Jump to content

நல்லாட்சியை விட அதிக கடன் பெறும் நிலையில் புதிய அரசாங்கம் : ஜே.வி.பி. யதார்த்தத்தை புரிந்துகொண்டது - ஹர்ஷ

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
image

(எம்.மனோசித்ரா)

ரணில் விக்கிரமசிங்க அரசாங்கத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட அரச நிதி முகாமைத்துவ சட்டத்தை எதிர்த்த ஜே.வி.பி. இன்று அந்த சட்டத்துக்கமையவே செயற்பட்டு வருகிறது. நல்லாட்சி அரசாங்கத்திலேயே அதிகளவான கடன் பெறப்பட்டதாக அன்று குற்றஞ்சுமத்தப்பட்ட போதிலும், அதனை விட அதிகக் கடனைப் பெற வேண்டிய சூழ்நிலைக்கு இன்றைய அரசாங்கம் தள்ளப்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா சுட்டிக்காட்டினார்.

பெற்ற கடனை மீள செலுத்துவதற்காக வாரத்துக்கொரு முறை புதிய கடனை பெற வேண்டும் என்ற யதார்த்தத்தை தற்போது ஜே.வி.பி. உணர்ந்திருக்கும் எனக் குறிப்பிட்ட கலாநிதி ஹர்ஷ, வருமானத்தை அதிகரிப்பதற்காக அரசாங்கம் என்ன செய்யப்போகிறது என்பதை அவதானித்துக்கொண்டிருப்பதாகவும் குறிப்பிட்டார்.

கொழும்பிலுள்ள ஐக்கிய மக்கள் கூட்டணி தலைமையகத்தில் நேற்று வெள்ளிக்கிழமை (18) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசாங்கம் தொடர்ச்சியாக கடன் பெற்றுக்கொண்டிருக்கிறது. அரசியலுக்கு அப்பால் இதற்கான காரணிகள் குறித்து அவதானம் செலுத்த வேண்டியிருக்கிறது. நிதி தொடர்பான அதிகாரம் ஜனாதிபதியிடம் இல்லை. அரசியலமைப்பின் 148ஆம் உறுப்புரைக்கமைய பாராளுமன்றத்துக்கே அந்த அதிகாரம் காணப்படுகிறது.

பாராளுமன்றத்தின் நிதி அதிகாரத்தை நடைமுறைப்படுத்துவதற்கான பிரதான மூலம் கோப் குழுவாகும். அதன் முன்னாள் தலைவர் என்ற ரீதியிலேயே இவ்விடயங்களை நான் மக்களுக்கு தெளிவுபடுத்த விரும்புகின்றேன். அரசாங்கத்துக்கு அன்றாட பணிகளுக்கு நிதி தேவைப்பாடு காணப்படுகிறது. அதனை எங்கிருந்து பெற்றுக்கொள்வது? அதற்கு இரு பிரதான வழிமுறைகள் காணப்படுகின்றன.

அவற்றில் ஒன்று வரி உள்ளிட்ட அரச வருமானத்தின் மூலம் பெற்றுக்கொள்ளப்படும் திறைசேரி கணக்கில் காணப்படும் நிதியாகும். இரண்டாவது கடன் பெற்றுக்கொள்ளலாகும். திறைசேரியில் மேலதிக அல்லது மிகையான நிதி காணப்படுமானால், கடனை மீள செலுத்துவதற்காக அதனைப் பயன்படுத்த முடியும். மிகை நிதி என்பது அரசாங்கத்தின் மொத்த வருமானத்தில் செலவுகளைக் கழித்த பின்னர், எஞ்சும் தொகையில் வட்டியையும் குறைத்த பின்னர் மீதப்படும் தொகையாகும்.

மிகை நிதியானது தேசிய உற்பத்தி வருமானத்துக்கு சமாந்தரமாக 2.3 சதவீதமாக பேணப்படும் என்று கடந்த அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்துடன் இணக்கப்பாட்டை எட்டியது. எனவே, இந்த மிகை நிதியானது கடந்த ஆண்டும் இவ்வாண்டும் அதிகாரிகளால் முகாமை செய்யப்பட்டு வருகிறது. எனவே, பெற்ற கடனை மீள செலுத்தும்போது அந்த மிகை நிதியில் ஒரு தொகை பயன்படுத்தப்படும்.

