Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

வளமான நாட்டை எப்படி மயானப்பூமியாக போர் மாற்றி விடும் என்பதற்கு எடுத்துக் காட்டாய் மாறி உள்ளது காசா. கடந்த ஆண்டு அக்டோபர் 7 ஆம் தேதி தங்கள் நாட்டுக்குள் புகுந்து தாக்குல் நடத்திய ஹமாஸூக்கு தனது வான் படை மூலம் பதிலடி கொடுக்க ஆரம்பித்த இஸ்ரேல், காசாவில் உள்ள கட்டிடங்களை எல்லாம் தரை மட்டமாக்கியது.

கடந்த 16 ஆண்டுகால ஹமாஸ் ஆட்சியில் பொருளாதார மற்றும் உள்கட்டமைப்பில் மெல்ல மெல்ல ஏற்றம் கண்டு வந்த காசாவின் பெரும்பகுதியை, மீண்டு எழுவெ முடியாத வகையில் அழித்துள்ளது இஸ்ரேல் ராணுவம்.

2021 ஆம் ஆண்டு மார்ச் மாதம் படம்பிடிக்கப்பட்ட வீடியோ ஒன்றில் பரபரப்பு மிகுந்த காசாவின் உமர் அல்-முக்தார் தெருவில் இருபுறமும் சாலைகளுக்கு நடுவே பசுமை நிறைந்த பூங்காக்களும் அலங்கார அமைப்புகளும் காசாவிற்கு அழகூட்டியுருந்தன. ஆனால் அவை தற்போது மணல் மேடுகளாக காட்சியளிக்கின்றன.

அதே பகுதியில் மற்றொரு இடத்தில் கடைகள் நிறைந்த பகுதியில் வியாபாரம் களைகட்டி கொண்டிருக்க, நெரிசல் ஏற்படும் அளவிற்கு வாகன போக்குவரத்துடன் காணப்பட்ட சாலைகள் தற்போது இருந்த இடம் தெரியாமல் உருகுலைந்து போயி உள்ளன.

இதே போல் 2022 ஆம் ஆண்டு ஜூன் மாதம் எடுக்கப்பட்ட வீடியோவில் மத்திய தரைக்கடலையொட்டிய வானலாவிய கட்டடங்கள், காண்போரை பிரம்மிப்பில் ஆழ்த்தியிருந்தன. ஆனால் அவை தற்போது, கட்டட குவியல்களாக உருமாறி உள்ளன.

குடும்பம் குடும்பமாய் மகிழ்ச்சியோடு வாழ்ந்த அடுக்குமாடி குடியிருப்புகள் அனைத்தும், போரின் கோரமுகத்துக்கு சாட்சியாய் மாறி உள்ளன. ஹமாஸ் அமைப்பினர் பதுங்கி உள்ளதாக இஸ்ரேலின் 2 முறை கடுமையான தாக்குதலுக்கு உள்ளான ஷிஃபா மருத்துவமனையை சுற்றி உள்ள பகுதிகள், கண்ணுக்கு எட்டிய தூரம் வரை கட்டிடங்கள் இன்றி வெறும் இரும்பு கூடுகளாக காட்சியளிக்கின்றன. ஷாட்டி அகதிகள் முகாம் உள்ளிட்டவை இஸ்ரேலின் முக்கிய குறிகளாக இருந்த நிலையில், அப்பகுதிகள் தற்போது ஆள் நடமாட்டம் இன்றி திகிலூட்டி வருகின்றன.

