Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சூடும்-ருசியும்: மட்டக்களப்பில் ‘போனஸ் ‘ மும்முனைப் போட்டி….?

சூடும்-ருசியும்: மட்டக்களப்பில் ‘போனஸ் ‘ மும்முனைப் போட்டி….?

— அழகு குணசீலன் —

இலங்கை பாராளுமன்ற தேர்தல் களம்,  சமூக வேறுபாடுகளைக்கடந்து பாரம்பரிய கட்சிகள், புதிய கட்சிகள், சுயேட்சைக் குழுக்கள், கடந்த தேர்தலில் வென்றவர்கள், தோற்றவர்கள், போடுகாய்கள், வாக்கு சேகரிப்போர், வாக்குப்பிரிப்போர், பழையவர்கள், புதியவர்கள் என பல்வேறுபட்ட 8888 வேட்பாளர்களால் நிரம்பி வழிகின்றது. இதற்கு மட்டக்களப்பு மாவட்டம் மட்டும் எப்படி விலக்காக இருக்கமுடியும்? 

இங்கும் அதே நிலைதான்.

 பல தடவைகள் தோல்வி அடைந்த, அடுப்பங்கரையில்  சூடுகண்ட பூனைகளும், அடுப்பங்கரையில் சட்டி, பானைகளில் கிடந்த எச்சசொச்சத்தில் ருசி கண்ட பூனைகளும் களத்தில் நிற்கின்றன. இவற்றில் சில யாரும் பார்க்கவில்லை என நினைத்து கண்களை மூடிக்கொண்டு பாலைக்குடித்தவை. நாங்கள் எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டுதான் இருந்தோம் என்று இதுவரை பார்வையாளராக இருந்த மக்களுக்கு புள்ளடியினால் ‘குறிசுடும்’ வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இந்த வாய்ப்புக்கள் எந்த வேட்பாளருக்கு, எந்தக் கட்சிக்கு வெற்றி வாய்ப்பை வழங்கப்போகிறது… ? யாரையெல்லாம் தோற்கடிக்கப்போகிறது….? 

மட்டக்களப்பு  தேர்தல் கள நிலைமைகளின் படி ‘போனஸ் ‘ ஆசனத்திற்கு மும்முனைப்போட்டி நிலவுவதாக கொள்ள வேண்டி உள்ளது.  இது தமக்கு தான் மூன்று  அல்லது  குறைந்தது இரண்டு கிடைக்கும் என்ற வீடு, படகு, சங்கு கட்சிகளின்  கருத்துக்களை அடிப்படையாகக்கொண்டது.  போனஸ் என்பது  மாவட்டத்தில் அளிக்கப்பட்ட வாக்குகளில் அதி கூடிய வாக்குகளை பெறும் கட்சிக்கு/சுயேட்சை குழுவுக்கு உரிய  மேலதிக ஆசனத்தை குறிக்கிறது. அதாவது ஐந்து ஆசனங்களில் முதல் இரண்டு ஆசனங்களையும் பெறும் கட்சி எந்தக் கட்சி என்பதாகும். இம்முறை கள நிலவரங்களின் படி போனஸ் ஆசனத்துடன் மூன்று ஆசனங்களை பெறும் வாய்ப்பு எந்தக் கட்சிக்கும் கிடைக்க வாய்ப்பில்லை.  அதற்கு கட்சி ஒன்று குறைந்தது ஒரு இலட்சம் வாக்குகளையாவது பெறவேண்டும். 

 1989 தேர்தலில் வெறும் 55, 131 வாக்குகளை பெற்று தமிழர் விடுதலைக்கைட்டணி மூன்று ஆசனங்களை பெற்ற அசாதாரண சூழ்நிலையோ அல்லது 46,413 வாக்குகளை பெற்ற ஈரோஸ் வெறும் ஒன்பதாயிரம் வாக்கு வித்தியாசத்தில் ஒரே ஒரு ஆசனத்தை மட்டும் பெற்ற நிலையோ இன்று இல்லை. கடந்த 2020 தேர்தலில் வாக்களிப்பு மட்டம் உயர்வாகவும், தேர்தல் ஜனநாயக வழிமுறைகளை பின்பற்றியும் இடம்பெற்றது. இதனால் வாக்களிப்பு வீதம்  ஒப்பீட்டளவில்  இம்முறையும் அதிகமாக இருக்க வாய்ப்புண்டு. அதிகளவான கட்சிகளும், சுயேட்சைகளும் களத்தில் நிற்பது இதற்கு ஒரு காரணம். வழக்கம் போல் சோனக பிரதேசங்களில் ஒப்பீட்டளவில் தமிழ்ப் பிரதேசங்களை விடவும் வாக்களிப்பு வீதம் அதிகமாக இருக்கும் போது மாவட்டத்தின் மொத்த வாக்களிப்பு வீதத்தை இது அதிகரிக்கச் செய்யும் . 

