா 15 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.

கடைசி ஓவரில் சொதப்பிய சந்தீப் சர்மா

ஐபிஎல்

பட மூலாதாரம்,GETTY IMAGES

ராஜஸ்தான் வேகப்பந்துவீச்சாளர் சந்தீப் சர்மா கடைசி ஓவரை வீசுவதற்கு முன்பு வரை 3 ஓவர்களை வீசி 14 ரன்கள் மட்டுமே வழங்கி கட்டுக்கோப்பாகப் பந்துவீசியிருந்தார்.

ஆனால் 20வது ஓவரில் 4 வைடுகள், ஒரு நோபால் ஒரு சிக்ஸர், பவுண்டரி எனத் தேவையின்றி 11 பந்துகளை வீசி 19 ரன்களை வாரி வழங்கினார். இந்த ஓவரை சந்தீப் சர்மா வழக்கம்போல் வீசியிருந்தாலே ஸ்கோரை கட்டுப்படுத்தியிருக்கலாம். ராஜஸ்தான் அணி வென்றிருக்கும்.

அப்படியில்லாமல் அவர் 19 ரன்களை சந்தீப் வழங்கியது ஆட்டத்தை டெல்லி பக்கம் திருப்பிவிட்டது.

சாம்ஸன் ரிட்டயர் ஹர்ட்

ராஜஸ்தான் அணியும் 189 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் அதிரடியாகத் தொடங்கியது. சாம்ஸன், ஜெய்ஸ்வால் டெல்லி பந்துவீச்சை வெளுத்து வாங்கினர்.

முகேஷ், மோகித் சர்மா, விப்ராஜ் ஓவரில் பவுண்டரி, சிக்ஸர் என சாம்ஸன் வெளுத்தார். இதனால் பவர்ப்ளே ஓவர் முடிவில் ராஜஸ்தான் அணி விக்கெட் இழப்பின்றி 63 ரன்கள் சேர்த்து வலுவாக இருந்தது.

ஆனால், சிறப்பாக பேட் செய்து வந்த சாம்ஸனுக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டு அவரால் தொடர்ந்து விளையாட முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் 19 பந்துகளில் 31 ரன்கள் சேர்த்த நிலையில் சாம்ஸன் ரிட்டயர் ஹர்ட் முறையில் வெளியேறினார்.

அடுத்து களமிறங்கிய ரியான் பராக் 8 ரன்னில் அக்ஸர் பந்துவீச்சில் போல்டானார். 3வது விக்கெட்டுக்கு வந்த ராணா, ஜெய்ஸ்வாலுடன் சேர்ந்தார். இருவரும் ஸ்கோரை உயர்த்தி மெல்ல அணியை வெற்றிக்கு நகர்த்தினர்.

ஜெய்ஸ்வால் 34 பந்துகளில் அரைசதம் அடித்தார். குல்தீப் பந்துவீச்சில் இறங்கி ஷாட் அடிக்க முற்பட்ட ஜெய்ஸ்வால் 51 ரன்னில் ஸ்டார்க்கிடம் கேட்ச் கொடுத்தார்.

ராணா அதிரடி பேட்டிங்

ஐபிஎல்

பட மூலாதாரம்,GETTY IMAGES

அடுத்த சிறிது நேரத்தில், ராணாவும் ஆட்டமிழக்க வேண்டியது. ஆனால், ராணா தப்பிவிட்டார். அவர் 20 ரன்கள் சேர்த்திருந்தபோது, அக்ஸர் பந்துவீச்சில் லாங் ஆன் திசையில் கிடைத்த கேட்சை ஸ்டெப்ஸ் தவறவிட்டார்.

இந்த வாய்ப்பைப் பயன்படுத்திய ராணா அடுத்த 12 பந்துகளில் 31 ரன்களை சேர்த்து, 26 பந்துகளில் அரைசதம் அடித்தார். ராணா களத்தில் இருந்த வரை ராஜஸ்தான் அணி வென்றுவிடும் என்று கருதப்பட்டது. ஆனால், மிட்செல் ஸ்டார்க் பந்துவீச்சில் ராணா 51 ரன்னில் கால்காப்பில் வாங்கி ஆட்டமிழந்தார்.

வாய்பைத் தவறவிட்ட ஹெட்மெயர், ஜூரெல்

கடைசி 2 ஓவர்களில் ராஜஸ்தான் வெற்றிக்கு 23 ரன்கள்தான் தேவைப்பட்டன. ஹெட்மெயர், துருவ் ஜூரெல் களத்தில் இருந்தனர். மோகித் சர்மா வீசிய 19வது ஓவரில் ஜூரெல் ஒரு சிக்ஸர் மட்டுமே அடிக்க 14 ரன்கள் சேர்த்தனர். ஹெட்மெயர் பெரிய ஷாட்களை அடிக்கும் திறமை கொண்டவர். ஆனால், நேற்று அவரது பேட்டில் எதிர்பார்த்த ஷாட் சிக்கவில்லை.

கடைசி ஓவரில் ராஜஸ்தான் வெற்றிக்கு 9 ரன்கள் தேவைப்பட்டன. கடைசி ஓவரை ஸ்டார்க் வீசினார். முதல் பந்தை சந்தித்த ஹெட்மெயர் ஒரு ரன் எடுத்து ஸ்ட்ரைக்கை ஜூரெலிடம் கொடுத்தார். அதன் பிறகு ஸ்டார்க் 5 பந்துகளையும் யார்க்கர்களாகவும், அவுட்சைட் யார்க்கர்களாகவும் வீசவே ஒரு ரன், 2 ரன்கள் என சேர்க்க முடிந்தது.

கடைசி பந்தில் ராஜஸ்தான் வெற்றிக்கு 2 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் ஜூரெல் மிட்விக்கெட்டில் தட்டிவிட்டு ஒரு ரன் ஓடி, 2வது ரன்னுக்கு முயலும்போது ரன்அவுட் ஆகவே ஆட்டம் டிராவில் முடிந்து சூப்பர் ஓவருக்கு சென்றது.

சூப்பர் ஓவர்

ஐபிஎல்

பட மூலாதாரம்,GETTY IMAGES

சூப்பர் ஓவரில் ஹெட்மெயர், ரியான் பராக் களமிறங்கினர். ஸ்டார்க் வீசிய ஓவரில் முதல் பந்தில் ரன் சேர்க்காத ஹெட்மெயர் 2வது பந்தில் பவுண்டரியும், அடுத்து ஒரு ரன்னும் எடுத்தார்.

நான்காவது பந்தை சந்தித்த ரியான் பராக் பவுண்டரி விளாசவே அந்த பந்து நோ பாலாக மாறியது. 4வது பந்தில் ரியான் பராக் ரன்அவுட் ஆனார். 5வது பந்தில் ஹெட்மெயர் ரன் அவுட் ஆகவே 2 விக்கெட்டுகளை இழந்து 12 ரன்களை ராஜஸ்தான் சேர்த்தது.

சூப்பர் ஓவரில் டெல்லி அணிக்கு 12 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஸ்டெப்ஸ், ராகுல் களமிறங்கினர். சந்தீப் சர்மா வீசிய ஓவரில் முதல் பந்தில் ராகுல் 2 ரன்களை எடுத்தார். அடுத்த பந்தில் ராகுல் பவுண்டரி விளாசி, 3வது பந்தில் ஒரு ரன் எடுத்தார். 3 பந்துகளில் 6 ரன்கள் கிடைத்தன. 4வது பந்தை எதிர்கொண்ட ஸ்டெப்ஸ் மிட்விக்கெட்டில் சிக்ஸர் விளாசி வெற்றியைத் தேடித் தந்தார்.

ராஜஸ்தானின் வெற்றியைப் பறித்த ஸ்டார்க்

வெற்றி வாய்ப்பை நழுவவிட்டது குறித்து ராஜஸ்தான் கேப்டன் சாம்ஸன் கூறுகையில், "நான் பேட் செய்யும் சூழலில் இல்லை, அதனால்தான் மீண்டும் வரவில்லை. என் உடல்நிலை குறித்து நாளை தெரியும். நாங்கள் சிறப்பாகப் பந்துவீசினோம். எங்களின் பந்துவீச்சாளர்களும், பீல்டர்களும் நன்றாகச் செயல்பட்டதால்தான் குறைந்த ரன்களில் சுருட்ட முடிந்தது.

டெல்லிஅணியின் ஸ்கோர் இந்த மைதானத்தில் சேஸ் செய்யக் கூடியதுதான். ஸ்டார்க் வீசிய கடைசி ஓவர் ஆட்டத்தைத் திருப்பியது. 20வது ஓவரில்தான் டெல்லி அணிக்கு ஸ்டார்க் வெற்றியைத் தேடிக் கொடுத்துள்ளார். எங்களின் வெற்றியை ஸ்டார்க் எடுத்துச் சென்றார்," என்று தெரிவித்தார்.

மேலும், "கடந்த சில சீசன்களாகவே சிறப்பாகப் பந்துவீசுகிறார் என்பதால் சந்தீப் சர்மாவை சூப்பர் ஓவரில் பயன்படுத்தினோம். நான் களத்தில் இல்லாதது துரதிர்ஷ்டம். ஜோப்ரா ஆர்ச்சர் இழந்த ஃபார்மை மீட்டது அற்புதம்," என்றும் குறிப்பிட்டார்.

அடுத்த முக்கிய ஆட்டங்கள்

ஐபிஎல்

பட மூலாதாரம்,GETTY IMAGES

இன்றைய ஆட்டம்

மும்பை இந்தியன்ஸ் vs சன்ரைசர்ஸ் ஹைதராபாத்

இடம்: மும்பை

நேரம்: இரவு 7.30

சிஎஸ்கேவின் அடுத்த ஆட்டம்

சென்னை சூப்பர் கிங்ஸ் vs மும்பை இந்தியன்ஸ்

நாள் - ஏப்ரல் 20

இடம் – மும்பை

நேரம்- இரவு 7.30

மும்பையின் அடுத்த ஆட்டம்

மும்பை இந்தியன்ஸ் vs சிஎஸ்கே

நாள் - ஏப்ரல் 20

இடம் – மும்பை

நேரம்- இரவு 7.30 மணி

ஆர்சிபியின் அடுத்த ஆட்டம்

ஆர்சிபி vs பஞ்சாப் கிங்ஸ்

நாள் - ஏப்ரல் 18

இடம் – பெங்களூரு

நேரம்- மாலை 7.30 மணி

ஆரஞ்சு தொப்பி யாருக்கு?

நிகோலஸ் பூரன்(லக்னெள சூப்பர் ஜெயின்ட்ஸ்)-357 ரன்கள்(7 போட்டிகள்)

சாய் சுதர்சன்(குஜராத் டைட்டன்ஸ்)-329 ரன்கள்(6 போட்டிகள்)

மிட்செல் மார்ஷ்(லக்னெள சூப்பர் ஜெயின்ட்ஸ்) 295 ரன்கள்(6 போட்டிகள்)

பர்ப்பிள் தொப்பி யாருக்கு?

நூர் அகமது(சிஎஸ்கே) - 12 விக்கெட்டுகள் (6 போட்டிகள்)

குல்தீப் யாதவ்(டெல்லி) - 11 விக்கெட்டுகள்(6 போட்டிகள்)

கலீல் அகமது(சிஎஸ்கே) - 11 விக்கெட்டுகள்(7 போட்டிகள்)

- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/cvgpq034q00o

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஆபத்தான நிலையில் சன்ரைசர்ஸ் - மும்பை அணிக்கு ப்ளே ஆஃப் வாய்ப்பு எப்படி உள்ளது?

ஐபிஎல்

பட மூலாதாரம்,GETTY IMAGES

கட்டுரை தகவல்

  • எழுதியவர், க.போத்திராஜ்

  • பதவி, பிபிசி தமிழுக்காக

  • 4 மணி நேரங்களுக்கு முன்னர்

மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று (ஏப்ரல் 17) நடந்த ஐபிஎல் டி20 போட்டியின் 33வது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது மும்பை இந்தியன்ஸ் அணி.

முதலில் பேட் செய்த சன்ரைசர்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 162 ரன்கள் சேர்த்தது. 163 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ், 18.1 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 166 ரன்கள் சேர்த்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

தப்பிக்கும் மும்பை இந்தியன்ஸ்

இந்த வெற்றி மூலம் மும்பை அணி மெல்ல ப்ளே ஆஃப் சுற்றை நோக்கி தன்னைப் பாதுகாப்பாக நகர்த்தியுள்ளதோடு, தொடர்ந்து 2வது வெற்றியையும் பெற்றுள்ளது. ஏழு போட்டிகளில் 4 தோல்வி, 3 வெற்றிகளைப் பெற்று 6 புள்ளிகளுடன் மும்பை 7வது இடத்தில் இருக்கிறது.

இதில் நிகரரன்ரடே் +0.239 என இருப்பது கூடுதல் சாதகம். இன்னும் மும்பை அணிக்கு 7 போட்டிகள் மீதம் இருப்பதால், அதில் குறைந்தபட்சம் 5 போட்டிகளில் வெற்றி கட்டாயம். அப்போதுதான் ப்ளே ஆஃப் சுற்றுக்குள் செல்ல முடியும்.

ஆனால் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் நிலைமை பரிதாபமாக இருக்கிறது. கடந்த 5 போட்டிகளில் ஒரு வெற்றி மட்டுமே பெற்றுள்ளது, 7 போட்டிகளில் 2 வெற்றி 5 தோல்விகள் என 4 புள்ளிகளுடன் 9வது இடத்தில் இருக்கிறது.

சன்ரைசர்ஸ் அணிக்கு இன்னும் 7 போட்டிகள் இருப்பதால், அதில் குறைந்தபட்சம் 6 வெற்றிகள் பிரமிப்பூட்டும் வகையில் தேவை. அல்லது 7 போட்டிகளிலும் வென்றால்தான் ப்ளே ஆஃப் சுற்றை உறுதி செய்ய முடியும். அடுத்து வரும் போட்டிகளில் 2 தோல்விகளைச் சந்தித்தாலே சன்ரைசர்ஸ் அணியின் பயணம் லீக் சுற்றோடு முடிந்துவிடும்.

மெதுவான ஆடுகளம்

ஐபிஎல்

பட மூலாதாரம்,GETTY IMAGES

மும்பை அணியின் வெற்றியில் ஆடுகளத்துக்கு முக்கியப் பங்கு இருக்கிறது. மெதுவான, மந்தமான ஆடுகளத்தை தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்தி மும்பை பந்துவீச்சாளர்கள் சிறப்பாகப் பந்துவீசியது வெற்றிக்குக் காரணம்.

குறிப்பாக ஆஃப் ஸ்பின்னர் வில் ஜேக்ஸ் 3 ஓவர்கள் வீசி 14 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளையும், பேட்டிங்கில் 36 ரன்களையும் சேர்த்து வெற்றிக்கு முக்கியக் காரணமாக இருந்ததால் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.

பும்ரா 4 ஓவர்கள் வீசி 21 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார். போல்ட் 4 ஓவர்களில் 29 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை சாய்த்தார்.

பொறுமை, நிதானம் இல்லை

சன்ரைசர்ஸ் அணி சிவப்பு மண் கொண்ட பேட்டிங்கிற்கு சாதகமான ஆடுகளத்தில் ஆடிப் பழகியவர்கள். இதுபோன்ற மெதுவான ஆடுகளத்தில் அதிரடி பேட்டிங் மனப்பான்மை கொண்ட அந்த பேட்டர்களால் விளையாட முடியவில்லை. வான்கடே ஆடுகளம் மோசமானது என்று நிராகரிக்க முடியாது, இந்த ஆடுகளத்திலும் குறைந்தபட்சம் 180 ரன்கள் வரை சராசரியாக சேர்க்க முடியும்.

ஆனால் இந்த ஆடுகளத்தில் நிதானமாக பேட் செய்து பந்துகளைக் கணித்து ஆட வேண்டும். அந்தப் பொறுமையும் நிதானமும் சன்ரைசர்ஸ் பேட்டர்களிடம் இல்லை. பவுலர்கள் கைகளில் இருந்து ரிலீஸ் ஆகும் பந்து பேட்டரை நோக்கி வேகமாக வராது, நினைத்த வேகத்தைவிடக் குறைவாகவும், சற்று ஸ்விங்குடன் அல்லது டர்ன்னுடன் வரும் என்பதால் பேட்டர்கள் கவனத்துடன் ஆட வேண்டும். ஆனால், சன்ரைசர்ஸ் பேட்டர்கள் யாரும் ஆங்கர் ரோல் எடுத்து விளையாடவில்லை, ஒருவர்கூட அரைசதம் அடிக்கவில்லை.

அபிஷேக் சர்மா எடுத்த 40 ரன்கள்தான் அதிகபட்சம். அடுத்தார்போல கிளாசன் 37 ரன்கள் சேர்த்தார். மற்ற பேட்டர்கள் அனைவரும் 25 ரன்களுக்கு உள்ளாகவே ஆட்டமிழந்தனர். நிதானமாக பேட் செய்திருந்தால் கூடுதலாக 20 முதல் 25 ரன்களை சேர்த்திருக்கலாம், ஆட்டத்தை நெருக்கடியாகக் கொண்டு சென்றிருக்கலாம்.

அதிர்ஷ்டத்தை தவறவிட்ட சன்ரைசர்ஸ்

ஐபிஎல்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,அபிஷேக் சர்மா

அபிஷேக் சர்மா, டிராவிஸ் ஹெட் இருவருக்கும் நேற்றைய ஆட்டம் சிறப்பான தொடக்கமாக இல்லை. இருவரும் நினைத்து போல ஷாட்களை அடிக்க முடியவும் இல்லை.

இதில் டிராவிஸ் ஹெட் ரன்சேர்க்க மிகவும் திணறினார், அபிஷேக் ஓரளவு சமாளித்து பவுண்டரிகளை விளாசினார். அதிலும் தீபக் சஹர் பந்துவீச்சில் அபிஷேக் சர்மா அடித்த கேட்சை வில் ஜேக்ஸ் தவறவிட்டார், டிராவிஸ் ஹெட்டுக்கு கரன் சர்மா ஒரு கேட்சை கோட்டை விட்டார்.

இந்த இரு அதிர்ஷ்ட வாய்ப்புகள் கிடைத்தும் இருவரும் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. பவர்ப்ளேவில் விக்கெட் இழப்பின்றி சன்ரைசர்ஸ் 46 ரன்கள் சேர்த்தது.

ஹர்திக் பாண்டியா வீசிய 10வது ஓவரில் டிராவிஸ் ஹெட் ஸ்குயர் லெக் திசையில் அடித்த ஷாட் கேட்சானது. அப்போது அவர் 24 ரன்கள் எடுத்திருந்தார். ஆனால், ஹர்திக் வீசியது நோபால் என அறிவிக்கப்பட்டதால் ஹெட் அவுட் ஆவதில் இருந்து தப்பித்தார். டிராவிஸ் ஹெட்டுக்கு 2வது அதிர்ஷ்ட வாய்ப்பு கிடைத்தும் அவரால் நிலைத்து பேட் செய்ய முடியவில்லை.

மந்தமான பேட்டிங்

பவர்ப்ளேவில் பும்ரா 2 ஓவர்கள் வீசி 10 ரன்கள் மட்டுமே கொடுத்து சன்ரைசர்ஸ் ரன்ரேட்டை சுருக்கினார். கரன் சர்மாவுக்கு விரலில் ஏற்பட்ட காயத்தால் பந்துவீச முடியாத சூழலில் வில் ஜேக்ஸ் பந்துவீச அழைக்கப்பட்டார். ஜேக்ஸ் தனது 2வது ஓவரிலேயே இஷான் கிஷன் விக்கெட்டையும், 12வது ஓவரில் டிராவிஸ் ஹெட்(28) விக்கெட்டையும் வீழ்த்தி சன்ரைசர்ஸ் அணிக்கு அதிர்ச்சியளித்தார். அபிஷேக் சர்மா 40 ரன்களில் பாண்டியா ஓவரிலும், இஷான் கிஷன் 3 ரன்களில் ஜேக்ஸ் பந்துவீச்சிலும் ஆட்டமிழந்தனர்.

ஆடுகளம் பேட் செய்யக் கடினமாக இருந்தது, பந்து பேட்டரை நோக்கி மெதுவாக வந்தது என்பது சரியான கூற்றுதான். ஆனால், பேட்டர்கள் சற்று பொறுமையுடன் ஷாட்களை நேர்த்தியாக அடித்திருந்தால் விக்கெட்டை காப்பாற்றியிருக்க முடியும். சன்ரைசர்ஸ் அணியின் தொடக்க வீரர்களுக்குக் கிடைத்த அதிர்ஷ்ட வாய்ப்புகளைப் பயன்படுத்தத் தவறிவிட்டனர்.

சன்ரைசர்ஸ் அணியின் பேட்டர்கள் நேற்று மிக மந்தமாக பேட் செய்தனர். பேட்டர்களிடம் இருந்து பவுண்டரி, சிக்ஸர் வராததுதான் ஸ்கோர் உயராததற்கு முக்கியக் காரணம். 8 முதல் 15வது ஓவர்களுக்கு இடையே சன்ரைசர்ஸ் அணி பேட்டர்கள் 4 பவுண்டரி மட்டுமே அடித்திருந்தனர். நிதிஷ் ரெட்டி 21 பந்துகளில் 19 ரன்கள் சேர்த்ததில் ஒரு பவுண்டரி மட்டுமே அடித்திருந்தார். அவரும் போல்ட் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

காப்பாற்றிய கிளாசன்

ஐபிஎல்

பட மூலாதாரம்,GETTY IMAGES

ஆனால் கிளாசன் களத்தில் இருந்ததால் ஓரளவுக்கு ஸ்கோர் உயர்ந்தது. கிளாசன், அனிகேத் வர்மா இருவரும் கடைசி 3 ஓவர்களில் 47 ரன்கள் சேர்த்ததுதான் சன்ரைசர்ஸ் அணி 150 ரன்களை கடக்க உதவியது.

கிளாசன் 2 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகளுடன் 37 ரன்களில் பும்ரா பந்துவீச்சில் போல்டானார். அனிகேத் வர்மா தனது பங்கிற்கு 2 சிக்ஸர்களையும், கம்மின்ஸ் ஒரு சிக்ஸரையும் விளாசவே சன்ரைசர்ஸ் 162 ரன்கள் சேர்த்தது.

ஆனால், சன்ரைசர்ஸ் அணி சேர்த்தது இந்த ஆடுகளத்தில் டிபெண்ட் செய்யப் போதுமானது அல்ல. இன்னும் கூடுதலாக 25 ரன்கள் சேர்த்திருந்தால் எதிரணிக்கு நெருக்கடி அளித்திருக்கலாம்.

மும்பை அதிரடித் தொடக்கம்

இம்பாக்ட் ப்ளேயராக களமிறங்கிய ரோஹித் சர்மா, ரெக்கில்டன் ஜோடி அதிரடியாக ஆட்டத்தைத் தொடங்கினர். ரோஹித் சர்மா இந்த சீசனில் முதல் அரைசதத்தை இன்னும் அடிக்கவில்லை என்ற போதிலும், 3 சிக்ஸர்களை விளாசி ரன்ரேட்டை உயர்த்தி 26 ரன்களில் கம்மின்ஸ் பந்தவீச்சில் ஆட்டமிழந்தார். ரெக்கில்டன் தொடக்கத்தில் திணறியபோதும், மலிங்கா ஓவரில் இஷான் 3 பவுண்டரிகளை விளாசினார்.

ஜீசன் அன்சாரி பந்துவீச்சில் ரெக்கில்டன் அடித்த ஷாட் கேட்சானது. ஆனால், விக்கெட் கீப்பிங் செய்த கிளாசனின் கைகள் ஸ்டெம்புக்கு வெளியே வந்ததால் நோபால் என அறிவிக்கப்பட்டது. இதனால் பெவிலியன் சென்ற ரெக்கில்டன் திரும்ப அழைக்கப்பட்டார். கிடைத்த வாய்ப்பைத் தவறவிட்ட ரெக்கில்டன் 31 ரன்னில் ஹர்சல் படேல் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

சிரமப்படாத வெற்றி

ஐபிஎல்

பட மூலாதாரம்,GETTY IMAGES

மூன்றாவது விக்கெட்டுக்கு வில் ஜேக்ஸ், சூர்யகுமார் ஜோடி 52 ரன்கள் சேர்த்தனர். சூர்யகுமார் 2 பவுண்டரி, 2 சிக்ஸர்களுடன் 21 ரன்கள் சேர்த்து கம்மின்ஸ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அடுத்த சிறிது நேரத்தில் வில் ஜேக்ஸ் 36 ரன்னில் கம்மின்ஸிடம் விக்கெட்டை இழந்தார்.

திலக் வர்மா, ஹர்திக் பாண்டியா ஜோடி கடைசி நேரத்தில் அதிரடியாக ஆடி வெற்றியை நோக்கி அணியைச் செலுத்தினர். ஹர்திக் ஒரு சிக்ஸர், 3 பவுண்டரிகள் என 9 பந்துகளில் 21 ரன்கள் எனச் சிறிய கேமியோ ஆடி ஆட்டமிழந்தார். திலக் வர்மா 21 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார்.

'பேட் செய்யக் கடினமாக இருந்தது' - ஹர்திக்

மும்பை அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா கூறுகையில், "நாங்கள் மிகவும் ஸ்மார்ட்டாக, துல்லியமாகப் பந்து வீசினோம் என நினைக்கிறேன். திட்டங்களை சரியாகச் செயல்படுத்தியுள்ளோம். ஆடுகளம் பேட்டிங் செய்யக் கடினமாக இருந்தது, சில பந்துகளை விளையாடவே முடியவில்லை. இருப்பினும் சில நல்ல ஷாட்களை அடித்தோம்.

ஆடுகளம் வேகப்பந்துவீச்சுக்குச் சாதகமாக இருக்கிறதா என்பதைக் கண்டுபிடிக்க முடியாத வகையில் இருந்தது. வேகத்தைக் குறைத்து யார்க்கர் பந்துகளை வீச வைத்தோம், வேகத்தைக் குறைத்து பந்துவீச வைத்தவுடன் நல்ல பலன் கிடைத்தது," என்று தெரிவித்தார்.

அதனால்தான் பவர்ப்ளே முடிந்தவுடன் ஜேக்ஸை அழைத்து பந்துவீச வைத்ததாகக் கூறிய ஹர்திக், "அவரது பந்துவீச்சு சிறப்பாக இருந்தது. எங்கள் வெற்றிக்கு பந்துகளும், ரன்களும் சரிசமமாக இருந்தபோது, முன்னெடுத்துச் செல்ல சில பவுண்டரிகள், சிக்ஸர்கள் இருந்தால் பதற்றம் குறையும் என்பதால், சிறிய கேமியோ ஆடி வெற்றியை நோக்கி நகர்த்தினோம்," எனத் தெரிவித்தார்.

அடுத்த முக்கிய ஆட்டங்கள்

ஐபிஎல்

பட மூலாதாரம்,GETTY IMAGES

இன்றைய ஆட்டம்

  • ஆர்சிபி vs பஞ்சாப் கிங்ஸ்

  • இடம்: பெங்களூரு

  • நேரம்: இரவு 7.30

சிஎஸ்கேவின் அடுத்த ஆட்டம்

  • சென்னை சூப்பர் கிங்ஸ் vs மும்பை இந்தியன்ஸ்

  • நாள் - ஏப்ரல் 20

  • இடம் – மும்பை

  • நேரம்- இரவு 7.30

மும்பையின் அடுத்த ஆட்டம்

  • மும்பை இந்தியன்ஸ் vs சிஎஸ்கே

  • நாள் - ஏப்ரல் 20

  • இடம் – மும்பை

  • நேரம்- இரவு 7.30 மணி

ஆர்சிபியின் அடுத்த ஆட்டம்

  • ஆர்சிபி vs பஞ்சாப் கிங்ஸ்

  • நாள் - ஏப்ரல் 20

  • இடம் – நியூ சண்டிகர்

  • நேரம்- மாலை 3.30 மணி

ஆரஞ்சு தொப்பி யாருக்கு?

  • நிகோலஸ் பூரன்(லக்னெள சூப்பர் ஜெயின்ட்ஸ்)-357 ரன்கள்(7 போட்டிகள்)

  • சாய் சுதர்சன்(குஜராத் டைட்டன்ஸ்)-329 ரன்கள்(6 போட்டிகள்)

  • மிட்ஷெல் மார்ஷ்(லக்னெள சூப்பர் ஜெயின்ட்ஸ்) 295 ரன்கள்(6 போட்டிகள்)

பர்பிள் தொப்பி யாருக்கு?

  • நூர் அகமது (சிஎஸ்கே) 12 விக்கெட்டுகள் (6 போட்டிகள்)

  • குல்தீப் யாதவ் (டெல்லி) 11 விக்கெட்டுகள் (6 போட்டிகள்)

  • கலீல் அகமது (சிஎஸ்கே) 11 விக்கெட்டுகள் (7 போட்டிகள்)

- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/cn4wjw7yzj4o

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சிஎஸ்கே பிளேஆஃப் செல்லுமா? தோனிக்கு இருக்கும் இரண்டே வாய்ப்பு என்ன?

சிஎஸ்கே அணி

பட மூலாதாரம்,GETTY IMAGES

கட்டுரை தகவல்

  • எழுதியவர், க.போத்திராஜ்

  • பதவி, பிபிசி தமிழுக்காக

  • 34 நிமிடங்களுக்கு முன்னர்

18-வது ஐபிஎல் டி20 சீசன் தொடங்கி ஏறக்குறைய 74 ஆட்டங்களில் 32 போட்டிகள் முடிந்தநிலையில் இன்னும் எந்த அணிக்கு ப்ளே ஆஃப் வாய்ப்பு இருக்கிறது என்பதை ஊகிக்க முடியாத சூழல்தான் இருக்கிறது.

நடப்பு சாம்பியன், முன்னாள் சாம்பியன்கள், முதல்முறையாக கோப்பைக்காக போராடும் அணிகள், 18 ஆண்டுகளாக கோப்பைக்காக காத்திருக்கும் அணி என ஒவ்வொரு அணியும் ப்ளே ஆஃப்-க்கு நுழைய முழுத்திறமையையும் வெளிப்படுத்தி விளையாடி வருகின்றன

ஒவ்வொரு அணியும் லீக் சுற்றில் 14 போட்டிகளில் விளையாட வேண்டும். அந்த வகையில் சில அணிகள் 7 ஆட்டங்களை முடித்துள்ளன. சில அணிகள் 5 ஆட்டங்களையும், 6 ஆட்டங்களையும் விளையாடியுள்ளன. சராசரியாகப் பார்த்தால் ஒவ்வொரு அணியும் இன்னும் 7 முதல் 8 ஆட்டங்களில் விளையாட வேண்டியுள்ளது.

இனிவரும் ஆட்டங்கள்தான் ஒவ்வொரு அணிக்கும் முக்கியமானதாகும். இதில் ப்ளே ஆஃப் சுற்றுக்குச் செல்ல விரும்பும் ஒவ்வொரு அணியும் குறைந்தபட்சம் 8 வெற்றிகளைப் பெற வேண்டும் அல்லது சிக்கல் இல்லாமல் ப்ளே ஆஃப் செல்ல 9 வெற்றிகளைப் பெற வேண்டும் என்பதால் அடுத்துவரும் லீக் போட்டிகள் சுவாரஸ்யத்தை அதிகப்படுத்தும்.

சி.எஸ்.கே, ஐ.பி.எல் 2025, முக்கிய செய்திகள், தலைப்பு செய்திகள்,

பட மூலாதாரம்,GETTY IMAGES

இதில் அனைத்து ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியிருப்பது சிஎஸ்கேயின் தொடர் தோல்விகள், மும்பையின் மந்தமான செயல்பாடு, ஆர்சிபியின் புத்துணர்ச்சியான ஆட்டம்தான். ஏனென்றால், ஆர்சிபி அணி இந்த முறை கோப்பையை வெல்லும முனைப்போடு அதன் ஆட்டம் ஒவ்வொரு போட்டியிலும் உச்சத்தில் இருக்கிறது.

