Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பாகிஸ்தானுக்கு இந்தியா செல்லாது; ஐசிசி சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் அட்டவணை திருத்தப்படலாம்?

image

(நெவில் அன்தனி)

ஐசிசி சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டியின்போது பாகிஸ்தான் செல்லப்போவதில்லை என இந்தியா உறுதிபடக் கூறியுள்ளது.

இது குறித்து சர்வதேச கிரிக்கெட் பேரவைக்கு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை அறிவித்துள்ளது.

இதன் காரணமாக ஐசிசி சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட்டுக்கான அட்டவணைகளில் மாற்றம் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பாகிஸ்தானில் 2025 பெப்ரவரி 19ஆம் திகதி  ஐசிசி சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட்  ஆரம்பமாகவுள்ள நிலையில், இந்தியாவின் இந்தத் தீர்மானம் போட்டியின்போது சிக்கல்களை தோற்றுவிக்கும் என கருதப்படுகிறது.

இரண்டு இடங்களில் ஐசிசி சம்பின்ஷிப் கிண்ண கிரிக்கெட் போட்டிகள் நடத்தப்படுவதற்கான சாத்தியம் குறித்து கவனம் செலுத்துமாறு இந்தியா கோரிக்கை விடுத்துள்ளது.

தமது போட்டிகளை துபாய் சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் நடத்தவேண்டும் என்ற எழுத்து மூல யோசனையை இந்தியா முன்வைத்துள்ளது.

2025 ஐசிசி சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட்டில் அவுஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ், இங்கிலாந்து, இந்தியா, நியூஸிலாந்து, பாகிஸ்தான், தென் ஆபிரிக்கா ஆகிய 8 நாடுகள் பங்குபற்றவுள்ளன.

BCCI and ADIDAS announce multi-year partnership as official sponsor of the  Indian Cricket Teampak_cricket_logo.png

 

https://www.virakesari.lk/article/198355

  • கருத்துக்கள உறவுகள்

அப்கானிஸ்தான் அணி தெரிவு

இல‌ங்கை அணி வெளிய‌

 

உல‌க‌ கோப்பையில் வ‌ங்கிளாதேஸ்ச‌ வென்று இருந்தால் இல‌ங்கை அணியும் ஐசிசி சம்பியன்ஸ் கிண்ண போட்டியில் விளையாடி இருக்கும்.................................

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பாகிஸ்தானில் விளையாட மறுத்ததா இந்திய அணி? - அந்நாட்டில் என்ன விவாதிக்கப்படுகிறது?

இந்தியா, பாகிஸ்தான், ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி

பட மூலாதாரம்,GETTY IMAGES

பாகிஸ்தானில் நடைபெறவுள்ள சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு இந்திய அணியை பி.சி.சி.ஐ அனுப்ப மறுத்ததாக கடந்த ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 10) முதல் பாகிஸ்தான் ஊடகங்களில் செய்திகள் வெளியாகின.

இதுகுறித்து பி.சி.சி.ஐ தரப்பில் இருந்து இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரவில்லை. இருப்பினும், அடுத்த ஆண்டு பாகிஸ்தானில் நடைபெறவுள்ள சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்தியா விளையாடாது என்று பி.சி.சி.ஐ தெரிவித்ததாக, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திடம் ஐ.சி.சி தெரிவித்துள்ளது என பாகிஸ்தான் ஊடகங்களில் கூறப்படுகின்றன.

இந்த தகவலை ஐ.சி.சி எழுத்துப்பூர்வமாக பாகிஸ்தானுக்கு அளித்துள்ளதாகப் பாகிஸ்தான் ஊடகங்களில் கூறப்படுகின்றன.

இதனால், பாகிஸ்தான் மக்கள் சமூக வலைதளங்களில் தங்கள் கோபத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். மேலும், பாகிஸ்தான், இந்தியாவிற்கு கடும் பதிலடி கொடுக்க வேண்டும் என்றும் அவர்கள் கூறி வருகின்றனர்.

இந்தியாவின் இந்த நிலைப்பாட்டை அடுத்து பாகிஸ்தானும் இந்தியாவுடனான போட்டியில் விளையாடாது என பாகிஸ்தான் ஊடகங்களில் கூறப்படுகிறது.

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் என்ன சொன்னது?

இதுகுறித்து பிபிசி உருது மொழிச் சேவையிடம் பேசிய பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் (PCB) செய்தித் தொடர்பாளர் ஒருவர், “ஐ.சி.சி இந்தத் தகவலை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திற்கு மின்னஞ்சல் மூலம் ஞாயிற்றுக்கிழமை அனுப்பியது,” என்றார்.

