Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
image

பரீட்சையை முதன்மையாகக் கொண்ட கல்வித்திட்டத்திற்குப் பதில் சமூகத்தில் மாற்றங்களை ஏற்படுத்தக் கூடிய பிரஜைகளை உருவாக்கும் கல்வித்திட்டம் ஒன்று ஏற்படுத்தப்பட வேண்டும் என பிரதமர் ஹரினி அமரசூரிய தெரிவித்தார்.   

கண்டி தபால் நிலைய கேட்போர்கூடத்தில் இடம் பெற்ற கூட்டம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.  

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,   

கடந்த காலங்களில் எதுவித அடிப்படையும் அற்ற நிலையில் நண்பர்களுக்கும் னையவர்களுக்கும்  அமைச்சுப் பதவிகள் வழங்கப்பட்டன.  

எதிர்கட்சியில் இருந்து யார் ஆதரவு தருகிறார்ளோ  அவர்களுக்கு அமைச்சர் பதவிகள்  வழங்கப்பட்டன.  அவ்வாறான அமைச்சுக்களுக்கு விஞ்ஞான ரீதியாக தொடர்புகள் இருக்க வில்லை.  

உதாரணத்திற்கு உயர் கல்வி, பெருவீதிகள் அமைச்சு என்று ஒன்று இருந்தது. உயர் கல்விக்கும் பெரு வீதிக்கும் விஞ்ஞான ரீதியில் என்ன தொடர்பு எனக் கேட்டதற்கு  உயர் கல்வி மாணவர்கள் எப்போதும் பெருவீதிகளில் இருந்து ஆர்பாட்டம் செய்கிறார்கள், எவேபொருத்தமானது  எனக் கூறப்பட்டது. இவை நகைப்புக்கிடமான விடயங்கள். 

இப்படி யல்லாது எதிர்காலத்தில் கல்வியுடன் தொடர்புபட்ட சகல துறைகளையும் ஒன்றிணைத்த அமைச்சு ஒன்று உருவாக்கப்பட வேண்டும்.  

அதாவது உயர் கல்வி, பாடசாலைக் கல்வி, பாலர் கல்வி, தொழில் நுற்பக் கல்வி,தொழிற் கல்வி,தொழில் நுட்பக்கல்லூரிகள், பல்லைக்கழகங்கள், பாசலைச்சவைகள்  போன்ற கல்வியுடன் தொடர்புடைய அனைத்து துறைகளும் ஒன்றாக இணைக்கப்பட  வேண்டும். 

மேலும் தற்போது பரீட்சையை மையமாகக் கொண் கல்வியே உள்ளது. 10 முதல் 12 வயது வரையானவர்கள் கூட புலமைப்பரிசில் என்று பரிட்சையை மையமாகக் கொண்டு போட்டிக்காகப் பயில் கின்றனர். 

 இந்த வயதுப்பிரிவு போட்டிப் பரீட்சைக்குறிய வயதல்ல. எனவே நாட்டிற்கு தேவையான மாற்றங்களை ஏற்படுத்தும் பிரஜைகள் உருவாகும் கல்வித்திட்டமே தேவை என்றார்.    

https://www.virakesari.lk/article/198152

Edited by ஏராளன்

  • ஏராளன் changed the title to நாட்டிற்கு தேவையான மாற்றங்களை ஏற்படுத்தும் பிரஜைகளை உருவாகும் கல்வித்திட்டமே தேவை ; பிரதமர் ஹரினி
  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ஏராளன் said:

இந்த வயதுப்பிரிவு போட்டிப் பரீட்சைக்குறிய வயதல்ல. எனவே நாட்டிற்கு தேவையான மாற்றங்களை ஏற்படுத்தும் பிரஜைகள் உருவாகும் கல்வித்திட்டமே தேவை என்றார்.    

