Jump to content
இணைய வழங்கி மாற்றம் காரணமாக நானை  (17/11/2024) ஐரோப்பிய நேரம் 20:00 மணிமுதல் இணைய வழங்கியில் தடங்கல் ஏற்படும் என்பதை அறியத்தருகின்றோம்.

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது
இந்தியா- சீனா

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, கோப்புப்படம் கட்டுரை தகவல்
  • எழுதியவர், சந்தீப் ராய்
  • பதவி, பிபிசி நிருபர்
  • ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

இந்தியாவும் சீனாவும் எல்லை கட்டுப்பாடு கோடு (Line of Actual Control - LAC) பகுதிகளில் ரோந்து பணிகளை மேற்கொள்வது தொடர்பாக ஒரு உடன்பாட்டை எட்டியுள்ளன.

அக்டோபர் 22, 23 ஆகிய தேதிகளில் ரஷ்யாவில் நடைபெறும் பிரிக்ஸ் மாநாட்டில் கலந்து கொள்ள பிரதமர் நரேந்திர மோதி புறப்படுவதற்கு முன்னதாக, திங்களன்று (அக்டோபர் 21) இந்திய வெளியுறவு அமைச்சகம் இந்த அறிவிப்பை வெளியிட்டது.

இந்தியா-சீனா உறவுகளைக் கண்காணித்து வரும் சில வல்லுநர்கள், கடந்த காலங்களிலும் சீனாவுடன் இதுபோன்ற ஒப்பந்தங்கள் செய்யப்பட்டிருப்பதாகக் கருதுகின்றனர்.

இந்த ஒப்பந்தம் தொடர்பான விரிவான தகவல்கள் இன்னும் வழங்கப்படவில்லை. இதுகுறித்து சீனாவில் இருந்து எந்த அறிக்கையும் வரவில்லை என்றாலும், இந்த முயற்சி இந்திய - சீன உறவுகளை இயல்பாக்குவதற்கான ஒரு முக்கியமான படியாகச் சில நிபுணர்கள் கருதுகின்றனர்.

 

திங்களன்று (அக்டோபர் 21), இந்திய வெளியுறவுச் செயலர் விக்ரம் மிஸ்ரி, ஒரு செய்தியாளர் சந்திப்பில், ''கடந்த பல வாரங்களாக இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே ராஜ்ஜீய மற்றும் ராணுவ மட்டங்களில் நடந்த பேச்சுவார்த்தையின் விளைவாக இந்த 'ராணுவ விலகல்' உடன்பாடு எட்டப்பட்டது'' என்றார்

இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கரும் திங்களன்று தனியார் செய்தி சேனலான என்.டி.டி.வி-யின் நிகழ்ச்சியில், "2020-ஆம் ஆண்டு, சீன எல்லையில் இந்திய வீரர்கள் எல்லையில் எதுவரை சென்றனரோ, மீண்டும் அதுவரை சென்று ரோந்துப் பணியில் ஈடுபட முடியும்," என்று கூறினார்.

மேலும், “பதற்றத்தைக் குறைக்கும் வகையில், இந்தியா-சீனா இடையேயான பேச்சு வார்த்தை நிறைவடைந்துள்ளது. இரு தரப்பினரும் இன்று பரஸ்பர உடன்படிக்கைக்கு வந்துள்ளனர். இது குறித்த கூடுதல் தகவல்கள் வரும் நாட்களில் வெளிவரும்,” என்றார்.

இருப்பினும், "எல்லை கட்டுப்பாடு கோட்டில் 2020-க்கு முந்தைய நிலைமை மீண்டும் கொண்டுவரப்படும். இது ஒரு முக்கியமான முன்னேற்றம். ஆனால் இதன் முழு தாக்கத்தை இப்போது மதிப்பிட முடியாது. அதற்குக் காத்திருக்க வேண்டும்," என்றார்.

இந்தியா, சீனா, நரேந்திர மோதி, ஷி ஜின்பிங்

பட மூலாதாரம்,REUTERS

இந்தியா-சீனா ஒப்பந்தம் குறித்து நிபுணர்கள் சொல்வது என்ன?