அவர் மேலும் கூறுகையில், “சாம்பியன்ஸ் டிராபி தொடரில் விளையாட இந்திய அணி பாகிஸ்தானுக்கு வர முடியாது என்று பி.சி.சி.ஐ எழுத்துப்பூர்வமாக ஐ.சி.சி-க்கு தெரிவித்துள்ளது” என்றார்.

இந்திய அணி பாகிஸ்தானுக்கு வர மறுப்பது குறித்து ஜியோ செய்தி சேனலிடம் (Geo News) பேசிய பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் காஜா எம். ஆசிப், “பலுசிஸ்தான் விடுதலை ராணுவம், தெஹ்ரீக்-இ போன்ற அமைப்புகளை உள்ளடக்கியவர்களுடன் இந்தியா போரிட்டு வருகிறது என்பதை நாம் எப்போதும் நினைவில் கொள்ள வேண்டும். இதில் பாகிஸ்தான் தாலிபன்களும் அடங்குவர்,” என்றார்.

மேலும், "துபாயில் போட்டி (Hybrid Model) நடத்துவது குறித்து நான் கருத்து தெரிவிக்கப்போவதில்லை. காஷ்மீர் பிரச்னை குறித்துப்பேச ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் நான் கலந்து கொள்ள வேண்டியிருந்தது. அப்போது அந்நிகழ்ச்சியில் கலந்து கொள்வதில் இருந்து அனைத்து இந்தியர்களும் தங்கள் பெயர்களை திரும்பப் பெற்றனர்,” என்றார்.

 
இந்தியா, பாகிஸ்தான், ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, இந்த ஆண்டு நியூயார்க்கில் நடைபெற்ற இந்தியா-பாகிஸ்தான் டி20 போட்டியின் போது பாகிஸ்தானின் முகமது ரிஸ்வான்

இந்தியாவின் கவலை

தங்கள் வீரர்களது பாதுகாப்பு குறித்து இந்தியா கவலை தெரிவித்து வருகிறது. 2009-ஆம் ஆண்டு இலங்கை அணி பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது அவர்கள் மீது தீவிரவாதத் தாக்குதல் நடத்தப்பட்டது.

அமெரிக்காவுக்கான பாகிஸ்தானின் முன்னாள் தூதர் ஹுசைன் ஹக்கானி இது பற்றிக் கூறும் போது, “தெற்காசியாவில் பிறந்து கிரிக்கெட்டைப் பின்பற்றாத சிலரில் நானும் ஒருவன். ஆனால் பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும் இடையே நல்லுறவு ஏற்பட விரும்புகிறேன். பாகிஸ்தானில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு இந்திய அணியை அனுப்புவதில்லை என இந்தியா முடிவு செய்துள்ளது. இது, இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் இன்னும் மோசமாக இருப்பதையே காட்டுகிறது,” என்றார்.

முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரும், கிரிக்கெட் வர்ணனையாளருமான ஆகாஷ் சோப்ரா, பாகிஸ்தானின் குவெட்டா ரயில் நிலையத்தில் நடந்த குண்டுவெடிப்பை சமூக ஊடகத்தில் குறிப்பிட்டு, “நிலைமையைச் சீரமைத்து, இரு நாடுகளுக்கும் இடையேயான போட்டிகள் நடைபெறுவதை உறுதி செய்வது பாகிஸ்தானின் பொறுப்பு,” என்று தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தானின் மூத்த விளையாட்டுப் பத்திரிகையாளர் நௌமன் நியாஸ், தனது எக்ஸ் சமூக ஊடக பதிவில், “பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் இந்திய அணியின் போட்டிகளை வேறு ஒரு பொதுவான இடத்தில் நடத்தும் ஹைபிரிட் மாடலுக்கு ஆதரவாக இல்லை,” என்று குறிப்பிட்டுள்ளார்.

அவரைப் பொறுத்தவரை, பாகிஸ்தான் எந்த ஒரு இடத்திலும், எந்த விதமான போட்டிகளையும் இந்தியாவுடன் விளையாட விரும்பவில்லை என்ற முடிவைப் பரிசீலித்து வருகிறது.

 
இந்தியா, பாகிஸ்தான், ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய அணி முன்னணியில் இருப்பதாகக் கருதப்படுகிறது

‘இந்தியாவுடன் பாகிஸ்தான் விளையாடாது’

பாகிஸ்தானின், கராச்சியைச் சேர்ந்த விளையாட்டுச் செய்தியாளர், ஃபைசன் லக்கானி, தனது எக்ஸ் தளப் பதிவில், "பாகிஸ்தானில் வந்து விளையாடுவதற்கு இந்தியா தயாராக இல்லை என்றால், பாகிஸ்தான் இந்தியாவுடன் எந்தப் போட்டியிலும் விளையாடாது என்று பாகிஸ்தான் அரசு வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன," என்று குறிப்பிட்டுள்ளார்.

