Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
ஜெய்சங்கர் மற்றும் அநுர குமார திஸாநாயக்கவை

பட மூலாதாரம்,PMD SRI LANKA

படக்குறிப்பு, இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் இலங்கை ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவை சந்தித்தார். கட்டுரை தகவல்
  • எழுதியவர், ரஞ்சன் அருண் பிரசாத்
  • பதவி, பிபிசி தமிழுக்காக
  • ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

இலங்கையில் ஜனாதிபதித் தேர்தலின் ஊடாக ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தின் பின்னர், முதல் தடவையாக இலங்கைக்கு வருகைத் தந்த உயர்நிலை வெளிநாட்டு இராஜதந்திரியாக இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் வரலாற்றில் பதிவாகியுள்ளார்.

இலங்கையின் ஜனாதிபதித் தேர்தல் கடந்த 21 ஆம் தேதி நடைபெற்ற நிலையில், தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திஸாநாயக்க இலங்கையின் 9வது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக மக்களினால் தேர்வு செய்யப்பட்டார்.

இலங்கை வரலாற்றில் முதல் தடவையாக இடதுசாரி கட்சியொன்று ஆட்சி பீடம் ஏறியது சர்வதேச அளவில் பேசுப் பொருளாக மாறியது.

இலங்கை நிலப் பரப்பு தொடர்பில் இந்தியா, சீனா, அமெரிக்கா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் அதிக போட்டித்தன்மையுடன் செயற்பட்டு வருகின்ற நிலையில், இடதுசாரி கட்சியொன்று ஆட்சி பீடம் ஏறியமை பூகோள அரசியலில் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தும் என அரசியல் ஆய்வாளர்கள் எதிர்வு கூறியுள்ளனர்.

இவ்வாறான பின்னணியில், இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கரின் ஒரு நாள் இலங்கை விஜயமானது, சர்வதேச கவனத்தை ஈர்த்துள்ளது.

ஜெய்சங்கரின் இலங்கை விஜயம்

இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் நேற்றைய தினம் (அக்டோபர் 4) இலங்கையில் ஒரு நாள் விஜயம் செய்தார்.

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு நேற்று முற்பகல் இந்திய விமானப்படைக்கு சொந்தமான விசேட விமானத்தில் இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் வருகைத் தந்தார். எஸ்.ஜெய்சங்கருடன், இந்திய வெளிவிவகார அமைச்சின் உயர்நிலை குழுவொன்றும் வருகைத் தந்தது.

இந்திய வெளிவிவகார அமைச்சர் உள்ளிட்டோரை, இலங்கை வெளிவிவகார அமைச்சின் செயலாளர் உள்ளிட்ட உயர்நிலை குழுவினர் வரவேற்றனர்.

எஸ்.ஜெய்சங்கர், இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித்த ஹேரத்தை முதலில் சந்தித்தார். அதனைத் தொடர்ந்து, ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க, பிரதமர் ஹரினி அமரசூரிய, ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாஸ, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஆகியோரை சந்தித்து இருதரப்பு பேச்சுவார்த்தைகளை நடாத்தியிருந்தார்.

இந்திய வெளிவிவகார அமைச்சரின் பயணங்களில் , தமிழ் கட்சிகளை சந்திப்பது வழமையானது என்ற நிலையில், இம்முறை தமிழ் கட்சியை சந்தித்து கலந்துரையாடல்களை நடாத்தவில்லை.

இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் உள்ளிட்ட குழுவினர் நேற்றிரவு, இலங்கைக்கான விஜயத்தை நிறைவு செய்து நாடு திரும்பினர்.

 
அநுர குமார திஸாநாயக்க மற்றும் எஸ்.ஜெய்சங்கர்

பட மூலாதாரம்,PMD SRI LANKA

படக்குறிப்பு, இலங்கை ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவுடன், இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் கலந்துரையாடல்களை நடாத்தியுள்ளார்.

ஜனாதிபதியுடனான சந்திப்பு

இந்தியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகளுக்கு இடையிலான உறவுகளை பல்வேறு துறைகளின் ஊடே பலப்படுத்திக் கொள்வது குறித்து ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவுடன், இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் கலந்துரையாடல்களை நடாத்தியுள்ளார்.

இலங்கையின் சுற்றுலாத்துறை, முதலீடுகள், மின்சக்தி மற்றும் வலுசக்தி, பால் சார்ந்த உற்பத்தித் துறை என்பவை தொடர்பில் இந்தியா கொண்டிருக்கும் அக்கறையை வலியுறுத்திய அவர், இலங்கையின் பொருளாதார மறுமலர்ச்சிக்கு இந்தியா முழுமையான ஒத்துழைப்பை வழங்குமெனவும் தெரிவித்தார்.

