Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
08 OCT, 2024 | 11:08 AM
image

இவ்வருடத்தின் ஆகஸ்ட் மாதம் 1 ஆம் திகதியிலிருந்து செப்டெம்பர் மாதம் 30 ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் இணையவழி குற்றங்கள் தொடர்பில் 9 ஆயிரம் முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக இலங்கை கணினி அவசர தயார்நிலை குழு தெரிவித்துள்ளது.

இலங்கை கணினி அவசர தயார்நிலைக் குழுவின் பொறியியலாளர் சாருக தமுனுபொல இது தொடர்பில் தெரிவிக்கையில், 

80 சதவீதமான முறைப்பாடுகள் சமூக ஊடகங்களுடன் தொடர்புடையவவை ஆகும். அதன்படி, இணையவழி மோசடி தொடர்பில் 1,400 முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், 85 முறைப்பாடுகள் சிறுவர்கள் மீதான இணைய அச்சுறுத்தல்களுடன் தொடர்புடையவை என்பதுடன், 40 முறைப்பாடுகள் பாலியல் துஷ்பிரயோகங்களுடன் தொடர்புடையவை ஆகும்.

இணையவழி ஊடாக பாதிக்கப்படக்கூடிய மக்களைப் பாதுகாப்பதற்கான  நடவடிக்கைகள் மற்றும் விழிப்புணர்வுகளை அதிகரிக்க வேண்டடியதன் அவசியத்தை  இந்த அறிக்கை  சுட்டிக்காட்டுவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/195737

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் ஒன்லைன் வங்கி பயனாளர்களுக்கு அவசர எச்சரிக்கை

இலங்கையில் ஒன்லைன் ஊடாக மேற்கொள்ளப்படும் நிதி மோசடிகள் தொடர்பான முறைப்பாடுகள் அதிகரித்து வருவதாக கணினி அவசர பிரிவு தெரிவித்துள்ளது.

இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் நிதி மோசடிகள் தொடர்பில் 340 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக கணினி அவசர பிரிவின் சிரேஷ்ட தகவல் பாதுகாப்பு பொறியியலாளர் சாருக தமுனுபொல தெரிவித்துள்ளார்.

கடந்த செப்டம்பர் மாதம் வரை, இணையம் தொடர்பாக 7,210 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன. இவற்றில் பெரும்பாலானவை சமூக ஊடகங்கள் மூலம் இடம்பெற்றவையாகும்.

ஒன்லைன் மோசடிகளால் பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து பெறப்பட்ட முறைப்பாடுகளில் 20 சதவீதம் ஒன்லைன் சம்பவங்களுடன் நேரடியாக தொடர்புடையவையாகும்.

இவற்றில், ஒன்லைன் வங்கியில் ஈடுபடும் பயனர்களைக் குறிவைத்து இணைய மோசடிகளில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு உள்ளது.

பெரும்பாலான நேரங்களில், ஒன்லைன் வங்கி பயனர்கள் OTP எண்ணின் பாதுகாப்பில் அதிக கவனம் செலுத்துவதில்லை, இது வங்கிக் கணக்கை அணுகுவதற்கு பயன்படுத்தப்படும் கடவுச்சொல் மற்றும் தற்காலிக கடவுச்சொல் ஆகும்.

கடந்த காலங்களில் ஒன்லைன் வங்கிச் சேவை தொடர்பான மோசடிகள் தொடர்பான 340 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன.