ஆனால் 5 முறை சாம்பியன்களான சிஎஸ்கே, மும்பை இந்தியன்ஸ் அணிகள் தொடர் தோல்விகளாலும், சரியான வீரர்கள் தேர்வு இல்லாமலும் ப்ளே ஆஃப் சுற்றுக்கு செல்ல முடியுமா என்ற கனவோடு இருக்கின்றன. இந்த 3 அணிகளின் செயல்பாடு ரசிகர்களுக்கு பெரிய எதிர்பார்ப்பைத் தூண்டியுள்ளது.

இது தவிர அக்ஸர் படேல் தலைமையில் சிறப்பாகச் செயல்படும் டெல்லி கேபிடல்ஸ், தமிழக வீரர்களை அதிகம் தாங்கியுள்ள குஜராத் டைட்டன்ஸ், ஸ்ரேயாஸ் தலைமையில் பஞ்சாப் அணி ஆகிய அணிகளும் ப்ளே ஆஃப் செல்லும் ரேஸில் முன்னணியில் இருக்கின்றன.

ஒவ்வொரு அணிகள் முன் இருக்கும் ப்ளே ஆஃப் வாய்ப்புக் குறித்துப் பார்க்கலாம்.

சி.எஸ்.கே, ஐ.பி.எல் 2025, முக்கிய செய்திகள், தலைப்பு செய்திகள்,

பட மூலாதாரம்,GETTY IMAGES

சிஎஸ்கே தலைக்கு மேல் தொங்கும் கத்தி

சிஎஸ்கே அணி ருதுராஜ் கேப்டன்ஷியில் அடுத்தடுத்து வாங்கிய தோல்விகள், வீரர்களின் மோசமான செயல்பாடு, ஃபார்மில் இல்லாத வீரர்கள் தேர்வு ஆகியவற்றால் முதல் போட்டியில் மட்டும் வென்ற சிஎஸ்கே அடுத்த 5 தோல்விகளை சந்தித்து மோசமான நிலைக்கு சென்றது.

காயம் காரணமாக ருதுராஜ் தொடரிலிருந்து விலகியதையடுத்து, கேப்டனாக தோனி அணியை வழிநடத்துகிறார்.

தோனி வழிநடத்திய முதல் போட்டியில் மோசமாக தோற்ற நிலையில் 2வது போட்டியில் சிஎஸ்கே வென்றது. இதுவரை சிஎஸ்கே அணி 7 போட்டிகளில் விளையாடி 2 வெற்றிகள் 5 தோல்விகளுடன் 4 புள்ளிகளுடன் கடைசி இடத்தில் நிகர ரன்ரேட்டில் மைனஸ் 1.276 என கவலைக்குரிய இடத்தில் இருக்கிறது.

சிஎஸ்கே அணி இன்னும் 7 போட்டிகளில் விளையாட வேண்டியுள்ளது. இந்த 7 ஆட்டங்களில் குறைந்தபட்சம் 6 வெற்றிகள் நல்ல ரன்ரேட்டில் தேவை அல்லது சிக்கல் இல்லாமல் ப்ளே ஆஃப் செல்ல வேண்டுமென்றால் 7 ஆட்டங்களிலும் வெல்ல வேண்டும்.

அவ்வாறு அடுத்துவரும் 6 போட்டிகளிலும் சிஎஸ்கே வென்றால் 12 புள்ளிகள் பெறும் ஏற்கெனவே 4 புள்ளிகளுடன் சேர்த்து 16 புள்ளிகள் பெறும். ஆனால் 16 புள்ளிகள் வைத்திருந்தால் ப்ளே ஆஃப் சுற்றில் நிகர ரன்ரேட் சிக்கல் வரலாம், போட்டியிருக்கும். ஆதலால் 7 போட்டிகளிலும் வென்று 18 புள்ளிகளுடன் இருந்தால் சிஎஸ்கே நிலை பாதுகாப்பாக இருக்கும்.

ஆகவே சிஎஸ்கே அணி அடுத்துவரும் 7ஆட்டங்களிலும் கண்டிப்பாக வெல்ல வேண்டும். ஒவ்வொரு போட்டியும் சிஎஸ்கே அணிக்கு தலைக்கு மீது தொங்கும் கத்திபோலத்தான். இரு போட்டிகளில் தோற்றாலே சிஎஸ்கே நடையைக் கட்ட வேண்டியதுதான்.

சிஎஸ்கே அணி வரும் 20-ம் தேதி மும்பையில் மும்பை இந்தியன்ஸ் அணியுடன் வான்கடே மைதானத்தில் மோதுகிறது. மும்பையின் சொந்த மைதானத்தில் அந்த அணியை வீழ்த்துவது சவலானதாக இருக்கும்.

அடுத்ததாக இம்மாதம் 25-ம் தேதி சேப்பாக்கத்தில் நடக்கும் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியுடன் சிஎஸ்கே மோதுகிறது.

பேட்டிங்கில் சிஎஸ்கே அணியை விழுங்கிவிடும் வகையில் அசுரத்தனமாக இருக்கும் சன்ரைசர்ஸ் அணி, பந்துவீச்சிலும் பெரிய படையை வைத்துள்ளதால், சன்ரைசர்ஸை சாய்ப்பது சிஎஸ்கேவுக்கு சாதாரண விஷயமல்ல.

வரும் 30-ம் தேதி சேப்பாக்கத்தில் ஸ்ரோயஸ் அய்யர் தலைமையில் பஞ்சாப் அணியுடன் மோதுகிறது சிஎஸ்கே அணி. ஏற்கெனவே பஞ்சாப்பிடம் தோற்ற சிஎஸ்கே 2வது ஆட்டத்தில் சொந்த மைதானத்தில் மோதுகிறது.

மே மாதம் 3-ம் தேதி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடக்கும் ஆட்டத்தில் ஆர்சிபி அணியுடன் சிஎஸ்கே அணி மோதுகிறது.

முதல் லீ்க்கில் சிஎஸ்கே அணியை ஆர்சிபி வீழ்த்தியிருப்பதால் நம்பிக்கையுடன் இருக்கும். ஆனால் பழிதீர்க்கும் வகையில் சிஎஸ்கே விளையாடினால் வெற்றி பெறலாம்.

மே 7-ம் தேதி கொல்கத்தாவில் கொல்கத்தா அணியுடனும், மே12-ம் தேதி சேப்பாக்கத்தில் ராஜஸ்தான் அணியுடனும், 18-ம் தேதி ஆமதாபாத் நகரில் குஜராத் அணியுடன் சிஎஸ்கே மோதுகிறது. இந்த 3 அணிகளில் 2 அணிகளிடம் ஏற்கெனவே சிஎஸ்கே அணி உதைபட்டுள்ளதால் சவாலாகவே இருக்கும். அடுத்துவரும் சிஎஸ்கேயின் 7 ஆட்டங்களில் 4 ஆட்டங்கள் சேப்பாக்கத்தில் நடப்பது மட்டும்தான் ஆறுதலானது.

சிஎஸ்கே அணி இதுவரை 7 போட்டிகளில் விளையாடியதில் 6 முறை சேஸிங் செய்து அதில் ஒருமுறை மட்டுமே வென்றது. அதிலும் 180 ரன்களுக்கு மேல் அதிகமான ஸ்கோரை சிஎஸ்கே சேஸ் செய்யவில்லை.

சிஎஸ்கேவின் நடுப்பகுதி பேட்டிங் படுமோசமாக இருக்கிறது. தோனி வந்துதான் பினிஷ் செய்ய வேண்டிய எதிர்பார்ப்பும் பொய்த்துவிட்டது. பல வீரர்களை மாற்றி இளம் வீரர்களுக்கு வாய்ப்பு அளித்து பரிசோதனை முயற்சியில் சிஎஸ்கே இருக்கிறது. இந்த பரிசோதனை முயற்சி வெற்றியும் பெறலாம், கையையும் சுட்டுக்கொள்ளலாம்.

தோனியின் தலைமையில் சிஎஸ்கே ப்ளே ஆஃப் சுற்றுக்குள் செல்ல வாய்ப்பு இல்லை என்று சொல்லமுடியாவிட்டாலும், அது கடினமான பாதை.

சிஎஸ்கே ப்ளேஆஃப் வாய்ப்பு கணக்கீட்டளவில் கடினம், நம்பிக்கையளவில் வாய்ப்புள்ளது. சிஎஸ்கேயின் ஆட்டம் அடுத்த 7 போட்டிகளில் பிரம்மிப்பூட்டும் வகையில் இருந்தால் மட்டுமே ப்ளே ஆஃப் வாய்ப்பு சாத்தியமாகும்.

சி.எஸ்.கே, ஐ.பி.எல் 2025, முக்கிய செய்திகள், தலைப்பு செய்திகள்,

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,காயம் காரணமாக ருதுராஜ் தொடரிலிருந்து விலகியதையடுத்து, கேப்டனாக தோனி அணியை வழிநடத்துகிறார்.

மும்பை இந்தியன்ஸ் ப்ளே ஆஃப் வாய்ப்பு எப்படி?

ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி, இதுவரை 6 போட்டிகளில் விளையாடி 3 வெற்றிகள் 4 தோல்விகளுடன் 6 புள்ளிகள் பெற்று 7-வது இடத்தில் இருக்கிறது. சிஎஸ்கே அணியை ஒப்பிடும்போது நிகர ரன்ரேட்டில் +0.239 என இருப்பது ஆறுதலானது.

மும்பை அணிக்கு 7 போட்டிகள் மீதம் உள்ளன. இதில் குறைந்தபட்சம் 5 போட்டிகளில் வென்றால் புள்ளிப்பட்டியலில் மற்ற அணிகளின் நிலையை வைத்து ஒருவேளை ப்ளே ஆஃப் செல்லலாம். இல்லாவிட்டால் 6 போட்டிகளில் வென்றால் 18 புள்ளிகளுடன் மும்பை அணி ப்ளே ஆஃப் சுற்றுக்குள் பாதுகாப்பாக இருக்கும்.

மும்பை அணியின் நிகர ரன்ரேட் ஓரளவு பராவாயில்லை என்ற ரகத்தில் இருக்கிறது. தொடர்ந்து 5 போட்டிகளில் வெல்லும்பட்சத்தில் நல்ல ரன்ரேட்டில் 16 புள்ளிகளுடன் இருந்தாலே ப்ளே ஆஃப் செல்ல முடியும்.

மும்பை அணிக்கு அடுத்ததாக வரும் ஞாயிறன்று சிஎஸ்கே அணியுடனும், 23-ம் தேதி மீண்டும் சன்ரைசர்ஸ் அணியுடனும் மோதுகிறது. 27-ம் தேதி லக்னெள அணியுடனும், மே 1-ம் தேதி ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடனும் மும்பை விளையாடுகிறது.

மே 6-ம் தேதி குஜராத் டைட்டன்ஸ் அணியுடனும், 11-ம் தேதி பஞ்சாப் அணியுடனும், 15-ம் தேதி டெல்லி அணியுடனும் மும்பை மோதுகிறது. மும்பை அணி அடுத்து மோதவுள்ள 7 போட்டிகளில் 4 போட்டிகளை வான்கடே மைதானத்தில் விளையாடுவது அந்த அணிக்கு சாதகமான அம்சமாகும்.

சி.எஸ்.கே, ஐ.பி.எல் 2025, முக்கிய செய்திகள், தலைப்பு செய்திகள்,

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,மும்பை அணிக்கு 7 போட்டிகள் மீதம் உள்ளன. இதில் குறைந்தபட்சம் 5 போட்டிகளில் வென்றால் புள்ளிப்பட்டியலில் மற்ற அணிகளின் நிலையை வைத்து ஒருவேளை ப்ளே ஆஃப் செல்லலாம்

பாதி கிணறு தாண்டிய ஆர்சிபி

ஆர்சிபி அணி இந்த சீசனில் தொடக்கத்தில் இருந்தே சிறப்பான ஆட்டத்தை ஒவ்வொரு போட்டியிலும் வெளிப்படுத்தி வருகிறது. பந்துவீச்சு, பேட்டிங், பீல்டிங்கில் சிறப்பாகச் செயல்பட்டு இதுவரை 6 போட்டிகளில் 4 வெற்றி, 2 தோல்விகளுடன் 8 புள்ளிகளுடன் 3வது இடத்தில் இருக்கிறது. நிகர ரன் ரேட்டும் பிளஸ் 0.672ல் சிறப்பாக இருக்கிறது.

இந்த முறை ஆர்சிபி ப்ளே ஆஃப் செல்வதில் சிக்கல் இருக்காது என்று ரசிகர்கள் எதிர்பார்த்தாலும் அந்த அணிக்கு குறைந்தபட்சம் இன்னும் 4 வெற்றிகள் தேவை.

ஆர்சிபி அணிக்கு இன்னும் 8 போட்டிகள் மீதம் உள்ளநிலையில் அதில் 4 போட்டிகளில் நல்ல ரன்ரேட்டில் வென்றாலே ப்ளே ஆஃப் சுற்றுக்குள் செல்லலாம். 5 போட்டிகளில் வென்றால், 18 புள்ளிகளுடன் ப்ளே ஆஃப்சுற்றை உறுதி செய்யலாம்.

ஆர்சிபி அணிக்கு அடுத்தடுத்து இரு ஆட்டங்களில் பஞ்சாப் அணியுடன் மோதுகிறது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஆட்டமாகப் பார்க்கப்படுகிறது.

இன்று (18ம் தேதி) பெங்களூரிலும், 20-ஆம் தேதி அன்று நியூ சண்டிகரில் நடக்கும் ஆட்டத்திலும் பஞ்சாப் அணியை எதிர்த்து ஆர்சிபி அணி மோதுகிறது. அடுத்தடுத்து பஞ்சாப் அணியுடன் ஆர்சிபி மோதுவது முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது. இந்த ஆட்டங்களில் ஆர்சிபி வென்றால் 12 புள்ளிகளுடன் வலுவாக ப்ளே ஆஃப் சுற்றுக்குள் முன்னேறும்.

ஆர்சிபி அணிக்கு அடுத்துவரக் கூடிய 8 போட்டிகளில் 5 போட்டிகள் பெங்களூருவில் நடப்பது அந்த அணிக்கு கூடுதல் சாதகமாகும். அதில் குறிப்பாக மே 3-ஆம் தேதி சிஎஸ்கே அணியுடன் மோதும் ஆட்டம் ஆர்சிபிக்கு முக்கியமாகும்.

சென்னையில் சிஎஸ்கே அணியை 17 ஆண்டுகளுக்குப் பின் வீழ்த்தியதால், அடிபட்ட சிங்கமாக சிஎஸ்கே வரும் என்பதால் அந்த ஆட்டம் மிகுந்த பரபரப்பாக இருக்கும்.

டெல்லியில் 27-ஆம் தேதி டெல்லி கேபிடல்ஸ் அணியுடனும், லக்னெளவில் மே 9-ஆம் தேதி லக்னெள அணியுடனும், முலான்பூரில் 20-ஆம் தேதி பஞ்சாப் அணியுடனும் ஆர்சிபி வெளி மைதானங்களில் மோதுகிறது.

இந்த 3 ஆட்டங்களில் ஏதேனும் 2 ஆட்டங்களில் வென்று, சொந்த மைதானத்தில் நடக்கும் 5 போட்டிகளில் 3 ஆட்டங்களில் ஆர்சிபி வென்றால் 18 புள்ளிகளுடன் ப்ளே ஆஃப்சுற்றுக்குள் செல்ல முடியும். ஆர்சிபி அணி 8 புள்ளிகளுடன் ப்ளே ஆஃப் சுற்றுக்கான பாதிக் கிணற்றைத் தாண்டிவிட்டது.

சி.எஸ்.கே, ஐ.பி.எல் 2025, முக்கிய செய்திகள், தலைப்பு செய்திகள்,

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,ஆர்சிபி அணி இந்த சீசனில் தொடக்கத்தில் இருந்தே சிறப்பான ஆட்டத்தை ஒவ்வொரு போட்டியிலும் வெளிப்படுத்தி வருகிறது

ஆபத்தான நிலையில் சன்ரைசர்ஸ்

கடந்த சீசனில் 2வது இடத்தைப் பிடித்த சன்ரைசர்ஸ் அணி இந்த சீசனில் அடுத்தடுத்து தோல்விகளைச் சந்தித்து மோசமான நிலையில் இருக்கிறது. இதுவரை 7 போட்டிகளில் மோதியுள்ள சன்ரைசர்ஸ் அணி 2 வெற்றிகள், 5 தோல்விகளுடன் 4 புள்ளிகளில் 9வது இடத்தில் இருக்கிறது. நிகர ரன்ரேட்டும் மைனஸில் இருக்கிறது.

இன்னும் சன்ரைசர்ஸ் அணிக்கு 7 லீக் ஆட்டங்கள் மீதமுள்ளன. இதில் இரு போட்டிகளில் சன்ரைசர்ஸ் தோற்றாலே தொடரிலிருந்து வெளியேறிவிடும். ஆதலால், சன்ரைசர்ஸ் அணி அடுத்துவரும் 7 ஆட்டங்களில் மாபெரும் 6 வெற்றிகளைப் பெறுவது அவசியம். இது எழுத்தளவில் சாத்தியமானதாக இருக்கலாம்.

ஆனால், நிதர்சனத்தில் தொடர்ந்து 6 வெற்றிகளைக் குவிப்பது சந்தேகம்தான். ஏனென்றால் அடுத்து வரக்கூடிய 7 ஆட்டங்களில் ராஜஸ்தான், பஞ்சாப் அணிகளை மட்டுமே முந்தைய போட்டிகளில் சன்ரைசர்ஸ் வென்றுள்ளது. அடுத்து 23-ஆம் தேதி ஹைதராபாத்தில் மும்பையுடனும், 25-ஆம் தேதி சேப்பாக்கத்தில் சிஎஸ்கே அணியுடனும் சன்ரைசர்ஸ் மோதுகிறது

மே 2-ஆம் தேதி குஜராத் அணியுடனும், மே 5-ஆம் தேதி ஹைதராபாத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியுடனும், 10-ஆம் தேதி கொல்கத்தா அணியுடன் ஹைதராபாத்திலும் சன்ரைசர்ஸ் அணி மோதுகிறது.

13-ஆம் தேதி பெங்களூருவில் ஆர்சிபி அணியுடனும், 18-ஆம் தேதி லக்னெளவில் லக்னெள அணியை எதிர்த்து சன்ரைசர்ஸ் விளையாடுகிறது. சன்ரைசர்ஸ் அணி அடுத்துவரும் 7 போட்டிகளில் குறைந்தபட்சம் 6 வெற்றிகளுடன் முடித்து, நல்ல ரன்ரேட்டில் முடித்தால் ப்ளே ஆஃப் வாய்ப்பு குறித்து நினைக்கலாம். இல்லாவிட்டால் லீக் சுற்றோடு வெளியேற வேண்டியதிருக்கும்.

சி.எஸ்.கே, ஐ.பி.எல் 2025, முக்கிய செய்திகள், தலைப்பு செய்திகள்,

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,கடந்த சீசனில் 2வது இடத்தைப் பிடித்த சன்ரைசர்ஸ் அணி இந்த சீசனில் அடுத்தடுத்து தோல்விகளைச் சந்தித்து மோசமான நிலையில் இருக்கிறது

ராஜஸ்தானுக்கு முயற்சி தேவை

ராஜஸ்தான் ராயல்ஸ், சன்ரைசர்ஸ், சிஎஸ்கே அணிகள் தலா 4 புள்ளிகளுடன் இருந்தாலும், இதில் மற்ற இரு அணிகளைவிட நிகர ரன்ரேட்டில் சுமாராக இருப்பதால் 8-வது இடத்தில் ராஜஸ்தான் இருக்கிறது.

இதுவரை 7 போட்டிகளில் ஆடிய ராஜஸ்தான் அணி 2 வெற்றிகளுடன் 4 புள்ளிகள் பெற்று மைனஸில்தான் இருக்கிறது. ராஜஸ்தான் அணிக்கு இன்னும் 7 போட்டிகள் மீதமுள்ளன. இதில் குறைந்தபட்சம் 6 வெற்றிகளை ராஜஸ்தான் பெற்றால்தான் ப்ளே ஆஃப் ரேஸில் 16 புள்ளிகளுடன் நிற்க முடியும்.

அதிலும் 16 புள்ளிகள் என்பது உறுதியில்லை, இந்த புள்ளிகளுக்கும் போட்டி ஏற்பட்டால் நிகர ரன்ரேட் பார்க்கப்படும் என்பதால், நிகர ரன்ரேட்டை உயர்த்தும் வகையில் 6 வெற்றிகளை ராஜஸ்தான் பெற வேண்டும்.

அடுத்துவரும் 7 ஆட்டங்களில் பஞ்சாப், சிஎஸ்கே அணியை மட்டும் ராஜஸ்தான் முந்தைய ஆட்டங்களில் வென்றுள்ளது.

மற்ற 5 அணிகளையும் வெல்லவில்லை என்பதால், சவாலாக இருக்கும். ராஜஸ்தான் அணி 8-வது இடத்தில் இருப்பதால் இரு பெரிய வெற்றிகள் கிடைத்தாலே நிகர ரன் ரேட்டில் உயர்ந்து, புள்ளிப்பட்டியலில் 8 புள்ளிகளுடன் டாப்-5 ரேங்கில் செல்ல முடியும். அதன்பின் ராஜஸ்தான் அணி நம்பிக்கையுடன் செயல்பட்டால் ப்ளே ஆஃப் செல்லமுடியும்.

கொல்கத்தா, லக்னெள போராட்டம்

நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், லக்னெள சூப்பர் ஜெயின்ட்ஸ் அணிகள் இதுவரை 7 போட்டிகளில் விளையாடியுள்ளன. இதில் லக்னெள அணி 4 வெற்றிகளுடன் 8 புள்ளிகளைப் பெற்று 5வது இடத்திலும், கொல்கத்தா அணி 3 வெற்றிகளுடன் 6 புள்ளிகளுடன் 6வது இடத்திலும் இருக்கிறது. இரு அணிகளுக்கும் இன்னும் 7 போட்டிகள் மீதமிருக்கிறது.

லக்னெள அணி 8 புள்ளிகளுடன் இருக்கிறது, அந்த அணிக்கு இன்னும் 7 போட்டிகள் மீதமிருக்கும் நிலையில் அதில் 4 போட்டிகளில் வெல்வது ப்ளே ஆஃப் வாய்ப்பை உறுதி செய்யும்.

அதே போல கொல்கத்தா நைட் ரைட்ரஸ் அணி 6 புள்ளிகளுடன் இருக்கிறது. அந்த அணி அடுத்து மோதவுள்ள 7 போட்டிகளில் குறைந்தபட்சம் 5 ஆட்டங்களில் வென்றால்கூட ப்ளே ஆஃப் சுற்று அந்தரத்தில் நிற்கும். ஆனால் 6 ஆட்டங்களில் வெற்றி பெறுவது ப்ளே ஆஃப் சுற்றை உறுதி செய்யும்.

சி.எஸ்.கே, ஐ.பி.எல் 2025, முக்கிய செய்திகள், தலைப்பு செய்திகள்,

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,ராஜஸ்தான் ராயல்ஸ், சன்ரைசர்ஸ், சிஎஸ்கே அணிகள் தலா 4 புள்ளிகளுடன் இருந்தாலும், இதில் மற்ற இரு அணிகளைவிட நிகர ரன்ரேட்டில் சுமாராக இருப்பதால் 8-வது இடத்தில் ராஜஸ்தான் இருக்கிறது

குஜராத், பஞ்சாப், டெல்லி இடையே கடும் போட்டி

ஆர்சிபி, குஜராத் டைட்டன்ஸ், பஞ்சாப் கிங்ஸ் ஆகிய 3 அணிகள் தலா 6 போட்டிகளில் விளையாடி தலா 4 வெற்றிகளுடன் 8 புள்ளிகளுடன் உள்ளன. டெல்லி கேபிடல்ஸ் அணி 6 போட்டிகளில் ஒரு தோல்வி, 5 வெற்றி, 10 புள்ளிகளுடன் முதலிடத்தில் இருக்கிறது.

இதில் நிகர ரன்ரேட் அடிப்படையில் குஜராத் 2வது இடத்திலும், ஆர்சிபி 3வது இடத்திலும், பஞ்சாப் அணி 4வது இடத்திலும் உள்ளன. இந்த 3 அணிகளுக்கும் அடுத்துவரும் போட்டிகள் முக்கியமானவை. இந்த அணிகள் பெறும் வெற்றி தோல்வியை பொறுத்து, புள்ளிப்பட்டியலில் மாற்றம் இருக்கும்.

குறிப்பாக இன்று நடக்கும் பஞ்சாப், ஆர்சிபி இடையிலான ஆட்டத்தில் வெல்லும் அணி 2வது இடத்தை நோக்கி நகரும். நாளை டெல்லி கேபிடல்ஸ், குஜராத் இடையிலான ஆட்டத்தில் வெல்லும் அணி முதலிடத்துக்கு முன்னேறும். மீண்டும் ஞாயிறன்று பிற்பகல் ஆட்டத்தில் பஞ்சாப் - ஆர்சிபி அணிகள் மோதுகின்றன.

இந்த இரு ஆட்டங்களும் இரு அணிகளின் நிலையைத் தீர்மானிக்கும் ஆட்டமாக இருக்கப் போகின்றன. ஒட்டுமொத்தத்தில் முதல் 4 இடங்களில் உள்ள அணிகளுக்கு இடையே இந்த வாரத்தின் இறுதியில் நடக்கும் ஆட்டத்தின் முடிவில் புள்ளிப்பட்டியலில் பெரிய மாற்றம் இருக்கும்.

- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/c5y602334q2o

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சொந்த மண்ணில் ஹாட்ரிக் தோல்வி: பேட்டிங் சொர்க்கபுரியில் ஆர்சிபி 95 ரன்னில் சுருண்டது ஏன்?

பஞ்சாப், பெங்களூரு, ஆர்சிபி, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, விராட்  கோலி, ஸ்ரேயாஸ் அய்யர்

பட மூலாதாரம்,GETTY IMAGES

2 மணி நேரங்களுக்கு முன்னர்

பெங்களூரு சின்னசாமி அரங்கில் நேற்று நடந்த ஐபிஎல்லின் 34-வது ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது பஞ்சாப் கிங்ஸ் அணி.

மழை காரணமாக நீண்ட தாமதத்துக்குப்பின் 14 ஓவர்களாகக் குறைக்கப்பட்டு போட்டி நடந்தது. இதில் முதலில் பேட் செய்த ஆர்சிபி அணி 9 விக்கெட் இழப்புக்கு 95 ரன்கள் சேர்த்தது. 96 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் கிங்ஸ் அணி 11 பந்துகள் மீதமிருக்கையில் 5 விக்கெட்டுகளை இழந்து 98 ரன்கள் சேர்த்து வென்றது.

நடப்பு சீசனில் வெளியூர் மைதானங்களில் விளையாடிய 4 போட்டிகளிலும் வெற்றியை ருசித்துள்ள ஆர்சிபி அணி, தனது சொந்த மைதானத்தில் நடந்த மூன்றாவது போட்டியிலும் தொடர்ந்து தோல்வியைச் சந்தித்துள்ளது. பேட்டிங் சொர்க்கபுரியான பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் என்ன நடந்தது?

ஆர்சிபி மோசமான பேட்டிங்

பஞ்சாப், பெங்களூரு, ஆர்சிபி, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, விராட்  கோலி, ஸ்ரேயாஸ் அய்யர்

பட மூலாதாரம்,GETTY IMAGES

ஆர்சிபி அணி இந்த சீசனில் தனது மோசமான பேட்டிங்கை நேற்று வெளிப்படுத்தியது. எந்த பேட்டரும், எந்தத் திட்டமிடலும் இன்றி களத்துக்கு வந்து விளையாடினர். தொடக்கத்தில் விக்கெட்டை இழந்து செல்லும் பேட்டர்கள் ஆடுகளத்தின் தன்மையைக் கூறி மற்ற பேட்டர்களுக்கு அறிவுரை கூறி அனுப்பினார்களா எனத் தெரியவில்லை. அனைத்து பேட்டர்களும் ஒரே மனநிலையில் வந்து பெரிய ஷாட்களுக்கு முயன்று விக்கெட்டுகளை இழந்தனர்.

பில்சால்ட்(4) வழக்கம் போல் பவுண்டரியுடன் தொடங்கினாலும், கிராஸ்பேட்டில் சிக்ஸர் அடிக்க முயன்று யான் சென் பந்துவீச்சில் விக்கெட் கீப்பர் இங்கிலிஸிடம் விக்கெட்டை இழந்தார். விராட் கோலியும்(1) கிராஸ் பேட்டில் பெரிய ஷாட்டுக்கு முயன்று அர்ஷ்தீப் பந்துவீச்சில் யான்செனிடம் கேட்ச் கொடுத்தார்.

லிவிங்ஸ்டோன் ஒரு பவுண்டரி அடித்த நிலையில் பார்ட்லெட் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார். ஆல்ரவுண்டர் என்ற அடிப்படையில் இவரை ரூ.8.75 கோடிக்கு வாங்கியது ஆர்சிபி அணி. இதுவரை 7 போட்டிகளில் 87 ரன்கள் மட்டுமே லிவிங்ஸ்டன் சேர்த்துள்ளார். அணிக்கு தேவையான நேரத்தில் பங்களிப்பு செய்யாமல் தொடர்ந்து சொதப்பி வருகிறார்.

பஞ்சாப், பெங்களூரு, ஆர்சிபி, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, விராட்  கோலி, ஸ்ரேயாஸ் அய்யர்

பட மூலாதாரம்,GETTY IMAGES

4 ஓவர்கள் பவர்ப்ளே முடிவில் ஆர்சிபி 3 விக்கெட் இழப்புக்கு 26 ரன்கள் மட்டுமே சேர்த்தது.

பட்டிதாருடன் ஜோடி சேர்ந்த ஜிதேஷ் சர்மாவும் நிலைக்கவில்லை. யான்சென் பந்துவீச்சை சமாளிக்க திணறிய ஜிதேஷ் சர்மா, பலமுறை "பீட்டன்" ஆகிய ஷாட்களை அடிக்க முடியாமல் தடுமாறினார். சஹல் பந்துவீச்சில் ஜிதேஷ் சர்மா 2 ரன்னில் வதேராவிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

அடுத்துவந்த க்ருணால் பாண்டியா ஒரு ரன் சேர்த்த நிலையில் யான்சென் பந்துவீச்சில் அவரிடமே கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். நிதானமாக ஆடிவந்த கேப்டன் பட்டிதார் 23 ரன்னில் சஹல் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார். இம்பாக்ட் ப்ளேயர் என்று மனோஜ் பண்டகே என்ற வீரரை களமிறக்கினர். யான்சென் பந்துவீச்சில் தடுமாறிய மனோஜ், எந்த ஷாட் விளையாட போகிறோம் எனத் தெளிவில்லாமல் கால்காப்பில் வாங்கி ஆட்டமிழந்தார்.

8வது விக்கெட்டுக்கு புவனேஷ்வர்- டிம் டேவிட் ஜோடி 21 ரன்கள் சேர்த்தது, ஆர்சிபி அணியும் 50 ரன்களைக் கடந்தது.ஹர்பிரித் பிரார் தனது முதல் ஓவரிலேயே புவனேஷ்வர்(8), யாஷ் தயால் விக்கெட்டை வீழ்த்தினார்.

9-வது விக்கெட்டுக்கு ஹேசல்வுடன், ஜோடி சேர்ந்த டேவிட் அதிரடியாக ஆடி ரன்களைச் சேர்த்தார். பிரார்ட்வெல் பந்துவீச்சில் 2 பவுண்டரியும், ஹர்பிரித்பிரார் கடைசி ஓவரில் 3 சிக்ஸர்களையும் விளாசி 26 பந்துகளில் அரைசதம் அடித்தார், ஆர்சிபியும் 95 ரன்கள் சேர்த்தது.