எல்லாத்தரப்பிலும் வாக்காளர் மத்தியில் கட்சிகள், அவற்றின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் குறித்த அதிருப்தி நிலவுகிறது. மட்டக்களப்பு  தமிழ் மக்கள் தேர்தலில் அதிக ஆர்வமாக இல்லை.  சமூகம் சார்ந்த நோக்கில் இது அவ்வளவு ஆரோக்கியமானதாக இல்லை. ஒரு பகுதியினர்  எந்தக்கட்சியை, யாரை ஆதரிப்பது என்பது குறித்து இன்னும் தீர்மானிக்கவில்லை. இருந்தும் முஸ்லீம் பிரதேசங்களில் வாக்களிப்பு வீதம் எண்பதைத்தொடும் என்றும், தமிழ்ப்பிரதேசங்களில் இது மட்டுமட்டாக வெறும் எழுபது வீதத்தையே  எட்டிப்பிடிக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. வாக்களிப்பு வீதத்தில் ஏற்படும் அதிகரிப்பு ஒரு உறுப்பினர் தெரிவு செய்யப்படுவதற்கு  தேவையான வாக்கு தொகையையும் அதிகரிக்கும். குறைந்தது கட்சி ஒன்று பிரதிநிதித்துவத்தைப்பெற குறைந்தது 35,000 – 40,000 ஆயிரம் வாக்குகளையாவது பெற வேண்டியிருக்கும்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 2020 பாராளுமன்ற தேர்தலில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு  (தமிழரசு,ரெலோ,புளட் +)  ஒன்றாக இணைந்து 79,460 வாக்குகளை பெற்றும் இரண்டு ஆசனங்களையே பெறமுடிந்தது. தமிழ்மக்கள் விடுதலைப்புலிகள் தனித்தும், அதன் தலைவர் சி.சந்திரகாந்தன் (பிள்ளையான்) சிறையில் இருந்தும், வாக்காளர் ஒருவரைக் கூட சந்தித்து ஆதரவு கோரமுடியாத நிலையிலும் ரி.எம்.வி.பி 67, 692 வாக்குகளை பெற்றது. மாவட்டத்தில் அதிகூடிய விருப்பு வாக்கும் பிள்ளையானுக்கு கிடைத்தது. வேட்பாளர்களை  விடவும் தலைமை வேட்பாளருக்கும், கட்சிக்கும் வாக்களிக்கின்ற தேர்தல் தந்திரோபாயத்தின் பெறுபேறு இது. இதன்மூலம் செல்லுபடியற்றதாக கழிக்கப்படுகின்ற வாக்குகள் ரி.எம்.வி.பி. வாக்குகளில் குறைவாக இருக்கும்.

இந்த நடைமுறையை தமிழ்த்தேசிய கட்சிகளிடம் எதிர்பார்க்க முடியாது அவர்கள்  எட்டு பேரும் தங்கள் தங்களை  முதன்மைப்படுத்தி ஓடுகிறார்கள்.    இன்றைய நிலையில் பிள்ளையான் கடந்த முறை பெற்றளவு வாக்குகளில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது. முக்கியமாக மேய்ச்சல் தரை, நிலப்பிரச்சினைகள் தொடர்பாக பாதிக்கப்பட்ட மக்கள் அதிருப்தியில் உள்ளனர். பிள்ளையானின் போக்குவரத்து வீதி, பாலங்கள் உட்கட்டமைப்பு, கிராமிய பொருளாதார அபிவிருத்தி திட்டங்கள்,  நிர்ப்பாசனம், கல்வி, விளையாட்டு அபிவிருத்திகளுக்கு அப்பால்  இந்த பிரச்சினைகள் அதிக கவன ஈர்ப்பை பெற்றுள்ளன. அதேவேளை பட்டிருப்பில் இம்முறை பெறவுள்ள புதிய வாக்குகளின் மூலமும், கல்குடாவில் வியாழேந்திரனின் ஒரு பகுதி வாக்குகளையும் , தமிழ்த்தேசிய சிதறல் வாக்குகளையும்  பெற்று இந்த வீழ்ச்சியை பிள்ளையானால் சரி செய்யமுடியுமா? இழந்த வாக்குகளை ஈடு செய்ய பெறப்படுகின்ற புதிய வாக்குகள்  போதுமானவையா? என்ற கேள்விக்கு  களத்தில் ஆம் என்றும், இல்லை என்றும் இரு பதில்கள் நோக்கர்களால் கூறப்படுகின்றன. நவம்பர் 15இல்  இந்த கேள்விக்கான சரியான விடை தெரிந்துவிடும்.

கடந்த முறை ரி.எம்.வி.பி .சுமார் 12, 000 வாக்குகளால்  ஒரு ஆசனத்தையும் ,  மேலும்  சுமார் 70 வாக்குகளால் தேசிய பட்டியல் பிரதிநிதித்துவத்தையும் வாக்கு பிரிப்பாளர்கள், வாக்கு பொறுக்குபவர்களிடம் இழக்க வேண்டி ஏற்பட்டது.  இந்த சைக்கிள் காரர்கள் தான் ருசிகண்ட பூனையாக  கிழக்கில் அலைகிறார்கள். அதை அறிந்து மற்றைய பூனைகளும் சட்டி,பானைகளை உருட்டுகின்றன. எனினும் இன்று கடந்த தேர்தலில் நிலவிய அரசியல் சூழல் நிலவுகிறதா?  என்றால் இல்லை. 

ரி.என்.ஏ  வீடாகவும், சங்காகவும், மாம்பழமாகவும், மானாகவும் பிரிந்து நிற்கிறது. உதயசூரியனும்  இன்னோரு பக்கம். வீட்டுக்குள்ளும், சங்கிலும் உட்கட்சி நிலவரங்கள் ஆரோக்கியமாக இல்லை. மட்டக்களப்பிலும் ‘சிறி ‘ எதிர்ப்பு பிரச்சாரம் யாழ்ப்பாணம் போன்று  மேற்கொள்ளப்படுகிறது. ஆனால்  இது சிங்கள ‘சிறி’ க்கு தார்பூசிய கதையல்ல. தமிழ் ‘சிறி’க்கு’ முகத்தில் கரிபூசும் கதை.  ஒரு வகையில் பொதுவேட்பாளரை சுமந்திரன், சாணக்கியனுக்கு எதிராக ஆதரித்தமைக்கான பழிவாங்கல் கணக்குத்தீர்ப்பு.   இதற்காகவே செஞ்சோற்று கடன் தீர்க்க அரியநேந்திரன் சிறிநேசனை ஆதரிக்கிறார். கடந்த தேர்தலில் தனது வேட்பாளர் நியமனத்தை சாணக்கியன் காகமும், நரியும் வடைக்கதை போன்று தட்டிப்பறித்தார் என்று  ஜனாவை ஆதரித்தார். ஜனாதிபதி தேர்தலில் ஜனாவும் இவரை ஆதரித்தபோதும் அந்த நன்றியை மறந்துவிட்டார். இவர்களில் கணக்கை  மக்கள் யாருக்கு தீர்க்கப்போகிறார்கள் ?

