Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியத் தூதரகத்தினால் திருமலையில் 21 ஆழ்கடல் மீன்பிடி மீனவ சங்கங்களுக்கு உபகரணங்கள் வழங்கிவைப்பு

வரலாற்று ரீதியாக இலங்கையின் மீனவ சமூகத்தின் தாயகமாக சிறந்து விளங்கும் திருகோணமலை நகரத்தில் மீன்பிடித்தல் என்பது இங்கு ஒரு தொழில் மட்டுமல்ல.

ஒரு வாழ்க்கை முறையாகும், இது பழங்கால பாரம்பரியமாக செய்துவரும் இத்தொழில் மூலம் பல்லாயிரம் குடும்பங்களுக்கான  வாழ்வாதாரத்தை வழங்குகிறது என்று இந்திய உயரிஸ்தானிகர் சந்தோஷ் ஜா தெரிவித்தார்.

இலங்கை மற்றும் இந்தியாவின் நட்புறவை மேம்படுத்தும் நோக்கில் இந்திய தூதரகத்தினால் திருகோணமலையிலுள்ள 21 ஆழ்கடல் மீன்பிடி மீனவ சங்கங்களுக்கு மீன்பிடி உபகரணங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு திருகோணமலை கடற்றொழிலாளர்கள் தொழிற்சங்க தலைவர் ரவிக்குமார் தலைமையில் நேற்று (03 திருகோணமலை திருக்கடலூர் மீனவர்கள் வர்த்தக சங்கக்கட்டடத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக இந்திய உயரிஸ்தானிகர் சந்தோஷ் ஜா கலந்துகொண்டு மீனவர்களுக்கான உபகரணங்களை வழங்கிவைத்து உரையாற்றும்போதே அவர், இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், இப்பகுதி மக்களுக்கு உணவு, வருமானம் மற்றும் தேவைகளுக்கான நம்பிக்கையை கடலன்னை வழங்கியுள்ளது.

இலங்கைக்கு இந்தியா வழங்கிய பெரிய அபிவிருத்தி ஒத்துழைப்பு உதவிகளின் வரிசையில், இந்த நாட்டின் மீனவ சமூகத்தை ஆதரிப்பதும், ஊக்குவிப்பதும், மேம்படுத்துவதற்குமான  எமது முயற்சி முக்கிய இடத்தில் உள்ளது. 2009- 2010 ஆம் ஆண்டு உள்நாட்டு ஆயுத மோதலை அடுத்து உள்நாட்டில் இடம்பெயர்ந்த மீனவர்கள் உள்ளிட்ட மீனவர்களுக்கு கடந்த காலங்களில் மீன்பிடி உபகரணங்களை வழங்கிய பல நிகழ்வுகளும் இதில் அடங்கும்.

கிழக்கு மாகாணத்தின் பல்துறைசார் மானிய உதவிகளுக்கென சுமார் 2.35 பில்லியன் இலங்கை ரூபாய்களை ஒதுக்க இந்தியா உறுதியளித்துள்ளது என்பதை உங்களுக்குத் தெரிவித்துக்கொள்வதில் பெரும் மகிழ்ச்சியடைகிறேன்.

வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கான 33 திட்டங்களுக்கான, கட்டமைப்பு திட்டங்கள்  இறுதி செய்யப்பட உள்ளன.

இவற்றில், 7 மீன்பிடித் திட்டங்கள் கிழக்கு மாகாணத்தின் மூன்று மாவட்டங்களிலும், மீன்பிடி உபகரணங்களை வழங்குவது மட்டுமல்லாமல், நன்னீர் அலங்கார மீன் வளர்ப்பு, கடற்பாசி கூண்டு வளர்ப்பு, திலாப்பியா குளத்து மீன் வளர்ப்பு மற்றும் பருவகால தொட்டி மேம்பாடு போன்ற கருப்பொருள்கள் உள்ளடங்கியுள்ளன.

இன்று உங்களின் கோரிக்கைகளின் அடிப்படையில், கடின உழைப்பாளிகளான திருகோணமலை மீனவர்களுக்கு, அபிவிருத்தி உதவிப் பொதியை வழங்குவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

இந்த உதவித் தொகுதியில், படகுகளுக்கான வெளியிணைப்பு  இயந்திரம், பிடித்த மீன்களை பாதுகாக்க கூடிய உறைவிக்கும் இயந்திரங்கள் மற்றும் உயிர்காப்பு அங்கிகள்  ஆகியவை அடங்கும்.

