Jump to content

வலி. வடக்கு காணிகள் தொடர்பில் ஜனாதிபதி கவனம் - இராமலிங்கம் சந்திரசேகர்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

Published By: Vishnu

17 Oct, 2024 | 11:23 PM

வலி வடக்கு பிரதேசத்தில் உள்ள காணிகள் விடுவிப்பு சம்பந்தமாக ஏற்கனவே ஜனாதிபதி கவனம் செலுத்தியுள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் யாழ் மாவட்ட அமைப்பாளர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார். 

3__1_.jpg

யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கு பிரதேசத்தில் வியாழக்கிழமை (17) பொது அமைப்புக்களால் ஒழுங்கு படுத்தப்பட்ட பொதுக்கூட்டம் ஒன்று நடைபெற்றிருந்தது.

அக்கூட்டத்தில் இராணுவ வசமுள்ள காணிகள் விடுவிப்பு மற்றும் மீள்குடி யேற்றம் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது. அதன் போது, காணி தொடர்பாகவும் மீள்குடியேற்றம் தொடர்பாகவும் பல கோரிக்கைகளை முன் வைத்து பலர் தமது மன ஆதங்கங்களையும் வேதனைகளையும் தேசிய மக்கள் சக்தியின் யாழ் மாவ‌ட்ட அமைப்பாளர் இராமலிங்கம் சந்திரசேகரரிடம் வெளிப்படையாக தெரிவித்திருந்தனர்.

அதன் போது கருத்து தெரிவித்திருந்த சந்திரசேகர், வலி வடக்கு பிரதேசத்தில் உள்ள காணிகள் விடுவிப்பு சம்பந்தமாக ஏற்கனவே ஜனாதிபதி கவனம் செலுத்தியுள்ளார். இது தொடர்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் கலந்துரையாடியதுடன் அது தொடர்பான விவரங்களையும் கோரியுள்ளார்.  

எனவே வலி வடக்கு பிரதேசத்தில் உள்ள இராணுவத்தின் பயன்பாட்டில் உள்ள காணிகள் பெரும்பாலானவற்றை விடுவித்து தருவதாக அங்கு  கூடியிருந்த பொது அமைப்புக்கள் மற்றும் மக்களிடம் உறுதிமொழி அளித்தார். 

வலி. வடக்கு காணிகள் தொடர்பில் ஜனாதிபதி கவனம் - இராமலிங்கம் சந்திரசேகர் | Virakesari.lk

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ராசபக்ஸ்சர்களைவிட...ராமலிங்கம் பெரிய அரசியல்வாதி....வாய்வீச்சில் பலே ஆள்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, alvayan said:

ராசபக்ஸ்சர்களைவிட...ராமலிங்கம் பெரிய அரசியல்வாதி....வாய்வீச்சில் பலே ஆள்..

இவர் ஆரம்ப காலத்தில் பேசிய தமிழும் இப்ப பேசும் தமிழும் ....நல்ல முன்னேற்றம் உண்டு...அதுசரி இவர் உண்மையிலயே மலையக‌ தமிழரா?அல்லது ஜெ.வி.பி யினால் உருவாக்கப்பட்ட டமிழனா?

டக்கிளஸ் செய்யவில்லை ,சமத்திரன் மாத்தையா செய்யவில்லை,அங்கஜன் மாத்தையா செய்யமுடியவில்லை....இந்த மாத்தையா செய்து வைச்சா சிறப்பு 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நானறிந்தவரையில் ஆட்களைக் கூப்பிட்டு பரப்புரைக்காகக் கதையை எடுத்துவிட்ட என்.பி.பிக்காரரிடம் மக்கள் உங்கடை தலைவர் ஒன்றும் புதியவரல்ல. அவர் 20ஆண்டுகளாக நாடாளுமன்ற அரசியலில் இருக்கிறார். அவரிடம் சொல்லி முதலில் எமது காணிகளை விடுவித்துவிட்டு பிறகு வாருங்கள் என்று சொல்லி அனுப்பினார்கள் அந்தக் காணிகளுக்குரிய மக்கள்.  
நட்பார்ந்த நன்றியுடன். 
நன்றி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, nochchi said:

நானறிந்தவரையில் ஆட்களைக் கூப்பிட்டு பரப்புரைக்காகக் கதையை எடுத்துவிட்ட என்.பி.பிக்காரரிடம் மக்கள் உங்கடை தலைவர் ஒன்றும் புதியவரல்ல. அவர் 20ஆண்டுகளாக நாடாளுமன்ற அரசியலில் இருக்கிறார். அவரிடம் சொல்லி முதலில் எமது காணிகளை விடுவித்துவிட்டு பிறகு வாருங்கள் என்று சொல்லி அனுப்பினார்கள் அந்தக் காணிகளுக்குரிய மக்கள்.  
நட்பார்ந்த நன்றியுடன். 
நன்றி

அதுதான் யூ டியுப் போராளிகள் அங்கு போய் பட்ம் பிடிக்கவில்லை போல‌

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இந்தியா ‘பெரும் தவறு செய்துவிட்டது’ என்று கூறிய ட்ரூடோ – இந்திய அரசின் பதில் என்ன? பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு, ஹர்தீப் சிங் நிஜ்ஜாரின் கொலையில் இந்தியாவுக்கு தொடர்பு இருப்பதாகக் கூறிய கனடா பிரதமர், அதற்கான ஆதாரம் இல்லை எனக் கூறியுள்ளார் 17 அக்டோபர் 2024 காலிஸ்தான் பிரிவினைவாத தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜாரின் கொலையில் இந்தியாவுக்கு தொடர்பு இருப்பதாகக் கூறிய கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, அது இந்தியாவின் ‘மிகப்பெரிய தவறு’ என கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார். அந்தத் தவற்றை கனடாவால் கண்டுகொள்ளாமல் இருக்க முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார். கனடா மண்ணில் இந்திய எதிர்ப்பாளர்களைக் குறிவைத்து கொலைகள், மிரட்டி பணம் பறித்தல், மற்றும் பிற வன்முறைச் செயல்களில் இந்தியா ஈடுபட்டதாகக் கனடா அதிகாரிகள் குற்றம் சாட்டிய இரண்டு நாட்களுக்குப் பிறகு ட்ரூடோ இந்தக் கருத்தைத் தெரிவித்தார். கனடாவின் இந்தக் குற்றச்சாட்டுகள் ‘அபாண்டமானவை’ என்று கூறியிருக்கும் இந்தியா, அவற்றை நிராகரித்திருக்கிறது. அரசியல் ஆதாயத்திற்காகக் கனடாவின் சீக்கியச் சமூகத்தை மகிழ்விக்க ட்ரூடோ முயல்வதாக இந்தியா குற்றம் சாட்டியுள்ளது. கடந்த 2023-ஆம் ஆண்டு ஜூன் மாதம் கனடா பிரஜையான ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொல்லப்பட்டார். அதன் பிறகு கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அந்தக் கொலைக்கு இந்தியாதான் காரணம் என்று குற்றம் சாட்டினார்.   அதை இந்தியா முழுமையாக நிராகரித்தது. அதன் பிறகு இரு நாடுகளும் தங்கள் பிரதிநிதிகளை சொந்த நாடுகளுக்கு வரும்படி அழைப்பு விடுத்தன. இதன் பிறகு இரண்டு நாடுகளுக்கும் இடையே சூடான கருத்து மோதல் ஏற்பட்டது. தற்போது இருநாட்டு உறவும் மோசமான நிலையை எட்டியுள்ளது. மேலும், இந்த விவகாரத்தில் வெளிநாட்டு தலையீடு தொடர்பான விசாரணையின்போது கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ ஆஜரானார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “நிஜ்ஜார் கொலையில், இந்தியாவின் தலையீடு இருப்பதாகக் கிடைத்த உறுதியான உளவுத் தகவலின் அடிப்படையிலேயே இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்ததாகவும் இதுதொடர்பாக ஆதாரங்கள் எதையும் புலனாய்வு அமைப்பு வழங்கவில்லை,” எனவும் தெரிவித்தார். இந்நிலையில், தாங்கள் வலியுறுத்தி வரும் கூற்றை ஆமோதிக்கும் வகையில் ட்ரூடோவின் கூற்று இருப்பதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்திருந்தது.   இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் பதில் இந்நிலையில் இந்தப் பிரச்னை குறித்து, வியாழக்கிழமை (அக்டோபர் 17) அன்று பேசிய இந்திய வெளியுறவு அமைச்சகம் ஒரு அறிக்கையை வெளியிட்டிருக்கிறது. அதில், ‘கனடா இந்தியா மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைக்கிறது, ஆனால் அதற்கான ஆதாரங்களை வழங்கவில்லை’ என்று கூறியிருக்கிறது. இதுகுறித்து இந்திய வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் கூறும்போது, “இந்தப் பிரச்சினையில் நாங்கள் ஏற்கனவே எங்கள் நிலைப்பாட்டை தெளிவாகக் கூறியுள்ளோம். கடந்த இரண்டு நாட்களாக இது தொடர்பாகப் பல செய்திக்குறிப்புகளை வெளியிட்டுள்ளோம், அதில் எங்களது நிலைப்பாடு தெளிவாக உள்ளது,” என்றார். இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், “கடந்த செப்டம்பர் மாதம் முதல் கனடா அரசு ஒரு சிறு தகவலைக் கூட எங்களுடன் பகிர்ந்து கொள்ளவில்லை. நேற்று நாங்கள் மீண்டும் ஒரு அறிக்கையை வெளியிட்டோம். கனடா கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளது, ஆனால் அதற்கு தை ஆதரிக்க எந்த உறுதியான ஆதாரத்தையும் வழங்கவில்லை,” என்றார். “எங்கள் இராஜதந்திரிகளுக்கு எதிரான பொய்யான குற்றச்சாட்டுகளை நாங்கள் நிராகரிக்கிறோம்," என்று அவர் கூறினார். ‘இந்திய அரசு தவறு செய்துவிட்டது’ பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு, கனடிய அரசின் குற்றச்சாட்டுகளுக்கு வலு சேர்க்கும் வகையில் கனடா இதுவரை எந்த ஆதாரத்தையும் முன்வைக்கவில்லை என இந்தியா தெரிவித்துள்ளது ஹர்தீப் சிங் நிஜ்ஜார், காலிஸ்தான் பிரிவினைவாத தலைவரான இவரை இந்தியா பயங்கரவாதி என்று அறிவித்துள்ளது. அவர் கடந்த ஆண்டு ஜூன் மாதம், பிரிட்டிஷ் கொலம்பியாவில் இருக்கும் சர்ரே பகுதியில், ஒரு வாகன நிறுத்துமிடத்தில் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த விவகாரம் குறித்த ஜஸ்டின் ட்ரூடோவின் சமீபத்திய அறிக்கைக்குப் பிறகு, இந்தியா மற்றும் இந்திய தூதர்கள் மீது சுமத்தப்பட்ட கடுமையான குற்றச்சாட்டுகளுக்கு வலு சேர்க்கும் வகையில் கனடா இதுவரை எந்த ஆதாரத்தையும் முன்வைக்கவில்லை என்று இந்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்திருந்தது. நிஜ்ஜாரின் மரணம் இந்தியாவுடன் தொடர்புடையதாக இருக்கலாம் என்று சந்தேகம் எழுப்பப்பட்டதைத் தொடர்ந்து, நிஜ்ஜார் கொலையை விசாரிக்கப் புலனாய்வு அமைப்புகளைக் கேட்டுக் கொண்டதாக கனடா பிரதமர் தெரிவித்தார். ஆனால், “இந்தக் கொலையை உளவுத்துறையினர் ஏற்கெனவே கண்காணித்து வருவதைத் தாம் பின்னர் அறிந்ததாகவும்” கூறினார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, கனடா பிரதமரின் பேச்சு, “நாங்கள் தொடர்ந்து பேசி வருவதை உறுதிப்படுத்துவதாக” இந்தியா தெரிவித்துள்ளது இந்த விஷயத்தில் இந்தியா மிகப்பெரிய தவறு செய்துவிட்டதாகக் கூறிய அவர், “கடந்த ஆண்டு கனடா மண்ணில் சீக்கிய பிரிவினைவாதத் தலைவர் கொல்லப்பட்டதன் பின்னணியில் இந்தியா இருந்தால், அந்தக் குற்றச்சாட்டை