கடந்த பாராளுமன்ற காலத்தில் தமிழ்த்தேசிய அரசியலை சிதைத்தவர்கள் என்ற குற்றச்சாட்டு தமிழ்த்தேசிய ஆதரவாளர்களால் சுமந்திரன், சாணக்கியன் ஆகியோர் மீது முழு வடக்கு கிழக்கிலும்  மட்டும் அல்ல தென்னிலங்கை தமிழர்களாலும், புலம்பெயர்ந்த தமிழர்களாலும் முன் வைக்கப்படுகிறது.  இவர்களில் யாழில் சுமந்திரனும், மட்டக்களப்பில் சாணக்கியனும் ‘சிறி’ க்கு கரிபூசுகிறார்கள். ரெலோ தலைவர் செல்வம் அடைக்கலநாதன் 38 கோடியை அபிவிருத்தி நிதியாக பெற்று, குருசாமிக்கு  8 கோடியை கொடுத்து விட்டு மற்றைய மாவட்டங்களுக்கு ஒரு சதமும் பங்கிட்டு ஒதுக்கவில்லை. வடக்கில் பூகம்பம் கக்குகிறது. விவகாரத்தை ஜனா சாம்பல் போட்டு மூடி மௌனம் சாதிக்கிறார். வடக்கு கட்சிகளில்  போடுகாய் பதவி வகிக்கும் கிழக்காரின் பொதுநிலை இதுதான். கடந்த பாராளுமன்ற தேர்தலின் பின்னர் கி.துரைராசசிங்கம் பதவிதுறக்க வைக்கப்பட்டதும் இந்த பொதுநிலைதான். 

கடந்த ஜனாதிபதி தேர்தலில் சுமந்திரன், சாணக்கியன் அணி சார்ந்து,  அரியநேத்திரன், சிறிநேசனுக்கு எதிராகவும், சஜீத்பிரேமதாசவை ஆதரித்தும்  தம்பிமாரே …! என்று விழித்து,தேர்தல் பிரச்சாரங்கள் முடிவடைகின்ற இறுதி நாளில் ஒரு கட்டுரை எழுதியிருந்தார் துரைராசசிங்கம். இதன் மூலம் மற்றவர்கள் அல்லது சம்பந்தப்பட்டவர்கள் பதிலளிக்கின்ற  வாய்ப்பு மறுக்கப்பட்டது. ஜனநாயக ஊடகதர்மத்தை கிடப்பில் போட்டார். இப்போது ‘சிறி’ க்கு கரி பூசும்  வகையில்  கல்குடாவில் இருந்து தனது உறவினர் ஒருவரை சுமந்திரனின், சாணக்கியன் ஆதரவுடன் வேட்பாளர் பட்டியலில் இணைத்து பிரச்சாரம் செய்கிறார்.

நல்லாட்சியில் மட்டும் அல்ல, தமிழரசுக்கட்சியில் சுமந்திரனின் தீர்மானம் எடுக்கும் திறன் கடந்த பாராளுமன்ற காலத்திலும் தொடர்ச்சியாக தோல்வி அடைந்துள்ளது. ஜனாதிபதி அநுரகுமாரவின் புதிய அரசாங்கத்திலும் தமிழ் மக்கள் அதிகாரப்பகிர்வு கோரவில்லை, தமிழர் பிரச்சினை பொருளாதாரப்பிரச்சினை, பயங்கரவாத தடைச் சட்டம் நீக்கப்படமாட்டாது,  பாதுகாப்பு வலையங்கள், காணிகள் விடுவிக்கப்படமாட்டாது , புதிய அரசியலமைப்பில் சமஷ்டிக்கு இடமே இல்லை, தமிழரசை அரசாங்கத்தில் இணைக்கமாட்டோம், வேறு கட்சியினருக்கு- சுமந்திரனுக்கு அமைச்சர் பதவி இல்லை என்ற  என்.பி.பி.யின் தொடர்ச்சியான அறிவிப்புகள் பொதுவாக ஒட்டுமொத்த தமிழ்த்தேசிய கட்சிகளுக்கும், சிறப்பாக தமிழரசுக்கட்சிக்கும், அதன் தேர்தல் விஞ்ஞாபன முழக்கத்திற்கும்  என்.பி.பி. ஆட்சியின் சாட்டையடி. 

 இவை சுமந்திரனின் அரசியல் தந்திரோபாயம் மீதான கடும் தாக்குதலாக அமைகிறது. இந்த தோல்வியின் இடைவெளியில் மற்றைய தமிழ்த்தேசிய கட்சிகள், பிராந்திய கட்சிகள், தேசிய கட்சிகள்  வாக்கு இலாபம் பெறும் நிலை ஏற்பட்டுள்ளது. என்.பி.பி.யின் இந்த நிலைப்பாடு தமிழ்த்தேசிய பாராளுமன்ற போலி அரசியலில் தமிழ்மக்கள் கொண்டிருந்த நம்பிக்கையை சிதைத்து மூளைச்சலவை செய்வதுடன், தென்னிலங்கையில் அவர்களின் வாக்கு வங்கியை அதிகரிப்பதற்கு வசதியாக உள்ளது. 

இது எதிர்காலத்தில் தமிழ்த்தேசிய அரசியலுக்கான சிவப்பு சிக்னல், அபாயச் சங்கூதல்.  சிக்னல் சிவப்பு என்றாலும், விசில் அடித்தாலும் சைக்கிளை நிறுத்தமாட்டோம் என்ற கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் கதையாடல்வேறு.இவை அனைத்தையும் நிறுத்துப்பார்க்க வேண்டிய நிலையில் மட்டக்களப்பு மக்கள் இருக்கிறார்கள். தமிழ் மக்களை அடைய முடியாத  கோஷங்களை  இலக்காகக் கூறி  இன்று வரை ஏமாற்றி வரும் தமிழ்த்தேசிய அரசியலுக்கு  என்.பி.பி. சுடச்சுட வழங்கும் பதில் ஒருவகையில் தமிழ்மக்கள் போலித்தமிழ்த்தேசியத்தில் இருந்து விழிப்படைய உதவியாக அமைகிறது. 