வங்கிகள் தொடர்பான இணையதளத்தை சரியாக அடையாளம் காணாத பலர் இவ்வாறான மோசடியில் சிக்கியுள்ளதாக கணினி அவசர பிரிவின் பாதுகாப்பு பொறியியலாளர் தெரிவித்துள்ளார்.

https://thinakkural.lk/article/310455

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பெருந்தொகை இலத்திரனியல் சாதனங்களுடன் சிக்கிய சீன பிரஜைகள்

மேற்கு புலனாய்வு பிரிவு அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் பாணந்துறை, கோரக்கன பிரதேசத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்த 20 சீன பிரஜைகள் பாணந்துறை வடக்கு காவல்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களிடமிருந்து 5 மடிக்கணனிகள், 437 கையடக்கத் தொலைபேசிகள், தராசுகள், 332 USB கேபிள்கள், 133 கையடக்க தொலைபேசி சார்ஜர்கள், 21 USB வயர் கோட், 17 ரவுட்டர்கள், 2 ஐபோன்கள் மற்றும் பல சாதனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

ஹோட்டலுக்கு இருபது இலட்சம் மாத வாடகை

இவர்கள் தங்கியிருந்த விடுதியில் இருந்து உணவு எடுத்து வந்ததாகவும், இருபது இலட்சம் மாத வாடகை அடிப்படையில் அந்த விடுதியில் தங்கியிருந்ததாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.

பெருந்தொகை இலத்திரனியல் சாதனங்களுடன் சிக்கிய சீன பிரஜைகள் | Chinese Nationals Arrested With 437 Laptops

நீதிமன்றில் முன்னிலை

இவர்கள் அனைவரும் இன்று (09) பாணந்துறை நீதவான் முன்னிலையில் முற்படுத்தப்படவுள்ளனர். நிதிக்குற்றத்தை அவர்கள் செய்துள்ளார்களா என்பது தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.     

பெருந்தொகை இலத்திரனியல் சாதனங்களுடன் சிக்கிய சீன பிரஜைகள் | Chinese Nationals Arrested With 437 Laptops

https://ibctamil.com/article/chinese-nationals-arrested-with-437-laptops-1728454387?itm_source=parsely-api

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இணையவழி மோசடியில் ஈடுபட்ட 120 சீனப் பிரஜைகள் கைது

image

கண்டி, குண்டசாலை பிரதேசத்தில் உள்ள சொகுசு வீடு ஒன்றில் தங்கியிருந்து இணையவழி மோசடியில் ஈடுபட்டதாகக் கூறப்படும் 120 சீனப் பிரஜைகள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த சொகுசு வீட்டில் சுமார் 47 அறைகள் காணப்படுவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட சீனப் பிரஜைகளிடமிருந்து 15 கணினிகள் மற்றும் 300 கையடக்கத் தொலைபேசிகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

நாடளாவிய ரீதியில் கடந்த ஏழு நாட்களில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் இணையவழி மோசடியில் ஈடுபட்டதாகக் கூறப்படும் 200 வெளிநாட்டுப் பிரஜைகள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அதன்படி, ஹங்வெல்ல பிரதேசத்தில் கடந்த 6 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் 30 சீனப் பிரஜைகளும் 4 இந்தியப் பிரஜைகளும் 6 தாய்லாந்து பிரஜைகளும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நாவல பிரதேசத்தில் கடந்த 7 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில்  19 சீனப் பிரஜைகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பாணந்துறை பிரதேசத்தில் கடந்த 10 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் 20 சீனப் பிரஜைகள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

https://www.virakesari.lk/article/196108

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கண்டியில் நூற்றுக்கும் மேற்பட்ட சீனர்கள் கைது!

கண்டியில் உணவகம் ஒன்றில் தங்கியிருந்த நூற்றுக்கும் அதிகமான சீனப் பிரஜைகள் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பிரமிட் நிதி மோசடி

பிரமிட் நிதி மோசடி செயற்பாட்டில் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் இவர்கள் இன்று கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவி்த்துள்ளனர்.

கண்டியில் நூற்றுக்கும் மேற்பட்ட சீனர்கள் கைது! | Hundreds Chinese Arrested Kandy For Pyramid Scheme

கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட மடிக் கணனிகள் மற்றும் நூறு ஐ போன் என்பனவும் கைப்பற்றப்பட்டுள்ளன.