ஆர்சிபியின் போராட்டம்

ஆர்சிபி அணியும் 95 ரன்களை டிபெண்ட் செய்யலாம் என்ற ஆசையில் களமிறங்கியது. புவனேஷ்வர் குமார் வீசிய 3வது ஓவரில் பிரப்சிம்ரன் சிங் ஸ்கூப்ஷாட் அடிக்க முயன்று 13 ரன்னில் டேவிட்டிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். பிரியான்ஷ் ஆர்யா(16)ரன்னில் ஹேசல்வுட் பந்துவீச்சில் டேவிட்டிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். ஸ்ரேயாஸ் அய்யர், இங்கிலிஸ் நிதானமாக ஆடி மோசமான பந்துகளை மட்டும் ஷாட்களாக மாற்றினர்.

ஆனால் ஹேசல்வுட் தான் வீசிய 8-வது ஓவரில் எக்ஸ்ட்ரா பவுன்ஸரில் ஒரே ஓவரில் ஸ்ரேயாஸ்(7), இங்கிலிஸ்(14) விக்கெட்டுகளை வீழ்த்தி நெருக்கடி அளித்தார். 43 பந்துகளில் பஞ்சாப் வெற்றிக்கு 36 ரன்கள் தேவைப்பட்டது.

பஞ்சாப், பெங்களூரு, ஆர்சிபி, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, விராட்  கோலி, ஸ்ரேயாஸ் அய்யர்

பட மூலாதாரம்,GETTY IMAGES

சுழற்பந்துவீச்சாளர் சூயஷ் சர்மா தொடக்கத்தில் நன்றாகத்தான் பந்துவீசினார். நேஹல் வதேராவும் சூயஷ் பந்துவீச்சை எதிர்கொள்ள சிரமப்பட்டு சில பவுண்டரிகளை விளாசி, ரன்ரேட்டை உயர்த்தினார்.

புவனேஷ்வர் ஓவரில் சசாங்சிங் விக்கெட்டை இழந்தார். சூயஷ் சர்மாவால் கடைசி நேரத்தில் பேட்டர்களுக்கு அழுத்தத்தை தர முடியவில்லை. இதனால் நேஹல் வதேரா லாங்ஆப், கவர் டிரைவில் பவுண்டரி, சிக்ஸரை அடித்து வெற்றியை நோக்கி அணியை விரட்டினார். ஸ்டாய்னிஷ் களமிறங்கி சிக்ஸர் விளாசவே, பஞ்சாப் அணி வெற்றி பெற்றது. நேஹல் வதேரா 19 பந்துகளில் 33 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.

பஞ்சாப், பெங்களூரு, ஆர்சிபி, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, விராட்  கோலி, ஸ்ரேயாஸ் அய்யர்

பட மூலாதாரம்,GETTY IMAGES

தோல்விக்கு காரணம் என்ன?

ஆர்சிபி அணியின் கேப்டன் ரஜத் பட்டிதார் கூறுகையில் " ஆடுகளத்தில் பந்து நின்று வந்ததால் கணிக்க முடியவில்லை. ஒவ்வொரு நேரத்தில் ஒவ்வொரு விதமாக பந்து வந்தது. என்னைப் பொருத்தவரை பேட்டர்கள் இன்னும் சிறப்பாக ஆடியிருக்கலாம். பேட்டிங்கில் பார்ட்னர்ஷிப் முக்கியம். அதை செய்யத் தவறினோம். சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை தவறவிட்டோம். இந்த சூழலில் படிக்கலை களமிறக்காமல் விட்டுவிட்டோம். ஆடுகளம் மோசமாக இல்லை என்றாலும் நிதானமாக பேட் செய்திருந்தால் ஸ்கோர் செய்திருக்கலாம். பஞ்சாப் அணியினர் ஆடுகளத்தை அறிந்து பந்துவீசியதால் அவர்களுக்கு உதவியது. எங்கள் பந்துவீச்சு சிறப்பாக இருந்தது எங்கள் பந்துவீச்சாளர்கள் மீது நம்பிக்கை இருந்தது. சில நேரங்களில் பேட்டிங் எடுபடும், சில நேரங்களில் சொதப்பிவிடும். எங்கள் பேட்டிங் மீது என்ன பிரச்சினை என்று வீரர்களிடம் பேச இருக்கிறேன்" எனத் தெரிவித்தார்.

ஆர்சிபிக்கு தொடரும் சொந்த மைதான சோகம்!

பஞ்சாப், பெங்களூரு, ஆர்சிபி, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, விராட்  கோலி, ஸ்ரேயாஸ் அய்யர்

பட மூலாதாரம்,GETTY IMAGES

பெங்களூரு அணிக்கம் சொந்த மைதானமான சின்னசாமி அரங்கிற்கும் ராசியே கிடையாது. பெரும்பாலான அணிகள் சொந்த மைதானத்தில் அற்புதமான சாதனைகளை வைத்திருக்கும் நிலையில் ஆர்சிபி அணி சொந்தமைதானத்தில் அதிகமான தோல்விகளைத்தான் சந்தித்துள்ளது.

இதுவரை 92 போட்டிகளில் பெங்களூருவில் ஆடிய ஆர்சிபி அதில் 44 போட்டிகளில் தோற்றுள்ளது, 43 போட்டிகளில் வென்றுள்ளது. 4 போட்டிகளில் முடிவு இல்லை, ஒரு போட்டிடையில் முடிந்தது.

இந்த சீசனிலும் கூட ஆர்சிபி அணி சொந்த மைதானத்தில் ஆடிய ஆட்டங்களில் தோல்வி அடைந்துள்ளது, ஆனால், வெளி மைதானங்களில் பங்கேற்ற போட்டிகளில் வென்றுள்ளது. ஆர்சிபியின் சொந்த மைதான சோகம் இந்த சீசனிலும் தொடர்கிறது.

ஆர்சிபி மானம் காத்த டிம்டேவிட்

பஞ்சாப், பெங்களூரு, ஆர்சிபி, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, விராட்  கோலி, ஸ்ரேயாஸ் அய்யர்

பட மூலாதாரம்,GETTY IMAGES

ஆர்சிபி அணியின் ஆல்ரவுண்டர் டிம் டேவிட் நேற்றுமட்டும் பொறுப்புடன் பேட் செய்யவில்லையென்றால் ஆர்சிபி 50 ரன்களுக்குள் சுருண்டிருக்கும். கடைசி நேரத்தில் அதிரடியாக ஆடிய டிம் டேவிட் 3 சிக்ஸர், 5 பவுண்டரிகள் என 26 பந்துகளில் அரைசதம் அடித்து ஆர்சியின் மானத்தை காப்பாற்றி 95 ரன்கள் சேர்க்க உதவினார்.

ஒரு கட்டத்தில் ஆர்சிபி அணி 7 விக்கெட் இழப்புக்கு 42 ரன்கள், அதன்பின் 9 விக்கெட் இழப்புக்கு 63 ரன்கள் என்ற மோசமானநிலையில் இருந்தது. இந்தநிலையில் இருந்து அணியை மீட்டு ஓரளவுக்கு ரன்கள் சேர்த்தது டிம் டேவிட்தான்.

கடைசியில் பிரார் ஓவரில் அடித்த ஹாட்ரிக் சிக்ஸர்கள் ஸ்கோரை வெகுவாக உயர்த்தியது. டிம் டேவிட் இல்லாவிட்டால் ஆர்சிபியின் நிலைமை மோசமாக இருந்திருக்கும். 26 பந்துகளில் அரைசதம் அடித்த டிம் டேவிட் ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இந்த வெற்றியின் மூலம் பஞ்சாப் கிங்ஸ் அணி 7 போட்டிகளில் 5 வெற்றி, 2 தோல்வி என 10 புள்ளிகளுடன் 2வது இடத்துக்கு முன்னேறியுள்ளது.

ஆர்சிபி அணியுடன் ஒருநாள் இடைவெளியில் நாளை(ஞாயிற்றுக்கிழமை) நியூ சண்டிகரில் மீண்டும் பஞ்சாப் கிங்ஸ் அணி விளையாடுகிறது. இதில் ஆர்சிபி வென்றால் புள்ளிப்பட்டியல் பரபரப்பாக மாறும். தற்போது ஆர்சிபி அணி 7 போட்டிகளில் 4 வெற்றி, 3 தோல்வி என 8 புள்ளிகளுடன் 4வது இடத்தில் இருக்கிறது.

மழையால் மாறிய ஆடுகளம்

பஞ்சாப், பெங்களூரு, ஆர்சிபி, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, விராட்  கோலி, ஸ்ரேயாஸ் அய்யர்

பட மூலாதாரம்,GETTY IMAGES

பெங்களூருவில் நேற்று மாலை பெய்ததையடுத்து, ஆட்டம் ஒன்றரை மணி நேரம் தாமதமாக, 6 ஓவர்கள் குறைக்கப்பட்டு 9 மணிக்கு மேல்தான் தொடங்கியது. மழையாலும், குளிர்ந்த காற்றாலும் ஆடுகளத்தின் தன்மை முற்றிலும் மாறியிருந்தது. வேகப்பந்துவீச்சுக்கும், ஸ்விங்கிற்கும், பவுன்ஸருக்கும் நன்றாக மைதானம் ஒத்துழைத்தது. சேஸிங்கிற்கு சொர்க்கபுரியென பெயரெடுத்த பெங்களூரு ஆடுகளம் தலைகீழாக மாறியது.

இதைப் பயன்படுத்திய பஞ்சாப் பந்துவீச்சாளர்கள் அர்ஷ்தீப் சிங், மார்கோ யான்சென், யுஸ்வேந்திர சஹல், ஹர்பிரித் பிரார் ஆகியோர் ஆர்சிபி பேட்டிங் வரிசையை உருக்குலைத்தனர். முதல் 6 விக்கெட்டுகளையும் அர்ஷ்தீப், யான்சென், சஹல் கைப்பற்றிய நிலையில் பிரார் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்

ஆர்சிபி அணியின் கேப்டன் ரஜத் பட்டிதார்(23), டிம் டேவிட்(50) ஆகியோரைத் தவிர அனைத்து பேட்டர்களும் ஒற்றை இலக்க ரன்னோடு வெளியேறினர். இந்த ஆட்டத்தில் மொத்தம் 84 பந்துகள் வீசப்பட்ட நிலையில் அதில் 42 பந்துகளை டாட் பந்துகளாக ஆர்சிபி பேட்டர்கள் விட்டனர்.

அதேபோல ஆர்சிபி அணியிலும் ஹேசல்வுட் தனது பந்து வீச்சால் பஞ்சாப் பேட்டர்களை இந்த சேஸிங்கை எளிதாக முடிக்க விடாமல் தடுத்து 3 ஓவர்களில் 14 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளை எடுத்தார்.

ஆனால் சூயஷ் சர்மா ஓவரில் அடிக்கப்பட்ட சிக்ஸர், பவுண்டரிகள், புவனேஷ்வர் ஓவரில் அடிக்கப்பட்ட ரன்கள் ஆட்டத்தை மாற்றியது. ஹேசல்வுட்டுக்கு ஒத்துழைத்து பந்துவீச்சாளர்கள் கட்டுக்கோப்புடன் பந்துவீசியிருந்தால், ஆர்சிபி வென்றிருந்தாலும் வியப்பில்லை.

இன்றைய ஆட்டம்

குஜராஜ் டைட்டன்ஸ் vs டெல்லி கேபிடல்ஸ்

இடம்: ஆமதாபாத்

நேரம்: மாலை 3.30

ராஜஸ்தான் ராயல்ஸ் vs லக்னெள

இடம்: ஜெய்பூர்

நேரம்: இரவு 7.30

சிஎஸ்கேவின் அடுத்த ஆட்டம்

சென்னை சூப்பர் கிங்ஸ் vs மும்பை இந்தியன்ஸ்

நாள் - ஏப்ரல் 20

இடம் – மும்பை

நேரம்- இரவு 7.30

மும்பையின் அடுத்த ஆட்டம்

மும்பை இந்தியன்ஸ் vs சிஎஸ்கே

நாள் - ஏப்ரல் 20

இடம் – மும்பை

நேரம்- இரவு 7.30 மணி

ஆர்சிபியின் அடுத்த ஆட்டம்

ஆர்சிபி vs பஞ்சாப் கிங்ஸ்

நாள் - ஏப்ரல் 20

இடம் – நியூ சண்டிகர்

நேரம்- மாலை 3.30 மணி

ஆரஞ்சு தொப்பி யாருக்கு

நிகோலஸ் பூரன்(லக்னெள சூப்பர் ஜெயின்ட்ஸ்)-357 ரன்கள்(7 போட்டிகள்)

சாய் சுதர்சன்(குஜராத் டைட்டன்ஸ்)-329 ரன்கள்(6 போட்டிகள்)

மிட்ஷெல் மார்ஷ்(லக்னெள சூப்பர் ஜெயின்ட்ஸ்) 295 ரன்கள்(6 போட்டிகள்)

நீலத் தொப்பி

நூர் அகமது(சிஎஸ்கே)12 விக்கெட்டுகள்(6 போட்டிகள்)

ஜோஸ் ஹேசல்வுட்(ஆர்சிபி) 12 விக்கெட்டுகள்(7 போட்டிகள்)

குல்தீப் யாதவ்(டெல்லி) 11 விக்கெட்டுகள்(6 போட்டிகள்)

https://www.bbc.com/tamil/articles/cx28lzlp4gyo

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கடைசிப் பந்து வரை திக் திக்: 14 வயதிலேயே ஐபிஎல் களம் கண்டு முதல் பந்தில் சிக்ஸர் விளாசிய இந்த சிறுவன் யார்?

3 மணி நேரங்களுக்கு முன்னர்

RR vs LSG, வைபவ் சூர்யவன்ஷி

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, வைபவ் சூர்யவன்ஷி

ஜெய்பூரில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 போட்டியின் 36வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை 2 ரன் வித்தியாசத்தில் தோற்கடித்தது லக்னெள சூப்பர் ஜெயின்ட்ஸ் அணி.

முதலில் பேட் செய்த லக்னெள அணி 5 விக்கெட் இழப்புக்கு 180 ரன்கள் சேர்த்தது. 181 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் அணி 5 விக்கெட் இழப்புக்கு 178 ரன்கள் சேர்த்தது.

போட்டியின் பெரும்பகுதி ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கட்டுப்பாட்டில் இருந்தாலும் அந்த அணி கடைசியில் கோட்டைவிட்டது. கடைசிப் பந்து வரை வெற்றி யாருக்கு என்பதே தெரியாத அளவுக்கு பரபரப்பாக இருந்த இந்தப் போட்டி ரசிகர்களை சீட்டின் நுனிக்கே கொண்டு வந்தது.

லக்னெள மிடில் ஆர்டர் ஏமாற்றம்

லக்னெள அணி பெரிய ஸ்கோரை எட்டுவதற்கு மார்க்ரம்(66), இம்பாக்ட் வீரராக வந்த பதோனி(50) ஆகியோரின் அரைசதங்கள் உதவியதைவிட, கடைசி ஓவரில் அப்துல் சமது அடித்த 27 ரன்கள்தான் ஆட்டத்துக்கு புத்துயிர் கொடுத்தது. 10 பந்துகளில் 30 ரன்கள் சேர்த்த அப்துல் சமது லக்னெளவின் வெற்றிக்கு முக்கியக் காரணங்களில் ஒருவராக இருந்தார்.

லக்னெள அணி ஒரு கட்டத்தில் 3 விக்கெட் இழப்புக்கு 54 ரன்கள் சேர்த்து தடுமாறியது. நடுப்பகுதி வீரர்கள் பூரன்(11),கேப்டன் பந்த்(3), தொடக்க ஆட்டக்காரர் மார்ஷ்(4) ஆகியோர் ஏமாற்றம் அளித்தனர். மார்க் ரம், பதோனி ஜோடி 4வது விக்கெட்டுக்கு 76 ரன்கள் சேர்த்து அணியை மீட்டது.

மார்க்ரம், பதோனி ஆட்டமிழந்த பின் மில்லர், சமது சேர்ந்து அணியின் ஸ்கோரை உயர்த்த முயன்றனர். மில்லருக்கு போதுமான வாய்ப்புக் கிடைக்காத நிலையில் சந்தீப் சர்மாவின் ஓவரை பயன்படுத்திய சமது வெளுத்து வாங்கினார். இதுதான் லக்னெள அணியின் வெற்றிக்கான தருணமாக அமைந்தது.

RR vs LSG, வைபவ் சூர்யவன்ஷி

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, அப்துல் சமது

14 வயது வீரரின் அறிமுகம்

ராஜஸ்தான் அணி ஐபிஎல் ஏலத்தில் ரூ.1.10 கோடி கொடுத்து 14 வயது வீரர் வைபவ் சூர்யவன்ஷி எனும் வீரரை வாங்கியிருந்தது. அந்த வைபவ் சூர்யவன்ஷியை நேற்று இம்பாக்ட் வீரராக அறிமுகம் செய்தது. இதன் மூலம் ஐபிஎல் தொடரில் இளம் வயதில் அறிமுகமான வீரர் எனும் பெருமையை வைபவ் பெற்றார். ராஜஸ்தான் அணியில் முதல் பாதியில் பெஞ்சில் இருந்த வைபவ், சாம்ஸனுக்கு ஏற்பட்ட காயத்தால் இந்தப் போட்டியில் வாய்ப்புப் பெற்றார்.

ஜெய்ஸ்வாலுடன் சேர்ந்து ஆட்டத்தைத் தொடங்கிய வைபவ் தான் சந்தித்த முதல் பந்திலேயே ஷர்துல் தாக்கூர் பந்தில் சிக்ஸருக்கு பறக்கவிட்டு அனைவரையும் வியக்க வைத்தார், அதன்பின் எக்ஸ்ட்ரா கவரில் ஒரு பவுண்டரியும் அடித்தார்.

RR vs LSG, வைபவ் சூர்யவன்ஷி

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, வைவப் சூர்யவன்ஷி

முதல் போட்டியில் விளையாடுகிறோம் என்ற எந்த அச்சமும் இன்றி, பதற்றமும் இன்றி வைபவ் சிறப்பாக பேட் செய்தார். ஆவேஷ் கான் ஓவரில் ஒரு சிக்ஸர், பிரின்ஸ் யாதவ் ஓவரில் சிக்ஸர், என வெளுத்தார். ஆனால் மார்க்ரம் பந்துவீச்சில் இறங்கி அடிக்க முற்பட்டு ரிஷப் பந்தால் ஸ்டெம்பிங் செய்யப்பட்டு வைபவ் 20 பந்துகளில் 34 ரன்களில் ஆட்டமிழந்தார். முதல் விக்கெட்டுக்கு ஜெய்ஸ்வாலுடன் சேர்ந்து 85 ரன்கள் எனும் வலுவான அடித்தளம் அமைத்துக் கொடுத்தார்.

14வயதில் களமிறங்கிய வைபவ் ஸ்டெம்பிங் ஆகி ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பும்போது தன்னைக் கட்டுப்படுத்த முடியாமல் கண்ணீர்விட்டு அழுதுகொண்டே சென்றார்.

RR vs LSG, வைபவ் சூர்யவன்ஷி

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,ஜெய்ஸ்வால்

4வது அரைசதம் கண்ட ஜெய்ஸ்வால்

ஜெய்ஸ்வாலுக்கு இந்த ஐபிஎல் தொடக்கம் சிறப்பாக அமையவில்லை. முதல் 4 போட்டிகளில் 35 ரன்களே சேர்த்திருந்து ஏமாற்றம் அளித்திருந்தார். ஆனால், கடைசி 4 போட்டிகளில் ஜெய்ஸ்வால் தொடர்ச்சியாக 4 அரைசதம் அடித்து 250 ரன்களுக்கும் மேல் குவித்துள்ளார்.

இந்த ஆட்டத்திலும் அதிரடியாக ஆடிய ஜெய்ஸ்வால் 31 பந்துகளில் அரைசதம் அடித்தார், பவர்ப்ளேயில் ராஜஸ்தான் அணி விக்கெட் இழப்பின்றி 61 ரன்கள் சேர்த்தது. 12வது ஓவரில் ராஜஸ்தான் அணி 100 ரன்களை எட்டியது. வைபவ் ஆட்டமிழந்த பின் ராணா 9 ரன்னில் தாக்கூர் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார். 3வது விக்கெட்டுக்கு ரியான் பராக், ஜெய்ஸ்வால் கூட்டணி ஏறக்குறைய வெற்றிக்கு அருகே அணியைக் கொண்டு சென்றனர். 18-வது ஓவரில் ஆவேஷ்கான் பந்துவீச்சில் இருவருமே அடுத்தடுத்து ஆட்டமிழந்ததும் ஆட்டம் தலைகீழாக மாறிவிட்டது.

RR vs LSG, வைபவ் சூர்யவன்ஷி

பட மூலாதாரம்,GETTY IMAGES

ராஜஸ்தான் அணி 18-வது ஓவர்வரை ஆட்டத்தை தன்வசம்தான் வைத்திருந்தது. ஆவேஷ் கான் வீசிய 18-வது ஓவரும், கடைசி ஓவரும்தான் ராஜஸ்தான் வெற்றியைப் பறித்தது. ஏனென்றால், 17வது ஓவர்கள் முடிவில் ராஜஸ்தான் வெற்றிக்கு 25 ரன்கள் தேவைப்பட்டது, 8 விக்கெட்டுகள் கைவசம் இருந்தன. ஆனால், ஆவேஷ் கான் வீசிய 18வது ஓவரில் செட்டில் பேட்டர்கள் ஜெய்ஸ்வால்(74), ரியான் பராக்(34) இருவரைம் ஆட்டமிழக்கச் செய்தார். இதுதான் திருப்புமுனையாக அமைந்தது. கடைசி 2 ஓவர்களில் ராஜஸ்தான் வெற்றிக்கு 20 ரன்கள் தேவைப்பட்டது, ஹெட்மெயர், துருவ் ஜூரெல் சேர்ந்து 19-வது ஓவரில்11 ரன்கள் சேர்த்தனர். இதனால் கடைசி ஓவரில் ராஜஸ்தான் வெற்றிக்கு 9 ரன்கள் தேவைப்பட்டது.

ஆவேஷ் கான் வீசிய கடைசி ஓவரில் முதல் பந்தில் ஜுரெல் ஒரு ரன்னும், ஹெட்மயர் 2வது பந்தில் 2 ரன்னும் எடுத்தனர். ஹெட்மயர் 3வது பந்தை ஸ்குயர் லெக் திசையில் அடிக்கவே ஷர்துல் தாக்கூரிடம் கேட்சானது. அடுத்து வந்த சுபம் துபே 4 பந்தில் ரன் சேர்க்கவில்லை, 5வது பந்தில் 2 ரன்கள் சேர்த்தார்.

கடைசிப் பந்தில் ஒரு பவுண்டரி தேவைப்பட்ட நிலையில் ஆவேஷ் வீசிய பந்தை துபே அடிக்க முற்படவே அதே ஆவேஷ் தடுக்கவே ஒரு ரன் மட்டுமே கிடைத்தது. ராஜஸ்தான் அணி கைக்கு மேல் கிடைத்த வெற்றியை 2வது போட்டியாக கோட்டைவிட்டது.

RR vs LSG, வைபவ் சூர்யவன்ஷி

பட மூலாதாரம்,GETTY IMAGES

வெற்றியை 2வது முறையாக நழுவவிட்ட ராஜஸ்தான்

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கடைசி ஓவரில் வெற்றியைக் கோட்டைவிடுவது இது 2வது போட்டியாகும். ஏற்கெனவே கடந்த டெல்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் மிட்ஷெல் ஸ்டார்க் பந்துவீச்சில் கடைசி ஓவரில் 9 ரன்களை சேஸ் செய்ய முடியாமல் ஆட்டம் டைஆனது. இதையடுத்து, ஆட்டம் சூப்பர்ஓவர் சென்று அதில் ராஜஸ்தான் அணி தோற்றது.

இந்த வெற்றியின் மூலம் லக்னெள அணி 8 போட்டிகளில் 5 வெற்றி, 3 தோல்வி என 10 புள்ளிகளுடன் 4வது இடத்தில் இருக்கிறது. முதல் 4 இடங்களில் இருக்கும் குஜராத் டைட்டன்ஸ், டெல்லி கேபிடல்ஸ், பஞ்சாப் கிங்ஸ் ஆகிய அணிகளும் 10 புள்ளிகளுடன் இருப்பதால் ஐபிஎல் பரபரப்பை எட்டியுள்ளது. ராஜஸ்தான் அணி 8 போட்டிகளில் 2 வெற்றிகள் 4 புள்ளிகளுடன் 8வது இடத்தில் நீடிக்கிறது.

"எப்படி தோற்றோம் எனத் தெரியவில்லை"

ராஜஸ்தான் அணியின் கேப்டன் ரியான் பராக் கூறுகையில், "எங்கள் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்துவது கடினமாக இருக்கிறது. எந்த இடத்தில் தவறு செய்தோம் என எனக்குத் தெரியவில்லை. 18 முதல் 19வது ஓவர் வரை வெற்றி எங்கள் கையில்தான் இருந்தது, பின்னர் எப்படி ஆட்டம் கையைவிட்டு போனது எனத் தெரியவில்லை. இந்த தோல்விக்கு நான்தான் காரணம். ஆட்டமிழக்காமல் தவறான ஷாட்டை அடிக்காமல் ஆட்டத்தை 19வது ஓவரிலேயே முடித்துக் கொடுத்திருக்க வேண்டும்.

எங்கள் பந்துவீச்சில் 19 ஓவர்களை சிறப்பாக வீசிவிட்டு கடைசி ஓவரில் தவறு செய்தது துரதிர்ஷ்டம். கடைசி ஓவரை கட்டுக்கோப்பாக வீசியிருந்தால் லக்னெள ஸ்கோரை 165 முதல் 170 ரன்களுக்குள் முடித்திருப்போம். 20 ரன்கள் தேவையின்றி வழங்கிவிட்டோம், அதையும் சேஸ் செய்ய முயன்று நெருங்கிய நிலையில் தோற்றிருக்கிறோம். ஆடுகளம் தெளிவாக இருந்தது, அந்த குறையும் கூற இயலாது" எனத் தெரிவித்தார்.

RR vs LSG, வைபவ் சூர்யவன்ஷி

பட மூலாதாரம்,GETTY IMAGES

யார் இந்த வைபவ் சூர்யவன்ஷி?

ராஜஸ்தான் ராயல்ஸ் சார்பில் நேற்றைய ஆட்டத்தின் மூலம் ஐபிஎல் தொடரில் அறிமுகமான தொடக்க வீரர் வைபவ் சூர்யவன்ஷி ஏற்கெனவே பல சாதனைகளுக்கு சொந்தக்காரராக இருக்கிறார். 14 வயது 23 நாட்களே நிரம்பிய அவர் ஐபிஎல்லில் தடம் பதித்துள்ளார். பிகாரைச் சேர்ந்த வளரும் நட்சத்திரமான அவர், 2024-ம் ஆண்டு தனது 12 வயதிலேயே ரஞ்சி கிரிக்கெட்டில் அறிமுகமாகி சாதனை ஏடுகளில் இடம்பிடித்தார். இதன் மூலம் பிகாரில் இருந்து இளம் வயதில் ரஞ்சி கிரிக்கெட் களம் கண்ட இரண்டாவது வீரரானார் வைபவ்.

அதிரடியாக ஷாட்களை விளாசுவதில் வல்லவரான சூர்யவன்ஷி, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 19 வயதுக்குட்பட்டவர்களுக்கான டெஸ்டில் 58 பந்துகளில் சதம் அடித்து, அந்த பிரிவில் மிக வேகமாக சதம் அடித்த இந்திய இளம் வீரர் என்ற பெருமை பெற்றுள்ளார்.

கிரிக்கெட் உலகில் மிக வேகமாக ஏற்றம் கண்ட வைபவ் சூர்யவன்ஷிதான், ஐபிஎல் வரலாற்றில் மிக இளம் வயதில் ஏலம் எடுக்கப்பட்ட வீரர் என்ற சாதனைக்கும் சொந்தக்காரராக இருக்கிறார். அவரை கடந்த ஏலத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 1.1 கோடி ரூபாய் கொடுத்து வாங்கியது. சஞ்சு சாம்சன், யாஷஷ்வி ஜெய்ஸ்வால் உள்ளிட்ட சர்வதேச தரம் மற்றும் அனுபவம் வாய்ந்த வீரர்களுடன் இணைந்து தனது திறமைகளை மேலும் பட்டை தீட்டிக் கொண்டுள்ள அவர் தனக்கு கிடைத்த முதல் வாய்ப்பிலேயே முத்திரை பதித்துள்ளார்.

(மேற்கூறிய விவரங்கள் ஐபிஎல் இணையதளத்தில் பகிரப்பட்டவை)

RR vs LSG, வைபவ் சூர்யவன்ஷி

பட மூலாதாரம்,GETTY IMAGES

ஐபிஎல் கூடுதல் விவரம்

இன்றைய ஆட்டங்கள்

முதல் போட்டி

  • பஞ்சாப் கிங்ஸ் vs ஆர்சிபி

  • இடம்: நியூ சண்டிகர்

  • நேரம்: மாலை 3.30

இரண்டாவது போட்டி

  • மும்பை இந்தியன்ஸ் vs சிஎஸ்கே

  • இடம்: மும்பை

  • நேரம்: இரவு 7.30

சிஎஸ்கேவின் அடுத்த ஆட்டம்

  • சென்னை சூப்பர் கிங்ஸ் vs சன்ரைசர்ஸ் ஹைதராபாத்

  • நாள் - ஏப்ரல் 25

  • இடம் – சென்னை

  • நேரம்- இரவு 7.30

ஆர்சிபியின் அடுத்த ஆட்டம்

  • ஆர்சிபி vs ராஜஸ்தான் ராயல்ஸ்

  • நாள் - ஏப்ரல் 24

  • இடம் – பெங்களூரு

  • நேரம்- மாலை 3.30 மணி

ஆரஞ்சு தொப்பி யாருக்கு?

  • நிகோலஸ் பூரன்(லக்னெள சூப்பர் ஜெயின்ட்ஸ்)-368 ரன்கள்(8 போட்டிகள்)

  • சாய் சுதர்சன்(குஜராத் டைட்டன்ஸ்)-365 ரன்கள்(7 போட்டிகள்)

  • ஜாஸ் பட்லர்(குஜராத் டைட்டன்ஸ்) 315 ரன்கள்(7 போட்டிகள்)

நீலத் தொப்பி யாருக்கு?

  • பிரசித் கிருஷ்ணா (குஜராத்) 14 விக்கெட்டுகள்(7 போட்டிகள்)

  • குல்தீப் யாதவ்(டெல்லி) 11 விக்கெட்டுகள்(6 போட்டிகள்)

  • நூர் அகமது(சிஎஸ்கே)12 விக்கெட்டுகள்(6 போட்டிகள்)

- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/c1k4pzk3kkeo

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

விராட் கோலி புதிய சாதனை - இரண்டே நாட்களில் பஞ்சாபை பழி தீர்த்த ஆர்சிபி

பஞ்சாப்பை வீழ்த்தியது ஆர்சிபி

பட மூலாதாரம்,GETTY IMAGES

கட்டுரை தகவல்

  • எழுதியவர், க.போத்திராஜ்

  • பதவி, பிபிசி தமிழுக்காக

  • ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

முலான்பூரில் இன்று நடந்த ஐபிஎல் டி20 போட்டியின் 37வது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி.

முதலில் பேட் செய்த பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 157 ரன்கள் சேர்த்தது. 158 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய ஆர்சிபி அணி 3 விக்கெட் இழப்புக்கு 159 ரன்கள் சேர்த்து 11 பந்துகள் மீதமிருக்கையில் 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.