இந்தியா-சீனா விவகாரங்களில் நிபுணரும், கலிங்கா இன்ஸ்டிட்யூட் ஆப் இந்தோ-பசிபிக் ஸ்டடீஸின் நிறுவனர்-தலைவருமான பேராசிரியர் சிந்தாமணி மொஹபத்ரா இதுகுறித்து பிபிசி இந்தியிடம் பேசினார்.

"இது ஒரு நல்ல தொடக்கமாகும். ஏனெனில், கடந்த சில மாதங்களாக ராஜ்ஜீய மற்றும் ராணுவ மட்டங்களில் நடந்த பேச்சுவார்த்தைகள் பதற்றத்தைக் குறைப்பதற்கான ஒப்பந்தம் பற்றி விவாதித்தன,” என்றார்.

“ஒரே ஒரு ஒப்பந்தம் இரு நாடுகளுக்கும் இடையிலான அனைத்து பதட்டங்களையும் தீர்த்துவிடாது. ஆனால் இந்த ஒப்பந்தத்தை, உறவுகளை இயல்பாக்குவதற்கான முதல் படியாகக் கருதலாம்,” என்றார்.

அவர் மேலும் பேசுகையில், “இப்போது ‘ராணுவ விலகல்’ ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ளது. அதாவது இது சில பகுதிகளில் ஏற்கனவே நடந்துள்ளது. மேலும் சில பகுதிகளில் நடக்க வேண்டும். கடந்த மாதம், இந்திய ராணுவத் தளபதி, ‘எளிதான பிரச்னைகள் தீர்க்கப்பட்டுவிட்டன. இனி வரும் காலங்களில் சிக்கலான பிரச்னைகள் தீர்க்கப்பட வாய்ப்புள்ளது’ என்று கூறியிருந்தார்'' என்றார்.

சில வல்லுநர்கள் இந்த அறிவிப்பை எச்சரிக்கையாகப் பார்க்க வேண்டும் என்கின்றனர்.

ப்ரூக்கிங்ஸ் இன்ஸ்டிட்யூட்டின் மூத்த ஆராய்ச்சியாளரான தன்வி மதன், தனது எக்ஸ் சமூக ஊடகத் தளத்தில், “2017-ஆம் ஆண்டின் டோக்லாம் பிரச்னையும் பிரிக்ஸ் மாநாட்டிற்கு முன்புதான் தீர்க்கப்பட்டது. அதுதான் பிரதமர் மோதி சீனாவுக்குச் செல்ல வழிவகுத்தது. அப்போதும் சீனா புவிசார் அரசியல் பிரச்னைகளைச் சந்தித்தது,” என்று பதிவிட்டிருக்கிறார்.

தக்ஷிலா இன்ஸ்டிடியூட்டின் இயக்குநர் நிதின் பாய், தனது எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில், "இந்தியா - சீனா எல்லையில் அமைதியை ஏற்படுத்த உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. ஆனால் உடனே மகிழ்ச்சியடைய வேண்டாம். ஏனெனில் சீனாவின் நிலைப்பாட்டில் மாற்றம் ஏற்பட்டுள்ளதைக் காட்டுவதற்கு அதன் கொள்கைகளில் எதுவும் மாறியதாகத் தெரியவில்லை,” என்று பதிவிட்டுள்ளார்.

வெளியுறவுச் செயலர் விக்ரம் மிஸ்ரி திங்கள்கிழமை அன்று, ராணுவ விலகல் குறித்து உடன்பாடு எட்டப்பட்டதாக மட்டுமே கூறியுள்ளார்.

இந்த ஒப்பந்தம் மீதமிருக்கும் சர்ச்சைகளில் என்ன விளைவை ஏற்படுத்தும் என்பது தெளிவாகத் தெரியவில்லை.

இருப்பினும், வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், எல்லையில் இருக்கும் டெப்சாங் பகுதி பற்றி குறிப்பிடும் விதமாக, மற்ற பகுதிகளிலும் ராணுவ ரோந்து இருக்கும் என்று கூறினார்.