தாக்குதலால் காசாவின் கிழக்கு மற்றும் தெற்கு பகுதியில் இருந்த சுமார் 23 லட்சம் மக்களில் 90 சதவீதம் பேர் இடம்பெயர்ந்துவிட்ட நிலையில், அப்பகுதிகள் அனைத்தும் கைவிடப்பட்ட பகுதிகளாக காட்சியளிக்கின்றன. வாகனங்கள் பாய்ந்தோடிய தெற்கு மற்றும் வடக்கு காசாவை இணைக்கும் நெடுஞ்சாலை, இருந்த இடம் தெரியாமல் அழிவுக்கு உள்ளாகி உள்ளது.

https://thinakkural.lk/article/310370

  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 hours ago, ஏராளன் said:

கடந்த 16 ஆண்டுகால ஹமாஸ் ஆட்சியில் பொருளாதார மற்றும் உள்கட்டமைப்பில் மெல்ல மெல்ல ஏற்றம் கண்டு வந்த காசாவின் பெரும்பகுதியை, மீண்டு எழுவெ முடியாத வகையில் அழித்துள்ளது இஸ்ரேல் ராணுவம்.

ஈரானின் புரொக்சியாக செயல் பட்ட கமாஸ் இயக்கம் அபிவிருத்தி செய்ததாம் ...ஈரானிடமிருந்து வரும் பணத்தில் நிலக்கீழ் சுரங்கங்களை கட்டி பயங்கரவாத செயல்களில் இடுபட்டவையள் அபிவிருத்தியை பற்றி பேசுகின்றனர் ...

இஸ்லாமிய பத்திரிகையாளர் கமாஸுக்காக  கட்டுரை எழுதியுள்ளார் ...

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஹமாஸ் தாக்குதலின் ஓராண்டு நிறைவு: காஸா, லெபனானில் இஸ்ரேல் தாக்குதல் தீவிரம் - இரானுக்கு பதிலடி எப்போது?

இஸ்ரேல் - இரான்

பட மூலாதாரம்,EPA

படக்குறிப்பு, லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் இஸ்ரேலின் விமானப்படை தாக்குதலுக்கு இலக்கான இடம்.
ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

இஸ்ரேலில் ஹமாஸ் திடீர் தாக்குதல் நடத்தியதன் ஓராண்டு நிறைவு நாளில், காஸா, லெபனான் ஆகிய இரு பிரதேசங்களிலும் இஸ்ரேல் தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது. அதேநேரத்தில், இஸ்ரேலை நோக்கி ஹமாஸ், ஹெஸ்பொலா அமைப்புகள் ராக்கெட்டுகளை வீசி தாக்குதல் நடத்தியுள்ளன.

அதேவேளையில், ஹமாஸிடம் இன்னும் பணயக்கைதிகளாக சிக்கியுள்ளவர்களை மீட்பதற்கான ஒப்ந்தத்தை இறுதி செய்யுமாறு இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவுக்கு உள்நாட்டில் நெருக்கடி அதிகரித்துள்ளது. பணயக்கைதிகளின் உறவினர்கள் பிரதமர் இல்லத்திற்கு வெளியே திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கடந்த ஆண்டு ஹமாஸிடம் இருந்து எதிர்பாராத தாக்குதலை எதிர்கொண்ட இஸ்ரேல், இந்தாண்டு அதேநாளில் என்ன செய்கிறது? மத்திய கிழக்கில் என்ன நடக்கிறது?

காஸா, லெபனானில் இஸ்ரேல் தாக்குதல் தீவிரம்

லெபனானின் சில பகுதிகளில் இன்று(அக்டோபர் 7) காலை பல வான்வழித் தாக்குதல்கள் நடந்துள்ளதாக அந்நாட்டு அரசு ஊடகம் கூறியுள்ளது.

லெபனானில் கிழக்கே உள்ள க்சர்னபாவின் புறநகர்ப் பகுதியில் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், தெற்கு பகுதியில் உள்ள ஜ்ராரியே மற்றும் பிரைக்கா ஆகிய நகரங்களுக்கு இடைப்பட்ட பகுதியில் விடியற்காலையில் வான்வழி தாக்குதல் ஒன்று நடந்துள்ளதாகவும் அந்த செய்திக்குறிப்பு கூறுகின்றது.