வியாழக்கிழமை நடந்த ஆட்டத்தில் பெங்களூருவில் ஆர்சிபி அணியை மோசமாக தோற்கடித்த பஞ்சாப்புக்கு, அவர்களின் சொந்த மைதானத்தில் வைத்து ஆர்சிபி பதிலடி கொடுத்துள்ளது. இந்த சீசனில் வெளிமைதானங்களில் ஆடிய ஆட்டங்கள் அனைத்திலும் ஆர்சிபி வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

10 புள்ளிகளில் 5 அணிகள்

இதன் மூலம் ஆர்சிபி அணி 8 போட்டிகளில் 5வெற்றிகளுடன் 10 புள்ளிகளுடன் 3வது இடத்தில் இருக்கிறது. புள்ளிப்பட்டியலில் கடும் போட்டி ஏற்பட்டு, 5 அணிகள் 10 புள்ளிகளுடன் உள்ளனர். நிகர ரன்ரேட் மட்டுமே அணிகளின் வரிசையை நிர்ணயிக்கிறது, நிகர ரன்ரேட்டும் ஒவ்வொரு அணிகளுக்கும் இடையே பெரிதாக வேறுபாடு இல்லை. இதனால் குஜராத், டெல்லி, ஆர்சிபி, பஞ்சாப், லக்னெள அணிகளுக்கு இடையே ப்ளே ஆஃப் செல்ல கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.

அதிரடித் தொடக்கம்

டாஸ் வென்ற ஆர்சிபி கேப்டன் பட்டிதார் பந்துவீச்சைத் தேர்ந்தெடுத்தார். பிரயான்ஸ் ஆர்யா, பிரப்சிம்ரன் சிங் அதிரடியான தொடக்கத்தை அளித்தனர். ஹேசல்வுட், புவனேஷ்வர், யாஷ் தயால் பந்துவீச்சில் பவுண்டரி, சிக்ஸர் என ஓவருக்கு 10 ரன்ரேட்டில்பறக்கவிட்டனர்.

பிரவின்ஸ் ஆர்யா 22 ரன்கள் சேர்த்திருந்தபோது குர்னல் பாண்டியா வீசிய 5வது ஓவரில் டேவிட்டிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். முதல் விக்கெட்டுக்கு இருவரும் 42 ரன்கள் சேர்த்தனர். அடுத்துவந்த ஸ்ரேயாஸ் அய்யர், பிரப்சிம்ரனுடன் சேர்ந்தார். பவர்ப்ளே ஓவர்கள் முடிவில் பஞ்சாப் அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 62 ரன்கள் சேர்த்திருந்தது.

நிலையற்ற பேட்டிங்கில் ஸ்ரேயாஸ்

பஞ்சாப்பை வீழ்த்தியது ஆர்சிபி

பட மூலாதாரம்,GETTY IMAGES

பவர்ப்ளே முடிந்த அடுத்த ஓவரில் குர்னல் பாண்டியா பந்துவீச்சில் பிரப்சிம்ரன் 33 ரன்னில் டேவிட்டிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அடுத்த சிறிது நேரத்தில் கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் 6 ரன்னில் ஷெப்பர்ட் பந்துவீச்சில் விக்கெட்டை பறிகொடுத்தார்.

பஞ்சாப் அணியின் முன்னணி ரன்சேர்ப்பாளர்களில் ஸ்ரேயாஸ் முதலிடத்தில் உள்ளார். 7 இன்னிங்ஸில் 3முறை அரைசதத்துக்கு மேல் ரன்களும் 4 முறை 10 ரன்களுக்குள்ளும் ஸ்ரேயாஸ் ஆட்டமிழந்து நிலையற்ற தன்மையை பேட்டிங்கில் வெளிப்படுத்தியுள்ளார். அவரின் ஸ்ட்ரைக் ரேட் 2024 ஐபிஎல் தொடரில் 147 ஆகஇருந்தநிலையில் 2025 சீசனில் 194 ஆக உயர்த்தியும் பேட்டிங்கில் நிலைத்தன்மை இல்லை.

4வது விக்கெட்டுக்கு வந்த நேஹல் வதேரா 5 ரன்னில் ரன்அவுட் ஆகினார்.பஞ்சாப் கிங்ஸின் நடுவரிசை பேட்டிங் ஒட்டுமொத்தமாக ஏமாற்றியது. 62 ரன்களுக்கு ஒருவிக்கெட் என்ற நிலையில் இருந்த பஞ்சாப் அணி, அடுத்த 14 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. ஜோஷ் இங்கிலிஸ் அதிரடியாக ஆடி 17 பந்துகளில் சிக்ஸர், பவுண்டரிகள் என 29 ரன்கள் சேர்த்தநிலையில் சூயஸ் சர்மா பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார். 12 வது ஓவரில் பஞ்சாப் அணி 100 ரன்களை எட்டியது. இங்கிலிஸ் ஆட்டமிழந்த அடுத்த சிறிது நேரத்தில் ஸ்டாய்னிஸ் ஒரு ரன்னில் சூயஸ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

நடுப்பகுதி ஓவர்களில் தடுமாற்றம்

இந்த சீசனில் மட்டும் பஞ்சாப் அணி நடுப்பகுதி ஓவர்களில் மட்டும் இதுவரை 28 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியுள்ளது. நல்ல தொடக்கத்தை அளித்தபோதிலும், அதைக் கட்டுக்கோப்பாக பெரிய ஸ்கோருக்கு கொண்டு செல்ல நடுவரிசை பேட்டிங் பஞ்சாப் அணியில் வலுவாக இல்லை. குறிப்பாக நடுப்பகுதி ஓவர்களில் விக்கெட்டுகளை இழப்பதால், டெத் ஓவர்களில் பெரிய ஸ்கோருக்கு கொண்டு செல்ல முடியவில்லை. செட்டில் பேட்டர்கள் நிலைத்து நின்றால் மட்டுமே பெரிய ஸ்கோருக்கு செல்கிறது. நடுப்பகுதி ஓவர்களில் பஞ்சாப் அணி 67 ரன்கள் மட்டுமே சேர்த்தது 5 விக்கெட்டுகளை பறிகொடுத்தது.

12 வது ஓவரில் பஞ்சாப் அணி 100 ரன்களை எட்டிய பஞ்சாப் அணி அடுத்த 8 ஓவர்களில் 57 ரன்கள் மட்டுமே சேர்த்தது. கடந்த சீசனில் சிறப்பாக ஆடிய சஷாங்க் சிங் இந்த சீசன் தொடங்கியதிலிருந்து ஒற்றைப்படை ரன்னைக் கடக்கவில்லை. கடைசி வரிசையில் சஷாங் சிங் களமிறங்குவதால் அவரால் செட்டில்ஆகி பேட் செய்ய நீண்ட நேர்ம் ஆகிறது. இந்த சீசனில் சஷாங் சிங் 118 ஸ்ட்ரைக் ரேட் வைத்துள்ளார்.

டெத் ஓவரில் மிரட்டிய ஆர்சிபி

பஞ்சாப்பை வீழ்த்தியது ஆர்சிபி

பட மூலாதாரம்,GETTY IMAGES

7-வது விக்கெட்டுக்கு யான்சென், சஷாங் சிங் இருவரும் ரன்களைச் சேர்க்க முயன்றனர். ஆனால், புவனேஷ்வர், ஹேசல்வுட் இருவரும் சேர்ந்து டெத் ஓவர்களில் பஞ்சாப் பேட்டர்களை ரன் சேர்க்க அனுமதிக்கவில்லை. கடைசி 4 ஓவர்களில் மட்டும் ஆர்சிபி வேகப்பந்துவீச்சாளர்கள் 8 யார்கர்களை வீசி பஞ்சாப் பேட்ர்களை திணறவிட்டனர், இதனால் கடைசி 4 ஓவர்களில் பஞ்சாப் அணி 28 ரன்கள் மட்டுமே சேர்த்தது.

பஞ்சாப் அணி 170 ரன்கள் சேர்த்துவிடலாம் என்று கற்பனையில் இருந்தநிலையில் 157 ரன்கள் மட்டுமே சேர்க்க முடிந்தது. சஷாங் சிங் 31 ரன்களிலும் யான்சென் 25 ரன்களிலும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

158 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் ஆர்சிபி அணி களமிறங்கியது. தொடக்கத்திலேயே பில் சால்ட்(1) முதல்ஓவரில் அர்ஷ்தீப் பந்துவீச்சில் ஆர்சிபி இழந்தது. 2வது விக்கெட்டுக்கு படிக்கல், விராட் கோலி ஜோடி சேர்ந்தனர்.

பஞ்சாப் பந்துவீ்ச்சாளர்களின் பந்துவீச்சை படிக்கல், விராட் கோலி வெளுத்து வாங்கி, பவுண்டரி, சிக்ஸர் எனப் பறக்கவிட்டனர். ஒவ்வொரு ஓவரிலும் குறைந்தபட்சம் ஒரு பவுண்டரி, சிக்ஸர் விளாசி ரன்ரேட்டை உயர்வாகவே வைத்திருந்தனர். பவர்ப்ளேயில் ஆர்சிபி ஒருவிக்கெட் இழப்புக்கு 54 ரன்கள் சேர்த்தது. அதிரடியாக பேட் செய்த படிக்கல் 30 பந்துகளில் அரைசதத்தை நிறைவு செய்தார்.

கோலி புதிய சாதனை

பஞ்சாப்பை வீழ்த்தியது ஆர்சிபி

பட மூலாதாரம்,GETTY IMAGES

இருவரின் அதிரடியான ஆட்டத்தால் பார்ட்னர்ஷிப் 65 பந்துகளில் 100 ரன்களை எட்டியது. 11.4 ஓவர்களில் ஆர்சிபி 100 ரன்களை எட்டியது. விராட் கோலி நிதானமாக ஆடி 43 பந்துகளில் அரைசதம் எட்டி புதிய சாதனையை படைத்தார். இதுவரை ஐபிஎல் தொடரில் விராட் கோலி 67வது முறையாக அரைசதம் அதற்கு மேல் ரன்களை சேர்த்துள்ளார். இதன் மூலம் ஐபிஎல் தொடரில் இதுவரை யாரும் எட்டாத சாதனையை கோலி செய்துள்ளார்.

ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணிக்கு எதிராக கோலி நல்ல ரெக்கார்ட் வைத்துள்ளார், கடந்த 4 போட்டிகளில் பஞ்சாபுக்கு எதிராக 3 அரைசதங்களை கோலி விளாசியுள்ளார். கடந்த 10 இன்னிங்ஸ்களில் 8 போட்டிகளில் கோலி குறைந்தபட்சம் 20 ரன்கள் வரை பஞ்சாப்புக்கு எதிராகச் சேர்த்துள்ளார். ஒட்டுமொத்தமாக பஞ்சாப் அணிக்கு எதிராககோலி 1031 ரன்களை சேர்த்து, அதில் 5 அரைசதங்கள், ஒருசதம் அடங்கும். இந்த முறையும் கோலி பஞ்சாப் அணிக்கு எதிராக வலிமையான ஆட்டத்தை தொடங்கியுள்ளார்.

சிறப்பாக ஆடிய படிக்கல் 35 பந்துகளில் 61 ரன்களில்(4சிக்ஸர்,5பவுண்டரி) ஹர்பிரித் பிரார் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். 2வது விக்கெட்டுக்கு கோலி, படிக்கல் 103 ரன்கள் சேர்த்துப் பிரிந்தனர். அடுத்து வந்த பட்டிதார் நிதானமாக ஆடவே, கோலி வேகமாக ரன்களைச் சேர்த்து அணியை வெற்றி நோக்கி நகர்த்தினார்.

பட்டிதார் 12 ரன்னில் சஹல் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார். ஜிதேஷ் சர்மா 11, கோலி 54 பந்துகளில் 73 ரன்களுடன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர்.

18.5 ஓவர்களில் ஆர்சிபி அணி 3 விக்கெட் இழப்புக்கு 159 ரன்கள் சேர்த்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.

ஆர்சிபி வெற்றிக்கு காரணம்

பஞ்சாப்பை வீழ்த்தியது ஆர்சிபி

பட மூலாதாரம்,GETTY IMAGES

ஆர்சிபியின் அணியின் வெற்றிக்கு முக்கியக் காரணம் பந்துவீச்சாளர்கள்தான். குர்னல் பாண்டியா, சூயஷ் சர்மா இருவரும் 8 ஓவர்கள் வீசி 51 ரன்கள் கொடுத்து 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். நடுப்பகுதி ஓவர்களில் பஞ்சாப் பேட்டர்களை திணறவிட்டு ரன்ரேட்டை இழுத்துப் பிடித்தனர்.

ஹேசல்வுட், புவனேஷ் இருவரும் விக்கெட் வீழ்த்தாவிட்டாலும் டெத் ஓவர்களில் இருவரின் துல்லியமான பந்துவீச்சும், 8யார்கர்களும் பஞ்சாப் பேட்டர்களை நிலைகுலையவைத்தது, கடைசி 4 ஓவர்களில் 28 ரன்கள் மட்டுமே கொடுத்தனர். பஞ்சாப் அணியில் வலிமையான பேட்டர்கள்இருந்தபோதிலும் 157 ரன்களுக்குள் சுருட்டிய பெருமை பந்தீவீச்சாளர்களுக்குத்தான்.

அடுத்ததாக விராட் கோலியின் பேட்டிங் குறிப்பிட்டே தீர வேண்டும்.பஞ்சாப் அணிக்கு எதிராக ஐபிஎல் தொடரில் எப்போதுமே கோலி சிறப்பாக ஆடக்கூடியவர். கடந்த 4இன்னிங்ஸில் பஞ்சாப் அணிக்கு எதிராக 3 அரைசதங்களை கோலிவிளாசியுள்ளார், கடந்த போட்டியில் மட்டுமே ஒரு ரன்னில் ஆட்டமிழந்தார். இந்த ஆட்டத்திலும் கோலியின் ஆங்கர் ரோல் ஆட்டம் பஞ்சாப் அணிக்கு பெரிய தலைவலியாக மாறியது. வியாழக்கிழமை பெங்களூருவில் நடந்த போட்டியில் மோசமாக ஆர்சிபி தோற்ற நிலையில், அதற்கு ஈடுகட்டவே கோலி கடைசிவரை களத்தில் நின்று வெற்றி தேடித்தந்து ஆட்டநாயகன் விருதும் வென்றார்.

இம்பாக்ட் ப்ளேயராக வந்த தேவ்தத் படிக்கல் அருமையான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அதிரடியாக ஆடிய படிக்கல் ரன்ரேட்டை குறையவிடாமல் கொண்டு சென்று அரைசதம் அடித்தார். பேட்டிங்கில் இருவரின் ஆட்டம்தான் முத்தாய்ப்பாக அமைந்திருந்தது.

பஞ்சாப்பை வீழ்த்தியது ஆர்சிபி

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,இந்த சீசனில் மட்டும் பஞ்சாப் அணி நடுப்பகுதி ஓவர்களில் மட்டும் இதுவரை 28 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியுள்ளது.

பந்துவீச்சாளர்களே காரணம்

ஆர்சிபி அணியின் கேப்டன் ரஜத் பட்டிதார் கூறுகையில் " வெற்றிக்கு காரணம் பந்துவீச்சாளர்கள்தான். தேவ்தத், கோலி இருவரும் சிறப்பாக ஆடினர். பந்துவீச்சாளர்கள் தங்கள் திட்டத்தை சரியாக செயல்படுத்தினர். பந்துவீ்ச்சாளர்கள் வெற்றிக்கான பாதை அமைத்தனர், அதில் பேட்டர்கள் பயணித்தனர். ஒவ்வொருவரும் தங்களின் பங்களிப்பை வெளிப்படுத்தியது சிறப்பு" எனத் தெரிவித்தார்

விராட் கோலி புதிய சாதனை

பட மூலாதாரம்,GETTY IMAGES

அடுத்த ஆட்டம்

சிஎஸ்கேவின் அடுத்த ஆட்டம்

சென்னை சூப்பர் கிங்ஸ் vs சன்ரைசர்ஸ் ஹைதர்பாத்

நாள் - ஏப்ரல் 25

இடம் – சென்னை

நேரம்- இரவு 7.30

மும்பையின் அடுத்த ஆட்டம்

மும்பை இந்தியன்ஸ் vs சன்ரைசர்ஸ்

நாள் - ஏப்ரல் 23

இடம் – ஹைதராபாத்

நேரம்- இரவு 7.30 மணி

ஆர்சிபியின் அடுத்த ஆட்டம்

ஆர்சிபி vs ராஜஸ்தான் ராயல்ஸ்

நாள் - ஏப்ரல் 24

இடம் – பெங்களூரு

நேரம்- மாலை 3.30 மணி

ஆரஞ்சு தொப்பி யாருக்கு

நிகோலஸ் பூரன்(லக்னெள சூப்பர் ஜெயின்ட்ஸ்)-368 ரன்கள்(8 போட்டிகள்)

சாய் சுதர்சன்(குஜராத் டைட்டன்ஸ்)-365 ரன்கள்(7 போட்டிகள்)

ஜாஸ் பட்லர்(குஜராத் டைட்டன்ஸ்) 315 ரன்கள்(7 போட்டிகள்)

நீலத் தொப்பி

பிரசித் கிருஷ்ணா (குஜராத்) 14 விக்கெட்டுகள்(7 போட்டிகள்)

குல்தீப் யாதவ்(டெல்லி) 11 விக்கெட்டுகள்(6 போட்டிகள்)

நூர் அகமது(சிஎஸ்கே)12 விக்கெட்டுகள்(6 போட்டிகள்)

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/c9dj925ly0xo

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மும்பை ஹாட்ரிக் வெற்றி: தோல்வியிலும் சிஎஸ்கேவுக்கு கிடைத்த ஆறுதல் - தோனி கூறியது என்ன?

CSK vs MI, தோனி, ரோஹித், ப்ளேஆஃப் வாய்ப்பு

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,ரோஹித் சர்மா இந்த ஐபிஎல் சீசனில் முதல் அரைசதத்தை விளாசி ஆட்டநாயகன் விருதை வென்றார்.

கட்டுரை தகவல்

  • எழுதியவர், க.போத்திராஜ்

  • பதவி, பிபிசி தமிழுக்காக

  • 21 ஏப்ரல் 2025, 01:50 GMT

மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 போட்டியின் 38-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 9 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது மும்பை இந்தியன்ஸ் அணி.

முதலில் பேட் செய்த சிஎஸ்கே அணி 5 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் சேர்த்தது. அடுத்து களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் 15.4 ஓவர்களில் ஒரு விக்கெட்டை மட்டும் இழந்து 177 ரன்கள் சேர்த்து 9 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.

நடப்பு சீசனில் தனது முதல் அரைசதத்தை ரோஹித் விளாச, டி20 ஸ்பெஷலிஸ்டான சூர்யகுமாரும் வழக்கமான அதிரடியைக் காட்டியதால் மும்பை அணி சிரமமின்றி வெற்றி இலக்கை எட்டியது. நட்சத்திரங்கள் சரியான நேரத்தில் எழுச்சி பெற்றுள்ளதால், ஹாட்ரிக் வெற்றியை பெற்றுள்ள மும்பை அணி பிளேஆஃப் சுற்றுக்கான வாய்ப்பை அதிகப்படுத்திக் கொண்டுள்ளது.

அதேநேரத்தில், சிஎஸ்கே அணியின் பிளேஆஃப் வாய்ப்பு சிக்கலாகியுள்ளது. அறிமுக வீரர் களத்தில் ஏற்படுத்திய தாக்கத்தைக் கூட பெரிய நட்சத்திரங்கள் சரியாக பயன்படுத்திக் கொள்ளவில்லை என்பதுதான் சிஎஸ்கே அணியின் சோகம். சிஎஸ்கேவின் பிளேஆஃப் வாய்ப்பு பற்றி தோனி என்ன சொன்னார்?

சிஎஸ்கே மந்தமான தொடக்கம்

சிஎஸ்கே அணி வீரர் டேவான் கான்வேயின் தந்தை காலமாகிவிட்டதால் நேற்று சிஎஸ்கே வீரர்கள் கையில் கறுப்புபட்டை அணிந்து விளையாடினர். கான்வே இல்லாத நிலையில் ரவீந்திரா, ஷேக் ரஸீத் களமிறங்கினர். அஸ்வனிகுமார் ஓவரில் ரவீந்திரா விரைவிலேயே விக்கெட்டை இழந்தார். 3.1 ஓவர்களி்ல் சிஎஸ்கே அணி முதல் விக்கெட்டை இழக்கும் வரை ஒரு பவுண்டரி மட்டுமே அடித்திருந்தது. அனுபவம் இல்லாத தொடக்க வீரர்களால் மும்பையின் பும்ரா, போல்ட் பந்துவீச்சை சமாளிக்க முடியவில்லை என்பது கண்கூடாகவே தெரிந்தது.

17 வயதான இளம் வீரர் ஆயுஷ் மாத்ரே நேற்றைய ஆட்டத்தில் சிஎஸ்கே அணியில் அறிமுகமாகி, அதிரடியாக பேட் செய்தார். ஆயுஷ் மாத்ரே களத்துக்கு வந்தபின்புதான் சில பவுண்டரிகள், சிக்ஸர்கள் சிஎஸ்கே அணிக்கு கிடைத்தன. அதன் பின்னரே சிஎஸ்கே ஸ்கோர்போர்டில் ரன்கள் ஓடின. பவர்ப்ளேயில் ஒருவிக்கெட் இழப்புக்கு 48 ரன்களைச் சேர்த்தது சிஎஸ்கே அணி.

ஆயுஷ்மாத்ரே, 15 பந்துகளில் 32 ரன்கள் சேர்த்த நிலையில் தீபக் சஹர் ஓவரில் சான்ட்னரில் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அடுத்த சிறிது நேரத்தில் தொடக்க ஆட்டக்காரர் ஷேக் ரசீத் 12 ரன்னில் சான்ட்னர் பந்துவீச்சில் ஸ்டெம்பிங் ஆகி ஆட்டமிழந்தார். 63 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து சிஎஸ்கே தடுமாறியது.

CSK vs MI, தோனி, ரோஹித், ப்ளேஆஃப் வாய்ப்பு

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,அஸ்வனி குமார் ஓவர்களை குறிவைத்து ஜடேஜாவும், துபேயும் ஆடத் தொடங்கி பவுண்டரி, சிக்ஸர்களை விளாசினர்.

சிஎஸ்கேவை மீட்ட ஜடேஜா, துபே கூட்டணி

4வது விக்கெட்டுக்கு ஜடேஜா, துபே இருவரும் ஜோடி சேர்ந்து சிஎஸ்கே அணியை மெல்ல சரிவிலிருந்து மீட்டனர். சான்ட்னர் பந்துவீச்சை அதி எச்சரிக்கையாக கையாண்ட துபே பெரிய ஷாட்களுக்கு செல்லவில்லை. இதனால் சான்ட்னர் 2 ஓவர்களில் 8 ரன்கள் மட்டுமே கொடுத்து ஒரு விக்கெட்டையும் வீழ்த்தியிருந்தார். துபேயும், ஜடேஜாவும் நீண்டநேரம் பெரிய ஷாட்களுக்குச் செல்லாமல் இருந்தனர். 7வது ஓவர் முதல் 12வது ஓவர் வரை சிஎஸ்கே அணி ஒருபவுண்டரி கூட அடிக்கவில்லை

டிரன்ட் போல்ட், அஸ்வனி குமார் ஓவர்களை குறிவைத்து ஜடேஜாவும், துபேயும் ஆடத் தொடங்கி, பவுண்டரி, சிக்ஸர்களை விளாசினர். துபே 30 பந்துகளில் அரைசதம் அடித்தார். பும்ரா ஸ்லோவர் பால் பந்துவீச்சில் துபே 50 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். 4-வது விக்கெட்டுக்கு இருவரும் 79 ரன்கள் சேர்த்துப் பிரிந்தனர்.

அடுத்து களமிறங்கிய தோனி 4 ரன்னில் திலக் வர்மாவிடம் கேட்ச் கொடுத்து பும்ரா பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார். டெத் ஓவர்களை பும்ரா, சான்ட்னர் வீசி சிஎஸ்கே பேட்டர்களை கட்டிப்போட்டனர். சான்ட்னர் 18வது ஓவரை வீசி ஒரு பவுண்டரி கூட அடிக்கவிடவில்லை. ஜடேஜா 34 பந்துகளில் அரைசதம் அடித்து 53 ரன்களில் ஆட்டமிழக்காமல் இருந்தார்.

CSK vs MI, தோனி, ரோஹித், ப்ளேஆஃப் வாய்ப்பு

பட மூலாதாரம்,GETTY IMAGES

மும்பையின் 'ராஜா ரோஹித்'

தி மும்பை சா ராஜா என்று செல்லமாக அழைக்கப்படும் ரோஹித் சர்மா இந்த ஐபிஎல் சீசனில் முதல் அரைசதத்தை நேற்று விளாசி ஆட்டநாயகன் விருதை வென்றார். ரோஹித் சர்மா நேற்றைய ஆட்டத்தில் தீர்க்கமாக, பொறுமையாக, எந்த தவறையும் பேட்டிங்கில் செய்யாமல் அற்புதமாக பேட் செய்தார். இதபோன்று ரோஹித் நிதானமாகத் தொடங்கி, அதிரடியாக ஆடியது அரிதானது. கலீல் அகமது பந்துவீச்சில் ரோஹித் லெக்சைடில் அடித்த இரு "பிக்அப் ஷாட்" சிக்ஸர்கள் ரசிகர்களின் கண்களுக்கு விருந்தாகியது.

பதிராணா பந்துவீச்சை ரோஹித் கசக்கிப் பிழிந்துவிட்டார். நூர் அகமது ஓவரையும் அவர் விட்டு வைக்கவில்லை. ரோஹித் சர்மா ஃபார்முக்கு வந்தால் என்ன நடக்கும் என்பதை சிஎஸ்கே இளம் வீரர்கள் நேற்று உணர்ந்திருப்பர்.

ரோஹித் சர்மா கடந்த 6 போட்டிகளாக 20 ரன்களுக்கு மேல் தாண்டவில்லை, மொத்தமே 82 ரன்கள்தான் சேர்த்திருந்தார் என்ற விமர்சிக்கப்பட்டது. ஆனால் நேற்று பிரமிப்பூட்டும் ஷாட்களை அடித்த ரோஹித் சர்மா 33 பந்துகளில் அரைசதம் விளாசி, 45 பந்துகளில் 76 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். ரோஹித் கணக்கில் 6 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகள் அடங்கும். சிஎஸ்கே அணிக்கு எதிராக ரோஹித் சர்மா அடித்த 9-வது அரைசதமாகும். ஒட்டுமொத்தத்தில் 44வது ஐபிஎல் அரைசதமாகும்.

ரோஹித்துக்கு துணையாக ஆடிய சூர்யகுமார் யாதவ் 26 பந்துகளில் அரைசதம் அடித்து, 30 பந்துகளில் 68 ரன்களுடன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இவரின் கணக்கில் 5 சிக்ஸர்களும், 6 பவுண்டரிகளும் அடங்கும். இருவரும் 2வது விக்கெட்டுக்கு 114 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர்.

CSK vs MI, தோனி, ரோஹித், ப்ளேஆஃப் வாய்ப்பு

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,ரோஹித் சர்மா கடந்த 6 போட்டிகளாக 20 ரன்களுக்கு மேல் தாண்டவில்லை, மொத்தமே 82 ரன்கள்தான் சேர்த்திருந்தார் என்ற விமர்சிக்கப்பட்டது

சென்னையை வதம் செய்த மும்பை

இந்த ஆட்டத்தில் மும்பை அணி பந்துவீச்சிலும், பேட்டிங்கிலும் சிஎஸ்கே அணியை முற்றிலுமாக ஆதிக்கம் செய்தது என்று கூற வேண்டும். பந்துவீச்சில் போல்ட், அஸ்வனி குமார் ஓவர்களை மட்டுமே துபே, ஜடேஜா அடித்தனர்.

பும்ரா, சான்ட்னர் ஓவர்கள் சிஎஸ்கே பேட்டர்களுக்கு சிம்மசொப்பனமாக இருந்தன. மும்பை வான்கடே மைதானத்தில் இதுபோன்ற 176 ஸ்கோர் என்பது டிபெண்டபிள் ஸ்கோர் கிடையாது. இன்னும் கூடுதலாக 30 ரன்களை சிஎஸ்கே சேர்த்திருந்தால் சற்று போராடியிருக்கலாம். ஆனால், இந்த ஸ்கோரை வைத்து வலிமையான பேட்டிங் வரிசை வைத்திருக்கும் மும்பை அணியை சுருட்டுவது சாத்தியமில்லை.

பேட்டிங்கில் ரோஹித் சர்மா, சூர்யகுமார் இருவரும் சிஎஸ்கே பந்துவீச்சாளர்களை தெறித்து ஓடவிட்டனர். அதிலும் ரோஹித் சர்மா லெக் சைடில் அடித்த சில ஷாட்கள் மின்னல் வேக ஃபேவரேட் சிக்ஸர்களாக இருந்தன. கலீல் அகமது ஓவரில் விளாசிய இரு சிக்ஸர்களும் ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்தன. இருவரையும் பிரிக்க தோனியும் பல பந்துவீச்சாளர்களை மாற்றியும், கடைசி வரை பலனில்லை. பதிரணா, நூர் அகமது இருவரையும் வைத்துதான் நடுப்பகுதி ஓவர்களை சிஎஸ்கே சமாளித்து வந்தது. ஆனால், நேற்று இருவரின் பந்துவீச்சையும் ரோஹித் சர்மா, சூர்யகுமார் விளாசித் தள்ளினர்.

அதிலும் ஜடேஜா மீது சூர்யகுமாருக்கு என்ன கோபமோ தெரியவில்லை, ஜடேஜா ஓவரை குறிவைத்து சூர்யகுமார் ஸ்வீப் ஷாட், காலை மடக்கிக்கொண்டு லெக் சைடில் சிக்ஸர், பவுண்டரி என துவைத்து எடுத்துவிட்டார். பதிராணா 2 ஓவர்கள் வீசிய நிலையில், 4 சிக்ஸர்கள், ஒருபவுண்டரி என 34 ரன்களை ரோஹித், சூர்யா விளாசித் தள்ளினா்.

ஒட்டுமொத்தத்தில் சிஎஸ்கே அணியை மும்பை அணி தங்களின் பந்துவீச்சாலும், பேட்டிங்காலும் ஆதிக்கம் செய்தது என்றுதான் கூற முடியும்.

சென்னை vs மும்பை

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,ரோஹித் சர்மா, சூர்யகுமார் இருவரும் சிஎஸ்கே பந்துவீச்சாளர்களை ஓடவிட்டனர்.

சிஎஸ்கேயின் ஆறுதல் இவர்கள்தான்

சிஎஸ்கே அணியின் ஆறுதலாக நேற்று இருவர் மட்டுமே இருந்தனர். ஒன்று இம்பாக்ட் ப்ளேயராக களமிறக்கப்பட்ட ரவிச்சந்திரன் அஸ்வின். சிஎஸ்கே அணியின் அனைத்து பந்துவீச்சாளர்களின் பந்துகளையும் அடித்து விளாசிய ரோஹித், சூர்யாவால் அஸ்வின் பந்துவீச்சை பெரிதாக அடிக்க முடியவில்லை. 4 ஓவர்களை வீசிய அஸ்வின் விக்கெட் எடுக்காவிட்டாலும் 25 ரன்கள் மட்டுமே கொடுத்து 6 ரன்ரேட்டில் கட்டுக்கோப்பாகப் பந்துவீசினார்.

2வது நபர் இளம் வீரர் ஆயுஷ் மாத்ரேயின் அதிரடியான பேட்டிங். இவர் போன்ற இளம் வீரரை ஏன் சிஎஸ்கே பயன்படுத்தவில்லை என்ற கேள்வி எழுந்தது. அற்புதமான பேட்டிங்கை வெளிப்படுத்திய மாத்ரே, பீல்டிங்கில் சிறப்பாக செயல்பட்டு ஒரு கேட்சைப் பிடித்தார், ரோஹித் சர்மாவுக்கு ஒரு கேட்சை பிடித்து பவுண்டரி கோட்டில் கால் சென்றுவிடும் சூழலில் பந்தை தடுத்து தட்டிவிட்டு சிக்ஸர் செல்வதைத் தடுத்தார். பீல்டிங்கிலும், பேட்டிங்கிலும் சிறப்பாக செயல்பட்ட ஆயுஷ் மாத்ரே ஆறுதல். இருவரைத் தவிர சிஎஸ்கே அணி வேறு எதிலும் ஆறுதல் பட முடியாது.