சமீபத்திய அறிவிப்பில் பல விஷயங்களில் ஒருமித்த கருத்து எட்டப்பட்டதாகத் தெரிகிறது என்று பேராசிரியர் சிந்தாமணி மொகபத்ரா கூறுகிறார். "இந்தியா, சீனா மற்றும் பசிபிக் பிராந்தியத்திற்கு இது மிகவும் நல்ல செய்தி," என்கிறார் அவர்.

 
இந்தியா, சீனா, நரேந்திர மோதி, ஷி ஜின்பிங்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, 2023-இல் தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற பிரிக்ஸ் கூட்டம்

இப்போது ஏன் இந்த ஒப்பந்தம்?

இதற்குமுன், ஆகஸ்ட் 2023-இல் தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற பிரிக்ஸ் கூட்டத்தின் போது பிரதமர் மோதி மற்றும் ஷி ஜின்பிங் இடையே கடைசி பேச்சுவார்த்தை நடந்தது.

அப்போது, இரு நாடுகளும் பரஸ்பர உறவை மேம்படுத்த விரும்புவதாகக் கூறப்பட்டது.

இரு நாடுகளுக்கும் இடையே 3,488கி.மீ., தொலைவுக்குப் பொதுவான எல்லை உள்ளது. இப்பகுதியிலிருந்து ராணுவத்தை அகற்றிப் பதற்றத்தைக் குறைப்பது இரு நாடுகளுக்கும் நல்லது.

முன்னதாக, 2022-இல், இரு தலைவர்களும் ஜி20 உச்சிமாநாட்டில் பங்கேற்றனர். ஆனால் அவர்களுக்கு இடையே பேச்சுவார்த்தை நடக்கவில்லை.

சமீபத்திய மாதங்களில் உலக அரசியலில் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. சீனாவுக்கும் மேற்கத்திய நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் அவ்வளவு சுமுகமாக இல்லை.

ஷிவ் நாடார் பல்கலைக்கழகத்தின் இணை பேராசிரியரும், சீன விவகாரங்களில் நிபுணருமான பேராசிரியர் ஜபின் டி ஜேக்கப், இதுகுறித்து பிபிசி ஹிந்தியிடம் பேசினார்.

"இந்தியாவுடனான உறவைச் சீர்படுத்துவதற்கான முயற்சிக்கு சீனாவின் சூழ்நிலைகளும் ஓரளவு காரணமாகும். அமெரிக்காவுடனான சீனாவின் உறவுகள் மிகவும் மோசமான நிலையில் உள்ளன. அடுத்த மாதம் அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடக்கவுள்ளது,” என்கிறார்.

“அடுத்த அமெரிக்க அதிபர் யாராக இருந்தாலும் அவருடனான உறவில் எந்த வித்தியாசமும் இருக்காது என்பதை சீனா ஏற்றுக்கொண்டுள்ளது. யுக்ரேன் போரின் போது ரஷ்யாவுக்கு முழு ஒத்துழைப்பு வழங்க சீனா செய்த ஒப்பந்தம், சீனாவுக்கும் மேற்கத்திய நாடுகளுக்கும் இடையிலான மோதலையும் அதிகரித்துள்ளது,” என்கிறார் அவர்.

சீனா தற்போது சர்வதேச அளவில் சிக்கலில் உள்ளதாகவும், உள்நாட்டிலும் அதன் பொருளாதார முன்னேற்றம் குறைந்துள்ளது என்றும் அவர் கூறுகிறார்.

“இந்தச் சூழ்நிலையில், சீனாவுக்குத் தனது வெளியுறவுக் கொள்கையில் சில மாற்றங்களைச் செய்ய வேண்டிய அவசரத் தேவை இருப்பதுடன், வளைந்து கொடுக்கும் மனப்பான்மையைக் காட்டுவதும் அவசியமாகும்,” என்கிறார் அவர்.