மேலதிக விசாரணை

பொலிஸாருக்கு கிடைத்த ரகசியத் தகவலின் பேரில் குறித்த சீனப் பிரஜைகளை சோதனையிட்ட போது, கண்டியில் தங்கியிருப்பதற்கான நியாயமான காரணம் எதனையும் அவர்கள் முன்வைக்கவில்லை என்று கூறப்படுகின்றது.

கண்டியில் நூற்றுக்கும் மேற்பட்ட சீனர்கள் கைது! | Hundreds Chinese Arrested Kandy For Pyramid Scheme

இதனையடுத்து பிரமிட் நிதி மோசடி செயற்பாட்டில் அவர்களுக்குத் தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் சீனப் பிரஜைகள் நூறு பேரும் கைது செய்யப்பட்டு, கண்டி பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கண்டி பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

https://tamilwin.com/article/hundreds-chinese-arrested-kandy-for-pyramid-scheme-1728735522

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இணையவழி மோசடியில் ஈடுபட்ட மேலும் 31 சீனப் பிரஜைகள் கைது

image

இரு வெவ்வேறு பிரதேசங்களில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (13) மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் இணையவழி மோசடியில் ஈடுபட்டதாக கூறப்படும் 31 சீனப் பிரஜைகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அதன்படி, கண்டி, அணிவத்த பிரதேசத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றில் சந்தேகத்திற்கிடமான முறையில் தங்கியிருந்த 16 சீனப் பிரஜைகள்  கண்டி பொலிஸாரால் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதேவேளை, வெலிக்கடை, இராஜகிரிய பிரதேசத்தில் உள்ள தொடர்மாடி குடியிருப்பொன்றில் சந்தேகத்திற்கிடமான முறையில் தங்கியிருந்த 15 சீனப் பிரஜைகள் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நாடளாவிய ரீதியில் இம்மாதத்தின் இதுவரையான காலப்பகுதிக்குள் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில், 

  • ஹங்வெல்ல பிரதேசத்தில் கடந்த 6 ஆம் திகதி 30 சீனப் பிரஜைகளும் 4 இந்தியப் பிரஜைகளும் 6 தாய்லாந்து பிரஜைகளும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
  • நாவல பிரதேசத்தில் கடந்த 7 ஆம் திகதி 19 சீனப் பிரஜைகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
  • பாணந்துறை பிரதேசத்தில் கடந்த 10 ஆம் திகதி 20 சீனப் பிரஜைகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
  • கண்டி, குண்டசாலை பிரதேசத்தில் கடந்த 12 ஆம் திகதி 120 சீனப் பிரஜைகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

https://www.virakesari.lk/article/196233

  • கருத்துக்கள உறவுகள்

images-1-3.jpg?resize=300,168&ssl=1

இணையவழி நிதி மோசடி-சீனத் தூதரகம் விசேட அறிக்கை!

இணையவழி நிதி மோசடி தொடர்பாக அண்மையில் கைது செய்யப்பட்ட சீனப் பிரஜைகள் குறித்து கொழும்பிலுள்ள சீனத் தூதரகம் விசேட அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

அதன்படி இணையவழி நிதி மோசடி தொடர்பாக அண்மையில் கைது செய்யப்பட்ட சீனப் பிரஜைகளின் உரிமைகள் மற்றும் நலன்கள் பாதுகாக்கப்படுவதை உறுதி செய்வதுடன், இலங்கை சட்ட விதிமுறைகளுக்கு இணங்க அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கு தொடர்ந்தும் இலங்கைக்கு ஆதரவளிப்பதாக சீனா தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

மேலும், இந்த விடயம் தொடர்பாக சீனா உன்னிப்பாக அவதானித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்தோடு, இந்த சம்பவம் இரு நாட்டு மக்களின் சொத்துக்களுக்கு அச்சுறுத்தலாக இருப்பது மட்டுமல்லாமல், சீனாவின் நற்பெயரை கடுமையாக பாதிப்பதாகவும், இரு நாடுகளுக்கிடையேயான பாரம்பரிய நட்புறவை பாதிக்கும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளது.