கனடாவால் புறக்கணிக்க முடியாது,” என்றார். “நாங்கள் இந்தியாவை தூண்டிவிடவோ அல்லது சண்டையிடவோ நினைக்கவில்லை. அதேவேளையில், கனடாவின் பாதுகாப்பு மற்றும் இறையாண்மையில் தலையிடலாம் என்று நினைத்து இந்திய அரசு மிகப்பெரிய தவறு செய்துவிட்டது. கனடியர்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய நாங்கள் எதிர்வினையாற்ற வேண்டியுள்ளது,” என்று கூறினார். ஜஸ்டின் ட்ரூடோவின் பேச்சுக்கு எதிர்வினையாற்றியுள்ள இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம், கனடா பிரதமரின் பேச்சு, “நாங்கள் தொடர்ந்து பேசி வருவதை உறுதிப்படுத்துவதாக” தெரிவித்துள்ளது. “இந்தியா மற்றும் இந்திய தூதர்கள் மீது சுமத்தப்பட்ட கடுமையான குற்றச்சாட்டுகளை ஆதரிக்க கனடா எந்த ஆதாரத்தையும் முன்வைக்கவில்லை. பிரதமர் ட்ரூடோ மட்டுமே இதற்குப் பொறுப்பு. இந்தப் பொறுப்பற்ற செயல் இந்தியா – கனடா உறவில் விரிசலை ஏற்படுத்தியுள்ளது,” என்று குறிப்பிட்டுள்ளது.   இந்தியா – கனடா உறவில் விரிசல் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ஜி20 உச்சிமாநாட்டின்போது பிரதமர் மோதியிடம் இந்தப் பிரச்னையை எழுப்பியதாக ட்ரூடோ கூறினார் இந்தியா, கனடா இடையிலான உறவு கடந்த சில காலமாகவே தொடர்ந்து மோசமடைந்து வருகிறது. கடந்த திங்களன்று, கனடாவில் இருந்து இந்திய தூதர் சஞ்சய் வர்மா மற்றும் பல தூதரக அதிகாரிகளை இந்தியா திரும்ப அழைத்ததாகக் கூறியது. இதனுடன், இந்தியா ஆறு கனடிய தூதரக அதிகாரிகளை நாட்டைவிட்டு வெளியேற்றியது. ஆனால், கனடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தலைநகர் ஒட்டாவாவில் செய்தியாளர் சந்திப்பில், தனது அரசு, ஆறு இந்திய தூதர்களை நாட்டைவிட்டு வெளியேற்றியதாகக் கூறினார். இதுதவிர, கனடாவின் ராயல் மௌன்ட் போலீசார், திங்களன்று ஒரு செய்தியாளர் கூட்டத்தில், இந்திய ஏஜென்டுகள் தெற்காசிய வம்சாவளியைச் சேர்ந்தவர்களை, குறிப்பாக காலிஸ்தான் ஆதரவாளர்களை, கனடாவில் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுவான பிஷ்னோய் குழுவின் உதவியுடன் குறிவைப்பதாகக் கூறியது.   ஜி20 மாநாட்டில் ஜஸ்டின் ட்ரூடோ என்ன செய்தார்? பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு, “மோதி இப்பிரச்னை தொடர்பாக தனது வழக்கமான பாணியில் பதிலளித்தார்" என ட்ரூடோ தெரிவித்தார் இந்தியாவில் நடைபெற்ற ஜி20 உச்சிமாநாட்டிற்கு முன்னதாக நிஜ்ஜார் கொலை குறித்த விவரங்களைப் பகிரங்கப்படுத்த வேண்டாம் என்று தனது அரசு முடிவு செய்ததாக விசாரணையின்போது ட்ரூடோ தெரிவித்தார். “நாங்கள் நினைத்திருந்தால், உச்சிமாநாட்டிற்கு முன்னதாகவே இதைப் பகிரங்கப்படுத்தி, இந்தியாவிற்கு அசௌகரியத்தை ஏற்படுத்தியிருக்கலாம். ஆனால் அப்படிச் செய்யவில்லை. இந்தியா எங்களுடன் ஒத்துழைக்க வேண்டும் என்பதற்காக, இதுதொடர்பாக நாங்கள் பின்னால் இருந்து வேலைகளை தொடர்ந்தோம். இதற்கான ஆதாரங்கள் குறித்து இந்தியா எங்களிடம் கேட்டது. உங்களின் (இந்தியா) பாதுகாப்பு முகமைகள் அதுகுறித்து தெரிவிக்கும் என கூறினோம். ” என்று கூறினார். மேலும், இந்தியாவில் நடைபெற்ற ஜி20 உச்சிமாநாட்டின்போது