Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

 

பி.ஆர்.சோப்ராவின் மகாபாரதம்

 

mahabharatham.1.jpg

சுமார் 25 வருடங்களுக்கு முன்னர், நமது தூர்தர்ஷனில் மகாபாரதம் ஒளிபரப்பானது.  அப்போதுதான் தமிழ்நாட்டில் டெலிவிஷன் என்பது புழக்கத்தில் வந்த சமயம். தூர்தர்ஷனைத் தவிர வேறு சேனல்கள் இல்லை. எனவே பலருடைய வீடுகளில் அப்போது தூர்தர்ஷனை மட்டுமே விரும்பி பார்த்துக் கொண்டிருந்தனர். அந்த சமயத்தில் ஒவ்வொரு வாரமும்  ஞாயிறுதோறும் காலையில் 10 மணி அளவில் முக்கால் மணி நேரம் பி.ஆர். சோப்ராவின் மகாபாரதம் ( அக்டோபர், 2, 1988  24 ஜூன் 1990) என்ற பிரம்மாண்டமான தொடர் ஹிந்தியில் ஒளிபரப்பானது. (தயாரிப்பு: பி.ஆர்.சோப்ரா டைரக்‌ஷன்: ரவி சோப்ரா) அந்த தொடர் ஒளிபரப்பாகும் சமயம் ஊரே அமைதியாக இருக்கும். சாலையில் அவ்வளவாக போக்குவரத்து குறிப்பாக இருசக்கர வாகனங்கள் கூட இருக்காது. அதன் தலைப்பு பாடலோடு கண்ணனின் சங்கு முழக்கமும் கேட்டால் மகாபாரதம் டீவியில் ஒளிபரப்பு தொடங்கி விட்டது என்று அர்த்தம்.

 

மகாபாரதம் என்பது எல்லோருக்கும் தெரிந்த கதை என்பதால் அந்த தொடரை பார்த்தவர்கள் அனைவருமே ரசித்தனர். கதை தெரியாதவர்களுக்கு மற்றவர்கள் தெரிந்து கொள்ள உதவி செய்தனர். கதையின் பிரமாண்டத்திலும் அதன் பிரமிக்கத்தக்க காட்சி அமைப்புகளிலும் மக்கள் மனதைப் பறி கொடுத்தனர். எனக்கு ஆங்கிலத்தில் வெளிவந்த பிரமாண்டமான பத்துக் கட்டளைகள் ( TEN COMMANTMENTS) மற்றும் பென்ஹர் (BENHAR) திரைப்பங்களை நினைவூட்டின.

 

தொடரில் நடித்த நடிகர்களும் நடிகைகளும் மகாபாரத கதைப் பாத்திரங்களுக்கு உயிரூட்டினர். 

 

chopra+-+sandhanu.3.jpg

(படம்  மேலே) கதையின் தொடக்கத்தில் வரும் மன்னன் சந்தனு வேடத்தில் ரிஷப் சுக்லா (Rishabh Shukla)  மற்றும் தனது முதல் ஏழு குழந்தைகளைக் கங்கையில் கொல்லும் கங்காதேவியாக நடித்த கிரோன் ஜுனேஜா (Kiron Juneja)

 

chopra+-+bheeshma.1.jpg

(படம்  மேலே) சக்திமான் தொடரில் சக்திமானாக நடித்தவர் முகேஷ் கன்னா.( Mukesh Khanna ). அவர் இந்த தொடரில் பிதாமகர் பீஷ்மராக நடித்து இருந்தார். நல்ல உயரம். நல்ல குரல்

 

chopra+-+dhritrashtra.1.jpg

(படம்  மேலே) பிறவிக் குருடனாகப் பிறந்த ஹஸ்தினாபுரத்து அரசன திருதிராஷ்டிரன் வேடத்தில் வந்து மனங் கவர்ந்தவர் கிரிஜா சங்கர் (GIRIJA SHANKAR)

 

chopra+-+krishna.1.jpg

(படம்  மேலே) கிருஷ்ணர் வேடத்தில் நிதிஷ் பரத்வாஜ்

என்.டி ராமராவ் என்றால் அவர் திரைப்படங்களில் ஏற்று நடித்த கிருஷ்ணர் வேடம்தான் எனக்கு நினைவுக்கு வரும். ஆந்திர ரசிகர்களும் அவரை கிருஷ்ணராகவே தரிசித்தனர். பி.ஆர். சோப்ராவின் மகாபாரதத்தில் நிதிஷ் பரத்வாஜ் (Nitish Bharadwaj) கிருஷ்ணனாக காட்சி அளித்தார். அவர் தனது கதாபாத்திரத்தை திறம்படவே செய்தார்.