அதற்கமைய இலங்கையின் பொருளாதார மறுமலர்ச்சிக்காக இந்தியாவின் பாரிய சந்தை வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள முடியும் என்பதையும் இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் சுட்டிக்காட்டினார்.

அண்மையில் இலங்கை எதிர்கொண்டிருந்த பொருளாதார நெருக்கடியின் போது இந்தியா வழங்கிய ஒத்துழைப்புக்கு நன்றி தெரிவித்த ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க, இந்தியாவுடனான தொடர்புகளை தொடர்ந்து பேணுவதில் ஆர்வமாக இருப்பதாகவும் தெரிவித்தார்.

மீன்பிடித்துறை மற்றும் தேசிய ஒற்றுமை போன்ற இரு தரப்பும் அக்கறை காட்டும் விடயங்கள் தொடர்பிலும் இந்த சந்திப்பில் கவனம் செலுத்தப்பட்டது.

அதனையடுத்து வெகு விரைவில் இந்தியாவிற்கான சுற்றுப்பயணம் ஒன்றை மேற்கொள்ளுமாறு இந்திய பிரதமர் நரேந்திர மோதி விடுத்த அழைப்பை ஜனாதிபதிக்கு இந்திய வெளிவிவகார அமைச்சர் தெரியப்படுத்தினார். அதை தொடர்ந்து, இந்திய பிரதமர் நரேந்திர மோதியும் எதிர்வரும் நாட்களில் இலங்கைக்கு வருகைத்தர வேண்டுமென இலங்கை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அழைப்பு விடுத்தார்.

 
பிரதமர் ஹரினி அமரசூரிய

பட மூலாதாரம்,HARINI AMARASURIYA

படக்குறிப்பு, இலங்கை பிரதமர் ஹரிணி அமரசூரியவையும் சந்தித்து பேசினார்.

இலங்கை பிரதமருடன் இந்திய வெளிவிவகார அமைச்சர் சந்திப்பு

இலங்கையின் பொருளாதார வளர்ச்சி உள்ளிட்ட விடயங்கள் குறித்து இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருடனான கலந்துரையாடலின் போது பேசியதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

இலங்கையின் மூன்றாவது பெண் பிரதமராக பதவியேற்ற ஹரிணி அமரசூரியவிற்கு, இந்திய வெளிவிவகார அமைச்சர் தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

அத்துடன், இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை மேலும் வலுப்படுத்திக் கொள்வது குறித்து இதன்போது அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன், டிஜிட்டல்மயமாக்கல் முயற்சிகள் குறித்தும் இதன்போது கலந்துரையாடல்கள் நடாத்தப்பட்டுள்ளன. பல்வேறு துறைகளில் பரஸ்பர நன்மை பயக்கும் ஒத்துழைப்பு குறித்து இரண்டு தரப்பினரும் கலந்துரையாடல்களை நடாத்தித்தியுள்ளனர்.

 

சஜித் பிரேமதாஸ மற்றும் ரணில் விக்ரமசிங்கவுடன் கலந்துரையாடல்

இந்தியா வெளிவிவகார அமைச்சர் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாஸ மற்றும் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஆகியோருடன் விசேட சந்திப்பொன்றை நடாத்தியிருந்தார்.

இலங்கை தற்போது எதிர்நோக்கியுள்ள பிரச்னைகள் தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, இந்திய வெளிவிவகார அமைச்சருக்கு விளக்கியுள்ளார்.

இலங்கை எதிர்நோக்கிய வங்குரோத்து நிலைமையிலிருந்து மீண்டு வருவதற்கு இந்தியா வழங்கிய ஒத்துழைப்புக்கு, சஜித் பிரேமதாஸ தனது நன்றியை தெரிவித்துள்ளார்.

அத்துடன், இந்தியாவின் ஒத்துழைப்பை தான் தொடர்ந்தும் எதிர்பார்ப்பதாக கூறிய சஜித் பிரேமதாஸ, இந்தியாவுடனான உறவை தொடர்ந்தும் வலுப்படுத்திக் கொள்வதற்கு இணக்கம் வெளியிட்டுள்ளார்.

இதேவேளை, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை, இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் சந்தித்து கலந்துரையாடல்களை நடாத்தியுள்ளார்.