பிரதமர் நரேந்திர மோதியிடம் இந்தப் பிரச்னையை எழுப்பியதாகவும் ஜஸ்டின் ட்ரூடோ கூறினார். இதில் இந்தியாவுக்கு தொடர்பிருப்பதைத் தான் அறிந்திருப்பதாக அவரிடம் கூறியதாகவும் அதுகுறித்த தனது கவலையை வெளிப்படுத்தியதாகவும் அவர் தெரிவித்தார். “மோதி தனது வழக்கமான பாணியில் பதிலளித்தார். கனடாவில் இந்திய அரசுக்கு எதிராகக் குரல் கொடுப்பவர்கள் இருப்பதாகவும் அவர்கள் கைது செய்யப்பட வேண்டுமென்றும் தெரிவித்தார்” என்றும் ஜஸ்டின் ட்ரூடோ குறிப்பிட்டார். ஜி20 உச்சிமாநாட்டில் இருந்து நாடு திரும்பிய பிறகு கனடா நாடாளுமன்றத்தில் நிஜ்ஜார் கொலை குறித்த குற்றச்சாட்டுகளைப் பகிரங்கப்படுத்தினார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c5y3jg59jn4o
    • "யாழ்கள இலங்கை பாராளுமன்ற தேர்தல் போட்டி"  கந்தப்பு அவர்களால் ஆரம்பிக்கப் பட்டுள்ளது.   👇  கீழுள்ள இணைப்பிற்கு சென்று, போட்டியில் பங்கு பற்றுங்கள். 👇    
    • வடகிழக்கு தமிழர்களின் உண்மையான அபிலாஷைகளை தேசிய மக்கள் சக்தி புரிந்துகொள்ளவில்லை - ரில்வின் சில்வாவின் கருத்து இதை காண்பிக்கிறது - தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் (நா.தனுஜா) மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச்செயலாளர் டில்வின் சில்வாவினால் அண்மையில் வெளியிடப்பட்ட கருத்து, அவர்கள் வட, கிழக்கு தமிழ் மக்களின் உண்மையான அபிலாஷைகள் என்னவென்பதை இன்னமும் அறிந்துகொள்ளவில்லை என்பதையே காண்பிக்கிறது எனச் சுட்டிக்காட்டியிருக்கும் தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், சமத்துவம் என்பது தனியொரு இனத்துக்கானதாக அன்றி, சகல இனங்களுக்குமானதாக அமையவேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளனர். அண்மையில் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் கருத்து வெளியிட்ட மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச்செயலாளர் டில்வின் சில்வா, 'அரசியலமைப்பின் 13ஆவது திருத்தம் அனைத்துப் பிரச்சினைகளுக்குமான தீர்வாக அமையாது. வடக்கு மக்களின் அடிப்படைப் பிரச்சினைகள் பற்றி தமிழ் அரசியல்வாதிகள் பேசுவதில்லை. மாறாக அரசியலமைப்பின் 13ஆவது திருத்தம் மற்றும் அதிகாரப்பகிர்வு என்பன பற்றி மாத்திரமே பேசுவார்கள். இருப்பினும் நாம் வடக்கில் நிலவும் அடிப்படைப் பிரச்சினைகளுக்குக் கட்டம் கட்டமாக உரிய தீர்வு வழங்குவோம்' எனக் குறிப்பிட்டிருந்தார். டில்வின் சில்வாவின் இக்கருத்தை 'வட, கிழக்கு தமிழ் மக்களின் உண்மையான அபிலாஷை என்னவென்பதை அறியாதோரின் கருத்து' என விமர்சித்த இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பொதுத்தேர்தல் வேட்பாளர் எம்.ஏ.சுமந்திரன், இந்தக் கருத்து நடைபெற்று முடிந்த  ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளர் சஜித் பிரேமதாஸவை ஆதரிப்பதற்குத் தாம் மேற்கொண்ட தீர்மானம் சரியானது என்பதைக் காண்பிப்பதாகத் தெரிவித்தார். 'தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதித் தேர்தல் விஞ்ஞாபனத்தில் 2015 - 2019ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டுப் பூர்த்திசெய்யப்படும் எனக் கூறப்பட்டிருந்தது. இருப்பினும் அதனை எவ்வாறு செய்வது என்பது பற்றி தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருக்கவில்லை. எது எவ்வாறிருப்பினும் அத்தேர்தலில் சஜித் பிரேமதாஸவை ஆதரிப்பதற்கு நாம் எடுத்த தீர்மானம் சரி என்பதையே டில்வின் சில்வாவின் கருத்து வெளிப்படுத்துகின்றது. தேசிய மக்கள் சக்தியினரை ஒட்டுமொத்தமாக இனவாதிகள் எனக் கூறமுடியாது. ஆனால் இத்தகைய கருத்துக்கள் அவர்கள் குறித்தவொரு இனத்தின் அபிலாஷைகளை சரிவரப் புரிந்துகொள்ளவில்லை என்பதையே காண்பிக்கின்றன. சமத்துவம் என்பது தனியொரு இனத்துக்கானதாக அன்றி, சகல இனங்களுக்குமானதாக அமையவேண்டும். இருப்பினும் பொதுத்தேர்தலின் பின்னர் ஏற்கனவே அளிக்கப்பட்ட வாக்குறுதிக்கு அமைவாக புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பணிகள் முன்னெடுக்கப்படும் பட்சத்தில், இயலுமானவரை அதில் சமஷ்டி கட்டமைப்பை உள்ளடக்குவதை முன்னிறுத்தி அவசியமான ஒத்துழைப்புக்களை வழங்குவோம்' எனவும் சுமந்திரன் குறிப்பிட்டார். அதேவேளை இதுபற்றிக் கருத்துரைத்த தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் பொதுத்தேர்தல் வேட்பாளர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், 'பொதுத்தேர்தலின் பின்னர் புதிய அரசியலமைப்பு உருவாக்க நடவடிக்கைகளைத் தொடர்ந்து முன்னெடுக்கவிருப்பதாக தேசிய மக்கள் சக்தி அதன் தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிட்டிருந்தது. இருப்பினும் இப்புதிய அரசியலமைப்பானது நாட்டை ஒற்றையாட்சிக்குள் முடக்கும் செயற்பாடு என்பது அனைவருக்கும் தெரியும். அதனை இந்தக் கருத்து மீளுறுதிப்படுத்தியிருக்கிறது' எனச் சுட்டிக்காட்டினார். அத்தோடு நல்லாட்சி அரசாங்கத்தினால் இந்த அரசியலமைப்பு உருவாக்க முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டபோது தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி தவிர்ந்த ஏனைய சகல தமிழ் அரசியல் கட்சிகளும் அதனை ஆதரித்ததாகக் குறிப்பிட்ட கஜேந்திரகுமார், எனவே எதிர்வருங்காலத்தில் இம்முயற்சியைத் தம்மால் மாத்திரமே முறியடிக்கமுடியும் என்றும், அதற்கு வட, கிழக்கு மாகாணங்களில் தமக்கு 10  ஆசனங்களேனும் கிடைக்கவேண்டும் என்றும் வலியுறுத்தினார். மேலும் தமிழ் அரசியல் தலைவர்கள் 13ஆவது திருத்தத்தை மாத்திரமே கேட்பதாகவும், தமிழ் மக்களின் ஏனைய பிரச்சினைகள் குறித்துப் பேசுவதில்லை எனவும் டில்வின் சில்வா கூறுவது முற்றிலும் தவறானது எனச் சுட்டிக்காட்டிய ஜனநாயக தமிழ்த்தேசியக் கூட்டணியின் பொதுத்தேர்தல் வேட்பாளர் தர்மலிங்கம் சித்தார்த்தன், பொருளாதார நெருக்கடி, காணி அபகரிப்பு, குடிநீர்ப்பிரச்சினை, தொல்பொருள் திணைக்களத்தின் அத்துமீறல்கள் என்பன உள்ளடங்கலாக தமிழர்களின் பிரச்சினைகள் பற்றி தாம் தொடர்ந்து பேசியிருப்பதாகவும், இருப்பினும் அதற்கு கடந்தகால அரசாங்கங்களும், தேசிய மக்கள் சக்தியும் செவிசாய்க்கவில்லை எனவும் விசனம் வெளியிட்டார். 