அதை வேளை சுயத்துவம், அபிவிருத்தி என்பன குறித்த எதிர்கால அரசியல் பயணத்திற்கான பாதையை தெரிவு செய்யவேண்டிய நிலையில் மட்டக்களப்பு மக்கள் இருக்கிறார்கள்.அதற்காக திசைகாட்டி சரியான திசையை காட்டுகிறது என்று கொள்ள முடியாது. அது அபிவிருத்தி திசையை கூட சரியாக காட்டவில்லை. சீனவினால் வழங்கப்பட்டுள்ள ஆயிரக்கணக்கான வீட்டுத்திட்ட  உதவியில்  ஒரு வீடு கூட  அநுரவின் ஆதரவுடன் இடம்பெற்ற யுத்தத்தினால்  அழிக்கப்பட்ட வடக்கு கிழக்கிற்கு ஒதுக்கப்படவில்லை.  சிங்கள மக்களுக்கு சமமான தனித்துவமான சுயத்துவத்தை தமிழ், முஸ்லீம் மக்களுக்கு இன்னும் அங்கீகரிக்கவில்லை. அதனால் இந்த தேர்தலில் மட்டக்களப்பு மக்கள் அவசரப்பட்டு ஒரு முடிவுக்கு வரக்கூடாது. அநுரகுமார திசாநாயக்கவின் ஜனாதிபதி தேர்தல் கால உரையில்  – அவரது பாஷையில் சொன்னால்  “வெற்றுக் காசோலைக்ககு”  வாக்களிக்க வேண்டாம் என்று சஜீத் பிரேமதாசவுக்கு எதிராக அவர் சொன்னதையே தமிழ்மக்கள்  அவருக்கு பதிலாக  திருப்பிக்கொடுக்க முடியும்.

மும்முனைப் போட்டியாளராகவுள்ள மூன்று முக்கிய கட்சிகளில் மாவட்டத்தில் அதிகூடிய வாக்குகளை பெறும் கட்சி இரண்டு ஆசனங்களை பெறும் நிலையில் மற்றைய இரண்டும் ஒவ்வொரு ஆசனங்களையே பெறமுடியும்.  அப்போது மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழர்களுக்கான நான்கு ஆசனங்களும் பங்கிடப்பட்டுவிடும். ஐந்து ஆசனங்களில் எஞ்சியுள்ள ஆசனம் சோனகர்களுக்கு உரியது இதை முஸ்லீம் காங்கிரஸ் – ஹிஸ்புல்லா (?)  வெல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சோனக வாக்குகளும் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு பிரிக்கப்படும் நிலைமை காணப்படுகிறது.  இது அதிக வாக்காளர்களை கொண்ட காத்தான்குடிக்கே சாதகமாக அமைய வாய்ப்புண்டு.

தேர்தல் முடிவுகள் குறித்த இந்த எதிர்வு கூறல் காட்சியை விடவும் வேறு பட்ட வகையில் வாக்களிப்பு மாதிரி அமையுமாயின் அதிகூடிய வாக்கை பெறும் கட்சி மூன்று ஆசனங்களை பெற்றால் ( சாத்தியம் மிக மிக குறைவு) எஞ்சிய ஒரு ஆசனம் மும்முனைப்போட்டியில் உள்ள மற்றைய இரண்டு கட்சிகளில் எதற்கு? என்ற கேள்வி தவிர்க்க முடியாததாகிறது. இந்த நிலையில் மூன்றில்  ஏதாவது ஒரு கட்சி ஆசனமின்றி  வெறும் கையோடு கச்சேரியை விட்டு வெளியேற வேண்டியிருக்கும்.

மறுபக்கத்தில் வடக்கில் இருந்து  வந்து தேர்தல் காலமழைக்கு வளர்ந்த காளான் விற்கும் கடைகளுக்கு வெற்றி வாய்ப்பு இல்லை. சைக்கிள், வீணை, சூரியன் இவை மட்டக்களப்பாரின் வாக்குகளால் தேசிய பட்டியலுக்கு வாக்கு சேர்க்க வந்தவை. கடந்த தேர்தலில் தேசிய பட்டியலில் தேர்வு செய்யப்பட்ட சைக்கிள் கஜேந்திரன் மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களுக்கு தனது பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவுத்திட்டத்தில் ஒரு சதத்தைத்தானும் ஒதுக்கீடு செய்யவில்லை. தேசிய பட்டியல் எம்.பி. ஒருவருக்குதான் விரும்பிய மாவட்டத்திற்கு முழுமையாக அல்லது பகுதியாக பன்முகப்படுத்தப்பட்ட நிதியை ஒதுக்கும் உரிமை உண்டு. மற்றைய எம்.பி.க்கள் ஜனாதிபதியிடம் விசேட அனுமதி பெற்றே இதைச் செய்யமுடியும்.  இப்படி இருந்தும்   இந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் எவரும் கிழக்கு மாகாணத்திற்கு எந்த நிதியையும் ஒதுக்கீடு செய்யவில்லை. செய்ததெல்லாம் இன பன்மைத்துவத்தை கொண்ட கிழக்கில் இன உறவை பாதிக்கும் வகையில் படையினரை வம்புக்கு இழுத்து படம்காட்டியதுதான். எனவே தேசிய பட்டியலுக்கு வாக்கு சேர்ப்போர் குறித்து மட்டக்களப்பு மக்கள் கவனமாய் இருத்தல் அவசியம்.

இந்த விழிப்புணர்வு இன்மையால் கடந்த 2020 தேர்தலில் மட்டக்களப்பில் தமிழ்மக்கள் தேசிய கூட்டணிக்கு 4,960, அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் 1,203, ஜே.வி.பி. 348, தமிழர் விடுதலைக் கூட்டணி 8,113, யூ.என்பி 833, ஈரோஸ் 331  போன்று வாக்குகள் அளிக்கப்பட்டுள்ளன. இந்த சுமார் 15,000 வாக்குகள் மட்டக்களப்பு தமிழர்கள் வாக்குப்பெட்டிக்குள் போடுகிறோம் என்று நினைத்து குப்பைத்தொட்டிக்குள் போட்டவை என்பதையும் , தமிழர் பிரதிநிதித்துவத்தை காப்பாற்றுவதற்கு, அதிகரிப்பதற்கு எதிராக நமக்கு நாமே அளித்த வாக்குகள் என்பதையும் மட்டக்களப்பு தமிழர்கள் கவனத்தில் கொள்ள வேண்டியது காலத்தின் கட்டாயம்.