 
சஜித் பிரேமதாஸ

பட மூலாதாரம்,SAJITH PREMADASA MEDIA

படக்குறிப்பு, ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாஸவையும் சந்தித்தார்

தமிழ் கட்சிகளை சந்திக்காதது ஏன்?

இலங்கை அரசியலில் தனது ஆதிக்கத்தை நிலைநிறுத்திக் கொள்வதற்காக செயற்பாட்டை இந்தியா தொடர்ந்தும் முன்னெடுத்து வருவதாக மூத்த பத்திரிகையாளர் இராமானுஜம் நிர்ஷன் பிபிசி தமிழுக்கு தெரிவித்தார்.

'அநுர குமார திஸாநாயக்க பதவியேற்றதுமே தான் பெரிய நாடு என்பதை காண்பிப்பதற்கான முயற்சிகளை இந்தியா முன்னெடுத்துள்ளது. இந்திய வெளிவிவகார அமைச்சரின் முதல் விஜயத்தையும் நான் அப்படியே பார்க்கின்றேன். இலங்கை அரசியல் கட்சிகள் அனைத்துடனும் நேரடி தொடர்புகளை இந்தியா பேணி வருகின்றது. வேறு நாடுகள் அரசியல் கட்சிகளுடன் நேரடி தொடர்புகளை இந்தியா போன்று வைத்திருக்காது. இலங்கை அரசியலில் தேசிய மக்கள் சக்திக்கு பெரிய பலமொன்று வர போவதை ஏற்கனவே உணர்ந்ததால்தான் அநுர குமார திஸாநாயக்கவை முன்கூட்டியே நேரில் அழைத்து இந்தியா பேசியிருந்தது. இலங்கையில் எந்த அரசாங்கம் வந்தாலும், இந்தியாவின் ஆதிக்கத்தை இலங்கையில் தக்க வைத்துக்கொள்வதற்கான செயற்பாடுகளை தொடர்ந்து நடத்தி வருகின்றது." என்று அவர் கூறினார்.

 
மூத்த பத்திரிகையாளர் இராமானுஜம் நிர்ஷன்

பட மூலாதாரம்,NIRSHAN

படக்குறிப்பு, மூத்த பத்திரிகையாளர் இராமானுஜம் நிர்ஷன்

தமிழ் கட்சிகளை ஏன் சந்திக்கவில்லை?

இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் ஏன் தமிழ் கட்சிகளை சந்திக்கவில்லை என்பது குறித்து பெயர் குறிப்பிட விரும்பாத தமிழ் கட்சியொன்றின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பிபிசி தமிழிடம் பேசினார்.

இந்திய வெளிவிவகார அமைச்சர் ஒரு நாள் விஜயமாக வருகைத் தந்தமையினால், நேரமின்மை காரணமாக அரசத் தலைவர் உள்ளிட்ட சிலரை மாத்திரமே சந்தித்திருக்கலாம் என அவர் குறிப்பிட்டார். அதனாலேயே, தமிழ் கட்சிகளை சந்திக்காது உடனடியாக நாடு திரும்பியிருக்கலாம் எனவும் அவர் தெரிவித்தார்.

தமிழ் கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என்று ஜனாதிபதி தேர்தலுக்கு முன்பே தமிழ் கட்சிகளுக்கு இந்தியா கோரிக்கை விடுத்திருந்ததாக அவர் கூறினார். இந்தியா இவ்வாறான கோரிக்கையை விடுத்திருந்த போதிலும், அது சாத்தியப்படாத ஒன்று எனவும் அவர் கூறினார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.

