Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நிறுவனமயப்படுத்தப்பட்ட ரஷ்யா மாபியா கும்பல்: காணொளி விபரணம்

Featured Replies

வணக்கம்,

எல்லோரும் ரஷ்யா மாபியாவைப் பற்றி கேள்விப்பட்டு இருப்பீங்கள். ஆனால் உங்களுக்கு இதன் பின்னணி, வரலாறு, தற்போதைய இதன் போக்கு இவை பற்றி சிலவேளைகளில் விரிவாகத் தெரிந்து இருக்காது.

யூரியூப்பில் இணைக்கப்பட்டிருந்த கீழுள்ள காணொளிகளை பார்த்தபோது பல திடுக்கிடும் தகவல்களை அறியக்கூடியதாக இருந்தது.

புலம் பெயர்ந்து வாழும் நாங்கள் ஒவ்வொருவரும் இவற்றை பற்றி நிச்சயம் அறிந்து வைத்து இருக்க வேண்டும். எந்தப் புற்றுக்குள் எந்தப் பாம்பு இருக்கும் என்று தெரியாது. இது கலிகாலம். நாங்கள் வாழும் நாடுகளில் கூட இவ்வாறான மாபியாக்கள் மூலம் எமக்கு ஆபத்துக்கள் வரக்கூடும்.

பல்வேறு நாடுகளில் பல்வேறு வகை மாபியாக்கள் இருக்கின்றபோதிலும், அமெரிக்காவின் உளவு நிறுவனமான எவ்.பீ.ஐ இன் பார்வையில் ரஷ்யா மாபியாக் கும்பலே மிகவும் மோசமானதும், ஆபத்தானதும் ஆகும்.

கீழ் உள்ள காணொளிகள் பகுதிகள் 01 - 05 மொத்தம் சுமார் 43 நிமிடங்களில் ரஷ்யா மாபியாவைப் பற்றிய உண்மைச் சம்பவங்களை சுருக்கமான முறையில் விபரிக்கின்றன.

இதன் விபரண உரை ஆங்கிலத்தில் இருந்தாலும், (சிலருக்கு ஆங்கிலம் விளங்காவிட்டால் கூட) காட்சிகளை பார்க்கும்போது இதில் சொல்லப்படுபவை இலகுவாக கிரகித்துக் கொள்ளக்கூடியதாக இருக்கும்.

தயாரிப்பு: The History Channel

எச்சரிக்கை: இதில் கொலைகள், பிணங்கள் நேரடியாக காட்டப்படுகின்றன. மனநலம் குறைந்தவர்கள் இவற்றை பார்ப்பதை தவிர்க்கவும்.

நன்றி!

பகுதி 01

பகுதி 02

பகுதி 03

பகுதி 04

பகுதி 05

நன்றி கலைஞன்

  • கருத்துக்கள உறவுகள்

எங்களில் பலர் புலம்பெயர்ந்து களவா இன்றிருக்கும் மேற்குநாடுகளுக்குள் நுழையவும் இவைதான் காரணமா இருந்தவை என்பதையும் நினைச்சுக்கோங்க.

அமெரிக்காவோ... பிரித்தானியாவோ இல்ல கனடாவோ.. இல்ல.. இதர மேற்குலக நாடுகளோ.. வெத்திலை வைச்சு அகதிகளை அழைச்சு.. மனித உரிமை காக்கல்ல.

பல எல்லைகளை களவாத் தாண்டி.. பலி கொடுத்து.. பணம் கொடுத்து.. சட்டங்களுடன் முட்டி மோதி.. அகதி அந்தஸ்து வாங்க.. இவங்களும் எம்மவர்களின் பெரிய சட்டவிரோத பயணத்தில் ஒரு சிறிய பங்களிப்புச் செய்திருப்பாங்க.. பல தமிழர்களின் அகதி அந்தஸ்தின் பின்னால் இருந்து பார்த்தால் இது தெரியும். வேதனைகளையும் அனுபவிச்சிருக்காங்க.

நான் மாவியாவுக்கு வக்காலத்து வாங்கல்ல... நிகழ்ந்த கடந்த கால.. நிகழ்கின்ற நிகழ்கால.. உண்மைகளையும் காட்டனும் என்று நினைக்கிறன். இதுவரைக்கும்.. எனக்கும் அகதி அந்தஸ்துக்கும் தொடர்பும் இல்ல..! :lol::lol:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

இதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை.

இலங்கையிலும் பாதாளஉலகக் கோஸ்டியினர் என்று இருக்கின்றார்கள். ஆயிரம் ரூபாவில் இருந்து லட்சம் வரையிலான கணக்கில் அவர்களின் வியாபாராம் இருக்கும்.

ஆனால் இப்போது மகிந்த வந்த பின், மகிந்த அன்ட் பிறதர்ஸ் கம்பனி இலங்கை மபியாக்கள் போலவே செயற்படுகின்றார்கள். கோடிக்கணக்கான பணப்பறிப்பு, இல்லாவிட்டால் போடுதல் என்ற வியாபாரமே நடக்கின்றது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.