பேராசிரியர் ஜேக்கப் மேலும் கூறுகையில், “இந்த அறிவிப்பு திடீரென வந்ததல்ல. இதற்கு முன் பல சுற்றுப் பேச்சுவார்த்தைகள் நடந்தன. இதை அறிவிப்பதற்காக பிரிக்ஸ் மாநாட்டின் சமயம் தேர்ந்தெடுக்கப்பட்டது,” என்கிறார்.

கடந்த காலங்களிலும் இது போன்ற பல ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டு, அவற்றைச் சீனா மீறியதால், இந்த ஒப்பந்தத்தை சீனா நிறைவேற்றுகிறதா இல்லையா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும், என்கிறார் அவர்.

 
இந்தியா, சீனா, நரேந்திர மோதி, ஷி ஜின்பிங்

பட மூலாதாரம்,AFP

படக்குறிப்பு, 'இந்தியா எதிர்பார்த்தது போல் மேற்கு நாடுகளில் இருந்து முதலீடு வரவில்லை. ஆனால் சீனாவில் இருந்து முதலீடு வருகிறது'

வணிகத்தில் என்ன தாக்கம் இருக்கும்?

2020-இல் கிழக்கு லடாக்கில் உள்ள கல்வானில் நடந்த வன்முறை மோதலில், 20 இந்திய வீரர்கள் கொல்லப்பட்டனர். பல சீன வீரர்களும் இறந்தனர்.

எனினும், இதனால் இரு நாடுகளின் வர்த்தகம் பாதிக்கப்படவில்லை. 2022-இல் 135.98 பில்லியன் டாலர்களாக இருந்த இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகம், 2023-இல் 136 பில்லியன் டாலராக இருந்தது. (இந்திய மதிப்பில் சுமார் 11.4 லட்சம் கோடி ரூபாய்).

பேராசிரியர் ஜேக்கப், "மேம்பட்ட உறவுகள் வர்த்தகத்தின் மீதும் தாக்கம் செலுத்தும். சீன முதலீடு தொடர்பாக இந்தியா வளைந்துகொடுக்க வாய்ப்புள்ளது. தற்போது சீனாவின் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு மேற்கத்திய நாடுகளில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது,” என்கிறார்.

மேலும், “இந்தியா எதிர்பார்த்தது போல் மேற்கு நாடுகளில் இருந்து முதலீடு வரவில்லை. ஆனால் சீனாவில் இருந்து முதலீடு வருகிறது. உதாரணமாக, மின்சார வாகனங்கள், அதிநவீன தொழில்நுட்பம், அரிய கனிமங்கள். இந்தியாவுக்குத் தேவையான அத்தியாவசிய இறக்குமதிகள் சீனாவிலிருந்து மட்டுமே வரும், மேற்கு நாடுகளிலிருந்து அல்ல,” என்கிறார்.

இது, மேற்கத்திய நாடுகளுடனான இந்தியாவின் உறவு மாறப்போகிறது என்று இது அர்த்தப்படாது, என்று பேராசிரியர் ஜேக்கப் கூறுகிறார். “இந்தியா தனது சொந்த நலன்களுக்கு ஏற்ப தனது கொள்கைகளை நிர்ணயித்து வருகிறது,” என்கிறார்.

 
இந்தியா, சீனா, நரேந்திர மோதி, ஷி ஜின்பிங்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, 2020-க்கு முன்பு எந்தெந்தப் பகுதிகளில் ரோந்துப் பணி மேற்கொள்ளப்பட்டதோ அந்தப் பகுதிகளில் ரோந்துப் பணி மேற்கொள்ளப்படும்

ஒப்பந்தத்தில் என்ன இருக்கிறது?

இந்தியா வெளியிட்டுள்ள அறிவிப்பில், இந்த ஒப்பந்தம் குறித்த விரிவான தகவல்கள் தெரிவிக்கப்படவில்லை. ஆனால் ஒப்பந்தத்தின் சில முக்கிய விஷயங்களை 'தி பிரிண்ட்' செய்தி இணையதளம் தெரிவித்துள்ளது.