இவை உங்கள் அன்றாட நடவடிக்கைகளின் பாதுகாப்பு மற்றும் செயல்திறன் ஆகிய இரண்டையும் மேம்படுத்த உதவும் அத்தியாவசியமான கருவிகள்.

ஆழமான உறைவிப்பான்கள் உங்களால் பிடிக்கப்பட்ட மீன்களை தரம்கெடாது பேணுவதை உறுதி செய்யும் அதேவேளையில், உங்கள் வருமானத்தைப் பெருக்குவதற்கும் பங்களிக்கும். கடலில் சிக்கித்தவிக்கும் அல்லது விபத்துகளை சந்திக்கும் மீனவர்களையும் மற்றும் அவர்களது படகுகளை பாதுகாப்பாக மீட்பதற்கு அதிக வலுகொண்ட வெளியிணைப்பு இயந்திரங்கள் மற்றும் உயிர் காப்பு அங்கிகள் முக்கியமான ஆதரவை வழங்கும்.

இந்தியாவும் இலங்கையும் நமது கரையோரங்களை இணைக்கும் வரலாறு, கலாச்சாரம் மற்றும் இந்தியப் பெருங்கடலில் வேரூன்றிய ஆழமான பிணைப்பைப் பகிர்ந்து கொள்கின்றன.

கடந்த வாரம், இந்தியா – இலங்கை மீன்வளத்துறையின் கூட்டுப் பணிக்குழுவின் 6வது கூட்டம் கொழும்பில் நடைபெற்றது. இதில் இரு தரப்பினரும் மீனவர்கள் தொடர்பான அனைத்து பிரச்சினைகளையும் விரிவாக ஆய்வு செய்தனர்.

இலங்கையில் மீன்பிடித் தொழிலின் முக்கியத்துவத்தையும், மீனவர்களாகிய நீங்கள், இயற்கையாலும், சந்தைப்படுத்துவதில் உள்ள விடயங்களாலும், நவீன உபகரணங்களை அணுகுவதன் மூலமும் எதிர்கொள்ளும் சவால்களையும்  இந்தியாவில் உள்ள  நாங்கள் புரிந்துகொள்கிறோம். இந்த நட்புறவு மற்றும் கூட்டாண்மையின் உணர்வில்தான் இந்தியா இலங்கைக்குத் தேவையான நேரங்களில் தொடர்ந்து துணை நின்றது. இனியும் நிற்கும். இன்றைய உதவி அந்த திசையில் பயணிப்பதற்கான மற்றொரு படியாகும்.

இந்தமுயற்சி பொருளுதவி வழங்குவது மட்டுமல்ல, திருகோணமலை மீனவ சமூகத்தின் நிலையான எதிர்கால சமூகங்களை வலுப்படுத்துவதும், அதற்கான முதலீடுகளை  செய்வதுமாகும்.

வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கும், வாய்ப்புகளை உருவாக்குவதற்கும், தன்னம்பிக்கையை வளர்ப்பதற்கும் எங்களின் பகிரப்பட்ட அர்ப்பணிப்புக்கு இது ஒரு சான்றாகும்.

இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான பங்காளித்துவத்தையும் உறவையும் தொடர்ந்து வலுப்படுத்துவோம். நமது பகிரப்பட்ட எதிர்காலம் செழிப்பு, அமைதி மற்றும் முன்னேற்றம் கொண்டதாக இருப்பதை உறுதிசெய்ய நமது அரசாங்கங்கள், நமது மக்கள் மற்றும் நமது சமூகங்கள் தொடர்ந்து இணைந்து செயல்படும்.

இந்த உதவி மூலம் உங்கள் வாழ்வில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும் என்று நம்புகிறேன். நீங்கள் இந்த பிராந்தியத்தின் முதுகெலும்பு.

உங்கள் வெற்றி ஒட்டுமொத்த சமூகத்திற்கும் கிடைத்த வெற்றியாகும். உங்கள் வலைகள் எப்போதும் நிரம்பியிருக்கவும், கடலுக்கு செல்லும் எமது மீனவ உறவுகள்  அனைவரும் பாதுகாப்பாக   கரைக்குத் திரும்பவும் வேண்டி இறைவனை பிரார்த்திக்கிறேன் என்றார்.

