Jump to content

Recommended Posts

பதியப்பட்டது

விவசாயத்தை விட்டுச்சென்ற ஒரு இலட்சம் பேர்!

விவசாயத்தை விட்டுச்சென்ற ஒரு இலட்சம் பேர்!

இலங்கையில் விவசாயத் துறையில் ஒரு வருடத்திற்குள் 100,000 இற்கும் அதிகமானோர் தமது வேலைகளை விட்டுச் சென்றுள்ளதாக பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பொருளாதாரம் மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களத்தின் பேராசிரியர் வசந்த அத்துகோரல தெரிவித்துள்ளார்.

அறிக்கை ஒன்றை வௌியிட்டு மக்கள் தொகை மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் இதனை உறுதிப்படுத்தி உள்ளது.

அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், இந்த நாட்டில் விவசாய துறையில் நிலவும் பல்வேறு பிரச்சினைகளால் விவசாய வேலைகளை விட்டு மக்கள் வெளியேறுவதுடன் நாட்டிற்கு தேவையான விவசாய பொருட்களின் உற்பத்தியும் குறைவடைந்து வருவதாக சுட்டிக்காட்டினார்.

இந்நிலை நீடித்தால் நாட்டின் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

https://tamil.adaderana.lk/news.php?nid=194041

  • கருத்துக்கள உறவுகள்
Posted

தங்கடை தங்கடை அரசுகள் சிங்கள பெரும்பான்மை சமூக  மக்களிடம் நல்லபெயர் எடுக்கனும்  என்பதற்க்காக   தாராள இறக்குமதியை அனுமதித்தது விலைகளை குறைத்தால் யார் நிண்டு பிடிப்பார்கள் ? இப்பவும் தேங்காய் எண்ணையை கூட இறக்குமதி முட்டை இறக்குமதி தொடர்கிறதுதானே .

கோத்தபாயவின் இயற்க்கை விவசாய குளறுபடி அது முழுக்க முழுக்க தோல்வியடைந்த திட்டம் அதனால் மேலும் பலர் விவசாயத்தை கைவிட்டு போயிருப்பார்கள் .

monocrotophos, Endosulfan 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

நல்ல விடயம்  👍

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இது மிகவும் ஆபாத்தானது. ஒருகாலத்தில் சிறிமாவோ பண்டாரநாயக்கா காலத்தில் அரிசி உற்பத்தியில் தன்னிறைவு கண் நாடு. சகல இயற்கைவளங்களையும் நிறைந்த நாடு. விவசாயத்திற்குரிய காலநிலையைக் கொண்ட நாடு. விவசாயத்தைக்கைவிட்டால் அது பொருளாதார ரீதியாக பெரும் அழிவைச்சந்திக்கப் போகின்றது.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.