CSK vs MI, தோனி, ரோஹித், ப்ளேஆஃப் வாய்ப்பு

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,அற்புதமான பேட்டிங்கை வெளிப்படுத்திய மாத்ரே, பீல்டிங்கில் சிறப்பாக செயல்பட்டு ஒரு கேட்சைப் பிடித்தார்

சிஎஸ்கே மோசமான செயல்பாடு

பீல்டிங், பந்துவீச்சு, பேட்டிங் என அனைத்திலுமே சிஎஸ்கே அணி சராசரிக்கும் குறைவாகவே செயல்பட்டது. நடுப்பகுதி ஓவர்களில் பதிராணா, நூர்முகமது இருவரையும் வைத்து எதிரணிகளை மிரட்டிய நிலையில் இருவரின் பந்துவீச்சையும் ரோஹித், ஸ்கை நொறுக்கினர்.

மும்பை அணியின் ஒரு விக்கெட்டைத் தவிர்த்து அடுத்ததாக விக்கெட்டுகளை வீழ்த்த முடியாத நிலையில்தான் பந்துவீச்சு பலவீனமாக இருந்துள்ளது. ரோஹித், சூர்யா இருவரையும் ஆட்டமிழக்கச் செய்ய கேப்டன் தோனி பல பந்துவீச்சாளர்களைப் பயன்படுத்தியும், இருவரும் விக்கெட்டை பறிகொடுக்க சிறிதுகூட இடம் அளிக்கவில்லை. ஜடேஜா, பதிராணா, நூர் முகமது, கலீல் அகமது, ஓவர்டன் பந்துவீச்சில் ரோஹித், ஸ்கை இருவரும் சிக்ஸர்களையும், பவுண்டரிகளையும் விளாசினர்.

ஜடேஜா பந்துவீச்சில் இதற்கு முன் 4 முறை ஆட்டமிழந்துள்ள சூர்யகுமார் யாதவ் நேற்று ஜடேஜா ஓவரை குறிவைத்து அடித்தார். ஜடேஜா ஓவரில் எக்ஸ்ட்ரா கவரில் ஒரு பவுண்டரி, ஸ்வீப்ஸில் சிக்ஸர் அடித்து, ஜடேஜா ஓவரில் முதல்முறையாக ஸ்கை சிக்ஸர் விளாசினார். சூர்யகுமார் ஸ்வீப் ஷாட்டில் மட்டும் நேற்று 35 ரன்கள் சேர்த்தார்.

CSK vs MI, தோனி, ரோஹித், ப்ளேஆஃப் வாய்ப்பு

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,பீல்டிங், பந்துவீச்சு, பேட்டிங் என அனைத்திலுமே சிஎஸ்கே அணி சராசரிக்கும் குறைவாகவே செயல்பட்டது

சிஎஸ்கேவை ஆளும் மும்பை

கடந்த 2022ம் ஆண்டுக்குப்பின் வான்கடே மைதானத்தில் சிஎஸ்கே அணியை முதல்முறையாக வீழ்த்தியது மும்பை இந்தியன்ஸ் அணி. ஐபிஎல் தொடரின் தொடக்கத்தில் சென்னை சேப்பாக்கத்தில் நடந்த ஆட்டத்தில் மும்பை அணியை வீழ்த்தியது சென்னை. அப்போது நடந்த ஆட்டத்தில் ஹர்திக் பாண்டியா, பும்ரா இல்லை. ஆனால், நேற்று நடந்த ஆட்டத்தில் சிஎஸ்கேவுக்கு பதிலடி கொடுத்தது மும்பை இந்தியன்ஸ்.

சிஎஸ்கே அணியை 9 விக்கெட் வித்தியாசத்தில் 3வது முறையாக மும்பை அணிவீழ்த்தியது. இதற்கு முன் 2008 ஐபிஎல் சீசனில் இதே வான்ஹடே மைதானத்தில் சிஎஸ்கேவை 9 விக்கெட்டில் பந்தாடியது மும்பை அணி, 2020-ஆம் ஆண்டு ஷார்ஜாவில் நடந்த ஐபிஎல் போட்டியில் சிஎஸ்கேவை 10 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை நசுக்கியது. இப்போது 3வது முறையாக 9 விக்கெட் வித்தியாசத்தில் சிஎஸ்கே அணியை வாகை சூடியுள்ளது. சிஎஸ்கே அணியை 9 விக்கெட் வித்தியாசத்தில் 3 முறை வீழ்த்திய ஒரே அணி மும்பை இந்தியன்ஸ் மட்டும்தான் வேறு எந்த அணியும் இல்லை. சிஎஸ்கே அணி நிர்ணயித்த ஸ்கோரை 100 பந்துகளுக்குள் சேஸ் செய்து வென்ற ஒரே அணி மும்பை இந்தியன்ஸ் மட்டும்தான்.

இந்த சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு கிடைத்த தொடர் 3வது வெற்றியாகும். இதன் மூலம் மும்பை அணி 8 போட்டிகளில் 4 வெற்றி, 4 தோல்வி என 8 புள்ளிகளுடன் 6வது இடத்திலும், நிகரரன்ரேட்டில் ஆர்சிபிக்கு இணையாக 0.483 என இருக்கிறது. இன்னும் ஒரு வெற்றியை மும்பை அணி பெற்றால் நிகர ரன் ரேட்டில் 2வது இடம் அல்லது 3வது இடத்துக்கு முன்னேறிவிடும்.

CSK vs MI, தோனி, ரோஹித், ப்ளேஆஃப் வாய்ப்பு

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,இதற்கு முன் 2008 ஐபிஎல் சீசனில் இதே வான்ஹடே மைதானத்தில் சிஎஸ்கேவை 9 விக்கெட்டில் பந்தாடியது மும்பை அணி

சிஎஸ்கேவின் பிளேஆஃப் வாய்ப்பு பற்றி தோனி கூறியது என்ன?

சிஎஸ்கே கேப்டன் தோனி தோல்விக்குப் பின் கூறுகையில் " நாங்கள் டிபெண்ட் செய்ய முடியாத ஸ்கோரையே சேர்த்தோம். 2வது பாதியில் பனியின் தாக்கம் இருந்ததும் பந்துவீச்சில் தொய்வடைய காரணம். உலகக் கிரிக்கெட்டில் சிறந்த டெத்ஓவர் பந்துவீச்சாளர் பும்ரா, டெத்பந்துவீச்சை மும்பை அணி தொடக்கத்திலேயே கொண்டு வந்தால் எங்களால் சிறந்த தொடக்கம் கொடுக்க முடியவில்லை. பவர்ப்ளேயில் அதிக ரன்களும் அடிக்க முடியவில்லை. ஆயுஷ் மாத்ரே சிறப்பாக பேட் செய்தார்.

மும்பை பேட்டர்கள் சுழற்பந்துவீச்சை சிறப்பாக கையாண்டனர். நாங்கள் இந்தத் தோல்வியை உணர்ந்து ஆலோசிக்க வேண்டும். இந்த தொடரில் வெற்றிகரமாக இல்லாவிட்டாலும் நாங்கள் நல்ல கிரி்க்கெட்டை விளையாடினோம், உணர்ச்சிவசப்படத் தேவையில்லை. நாங்கள் சரியான ஃபார்மில் கிரிக்கெட் விளையாடுகிறோமா அல்லது சரியான ஃபார்மில் இருக்கிறோமா என்பது அவசியம் ஆய்வுசெய்யப்பட வேண்டியது, இன்னும் அதிகமான ரன்கள் சேர்க்க வேண்டியது அவசியம். சில கேட்சுகள்தான் ஆட்டத்தை மாற்றும், பீல்டிங்கில் உள்ள குறைகளையும் களைய வேண்டும். நாங்கள் ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறாவிட்டால் சரியான வீரர்கள் கலவையுடன் அடுத்த சீசனில் சந்திக்கலாம்" எனத் தெரிவித்தார்.

வெளியேறுகிறதா சிஎஸ்கே?

CSK vs MI, தோனி, ரோஹித், ப்ளேஆஃப் வாய்ப்பு

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,இன்னும் ப்ளே ஆஃப் சுற்றிலிருந்து சிஎஸ்கே அணி அதிகாரபூர்வமாக வெளியேறவில்லை. ஆனால், இன்னும் ஒரு தோல்வி அந்த அணியை முழுமையாக வெளியேற்றிவிடும்.

அதேசமயம், சிஎஸ்கே அணி சந்தித்த 6வது தோல்வியாகும். 8 போட்டிகளில் ஆடிய சிஎஸ்கே 2 வெற்றி, 6 தோல்விகள் என 4 புள்ளிகளுடன் கடைசி இடத்தில் இருக்கிறது, நிகர ரன்ரேட்டும் மைனஸ் 1.392 என இருக்கிறது. இன்னும் 6 போட்டிகள் சிஎஸ்கே அணிக்கு மீதமிருக்கும் நிலையில் அனைத்திலும் வென்றால் மட்டுமே ப்ளே ஆஃப் சுற்றை உயிர்ப்புடன் வைத்திருக்க முடியும்.

ஒருவேளை 16 புள்ளிகளை சிஎஸ்கே அணி பெற்றாலும் அது ப்ளே ஆஃப் செல்ல தகுதியாக இருக்குமா என்பதும் சந்தேகம்தான். இன்னும் ப்ளே ஆஃப் சுற்றிலிருந்து சிஎஸ்கே அணி அதிகாரப்பூர்வமாக வெளியேறவில்லை. ஆனால், இன்னும் ஒரு தோல்வி அந்த அணியை முழுமையாக வெளியேற்றிவிடும்.

இன்றைய ஆட்டம்

கொல்கத்தா vs குஜராத்

இடம்: கொல்கத்தா

நேரம்: இரவு 7.30

சிஎஸ்கேவின் அடுத்த ஆட்டம்

சென்னை சூப்பர் கிங்ஸ் vs சன்ரைசர்ஸ் ஹைதர்பாத்

நாள் - ஏப்ரல் 25

இடம் – சென்னை

நேரம்- இரவு 7.30

மும்பையின் அடுத்த ஆட்டம்

மும்பை இந்தியன்ஸ் vs சன்ரைசர்ஸ்

நாள் - ஏப்ரல் 23

இடம் – ஹைதராபாத்

நேரம்- இரவு 7.30 மணி

ஆர்சிபியின் அடுத்த ஆட்டம்

ஆர்சிபி vs ராஜஸ்தான் ராயல்ஸ்

நாள் - ஏப்ரல் 24

இடம் – பெங்களூரு

நேரம்- மாலை 3.30 மணி

ஆரஞ்சு தொப்பி யாருக்கு?

நிகோலஸ் பூரன்(லக்னெள சூப்பர் ஜெயின்ட்ஸ்)-368 ரன்கள்(8 போட்டிகள்)

சாய் சுதர்சன்(குஜராத் டைட்டன்ஸ்)-365 ரன்கள்(7 போட்டிகள்)

சூர்யகுமார் யாதவ்(மும்பை) 333 ரன்கள்(8 போட்டிகள்)

நீலத் தொப்பி யாருக்கு?

பிரசித் கிருஷ்ணா (குஜராத்) 14 விக்கெட்டுகள்(7 போட்டிகள்)

குல்தீப் யாதவ்(டெல்லி) 11 விக்கெட்டுகள்(6 போட்டிகள்)

நூர் அகமது(சிஎஸ்கே)12 விக்கெட்டுகள்(6 போட்டிகள்)

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/c39j4kx2xkwo

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கொல்கத்தாவை சகலதுறைகளிலும் விஞ்சிய குஜராத் 39 ஓட்டங்களால் வெற்றிபெற்றது

Published By: VISHNU 22 APR, 2025 | 12:30 AM

image

(நெவில் அன்தனி)

கொல்கத்தா ஈடன் கார்ட்ன்ஸ் விளையாட்டரங்கில் திங்கட்கிழமை (21) இரவு நடைபெற்ற 18ஆவது ஐபிஎல் அத்தியாயத்தின் 39ஆவது போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸை சகலதுறைகளிலும் விஞ்சிய குஜராத் டைட்டன்ஸ் 39 ஓட்டங்களால் இலகுவாக வெற்றிபெற்றது.

இந்த வெற்றியில் குஜராத் டைட்டன்ஸின் முன்வரிசை வீரர்களான அணித் தலைவர் ஷுப்மான் கில், சாய் சுதர்மன், ஜொஸ் பட்லர் ஆகியோரின் அபார துடுப்பாட்டங்களும் சிறந்த களத்தடுப்புடன் கூடிய துல்லியமான பந்துவீச்சும் பிரதான பங்காற்றின.

இதுவரை 8 போட்டிகளில் 6 வெற்றிகளை ஈட்டிய குஜராத் டைட்டன்ஸ் 12 புள்ளிகளுடன் அணிகள் நிலையில் முன்னிலையில் இருக்கிறது. நடப்பு சம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 8 போட்டிகளில் 3 வெற்றிகளுடன் 6 புள்ளிகளைப் பெற்று 7ஆம் இடத்தில் இருக்கிறது.

அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட குஜராத் டைட்டன்ஸ் 20 ஓவர்களில் 3 விக்கெட்களை மாத்திரம் இழந்து 199 ஓட்டங்களைப் குவித்தது.

சாய் சுதர்ஷன், ஷுப்மான் கில் ஆகிய இருவரும் அதிரடி வேகத்தில் ஓட்டங்களைக் குவித்து முதலாவது விக்கெட்டில் 74 பந்துகளில் 114 ஓட்டங்களைப் பகிர்ந்து சிறப்பான ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர்.

2104_shubman_gill_mom.png

முதலாவதாக ஆட்டம் இழந்த சாய் சுதர்மன் 36 பந்துகளில் 6 பவுண்டறிகள் ஒரு சிக்ஸுடன் 52 ஓட்டங்களைப் பெற்றார்.

தொடர்ந்து ஷுப்மான் கில், ஜொஸ் பட்லர் ஆகிய இருவரும் 2ஆவது விக்கெட்டில் 58 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியை மேலும் பலப்படுத்தினர்.

மிகத் திறமையாகத் துடுப்பெடுத்தாடிய ஷுப்மான் கில் 55 பந்துகளில் 10 பவுண்டறிகள், 3 சிக்ஸ்களுடன் 90 ஓட்டங்களைப் பெற்று ஆட்டம் இழந்தார்.

அடுத்து களம் புகுந்த ராகுல் தெவாட்டியா ஓட்டம் பெறாமல் வந்த வழியே திரும்பிச் சென்றார்.

ஜொஸ் பட்லர் 23 பந்துகளில் 8 பவுண்டறிகள் உட்பட 41 ஓட்டங்களுடனும் ஷாருக் கான் 11 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காதிருந்தனர்.

199 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 20 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 159 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது.

கொல்கத்தாவின் துடுப்பாட்டம் சிறப்பாக அமையவில்லை.  

 ஆரம்பித்திலிருந்து   குஜராத் பந்துவீச்சாளர்களிடம் சவாலை எதிர்கொண்ட கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 13ஆவது ஓவரில் 4ஆவது விக்கெட்டை இழந்தபோது 91 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.

2104_ajinkiya_rahane.png

அணித் தலைவர் அஜின்கியா ரஹானே மாத்திரம் சற்று தாக்குப் பிடித்து 36 பந்துகளில் 50 ஓட்டங்களைப் பெற்று துடுப்பாட்டத்தில் பிரகாசித்தார்.

அண்ட்றே ரசல் 21 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார். அதன் பின்னர் மேலும் 2 விக்கெட்கள் அடுத்தடுத்து சரிந்தன.

இறுதியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 8 விக்கெட்களை இழந்து 159 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது.

மத்திய வரிசையில் இம்ப்பெக்ட் வீரர் அங்க்ரிஷ் ரகுவன்ஷி 27 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார்.

பந்துவீச்சில் ப்ராசித் கிரிஷ்ணா, ராஷித் கான் ஆகிய இருவரும் 25 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்கள் என்ற ஒரே பந்துவீச்சுப் பெறுதியைக் கொண்டிருந்தனர்.

ஆட்டநாயகன்: ஷுப்மான் கில்

https://www.virakesari.lk/article/212590

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கே.எல்.ராகுல் புதிய சாதனை: கடந்த சீசனில் தன்னை திட்டிய லக்னௌ உரிமையாளருக்கு களத்திலேயே பதிலடி

DC vs LSG, லோகேஷ் ராகுல்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,லக்னௌ உரிமையாளர் கோயங்காவுடன் டெல்லி அணி வீரர் லோகேஷ் ராகுல்

கட்டுரை தகவல்

  • எழுதியவர், க.போத்திராஜ்

  • பதவி, பிபிசி தமிழுக்காக

  • 3 மணி நேரங்களுக்கு முன்னர்

லக்னெளவில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 போட்டியின் 40-வது ஆட்டத்தில் லக்னெள சூப்பர் ஜெயின்ட்ஸ் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது டெல்லி கேபிடல்ஸ் அணி.

முதலில் பேட் செய்த லக்னெள அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 159 ரன்கள் சேர்த்தது. 160 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணி 11 பந்துகள் மீதமிருக்கையில் 2 விக்கெட் இழப்புக்கு 160 ரன்கள் சேர்த்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.

கடந்த சீசனில் மைதானத்திலேயே தன்னைத் திட்டிய லக்னௌ சூப்பர் ஜெயன்ட்ஸ் உரிமையாளர் கோயங்காவுக்கு தனது சிறப்பான ஆட்டத்தில் கே.எல்.ராகுல் களத்திலேயே பதிலடி கொடுத்தார். அத்துடன், கே.எல்.ராகுல் புதிய சாதனை ஒன்றையும் படைத்துள்ளார்.

சிறப்பான தொடக்கத்தை பயன்படுத்த தவறிய லக்னெள

லக்னெள அணிக்கு தொடக்க ஆட்டக்காரர்கள் மிட்ஷெல் மார்ஷ், மார்க்ரம் இருவரும் நல்ல தொடக்கத்தை அளித்தனர். இந்த சீசனில் 5வது முறையாக 50 ரன்களுக்கும் மேல்பார்ட்னர்ஷிப் அமைத்து நல்ல அடித்தளம் அமைத்தனர். 87 ரன்கள் சேர்த்த இந்த இணை 10-வது ஓவரில் தான் பிரிந்தது.

DC vs LSG, லோகேஷ் ராகுல்

பட மூலாதாரம்,GETTY IMAGES

அதிரடியாக ஆடிய மார்க்ரம் 33 பந்துகளில் அரைசதம் அடித்து 53 ரன்களில் சமீரா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். பவர்ப்ளேயில் இருந்து லக்னெளவுக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில் அக்ஸர் படேல் பந்துவீசினார், இதனால் பெரிய அளவுக்கு ஷாட்களை மார்க்ரம், மார்ஷால் ஆட முடியவில்லை. அருமையாகப் பந்துவீசிய அஸ்கர் படேல் 4 ஓவர்களில் 33 ரன்கள் கொடுத்து 10 ஓவர்களுக்குள் தனது ஸ்பெல்லை முடித்துவிட்டார்.

10 ஓவர்களுக்கு மேல் குல்தீப் யாதவ் 4 ஓவர்களை வீசி லக்னெள பேட்டர்களுக்கு நெருக்கடியளித்தார். இதனால் முதல் 10 ஓவர்களில் 87 ரன்கள் சேர்த்த லக்னெள அணி அடுத்த 10 ஓவர்களில் 72 ரன்கள் மட்டுமே சேர்க்க முடிந்தது, 5 விக்கெட்டுகளையும் இழந்தது.

கடந்த சில போட்டிகளில் சிறப்பாக ஆடிய நிகோலஸ் பூரன் 9 ரன்னில் ஸ்டார்க் பந்துவீச்சில் போல்டாகினார். டி20 போட்டிகளில் 7 இன்னிங்ஸ்களில் 5 முறையாக பூரனை ஸ்டார்க் ஆட்டமிழக்கச் செய்துள்ளார்.

ரிஷப் பந்த் களமிறங்க வேண்டிய இடத்துக்கு வந்த அப்துல் சமது 2 ரன்னில் முகேஷிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அதே ஓவரில் மார்ஷ் 45 ரன்கள் சேர்த்த நிலையில் முகேஷ் பந்துவீச்சில் 'க்ளீன் போல்டானார்.

DC vs LSG, லோகேஷ் ராகுல்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,மார்ஷ் 45 ரன்கள் சேர்த்த நிலையில் முகேஷ் பந்துவீச்சில் 'க்ளீன் போல்டானார்.

87 ரன்கள் வரை விக்கெட் இழப்பின்றி இருந்த லக்னெள அணி, அடுத்த 23 ரன்களுக்குள் 4 விக்கெட்டுகளை பறிகொடுத்தது.

டேவிட் மில்லர், ஆயுஷ் பதோனி இருவரும் ஓரளவுக்கு நிலைத்து ஸ்கோரை உயர்த்தினர். பதோனி 36 ரன்கள் சேர்த்த நிலையில் முகேஷ் ஓவரில் போல்டாகினார். கடைசி 2 பந்துகள் இருக்கும் போது களமிறங்கிய ரிஷப் பந்த் முகேஷ் பந்துவீச்சில் கிளீன் போல்டானார். அவர் ரன் ஏதும் எடுக்கவில்லை.

தொடக்க ஆட்டக்காரர்கள் அமைத்துக் கொடுத்த வலுவான அடித்தளத்தை பயன்படுத்த நடுவரிசை பேட்டர்கள் தவறவிட்டனர். வழக்கமாக 4வது இடத்தில் களமிறங்க வேண்டிய ரிஷப் பந்த் ஏன் கடைசி நேரத்தில் களமிறங்கினார் என்பதும் புரியவில்லை. முக்கியமான கட்டத்தில் பரிசோதனை முயற்சி செய்து லக்னெள அணி ஆபத்தில் சிக்கியது.

டெல்லி அணியில் முகேஷ் குமார் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார், ஸ்டார்க், சமீரா தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர். குல்தீப், அக்ஸர் படேல் இருவரும் விக்கெட்டுகளை வீழ்த்தாவிட்டாலும் லக்னெள ரன் ரேட்டை உயரவிடாமல் கட்டுப்படுத்தியதில் இருவருக்கும் முக்கியப் பங்கு உண்டு.

வேகப்பந்துவீச்சாளர்களும் லக்னெள பேட்டர்களை எளிதாக சிக்ஸர், பவுண்டரிகள் அடிக்கவிடவில்லை. லக்னெள பேட்டர்கள் நேற்று 4 சிக்ஸர்களும், 14 பவுண்டரிகள் மட்டுமே அடித்தனர்.

DC vs LSG, லோகேஷ் ராகுல்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,டெல்லி அணியில் முகேஷ் குமார் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்,

கே.எல்.ராகுலின் பதிலடியும் சாதனையும்

கடந்த சீசனில் லக்னெள அணியின் கேப்டனாக இருந்த கே.எல்.ராகுலை, அணியின் உரிமையாளர் கோயங்கா மைதானத்திலேயே கடுமையாகப் பேசினார். கே.எல்.ராகுலுக்கு அணியின் உரிமையாளரிடம் இருந்தே கடும் நெருக்கடி வந்தது. ஐபிஎல் ஏலத்தில் கே.எல்.ராகுலை கழற்றிவிட்ட லக்னெள ரூ.24 கோடி கொடுத்து ரிஷப் பந்தை வாங்கி கேப்டனாக்கியது. ஆனால், கே.எல்.ராகுலை டெல்லி கேபிடல்ஸ் வாங்கி சிறப்பாக பயன்படுத்தி வருகிறது.

இந்த ஐபிஎல் சீசனில் டெல்லி அணிக்கு சிறந்த நடுவரிசை, 3வது வீரராகவும் களமிறங்கி அருமையான ஃபினிஷிங் ரோலை கே.எல்.ராகுல் செய்து வருகிறார். இந்த சீசனில் 3வது அரைசதத்தையும் கே.எல்.ராகுல் நேற்று அடித்தார். கடந்த முறை லக்னெளவுக்கு எதிராக டெல்லி மோதிய போது தனக்கு குழந்தை பிறந்திருந்ததால் ராகுல் ஆட்டத்தில் பங்கேற்கவில்லை.

ஆனால், தன்னை ஏலத்தில் நிராகரித்த லக்னெளவை நேற்றைய ஆட்டத்தில் கே.எல்.ராகுல் தனது பேட்டிங்கால் பழிதீர்த்துவிட்டார். ஒன்டவுனில் களமிறங்கிய ராகுல் 40 பந்துகளில் அரைசதம் அடித்து 57 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் டெல்லி கேபிடல்ஸ் வெற்றிக்கு காரணமாக அமைந்தார்.

DC vs LSG, லோகேஷ் ராகுல்

பட மூலாதாரம்,GETTY IMAGES

அபிஷேக் போரெலுடன் சேர்ந்து 69 ரன்கள் பார்ட்னர்ஷிப், அக்ஸர் படேலுடன் சேர்ந்து 55 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த ராகுல் டெல்லி வெற்றிக்கு முக்கியக் காரணமாக அமைந்து லக்னெள உரிமையாளருக்கு பதிலடி கொடுத்தார்.

அதுமட்டுமல்லாமல் ஐபிஎல் போட்டிகளில் கே.எல்.ராகுல் நேற்று 130 இன்னிங்ஸ்களில் 5 ஆயிரம் ரன்களை எட்டினார். இதுவரை ஐபிஎல் போட்டிகளில் எந்த வீரரும் குறைந்த போட்டிகளில் இந்த அளவு ரன்களை எட்டியதில்லை. டேவிட் வார்னர் 135 போட்டிகளிலும் விராட் கோலி 165 போட்டிகளில் எட்டியதை ராகுல் விரைவாக எட்டி சாதனை படைத்தார்.

அது மட்டுமல்லாமல் இந்திய டி20 அணியில் தொடர்ந்து கே.எல்.ராகுல் புறக்கணிக்கப்பட்டு வரும் நிலையில் அவரின் அதிவிரைவு 5 ஆயிரம் ரன்கள் சாதனை நிச்சயம் தேர்வாளர்களுக்கு பெரிய கேள்வியாக இருக்கும்.

DC vs LSG, லோகேஷ் ராகுல்

பட மூலாதாரம்,GETTY IMAGES

ஆட்டம் முடிந்ததும் களத்திலிருந்து வெளியேறிய லோகேஷ் ராகுலை லக்னௌ அணி உரிமையாளர் கோயங்கா அங்கேயே சென்று பாராட்ட முயன்றார். கோயங்கா மற்றும் அவரது மகன் ஷஸ்வத்துக்கு அவசரஅவசரமாக கைகொடுத்த லோகேஷ் ராகுல், கோயங்கா பேசியதை காதில் வாங்காதது போல் அவசரஅவசரமாக அங்கிருந்து நகர்ந்துவிட்டார்.

லோகேஷ் ராகுலின் சிறப்பான ஆட்டத்தை பாராட்டியுள்ள இந்திய அணியின் முன்னாள் வீரர் ஹனுமான் விஹாரி, லக்னௌ உரிமையாளருடன் அவர் கைகுலுக்கியதை 'Cold Hand Shake' என்று குறிப்பிட்டுள்ளார். சமூக ஊடகங்களில் ரசிகர்கள் பலரும் லோகேஷ் ராகுல் கடந்த ஆண்டு லக்னௌ அணி கேப்டனாக இருந்த போது தோல்விக்காக அவரை கோயங்கா களத்திலேயே கடுமையாக திட்டியதையும், தற்போது அவரை பெரிதாக கண்டுகொள்ளாதது போல் ராகுல் சென்றதையும் ஒப்பிட்டு தங்களது கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர்.

தோல்விக்கு காரணமான ரிஷப் பந்த்

ரிஷப் பந்த்தின் தவறான கேப்டன்சி தான் லக்னெளவின் தோல்விக்கு மூலகாரணமானது. லக்னெள ஆடுகளம் பேட்டிங்கிற்கு சாதகமானது, முதலில் பேட் செய்யும் அணி குறைந்தபட்சம் 180 ரன்களுக்கு மேல் அடிக்கலாம் என்று கணிக்கப்பட்டது. ஆனால், லக்னெள அணி 159 ரன்களுக்குள் கட்டுப்படுத்தப்பட்டுவிட்டது.

இதற்கு முக்கியக் காரணம், தொடக்க வரிசை பேட்டர்கள் அமைத்துக் கொடுத்த வலுவான அடித்தளத்தை நடுவரிசை பேட்டர்கள் பயன்படுத்தாததும், நடுவரிசையை மாற்றி அப்துல் சமதை களமிறக்கி, கடைசி நேரத்தில் களமிறங்கிய ரிஷப் பந்தின் முடிவும் தான் காரணம். கடந்த 2016-ஆம் ஆண்டு ஐபிஎல் அறிமுகத்துக்குப்பின் ரிஷப் பந்த் 7வது வரிசையில் நேற்று தான் களமிறங்கியுள்ளார்.

சிஎஸ்கே அணியில் தோனியைப் போன்று கடைசி நேரத்தில் களமிறங்கி ஃபினிஷிங் டச் செய்ய நினைத்தாரா அல்லது, பரிசோதனை முயற்சியா எனத் தெரியவில்லை.

இதற்கான ரிஷப் பந்த் விளக்கமும் தெளிவாக இல்லை. அவர் கூறுகையில் " நாங்கள் ஸ்கோரை விரைவாக அதிகரிக்க நினைத்து, அப்துல் சமதை களமிறக்கினோம், விக்கெட் அப்படித்தான் இருந்தது. மில்லர் களமிறங்கிய பின் தேக்கமடைந்துவிட்டோம். எங்களின் சிறந்த பேட்டர்கள் வரிசையை விரைவில் கண்டறிவோம்" என்று விளக்கம் அளித்தார்.

DC vs LSG, லோகேஷ் ராகுல்

பட மூலாதாரம்,GETTY IMAGES

அப்துல் சமதைவிட, ரிஷப் பந்த் மோசமான பேட்டரா, ரிஷப் பந்த் இந்த விக்கெட்டை பயன்படுத்தி அதிரடியாக ஸ்கோர் செய்யமாட்டாரா என்ற கேள்விகளை வர்ணனையாளர்கள் எழுப்பினர். அப்துல் சமது ஆட்டமிழந்த பின்பு கூட ரிஷப் பந்த் களமிறங்கியிருக்கலாம் ஆனால் அப்போது கூட அவர் களமிறங்காமல் மில்லரை அனுப்பியது மிகப்பெரிய தவறாக இருந்தது.

தொடக்க வீரர்கள் நல்ல அடித்தளம் அமைத்துக் கொடுத்தவுடன் அதை சிறப்பாகப் பயன்படுத்திக்கொள்ள சரியான பேட்டர்களை களமிறக்க வேண்டும், பெரிய பார்ட்னர்ஷிப்களை உருவாக்கும் வீரர்களை அந்த நேரத்தில் பயன்படுத்த வேண்டும்.

ரிஷப் பந்த் நேற்றைய ஆட்டம் முழுவதும் கடும் குழப்பத்துடனே இருந்தார். கேட்சை நழுவிட்ட பிரின்ஸ் யாதவ், அப்துல் சமது இருவரையும் களத்திலேயே கடுமையாகத் திட்டினார். டிஆர்எஸ் ரிவியூ செய்வதிலும் பந்த் தாமதமாக செயல்பட்டார். கடந்த 7 இன்னிங்ஸ்களில் ரிஷப் பந்த் 108 பந்துகளில் 106 ரன்கள் சேர்த்து பேட்டிங்கிலும் பெரிதாக ஜொலிக்கவில்லை.

லக்னெள அணியின் பேட்டிங் வரிசையைக் குலைத்த டெல்லி அணியின் வேகப்பந்துவீச்சாளர் முகேஷ் குமார் 4 ஓவர்கள் வீசி 33 ரன்கள் கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆட்டநாயகன் விருது வென்றார்.