 

chopra+-+shakuni.1.jpg

(படம்  மேலே) கைகளில் தாயக் கட்டைகளை வைத்து உருட்டிக் கொண்டே இருப்பவர் சகுனிமாமா. அவர் மூன்று, ஐந்து என்று சொல்லி தாயக் கட்டைகளை வீசுவார். நினைத்தபடியே தாயக் கட்டைகள் விழும். அந்த அழுத்தமான சகுனி வேடத்தில் நடித்தவர் கூஃபி பெயிண்டால் (Gufi Paintal). ( கொசுறு செய்தி கேரளாவில், கொல்லம் மாவட்டத்தில் பவித்ரேஸ்வரம் என்னுமிடத்தில் சகுனிக்கு கோயில் உண்டு. தகவல் உபயம் - விக்கிபீடியா)

 

chopra+-+pandavas.1.jpg

(படம் - மேலே) பஞ்ச பாண்டவர்களோடு கிருஷ்ணர் மற்றும் திரௌபதி. (யுதிஷ்ட்ரன் வேடத்தில், கஜேந்த்ர சவுகான் (Gajendra Chouhan ), அர்ச்சுனன் வேடத்தில் அர்ச்சுன் (Arjun) , பீமன் வேடத்தில் ப்ரவீன் குமார் (Praveen Kumar ) , நகுலன் வேடத்தில் சமீர்(Sameer ), சகாதேவன் வேடத்தில் சஞ்சீவ் (Sanjeev) மற்றும் திரௌபதி வேடத்தில் ரூபா கங்கூலி (Roopa Ganguly)  ஆகியோர் நடித்தனர்.

 

.பி.ஆர். சோப்ராவின் மகாபாரதம் தூர்தர்ஷனில் இந்தியில் தொடராக ஒளி பரப்பப்பட்ட போது, எங்கள் வீட்டில் எனது அப்பா அம்மா என்று எல்லோரும் தொடர்ந்து பார்த்தனர். என்னால் தொடர்ந்து பார்க்க இயலாவிட்டாலும், அவ்வப்போது பார்த்து இருக்கிறேன்  இப்போது அதன் தமிழ் வடிவத்தை (94 EPISODES(அத்தியாயங்கள்)   YOUTUBE  இல் பார்க்கும் சந்தர்ப்பம் அமைந்துள்ளது. விக்ரம் கிருஷ்ணா (VIKRAM KRISHNAN) என்பவர் 94 அத்தியாயங்களையும் யூடியூப்பில் ஏற்றி வைத்துள்ளார். இதுவரை 25 அத்தியாயங்கள் (EPISODES) பார்த்து விட்டேன். தொடர்ந்து பார்க்க வேண்டும்.

 

தமிழ் வடிவத்தில் ஆரம்ப காட்சியாக ஒலிக்கும் பாடலின் வரிகள் இவை .

  

(சங்கு ஒலிக்கிறது)

மகாபாரதம் .... 

மகாபாரதம் ....

மகாபாரதம்

அ... ஆ... அ.. ஆ...

இதுதான் மகாபாரதக் கதை

இதுதான் மகாபாரதக் கதை

ஆ ... ஆ ..

மகாபாரதக் கதை

மகாபாரதக் கதை

ரு கதைக்குள் பல கதை

பல கதைகளின் ஒரு விதை

கடவுளே ஒரு மனிதனாய் 

வந்தவரித்த  திருக்கதை!

தர்மம் என்றும் வெல்லுமே ...

என்றே உணர்த்தும் பெருங்கதை!

தர்மம் என்றும் வெல்லுமே ...

(சங்கு ஒலிக்கிறது)

 

யதா யதா ஹி தர்மஸ்ய க்லானிர்பவதி பாரத

அப்யுத்தானம் அதர்மஸ்ய ததாத்மானம் ஸ்ருஜாம்யகம்

பரித்ராணாய சாதூனாம் வினாசாய ச துஷ்க்ருதாம்

தர்ம சம்ஸ்தாபனார்த்தாய சம்பவாமி யுகே யுகே

சம்பவாமி யுகே யுகே …. சம்பவாமி யுகே யுகே

 

(இதன் பொருள்: எப்பொழுதெல்லாம் தர்மத்துக்கு தலைகுனிவு ஏற்படுகிறதோ, எப்பொழுதெல்லாம் அதர்மம் தலை தூக்குகிறதோ, அப்பொழுதெல்லாம் நான் இந்த பூமியில் அவதரிக்கிறேன். சாதுக்களை ரட்சிப்பது,  தர்ம வழியில் நில்லாத தீயவர்களை சித்திரவதமான முறையில் அழிப்பது,  தர்மத்தை நிலை நிறுத்துவது ஆகிய இம்மூன்று பயன்களுக்காகவே இந்த பூமியில்  நான் அவதரிக்கிறேன்.)

 

 பி.ஆர். சோப்ராவின் மகாபாரதத்தின் மேலே சொன்ன ஆரம்ப காட்சி (TITLE SONG) பாடலையும் மற்றும் 94 அத்தியாயங்களையும் (94 EPISODES ) தமிழில் கண்டும கேட்டும் ரசிக்க கீழே உள்ள வலைத்தளம் செல்லவும்.*****. 

 

https://youtube.com/@penbhaktitamil?feature=shared

முதல் அத்தியாயம் முடிந்தவுடன் தொடர்ந்து அனைத்து 94 அத்தியாயங்களும் அவைகளாகவே ஒன்றன்பின் ஒன்றாக தொடர்ந்துவிடும். அனைவருக்கும் வாழ்த்துக்கள்!  
 

 

 

http://tthamizhelango.blogspot.com/2014/08/blog-post.html

 

  • கருத்துக்கள உறவுகள்

நல்லது . ......நன்றி கிருபன் . ........!  👍

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.