  • கருத்துக்கள உறவுகள்

அவர் வந்தது அனுராவை யாரும் அண்டாமல் காக்கா பிடிப்பதற்கே. தமிழர் பற்றிய அக்கறை, கவலை, பயம் அவருக்கு இல்லை. தங்களுக்குள்ளேயே ஒற்றுமையில்லாத, மக்களுக்காக வாழ முயலாத, எடுப்பார் கைப்பிள்ளைகளால் இந்தியாவுக்கு நன்மையோ, அச்சுறுத்தலோ இல்லையே. 'வா' என்று ஒரு அறிவித்தல் வராதா காலில் போய் விழாமாட்டோமா என்று காத்திருக்கும் இவர்களோடு கதைத்தால் என்ன, கதையா விட்டால் என்ன? குடியா முழுகப்போகுது இந்தியாவுக்கு? அவர் வந்த வேலையை கச்சிதமாக நிறைவேற்றி விட்டார் அவரை வரவேற்பதற்கு ஆயத்தங்கள் பண்ண வேண்டாமோ? அவர் இவர்களுடன் வீணாக நேரத்தை செலவிட, இவர்கள் முக்கியமானவர்களுமில்லை, இவர்களின் கோரிக்கை முக்கியமானதுமில்லை, இதை எம்மவர்கள் உணரவுமில்லை,  இவர்கள் எதிர்பார்த்திருந்திருப்பார்கள், தேர்தல் மேடையில் பிதற்றுவதற்கு. அவர்கள் தள்ளியிருப்பதே தமிழினத்துக்கு நன்மையளிக்கும். இந்தியாவும் இலங்கையும் பல ஒப்பந்தங்கள், உடன்படிக்கைகள் எழுதுகிறார்கள், நடைமுறைப்படுத்துகிறார்கள். ஆனால் முப்பத்தைந்து வருடங்களுக்கு முன் கைச்சாத்திட்ட ஒப்பந்தம் தொட்டுக்க ஊறுகாய்போல உள்ளது. இது இரண்டுதரப்பும் காட்டும் அலட்சியம். ஒருநாள் நிறைவேற்ற துடிப்பார்கள், அப்போ காலம் கடந்துவிடும். ஒப்பந்தமும் காலவரையறை முற்று ஆகி, நடைமுறைக்கு ஒவ்வாததும் ஆகிவிடும். நானும் இருக்கமாட்டேன், இதைப்பற்றி பேசுபவர்களும் இருக்க மாட்டார்கள் என நினைக்கிறன்.

  • கருத்துக்கள உறவுகள்

""இந்திய வெளிவிவகார அமைச்சர் ஒரு நாள் விஜயமாக வருகைத் தந்தமையினால், நேரமின்மை காரணமாக அரசத் தலைவர் உள்ளிட்ட சிலரை மாத்திரமே சந்தித்திருக்கலாம் என அவர் குறிப்பிட்டார். அதனாலேயே, தமிழ் கட்சிகளை சந்திக்காது உடனடியாக நாடு திரும்பியிருக்கலாம் எனவும் அவர் தெரிவித்தார்.""

 

அட ராமா,....

உந்த வடக்கன இன்னுமாடா நம்புறீங்க,., ? 

டேய் ...உந்த வடக்கன்ஸ் நிழல் கண்ட இடத்தில தின்று, தண்ணி காணுற இடத்தில பேள்கிற ஆட்களடா,....இவனுகளுக்கு எங்கேயடா நிரந்தர கொள்கையிருக்கு? 

போங்கடா போங்க ....போய் மீசையில் மண் ஒட்டியிருக்கா என்று  கண்ணாடியில ஒருக்கா வடிவாப் பாருங்கோ,...😏

Edited by Kapithan

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, Kapithan said:

""இந்திய வெளிவிவகார அமைச்சர் ஒரு நாள் விஜயமாக வருகைத் தந்தமையினால், நேரமின்மை காரணமாக அரசத் தலைவர் உள்ளிட்ட சிலரை மாத்திரமே சந்தித்திருக்கலாம் என அவர் குறிப்பிட்டார். அதனாலேயே, தமிழ் கட்சிகளை சந்திக்காது உடனடியாக நாடு திரும்பியிருக்கலாம் எனவும் அவர் தெரிவித்தார்.""

 

அட ராமா,....

உந்த வடக்கன இன்னுமாடா நம்புறீங்க,., ? 

டேய் ...உந்த வடக்கன்ஸ் நிழல் கண்ட இடத்தில தின்று, தண்ணி காணுற இடத்தில பேள்கிற ஆட்களடா,....இவனுகளுக்கு எங்கேயடா நிரந்தர கொள்கையிருக்கு? 

போங்கடா போங்க ....போய் மீசையில் மண் ஒட்டியிருக்கா என்று  கண்ணாடியில ஒருக்கா வடிவாப் பாருங்கோ,...😏

வடக்கன்சும் சீனாவும் தான் இப்பவும்நிறைய விசயம் செய்ய விடாமல் தடுக்குது (பார் பெர்மிட் விசயம் உட்பட)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் தரப்புகளை சந்திக்காமல் சென்ற ஜெய்சங்கர்

06 OCT, 2024 | 11:13 AM
image

(லியோ நிரோஷ தர்ஷன்)

உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு வெள்ளிக்கிழமை (4) இலங்கை வந்திருந்த இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், தமிழ் மற்றும் முஸ்லிம் தரப்புகளை சந்திக்காது நாடு திரும்பினார். 