"ஒப்பந்தத்தின்படி, 2020-க்கு முன்பு எந்தெந்தப் பகுதிகளில் ரோந்துப் பணி மேற்கொள்ளப்பட்டதோ அந்தப் பகுதிகளில் ரோந்துப் பணி மேற்கொள்ளப்படும். டெப்சாங்கைத் தவிர, இதில் PP10 முதல் PP13 வரையிலான பகுதியும் அடங்கும். மேலும், மாதம் இருமுறை ரோந்துப் பணி மேற்கொள்ளப்படும். மோதல்களைத் தவிர்க்கும் வகையில் ராணுவ வீரர்களின் எண்ணிக்கை 15 ஆகக் குறைக்கப்படும்,” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

“ரோந்துப் பணியைத் தொடங்குவதற்கு முன், இரு தரப்பினரும் ஒருவருக்கொருவர் தகவல்களை வழங்க ஒப்புக்கொண்டனர். இந்தக் காலகட்டத்தில், நம்பிக்கையை வளர்க்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு, ஒவ்வொரு மாதமும் கட்டளை அதிகாரிகள் மட்டத்தில் பேச்சுவார்த்தை நடத்தப்படும்,” என்றும் அந்தச் செய்தி தெரிவிக்கிறது.

'தி பிரிண்ட்' செய்தியின்படி, சீன வீரர்கள் முந்தைய நிலைக்குத் திரும்புவார்கள், இந்திய வீரர்கள் 'ஒய்' சந்திப்பில் ரோந்து செல்வதை அவர்கள் தடுக்க மாட்டார்கள்.

"ராணுவ விலகல் முடிந்த பாங்கோங் த்சோ, கால்வான், ஹாட் ஸ்பிரிங்ஸ், கோக்ராவின் வடக்குக் கரைகள் ஆகிய பகுதிகளில் இருபுறமும் ரோந்துப் பணியை மீண்டும் தொடங்குவர்," என்றும் அந்தச் செய்தி தெரிவிக்கிறது.

அக்டோபர் 22, 23 ஆகிய தேதிகளில், ரஷ்யாவின் கசான் நகரில் பிரிக்ஸ் உச்சி மாநாடு நடைபெறுகிறது. அங்கு சீன அதிபர் ஷி ஜின்பிங்கும் கலந்து கொள்வார். அவர் இந்தியப் பிரதமர் நரேந்திர மோதியைச் சந்திக்க வாய்ப்புள்ளது.

சிந்தாமணி, "இந்த ஒப்பந்தத்தின் அறிவிப்பால், இரு தலைவர்களுக்கு இடையிலான சந்திப்பு இயல்பாகவே நடக்கும் என்பதுபோலத் தெரிகிறது. அது நடக்கக் கூடும். ஆனால், பிரிக்ஸ் மாநாடு காரணமாக ஒப்பந்தம் அறிவிக்கப்பட்டது என்று கூற முடியாது. அது தற்செயலானது," என்கிறார்.

அவர் மேலும், “பிரிக்ஸ் விரிவடைந்து வரும் ஒரு அமைப்பு. இந்தியாவும் சீனாவும் அதன் முக்கிய உறுப்பினர்களாக உள்ளன. மேலும், இரு நாடுகளுக்கும் இடையிலான பதற்றத்தைக் குறைப்பது பிரிக்ஸ் அமைப்புக்கு ஒரு நல்ல செய்தி. இது பிரிக்ஸ் அமைப்பை முன்னோக்கிக் கொண்டு செல்வதற்கு பெரிதும் உதவும்.

பிரிக்ஸ் முன்னேற வேண்டுமானால், அதன் முக்கிய உறுப்பினர்களிடையே சிறந்த ஒருங்கிணைப்பு அவசியம்," என்கிறார் அவர்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

மத்திய கிழக்கில் அமெரிக்க முகவராக செயற்பட்டு தான் தோன்றித்தனமாக செயற்படும் இஸ்ரேலை போல தென்னாசியாவின் இந்து சமுத்திரத்தில் சீன ஆதிக்கத்திற்கு ஒரே ஒரு மேற்கின் தெரிவாக இந்தியா தான் இருப்பதாக கற்பனை செய்து கொண்டு செய்த குழறுபடிகளை மெற்கு மோதிர கையால் வைத்த குட்டு மூலம் இந்தியாவினை மேற்கு எங்கே வைத்துள்ளது என்பதனை தெளிவாக கூறி விட்டது, தற்போது மேற்கினை நம்பினால் அவர்கள் முதுகில் குத்திவிடுவார்களோ எனும் பயம் இந்தியாவிற்கு வந்துள்ளது.