காஸா முழுவதும் ஹமாஸின் ஏவுகணை சேமிப்புக் கிடங்குகள் மற்றும் நிலத்தடி வழிகளை இஸ்ரேல் இராணுவம் தாக்கியது. அதே நேரத்தில் இஸ்ரேல் படையினருக்கு அச்சுறுத்தலாக இருந்த காஸா முனையின் மையத்தில் உள்ள இலக்குகள் மீதும் இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்களை நடத்தியது.

காஸா முழுவதிலும் உள்ள ஹமாஸின் இலக்குகளை குறிவைத்து இஸ்ரேல் ராணுவம் தாக்கி வருவதாக அதன் செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார்.

இஸ்ரேல் - இரான்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, பெய்ரூட்டின் தெற்கு புறநகர்ப் பகுதியில் இஸ்ரேல் வான்வழி தாக்குதல் நடத்தியது.

ஹமாஸ், ஹெஸ்பொலா என்ன செய்கின்றன?

காஸாவின் கான் யூனிஸ் பகுதியில் இருந்து 5 எறிகணைகள் டெல் அவிவ் நகரை நோக்கி வீசப்பட்டிருப்பதாக இஸ்ரேலிய ராணுவம் தெரிவித்துள்ளது. இந்த தாக்குதலை தாங்களே நடத்தியதாக ஹமாஸ் உறுதிப்படுத்தியுள்ளது. டெல் அவிவ் நகரின் கிழக்கு எல்லையில் உள்ள அயலோன் நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. கார்கள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன. தலைக்கு மேலே வெடிப்புகளை கேட்க முடிந்ததாக பிபிசி குழுவினர் தெரிவித்தனர்.

ஹெஸ்பொலாவோ, இஸ்ரேலிய ராணுவ வீரர்களை ராக்கெட்டுகள் மூலம் தாக்குவதாக கூறியுள்ளது. தெற்கு லெபனானில் மரௌன் அல்-ராஸ் பூங்காவில் குழுமியிருந்த இஸ்ரேலிய ராணுவத்தினர் குறிவைத்து ராக்கெட்டுகளை ஏவியதாக அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அல் அல்-ஆலம் என்ற இடத்தில் இஸ்ரேல் ராணுவ வீரர்களை அதுபோல் குறிவைத்ததாக மற்றொரு அறிக்கையில் ஹெஸ்பொலா கூறியுள்ளது. வடக்கு இஸ்ரேலில் உள்ள க்ஃபார் வ்ராடிம் நகரை நோக்கி ராக்கெட்டுகளை செலுத்தியதாகவும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

இஸ்ரேல் - இரான்
படக்குறிப்பு, டெல் அவிவ் நகரின் கிழக்கு எல்லையில் உள்ள அயலோன் நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

லெபனானுக்கு கூடுதல் படைப்பிரிவை அனுப்பிய இஸ்ரேல்

லெபனானில் தரைவழி தாக்குதலைத் தீவிரப்படுத்தும் நோக்கில் கூடுதல் படைப் பிரிவை இஸ்ரேல் அனுப்பியுள்ளது. தெற்கு லெபனானில் தாக்குதல் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக புதிதாக ஒரு படைப் பிரிவு அனுப்பப்பட்டிருப்பதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. 91வது படைப் பிரிவு கடந்த ஓராண்டுக்கும் மேலாக காஸா மற்றும் வடக்கு இஸ்ரேலில் இயங்கி வருவதாக இஸ்ரேல் ராணுவம் கூறுகிறது.

இஸ்ரேல் தற்போது அனுப்பியிருப்பது, லெபனான் மீதான தரை வழி தாக்குதலுக்காக அனுப்பப்படும் மூன்றாவது படைப் பிரிவு என்று ஏ.எஃப்.பி. செய்தி முகமை கூறுகிறது.