இது நீண்ட காணப்படாத இல்லாத ஒன்றாகும். கடுமையான அரச நிதி ஒழுக்கத்தினால் தற்போது மிகை நிதி காணப்படுகிறது. இதற்காக அரச நிதி முகாமைத்துவ சட்டம் கடந்த அரசாங்கத்தால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. அன்று எதிர்க்கட்சி என்ற ரீதியில் அந்த சட்டத்துக்கு நாம் ஒத்துழைப்பை வழங்கினோம். ஆனால், அன்று அதனை எதிர்த்த ஜே.வி.பி., இன்று அந்த சட்டத்துக்கமையவே மிகை நிதியைப் பேணி வருகிறது.

எவ்வாறிருப்பினும் மிகை நிதி போதவில்லை எனில் வாரத்துக்கொரு முறை கடன் பெற வேண்டியுள்ளது. ஏற்கனவே பெற்ற கடனை மீள செலுத்துவதற்காக புதிதாகக் கடன் பெற வேண்டும். அவ்வாறில்லையெனில் பணத்தை அச்சிட வேண்டும். எனினும், நாணய நிதியத்துடன் எட்டப்பட்டுள்ள இணக்கப்பாட்டுக்கமைய மத்திய வங்கியால் பணத்தை அச்சிட முடியாது.

மத்திய வங்கி சுயாதீனப்படுத்தல் சட்டத்துக்கமைய பணத்தை அச்சிட்டு அரசாங்கத்துக்கு வழங்கவும் முடியாது. மத்திய வங்கி சுயாதீனமயப்படுத்தல் சட்டத்துக்கும் அன்று ஜே.வி.பி. ஆதரவளிக்கவில்லை. இந்த சட்டத்தை மாற்றுவதாக அன்று ஜே.வி.பி. கூறினாலும், அவ்வாறு எதனையும் கூறாமல் இவ்வாறு சென்றுகொண்டிருக்கின்றனர். எனவே, மத்திய வங்கியிடம் கடன் பெற முடியாது என்பதால், அரசாங்கம் வர்த்தக சந்தையில் கடன் பெற்றுக் கொண்டிருக்கிறது.

நல்லாட்சி அரசாங்கத்திலேயே அதிகளவான கடன் பெறப்பட்டதாக ஜே.வி.பி. அன்று குற்றஞ்சுமத்தியது. எமது ஆட்சியில் பெற்றுக்கொள்ளப்பட்ட மொத்த கடனில் 89.9 சதவீதமானவை 2015க்கு முன்னர் பெற்றுக் கொண்ட கடனுக்கான வட்டியை செலுத்துவதற்காகவே பெறப்பட்டது. எனினும் அதில் நம்பிக்கை கொள்ளாமல் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தனர். இவ்வாறு கடன் பெற வேண்டுமா என்று கேட்டனர்.

ஆனால், இன்று என்ன நடக்கிறது? இவ்வாறு தொடர்ச்சியாக சென்றால் கடந்த அரசாங்கத்தை விட 2024இல் தெரிவான அரசாங்கம் அதிகக் கடனைப் பெறும் நிலைமையே காணப்படுகிறது. எமக்கு இவ்வாறு கடன் பெறவேண்டிய தேவையில்லை. கடன் பெறுவதால் என்ன அர்த்தமுள்ளது, கடந்த அரசாங்கம் பாரியளவில் கடன் பெற்றுள்ளது என அரசியல் தளங்களில் கூறினாலும் இதுவே யதார்த்தமாகும்.