மற்றொரு கோணத்தில் நோக்கினால் தென்னிலங்கை கட்சிகள் என்ற அடிப்படையில் மணிக்கூடு, காஸ் சிலிண்டர், திசைகாட்டி என்பவை குறித்தும் கவனம் செலுத்த வேண்டிய தேவை உள்ளது. சோனகர்கள் தங்களுக்கான ஒரு பிரதிநிதித்துவத்திற்கு உரிமையுள்ளவர்கள். தமிழர்களுக்கு நான்கு பிரதிநிதித்துவம். இதில் தமிழ் வாக்காளர்கள், சோனகர் வாக்காளர்கள் விடுகின்ற தவறானது அவர்கள் சமூகம் சார்ந்த பிரதிநிதித்துவத்தை குறைக்கவும், இல்லாமல் செய்யவும் வாய்ப்பு இல்லாமல் இல்லை. தென்னிலங்கை கட்சிகளின் வேட்பாளர்கள் தெரிவு இரு சமூகங்களின் வாக்குகளாலும் நிர்ணயிக்கப்படுகிறது. இதன் போது ஒரு சமூகத்தின் வாக்கு இன்னொரு சமூகத்தின் பிரதிநிதித்துவத்திற்கு சாதகமாக அமைவது கடந்த கால அனுபவம். அப்படியான நிலையில் திசைகாட்டி, மணிக்கூடு, காஸ் சிலிண்டர் வாக்குகள் இந்த முரண்பாட்டு நிலையை ஏற்படுத்துவதுடன் தமிழர் வாக்குகளால்  சோனகசமூகத்தவர் தெரிவுசெய்யப்படும் வாய்ப்பை அதிகம் கொண்டுள்ளன. தமிழ் பிரதிநிதித்துவம் திசைகாட்டியில்  தெரிவு செய்யப்படுவதற்கான வாய்ப்பு மட்டக்களப்பில் மிக மிக அரிது.

சுயேட்சை குழு என்ற அடிப்படையில் குறிப்பிட்டு சொல்லக்கூடிய ஒரு குழுவாக பசு சின்னம் உள்ளது. கல்குடா தொகுதியின் வியாழேந்திரனின் வாக்குகள்,யோகேஸ்வரனின் வாக்குகள் இந்த சுயேட்சை குழுவுக்கு அளிக்கப்படலாம் என்ற கருத்து காணப்படுகிறது. அதேபோல் பட்டிருப்பில் திசைகாட்டி, மணிக்கூடு , சங்கு , உதயசூரியன், சைக்கிள், பசு என்பன சாணக்கியனுக்கு சேதாரத்தை ஏற்படுத்தக்கூடியவை.

படகு, சங்கு, வீடு இவற்றில்  ஏதாவது ஒன்றில் இருந்து இருவர் தெரிவு செய்யப்பட்டால் ஒருவர் புதியவராக இருப்பதற்கு வாய்ப்புள்ளது. ஒருவர்தான் என்றால் வீட்டில் கல்குடாவில்  இருந்து புதியவர்  ஒருவர் தெரிவு செய்ரப்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. அப்படி நடந்தால் கரிபூசியவரும், பூசப்பட்டவரும்  அரசியலில் இருந்து அகற்றப்படுவார்கள். மற்றைய இரண்டிலும் பழையவரே புதியவர்.

நான்கு பிரதிநிதித்துவங்கள் வாக்கு விகிதாசாரத்தில் ஒதுக்கப்பட்ட பின்னர் இறுதியான ஐந்தாவது இடம் கிடைப்பது லொத்தர் விழுந்த மாதிரியான ஒரு அதிஷ்டம். நான்கு பிரநிதித்துவ பங்கீட்டுக்குப் பின்னர் குறைந்த தொகையான வாக்காலும் ஐந்தாமவர் தெரிவு செய்யப்படலாம்.

 அப்படியான ஒரு நிலையில் என்.பி.பி. எஸ்.ஜே.பி, சுயேட்சைக்குழு ஒன்றுக்கும் இடையே  ஒரு போட்டி ஏற்படலாம். இந்த நிலை ஏற்பட்டால்  இரண்டு  சோனகபிரதிநிதித்துவம் (என்.பி.பி/ எஸ்.ஜே.பி)  தெரிவாதற்கும் தமிழ் தரப்பில் ஒரு பிரதிநிதித்துவம் குறைவதற்கும் வாய்ப்புள்ளது. அப்படி நடந்தால் மும்முனைப் போட்டியில் பாராளுமன்ற பிரதிநிதித்துவ வாய்பை இழக்கப்போகின்ற கட்சி எது ?  

இது  மாத்து நொடி……!
 

 

https://arangamnews.com/?p=11422

  • கருத்துக்கள உறவுகள்

இதுக்கு அழகு குணசீலன் கொடோனிலேயே இருந்திருக்கலாம்.

முடிவு தேர்தல் நாள் அன்று தெரியும் - இதை எல்லாரும் சொல்லமுடியும்🤣.

தொடர்சியாக தான் ஆதரித்த கிழக்கு மைய அரசியல், ஒரு பலனையும் தராத நிலையில், பிள்ளையான் ஜெயிலில் இருந்து ஜெயித்தர் என துதிபாடும், நடுநிலை இல்லாமல் தமிழ் தேசிய கட்சிகளை மட்டும் விமர்சிக்கும் இது ஒரு ஆய்வு கட்டுரை அல்ல, பிள்ளையானுக்கான பிரசாரம்.

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அரியத்தாரின் ஆய்வு… வாட்ஸப்பில் அவர் பதிந்தது!

 

மட்டக்களப்பில் என்ன நடக்கும்..⁉️

மட்டக்களப்பு மாவட்டம் 2024, தேர்தல் பற்றிய ஒரு பார்வை-பா.அரியநேத்திரன்.

இலங்கையின் நாடாளுமன்றத் தேர்தல் 17-வது நாடாளுமன்றத்திற்காக (இலங்கைக் குடியரசின் 10-வது நாடாளுமன்றத்திற்காக) 225 உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்க எதிர்வரும் வியாழக்கிழமை  2024 நவம்பர் 14 காலை 7, மணி தொடக்கம், மாலை 4, மணிவரை தேர்தல் நடைபெறும்.                            