சீனாவிற்கு மேற்கால் பொருளாதார, அரசியல் நெருக்கடி இதனால் இரண்டு திருடர்களும் இணைந்து பணியாற்ற முயற்சிக்கிறார்கள், ஆனால் இந்த பிரிக்ஸ் இல் இந்தியா ஆரம்பத்தில் இருந்து பிரிக்ஸ் பரிவர்த்தனையில் அதிருப்தி அடைந்த நாடாகவே உள்ளது, அத்துடன் பிரிக்ஸில் சீனாவின் மேலாதிக்கத்தினை விரும்பாத நிலையே காணப்படுகிறது, ஆனால் மேற்குடன் எக்காலத்திலும் நம்பி இணைந்து பயணிக்க முடியாது என்ற யதார்த்தினை உணர்ந்துள்ளதாக தெரிகிறது, தற்போது இந்தியாவிற்கு எந்த தெரிவுகளும் இல்லை.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நீங்கள் ஏன் பாராளுமன்றம் போக விரும்புகிறீர்கள் என்று பத்திரிகையாளர் சுமந்திரனை கேட்ட கேள்விக்கு, சுமந்திரன் அளித்த பதில்,  "அனுரா,தங்களால் நல்லாட்சி  2015-2019 காலத்தில் வரையப்பட்ட சட்ட வரைபைஅமுல்படுத்துவேன் என்று தேர்தல் வாக்குறுதியில் சொல்வதாகவும், அது தன்னாலும் இன்னொரு சிங்களவரின் பெயர், (மறந்துவிட்டேன்)  வரையப்பட்டதாகவும் அதை முன்னெடுத்து செல்ல தான் பாராளுமன்றம் போய் தனது திறமைகளை உபயோகித்து அதை நடைமுறைப்படுத்த முடியும் என தான் நம்புவதாலுமே தான் பாராளுமன்றம் போக விருப்பப்படுவதாக." ஒரு நேர்காணலில் சுமந்திரன் தெரிவித்திருந்தார். ஆனால் இவர் முன்பு பலதடவை அந்த வரைபில், ஏக்கய ராஜ்ய எனும் சட்ட வரைபு அது என கூறியிருக்கிறார், அதே ஒரு சர்ச்சையான சொல். இவர் சொல்கிறார் ஒருமித்த என்று, வேறொருவர் விளக்குகிறார் ஒற்றை ஆட்சி என்று. இவர் பாராளுமன்றம் போனால் ஏதோ மக்களை ஏமாற்றி சடைஞ்சு நிறைவேற்றி போடுவார். பொன்னம்பலம் அதை ஆராய வெளிகிட்டால் அங்கு சுமந்திரன் என்ன திருகுதாளம் வரைந்தார் என்பது வெளிவரும், கண்டிப்பாக எதிர்ப்பு வரும், ஆகவே தான் வரைந்ததை பொன்னம்பலம் கஜேந்திரன் குழப்பி விட்டார் என பரப்பலாம். அல்லது மாற்றம் செய்தால் நான் போயிருந்தால்; அதை சாதித்திருப்பேன், இதை சாதித்திருப்பேன் மக்கள் ஆணை தரவில்லை என்பார். ஆனால் எல்லாம் வரைந்தவருக்கு ஏன் நடைமுறைப்படுத்த முடியாமல் போனது? என்பது கேள்விக்குறி. கோத்த ஓடியபின் அரகலயாவை அடக்கிய ரணில் ஏன் அதை நடைமுறைப்படுத்தவில்லை?   