Edited by ஏராளன்
heading change

  • ஏராளன் changed the title to இந்திய நிதியில் கிழக்கிற்கான உதவிகள்
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இந்திய நிதி உதவியில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சத்திர சிகிச்சைப் பிரிவு திறப்பு

image

இந்திய உயரிஸ்தானிகர் சந்தோஷ் ஜா  மற்றும் சுகாதார அமைச்சின் செயலாளர் வைத்தியர் பி.ஜி. மஹிபால ஆகியோர் இணைந்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் புதிய சத்திர சிகிச்சைப் பிரிவைத் திறந்து வைத்துள்ளனர்.

300 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான இந்திய நிதி உதவியின் கீழ் இந்த புதிய சத்திர சிகிச்சைப் பிரிவு திறந்து வைக்கப்பட்டுள்ளது.

gvjhngbjn.jpg

fchbvhb.jpg

fvb.jpg

https://www.virakesari.lk/article/197871

  • கருத்துக்கள உறவுகள்

..உதவி செய்து உபத்திரம் செய்யும் இந்திய உலவாளிகளுக்கு நன்றி..நம்ம தோழரிட்ட இந்த பருப்பு வெகாது 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இந்திய நன்கொடையின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட மட்டு.போதனா வைத்தியசாலையின் சத்திர சிகிச்சை அலகு திறந்து வைப்பு

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட சத்திரசிகிச்சை பிரிவை இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் சந்தோஷ் ஜா மற்றும் இலங்கை சுகாதார அமைச்சின் செயலாளர் டாக்டர் பாலித குணரத்ன மகிபால ஆகியோர் திறந்து வைத்தனர்.

இந்நிகழ்வில், மட்டக்களப்பு அரசாங்க அதிபர் திருமதி முரளிதரன், கிழக்கு மாகாண சுகாதார செயலாளரும் மட்டக்களப்பு மாநகர ஆணையாளருமான சிவலிங்கம், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் டாக்டர் கலராஞ்சனி கணேசலிங்கம், சுகாதார அமைச்சு, கிழக்கு மாகாண சபை மற்றும் மட்டக்களப்பு மாவட்ட நிர்வாக அலகுகளைச் சேர்ந்த உயரதிகாரிகள், மற்றும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை ஊழியர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இம்மருத்துவமனை விடுதிகளில் அனுமதிக்கப்படும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு, மற்றும் அங்கு இடம்பெறும் அதிகளவான அறுவை சிகிச்சைகள் காரணமாக இம்மருத்துவமனையில் புதிய அறுவை சிகிச்சை பிரிவுக்கான தேவை 2015 ஆம் ஆண்டில் உணரப்பட்டிருந்தது. இதற்கான திட்டம் முன்மொழியப்பட்ட காலத்தில், சுமார் 1280 நோயாளிகள் சத்திர சிகிச்சைக்காக காத்திருப்புப் பட்டியலில் இருந்தனர். இங்கு போதிய வசதிகள் இல்லாததால், நோயாளர்கள் அதிக காலப்பகுதிக்கு காத்திருக்க வேண்டிய தேவை ஏற்பட்டிருந்தது.

இந்நிலையில் இலங்கை அரசாங்கத்தின் கோரிக்கைக்கு அமைவாக இங்கு புதிய சத்திர சிகிச்சை  பிரிவு ஒன்றை நிர்மாணிப்பதற்கான உதவிகளை வழங்க இந்திய அரசாங்கம் இணங்கியது. இந்த திட்டப்பணிக்காக 275 மில்லியன் இலங்கை ரூபாவை நன்கொடை உதவியாக வழங்க இந்தியா தீர்மானித்த நிலையில் 2016 பெப்ரவரியில் அதற்கான புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டது. அதன் பின்னர் இந்திய அரசு கூடுதல் நிதியை குறித்த திட்டத்துக்காக ஒதுக்கிய நிலையில் இத்திட்டத்திற்கான மொத்த இந்திய ஒதுக்கீடு SLR 302 மில்லியனாக உயர்வடைந்தது.