அவ்வளவு தான். உணமையான உலகை சந்திக்க கூடிய கல்வி திட்டம் தேவை. பரீட்சை வினாத்தாள்கள் பலவற்றை படித்து பரீட்சை  எழுதும் கல்வி முறை நாட்டுக்கு உதவ போவதில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ஏராளன் said:

அதாவது உயர் கல்வி, பாடசாலைக் கல்வி, பாலர் கல்வி, தொழில் நுற்பக் கல்வி,தொழிற் கல்வி,தொழில் நுட்பக்கல்லூரிகள், பல்லைக்கழகங்கள், பாசலைச்சவைகள்  போன்ற கல்வியுடன் தொடர்புடைய அனைத்து துறைகளும் ஒன்றாக இணைக்கப்பட  வேண்டும். 

இது மிக பெரும் ஒன்றிணைந்த கல்வி சமூகத்தை கட்டியமைக்கும் திட்டம் , எவ்வளவு தூரம் சாத்தியமாக்குவீர்களோ தெரியாது.

ஆனால் முடிந்தவரை  இப்போதிலிருந்தே படிப்படியாக ஆங்கில கல்வி முறைமையை இலங்கை முழுவதும் அறிமுகபடுத்துங்கள், அவரவர் தாய்மொழி கட்டாய பாடமாக இருக்கட்டும்.

சிங்களவனுக்கும் தமிழனுக்கும் பொதுவான ஒரு மொழி இருந்தால் இளம் தலைமுறையாவது மேற்குலக சிறுவர்கள்போல் தமக்குள்ளேயே ஒரு நட்புறவை உருவாக்கி  ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு வாக்குக்காக வன்மம் வளர்க்கும் அரசியலையும் அரசியல் வாதிகளையும் ஓரளவாவது ஓரம் கட்டலாம்.

ஆக குறைந்தது உயர்தரம்வரை படித்தால் கூட ஆங்கில அறிவின்மூலம் இணையவழி கல்வியின் மூலமாகவாவது சர்வதேச கல்விதரத்தை  அடையலாம் வேலை வாய்ப்புகள் பெறலாம்.

சொந்த மொழியில் பாடத்திட்டங்களை கற்றுவிட்டு பல்கலைகழகம் கிடைக்கவில்லையென்றால் அப்பன் தொழிலையோ அல்லது அகப்பட்ட தொழிலையோ செய்துகொண்டு குண்டு சட்டிக்குள் குதிரை ஓடியபடி  மறுபடியும் படிக்காத ஒரு சமூகம் போலவே வறுமையுடன் இளைஞர்களின் எதிர்காலம் தொடரும்.

இன்று மேற்குலகம் முழுவதும் இந்தியர்கள் பரந்து விரிவதற்கு அவர்களின் ஆங்கிலவழி கல்வியே 70% மான காரணம் மீதி அவர்கள் தேர்ந்தெடுக்கும் பாடத்திட்டங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
On 8/11/2024 at 06:41, ஏராளன் said:

பரீட்சையை முதன்மையாகக் கொண்ட கல்வித்திட்டத்திற்குப் பதில் சமூகத்தில் மாற்றங்களை ஏற்படுத்தக் கூடிய பிரஜைகளை உருவாக்கும் கல்வித்திட்டம் ஒன்று ஏற்படுத்தப்பட வேண்டும் என பிரதமர் ஹரினி அமரசூரிய தெரிவித்தார். 

பரீட்சையை முதன்மையாகக் கொண்ட கல்வித்திட்டம் தான் இந்தியாவிலும் நடைமுறைபடுத்தபட்டு வருவதாக அறிய முடிகின்றது

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 8/11/2024 at 11:06, valavan said:

இன்று மேற்குலகம் முழுவதும் இந்தியர்கள் பரந்து விரிவதற்கு அவர்களின் ஆங்கிலவழி கல்வியே 70% மான காரணம் மீதி அவர்கள் தேர்ந்தெடுக்கும் பாடத்திட்டங்கள்.

தமிழ் , தமிழ் மூத்தகுடி என  சொல்லிக்கொண்டு நிலத்தை தோண்டி பழைய மண்சட்டிகள் எடுத்ததுதான் கண்ட பலன் 😎

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.