இஸ்ரேலை தடுக்க முடியும் என்று ஹெஸ்பொலா நம்பிக்கை

இஸ்ரேல் ஆக்கிரமிப்பை தங்களால் தடுக்க முடியும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ள ஹெஸ்பொலா, தொடர்ந்து போராட உறுதி பூண்டுள்ளது. லெபனானை சேர்ந்த ஆயுதக் குழுவான ஹெஸ்பொலா, காஸாவில் செயல்படும் ஹமாஸுக்கு ஆதரவு அளிக்கிறது. இரண்டு குழுக்களுமே இரானிடம் இருந்து நிதி மற்றும் ஆதரவை பெற்றுள்ளன.

அக்டோபர் 7-ஆம் தேதி ஹமாஸின் தாக்குதலை “துணிச்சலானது” என்று ஹெஸ்பொலா பாராட்டுகிறது. இந்த தாக்குதல் காரணமாக மத்திய கிழக்கு பிராந்தியத்தில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த விளைவுகள் உண்டாகும் என்றும் அது கூறுகிறது.

"இஸ்ரேலுக்கு அங்கு இடமே இல்லை, எவ்வளவு காலம் ஆனாலும் சரி, இஸ்ரேல் அகற்றப்பட வேண்டும்” என்று கூறுகிறது ஹெஸ்பொலா.

அக்டோபர் 7-ஆம் தேதி ஹமாஸ் தாக்குதலுக்கு பிறகு, காஸா மற்றும் லெபனானில் தொடரும் இஸ்ரேலின் பதில் நடவடிக்கைகளுக்கு அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளை ஹெஸ்பொலா குற்றம் சொல்கிறது. அவர்கள் தான் இதற்கு “முழு பொறுப்பு” என்கிறது அந்த அமைப்பு.

இஸ்ரேல் - இரான்

பட மூலாதாரம்,PA MEDIA

படக்குறிப்பு, "நெருப்பு வளையத்தால் சூழப்பட்டுள்ளோம்" என்று பிரிட்டனுக்கான இஸ்ரேலிய தூதர் டிசிபி ஹோடோவெலி கூறுகிறார்.

"நெருப்பு வளையத்தால் சூழப்பட்டுள்ளோம்"

அக்டோபர் 7 தாக்குதலுக்குப் பிறகு இஸ்ரேல் 'வேறு நிலையில்' இருக்கிறது என்று பிரிட்டனுக்கான இஸ்ரேலிய தூதர் டிசிபி ஹோடோவெலி கூறுகிறார்.

பிபிசியின் ரேடியோ 4-இன் டுடே நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர், இந்த தாக்குதல்களை 'ஒரு முக்கிய திருப்பு முனை' என்று குறிப்பிட்டார். பல்வேறு மக்கள் இந்த தாக்குதலினால் ஏற்பட்ட அதிர்ச்சியில் இருந்து மீண்டு வர போராடுகின்றனர் என்றும் அவர் கூறினார்.

"இரானால் உருவாக்கப்பட்ட நெருப்பு வளையத்தால் நாங்கள் சூழப்பட்டு இருக்கிறோம். ஹெஸ்பொலா, ஹமாஸ் போன்ற இரானின் பினாமிகளால் பல திசைகளில் இருந்தும் தாக்குதல்களை எதிர்கொள்ள வேண்டிய நிலையில் இருக்கிறோம்." என்று அவர் கூறினார்.

இஸ்ரேல் பிரதமர் இல்லத்திற்கு வெளியே போராட்டம்

அக்டோபர் 7-ஆம் தேதி காலையில் ஜெருசலேம் நகரில் உள்ள பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் இல்லத்திற்கு வெளியே போராட்டம் நடைபெற்றது. ஹமாஸால் பணயக் கைதிளாக பிடித்துச் செல்லப்பட்டவர்களின் உறவினர்களும், நண்பர்களும் அங்கே திரண்டிருந்தனர். பணயக்கைதிகளை மீட்பதற்கான ஒப்பந்தத்தை விரைந்து எட்ட வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர்.