'நாங்கள் அரசியலமைப்பின் 13ஆவது திருத்தத்தை முழுமையான தீர்வாகக் கருதவில்லை. இருப்பினும் அது நாட்டின் அரசியலமைப்பில் உள்வாங்கப்பட்டிருப்பதனால் முதலில் அதனை நடைமுறைப்படுத்துமாறும், அடுத்தகட்டமாக சமஷ்டி அடிப்படையிலான தீர்வு நோக்கி நகருமாறும் வலியுறுத்திவருகிறோம். இருப்பினும் அரசியலமைப்பில் உள்ள ஒரு திருத்தத்தை நடைமுறைப்படுத்தச் செய்வதே பெரும் பிரயத்தனமாக இருக்கிறது. அவ்வாறிருக்கையில் அடுத்தகட்டம் நோக்கிப் பயணிப்பதென்பது மிகவும் சவாலான விடயமாகவே இருக்கும்' எனவும் அவர் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/196525
    • யாழ். கள தேர்தல் போட்டியை ஆரம்பித்து வைத்தமைக்கு மிக்க நன்றி கந்தப்பு. 👍🏽 நல்ல கேள்விகள். நன்றாக யோசித்து பதில் சொல்ல வேண்டும். நிச்சயம் நானும் போட்டியில் கலந்து கொள்வேன். மற்றவர்களையும் போட்டியில் கலந்து கொள்ள ஊக்கப் படுத்துகின்றேன். மீண்டும் நன்றிகள் கந்தப்பு. 🙏
    • ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தலைமறைவு? adminOctober 18, 2024 சர்ச்சைக்குரிய வாகன மோசடி தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தலைமறைவாகியுள்ளதாக குற்றப்புலனாய்வுப் பிரிவின் உள்ளகத் தகவல்கள் வெளியாகி உள்ளது. சந்தேகநபரான ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவை கைது செய்ய குற்றப் புலனாய்வுப் பிரிவின் குழுக்கள் தொடர்ந்து மூன்று நாட்களாக செயல்பட்டு வந்தாலும் அவர் தொடர்பில் எந்தவொரு தகவலும் இதுவரையில் கிடைக்கவில்லை. சந்தேகநபரான முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தங்கியிருந்த வீடு மற்றும் அவர் தங்கியிருக்கும் ஏனைய இடங்கள் அனைத்திலும் தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்ட போதிலும் எந்தவொரு தகவலும் கிடைக்கவில்லை என காவற்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. வாகன உதிரி பாகங்களை இரகசியமாக இறக்குமதி செய்து அவற்றை பயன்படுத்தி பி. எம்.டபிள்யூ. கார் ஒன்றை தயாரித்துப் பயன்படுத்தியதாக ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு எதிராக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. குறித்த கார் பதிவு செய்யப்படவில்லை என்றும், அது போலி எண் மூலம் பயன்படுத்தப்பட்டு வந்ததாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது. இந்த கார் கொழும்பு ஹில்டன் ஹோட்டலில் வாகன தரிப்பிடத்தில் பல நாட்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் இரகசிய காவற்துறையினர் மூலம் கைப்பற்றப்பட்டது. ‘டாக்சி அபே’ எனப்படும் காமினி அபேரத்ன ஹில்டன் ஹோட்டலுக்கு முன்பாக, முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு சொந்தமானது என சந்தேகிக்கப்படும் சட்டவிரோதமாக தயாரிக்கப்பட்ட காரை கைவிட்டுச் சென்றுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது. காரில் இருந்து ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு சொந்தமான ஆவணங்களும் காவற்துறையினரால் கண்டுபிடிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.   https://globaltamilnews.net/2024/207625/
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 1 reply
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.