ஜனாதிபதி, பிரதமர் மற்றும் வெளிவிவகார அமைச்சர் ஆகியோரை இராஜதந்திர மட்டத்தில் சந்தித்து இருதரப்பு கலந்துரையாடல்களை முன்னெடுத்திருந்த எஸ்.ஜெய்சங்கர், முன்னாள் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஆகியோரையும் சந்தித்திருந்தார்.

மேலும் பாத்ஃண்டர் அமைப்பின் மிலிந்த மொரகொட உள்ளிட்ட அந்த அமைப்பின் நிர்வாகிகளையும் சந்தித்திருந்தார். எனினும் தமிழ் தேசிய கூட்டமைப்பு, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் மற்றும் தமிழ் முற்போக்கு கூட்டணி உள்ளிட்ட முஸ்லிம் தரப்புகளை வழமையாகவே இலங்கை விஜயத்தின்போது இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் உள்ளிட்ட ஏனைய இந்திய பிரதிநிதிகள் சந்தித்து கலந்துரையாடுவது இயல்பானது. ஆனால் இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள ஆட்சி மாற்றத்தின் பின்னரான முக்கியமானதொரு தருணத்தில் கொழும்பு வந்த இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தமிழ் தரப்புகளை சந்திக்காது நாடு திரும்பியுள்ளார்.

இது குறித்து கூட்டமைப்பின் முக்கியஸ்தர் ஒருவர் குறிப்பிடுகையில், இத்தகைய இந்திய முக்கிய பிரதிநிதிகள் இலங்கைக்கு வரும் போது எம்முடனான சந்திப்புகள் திட்டமிடப்பட்டு எமக்கு அறிவிக்கப்படும். ஆனால் இம்முறை இடம்பெற்ற இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கரின் விஜயத்தில் எம்முடனான சந்திப்பு இடம்பெறவில்லை. இது ஏன் என்று எமக்கு தெரியாது என குறிப்பிட்டார்.

எனினும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க உள்ளிட்ட அரசாங்கத்தின் உயர் மட்டத்தினருடனான சந்திப்பின்போது இனப்பிரச்சினை சார்ந்த விவகாரங்கள் குறித்து பேசப்பட்டதாக இந்திய உயர்ஸ்தானிகராலயம் வெளியிட்டுள்ள  அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

இதேவேளை அரசியலமைப்பின் 13ஆவது திருத்தத்தினை முழுமையாகவும் வினைத்திறன் மிக்க வகையில் நடைமுறைப்படுத்தல் மற்றும் மாகாண சபைகளுக்கான தேர்தல்களை விரைவில் நடத்துவதன் அவசியம் உள்ளிட்ட விடயங்கள் குறித்து கொழும்பு சந்திப்புகளில் இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் வலியுறுத்தியதாக இந்திய உயர்ஸ்தானிகராலயம் குறிப்பிட்டுள்ளது.

ஆனால், 13ஆவது திருத்தத்தின் எதிர்காலம் அடுத்து வரக்கூடிய புதிய பாராளுமன்றத்தில் தீர்மானிக்கப்படும் என்று தெளிவாகவே ஜனாதிபதி அநுரகுமாரவின் அரசாங்கம் குறிப்பிட்டுள்ளது. 

இந்தியா வலியுறுத்துகின்ற இனப்பிரச்சினைக்கான தீர்வுத் திட்டங்கள் மற்றும் 13ஆவது திருத்தம் என்பன சர்வஜன வாக்கெடுப்புக்கு விடப்பட உள்ள புதிய அரசியலமைப்பு ஊடாகவே தீர்மானிக்கப்படவுள்ளதாக அமைச்சரவை பேச்சாளரும்  வெளிவிவகார அமைச்சருமான விஜித ஹேரத் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/195598

தமிழ் பொது வேட்பாளர் மூலம் அனுரவுக்கு விழக்கூடிய ரணிலுக்கு எதிரான தமிழர்களின் வாக்குகளை திசை திருப்பி அனுரவை தோற்கடிக்க எடுத்த முயற்சி வெற்றியளிக்கவில்லை என்பது தான் காரணம்.

இனி தமிழ் கட்சிகளை எவரும் பெரியளவுக்கு ஏறெடுத்து பார்க்கப் போவதில்லை. அதுவும் தமிழர்களின் சனத்தொகை மேலும் மேலும் குறைவடைந்து வாக்கு பலமும் நலிந்து போய்க் கொண்டு இருக்கும் சூழ்நிலையில் தமிழ் மக்களால் ஒரு பயனும் இல்லை என்பதால் யாரும் மதிப்பு கொடுக்க வேண்டிய அவசியமும் இல்லை.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.