DC vs LSG, லோகேஷ் ராகுல்

பட மூலாதாரம்,GETTY IMAGES

தோல்விக்கு ரிஷப் பந்த் கூறிய காரணம்

லக்னெள அணியின் கேப்டன் ரிஷப் பந்த் பேசுகையில் "நாங்கள் 20 முதல் 30 ரன்கள் குறைவாக இந்த மைதானத்தில் சேர்த்துவிட்டோம். டாஸ் முக்கிய பங்கு வகித்தது. முதலில் பந்துவீசும் அணிக்கு இந்த மைதானம் நன்கு உதவும். லக்னெளவில் இதுபோன்று எப்போதும் நடக்கும், 2வது இன்னிங்ஸில் விக்கெட் பேட்டர்களுக்கு நன்கு ஒத்துழைக்கும். இந்த தவறுகளில் இருந்து பல விஷயங்களைக் கற்றுக்கொண்டோம்.

ஆயுஷ் பதோனியை இம்பாக்ட் ப்ளேயராக பயன்படுத்தி, மயங்க் யாதவை கொண்டுவரத் திட்டமிட்டோம். அவரின் உடல்நிலை தேறி இப்போதுதான் வந்துள்ளார். நான் 7-வது வீரராகக் களமிறங்கியதற்கு காரணம், விக்கெட்டை சிறப்பாக பயன்படுத்தவே. அப்துல் சமதை அனுப்பினோம். மில்லர் வந்தபின் விக்கெட்டில் சிக்கிவிட்டோம். எங்களின் சிறந்த பேட்டர்கள் கலவையை அடுத்துவரும் போட்டிகளில் உருவாக்குவோம்" எனத் தெரிவித்தார்.

DC vs LSG, லோகேஷ் ராகுல்

பட மூலாதாரம்,GETTY IMAGES

லக்னெளவை நெருங்கும் ஆபத்து

இந்த வெற்றி மூலம் டெல்லி கேபிடல்ஸ் அணி 12 புள்ளிகளுடன் குஜராத் டைட்டன்ஸ் அணியுடன் போட்டியிடுகிறது, நிகர ரன்ரேட்டில் குஜராத் அணியைவிட 0.600 புள்ளிகள் பின்னடைவுடன் 2வது இடத்தில் டெல்லி அணி இருக்கிறது.

அதேசமயம், லக்னெள அணி 9 போட்டிகளில் 5 வெற்றி 4 தோல்விகளுடன் 10 புள்ளிகளுடன் 5வது இடத்துக்கு சரிந்துள்ளது. 10 புள்ளிகளுடன் பஞ்சாப், ஆர்சிபி அணிகளுடன் லக்னெளவும் மல்லுக்கட்டுகிறது.

ஆர்சிபி, பஞ்சாப் நிகர ரன்ரேட் பிளஸில் இருக்கும்போது, லக்னெளவின் ரன்ரேட் 10 புள்ளிகள் பெற்றாலும் மைனசில் இருப்பது ஆபத்தாகும். லக்னெளவுக்கு குடைச்சல் கொடுக்கும் வகையில் முன்னேறி வரும் மும்பை அணி 8 புள்ளிகளுடன் நிகர ரன்ரேட்டில் வலுவாக இருக்கிறது.

இன்னும் ஒரு வெற்றியை மும்பை பெற்றால், 10 புள்ளிகளுடன் லக்னெளவை பின்னுக்குத் தள்ளி 4 அல்லது 3வது இடத்தை நோக்கி நகர்ந்துவிடும். ஆதலால், லக்னெள அணியின் நிலைமை அடுத்துவரும் போட்டிகளில் பெறும் வெற்றியைப் பொருத்து மாறும்.

ஐபிஎல் கூடுதல் விவரம்

இன்றைய ஆட்டம்

  • சன்ரைசர்ஸ் vs மும்பை இந்தியன்ஸ்

  • இடம்: ஹைதராபாத்

  • நேரம்: இரவு 7.30

சிஎஸ்கேவின் அடுத்த ஆட்டம்

  • சென்னை சூப்பர் கிங்ஸ் vs சன்ரைசர்ஸ் ஹைதர்பாத்

  • நாள் - ஏப்ரல் 25

  • இடம் – சென்னை

  • நேரம்- இரவு 7.30

மும்பையின் அடுத்த ஆட்டம்

  • மும்பை இந்தியன்ஸ் vs லக்னெள சூப்பர் ஜெயின்ட்ஸ்

  • நாள் - ஏப்ரல் 27

  • இடம் – மும்பை

  • நேரம்- இரவு 7.30 மணி

ஆர்சிபியின் அடுத்த ஆட்டம்

  • ஆர்சிபி vs ராஜஸ்தான் ராயல்ஸ்

  • நாள் - ஏப்ரல் 24

  • இடம் – பெங்களூரு

  • நேரம்- மாலை 3.30 மணி

ஆரஞ்சு தொப்பி யாருக்கு?

  • சாய் சுதர்ஸன் (குஜராத் டைட்டன்ஸ்)- 417 ரன்கள் (8 போட்டிகள்)

  • நிகோலஸ் பூரன் (லக்னெள)- 377 ரன்கள் (8 போட்டிகள்)

  • ஜோஸ் பட்லர் (குஜராத்)- 356 ரன்கள் (8 போட்டிகள்)

நீலத் தொப்பி யாருக்கு?

  • பிரசித் கிருஷ்ணா (குஜராத்)- 16 விக்கெட்டுகள் (7 போட்டிகள்)

  • குல்தீப் யாதவ் (டெல்லி)- 12 விக்கெட்டுகள் (6 போட்டிகள்)

  • நூர் அகமது(சிஎஸ்கே)- 12 விக்கெட்டுகள் (6 போட்டிகள்)

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.

https://www.bbc.com/tamil/articles/cn7x1gx7pnxo

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஃபார்முக்கு வந்த ரோஹித், உருக்குலைந்த சன்ரைசர்ஸ் - இஷான் கிஷன் அவுட் ஆகாமலே வெளியேறியது ஏன்?

ஐபிஎல்

பட மூலாதாரம்,GETTY IMAGES

கட்டுரை தகவல்

  • எழுதியவர், க.போத்திராஜ்

  • பதவி, பிபிசி தமிழுக்காக

  • 24 ஏப்ரல் 2025, 02:06 GMT

ஹைதராபாத்தில் நேற்று (ஏப்ரல் 23) நடந்த ஐபிஎல் டி20 போட்டியின் 41வது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி தோற்கடித்தது.

முதலில் பேட் செய்த சன்ரைசர்ஸ் அணி, 8 விக்கெட் இழப்புக்கு 143 ரன்கள் சேர்த்தது. 144 ரன்கள் சேர்த்தால் வெற்றி என்னும் இலக்குடன் களமிறங்கிய மும்பை அணி 15.4 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 146 ரன்கள் சேர்த்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.

இந்த ஆட்டம் ஒரு தரப்பாக அமைந்தது. வலுவான பேட்டிங் வரிசையை வைத்துள்ள மும்பை இந்தியன்ஸ் அணிக்கு இந்த ஸ்கோரை அடைவது மிகவும் எளிமையாக இருந்தது.

பந்துவீச்சில் நெருக்கடி கொடுத்து ஒரு கட்டத்தில் 5 விக்கெட் இழப்புக்கு 35 ரன்கள் என சன்ரைசர்ஸ் தடுமாறியபோதே வெற்றி மும்பை இந்தியன்ஸ் பக்கம் வந்துவிட்டது.

அதன் பிறகு கிளாசன், அபினவ் மனோகர் ஆட்டத்தால் கௌரமான ஸ்கோரை பெற்றாலும் அது ஹைதராபாத் ஆடுகளத்தில் சேஸிங் செய்யக் கடினமானதாக இருக்கவில்லை. இதனால் பெரிதாக எதிர்பார்க்கப்பட்ட ஆட்டம் ஒருதரப்பாக அமைந்தது.

சன்ரைசர்ஸ் அணி வெளியேறுகிறதா?

ஐபிஎல்

பட மூலாதாரம்,GETTY IMAGES

இந்த வெற்றியின் மூலம் மும்பை இந்தியன்ஸ் அணி 9 போட்டிகளில் 5 வெற்றிகள், 4 தோல்விகள் என 10 புள்ளிகளுடன் 3வது இடத்துக்கு முன்னேறியுள்ளது. நிகர ரன்ரேட்டை 0.673 என வலுவாக வைத்திருப்பதால், 3வது இடத்தில் இருந்த ஆர்சிபி, பஞ்சாப் கிங்ஸ் உள்ளிட்ட அணிகளை பின்னுக்குத் தள்ளி 3வது இடத்துக்கு நகர்ந்துள்ளது.

சன்ரைசர்ஸ் அணி 8 போட்டிகளில் 2 வெற்றி, 6 தோல்விகளுடன் 9வது இடத்தில் இருக்கிறது. சன்ரைசர்ஸ் அணி அடுத்து வரும் 6 போட்டிகளிலும் வென்றாலும் ப்ளே ஆஃப் செல்லுமா என்பது சந்தேகம்தான்.

கணித அடிப்படையில் வேண்டுமானால் ப்ளே ஆஃப் வாய்ப்பு இருக்கிறது என்று கூறலாம். ஆனால், நிதர்சனத்தில் சன்ரைசர்ஸ் அணிக்கான ப்ளே ஆஃப் வாய்ப்புக் கதவுகள் ஏறக்குறைய அடைக்கப்பட்டுவிட்டன.

மெதுவான ஆடுகளம் கொண்ட வான்ஹடேவில் கடந்த வாரம் நடந்த ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் அணியை 2 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை அணி வென்றது. இந்த முறை பேட்டிங்கிற்கு சொர்க்கபுரியான ஹைதராபாத் ஆடுகளத்தில் சன்ரைசர்ஸ் அணியை 143 ரன்களில் சுருட்டி, மும்பை அணி வென்றுள்ளது.

ரோஹித் சர்மா மிரட்டல் ஃபார்ம்

ஐபிஎல்

பட மூலாதாரம்,GETTY IMAGES

மும்பை அணியின் நம்பிக்கை நாயகனாகத் திகழும் ரோஹித் சர்மா ஃபார்முக்கு திரும்பி, தொடர்ந்து 2வது அரைசதம் அடித்திருப்பது மிகப்பெரிய பலம். தொடக்கத்தில் சில போட்டிகளில் ரோஹித் சர்மா சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தது கவலையை அளித்திருந்தாலும், கடந்த சில போட்டிகளாக ரோஹித் சர்மா ஆங்கர் ரோல் எடுத்து அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்வது அந்த அணிக்குப் புதிய உத்வேகத்தை அளித்துள்ளது.

ரெக்கில்டன் விக்கெட்டை விரைவாக இழந்தபோதிலும், வில் ஜேக்ஸுடன் இணைந்து ரோஹித் சர்மா பவர்ப்ளேவில் ஸ்கோரை 56 ரன்களுக்கு உயர்த்தினார். முதல் 7 போட்டிகளில் 0, 8, 13, 17, 18, 26, 76* ரன்கள் சேர்த்திருந்த ரோஹித் சர்மா கடந்த இரு போட்டிகளிலும் சிறப்பாக ஆடி வருகிறார். ஒவ்வொரு போட்டியிலும் அவரது ரன்கள் படிப்படியாக அதிகரித்து வருவது மும்பை அணிக்குப் பெரிய பலம்.

இந்த ஆட்டத்திலும் உனத்கட், ஈஷன் மலிங்கா ஓவரில் 3 பெரிய சிக்ஸர்களை விளாசி, 35 பந்துகளில் அரைசதத்தை ரோஹித் சர்மா நிறைவு செய்தார். 2வது விக்கெட்டுக்கு வில் ஜேக்ஸுடன் சேர்ந்து 64 ரன்களும், ஹர்திக் பாண்டியவுடன் சேர்ந்து 53 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும் சேர்த்து ரோஹித் சர்மா ஆட்டமிழந்தார். கடந்த போட்டியில் 76 ரன்கள் சேர்த்த ரோஹித் சர்மா, இந்த ஆட்டத்தில் 46 பந்துகளில் 70 ரன்கள் சேர்த்து மலிங்கா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

அதன்பின் சூர்யகுமார், திலக் வர்மா ஜோடி சேர்ந்து அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர். சூர்யகுமார் 19 பந்துகளில் 2 சிக்ஸர்கள், 5 பவுண்டரிகள் என 40 ரன்களிலும், திலக் 2 ரன்களிலும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

சன்ரைசர்ஸை திணறடித்த போல்ட், சஹர்

ஐபிஎல்

பட மூலாதாரம்,GETTY IMAGES

சன்ரைசர்ஸ் அணியின் பேட்டிங் வரிசையை மும்பையின் டிரென்ட் போல்ட், தீபக் சஹர் இருவரும் சேர்ந்து உருக்குலைத்தனர். புதிய பந்தில் இருவரின் ஸ்விங் பந்துவீச்சையும் சமாளிக்க முடியாமல் சன்ரைசர்ஸின் பேட்டர்கள் மளமளவென விக்கெட்டுகளை இழந்தனர்.

போல்ட் 4 ஓவர்கள் வீசி 26 ரன்கள் கொடுத்து 4 விக்கெட்டுகளையும், தீபக் சஹர் 4 ஓவர்கள் வீசி 12 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தி பவர்ப்ளே ஓவருக்குள் ஆட்டத்தைக் கைப்பற்றினர். 4 விக்கெட்டுகளை வீழ்த்திய டிரென்ட் போல்ட் ஆட்டநாயகன் விருது வென்றார்.

பும்ரா 4 ஓவர்களில் 39 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டையும், சான்ட்னர் 4 ஓவர்கள் வீசி 19 ரன்களும் கொடுத்து சிக்கனமாகப் பந்துவீசினர்.

பவர்ப்ளே ஓவரில் 5 ஓவரில் 13 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளையும், 35 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளையும் இழந்து சன்ரைசர்ஸ் அணி தடுமாறியது. பவர்ப்ளேவில் சன்ரைசர்ஸ் அணி 4 விக்கெட் இழப்புக்கு 24 ரன்கள் மட்டுமே சேர்த்தது.

சன்ரைசர்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர் டிராவிஸ் ஹெட், அபிஷேக் சர்மா இருவருமே பெரிய ஷாட்களுக்குத்தான் முக்கியத்துவம் அளித்தார்களே தவிர பந்து ஸ்விங் ஆகி வருகிறதா, நிதானமாக பேட் செய்யலாமா என்று சிந்தித்ததாகத் தெரியவில்லை. ஆடுகளத்தில் இருந்த லேசான ஈரப்பதத்தால் பந்து சற்று நின்று, நன்றாக ஸ்விங் ஆனது. இதைக் கவனிக்காமல் பெரிய ஷாட்களுக்கு முயன்று டிராவிஸ் ஹெட்(0), அபிஷேக்(8) மிகச் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.

தீபக் சஹர் புதிய பந்தில் நன்றாக ஸ்விங் செய்து, இஷான் கிஷன்(1), நிதிஷ் ரெட்டி(2) இருவர் விக்கெட்டையும் வீழ்த்தினார். இதில் இஷான் கிஷன் ஆட்டமிழந்ததுதான் வேடிக்கையாக இருந்தது. தீபக் சஹர் வீசிய பந்து லேசாக ஸ்விங் ஆகி இஷன் கிஷனுக்கு லெக் சைடில் சென்றது. அந்தப் பந்தை விக்கெட் கீப்பர் ரெக்கில்டன் கேட்ச் பிடித்தார்.

ஆனால், ஆட்டமிழந்து விட்டதாக நினைத்து இஷான் கிஷன் பெவிலியனுக்கு செல்லத் தொடங்கினார், மும்பை அணியில் எந்த பேட்டரும் நடுவரிடம் அவுட் கேட்கவில்லை. பந்துவீச்சாளர் தீபக் சஹர்கூட நடுவரிடம் அவுட் கேட்கவில்லை, நடுவரும் முதலில் வைட் பந்துக்காக கையைத் தூக்கி, இஷான் கிஷன் சென்றதைப் பார்த்து அவுட் வழங்க கையை மேலே தூக்கினார்.

ஆனால், அதன்பின் டிவி ரீப்ளேவில் பார்த்தபோது, அல்ட்ரா எட்ஜில் இஷான் கிஷன் பேட்டில் பந்துபடாமல் விக்கெட் கீப்பரிடம் சென்றது தெரிய வந்தது.

ஹர்திக் பாண்டியா பந்துவீச்சில் அனிகேத் வர்மா 12 ரன்களில் விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுக்கவே, 5 விக்கெட் இழப்புக்கு 35 ரன்களுடன் சன்ரைசர்ஸ் அணி திணறியது.

காப்பாற்றிய கிளாசன்

ஐபிஎல்

பட மூலாதாரம்,GETTY IMAGES

சன்ரைசர்ஸ் அணி 35 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து மோசமான நிலையில் இருந்ததால் விரைவாகவே இம்பாக்ட் ப்ளேயராக அபினவ் மனோகர் களமிறங்கினார். கிளாசனுக்கு நன்கு ஒத்துழைப்பு கொடுத்து ஆடிய மனோகர், மெதுவாக ரன்களை சேர்த்தார்.

கிளாசன் அவ்வப்போது கிடைக்கின்ற வாய்ப்பில் பவுண்டரி. சிக்ஸர்களை விளாசினார். விக்னேஷ் புத்தூர் ஓவரில் சிக்ஸர், 2 பவுண்டரி என கிளாசன் அடித்தார். பொறுமையாகவும், பொறுப்பாகவும் ஆடிய கிளாசன் 34 பந்துகளில் அரைசதம் அடித்தார். இது இந்த சீசனில் கிளாசன் அடிக்கும் முதல் அரைசதம். 17 முதல் 19வது ஓவர் வரை கிளாசன், மனோகர் வேகமாக விளாசி 35 ரன்களை சேர்த்தார்.

ஆனால், 19வது மற்றும் 20வது ஓவர்களில் சன்ரைசர்ஸ் ஆட்டம் அடங்கியது. பும்ரா வீசிய 19வது ஓவரில் ரிவர்ஸ் ஸ்கூப்பில் சிக்ஸர் அடித்த கிளாசன், அதே ஓவரில் திலக் வர்மாவிடம் கேட்ச் கொடுத்து 71 ரன்னில் ஆட்டமிழந்தார்.

அரிதான ஹிட்விக்கெட்

போல்ட் வீசிய கடைசி ஓவரில் 43 ரன்கள் சேர்த்திருந்த அபினவ் மனோகர் ஹிட் விக்கெட்டில் வெளியேறினார். கம்மின்ஸ் ஒரு ரன்னில் போல்டானார். போல்ட் வீசிய யார்க்கரை தட்டிவிட ஸ்டெம்புக்கு அருகே மனோகர் சென்றபோது பேட் ஸ்டெம்பில் பட்டதால் ஹிட்விக்கெட்டில் ஆட்டமிழந்தார். இது ஐபிஎல் டி20 போட்டியில் மிகவும் அரிதான ஹிட் விக்கெட்டாகும்.

சன்ரைசர்ஸ் அணியில் கிளாசன்(71), மனோகர்(43) இருவரின் ரன்களை தவிர்த்துப் பார்த்தால் மற்ற பேட்டர்கள் யாரும் 10 ரன்கள்கூட எடுக்கவில்லை என்பதுதான் நிதர்சனம். கிளாசன் மட்டும் அணியின் சூழலை உணர்ந்து ஆடவில்லை என்றால், சன்ரைசர்ஸ் அணி 100 ரன்களில் சுருண்டிருக்கும்.

ஆட்டமிழக்காமல் வெளியேறிய இஷான் கிஷன்

ஐபிஎல்

பட மூலாதாரம்,GETTY IMAGES

இந்த ஆட்டத்தில் தீபக் சஹர் பந்துவீச்சில் இஷான் கிஷன் ஆட்டமிழந்துதான் வேடிக்கையாகவும், வியப்பாகவும் இருந்தது. தீபக் சஹர் வீசிய 3வது ஓவரில் முதல் பந்தை இஷான் கிஷன் எதிர்கொண்டார். பந்து லேசாக ஸ்விங் ஆகி இஷான் கிஷனின் இடதுபுறமாகச் சென்றது.

இஷான் கிஷனும் லெக்சைடில் சென்ற பந்தை அடிக்க முயன்றார், ஆனால் முடியவில்லை. பந்து விக்கெட் கீப்பர் ரெக்கில்டனிடம் சென்றது. மும்பை அணியில் எந்த வீரரும் நடுவரிடம் இஷான் கிஷன் அவுட் செய்யப்பட்டதாக முறையிடவில்லை. இஷான் கிஷனின் இடதுபுறம் சென்ற பந்து பேட்டில் படாமல் சென்றதால் நடுவரும் வைடு வழங்குவதற்காக கைகை அகலமாக விரித்தார்.

ஆனால், திடீரென இஷான் கிஷன் அவுட் ஆகிவிட்டதாக நினைத்து பெவிலியன் செல்லத் தொடங்கினார். மும்பை கேப்டன் ஹர்திக் பாண்டியா, வேகமாக ஓடி வந்து இஷன் கிஷானின் ஹெல்மெட்டை பிடித்து, "நடுவரின் முடிவைப் பார்த்துவிட்டு பெவிலியன் செல்லுங்கள்" என்றார். ஆனால், இஷான் கிஷன் அதைக் கேட்காமல் சிரித்துக் கொண்டே பெவிலியன் நோக்கி நடந்தார்.

இதைக் கவனித்த நடுவர் வைடுக்காக கையை விரித்திருந்தவர், திடீரென அவுட் வழங்க கையை உயர்த்தினார். தீபக் சஹரும் நடுவரைப் பார்த்து அவுட் கேட்கலாமா, வேண்டாமா என்ற சந்தேகத்தில் அவுட் கேட்கவே நடுவரும் அவுட் வழங்கினார். நடுவரே அவுட் வழங்காமல் இருந்த நிலையில், மும்பை வீரர்கள் யாரும் நடுவரிடம் அவுட் கேட்காத நிலையில், விக்கெட் கீப்பர் ரெக்கில்டன் நடுவரிடம் முறையிடாத நிலையில் இஷான் கிஷன் ஏன் வெளியேறினார் என்பது குழப்பமாக இருந்தது.

அதன் பிறகு இஷன் கிஷன் ஆக்ஸன் குறித்து ரீப்ளே செய்து பார்த்தபோது, இஷான் பேட்டில் பந்து படவில்லை என்பது அல்ட்ரா எட்ஜில் தெரிந்தது.

முன்கூட்டியே திட்டமிடல் அல்ல

ஐபிஎல்

பட மூலாதாரம்,GETTY IMAGES

வெற்றிக்குப் பிறகு மும்பை அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா பேசுகையில், "வெற்றி பெற்றது மகிழ்ச்சியாக இருக்கிறது. கிடைக்கின்ற தருணத்தைச் சரியான வழியில் வீரர்கள் கொண்டு சென்றனர். எங்கள் அணியில் ஒவ்வொரு வீரருக்கும் சரியான ஆட்டம் அமைந்துவிட்டால், நாம்தான் அனைத்து அணிகளையும் ஆதிக்கம் செய்வோம் என நினைத்தேன்" என்று தெரிவித்தார்.

மேலும், "தீபக் சஹர், போல்ட் இருவரும் வெற்றிக்கான அடித்தளத்தை அமைத்தனர். ரோஹித், ஸ்கை இருவரும் ஃபினிஷிங் செய்தனர். அற்புதமான வெற்றி. கேப்டன்சியை பொருத்தவரை சூழலுக்கு ஏற்ப நான் பதில் அளிக்க வேண்டும், செயல்பட வேண்டும். முன்கூட்டியே திட்டமிட்டுவருவது சரியல்ல.

இதுபோன்ற சூழலில் பவர்ப்ளேவில் சிறப்பாகப் பந்துவீசிய தீபக் சஹருக்கு தொடர்ந்து ஓவர்கள் ஏன் வழங்கக்கூடாது என்பது அந்த நேரத்தில் உதிக்கும் சிந்தனை. அனைத்துப் பிரிவுகளிலும் சிறப்பாகச் செயல்பட்டுள்ளோம், மன நிறைவாக இருக்கிறது" எனவும் தெரிவித்தார் ஹர்திக் பாண்டியா.

அடுத்து வரவுள்ள முக்கிய ஆட்டங்கள்

இன்றைய ஆட்டம்

  • ஆர்சிபி vs ராஜஸ்தான் ராயல்ஸ்

  • இடம்: பெங்களூரு

  • நேரம்: இரவு 7.30

சிஎஸ்கேவின் அடுத்த ஆட்டம்

  • சென்னை சூப்பர் கிங்ஸ் vs சன்ரைசர்ஸ் ஹைதர்பாத்

  • நாள் - ஏப்ரல் 25

  • இடம் – சென்னை

  • நேரம்- இரவு 7.30

மும்பையின் அடுத்த ஆட்டம்

  • மும்பை இந்தியன்ஸ் vs லக்னெள சூப்பர் ஜெயின்ட்ஸ்

  • நாள் - ஏப்ரல் 27

  • இடம் – மும்பை

  • நேரம்- மாலை 3.30 மணி

ஆர்சிபியின் அடுத்த ஆட்டம்

  • ஆர்சிபி vs டெல்லி கேபிடல்ஸ்

  • நாள் - ஏப்ரல் 27

  • இடம் – டெல்லி

  • நேரம்- இரவு 7.30 மணி

ஆரஞ்சு தொப்பி யாருக்கு?

  • சாய் சுதர்ஸன்(குஜராத் டைட்டன்ஸ்)-417 ரன்கள் (8 போட்டிகள்)

  • நிகோலஸ் பூரன்(லக்னெள)-377 ரன்கள் (9 போட்டிகள்)

  • சூர்யகுமார் யாதவ்(மும்பை) 373 ரன்கள் (9 போட்டிகள்)

பர்பிள் தொப்பி யாருக்கு?

  • பிரசித் கிருஷ்ணா (குஜராத்) 16 விக்கெட்டுகள் (7 போட்டிகள்)

  • குல்தீப் யாதவ்(டெல்லி) 12 விக்கெட்டுகள் (6 போட்டிகள்)

  • நூர் அகமது(சிஎஸ்கே)12 விக்கெட்டுகள் (6 போட்டிகள்)

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.

https://www.bbc.com/tamil/articles/c62zd10vyv2o

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சொந்த மண்ணில் ஆர்சிபிக்கு முதல் வெற்றி - ராஜஸ்தானின் வெற்றியை ஒரே ஓவரில் பறித்த ஹேசல்வுட்

சொந்த மண்ணில் ஆர்சிபிக்கு முதல் வெற்றி - ராஜஸ்தானின் வெற்றியை ஒரே ஓவரில் பறித்த ஹேசல்வுட்

பட மூலாதாரம்,GETTY IMAGES

கட்டுரை தகவல்

  • எழுதியவர், க.போத்திராஜ்

  • பதவி, பிபிசி தமிழுக்காக

  • 3 மணி நேரங்களுக்கு முன்னர்

பெங்களூருவில் நேற்று (ஏப்ரல் 24) நடந்த ஐபிஎல் டி20 போட்டியின் 42வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை 11 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி.

முதலில் பேட் செய்த ஆர்சிபி அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 205 ரன்கள் சேர்த்தது. 206 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் அணி 9 விக்கெட் இழப்புக்கு 194 ரன்கள் சேர்த்து 11 ரன்களில் தோல்வி அடைந்தது.

இந்த வெற்றியின் மூலம் ஆர்சிபி அணி 9 போட்டிகளில் 6 வெற்றிகளுடன் 12 புள்ளிகள் பெற்று 3வது இடத்துக்கு நகர்ந்துள்ளது. ஆனாலும், ஆர்சிபியின் நிகர ரன்ரேட் 0.482 என மும்பையைவிட குறைவாகவே இருக்கிறது.

மும்பை அணி அடுத்து ஓர் ஆட்டத்தில் வென்றால் 2வது இடத்திற்கே நகர்ந்துவிடும் அளவுக்கு நிகர ரன்ரேட்டை வலுவாக வைத்துள்ளது. ராஜஸ்தான் அணி விளையாடிய 9 போட்டிகளில் தொடர்ந்து சந்திக்கும் 5வது தோல்வி இது. 2 வெற்றிகளுடன் 4 புள்ளிகள் பெற்று 8வது இடத்தில் நீடிக்கிறது.

ஆர்சிபி அணி இந்த சீசனில் இதுவரை சொந்த மைதானத்தில் விளையாடிய 3 போட்டிகளிலும் தோல்வியடைந்திருந்த நிலையில் பெங்களூருவில் முதல் வெற்றியைப் பதிவு செய்துள்ளது.

ஆட்டத்தை மாற்றிய ஒரே ஓவர்

இந்த ஆட்டத்தில் சேஸிங்கின் தொடக்கத்தில் இருந்து ஆட்டம் ராஜஸ்தான் பக்கம்தான் இருந்தது. அந்த அணிதான் வெல்லும் என்று ஆட்டத்தைப் பார்த்த ரசிகர்கள் நினைத்திருப்பார்கள். ஆனால், அனைத்தும் புவனேஷ்வர்குமார் வீசிய 18வது ஓவர் வரைதான். ஹேசல்வுட் வீசிய 19வது ஓவர்தான் ஆட்டத்தைத் தலைகீழாகத் திருப்பிப் போட்டது.

கடைசி இரண்டு ஓவர்களில் ராஜஸ்தான் வெற்றிக்கு 18 ரன்கள் தேவைப்பட்டது. ஹேசல்வுட் வீசிய 19வது ஓவரில் அணியை வெற்றியை நோக்கி நகர்த்தி ஆடி வந்த துருவ் ஜூரெல்(47) ஆட்டமிழந்தார். அடுத்த பந்தில் ஜோப்ரா ஆர்ச்சரும் ஆட்டமிழக்கவே, ஹேசல்வுட் ஒரு ரன் மட்டுமே விட்டுக் கொடுத்தார். இந்த ஓவர்தான் வெற்றியை ராஜஸ்தான் கரங்களில் இருந்து ஆர்சிபி பறித்தது.

கடைசி ஓவரில் ராஜஸ்தான் வெற்றிக்கு 17 ரன்கள் தேவைப்பட்டது. யஷ் தயால் வீசிய ஓவரில் ஷுபம் துபே, ஹசரங்கா ஆட்டமிழந்து, 5 ரன்கள் மட்டுமே சேர்த்ததால் அந்த அணி தோல்வி அடைந்தது.

தொடர்ந்து 3வது முறை

ஐ.பி.எல். போட்டிகள் 2025, ஆர்.சி.பி., விராட் கோலி, விளையாட்டு செய்திகள், ராஜஸ்தான் ராயல்ஸ்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,கடைசி 2 ஓவர்களில் ராஜஸ்தான் வெற்றிக்கு 18 ரன்கள் தேவைப்பட்டது

இந்த சீசனில் தொடர்ந்து 3வது முறையாக சேஸிங்ஸில் வெற்றிக்கு அருகே வந்து தோல்வியைச் சந்தித்துள்ளது ராஜஸ்தான் அணி. இதற்கு முன் லக்னெள அணிக்கு எதிராகவும், டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிராகவும் கடைசி ஓவரில் 9 ரன்களை எடுக்க முடியாமல் ராஜஸ்தான் அணி தோற்றது. இந்தப் போட்டியில் வெற்றிக்கு அருகே வந்து கடைசி ஓவரில் 17 ரன்களை எடுக்க முடியாமல் ராஜஸ்தான் தோற்றது.

ஆர்சிபி வேகப்பந்துவீச்சாளர்கள் அனைவரின் பந்துவீச்சையும் ராஜஸ்தான் பேட்டர்கள் வெளுத்துவிட்டனர். ஓவருக்கு 11 ரன்களுக்கு மேல் வாரி வழங்கினர். ஆனால் நடுப்பகுதியில் குர்னல் பாண்டியா, சூயஸ் ஷர்மா இருவரும் ராஜஸ்தான் ரன்ரேட்டுக்கு பிரேக் போட்டனர்.