நாட்டின் கடந்த சரித்திரம் புரியாமல் பேசுகிறீர்கள். சந்திரிகாவும் ஒருகாலத்தில் இராணுவத்தை ஒரு வரையறைக்குள் கொண்டுவர எடுத்த எடுப்பில் முயற்சித்தவர், ஆனால் அவர்களுக்கு அடிபணிவதை தவிர வேறொன்றும் செய்ய முடியவில்லை அவரால். இதற்கு பல செயற்திட்டங்கள்  தேவைப்படும்  மாற்றியமைக்க முன்பு. அதற்கு முன் பொருளாதார உடனடிப்பிரச்சனையிலேயே தான் கவனம் செலுத்தப்போவதாக அவர் தெரிவித்துள்ளார். ஆக்கப்பொறுத்த நாம் ஆறவும் பொறுக்க வேண்டும். இல்லையேல் எல்லாம் கெட்டுவிடும். இதில் நான் என்ன தவறுதலாக எழுதிவிட்டேன்? அவர் இறுதிவரை கொண்ட  கொள்கையில்  உறுதியாக இருந்தார் என்று சொன்னேன், மாற்றத்தை அவரால் ஏற்படுத்த முடியவில்லை. அனுராவுக்கு காலம், சந்தர்ப்பம், அரசியல் எதிர்ப்பற்ற வெற்றி சூழல், மக்கள் மனங்களில் மாற்றம், சாதகமாக அமைந்துள்ளது என்றேன். இதிலென்ன தவறு?   எழுபத்தைந்து வருடங்களாக வேரோடி அடர்ந்து வளர்ந்து வளர்த்து விட்ட விருட்ஷத்தை ஒரு நொடியில் அடியோடு அழிப்பதென்பது எத்தனை பாரிய விளைவை ஏற்படுத்தும் என்பதை புரிந்து பேசுகிறீர்களா? அல்லது என்னோடு விதண்டாவாதம் பண்ண வேண்டுமென்று பேசுகிறீர்களா தெரியவில்லை? முதலில் அதில் உள்ள தழைகளை களைய வேண்டும், கிளைகளை மெதுவாக வெட்ட வேண்டும், பின் மரத்தை சிறு சிறு துண்டுகளாக்க வேண்டும், அதன்பின் வேர்களை கிளற வேண்டும்,  அதன் பின்னே அடிமரத்தில் கைவைக்க வேண்டும். இலகுவாக தானாகவே மரம் ஆட்டம் காணும், சரியும். அதை தமிழர் மத்தியிலேயே சிங்களம் மிகச்சாதுரியமாக செய்தது. இவர் நாட்டில் தொடர்ந்து ஆட்சி செய்ய வேண்டுமாயின் கட்டாயம் இதை செய்தே ஆகவேண்டும். இல்லையேல் அரசியலை ஒருதடவைக்கு மேல் கனவு காணக்கூடாது. இது வெறும் உதாரணம். பிறகு இதில கேள்வி கேட்டு விதண்டாவாதம் பண்ணி குடையக்கூடாது. 
    • செய்ய வேண்டிய வேலை… ஆனால் இவரால் முடியுமா? இப்போ இருக்கும் ஆட்களை சேர்த்து மினக்கெட்டு அவர்கள் மீண்டும் ஒரு சீட்டுக்காக பிய்த்து கொண்டு போவதை விட. அருச்சுனாவின் அணியை பலபிக்க உண்மையான எண்ணம் கொண்டோர் இணையலாம். அந்த அணியில் அருச்சுனா தவிர்ந்த ஏனையோர் சரியாக வழிநடந்தால், உத்வேக படுத்தப்பட்டால் மீளலாம்.
    • இதுக்கு வேப்பிலை அடிக்கத்தான் சுமந்திரன் அவசரப் படுகிறாரோ..