அவற்றை  தெரிந்துகொள்ளாமல் கூறினார்களா? அவ்வாறில்லை எனில் மக்களை ஏமாற்றுவதற்காக கூறினார்களா என்பது எமக்குத் தெரியாது. பழைய கடனை மீள செலுத்துவதற்கு வாரத்துக்கொரு முறை புதிய கடனைப் பெற வேண்டும் என்பதே யதார்த்தமாகும். மிகை நிதியை மேலும் அதிகரித்துக்கொண்டால் மாத்திரமே புதிதாகப் பெற்றுக்கொள்ளும் கடன் தொகையையும் குறைத்துக்கொள்ள முடியும்.

மிகை நிதியை பலப்படுத்த வேண்டுமெனில் அரச வருமானம் அதிகரிக்கப்பட வேண்டும். செலவுகள் குறைக்கப்பட வேண்டும். வருமானத்தை அதிகரிப்பதற்கான பிரதான வழிமுறை வரியைப் பெற்றுக் கொள்வதாகும். வரியைக் குறைப்பதாகக் கூறினாலும், அதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரியவில்லை. அது தொடர்பில் எந்தப் பேச்சும் இல்லை. ஊழியர்களின் சம்பளத்திலிருந்து நேரடியாகப் பெற்றுக்கொள்ளும் வரியை அதிகரிப்பதாக முன்னர் கூறப்பட்ட போதிலும், அதற்கான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இந்த வரியில் விலக்களிப்பை வழங்கினால் பிரிதொரு வரி அறவிடப்பட வேண்டும். வீடுகளை வாடகைக்கு வழங்குவதன் மூலம் பெற்றுக்கொள்ளும் வருமானத்துக்கு வரியை அறவிடுவதற்கு கடந்த அரசாங்கம் தீர்மானித்திருந்தது. அதனை நடைமுறைப்படுத்தாவிட்டால் பிரிதொரு வரியை அறிமுகப்படுத்த வேண்டும். அதே போன்று வட் வரி நீக்கப்பட்டாலும், அதற்கு பதிலாகவும் வேறு வரி அறவிடப்பட வேண்டும். எனவே இந்த அரசாங்கம் கூறிய மாற்றங்களை எவ்வாறு செய்யப் போகிறது என்பதை பார்த்துக்கொண்டிருக்கின்றோம் என்றார்.

https://www.virakesari.lk/article/196653

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, ஏராளன் said:

நான் நினைக்கிறேன் NPP இலங்கையினை முடித்துவிட போகிறார்கள் போல இருக்கிறது, அல்லது இதன் பாதிப்புகள் பற்றிய புரிதலில்லாமையால் இப்படி மோசமாக நிதி நிர்வாகம் செய்கின்றார்களா என தெரியவில்லை.

படித்தவர்களின் கட்சி என கூறுகிறார்கள் அதனால் தெரியாமல் செய்வதற்கு வாய்ப்பு இல்லை, ஆனால் இலங்கையினை இனி கடவுளாலும் காப்பாற்ற முடியாது இவ்வாறு செயற்பட்டால்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, vasee said:

, ஆனால் இலங்கையினை இனி கடவுளாலும் காப்பாற்ற முடியாது இவ்வாறு செயற்பட்டால்.

சில சமயம் இந்த கடவுள் அவதாரங்கள்(அமெரிக்கா,இந்தியா) காப்பாற்றலாம்...வலை விரிப்பது அமெரிக்காவா இந்தியாவா