இலங்கையின் 16-வது நாடாளுமன்றம் 2024 செப்டம்பர் 24 இல் கலைக்கப்பட்டது, புதிய நாடாளுமன்றத்திற்கான வேட்பாளர் நியமனப் பத்திரங்கள் 2024 அக்டோபர் 4 முதல் 11 வரை ஏற்றுக்கொள்ளப்பட்டு எதிர்வரும் 11/11/2024, திங்கள் கிழமை நள்ளிரவு 12, மணிவரையும் பிரசாரங்கள் நிறைவுபெறும்,

தேர்தல் இடம்பெறுவதற்கு முன் 48 மணித்தியாலங்களுக்குள் தேர்தல் சட்ட ஏற்பாடுகளின் படி “தேர்தல் அமைதிக்காலம்” என அது அழைக்கப்படும். கடந்த ஒரு மாத காலப்பகுதியில் கட்சிகளும், வேட்பாளர்களும் வாக்காளர்களிடம் உள்வாங்கிய கொள்கைகளையும் திட்டங்களையும் சீர்தூக்கிப் பார்த்து வாக்காளர்கள் தீர்மானம் மேற்கொள்ளவதற்காகவே இந்த 48, மணித்தியாலங்களை தேர்தல் அமைதிக்காலம் என அழைப்பதுண்டு.
தேர்தல் இடம்பெறுவதற்கு 24, மணித்தியாலங்களு முன்னர் 12/11/2024, நள்ளிரவுடன் வேட்பாளர்களின்  பணிமனைகளில் உள்ள வெனர்கள், படங்கள், அலங்காரங்கள் அகற்றப்பட்டு வெறுமையாக அந்த காரியாலயம் இருக்கவேண்டும்.


                                                                                  👉🏼புதிய நாடாளுமன்றம் எதிர்வரும் 2024 நவம்பர் 21,ல் கூடி 225, பாராளுமன்ற உறுப்பினர்களும் பதவிப்பிரமானம் செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

🙌🏿மட்டக்களப்பில் 22 அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள்,
27, சுயேட்சை குழுக்கள் மொத்தமாக 49, அமைப்புகள் போட்டியிடுகின்றன..
மொத்த வேட்பாளர்கள் 392, பேர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் ஆசனங்களின் எண்ணிக்கை 05, மட்டுமே,04, உறுப்பினர்கள் தெரிவுடன் 01, மேலதிகம் (bonus)ஆசனம். (04+01=05) மொத்த ஆசனங்களாகும்.

போனஸ் ஆசனம் என்பது அதிகூடிய வாக்கை பெறும் கட்சிக்கு தன்னிச்சையாக அது சென்றுவிடும் உதாரணமாக A, எனும்கட்சி அறுபதாயிரம் 60000 வாக்குகளையும், B, எனும் கட்சி அறுபதாயிரத்து ஒரு 60001, வாக்குகளை பெற்றால் அதாவது ஒருவாக்கை கூட B, என்ற கட்சி மேலதிகமாக பெற்றால் அந்த  போனஸ் ஆசனம் B, எனும் கட்சிக்கே 2, ஆசனம் (1+1) வழங்கப்படும்.A,கட்சிக்கு போனஸ் ஆசனம் இல்லை.

மட்டக்களப்பில் இம்முறை மூன்று அல்லது நான்கு கட்சிகளில் இருந்து மட்டுமே 05, ஆசனங்கள் கிடைக்க வாய்ப்புள்ளது.
ஒருகட்சியில் இருந்து அல்லது ஐந்து கட்சிகளில் இருந்து 05, ஆசனங்கள் கிடைப்பதில்லை.

02,கட்சிகளில் இருந்தும் இம்முறை மட்டக்களப்பில் 05, ஆசனம் கிடைக்க வாய்புகள் இல்லை(இது 2004, ல் மட்டுமே வரலாற்றில் ஒரு தடவை சாத்தியமானது)
எனவே 3, அல்லது 4, கட்சிகளுக்கு மட்டுமே இம்முறை 5, ஆசனங்களை பெற வாய்புகள் உள்ளன…!

ஏனைய 45, கட்சிகளுக்கும் ஆசனம் கிடையாது அது தோல்வியடைந்த கட்சிகளாகவும் அதில் வேட்பாளர்களாக நிறுத்தப்பட்ட (360) பேரும் தோல்வியடைந்தவர்களாகவும் கருதப்படும். இதில் ஏறக்குறைய 35, கட்சிகளுக்கு 5% வீதத்திற்கு குறைவான வாக்குகளை பெற முடியாமல் போகலாம்.

👉🏼1,ம் கட்ட வாக்கெண்ணும் பணி தேர்தல் இடம்பெற்ற தினம் (14/11/2024) வியாழக்கிழமை இரவு 09, மணிக்கு ஆரம்பமாகி முதலில் தபால் மூல வாக்கெண்ணும் பணியை தொடர்ந்து ஏனைய வாக்குகளும் எண்ணப்பட்டு பெரும்பாலும நள்ளிரவுக்கு பின்னர் எந்தந்த கட்சிகள் கூடிய வாக்குகளை பெற்றன என்பதும், அதில் ஆசனங்களை பெற்ற கட்சிகளும் வரிசைப்படுத்தப்படும்.   

இது பெரும்பாலும் நள்ளிரவு 12, மணிக்கும் (15/11/2024) அதிகாலை 01, மணிக்கும் இடையில் தெரியவரும்.

இந்த 01. ம் கட்ட வாக்கெண்ணும்பணி நிறைவடைந்ததும் ஆசனம் பெற்ற(வெற்றியீட்டிய) கட்சிகளும் எந்தக்கட்சி எத்தனை ஆசனம் பெற்றுள்ளது என்ற விபரமும் தெரியவரும், இந்த முடிவு அறிந்ததும் வாக்கெண்ணும் நிலையத்தில்( மட்டக்களப்பு இந்துக்கல்லூரி)  இருந்து 18, அல்லது 19, அரசியல் கட்சி வேட்பாளர்களும் 27, சுயேட்சை குழு மொத்தமாக  45, அமைப்புக்களை சேர்ந்த  360, வேட்பாளர்களும் அவர்களுக்கு ஆதரவாக வாக்கெண்ணும் நிலையத்துக்கு சென்றவர்களும் வெளியேறிவிடுவார்கள்..