    • உடான்ஸ் லீக்ஸ் இணையதளம் அதிரடியாக அனுரவின் கொள்கை பிரகடனத்தை லீக் செய்துள்ளது, இதன் முக்கிய விபரங்கள்: 1. மாகாண சபைகளுக்கு காணி அதிகாரம் 2. மாகாண சபைகளுக்கு பொலிஸ் அதிகாரம் 3. தமது பிரதேசங்களில் மத ஸ்தலங்கள் கட்டுவதற்கான அனுமதி வழங்கும் அதிகாரம் மாகாணசபைகளுக்கு மட்டுமே வழங்கப்படும். இதில் தொல்பொருட்கள் உட்பட எந்த அரச திணைக்களமும் மாகாண சபையை மீறி செயல்பட முடியாது. 4. கடந்த 5 வருடத்தில் கட்டப்பட்ட அனுமதியில்லா மததலங்கள் இடிக்கப்படும். 5. போர் இல்லை, இப்போ மூவின மக்களும் ஒண்டுக்கு இருக்கிறார்கள், எனவே முப்பட்டைகள் 1/3 ஆல் குறைக்கப்படும். இந்த பணம் வைத்திய, கல்வி துறைக்கு நேரடியாக ஒதுக்கப்படும். முப்படை முகாம்கள் 1983 க்கு முந்திய நிலைக்கு போகும். 6.  1948 இல் இருந்து இலங்கை அரசுகள் கடைபிடித்த இன ஒதுக்கலுக்கு அரசு சார்பாக சிறுபான்மையினரிடம் மன்னிப்பு கேட்கிறோம். 7. இலங்கைக்கு உழைத்த, இங்கே பிறந்து இந்தியாவுக்கு அனுப்பபட்டவகளிடம் மன்னிப்பு கேட்கிறோம். 8. மாகாண சபைகளுக்கு வரி விதிக்கும், வெலிநாட்டு நேரடி முதலீட்டை ஈர்க்கும் அதிகாரம் கொடுக்கப்படும். (யாவும் கற்பனை)
    • வினா இலக்கங்கள் 5, 24, 26 5 ) எல்லா போட்டியாளர்களும் சிறிதரன் அவர்கள் வெற்றி பெறுவார் என கணித்திருக்கிறார்கள்.  24) 24 போட்டியாளர்கள் சாணக்கியன் வெற்றி பெறுவார் என கணித்திருக்கிறார்கள்  26) குகதாசன் வெற்றி பெறுவார் என சரியாக சொன்னவர்கள் 22 போட்டியாளர்கள்.  1)பிரபா - 39 புள்ளிகள் 2)வீரப்பையன் - 34 புள்ளிகள் 3) வாதவூரான் - 34 புள்ளிகள் 4) வாலி - 34 புள்ளிகள் 5) தமிழ்சிறி - 33 புள்ளிகள் 6) கந்தையா 57 - 32 புள்ளிகள் 7) Alvayan - 32 புள்ளிகள் 😎 புரட்சிகர தமிழ் தேசியன் - 32 புள்ளிகள் 9) நிழலி - 32 புள்ளிகள் 10) ரசோதரன் - 31 புள்ளிகள் 11) சுவைபிரியன் - 30புள்ளிகள் 12) ஈழப்பிரியன் - 30 புள்ளிகள் 13)நூணாவிலான் - 30 புள்ளிகள் 14)வில்லவன் - 30 புள்ளிகள் 15) நிலாமதி - 30 புள்ளிகள் 16)கிருபன் - 29 புள்ளிகள் 17)goshan_che - 29 புள்ளிகள் 18)சசிவர்ணம் - 28 புள்ளிகள் 19) வாத்தியார் - 26 புள்ளிகள் 20) புலவர் - 26 புள்ளிகள் 21)புத்தன் - 26 புள்ளிகள் 22)சுவி - 23 புள்ளிகள் 23) அகத்தியன் - 21 புள்ளிகள் 24) குமாரசாமி - 21 புள்ளிகள்  25) தமிழன்பன் - 16 புள்ளிகள் 26) வசி - 16 புள்ளிகள் இதுவரை 1, 2,4, 5, 7, 8,10 - 13, 16 - 18, 22, 24, 26 - 31, 33, 34, 38 - 42 , 48, 52 கேள்விகளுக்கு புள்ளிகள் வழங்கியுள்ளேன் ( அதிக பட்ச புள்ளிகள் 59)
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.