Link to comment
Share on other sites

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தமிழ் தேசியக் கூட்டமைப்பை நான்தான் உருவாக்கினேன். தலைவரிடம் விடயத்தை எடுத்துக் கூறி தமிழ் தேசிய கூட்டமைப்பை உருவாக்க வேண்டும் என்று முடிவெடுத்து அதனை உருவாக்கினேன். மட்டக்களப்பில் இருந்து உருவாகிய கருதான் அந்த தமிழ் தேசிய கூட்டமைப்பு என மட்டக்களப்பு மாவட்டத்தில் சுயேட்சையாக பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா அம்மான்) தெரிவித்தார்.   அவரது தேர்தல் அலுவலகமொன்று நேற்று சனிக்கிழமை (19) மாலை மட்டக்களப்பு மாவட்டம் பட்டிருப்பு தேர்தல் தொகுதிக்குட்பட்ட மகிழூர் கிராமத்தில் திறந்துவைத்துவிட்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அவர் இதன்போது மேலும் தெரிவிக்கையில்,  கடந்த காலங்களிலே நான் ஒருபோதும் தேசிய கட்சிகளிலும், தேர்தல்களிலும் களமிறங்கவில்லை. அம்பாறை மாவட்டத்திலும் நான் தனி தமிழ் கட்சியிலே தான் தேர்தலில் களமிறங்கி இருந்தேன்.   இம்முறையும் நான் மட்டக்களப்பில் தேசிய ஜனநாயக முன்னணி எனும் தமிழ் கட்சியிலேதான் போட்டியிடுகிறேன். தேசிய கட்சியில் நாங்கள் தேர்தலில் களமிறங்கினால் நிச்சயமாக அதில் மூன்று முஸ்லிம் வேட்பாளர்களை களமிறக்குவார்கள்.  எம்முடைய வாக்குகள் அவர்களைத்தான் வெற்றிபெற வைக்கும். அதனால்தான் நாங்கள் தேசியக் கட்சிகளில் தேர்தலில் களமிறங்கவில்லை. அதனால்தான் இம்முறையும் நாங்கள் எட்டு தமிழ் வேட்பாளர்களோடு மட்டக்களப்பு மாவட்டத்தில் களமிறங்கி இருக்கின்றோம். தமிழ் தேசியக் கூட்டமைப்பை நான்தான் உருவாக்கினேன். தலைவரிடம் விடயத்தை எடுத்துக் கூறி தமிழ் தேசிய கூட்டமைப்பை உருவாக்க வேண்டும் என்று முடிவெடுத்து அதனை உருவாக்கினேன்.  மட்டக்களப்பில் இருந்து உருவான கரு தான் அந்த தமிழ் தேசிய கூட்டமைப்பு. அதனை தலைவர் ஏற்றுக்கொண்டு கூட்டமைப்பை உருவாக்கினார்.   அக்காலத்தில் யுத்தம் நடைபெற்றபோது எமது மக்களின் இழப்புக்கள், யுத்த அழிவுகள் உலக அரங்குக்கு தெரிய வர வேண்டும். அது பாராளுமன்றத்தில் பேசப்பட வேண்டும். தமிழர்களின் குரல்கள் பாராளுமன்றத்தில் ஒலிக்க வேண்டும் என்பதற்காகத்தான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது.  அந்தக் கடமையை ஆரம்பத்தில் அவர்கள் நன்றாக மேற்கொண்டிருந்தார்கள். அதனை நான் வரவேற்கின்றேன். சம்பந்தன் ஐயா இருக்கும்போது அது நன்றாகத்தான் செயற்பட்டது.   அவர் மரணித்ததன் பின்னர் அவர்கள் சிதறுண்டு போய்விட்டார்கள். காலப்போக்கில் அவர்கள் பணத்துக்கு அடிமையாகி பதவிகளுக்கு ஆசைப்பட்டு சிதறிப் போயுள்ளார்கள். இதுதான் தமிழ் தேசிய கூட்டமைப்பின் வரலாறாகும்.  