👉🏼2, ம் கட்டம் விருப்பு வாக்கெண்ணும்பணி இது ஆசனங்கள் பெற்ற  மூன்று அல்லது நான்கு கட்சிகளை சேர்ந்த 32 வேட்பாளர்கள் ஆவலுடன் எதிர்பார்து காத்திருக்க வேண்டியது,
வேட்பாளர்களை பதட்டம் அடைய வைக்கும் ஒரு தருணம் இது…

விருப்பு வாக்குகளின் கணிப்பீடு நீண்ட நேரம் செல்லும் பெரும்பாலும் மறு நாள் 15/11/2024, வெள்ளிக்கிழமை முற்பகலில் சிலவேளை கணிப்பீடு செய்வதில் சிக்கல் நிலை எழுந்தால் அன்று மாலைவரையும் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்கள் விபரம் உத்தியோகபூர்வமாக அறிவுக்கப்படுவது காலதாமதமாகலாம்.

இதில் கவனிக்க வேண்டியது மாவட்டங்களில் உள்ள நிலையங்களில் வாக்கெண்ணும் பணி நிறைவு செய்தாலும் அந்த முடிவுகளை மாவட்ட தேர்தல் அத்தாட்சி அலுவலர்(மாவட்ட அரச அதிபர்) அந்த முடிவுகளையும் உத்தியோக பூர்வமாக அறிவிக்க அதிகாரம் இல்லை அவர் கொழும்பு தேர்தல் ஆணைக்குழு அலுவலகத்திற்கு தொலை நகல் (Fax)அல்லது மின் அஞ்சல்(E mail) மூலம் உடனுக்குடன் அனுப்பப்பட்டு அங்கிருந்து ஆணைக்கு தலைவர்  அதனை பரிசீலித்த பின்னர் ஊடகங்களுக்கு உத்தியோகபூர்வமாக மாவட்ட முடிவுகள் கொழும்பில் தேர்தல் ஆணைக்குழு அலுவலகத்தில் தயார் நிலையில் உள்ள நேரடி ஊடக வாயிலாக உத்தியோகபூர்வமாக அறிவிப்பார்.
எனினும் மாவட்டத்தில் உள்ள வெற்றிபெற்ற கட்சி வேட்பாளர்கள் அதனை அறிந்து விடலாம்.

தபால்மூல முடிவுகள், தொகுதிரீதியான முடிவுகள், இரண்டும் அறிவித்த பின்னரே மாவட்ட ரீதியிலான முடிவுகள் அறிவிக்கப்பட்டு பின்னர் விருப்பு வாக்கில் தெரிவான உறுப்பினர்களின் பெயர்கள் அறிவிக்கப்படும்.

இதுதான் தேர்தல் முடிவு அறிவிப்பு நடைமுறை.!

விகிதாசாரத்தேர்தலில் ஆசனங்களை பெறும் கட்சிகளில் இருந்து தெரிவாகும் உறுப்பினர்கள்(வெற்றிபெற்றவர்கள்) என கருதினாலும் அந்த கட்சியில் தெரிவாகாமல் எஞ்சியிருக்கும் எட்டு வேட்பாளர்களில் தெரிவாகாத உறுப்பினர்களின் பங்களிப்பும்  ஆதரவும் அந்த கட்சிக்கு இருந்தது என்ற அடிப்படையில் அவர்களை தோல்வியடைந்தவர்கள் என கருதமுடியாது.

எஞ்சிய உறுப்பினர்களை தெரிவு செய்யப்படாதவர்கள் என்றே அழைக்கப்படுவார்கள்.
அதாவது கட்சி வெற்றிக்காக உழைத்தவர்கள் என்பதை புரிதல் வேண்டும்.

ஆனால் கடந்த காலங்களில் பலருக்கு இந்த விளக்கம் அறியாமல் அவர்களை தோல்வி அடைந்தவர்கள் என அழைத்தவர்களும் உண்டு இனியாவது இதனை கவனத்தில் எடுப்பது நல்லது.

தோல்வியடைத்தவர்கள் யார்..,

விகிதாசார தேர்தலில் ஆசனம் எதுவுமே பெறாத கட்சிகளும், அதில் வேட்பாளர்களாக நிறுத்தப்பட்ட அனைவரும் தோல்வியடைந்தவர்கள் என அழைக்கப்படுவர். எந்த கட்சியிலும் ஒரு ஆசனத்தை பெறாதா கட்சிகளும், சுயேட்சைக்குழுக்களும், அதில் வேட்பாளராக பெயர் குறிப்பிட்டவர்களும் மக்களால் நிராகரிக்கப்பட்டவர்கள் தோல்வி கண்டவர்கள் என்பதே உண்மை.

🫵🏼மட்டக்களப்பு மாவட்டத்தில் எதிர்வரும் 14/11/2024, தேர்தல் முடிவுகள் எனது ஆய்வின்படி..
27, சுயேட்சை குழுக்கள் எதுவுமே ஆசனங்களை பெற வாய்பில்லை.. அதுபோல் 
22, அரசியல் கட்சிகளில் 18, அல்லது 19, கட்சிகளுக்கும் ஆசனங்கள் பெறவாய்பில்லை.

03, கட்சிகள் மட்டும் 05, ஆசனங்களுக்கு உரித்துடையதாக (வாக்கு அதிகம்) பெற சந்தர்ப்பம் உண்டு.  மூன்று கட்சிகள் எனில் முதன்மையாக வாக்குகளை பெறும் கட்சிக்கு இரண்டு ஆசனத்துடன் மேலதிக (போனஸ்) ஆசனம் ஒன்றும் சேர்த்து 03, ஆசனங்களை அந்த கட்சி பெறும். மிகுதி இரண்டு கட்சிகளுக்கு தலா ஒவ்வொரு ஆசனங்கள் பெறும் சந்தர்ப்பம் உண்டு.
சிலவேளை நான்கு கட்சிகளாவும் மாறலாம் அப்படி எனில் முதல் நிலை பெறும் கட்சி 02, ஆசனங்களும் ஏனைய 03, கட்சிகள் தலா ஒவ்வொரு ஆசனமும் கிடைக்கலாம்.