IT சார்ந்த பணிகள், தொழில்நுட்ப வேலைகள், மின்சார வசதிகள், நீர் வழங்கல் மற்றும் கழிவு நீர் வடிகால் அமைப்புகள் போன்ற அத்தியாவசிய உட்கட்டமைப்புகளுடனான நான்கு அதிநவீன சத்திரசிகிச்சை கூடங்கள் மற்றும் பத்து ICU கட்டில்களுடன் 1464 சதுர மீட்டர் பரப்பளவில் இரண்டு மாடிக் கட்டடங்களை அமைக்கின்றமையே இத்திட்டத்தின் பரந்த உள்ளட்டக்கமாகும்.

இந்நிலையில் நாட்டில் ஏற்பட்ட கொவிட்-19 பெருந்தொற்று மற்றும் ஏனைய பொருளாதார சிக்கல்கள் காரணமாக இத்திட்டத்தில் சில சவால்கள் ஏற்பட்ட நிலையில், இத்திட்டமானது அண்மையில் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதுடன், இச்சத்திர சிகிச்சை அலகானது பரீட்சார்த்த செயற்பாடுகளின் பின் திறந்துவைக்கப்பட்டுள்ளது. இவற்றுக்கு மேலதிகமாக, இம்மருத்துவமனை அதிகாரிகளின் கோரிக்கைகளின் அடிப்படையில், மின்பிறப்பாக்கி, மருத்துவ வாயு மற்றும் அருகிலுள்ள சிறுநீரக பராமரிப்பு அலகிலிருந்து மின் வசதிகளை பெற்றுக்கொள்வதற்கான் வழிவகைகளை அமைத்தல் போன்ற மேலதிக வசதிகளைப் பெற்றுக்கொள்வதற்கும் இந்தியா மேலதிக உதவிகளை வழங்கியது.

இந்நிலையில், நவம்பர் 4 ஆம் திகதி நடைபெற்ற திறப்பு விழாவில், உரை நிகழ்த்திய இலங்கை சுகாதார அமைச்சின் செயலாளர் டாக்டர் மஹிபால அவர்கள், மருத்துவமனையால் முக்கியமான மருத்துவ சேவைகளை தடையின்றி வழங்குவதில் இந்த அலகானது குறிப்பிடத்தக்க தேவையை பூர்த்தி செய்யும் எனக் குறிப்பிட்டதுடன், இந்த திட்டத்திற்காக பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான இந்திய அரசுக்கும் இந்திய மக்களுக்கும் இலங்கை அரசாங்கத்தின் சார்பாக நன்றியையும் தெரிவித்தார். அத்துடன் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் டாக்டர் கலாரஞ்சனி கணேசலிங்கம் அவர்கள் கருத்து தெரிவிக்கும்போது, புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள இந்த சத்திரசிகிச்சைப் பிரிவினால் சத்திரசிகிச்சைக்கான காத்திருப்புப் பட்டியல் 50 வீதத்தால் குறைக்கப்படுமென எதிர்பார்க்கப்படுவதுடன், ஆண்டுதோறும் 3,000 முதல் 5,000 வரையிலான புதிய நோயாளர்கள் பயனடைவார்கள், இதனால் பிராந்தியத்தில் தரமான சுகாதாரப் பராமரிப்பு சேவைக்கான அணுகல் கணிசமான அளவில் முன்னேற்றமடைகின்றது எனச் சுட்டிக்காட்டினார்.