சந்தேக நபர்களை சட்டப்படி அவர்களின் நியாயமான உரிமைகள் மற்றும் நலன்களைப் பாதுகாக்கும் வகையில், நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் சீனத் தூதரகம் கோரிக்கை விடுத்துள்ளது.

https://athavannews.com/2024/1404183

  • கருத்துக்கள உறவுகள்

இணையத்தில் நிதி மோசடி; மேலும் பல வெளிநாட்டவர்கள் கைது!

இணையத்தில் நிதி மோசடி; மேலும் பல வெளிநாட்டவர்கள் கைது!

இணையத்தில் நிதி மோசடி தொடர்பில் மேலும் 10 வெளிநாட்டவர்கள் நேற்றிரவு (15) கைது செய்யப்பட்டுள்ளனர்.

புத்தளம், இரணைவில பகுதியில் அமைந்துள்ள ஹோட்டல் ஒன்றில் இவர்கள் தங்கியிருந்த வேளையில் குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளுக்கு கிடைத்த தகவல்களுக்கு அமைய இந்த கைது இடம்பெற்றுள்ளது.

04 மலேசிய ஆண்களும், 03 எத்தியோப்பிய ஆண்களும் ஒரு பெண்ணும், ஒரு கென்யா பெண்ணும், ஒரு சீனா ஆணுமே இவ்வாறு கைதானவர்கள் ஆவர்.

இவர்களிடமிருந்து 20 கணனிகள், 03 ரவுட்டர்கள் மற்றும் 282 கையடக்கத் தொலைபேசிகள் பொலிஸாரால் இதன்போது கைப்பற்றப்பட்டுள்ளன.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை புத்தளம் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.

https://athavannews.com/2024/1404290

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இணையவழி மோசடிகள், போலி முகநூல் கணக்குகள் தொடர்பில் 8 ஆயிரம் முறைப்பாடுகள் பதிவு

image

இவ்வருடத்தின் கடந்த 9 மாதங்களில் இணையவழி மோசடிகள் மற்றும் போலி முகநூல் கணக்குகள் தொடர்பில் 8 ஆயிரம் முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக இலங்கை கணினி அவசர தயார்நிலை குழு (SLCERT) தெரிவித்துள்ளது.

இலங்கை கணினி அவசர தயார்நிலை குழுவின் பொறியியலாளர் சாருக தமுனுபொல இது தொடர்பில் தெரிவிக்கையில், 

சமூக ஊடகங்களில் உள்ள போலிக் கணக்குகள் மூலம் அதிகளவான  இணையவழி மோசடிகள் இடம்பெறுகின்றன.

இணையவழி மோசடிகள் தொடர்பில் கிடைக்கப் பெற்ற 8 ஆயிரம் முறைப்பாடுகளில் 200 முறைப்பாடுகள் ஒ.டி.பி. இலக்கங்களுடன் தொடர்புடையவை ஆகும்.

தங்களது ஒ.டி.பி. இலக்கங்களை பல்வேறு நபர்களுக்குப் பகிர்வதாலும் அதிகளவான இணையவழி மோசடிகள் இடம்பெறுகின்றன.

இதனால், பொதுமக்கள் தங்களது ஒ.டி.பி. இலக்கங்களை எந்த சந்தர்ப்பத்திலும் வேறு நபர்களுக்குப் பகிர வேண்டாம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/196775

Edited by ஏராளன்
wrong link changed

  • கருத்துக்கள உறவுகள்

ஏராளன் மேலே உள்ள நிகழ்ச்சியைப் பார்த்த பின் இதே மாதிரியே இலங்கையிலும் பலரின் பணத்தை ஆட்டையைப் போடுகிறார்களோ என்று எண்ணத் தோன்றுகிறது.