இஸ்ரேல் - இரான்

பட மூலாதாரம்,REUTERS

படக்குறிப்பு, ஜெருசலேம் நகரில் உள்ள பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் இல்லத்திற்கு வெளியே போராட்டம் நடைபெற்றது.

இரானுக்கு இஸ்ரேல் எப்போது, எப்படி பதிலடி கொடுக்கும்?

(பிபிசி பாதுகாப்புத் துறை செய்தியாளர் ஃபிராங்க் கார்ட்னர் அளித்த தகவல்கள் கீழே தொகுக்கப்பட்டுள்ளன)

கடந்த சில நாட்களாகவே மத்திய கிழக்கின் பெரும்பகுதி அச்சத்திலேயே இருந்து வருகிறது. இஸ்ரேல் மீது பாலிஸ்டிக் ஏவுகணை தாக்குதல்களை இரான் நடத்தி ஒரு வாரம் கடந்துள்ளது. ஹெஸ்பொலா மற்றும் ஹமாஸ் தலைவர்களை இஸ்ரேல் கொன்றதற்கான பழிவாங்கும் நடவடிக்கை இது என்று இரான் கூறியது. இந்த தாக்குதலுக்கு இரான் ‘பெரும் விலை’ கொடுக்க வேண்டியிருக்கும் என்று இஸ்ரேல் எச்சரித்தது.

இஸ்ரேலின் பதிலடி தாமதமாவதற்கு அங்கு நடைபெறும் பேச்சுவார்த்தைகளே காரணமாகும். இஸ்ரேல் ராணுவம் மற்றும் அதன் அரசியல் தளத்திலும், இஸ்ரேலின் முக்கிய ஆதரவாளரான அமெரிக்காவுடனும் பேச்சுவார்த்தைகள் நடைபெறுகின்றன.

இரானில் உள்ள எண்ணெய் கிணறுகள், புரட்சிக்கர காவல் படையின் நிலைகள், பாலிஸ்டிக் ஏவுகணை தொழிற்சாலைகள், அணு ஆராய்ச்சிக் கூடங்கள் என பலவும் இஸ்ரேலின் இலக்குகளாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், இந்த பேச்சுவார்த்தைகள் இலக்குகள் குறித்தவை மட்டுமல்ல, இந்த தாக்குதலின் விளைவுகள் என்னவாக இருக்கும், இரானின் பதிலடி என்னவாக இருக்கும் என்பது குறித்தும் ஆலோசிக்கப்படுகிறது.

ஒரு முழு வீச்சிலான போரில் அமெரிக்கப் படைகள் ஈடுபடுவதை அதுவும் அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு ஒரு மாதம் முன்பு ஈடுபடுவதில் வெள்ளை மாளிகைக்கு சற்றும் விருப்பமில்லை. கச்சா எண்ணெய் விலை உயர்வதையும் அமெரிக்கா விரும்பவில்லை. அது அமெரிக்க வாக்காளர்களிடையே எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்திவிடக் கூடும் என்று வெள்ளை மாளிகை கருதுகிறது.

கடந்த வெள்ளிக்கிழமை யூத புத்தாண்டு விடுமுறை முடிந்த பிறகு இஸ்ரேல் தனது பதிலடியை கொடுக்கும் என்று பலர் எதிர்பார்த்தனர். மேலும் சிலர், ஹமாஸ் தாக்குதல் நடத்தி அக்டோபர் 7-ஆம் தேதியுடன் ஓராண்டு நிறைவடைந்துள்ளதால் திங்கள்கிழமை இஸ்ரேல் தனது தாக்குதலை நடத்தலாம் என்று எதிர்பார்த்தனர். தாமதமானாலும் கூட, தாக்குதல் நடத்தப்படும் என்பது மட்டும் உறுதி என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.