வட கிழக்கிலே இருக்கின்ற தமிழ் மக்களுக்கு ஒரு காத்திரமான தலைமைத்துவத்தை வழங்குவதற்காக வேண்டி நான் இந்த தேர்தலிலே மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிடுகிறேன்.   அதனை ஏற்படுத்துவதற்கு என்னால் முடியும். அதற்காகவேதான் நான் வந்திருக்கின்றேன். இதனை விட்டுக்கொடுக்க முடியாது. பணத்துக்கும் இலஞ்சத்துக்கும் இடம்வழங்கக் கூடாது. இரண்டு தடவைகள் நான் பாராளுமன்றத்தில் அங்கம் வைத்துள்ளேன்.   அனுரகுமார திசாநாயக்க ஜனாதிபதியாக வரப் போகின்றார் என்ற போது அனைவரும் நடுங்கிக் கொண்டிருந்தார்கள். நான் மாத்திரம் சிரித்துக்கொண்டே இருந்தேன். ஒரு ஊழல் குற்றச்சாட்டுகளும் என்னில் சுமத்த முடியாது. ஒரு மதுபான கடைகுரிய அனுமதிப்பத்திரம் என்னிடம் இல்லை.    மணல் ஏற்றுவதற்கு உரிய அனுமதிப்பத்திரமில்லை. நான் இருந்தபடியே தான் இப்போதும் இருக்கிறேன். களவு செய்தவர்கள் அனைவரும் பயத்திலே திரிகின்றார்கள, பழைய அமைச்சர்கள் கொழும்பிலே ஒளித்துவிட்டார்கள், நானும் கடந்த ஜனாதிபதி தேர்தலில் அனுரகுமார திசாநாயக்கா அவர்களுக்குத்தான் வாக்களிக்குமாறு மக்களிடம் கேட்டிருந்தேன்.  ஊழலை நிறுத்த வேண்டும், ஈஸ்டர் குண்டு தாக்குதல் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும், அதன் சூத்திரதாரிகளை கண்டுபிடிக்க வேண்டும், என்பதற்காகவே தான் நான் அவ்வாறு கூறியிருந்தேன். ஏனெனில் ஜனாதிபதியாக சிங்கள நபர் ஒருவர்தான் இந்த நாட்டிலே வரமுடியும் தமிழர் ஒருவரோ இஸ்லாமியர் ஒருவரோ வரமுடியாது.   ஆனால் பொதுத்தேர்தல் என்பது வேறாகும் இதில் நாம் கவனமாக இருக்க வேண்டும். இதிலே ஜேவிபி எனும் கட்சிக்குப் பின்னால் யாரும் போகக்கூடாது. அவர்கள் இனத் துவேஷம் பிடித்த ஒரு கட்சியாகும் தமிழர்களுக்கு முதலாவது துரோகம் செய்த கட்சி ஜே.வி.பி. ஆகும்.    நீதிமன்றம் சென்று வடகிழக்கை சட்ட ரீதியாக அவர்கள் பிரித்தார்கள். ஆனால், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியோ, மஹிந்த ராஜபக்ஷவோ, ரணில் விக்கிரமசிங்கவோ பிரிக்கவில்லை. பிரித்தவர்கள் ஜே.வி.பியினர். இதனை நாம் மறந்துவிட முடியாது.    சிலர் திசைகாட்டி திசைகாட்டி என வருவார்கள். மட்டக்களப்பு மாவட்டத்திலே திசைகாட்டி சின்னத்திலேயே மூன்று தீவிரமான முஸ்லிம்களும், ஒரு சிங்களவரும், ஏனையவர்கள் மலையகத்தைச்  சேர்ந்தவர்களையும் மட்டக்களப்பிலே களமிறக்கியுள்ளார்கள்.  தமிழ் தேசியக் கூட்டமைப்பை எடுத்துக்கொண்டால் சங்கு ஒரு பக்கம், மற்றவர்கள் ஒரு பக்கம் உள்ளார்கள். கடந்த ஜனாதிபதி தேர்தலில் அல்லது ஒரு முடிவு எடுத்தார்கள். நானும் அதோடு சத்தமிடாமல் இருந்தேன்.  அவர் ஜனாதிபதியாக வரமுடியாவிட்டாலும் தமிழர்கள் ஒற்றுமையாக இருக்கின்றார்கள் என்பதை காட்டுவதற்காக அவர்கள் வந்தார்கள்.  