இதேவேளை இங்கு உரை நிகழ்த்தியிருந்த உயர் ஸ்தானிகர் கௌரவ சந்தோஷ் ஜா அவர்கள், இலங்கையில், குறிப்பாக கிழக்கு மாகாணத்தில், முதலீட்டினை அடிப்படையாகக் கொண்டும் நன்கொடை உதவி-அடிப்படையிலும் முன்மொழியப்பட்ட பணித்திட்டங்கள், ஏற்கனவே திட்டமிடப்பட்ட மற்றும் தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கும் இருதரப்பு திட்டங்கள் தொடர்பாக சுட்டிக்காட்டியிருந்தார். முதலீட்டு திட்டங்களின் அடிப்படையில், தாங்கி தொகுதிகள் அபிவிருத்தி, சம்பூரில் சூரியசக்தி மின் உற்பத்தி ஆலை மற்றும் பல்பொருள் குழாய் இணைப்பு ஆகியவற்றை இவற்றுக்கான உதாரணங்களாக குறிப்பிட்டிருந்தார். அத்துடன், அபிவிருத்தி உதவித்திட்டங்களின் அடிப்படையில், மொத்தம் 46,000 வீடுகளை உள்ளடக்கிய இந்திய வீட்டுத்திட்டத்தின் முதல் இரண்டு கட்டங்களின் கீழ் கிழக்கு மாகாணத்தில் 4000 வீடுகளை நிர்மாணித்தமை மற்றும் புனரமைத்தமை, 2009-10 ஆம் ஆண்டில் யுத்தம் முடிவடைந்த நிலையில் பல்லாயிரக்கணக்கான நோயாளிகளுக்கு இந்திய அவசர மருத்துவ நிலையங்களில் சிகிச்சை அளித்தமை, அம்மாகாணத்தின் மீனவ சமூகத்திற்கு அந்தந்த காலப்பகுதிகளில் வழங்கப்பட்ட வாழ்வாதார உதவிகள், திருகோணமலைக்கும் மட்டக்களப்புக்கும் இடையில் ரயில்-பேருந்து சேவை அமைக்கப்பட்டமை, கிழக்குப் பல்கலைக்கழகம் மற்றும் வந்தாறுமுல்லை மற்றும் ஒந்தாச்சிமடத்தில் உள்ள தொழிற்பயிற்சி நிலையங்கள் உட்பட 500க்கும் மேற்பட்ட கல்வி நிலையங்களில் மேற்கொள்ளப்பட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி மற்றும் அந்நிலையங்களுக்கான உபகரண விநியோக திட்டங்கள், வாழ்வாதார நடவடிக்கைகள் மூலம் பெண்கள் மேம்பாட்டுக்கான ஆதரவு, கிழக்குப் பல்கலைக்கழகத்தில் கற்கும் பொருளாதார ரீதியான ஆதரவு தேவைப்படும் மாணவர்களுக்கான நிதி உதவிகள் மற்றும் ஏனைய முக்கிய திட்டங்கள் தொடர்பாக அவர் இச்சந்தர்ப்பத்தில் நினைவூட்டியிருந்தார்.

மேலும் கடந்த ஆண்டில் 2.35 பில்லியன் இலங்கை ரூபாவை புதியதொரு திட்டமாக கிழக்கு மாகாணத்தின் பல் நோக்கு உதவிகளுக்காக நன்கொடையாக வழங்குவதற்கு இந்தியா தீர்மானித்திருந்ததாக உயர் ஸ்தானிகர் இங்கு சுட்டிக்காட்டியிருந்தார். இந்த திட்டத்தின் கீழ் 33 வாழ்வாதார உதவி திட்டங்களுக்கான ஒத்துழைப்புக்கான கட்டமைப்பின் உருவாக்கம் நிறைவடையும் நிலையில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

இவ்வாறான நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்திய சாலையில் நிர்மாணிக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்ட சத்திர சிகிச்சை அலகானது இலங்கையின் சுகாதாரத்துறையில் இந்தியாவால் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தி ஒத்துழைப்பு திட்டங்களின் நீண்டதொரு பட்டியலில் இணைந்துகொள்கின்றது.

இப்பட்டியலில் மிகவும் முக்கியமான உதாரணங்களாக நாடளாவிய ரீதியிலான 1990 சுவசெரிய அம்புலன்ஸ் சேவை, அதேபோல ஆயுத மோதல்கள் இடம்பெற்ற காலப்பகுதிகளிலும் கொவிட் 19 பெருந்தொற்று ஏற்பட்ட காலப்பகுதிகளிலும் வழங்கப்பட்ட மருத்துவ உதவிகள், டிக்கோயாவில் நிர்மாணிக்கப்பட்ட 150 கட்டில் வசதிகளைக் கொண்ட மருத்துவமனை, உட்கட்டமைப்பு அபிவிருத்திகள் மற்றும் மேம்பாடு, யாழ் போதனா வைத்திய சாலை, கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவ மனைகளுக்கான சாதனங்கள் விநியோகம் மற்றும் ஏனைய திட்டங்கள் காணப்படுகின்றன.

 

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.