உங்களால் முடிந்தால் இந்த நிகழ்ச்சியை ஒரு தடவை பாருங்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இணையவழி மோசடி; சீனப் பிரஜைகள் மூவர் கைது!

image

விடுதியொன்றில் தங்கியிருந்து இணையவழி மோசடியில் ஈடுபட்டதாக கூறப்படும்  சீனப் பிரஜைகள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

காலி  பொலிஸ்  அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது  நேற்று வியாழக்கிழமை (24)  காலி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பொபே வீதி, கிந்தோட்ட பகுதியில்  வைத்து சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 33 மற்றும் 38 வயதுடையவர்களாவார்.

05 கையடக்கத் தொலைபேசிகள், உரிமையாளர் இல்லாத வெளிநாட்டு கடவுச்சீட்டு மற்றும் 04 வங்கி அட்டைகள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

குறித்த சம்பவம் தொடர்பில் காலி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.

https://www.virakesari.lk/article/197050

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கோடிக்கணக்கான பணமோசடி: வெளிநாட்டு பிரஜைகள் 500 பேருக்கு எதிராக அவசர விசாரணை

இணையம் ஊடாக பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டு, கோடிக்கணக்கான பணத்தை மோசடி செய்த வெளிநாட்டு பிரஜைகள் 500 பேருக்கு எதிராக சட்டமா அதிபரின் பணிப்புரையின் பேரில் அவசர விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக குற்றப் புலனாய்வு திணைக்களம் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் அறிவித்துள்ளது.

சுற்றுலா வீசாவில் இலங்கைக்கு வந்து பல்வேறு இடங்களில் தங்கியிருந்த சீன, இந்திய, பங்களாதேஷ், பாகிஸ்தான் மற்றும் நேபாள பிரஜைகள் அடங்கிய குழு இந்த மோசடியில் ஈடுபட்டுள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இவர்கள் வாடகை அடிப்படையில் வீடுகளை பெற்றுக்கொண்டு மோசடி நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளமை தொடர்பில் விரிவான விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாக குற்றப்புலனாய்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கோடிக்கணக்கான பணமோசடி: வெளிநாட்டு பிரஜைகள் 500 பேருக்கு எதிராக அவசர விசாரணை | Urgent Investigation Against 500 Foreign Nationals

வெளிநாட்டு பிரஜைகள் தொடர்பில் நடவடிக்கை

இந்த வெளிநாட்டுப் பிரஜைகள் தொடர்பில் மேலதிக நடவடிக்கை எடுப்பதற்காக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் சட்டமா அதிபரிடம் ஆலோசனை பெற்றுள்ளது.

கோடிக்கணக்கான பணமோசடி: வெளிநாட்டு பிரஜைகள் 500 பேருக்கு எதிராக அவசர விசாரணை | Urgent Investigation Against 500 Foreign Nationals

மேலும், இந்த மோசடி நடவடிக்கைக்கு உதவிய இலங்கையிலுள்ள பல வங்கி அதிகாரிகளையும் கைது செய்ய விசாரணைகள் நடத்தப்படும் என குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த வெளிநாட்டுப் பிரஜைகள், ஐக்கிய இராச்சியம், இந்தியா மற்றும் டுபாய் ஆகிய நாடுகளில் உள்ள வங்கிக் கணக்குகளில் மோசடிகளில் ஈடுபட்ட பணத்தை வைப்பிலிட்டுள்ளதாக தெரியவந்துள்ளதாகவும், மேலதிக விசாரணைகளை மேற்கொள்வதாகவும் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

https://tamilwin.com/article/urgent-investigation-against-500-foreign-nationals-1730773511#google_vignette

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இணைய வழி  ஊடாக பண மோசடியில் ஈடுபட்ட 58 பேர் கைது

image

இணையவழி  ஊடாக பண மோசடிகளில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் 58 இலங்கையர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் குற்றப் புலனாய்வுப் திணைக்கள அதிகாரிகளால்  நாரஹேன்பிட்டியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

https://www.virakesari.lk/article/198235

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.