ஆனால் சுமந்திரனும் சாணக்கியனும் பணத்தைப் பெற்றுக்கொண்டு ஓடிவிட்டார்கள். ரணிலிடம் 60 கோடியை சாணக்கியன் வாங்கிவிட்டு சஜித் பிரேமதாசவுக்கு வேலை செய்துள்ளார்.  சாணக்கியனும் சுமந்திரனும் எப்போது கட்சிக்குள் வந்தார்களோ அப்போது அந்த கட்சி அழிந்து போய்விட்டது. இதில் எமது மக்கள் தெளிவாக இருக்க வேண்டும். தேசியம் தேசியம் என கதைத்து  உசுப்பேத்துகின்றார்கள்.   இம்முறை தேசியம் கதைப்பதற்கு வந்தால் கணக்கறிக்கையை மக்கள் கேட்க வேண்டும். கொள்ளையடித்த பணத்துக்கு கணக்கை தெரிவித்துவிட்டு தேசியத்தைக் கதையுங்கள் என மக்கள் கூற வேண்டும்.   இதனை நான் கூறவில்லை. ஜனா முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அவர்கள் கூறுகின்றார். 60 கோடியை  சாணக்கியன் பெற்றதாக சாணக்கியன் கூறுகின்றார். ஜனாவை பார்த்து நீ அதிக அளவு சொத்துக்கள் குவித்து வைத்திருக்கிறாய் அந்த சொத்து எங்கிருந்து வந்தது உமக்கு என கேட்கின்றார்.   இன்னும் ஒருவருக்கு 588 கோடி ரூபாய்க்கு உரிய விசாரணை வரவிருக்கிறது. சிங்கப்பூரிலிருந்து அனைத்து இடங்களிலும் வீடு வாங்கியுள்ளார். அதனை மக்கள் பத்திரிகைகளில் பார்த்திருப்பார்கள். இவ்வாறு கொள்ளை அடித்திருந்தால் எவ்வாறு மக்களுக்கு அவர்கள் சேவை செய்வது இந்த நிலையில் மக்கள் நன்றாக முடிவெடுக்க வேண்டும்.  எனது கண்ணுக்கு முன்னரே பல போராளிகள் மடிந்தார்கள். அதனை நான் மறக்கவில்லை. பல போராளிகள் அங்கவீனமாக இருக்கின்றார்கள். அதை நீ நான் மறக்கவில்லை. பல தாய்மார்கள் தற்போதும் கண்ணீர் வடித்துக்கொண்டுதான் இருக்கின்றார்கள்.    இதற்கு எல்லாம் நாம் ஒரு முடிவு கட்ட வேண்டும். இதற்காக வேண்டி அனைத்து போராளிகளும் அணி திருளுங்கள். ஒருவொருவரும், மாற்றுத் திசைகளுக்கு செல்ல வேண்டாம். எனக்கு தான் போராளிகளின் அருமை தெரியும். யாருக்கும் அது பற்றி கதைப்பதற்கு உரிமை இல்லை.   மாவீரர் நாள் அனுஷ்டிப்பது என்றால் அதனை நாங்கள் தான் அனுஷ்டிக்க வேண்டும். வெளிநாடுகளில் ஒளிந்திருந்துவிட்டு வந்தவர்களுக்கு எந்த உணர்வுமில்லை. இனிமேல் அதற்கு அனுமதிக்க முடியாது.   எனவே தமிழர்களின் இருப்பை காப்பாற்றுவதற்கு சிறந்த தலைமைத்துவத்தை வளர்த்துவிட வேண்டும். படித்தவர்கள் எதனையும் சாதிப்பதில்லை. இலங்கையிலே முதலாவது படிப்பு படித்தவர் தான் மதுபான கடை நடத்துகின்றார். நான் மதுபான கடைகளுக்குரிய அனுமதிப்பத்திரம் பெறுவது என்றால் நூற்றுக்கு மேற்பட்ட அனுமதி பத்திரங்களை பெற்றிருக்கலாம். அதெல்லாம் வேண்டாத விடயம்.  தமிழரசு கட்சியில் வைத்தியர் உள்ளிட்ட பலர் போட்டியிடுகிறார்கள். அவர்களுக்கு இருக்கின்ற சொத்துக்களை காப்பாற்றுவதற்காகவே அவர்கள் போட்டியிடுகிறார்கள். மக்களுக்கு சேவை செய்வதற்காக அவர்கள் போட்டியிடவில்லை.   