இருவரும் சேர்ந்து 8 ஓவர்கள் வீசி 62 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தி ராஜஸ்தானுக்கு நெருக்கடியை அதிகப்படுத்தினர். குறிப்பாக கேப்டன் ரியான் பராக், நிதிஷ் ராணா ஆகிய பெரிய விக்கெட்டுகளை குர்னல் பாண்டியா வீழ்த்தி திருப்புமுனையை ஏற்படுத்தினார்.

ராஜஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஜெய்ஸ்வால், வைபவ் சூர்யவன்ஷி வலுவான தொடக்கத்தை ஏற்படுத்தி பவர்ப்ளேவில் 2 விக்கெட் இழப்புக்கு 72 ரன்கள் சேர்க்க உதவினர். அடுத்த 14 ஓவர்களில் ராஜஸ்தான் அணியின் வெற்றிக்கு 134 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது. 8.1 ஓவர்களில் ராஜஸ்தான் அணி 100 ரன்களை எட்டியது. 15வது ஓவரில் 150 ரன்களை எட்டிய நிலையில் அதன் பிறகு ஆட்டத்தில் மந்தநிலை ஏற்பட்டது.

இருப்பினும் புவனேஷ்வர்குமார் வீசிய 18வது ஓவரில் துருவ் ஜூரெல் 22 ரன்களை விளாச, ஆட்டம் ராஜஸ்தான் பக்கம் திரும்பியது. கடைசி 2 ஓவர்களில் 18 ரன்கள் மட்டுமே வெற்றிக்குத் தேவைப்பட்டது. ஹேசல்வுட் வீசிய 19வது ஓவரில் செட்டில் பேட்டர் துருவ் ஜூரெல், ஆர்ச்சர் அடுத்தடுத்து ஆட்டமிழந்து ஒரு ரன் சேர்த்தனர். கடைசி ஓவரில் 2 விக்கெட்டுகளை இழந்து 5 ரன்கள் மட்டுமே சேர்த்து ராஜஸ்தான் அணி தோல்வி அடைந்தது.

திருப்புமுனையான ஹேசல்வுட்டின் 2 ஓவர்கள்

ஐ.பி.எல். போட்டிகள் 2025, ஆர்.சி.பி., விராட் கோலி, விளையாட்டு செய்திகள், ராஜஸ்தான் ராயல்ஸ்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,ஹேசல்வுட் வீசிய 19வது ஓவரில் செட்டில் பேட்டர் துருவ் ஜூரெல், ஆர்ச்சர் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்

ஹேசல்வுட் வீசிய 17வது மற்றும் 19வது ஓவர்தான் ஆட்டத்தை ஆர்சிபி பக்கம் கொண்டு வந்தது. செட்டில் பேட்டர் ஷிம்ரன் ஹெட்மயரை(11) தனது 17வது ஓவரில் ஹேசல்வுட் ஆட்டமிழக்கச் செய்தார். ராஜஸ்தான் அணிக்கு எந்த நேரத்திலும் பெரிய ஷாட்களை ஆடக்கூடிய ஹெட்மயரை வீழ்த்தி ஹேசல்வுட் திருப்புமுனையை ஏற்படுத்தினார்.

அடுத்ததாகத் தனது 19வது ஓவரில் மற்றொரு செட்டில் பேட்டர் துருவ் ஜூரெல் விக்கெட்டுக்கு ஹேசல்வுட் குறிவைத்தார். ஏனென்றால் புவனேஷ்வர் வீசிய 18வது ஓவரில் ஜூரெல் 22 ரன்கள் சேர்த்ததால், ஹேசல்வுட் ஓவரை அடித்து துவம்சம் செய்யப் போகிறார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், துருவ் ஜூரெலுக்கு துல்லியமான யார்க்கரை ஹேசல்வுட் வீசினார். யார்க்கரில் இருந்து தப்பிக்க ஜூரேல் பேட்டால் தடுக்கவே பந்து பேட்டில் பட்டு விக்கெட் கீப்பரிடம் சென்றது. 3வது நடுவரிடம் அப்பீல் செய்யவே, பந்து துருவ் ஜூரெல் பேட்டில் பட்டுச் சென்றது தெரிய வந்தது. விக்கெட் உறுதியானதால் பெரிய விக்கெட்டை வீழ்த்திய நிம்மதி ஆர்சிபிக்கு கிடைத்தது. அடுத்து களமிறங்கிய ஆர்ச்சருக்கு டெஸ்ட் லென்த் பந்தை வீசிவே வேறுவழியின்றி கேட்ச் கொடுத்து ஆர்ச்சர் ஆட்டமிழந்தார். இந்த ஒரு ஓவரில் 2 விக்கெட்டுகளை ஹேசல்வுட் வீழ்த்தினார்.

ஹேசல்வுட் 4 ஓவர்களை வீசி 33 ரன்கள் கொடுத்து 4 விக்கெட்டுகளை கைப்பற்றி ஆட்டநாயகன் விருதை வென்றார். ஜெய்ஸ்வால் இருக்கும் வரை ஹேசல்வுட் ஓவரை குறிவைத்து ஹாட்ரிக் பவுண்டரி, சிக்ஸர் என விளாசித் தள்ளினார். ஆனால் ஜெய்ஸ்வால் விக்கெட்டை ஹேசல்வுட் வீழ்த்திய பிறகு மற்ற பேட்டர்களுக்கு ஹேசல்வுட் சிம்ம சொப்பனமாக மாறினார்.

ராஜஸ்தானுக்கு நெருக்கடியளித்த குர்னல்

ஐ.பி.எல். போட்டிகள் 2025, ஆர்.சி.பி., விராட் கோலி, விளையாட்டு செய்திகள், ராஜஸ்தான் ராயல்ஸ்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,துருவ் ஜூரெல் 18வது ஓவரில் ஜூரெல் 22 ரன்கள் சேர்த்தால், ஹேசல்வுட் ஓவரை அடித்து துவம்சம் செய்யப் போகிறார் என்று எதிர்பார்க்கப்பட்டது

ராஜஸ்தான் சேஸிங்கை தொடங்கியதில் இருந்து ராக்கெட் வேகத்தில் ரன்ரேட்டை கொண்டு சென்றது. ஜெய்ஸ்வால், 14 வயது வைபவ் சூர்யவன்ஷி(16ரன்கள்) இருவரும் சிக்ஸர், பவுண்டரி என ஆர்சிபி பந்துவீச்சை விளாசித் தள்ளினர்.

ராஜஸ்தான், 4.4 ஓவர்களில் 50 ரன்களை எட்டியது. ஜெய்ஸ்வால் 19 பந்துகளில் 49 ரன்கள் சேர்த்து தனது கடமையைச் செய்துவிட்டுச் சென்றார். 8 ஓவர்களில் 100 ரன்களை எட்டி ராஜஸ்தான் வலுவாக இருந்தது. ஆனால், குர்னல் பாண்டியா, சூயஸ் ஷர்மா இருவரும் வீசிய 8 ஓவர்களுக்கு ராஜஸ்தான் ரன்ரேட்டை இழுத்துப் பிடித்தனர்.

குறிப்பாக கேப்டன் ரியான் பராக்(22) விக்கெட்டை 10வது ஓவரில் குர்னல் பாண்டியா வீழ்த்தி ராஜஸ்தானை லேசாக தடுமாறச் செய்தார். ஆனால் நிதிஷ் ராணா களத்தில் இருக்கிறாரே என்ற துணிச்சல் இருந்தது.

ஆனால், நிதிஷ் ராணா(28) விக்கெட்டையும் 14வது ஓவரில் குர்னல் பாண்டியா எடுக்கவே ராஜஸ்தானுக்கு முதல் சறுக்கல் ஏற்பட்டது. அதன் பிறகு, சூயஸ் ஷர்மா, குர்னல் இருவரும் ராஜஸ்தான் பேட்டர்களை ரன் சேர்க்கவிடாமல் நெருக்கடி கொடுத்துப் பந்துவீசினர்.

கோலி, படிக்கல் அரைசதம்

ஐ.பி.எல். போட்டிகள் 2025, ஆர்.சி.பி., விராட் கோலி, விளையாட்டு செய்திகள், ராஜஸ்தான் ராயல்ஸ்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,கேப்டன் ரியான் பராக்(22) விக்கெட்டை 10வது ஓவரில் குர்னல் பாண்டியா வீழ்த்தி ராஜஸ்தானை லேசாக தடுமாறச் செய்தார்

ஆர்சிபி அணியின் தொடக்க ஆட்டக்காரர் பில் சால்ட்(26) பவர்ப்ளே முடிந்ததும் ஆட்டமிழந்தார். பவர் ப்ளேவில் கோலி, சால்ட் இருவரும் விக்கெட் இழப்பின்றி 61 ரன்கள் சேர்த்து நல்ல அடித்தளம் அமைத்தனர்.

இரண்டாவது விக்கெட்டுக்கு கூட்டணி சேர்ந்த படிக்கல், கோலி ஜோடி ஸ்கோரை அடுத்த கட்டத்துக்கு நகர்த்தியது. 2வது விக்கெட்டுக்கு 95 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்துப் பிரிந்தனர்.

விராட் கோலி 32 பந்துகளில் அரைசதம் அடித்து அடுத்த 10 பந்துகளில் 20 ரன்கள் சேர்த்து 70 ரன்களில் ஆர்ச்சர் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். கோலியின் கணக்கில் 8 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் அடங்கும்.

படிக்கல் தனக்கு இருமுறை கேட்ச் நழுவவிட்ட வாய்ப்பைப் பயன்படுத்தி 26 பந்துகளில் அரைசதம் அடித்து 50 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த கேப்டன் பட்டிதாரும் ஒரு ரன்னில் ஆட்டமிழந்தார். டிம் டேவிட், ஜிதேஷ் சர்மா கூட்டணி 19 பந்துகளில் 42 ரன்கள் சேர்த்து ஸ்கோரை 200 ரன்கள் கடக்க உதவினர்.

முதல் 10 ஓவர் வரை நம்பிக்கையில்லை

ஐ.பி.எல். போட்டிகள் 2025, ஆர்.சி.பி., விராட் கோலி, விளையாட்டு செய்திகள், ராஜஸ்தான் ராயல்ஸ்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,விராட் கோலி 32 பந்துகளில் அரைசதம் அடித்து அடுத்த 10 பந்துகளில் 20 ரன்கள் சேர்த்து 70 ரன்களில் ஆர்ச்சர் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்

வெற்றிக்குப் பிறகு ஆர்சிபி கேப்டன் ரஜத் பட்டிதார் கூறுகையில் "எங்களுக்கு மிகவும் தேவைப்பட்ட வெற்றியாகப் பார்க்கிறோம். இன்றைய ஆட்டத்தில் ஆடுகளம் முற்றிலும் வித்தியாசமாக, எதிர்பார்த்தது போல் இருந்தது.

பத்தாவது ஓவருக்கு பிறகுதான் ஆட்டம் எங்கள் பக்கம் திரும்பியது. இதற்கு பந்துவீச்சாளர்கள்தான் காரணம். ஆட்டத்தை திருப்பி வெற்றிக்கு இழுத்து வந்த பந்துவீச்சாளர்களின் துணிச்சல் அபாரமானது. ராஜஸ்தான் அணியின் பேட்டிங்கை தொடக்கத்தில் பார்த்து நம்பிக்கையிழந்தேன்," என்று கூறினார்.

மேலும், "ஆட்டம் நெருக்கடியாகச் செல்லும் என்று முதலில் கணித்தேன். ஆனால், 10வது ஓவருக்கு பின் விக்கெட்டுகளை எடுத்த பிறகு, என் கணிப்பு மாறியது. விக்கெட் எடுத்தால்தான் ரன்களை தடுக்க முடியும் என்று நினைத்தேன் அதற்கேற்றார்போல் திட்டமிட்டோம்," எனத் தெரிவித்தார்.

ஐ.பி.எல். போட்டிகள் 2025, ஆர்.சி.பி., விராட் கோலி, விளையாட்டு செய்திகள், ராஜஸ்தான் ராயல்ஸ்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,"ஆட்டத்தைத் திசை திருப்பி வெற்றிக்கு இழுத்து வந்த பந்துவீச்சாளர்கள் துணிச்சல் அபாரமானது" என்றார் ஆர்சிபி கேப்டன் ரஜத் பட்டிதார்

அடுத்து வரவுள்ள முக்கிய ஆட்டங்கள்

இன்றைய ஆட்டம்

  • சிஎஸ்கே vs சன்ரைசர்ஸ்

  • இடம்: சென்னை

  • நேரம்: இரவு 7.30

சிஎஸ்கேவின் அடுத்த ஆட்டம்

  • சென்னை சூப்பர் கிங்ஸ் vs பஞ்சாப் கிங்ஸ்

  • நாள் - ஏப்ரல் 30

  • இடம் – சென்னை

  • நேரம்- இரவு 7.30

மும்பையின் அடுத்த ஆட்டம்

  • மும்பை இந்தியன்ஸ் vs லக்னெள சூப்பர் ஜெயின்ட்ஸ்

  • நாள் - ஏப்ரல் 27

  • இடம் – மும்பை

  • நேரம்- மாலை 3.30 மணி

ஆர்சிபியின் அடுத்த ஆட்டம்

  • ஆர்சிபி vs டெல்லி கேபிடல்ஸ்

  • நாள் - ஏப்ரல் 27

  • இடம் – டெல்லி

  • நேரம்- இரவு 7.30 மணி

ஆரஞ்சு தொப்பி யாருக்கு

  • சாய் சுதர்ஸன்(குஜராத் டைட்டன்ஸ்)-417 ரன்கள் (8 போட்டிகள்)

  • விராட் கோலி(ஆர்சிபி)392 ரன்கள்(9 போட்டிகள்)

  • நிகோலஸ் பூரன்(லக்னெள)-377 ரன்கள்(9 போட்டிகள்)

நீலத் தொப்பி

  • பிரசித் கிருஷ்ணா (குஜராத்) 16 விக்கெட்டுகள்(8 போட்டிகள்)

  • ஜோஷ் ஹேசல்வுட் (ஆர்சிபி) 16 விக்கெட்டுகள்(9 போட்டிகள்)

  • குல்தீப் யாதவ்(டெல்லி) 12 விக்கெட்டுகள்(8 போட்டிகள்)

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.

https://www.bbc.com/tamil/articles/c1wd43xrj1go

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சிஎஸ்கே தொடர் தோல்வி – சொதப்பிய அணி மீது தோனியின் கடும் அதிருப்தி என்ன?

தோனியின் அதிருப்தி என்ன?

பட மூலாதாரம்,GETTY IMAGES

கட்டுரை தகவல்

  • எழுதியவர், க.போத்திராஜ்

  • பதவி, பிபிசி தமிழுக்காக

  • 4 மணி நேரங்களுக்கு முன்னர்

சென்னை சேப்பாக்கத்தில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 போட்டியின் 43-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி.

முதலில் பேட் செய்த சிஎஸ்கே அணி 19.5 ஓவர்களில் 154 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. 155 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய சன்ரைசர்ஸ் அணி 8 பந்துகள் மீதமிருக்கையில் 5 விக்கெட் இழப்புக்கு 155 ரன்கள் சேர்த்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.

2025 ஐபிஎல் சீசன் சிஎஸ்கே அணிக்கு அதிர்ச்சியூட்டும் வகையிலும், ரசிகர்களுக்கு மிகுந்த சோகமாகவும் அமைந்துள்ளது.

இந்த போட்டியில் சிஎஸ்கே அணி தோல்வி அடைந்ததன் மூலம் ப்ளே ஆஃப் சுற்றுக்கு செல்லும் வாய்ப்பை கிட்டதட்ட இழந்துள்ளது.

சிஎஸ்கே அணிக்கு இன்னும் 5 போட்டிகள் இருக்கும் நிலையில் அதில் அனைத்திலும் வென்றால்கூட 10 புள்ளிகள், ஏற்கெனவே 4 புள்ளிகள் என 14 புள்ளிகள்தான் பெற முடியும்.

இந்த புள்ளிகளால் ப்ளே ஆஃப் சுற்றுக்குள் உறுதியாகச் செல்ல முடியுமா என்பது சந்தேகம்தான்.

அதேசமயம், சன்ரைசர்ஸ் அணி தொடர்ச்சியாக 5 தோல்விகளைச் சந்தித்தபின் வெற்றி பெற்று 6 புள்ளிகளுடன் 8வது இடத்தில் இருக்கிறது.

சன்ரைசர்ஸ் அணிக்கு ப்ளே ஆஃப் வாய்ப்புக் கதவுகள் அடைக்கப்படவில்லை. அடுத்துவரக்கூடிய 5 போட்டிகளிலும் சன்ரைசர்ஸ் ஒருவேளை பிரமிப்பூட்டும் வெற்றிகளைப் பெற்றால், ப்ளே ஆஃப் வாய்ப்பு இருக்கும். ஆனால் ஒரு தோல்வி அடைந்தாலும், ப்ளே ஆஃப் சுற்றுக்குச் செல்வது கடினமாகிவிடும்.

சிஎஸ்கே வெளியேறியது – சொதப்பும் அணி பற்றி தோனியின் கடும் அதிருப்தி என்ன?

பட மூலாதாரம்,GETTY IMAGES

சிஎஸ்கேயின் வரலாற்று தோல்விகள்

சன்ரைசர்ஸ் அணி சென்னையில் சிஎஸ்கே அணிக்கு எதிராக இதற்கு முன் 5 முறை மோதியும் ஒரு ஆட்டத்தில் கூட வென்றதில்லை.

முதல்முறையாக சிஎஸ்கே அணியை அதன் கோட்டையான சென்னையில் வீழ்த்தி வரலாற்று வெற்றி பெற்றது. இதன் மூலம் 5-1 என்ற கணக்கில் சன்ரைசர்ஸ் வெற்றிக் கணக்கைத் தொடங்கியுள்ளது.

அதேசமயம், சிஎஸ்கே அணி இந்த சீசனில் மோசமான தோல்விகளைப் பதிவு செய்தது. ஆர்சிபி அணிக்கு எதிராக 17ஆண்டுகளில் முதல்முறையாக சென்னையில் சிஎஸ்கே தோற்றது.

15 ஆண்டுகளில் முதல்முறையாக டெல்லி கேபிடல்ஸ் அணியிடமும் சென்னையில் சிஎஸ்கே தோற்றது. கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிக்கு எதிராக சேப்பாக்கத்தில் இதுவரை இல்லாத வகையில் மிகக்குறைந்த ஸ்கோரைப் பதிவு செய்தது.

சன்ரைசர்ஸ் அணிக்கு எதிராக சேப்பாக்கத்தில் தோல்வியே கண்டிராத சிஎஸ்கே முதல்முறையாகத் தோற்றுள்ளது. கடந்த 13 ஆண்டுகளில் முதல்முறையாக சென்னை சேப்பாக்கத்தில் 4 போட்டிகளில் தோல்வியை சிஎஸ்கே சந்தித்துள்ளது.

மாற்றங்கள் செய்திருந்தும், சிஎஸ்கே அணியின் தோல்வியை மட்டும் மாற்ற முடியவில்லை.

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,மாற்றங்கள் செய்திருந்தும், சிஎஸ்கே அணியின் தோல்வியை மட்டும் மாற்ற முடியவில்லை.

ஹர்சல், மென்டிஸ் ஆட்டநாயகர்கள்

சன்ரைசர்ஸ் அணிக்கு வெற்றியை எளிதாக்கியவர் பந்துவீச்சாளர் ஹர்சல் படேல்.

சிஎஸ்கே அணியின் முக்கியமான பேட்டர்களை முக்கியமான தருணத்தில் ஆட்டமிழக்கச்செய்து ஆட்டத்தில் திருப்புமுனையை ஹர்சல் ஏற்படுத்தினார். 4 ஓவர்கள் வீசி 28 ரன்கள் கொடுத்து 4 விக்கெட்டுகளை கைப்பற்றி ஹர்சல் ஆட்டநாயகன் விருது வென்றார், இதில் 14 டாட் பந்துகளும் அடங்கும், அதாவது 2 ஓவர்களில் ரன் ஏதும் ஹர்சல் கொடுக்கவில்லை.

மற்றொரு ஆட்டநாயகனாக இருப்பவர் கமிந்து மென்டிஸ். அதிகாரபூர்வ ஆட்டநாயகனாக இல்லை என்றாலும் ஆட்டத்தில் பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியவர் மென்டிஸ்.

டிவால்ட் பிரிவிஸை ஆட்டமிழக்கச் செய்ய லாங் ஆன் திசையில் கிடைத்த கேட்சை அந்தரத்தில் 11 மைக்ரோ விநாடிகள் பறந்து சென்று கமிந்து பிடித்த கேட்ச் யாரும் எதிர்பாராதது. சேப்பாக்க ரசிகர்களே வியந்து பாராட்டிய கேட்சாக மாறியது. சிஎஸ்கே ஸ்கோர் வேகமாக உயர்ந்த நிலையில் இந்த விக்கெட்டால் சிஎஸ்கே பேட்டிங் வரிசையே அதன்பின் உருக்குலைந்தது.

இரு கரங்களாலும் பந்துவீசக்கூடிய கமிந்து மென்டிஸ் 3 ஓவர்கள் வீசி 26 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார். பேட்டிங்கிலும் சன்ரைசர்ஸ் அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்று 32 ரன்களுடன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

4 விக்கெட்டுகளை கைப்பற்றி ஹர்சல் ஆட்டநாயகன் விருது வென்றார்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,4 விக்கெட்டுகளை கைப்பற்றி ஹர்சல் ஆட்டநாயகன் விருது வென்றார்

மாற்றத்திலும் மாறாத சிஎஸ்கே

சிஎஸ்கே அணியில் நேற்று ஏராளமான மாற்றங்கள் இருந்தன. பேபி ஏபிடி என்று அழைக்கப்படும் டேவால்ட் ப்ரீவிஸ், ஆயுஷ் மாத்ரே ஆகியோர் களம் இறங்கினர்.

ரவீந்திரா, அஸ்வின், திரிபாதி ஆகியோர் இல்லை. சாம் கரன், தீபக் ஹூடா மீண்டும் சேர்க்கப்பட்டிருந்தனர். ஆனால் இவ்வளவு மாற்றங்கள் செய்திருந்தும், சிஎஸ்கே அணியின் தோல்வியை மட்டும் மாற்ற முடியவில்லை.

சேப்பாக்கம் போன்ற வறண்ட மைதானத்தில் 154 ரன்களை அடித்துக்கொண்டு அனுபவமே இல்லாத பந்துவீச்சாளர்களை வைத்து, டிஃபெண்ட் செய்வது என்பது மணல் கயிற்றால் மலையை இழப்பதுபோலாகும். முன்னொரு காலத்தில் 130 ரன்களை அடித்துக்கொண்டு சிஎஸ்கே டிஃபெண்ட் செய்திருந்தது. ஆனால் அப்போது இருந்த வீரர்கள், பந்துவீச்சாளர்கள் வேறு இப்போதுள்ள நிலைமை படுமோசமாக இருக்கிறது.

சிஎஸ்கே அணியில் பிரிவிஸ் சேர்த்த 42 ரன்கள்தான் அதிகபட்சம், அடுத்தார்போல் ஆயுஷ் மாத்ரே 30 ரன்கள் சேர்த்தார். மற்ற வீரர்கள் 20 ரன்களுக்கள் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தனர்.

சிஎஸ்கே அணி 13வது ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 114 ரன்கள் சேர்த்து வலுவாக இருந்தது, ஸ்கோர் எப்படியும் 6 ஓவர்களில் 60 ரன்கள் என 180 ரன்களை எட்டிவிடும் என கணிக்கப்பட்டது. ஆனால், கடைசி 6 விக்கெட்டுகளை 40 ரன்களுக்குள் சிஎஸ்கே இழந்தது. அதிலும் கடைசி 3 ஓவர்களில் 27 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை சிஎஸ்கே பறிகொடுத்தது.

சிஎஸ்கே வெளியேறியது – சொதப்பும் அணி பற்றி தோனியின் கடும் அதிருப்தி என்ன?

பட மூலாதாரம்,GETTY IMAGES

கோல்டன் விக்கெட்

சிஎஸ்கே அணியின் தொடக்க ஆட்டக்காரர் ரஷீத் ஷமி வீசிய முதல் ஓவர் முதல் பந்தில் ஆட்டமிழந்தார். ஆனால் மாத்ரே அதிரடியாக பேட் செய்து 6 பவுண்டரிகளை அடித்து 4 ஓவர்களில் 37 ரன்களுக்கு உயர்த்தினார்.

சாம் கரனை ஒன்டவுன் இறக்கியும் பெரிதாக எந்த மாற்றத்தையும் செய்யவில்லை 9 ரன்னில் ஹர்சல் படேல் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். கம்மின்ஸ் வீசிய 6வது ஓவரில் மாத்ரே 30 ரன்கள் சேர்த்தநிலையில் இஷன் கிஷானிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

பவர்ப்ளே முடிவில் சிஎஸ்கே 50 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்தது. இந்த சீசனில் 6வது முறையாக பவர்ப்ளேயில் விக்கெட்டுகளை இழந்து மோசமாக பேட் செய்தது சிஎஸ்கே அணி.

மாத்ரே 30 ரன்கள் சேர்த்தநிலையில் இஷன் கிஷானிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,மாத்ரே 30 ரன்கள் சேர்த்தநிலையில் இஷன் கிஷானிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

பிரிவிஸ் ஆறுதல்

ரச்சின் ரவீந்திராவுக்குப் பதிலாக களமிறக்கப்பட்ட பிரிவிஸ் 3 சிக்ஸர்களை கமிந்து ஓவரில் விளாசினார். 25 பந்துகளில் 42 ரன்கள் சேர்த்தநிலையில் ஹர்சல் படேலின் ஸ்லோ பாலில் லாங் ஆன் திசையில் தூக்கி அடித்தார். அங்கு ஃபீல்டிங் நின்றிருந்த கமிந்து மென்டிஸ் பறந்து சென்று இரு கரங்களாலும் பந்தை தாவிப்பிடித்தார்.

இந்த ஐபிஎல் சீசனில் சிறந்த கேட்ச் வரிசையில் நிச்சயமாக கமிந்து கேட்ச் இடம் பெறும்.

பிரிவீஸ் ஆட்டமிழந்தபின் சிஎஸ்கே பேட்டர்களிடமிருந்துபெரிதாக ரன்கள் ஏதும் வரவில்லை. ஷிவம் துபே(12), ஹூடா(22) தோனி(6), கம்போஜ்(2) ஜடேஜா(21) என விக்கெட்டுகளை இழந்தனர்.

ரச்சின் ரவீந்திராவுக்குப் பதிலாக களமிறக்கப்பட்ட ப்ரிவீஸ 25 பந்துகளில் 42 ரன்கள் சேர்த்தார்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,ரச்சின் ரவீந்திராவுக்குப் பதிலாக களமிறக்கப்பட்ட பிரிவிஸ் 25 பந்துகளில் 42 ரன்கள் சேர்த்தார்

2வது பந்தில் விக்கெட்

சன்ரைசர்ஸ் பந்துவீச்சாளர் முகமது ஷமி கோல்டன் விக்கெட் எடுத்தநிலையில் அதற்கு பதிலடியாக சிஎஸ்கே பந்துவீச்சாளர் கலீல் அகமது, முதல் ஓவர் 2வது பந்தில் அபிஷேக் சர்மா விக்கெட்டை வீழ்த்தினார்.

டிராவிஸ் ஹெட் இந்த சீசனில் சில போட்டிகளைத் தவிர்த்து தடுமாறி வருகிறார். அனைத்து பந்துகளையும் பெரிய ஷாட்களாக மாற்றும் அவரின் பாணி, பல நேரங்களில் தோல்வியில் முடிகிறது. இந்த ஆட்டத்திலும் டிராவிஸ் ஹெட் பல பெரிய ஷாட்களுக்கு முயன்றும் அது மீட் ஆகவில்லை.

ஹெட் 19 ரன்கள் சேர்த்தநிலையில் கம்போஜ் பந்துவீச்சில் போல்டாகினார். அதிரடி பேட்டர் கிளாசன் வந்தவேகத்தில் 7 ரன்னில் ஜடேஜா ஓவரில் விக்கெட்டை இழந்தார்.

விக்கெட்டுகள் ஒருபக்கம் சரிந்தபோதிலும் இஷான் கிஷன் நிதானமாக பேட் செய்து 44 ரன்களில் நூர் அகமது பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

இஷான் கிஷன் முதல் போட்டியில் சதம் அடித்தபின் இந்த ஆட்டத்தில்தான் நிதானமாக பேட் செய்துள்ளார். அனிகேத் வர்மா 19 ரன்களில் நூர் அகமதுவிடம் விக்கெட்டை இழந்தார். 106 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்தது சன்ரைசர்ஸ் அணி. ஆட்டம் யார் பக்கம் செல்லும் என்ற கேள்வி இருந்தது.

6வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த நிதிஷ் ரெட்டி, கமிந்து இருவரும் சிஎஸ்கே போராட்டத்தை அடக்கும் வகையில் பேட் செய்தனர்.

இருவரையும் பிரிக்க கடைசி நேரத்தில் பல பந்துவீச்சாளர்களை தோனி மாற்றியும் முடியவில்லை.

இந்த இருவரில் ஒருவர் விக்கெட்டை வீழ்த்தியிருந்தாலும் ஆட்டம் மாறியிருக்கும், ஆனால், கடைசி வரை களத்தில் இருந்து இருவரும் சன்ரைசர்ஸ் அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர்.

6வது விக்கெட்டுக்கு இருவரும் 49 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். நிதிஷ் ரெட்டி 19 ரன்களிலும், கமிந்து 32 ரன்களிலும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

கலீல் அகமது, முதல் ஓவர் 2வது பந்தில் அபிஷேக் சர்மா விக்கெட்டை வீழ்த்தினார்.

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,கலீல் அகமது, முதல் ஓவர் 2வது பந்தில் அபிஷேக் சர்மா விக்கெட்டை வீழ்த்தினார்.

பல் இல்லாத சிஎஸ்கே பந்துவீச்சு

சிஎஸ்கே அணியின் பந்துவீச்சு நேற்று பெரிதாக சன்ரைசர்ஸ் பேட்டர்களுக்கு சிரமத்தை அளிக்கவில்லை. கம்போஜ், சாம்கரன், பதிராணா, கலீல் அகமது என 4 வேகப்பந்துவீச்சாளர்களைப் பயன்படுத்தியும், இந்த ஸ்கோரை டிஃபெண்ட் செய்ய முடியவில்லை. அன்சுல் கம்போஜ், கலீல் அகமது ஜடேஜாவுக்கு ஒரு ஓவர் மீதம் இருந்தநிலையில் தோனி அவர்களுக்கு ஓவர்கள் வழங்காமல் சாம்கரனுக்கு வழங்கியது பெரிய தவறாகும்.

சாம்கரன் வீசிய 2 ஓவர்களில் 25 ரன்கள் சென்றது. அது மட்டுமல்லாமல் பதீராணா, நூர்அகமது இருவரம் நோபால்களையும், வைடுகளையும் வாரி வழங்கினார். சிஎஸ்கே நேற்று மட்டும் 14 உதிரிகளை வழங்கியது. இதைக் கட்டுப்படுத்தி இருந்தாலே 10 ரன்களை சேமித்து சன்ரைசர்ஸ் பேட்டர்களுக்கு ரன் நெருக்கடி கொடுத்திருக்கலாம்.

பெரும்பாலான வீரர்கள் சரியாக விளையாடாவிட்டால் மாற்றம் செய்வது அவசியம்தான் என்றார் தோனி

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,பெரும்பாலான வீரர்கள் சரியாக விளையாடாவிட்டால் மாற்றம் செய்வது அவசியம்தான் என்றார் தோனி

காரணம் என்ன?

