Jump to content

இலங்கையின் ஜனாதிபதி தேர்தல் ஜனநாயகத்திற்கான சிறந்த முன்னுதாரணம் - ஜப்பான் தூதுவர்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

image

இலங்கையின் ஜனாதிபதி தேர்தல் ஜனநாயகத்திற்கான முன்னுதாரணம் என இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் மிசுகோசி ஹிடேகி பாராட்டியுள்ளார்.

இலங்கையின் சமீபத்தைய ஜனாதிபதி தேர்தல் அமைதியான ஜனநாயக ரீதியிலான அதிகார மாற்றத்திற்கான நாட்டின் அர்ப்பணிப்பை வெளிப்படுத்தியுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

ஜனநாயக கொள்கைகளிற்கு ஊக்கமளிக்கும் அர்ப்பணிப்பிற்காக இலங்கையின் அரசியல்வாதிகள் பொதுமக்களிற்கு ஜப்பான் தூதுவர் தனது பாராட்டுகளை தெரிவித்துள்ளார்.

சமீபத்தைய ஜனாதிபதி தேர்தல் உண்மையாகவே ஊக்கமளிக்கும் ஒன்று, ஜனநாயக ரீதியிலான அமைதியான அதிகார மாற்றத்திற்காக மக்களும் அரசியல்வாதிகளும் வெளிப்படுத்தியுள்ள அர்ப்பணிப்பு ஊக்கமளிக்கும் ஒன்று, என தெரிவித்துள்ள ஜப்பான் தூதுவர் நீங்கள் ஜனநாயகத்தின் மீது நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளீர்கள். அது உயிர்த்துடிப்பு மிக்க செழிப்பு மிக்க அமைதியான இலங்கையை உருவாக்குவதற்கு அனைத்து மக்களும் ஒன்றிணைவார்கள் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது என ஜப்பான் தூதுவர் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் புதிய தலைவர்களுடனான எனது பேச்சுவார்த்தைகள் நம்பிக்கை அளிப்பவையாக காணப்பட்டன, ஆட்சிமுறை சீர்திருத்தம், ஊழல் எதிர்ப்பு நடவடிக்கைகள், அனைவரையும் உள்ளடக்கிய அபிவிருத்தி சர்வதேச ஒத்துழைப்பிற்கான தங்கள் அர்ப்பணிப்பை அவர்கள் வலியுறுத்தினார்கள் என  அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஊழலை ஒழிக்கவேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியுள்ள ஜப்பானிய தூதுவர் ஆட்சிமுறை சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்துவதே புதிய அரசாங்கத்தின் முக்கிய நிகழ்ச்சி நிரலாக காணப்படவேண்டும் என தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/196421

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த சப்பான் காரன் இலங்கையிடம் நல்லா வளையிறான்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, alvayan said:

இந்த சப்பான் காரன் இலங்கையிடம் நல்லா வளையிறான்...

இல்மனைட் மட்டுமில்ல இப்ப கோபால்ற்றும் இருக்காமெல்லோ!

அவங்கட 11 திட்டங்கள் மீளத்தொடங்கிற்றாங்கள், அப்ப பதற்றமா இருக்குமெல்லோ!

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ஏராளன் said:

இல்மனைட் மட்டுமில்ல இப்ப கோபால்ற்றும் இருக்காமெல்லோ!

அவங்கட 11 திட்டங்கள் மீளத்தொடங்கிற்றாங்கள், அப்ப பதற்றமா இருக்குமெல்லோ!

இரண்டாம் உலகப்போரில் திருகோணமலை துறைமுகத்தில் நடத்திய  தற்கொலை தாக்குதலை தூசி தட்டி எடுத்து அனுரா விசாரணை செய்து போடுவார் என பயப்படுகிறார் போல..😅.

அமெரிக்கா சொல்லயிருப்பான் போய் அபிவிருத்திகளை தொடங்கு ....இந்தியாக்காரனை நம்பி பிரயோசனை இல்லை ....நீ தான் இலங்கையின் எல்லைச்சாமி(எனது அடியாள்) நான் உனது நாட்டின் எல்லைச்சாமி

Link to comment
Share on other sites



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.