அவர்களுக்கு தமிழர்களின் பிரச்சினையை பற்றி தெரியாது. நான் 22 வருடங்கள் போராடி இருக்கிறேன். எனது சொந்த அண்ணனை கூட நான் இழந்திருக்கின்றேன். அனைவருக்கும் இழப்புக்கள் உள்ளன. தேசியப் பட்டியலில்தான் நான் இரண்டு முறை பாராளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்பட்டேன்.  அதனூடாக அதிகளவு வேலைகளை மக்கள் மத்தியில் நான் செய்திருக்கின்றேன். இந்த முறை பாராளுமன்றத்திற்கு மக்களின் ஆணையுடன்தான் செல்ல வேண்டும். அவ்வாறெனில் தான் எதையும் வாதிட்டு பெற்றுக்கொள்ளலாம். நமது பாராளுமன்ற உறுப்பினர்கள் அங்கு சென்று எதிரே உள்ள உறுப்பினர்களை குற்றம் சுமத்துவதுதான் அவர்களுடைய வேலை. மாறாக இஸ்லாமிய பாராளுமன்ற உறுப்பினர்கள் அவர்களுக்கு இடையே யாரையும் குற்றம் சுமத்தி பாராளுமன்றத்தில் பேசவில்லை.  கடந்த முறை அம்பாறையிலே போட்டியிட்டு 35000 வாக்குகளை அந்த மக்கள் எனக்கு அளித்திருந்தார்கள். மக்களுக்காக நாங்கள் உயிரையும் தருவதற்கு காத்திருக்கின்றோம். அது எனக்கு பெரிய பிரச்சனை இல்லை.  கூட்டமைப்புக்கும் சங்கு குழுவுக்கும் மக்கள் முடிவு கட்ட வேண்டும்.   இலஞ்ச ஊழலை நிறுத்த வேண்டும். ஒரு வேட்பாளர் தலா 3 ஆயிரம் ரூபாய் பணம் கொடுக்கின்றாராம், இன்னும் ஒரு வேட்பாளர் மதுபானம் வழங்கியதாக பொலிஸாரால் சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர். களவு செய்த காசுகளை அவர்கள் அள்ளி வழங்குகிறார்கள். தேசப்பற்றுடன் சேவை செய்யக்கூடிய தலைவர்களை நாங்கள் வளர்த்துவிட வேண்டும் என்றார்.  https://www.virakesari.lk/article/196681
    • உண்மை தான்  ஆனால் கொழும்பில் இருந்து கொண்டு தாயகத்திலுள்ள ஒரு தொகுதிக்கு தெரிவாகும் ஒரு பாராளுமன்ற உறுப்பினரால் எவ்வாறு அந்த தொகுதி மக்களின் தேவைகளை புரிந்து கொள்ள முடியும்?? பூர்த்தி செய்ய முடியும்???
    • வணக்கம் வாத்தியார் . ........! பெண் : ராத்திரி நேரத்து பூஜையில் ராத்திரி நேரத்து பூஜையில் ரகசிய தரிசன ஆசையில் ஹான்…ஹான்…தினம் ஆராதனை ஹான்…ஹான்…அதில் சுகவேதனை குழு : ஒஹ் ஹரே ராமா ஹரே ராமா ஹரே கிருஷ்ணா பெண் : யமுனா நதி கரையோரத்தில் கண்ணா உந்தன் பூங்காவனம் யமுனா நதி கரையோரத்தில் கண்ணா உந்தன் பூங்காவனம் குழு : பூக்கள் அங்கே வீசும் மனம் காற்றில் வந்த காதல் ஜுரம் பெண் : தேகம் எங்கும் தேனூருது காமம் அவன் தேரோடுது தேகம் எங்கும் தேனூருது காமம் அவன் தேரோடுது குழு : தீயில் மனம் நீராடுது மீட்சி பெற போராடுது........! --- ராத்திரி நேரத்து பூஜையில் ---
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
      • 1 reply
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?

      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.