தோல்வி குறித்து சிஎஸ்கே கேப்டன் தோனி கூறுகையில், "நாங்கள் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்துவிட்டோம். முதல் இன்னிங்ஸில் விக்கெட் அருமையாக இருந்தது அதைப் பயன்படுத்தி பெரிய ஸ்கோராக மாற்ற தவறினோம். 154 ரன்கள் டிஃபெண்ட் செய்யக்கூடிய ஸ்கோர் இந்த மைதானத்தில் இல்லை. அதிகமாக டர்ன் ஆகவில்லை, வேகப்பந்துவீச்சுக்கும், சுழற்பந்துவீச்சுக்கும் ஓரளவு ஒத்துழைத்து, சராசரி மைதானம் போல் இல்லை. 2வது இன்னிங்ஸில் பந்துவீச்சுக்கு எங்களுக்கு ஆடுகளம் சற்று உதவியது. எங்கள் சுழற்பந்துவீச்சாளர்கள் அருமையாகப் பந்துவீசினர். இன்னும் 15 முதல் 20 ரன்கள் சேர்த்திருந்தால் டிஃபெண்ட் செய்திருப்போம்.

நடுவரிசையில் பிரிவிஸ் சிறப்பாக பேட் செய்தார். நடுப்பகுதி ஓவர்கள்தான் முக்கியமானது அதில் எங்கள் பந்துவீச்சையும், பேட்டிங்கையும் மேம்படுத்த வேண்டும். இந்த ஓவர்களில் விக்கெட் வீழ்த்துவதும், ரன் சேர்ப்பதும் முக்கியமானது. இதுபோன்ற தொடரில் ஏதேனும் ஒரு சில பகுதிகளில் ஓட்டைகள் இருந்தால் பரவாயில்லை. ஆனால், பெரும்பாலான வீரர்கள் சரியாக விளையாடாவிட்டால் மாற்றம் செய்வது அவசியம்தான். இப்படியே கொண்டு செல்ல முடியாது" எனத் தெரிவித்தார்.

இன்றைய ஆட்டம்

கொல்கத்தா vs பஞ்சாப் கிங்ஸ்

இடம்: கொல்கத்தா

நேரம்: இரவு 7.30

சிஎஸ்கேவின் அடுத்த ஆட்டம்

சென்னை சூப்பர் கிங்ஸ் vs பஞ்சாப் கிங்ஸ்

நாள் - ஏப்ரல் 30

இடம் – சென்னை

நேரம்- இரவு 7.30

மும்பையின் அடுத்த ஆட்டம்

மும்பை இந்தியன்ஸ் vs லக்னெள சூப்பர் ஜெயின்ட்ஸ்

நாள் - ஏப்ரல் 27

இடம் – மும்பை

நேரம்- மாலை 3.30 மணி

ஆர்சிபியின் அடுத்த ஆட்டம்

ஆர்சிபி vs டெல்லி கேபிடல்ஸ்

நாள் - ஏப்ரல் 27

இடம் – டெல்லி

நேரம்- இரவு 7.30 மணி

ஆரஞ்சு தொப்பி யாருக்கு?

சாய் சுதர்ஸன் (குஜராத் டைட்டன்ஸ்)- 417 ரன்கள் (8 போட்டிகள்)

விராட் கோலி (ஆர்சிபி) - 392 ரன்கள் (9 போட்டிகள்)

நிகோலஸ் பூரன் (லக்னெள)- 377 ரன்கள் (9 போட்டிகள்)

நீலத் தொப்பி

பிரசித் கிருஷ்ணா (குஜராத்) - 16 விக்கெட்டுகள் (8 போட்டிகள்)

ஜோஷ் ஹேசல்வுட் (ஆர்சிபி) - 16 விக்கெட்டுகள் (9 போட்டிகள்)

நூர் அகமது (சிஎஸ்கே) - 14 விக்கெட்டுகள் (9 போட்டிகள்)

https://www.bbc.com/tamil/articles/clyqdl1e050o

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

லக்னோவ் சுப்பர் ஜயன்ட்ஸை வெளுத்துக்கட்டியது மும்பை இண்டியன்ஸ்

Published By: VISHNU

27 APR, 2025 | 08:55 PM

image

(நெவில் அன்தனி)

மும்பை வான்கேட் விளையாட்டரங்கில் ஞாயிற்றுக்கிழமை (27) மாலை நடைபெற்ற 18ஆவது ஐபிஎல் அத்தியாயத்தின் 45ஆவது போட்டியில் லக்னோவ் சுப்பர் ஜயன்ட்ஸை 54 ஓட்டங்களால் மும்பை இண்டியன்ஸ் வெற்றிகொண்டது.

முன்னாள் சம்பியனும் ஐந்து தடவைகள் சம்பியனுமான மும்பை இண்டியன்ஸ் இந்தப் போட்டியில் சகலதுறைகளிலும் பிரகாசித்து லக்னோவ் சுப்பர் ஜயன்ட்ஸை வெளுத்துக்கட்டியது.

இந்த வெற்றியுடன்   அணிகள் நிலையில்  மும்பை இண்டியன்ஸ் 12 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்திற்கு முன்னேறியது.

சூரியகுமார் யாதவ்வின் அதிரடி அரைச் சதம், ஜஸ்ப்ரிட் பும்ராவின் 4 விக்கெட் குவியல், வில் ஜெக்ஸின் சகலதுறை ஆட்டம் என்பன மும்பை இண்டியன்ஸின் இந்த வெற்றியில் பிரதான பங்காற்றின.

அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய மும்பை இண்டியன்ஸ் 20 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 215 ஓட்டங்களைக் குவித்தது.

ரெயான் ரிக்ல்ட்ன், வில் ஜெக்ஸ் ஆகிய இருவரும் 2ஆவது விக்கெட்டில் 55 ஓட்டங்களைப் பகிர்ந்து  ஆரம்ப வீழ்ச்சியை சீர் செய்தனர்.

ரிக்ல்டன் 32 பந்துகளில் 6 பவுண்டறிகள், 4 சிக்ஸ்களுடன் 58 ஓட்டங்களையும் வில் ஜெக்ஸ் 29 ஓட்டங்களையும் பெற்றனர்.

2704_ryana_rickleton.png

தொடர்ந்து சூரியகுமார் யாதவ் ஆக்ரோஷமாகத் துடுப்பெடுத்தாடி 28 பந்துகளில் 4 பவுண்டறிகள், 4 சிக்ஸ்களுடன் 54 ஓட்டங்களை விளாசினார்.

மத்திய வரிசையில் நாமன் திர் 11 பந்துகளில் ஆட்டம் இழக்காமல் 25 ஓட்டங்களையும் கோர்பின் பொஷ் 10 பந்துகளில் 20 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்துவீச்சில் மயான்க் யாதவ் 40 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் ஆவேஷ் கான் 42 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

216 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய லக்னோவ் சுப்பர் ஜயன்ட்ஸ் 20 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 161 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது.

2704_jasprit_bumrah.png

2704_trent_bolt.png

ஜஸ்ப்ரிட் பும்ரா, ட்ரென்ட் போல்ட் ஆகிய இருவரும் தங்களிடையே 7 விக்கெட்களைப் பகிர்ந்து லக்னோவை திக்குமுக்காடவைத்தனர்.

மிச்செல் மார்ஷ், நிக்கலஸ் பூரன் ஆகிய இருவரும் 2ஆவது விக்கெட்டில் ஜோடி சேர்ந்து மும்பைக்கு சோதனை கொடுக்கும் வகையில் அதிரடியாக ஓட்டங்களைக் குவித்தனர்.

ஆனால், நிக்கலஸ் பூரண் (27) ஆட்டம் இழந்ததும் ரிஷாப் பான்ட் 2 பந்துகளை மட்டும் எதிர்கொண்டு களம் விட்டகன்றார்.

தொடர்ந்து மிச்செல் மார்ஷ், அயூஷ் படோனி ஆகிய இருவரும் 29 பந்துகளில் 46 ஓட்டங்களைப் பகிர்ந்து அணிக்கு தெம்பூட்டினர்.

ஆனால், லக்னோவ் சுப்பர் ஜயன்ட்ஸின் கடைசி 7 விக்கெட்கள் 51 ஓட்டங்கள் வித்தியாசத்தில் சரிய மும்பை இலகுவாக வெற்றியீட்டியது.

மிச்செல் மார்ஷ் 34 ஓட்டங்களையும் அயூஷ் படோனி 35 ஓட்டங்களையும் டேவிட் மில்லர் 24 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்துவீச்சில் ஜஸ்ப்ரிட் பும்ரா 22 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் ட்ரென்ட் போல்ட் 20 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் வில் ஜெக்ஸ் 18 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் வீழ்த்தினர்.

ஆட்டநாயகன்: வில் ஜெக்ஸ்.

https://www.virakesari.lk/article/213103

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

RCB Vs DC: பெங்களூருவின் தொடர் வெற்றி ரகசியம் என்ன? எதிர்பாராத திருப்பம் தந்த வீரர் யார்?

முதலிடத்தில் கோலி, ஆர்சிபி, ஐபிஎல்,

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,ஆர்சிபி அணி 10 போட்டிகளில் 7 வெற்றிகளுடன் 14 புள்ளிகள் பெற்று முதலிடத்துக்கு முன்னேறியது.

கட்டுரை தகவல்

  • எழுதியவர், க.போத்திராஜ்

  • பதவி, பிபிசி தமிழுக்காக

  • 5 மணி நேரங்களுக்கு முன்னர்

டெல்லியில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 46-வது போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி.

முதலில் பேட் செய்த டெல்லி கேபிடல்ஸ் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 162 ரன்கள் சேர்த்தது. 163 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய ஆர்சிபி, 11 பந்துகள் மீதம் இருக்கையில் 4 விக்கெட்டுகளை இழந்து 165 ரன்கள் சேர்த்து, 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.

47 பந்துகளில் 73 ரன்களுடன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்து, பந்துவீச்சில் ஒரு விக்கெட்டையும் வீழ்த்திய க்ருனால் பாண்ட்யா ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இந்த வெற்றியின் மூலம் புள்ளிப்பட்டியலில் ஆர்சிபி அணி 10 போட்டிகளில் 7 வெற்றிகளுடன் 14 புள்ளிகள் பெற்று முதலிடத்திற்கு முன்னேறியது. நிகர ரன் ரேட்டைப் பொறுத்தவரை 0.521 என மும்பை, குஜராத் அணிகளைவிட குறைவாக இருக்கிறது.

அடுத்துவரும் போட்டிகளில் ஏதேனும் பிரம்மாண்ட வெற்றியை ஆர்சிபி பெற்றால் நிகர ரன்ரேட் எகிறிவிடும். ஆர்சிபி அணிக்கு இன்னும் 4 போட்டிகள் மீதம் இருக்கும் நிலையில் 3 வெற்றிகள் ப்ளேஆஃப் சுற்று வாய்ப்பை உறுதி செய்துவிடும்.

அதேநேரம், நேற்று முன்தினம் வரை முதலிடத்திலும், 2வது இடத்திலும் மாறி மாறி இருந்த டெல்லி கேபிடல்ஸ் அணி 9 போட்டிகளில் 6 வெற்றிகளுடன் 12 புள்ளிகள் பெற்று 4வது இடத்துக்குச் சரிந்துள்ளது.

நிகர ரன்ரேட் ஆர்சிபியை விட சற்று குறைவாக 0.482 என இருக்கிறது. டெல்லி அணிக்கு இன்னும் 5 போட்டிகள் மீதமிருக்கும் நிலையில் 3 போட்டிகளில் வென்றால், ப்ளே ஆஃப் சுற்றுக்குள் சென்றுவிடும்.

ஆர்சிபி அணி 10 போட்டிகளில் 7 வெற்றிகளுடன் 14 புள்ளிகள் பெற்று முதலிடத்துக்கு முன்னேறியது.

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,இந்த ஆட்டத்தில் க்ருனால் பாண்ட்யாவோடு சேர்ந்து 119 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த கோலி

ஆரஞ்சு தொப்பியுடன் கோலி

ஆர்சிபி அணி இதுவரை 7 ஆட்டங்களில் வென்றுள்ளது, அதில் 4 போட்டிகளில் சேஸிங் செய்துதான் வெற்றி பெற்றுள்ளது.

இந்த 4 போட்டிகளின் சேஸிங்கிலும் விராட் கோலி அரைசதம் அடித்துள்ள நிலையில் நடப்பு ஐபிஎல் தொடரில் சேஸிங்கில் மட்டும் 245 ரன்கள் சேர்த்துள்ளார். அதிலும் இந்த 4 போட்டிகளிலும் நேற்றுதான் முதல்முறையாக கோலி ஆட்டமிழந்தார்.

இந்த சீசனில் கோலி 10 போட்டிகளில் 6 அரைசதங்களுடன் 443 ரன் அடித்து ஆரஞ்சு தொப்பியைப் பெற்றுள்ளார். இந்த சீசனில் கோலி மெதுவான ரன்குவிப்போடு தொடங்கினாலும், தனது அனுபவத்தை வெளிப்படுத்தி, ரன்குவிப்பில் முதலிடத்தைப் பிடித்துள்ளார்.

இந்த ஆட்டத்தில்கூட க்ருனால் பாண்ட்யாவோடு சேர்ந்து 119 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து "சேஸிங் கிங்" என்ற பெயருக்கு உரித்தாக கோலி விளங்கினார்.

ஆர்சிபி அணியின் வெற்றிக்கு முதல் காரணம் பந்துவீச்சாளர்கள்தான். வலிமையான பேட்டிங் வரிசை கொண்ட டெல்லி அணியை 163 ரன்களுக்குள் சுருட்டினர்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,ஆர்சிபி அணியின் பவுலர்கள் வலிமையான டெல்லி அணியின் பேட்டிங்கை கட்டுப்படுத்தி 163 ரன்களுக்குள் சுருட்டினர்

வெற்றிக்கு காரணமான ஆர்சிபியின் பந்துவீச்சு

ஆர்சிபி அணியின் வெற்றிக்கு முதல் காரணம் பந்துவீச்சாளர்கள்தான். வலிமையான பேட்டிங் வரிசை கொண்ட டெல்லி அணியை 163 ரன்களுக்குள் சுருட்டினர். புவனேஷ்வர் குமார், ஹேசல்வுட் இருவரும் 8 ஓவர்கள் வீசி 69 ரன்கள் மட்டுமே கொடுத்து 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றி ஓவருக்கு சராசரியாக 8 ரன்கள் வழங்கினர். ஆனால், யாஷ் தயால் ஒரு விக்கெட் எடுத்தாலும் ரன்களை வாரி வழங்கினார்.

சுழற்பந்துவீச்சாளர்களான க்ருனால் பாண்ட்யா, சூயஸ் ஷர்மா இருவரும் 8 ஓவர்கள் வீசி 50 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினர். இதில் சூயஷ் ஷர்மா விக்கெட் வீழ்த்தாவிட்டாலும், 4 ஓவர்களில் 22 ரன்கள் மட்டுமே கொடுத்து டெல்லி பேட்டர்களை திணறவிட்டார். அதேபோல க்ருனால் பாண்ட்யாவும், 4 ஓவர்களில் 28 ரன்கள் மட்டுமே கொடுத்து கட்டுக்கோப்பாகப் பந்து வீசினார்.

ஆர்சிபி, விராட் கோலி, ஐபிஎல், கே. எல். ராகுல்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,ஆர்சிபி அணியின் வெற்றிக்கு முதல் காரணம் பந்துவீச்சாளர்கள்தான். வலிமையான பேட்டிங் வரிசை கொண்ட டெல்லி அணியை 163 ரன்களுக்குள் சுருட்டினர்

பேட்டிங்கில் விராட் கோலி, க்ருனால் பாண்ட்யா இடையே அமைந்த 4வது விக்கெட்டுக்கான 119 ரன்கள் பார்ட்னர்ஷிப் தான் வெற்றிக்கு அஸ்திவாரமாக அமைந்தது. ஒரு கட்டத்தில் ஆர்சிபி அணி 26 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

ஆர்சிபி அணி சரிவிலிருந்து மீண்டதை இரு கட்டமாகப் பிரிக்கலாம். 4 ஓவரிலேயே ஆர்சிபி 3 விக்கெட்டுகளை இழந்தது, அடுத்த 6 ஓவர்களில் ஆர்சிபி 40 ரன்கள் மட்டுமே சேர்த்திருந்தது. அதன்பின் அடுத்த 10 ஓவர்களில் ஒரு விக்கெட் மட்டும் இழந்து 101 ரன்கள் சேர்த்து வெற்றி பெற்றது.

க்ருனால் பாண்ட்யா நிதானமாகவே ஆட்டத்தைத் தொடங்கினார். இதில் ஹேசல்வுட் பந்தில் முதுகில் அடிவாங்கி, சமீரா பந்துவீச்சில் ஹெல்மெட்டில் அடிவாங்கி பேட்டிங்கில் சிரமப்பட்டார். 21 பந்துகளில் 17 ரன்களோடு சுமாராகவே குர்னல் பாண்ட்யா பேட் செய்தார். ஆனால், அடுத்த 26 பந்துகளில் க்ருனால் பாண்ட்யா 56 ரன்கள் சேர்த்து ஆர்சிபி வெற்றிக்கு முக்கியக் காரணமாகினார். ஆங்கர் ரோல் எடுத்து ஆடிய விராட் கோலி, 45 பந்துகளில் அரைசதம் அடித்து 51 ரன்களில் ஆட்டமிழந்தார். இந்த இருவருக்கு இடையேயான பார்ட்னர்ஷிப்பும் நிதானமான ஆட்டமும் தான் ஆர்சிபி வெற்றிக்கு காரணமாகும்.

9 ஆண்டுகளுக்குப்பின் அரைசதம்

ஆர்சிபி, க்ருனால் பாண்ட்யா, ஐபிஎல். டெல்லி கேபிட்டல்ஸ்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,ஆர்சிபி வெற்றிக்கு முக்கியக் காரணம் குர்னல் பாண்ட்யா ஆட்டம் தான்

ஆர்சிபி அணியின் சேஸிங்கைப் பொருத்தவரை கோலி, க்ருனால் பாண்ட்யா ஆட்டம் தான் முழுமையாக ஆக்கிரமித்திருந்தது. இருவரின் பார்ட்னர்ஷிப்தான் முக்கியமாக இருந்து தொடக்கத்தில் தடுமாறிய அணியை வெற்றிக்கு அருகே வரை அழைத்து வந்தது.

இந்தத் தொடரில் தற்போது வரை பேட்டிங்கில் பெரிதாக சோபிக்காத க்ருனால் பாண்ட்யா, நேற்று அரைசதம் அடித்தது, ஆர்சிபி அணியின் பேட்டர்கள் எந்த நேரத்திலும் சூழலுக்கு ஏற்ப தங்களை தகவமைத்து ஆடக்கூடிய நிலையில் உள்ளனர் என்பதைக் காட்டினார்.

ஆர்சிபிக்கு தொடக்கம் உற்சாகமாக இருந்தாலும் அது நிலைக்கவில்லை. பில் சால்ட்டுக்கு பதிலாக பெத்தல் களமிறங்கி, ஸ்டார்க் பந்துவீச்சில் சிக்ஸர், பவுண்டரி அடித்த நிலையில் 12 ரன்னில் அக்ஸர் படேல் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

அடுத்துவந்த படிக்கல் டக்அவுட்டில் அக்ஸர் பந்துவீச்சிலும், பட்டிதார் ரன் அவுட்டிலும் வெளியேறினர். இதனால் 3 விக்கெட் இழப்புக்கு 26 ரன்களுடன் ஆர்சிபி அணி தடுமாறியது.

வழக்கமாக மிடில் ஆர்டரில் களமிறங்கும் குர்னல் பாண்ட்யா இந்த முறை 3வது வீரராக களமிறக்கப்பட்டார். டெல்லி ஆடுகளம் கறுப்பு வண்டல் மண் கொண்டதால் பந்து பேட்டரை நோக்கி சற்று நின்று வந்தது, பெரிதாக பவுன்ஸர் இல்லை என்பதால் பெரிய ஷாட்களை ஆடுவது சற்று சிரமமாக இருந்தது. கோலி, க்ருனால் பாண்ட்யா நிதானமாக ஆடியதால் பவர்ப்ளேயில் 3 விக்கெட் இழப்புக்கு ஆர்சிபி 35 ரன்கள் மட்டுமே சேர்த்தது.

பவர்ப்ளேயில் கோலி, க்ருனால் பேட்டிங்கையும், 10 ஓவர்கள் வரை இருவரின் பேட்டிங்கைப் பார்த்தால் ஆர்சிபி வெல்வது கடினம் என ரசிகர்கள் நினைத்திருக்கலாம். ஆனால், 10 ஓவர்களுக்குப் பின்பு தான் இருவரின் ஆட்டமும் சூடுபிடித்தது. கடைசி 10 ஓவர்களில் ஆர்சிபி வெற்றிக்கு 99 ரன்கள் தேவைப்பட்டது.

க்ருனால் பாண்ட்யாவைப் பொருத்தவரை அவரின் சகோதரர் ஹர்திக் பாண்ட்யா போன்று அதிரடி பேட்டர் எனச் சொல்ல முடியாது. பந்துவீச்சு ஆல்ரவுண்டரான க்ருனால் பாண்ட்யா ஏதாவது ஒரு ஆட்டத்தில் மட்டுமே அரிதாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தக்கூடியவர். அதேநேரம் "பிஞ்ச் ஹிட்டர்" போன்று கேமியோவும் ஆடக்கூடியவர்.

மந்தமாக ஆட்டத்தைத் தொடங்கிய க்ருனால், 11வது ஓவரில் சமீரா பந்துவீச்சில் லெக்சைடில் சிக்ஸருக்கு பறக்கவிட்டார், முகேஷ்குமாரின் 13வது ஓவரில் 2 பவுண்டரிகளை விளாசினார். குல்தீப் யாதவ் ஓவரிலும் எக்ஸ்ட்ரா கவரில் பவுண்டரி அடித்து ஸ்கோரை உயர்த்தினார்.

21 பந்துகளில் 17 ரன்களுடன் இருந்த க்ருனால் பாண்ட்யா 38 பந்துகளில் அரைசதம் அடித்தார். அதாவது அடுத்த 17 பந்துகளில் 33 ரன்களை பாண்ட்யா விளாசினார். ஐபிஎல் தொடரில் கடைசியாக 2016ஆம் ஆண்டு க்ருனால் பாண்ட்யா அரைசதம் அடித்திருந்தார், அதன்பின் 3,269 நாட்கள் கழித்து இந்த ஆட்டத்தில் க்ருனால் பாண்ட்யா அரைசதம் அடித்துள்ளார். க்ருனால் பாண்ட்யாவை ஊக்கப்படுத்திக் கொண்டே பேட் செய்த கோலி 45 பந்துகளில் அரைசதம் அடித்தார்.

ஆர்சிபி அணிக்கு வெற்றி பெற கடைசி 24 பந்துகளில் 45 ரன்கள் தேவைப்பட்டது. சமீரா வீசிய 18வது ஓவரில் லெக்கட்டரில் கோலி 51 ரன்களில் ஆட்டமிழந்தார்.

அடுத்துவந்த டிம் டேவிட் ஆர்சிபியின் வெற்றியை வேகப்படுத்தினார். முகேஷ் குமார் வீசிய 19வது ஓவரில் ஒரு சிக்ஸர், 3 பவுண்டரிகளை விளாசி ஆர்சிபியை வெற்றிக்கு வித்திட்டார்.

டெல்லி அணியைப் பொருத்தவரை 50 ரன்கள்கூட எந்த பார்ட்னர்ஷிப்பும் நிலைக்கவில்லை

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,டெல்லி அணியின் பேட்டிங்கில் நிலையான பார்ட்னர்ஷிப் இல்லாதது பெரிய ஸ்கோர் செட் செய்வதில் பின்னடைவாக அமைந்தது.

நடுப்பகுதியில் சொதப்பிய டெல்லி

அபிஷேக் பொரெல், டூப்பிளசிஸ் இருவரும் நல்ல தொடக்கம் அளித்தனர். ஏப்ரல் 10ம் தேதிக்குப் பின் காயத்திலிருந்து மீண்டு வந்து டூப்பிளசிஸ் களமிறங்கினார். அபிஷேக் 11 பந்துகளில் 28 ரன்கள் சேர்த்த நிலையில் ஹேசல்வுட் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். பேட்டிங்கில் தடுமாறிய டூப்பிளசிஸ் 26 பந்துகளில் 22 ரன்கள் சேர்த்து குர்னல் பாண்ட்யாவிடம் விக்கெட்டை இழந்தார்.

கருண் நாயர் அதிரடியாகத் தொடங்கினாலும், பெரிய ஷாட்டுக்கு முற்பட்டு யாஷ்தயால் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். கே.எல்.ராகுல் 39 பந்துகளில் 41 ரன்கள் சேரத்து புவனேஷ்வர் குமார் பந்துவீச்சில் விக்கெட்டை பறிகொடுத்தார். அசுதோஷ் சர்மா (2), அக்ஸர் (15) என கீழ்வரிசை பேட்டர்களும் எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை.

டெல்லி அணியைப் பொருத்தவரை 50 ரன்கள் கூட எந்த பார்ட்னர்ஷிப்பும் நிலைக்கவில்லை. தொடக்க வீரர் அபிஷேக், டிரிஸ்டன் ஸ்டெப்ஸ் ஆகிய இருவர் மட்டுமே அதிரடியாக பேட்டைச் சுழற்றினர். மற்ற அனைத்து பேட்டர்களும் ரன்சேர்க்க கடுமையாகத் திணறினர். சிறப்பாக ஆடியக்கூடிய கே.எல்.ராகுல்கூட நேற்று 2 பவுண்டரிகள் மட்டுமே அடித்தார்.

ஆடுகளத்தில் பந்து பேட்டரை நோக்கி மெதுவாகவும், சில நேரங்களில் தாழ்வாகவும் வந்ததால் பேட்டர்களால் பெரிய ஷாட்டுக்கு செல்ல முடியவில்லை. இதை ஆர்சிபி சுழற்பந்துவீச்சாளர்கள் க்ருனால், சூயஷ் இருவரும் சிறப்பாகப் பயன்படுத்தினர். கடைசி நேரத்தில் ஸ்டெப்ஸ், விப்ராஜ் இருவரும் சேர்ந்து 36 ரன்கள் சேர்த்தனர். இந்த ரன்களும் வராமல் இருந்திருந்தால் டெல்லி அணி 130 ரன்களை கடப்பதே கடினமாகியிருக்கும்.

டெல்லி அணியைப் பொருத்தவரை 50 ரன்கள்கூட எந்த பார்ட்னர்ஷிப்பும் நிலைக்கவில்லை

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,டெல்லி அணியின் பேட்டர்கள் நேற்றைய போட்டியில் ரன் சேர்க்க தடுமாறினர்.

பார்ட்னர்ஷிப் மிகவும் முக்கியம்

வெற்றிக்குப்பின் ஆரஞ்சு தொப்பி வீரர் விராட் கோலி கூறுகையில் "இந்த ஆடுகளத்தில் இந்த வெற்றி மிகச்சிறப்பானது. இதற்கு முன் இருந்த ஆடுகளத்தைவிட இந்த ஆடுகளம் வித்தியாசமாக இருக்கிறது. என்னைப் பொருத்தவரை சேஸிங்கில் களமிறங்கும்முன் என்னுடைய பங்கு என்ன, எப்படி ஆட வேண்டும், எப்படிப்பட்ட ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும் என்பதைத் தெரிந்து கொண்டுதான் நான் விளையாடுவேன்.

3 விக்கெட் இழப்புக்கு 24 ரன்களுடன் நெருக்கடியாக இருந்தோம். ஆனால் க்ருனால் பாண்ட்யாவுடனான 100 ரன்கள் பார்ட்னர்ஷிப் வெற்றிக்கு கொண்டு சென்றது. க்ருனால் பேட்டிங் மிகச்சிறப்பாக இருந்தது. இந்த சீசனில் பந்துவீச்சிலும், பேட்டிங்கிலும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறார் க்ருனால் பாண்ட்யா.

நான் ஸ்கோர் போர்டைப் பார்ப்பேன், சூழல்களைப் பார்ப்பேன், பந்துவீச்சாளர்கள் யார், யாரெல்லாம் நமக்கு சவலாக இருப்பார்கள் என்று பார்த்து விளையாடுவேன். அதனால்தான் முதலில் ஒரு ரன், 2 ரன்கள் என ஸ்ட்ரைக்கை மட்டும் ரொட்டேட் செய்தேன். அதன்பின்பு தான் பவுண்டரி பக்கம் சென்றேன். இதனால் ஆட்டம் எங்களுக்கு தேக்கமடையாமல் சென்றது.

பார்ட்னர்ஷிப் என்பது டி20 போட்டியில் மிக முக்கியம். ஆனால் பார்ட்னர்ஷிப் அமைப்பதையே இன்றைய பேட்டர்கள் மறந்துவிட்டார்கள். ஆட்டத்தை ஆழமாக வழிநடத்திச் செல்லும் பாணியையும் மறந்துவிட்டார்கள்.

இந்த சீசனில் நான் பார்த்தவரை, பேட்டர்கள் வருவதும், போவதுமாகத் தான் இருக்கிறார்கள். பேட்டிங்கில் தொழில்முறை சார்ந்த அம்சங்கள் இருக்க வேண்டும். சூழலை அறிந்து, அதற்கு ஏற்றார்போல் ஆட்டத்தை மாற்ற வேண்டும். க்ருனாலும், நானும் நன்கு பேசிக்கொண்டு எந்த பந்தில் பெரிய ஷாட்டுக்கு செல்லலாம், யாருடைய பந்துவீச்சை குறிவைக்கலாம் எனப் பேசி விளையாடி நல்ல பார்ட்னர்ஷிப்பை அமைத்தோம். கடைசி வரிசையில் டிம் டேவிட், ஜிதேஷ், ரொமாரியோ போன்ற பவர்ஹிட்டர்கள் இருப்பதும் எனக்கு ஆறுதலாக இருந்தது. எங்களுக்கு விக்கெட் வீழ்த்தாவிட்டாலும் முக்கிய துருப்புச் சீட்டாக இருப்பது சூயஷ் ஷர்மாதான்" எனத் தெரிவித்தார்.

பெங்களூருவின் தொடர் வெற்றியின் ரகசியம் என்ன?

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,பெங்களூரு அணியின் டெல்லி அணியை வீழ்த்தி புள்ளிப்பட்டியலில் முதலிடத்தைப் பிடித்தது.

இன்றைய ஆட்டம்

ராஜஸ்தான் vs குஜராத் டைட்டன்ஸ்

இடம்: ஜெய்பூர்

நேரம்: இரவு 7.30

சிஎஸ்கேவின் அடுத்த ஆட்டம்

சென்னை சூப்பர் கிங்ஸ் vs பஞ்சாப் கிங்ஸ்

நாள் - ஏப்ரல் 30

இடம் – சென்னை

நேரம்- இரவு 7.30

மும்பையின் அடுத்த ஆட்டம்

மும்பை இந்தியன்ஸ் vs ராஜஸ்தான் ராயல்ஸ்

நாள் – மே 1

இடம் – ஜெய்பூர்

நேரம்- இரவு 7.30 மணி

ஆர்சிபியின் அடுத்த ஆட்டம்

ஆர்சிபி vs சிஎஸ்கே

நாள் – மே 3

இடம் – பெங்களூரு

நேரம்- இரவு 7.30 மணி

ஆரஞ்சு தொப்பி யாருக்கு?

விராட் கோலி (ஆர்சிபி) - 443 ரன்கள் (9 போட்டிகள்)

சூர்யகுமார் யாதவ் (மும்பை இந்தியன்ஸ்) - 427 (10 போட்டிகள்)

சாய் சுதர்ஸன் (குஜராத் டைட்டன்ஸ்) - 417 ரன்கள் (8 போட்டிகள்)

நீலத் தொப்பி யாருக்கு?

ஜோஷ் ஹேசல்வுட் (ஆர்சிபி) - 18 விக்கெட்டுகள் (10 போட்டிகள்)

பிரசித் கிருஷ்ணா (குஜராத்) - 16 விக்கெட்டுகள் (8 போட்டிகள்)

நூர் அகமது (சிஎஸ்கே) - 14 விக்கெட்டுகள் (9 போட்டிகள்)

https://www.bbc.com/tamil/articles/cy4vegdg40ko

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.