கடந்த 1989, தொடக்கம் இறுதியாக இடம் பெற்ற 2020, மட்டக்களப்பு மாவட்ட தேர்தல் முடிவுகளை மீட்டுப்பார்த்தால் மட்டக்களப்பு மாவட்டத்தில் தேர்தல் முடிவுகளில் வரலாறுகளை எப்படி அமைந்தன என்பதை பார்போம்.

                                                           தமிழர் விடுதலை கூட்டணியும், இலங்கைத்தமிழ் அரசுக்கட்சியும்(தமிழ் தேசிய கூட்டமைப்பு) மட்டுமே ஏனைய கட்சிகளுக்கு இடம் கொடுக்காமல் எல்லா பொதுத்தேர்தல்களிலும் முன்னிலை பெற்றதை புள்ளிவிபரம் தெளிவாக காட்டுகிறது.

1. 1989, ம் ஆண்டு தமிழர் விடுதலைக்கூட்டணி 55,141, வாக்குகளை பெற்று 03, ஆசனங்களும்,
2. 1994,ம் ஆண்டு 76,516, வாக்குகளைப்பெற்று 03, ஆசனங்களும்,
3. 2000, ம் ஆண்டு 54,448, வாக்குகளைப்பெற்று 02,ஆசனங்களும்,
4. 2001, ம் ஆண்டு தமிழ்த்தேசிய கூட்டமைப்பு உருவான பின்னர் 86,284,ஆசனங்களைப்பெற்று 03, ஆசனங்களும்,
5. 2004,ம் ஆண்டு 1,61,011, வாக்குகளை பெற்று 04, ஆசனங்களும்,
6. 2010, ம் ஆண்டு 66,235,வாக்குகளைப்பெற்று 03, ஆசனங்களும்
7. 2015, ம் ஆண்டு 1,27,185, வாக்குகளைப்பெற்று 03, ஆசனங்களும்,
8. 2020, ம் ஆண்டு 79460, வாக்குகளை பெற்று 02, ஆசனங்களும் மட்டக்களப்பில் கடந்த எட்டு விகிதாசாரத்தேர்களிலும் கிடைத்தன.

மட்டக்களப்பு மாவட்டத்தில்
கடந்த எட்டு விகிதாசார பொதுத்தேர்தல்களிலும் தமிழர் விடுதலை கூட்டணிதமிழ் தேசிய கூட்டமைப்பு (இலங்கைத்தமிழ் அரசுக்கட்சி)  முன்னிலை பெற்றுள்ளது. எந்த ஒரு தேர்தல்களிலும் 2,ம் நிலைக்கு செல்லவில்லை வேறு எந்த ஒரு கட்சிகளும் முதன்நிலையில் ஆசனங்களை பெறவில்லை,

இம்முறை 2024, தேர்தலிலிலும் இலங்கை தமிழ் அரசுக்கட்சிதான் முதல் நிலை பெறும் அதில் எந்த மாற்றுக்கருத்துகளும் இல்லை .

இரண்டாம், முன்றாம், சிலவேளை நான்காம் நிலையில் எந்தெந்த கட்சிகள்வரும் என்பதை வெளிப்படையாக தெரிவிப்பதை  தவிர்த்துள்ளேன்.

வடகிழக்கில் இடம்பெற்ற பொதுத்தேர்தல்களில் தமிழர் விடுதலை கூட்டணி தமிழ்த்தேசிய கூட்டமைப்பு பெற்ற மொத்த வாக்குகளும் ஆசன எண்ணிக்கையும்..
த.வி.கூ
1.1989, ல் 188,594வாக்கு:10,பா.உ.
2.1994,ல் 132,461வாக்கு:05,பா.உ
3.2000,ல் 106,033வாக்கு:05,பா.உ
த. தே.கூ.
1. 2001, ல் 348164, வாக்கு:15, பா.உ,
2. 2004,ல் 633654, வாக்கு:22,பா.உ,
3. 2010,ல் 233,190, வாக்கு:14,பா.உ,
4. 2015,ல் 515,963, வாக்கு:16,பா.உ,
5. 2020,ல் 327,168,வாக்கு:10,பா.உ.

இருப்பது இன்னும் ஐந்து தினங்கள் பொறுத்திருந்து பார்ப்போம்..!

✍️பா.அரியநேத்திரன்.
09/11/2024
(அரியம் ஆய்வகம்)

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கிருபன் said:

இம்முறை 2024, தேர்தலிலிலும் இலங்கை தமிழ் அரசுக்கட்சிதான் முதல் நிலை பெறும் அதில் எந்த மாற்றுக்கருத்துகளும் இல்லை .

இரண்டாம், முன்றாம், சிலவேளை நான்காம் நிலையில் எந்தெந்த கட்சிகள்வரும் என்பதை வெளிப்படையாக தெரிவிப்பதை  தவிர்த்துள்ளேன்.

இதை சொன்னதுக்கு அரியம் அங்கிளும் கொடோன்லயே இருந்திருக்கலாம்.

 

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, கிருபன் said:

தமிழ் ‘சிறி’க்கு’ முகத்தில் கரிபூசும் கதை.

எவன்டா அவன் @தமிழ் சிறி க்கு முகத்தில் கரி பூசுவது?

விடிய காலையிலேயே ரென்சனாக்கிறாங்களே.

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, ஈழப்பிரியன் said:

எவன்டா அவன் @தமிழ் சிறி க்கு முகத்தில் கரி பூசுவது?

விடிய காலையிலேயே ரென்சனாக்கிறாங்களே.

சிறிநேசன் வேட்பாளராக இருக்கவேண்டும் அண்ணை!

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, ஏராளன் said:

சிறிநேசன் வேட்பாளராக இருக்கவேண்டும் அண்ணை!

ஓ அதுதானே பார்த்தன்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.