Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

image

(நெவில் அன்தனி)

அகில இலங்கை பாடசாலைகள் விளையாட்டு விழாவின் கடைசி அம்சமான மெய்வல்லுநர் போட்டிகளில் வடக்கு மற்றும் மத்திய மாகாண பாடசாலைகள் பதக்கங்கள் வென்று அசத்தியுள்ளன.

கல்வி அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மெய்வல்லுநர் போட்டிகள் கொழும்பு சுகததாச விளையாட்டரங்கில் நடைபெற்றுவருகின்றது.

18 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான ஈட்டி எறிதல் போட்டியில் மன்னார், தோட்டவெளி அரசினர் தமிழ் கலவன் பாடசாலை வீராங்கனை ஏ. யதுர்ஷிகா 37.39 மீற்றர் தூரத்தைப் பதிவுசெய்து தங்கப் பதக்கத்தை சுவீகரித்தார். அகில இலங்கை பாடசாலைகள் விளையாட்டு விழா மெய்வல்லுநர் போட்டியில் மன்னார் மாவட்ட பாடசாலைகள் சார்பாக வீராங்கனை ஒருவர் பதக்கம் வென்றது இதுவே முதல் தடவையாகும்.

20 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் 2.90 மீற்றர் உயரம் தாவிய அளவெட்டி அருணோதயா கல்லூரி வீராங்கனை எஸ். நிருஷிக்கா தங்கப் பதக்கத்தை சுவீகரித்தார். அவரது சக பாடசாலை வீராங்கனை எஸ். டிலக்ஷிகா (2.70 மீ.) வெண்கலப் பதக்கத்தை வென்றெடுத்தார்.

20 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான உயரம் பாய்தலில் 4.30 உயரத்தைப் பாய்ந்த தெல்லிப்பழை மகாஜனா கல்லூரி வீரர் எஸ். துஷாந்தன் தங்கப் பதக்கத்தை சுவீகரித்தார்.

இதேவேளை, 20 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான நீளம் பாய்தலில் யாழ். சென். ஜோன்ஸ் கல்லூரி வீரர் எஸ். ஜே. சஞ்சீவன் (7.13 மீ.), 18 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் சாவகச்சேரி இந்து கல்லூரி வீரர் எஸ். கஜனன் (4.00 மீ.), 16 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான தட்டெறிதல் போட்டியில் பளை மத்திய கல்லூரி வீரர் கே. தனாதீபன் (46.71 மீ.) ஆகியோர் வெள்ளிப் பதக்கங்களையும் 20 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான தட்டெறிதல் போட்டியில் நெல்லியடி மத்திய கல்லூரி வீராங்கனை வீ. சங்கீதா (32.31 மீ.) வெண்கலப் பதக்கத்தையும் வென்றெடுத்தனர்.

9_thuthiharshithan_-_matale_hindu_file_p

7_thanatheepan_-_palai_central_college.j

8_sangeetha_-nelliady_school.jpg

6_s_kajanan_-_chavakachcheri_hindu.jpg

5_s_sanjeevan_-_st_john_s.jpg

3_v__dilukshika_-arunodhaya_college.jpg

இது இவ்வாறிருக்க மத்திய மாகாணத்தின் மாத்தளை இந்து தேசிய பாடாசாலை வீரர் எஸ். துதிஹர்ஷிதன் 20 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான 1500 மீற்றர் ஓட்டப் போட்டியை 4:06.11 நிமிடங்களில் நிறைவு செய்து வெள்ளிப் பதக்கத்தை வென்றெடுத்தார்.

https://www.virakesari.lk/article/196733

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

சாவகச்சேரி இந்து கல்லூரி வீராங்கனை அபிஷாலினி தங்கம் வென்றார்

image

(நெவில் அன்தனி)

கொழும்பு சுகததாச விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் அகில இலங்கை பாடசாலைகள் விளையாட்டு விழாவில் கடைசி அம்சமான மெய்வல்லுநர் போட்டிகளில் வட மாகாணத்திற்கு 4ஆவது தங்கப் பதக்கத்தை சாவகச்சேரி இந்து கல்லூரி வீராங்கனை பரந்தாமன் அபிஷாலினி பெற்றுக்கொடுத்தார்.

18 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் 2.80 மீற்றர் உயரத்தைத் தாவி அபிஷாலின தங்கப் பதக்கத்தை சுவீகரித்தார்.

அண்மையில் நடைபெற்ற சேர் ஜோன் டாபட் சிரேஷ்ட மெய்வல்லுநர் சம்பியன்ஷிப்பிலும் அபிஷாலினி தங்கப் பதக்கம் வென்றிருந்தார். அப் போட்டியில் 3.01 மீற்றர் உயரத்தைத் தாவிய அபிஷாலினிக்கு  இம்முறை 3.00 மீற்றர் உயரத்தை எட்ட முடியாமல் போனது.

https://www.virakesari.lk/article/196781



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.