ஜியோ செய்தி சேனல், எந்தவொரு சர்வதேசப் போட்டியிலும் இந்தியாவுடன் விளையாட வேண்டாம் என்று பாகிஸ்தான் அரசு யோசித்து வருவதாக எழுதியுள்ளது.

சாம்பியன் டிராபி தொடர் போட்டிக்கான அட்டவணை, நவம்பர் 11-ஆம் தேதி அறிவிக்கப்பட இருந்தது, ஆனால் இப்போது அது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இப்போது ஐ.சி.சி இது குறித்து ஒரு முடிவெடுக்கும் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் மூத்த அதிகாரி ஒருவர் பிபிசி-யிடம் தெரிவித்தார்.

ஐ.சி.சி அட்டவணை

எந்தவொரு ஐ.சி.சி போட்டியின் அட்டவணையும் போட்டிக்கு 100 நாட்களுக்கு முன்னதாக அறிவிக்கப்படும். இதனால் போட்டியை நடத்தும் நாடு, ஒளிபரப்பாளர்கள் மற்றும் மற்ற அமைப்பினர் தங்களை தயார் செய்து கொள்ள போதுமான கால அவகாசம் கிடைக்கும்.

இந்தச் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பாகிஸ்தான் மற்றும் இந்தியாவைத் தவிர, வங்கதேசம், இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, நியூசிலாந்து, மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகள் பங்கேற்கின்றன.

ஒருநாள் போட்டிகள் தரவரிசையில் முதல் 8 இடங்களுக்குள் இடம்பெறாத காரணத்தால் இலங்கை அணி இந்த தொடரில் பங்கேற்காது.

2023-ஆம் ஆண்டு ஆசியக் கோப்பை பாகிஸ்தானில் நடைபெற இருந்தது, ஆனால் இந்தியா பாகிஸ்தானுக்குச் செல்ல மறுத்ததையடுத்து, பல போட்டிகள் இலங்கைக்கு மாற்றப்பட்டன. ஆனால், 2025 சாம்பியன்ஸ் டிராபி குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியா பாக்கிஸ்தான் போகாட்டி

 

இந்தியாவுக்கு ப‌தில் இல‌ங்கை அணி விளையாடும்

 

பாக்கிஸ்தான் கிரிக்கேட் வாரிய‌ம் இந்தியாவிட‌ம் எப்ப‌வும் அடி ப‌னிந்து போவ‌து தான் வ‌ழ‌க்க‌ம்....................

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சாம்பியன்ஸ் கோப்பை: பாகிஸ்தானில் விளையாட இந்தியா மறுத்தால் என்ன ஆகும்? அடுத்த திட்டம்?

ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பைத் தொடர் 2025

பட மூலாதாரம்,NEVILLE HOPWOOD/GETTY IMAGES

பாகிஸ்தானில் சாம்பியன்ஸ் டிராபி கோப்பைக்கான போட்டிகள் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. ஆனால் இந்தியாவின் வருகை குறித்து நிச்சயமற்ற நிலை உள்ளது.

சாம்பியன்ஸ் கோப்பை போட்டிகள், அடுத்த ஆண்டு பிப்ரவரி 19 முதல் மார்ச் 9 வரை பாகிஸ்தானில் நடைபெற உள்ளது, இதற்கான கோப்பை சுற்றுப் பயணமும் தொடங்கியுள்ளது.

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியமும் (பிசிபி) கோப்பை சுற்றுப் பயணத்தை பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள முசாஃபராபாத் நகருக்குக் கொண்டு செல்வதாக அறிவித்தது, ஆனால் ஐசிசி அதற்கு அனுமதி வழங்கவில்லை.

மேலும், பாதுகாப்பு காரணங்களுக்காக இந்திய அணி சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்காக பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளாது என இந்திய கிரிக்கெட் வாரியம் (பிசிசிஐ) ஐசிசியிடம் தெரிவித்துள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்தத் தகவலை பிசிபிக்கு ஐசிசி தெரிவித்துள்ளது.

இதுகுறித்து பாகிஸ்தானில் பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது. ஆசியக் கோப்பையைப் போன்று ஹைபிரிட் வடிவில், அதாவது சில போட்டிகள் பாகிஸ்தானிலும் இந்தியாவுடனான போட்டிகள் மட்டும் வேறு சில நாடுகளிலும் நடத்தப்படும் வகையில், சாம்பியன்ஸ் கோப்பைக்கான போட்டிகளை நடத்த பாகிஸ்தான் அனுமதிக்கக் கூடாது என்று அங்குள்ள ஊடகங்களில் பேசப்பட்டு வருகிறது.

முன்பு ஆசியக் கோப்பை தொடருக்காக பாகிஸ்தான் செல்ல இந்தியா மறுத்துவிட்டது. ஆகவே இலங்கையில் இந்தியாவின் போட்டிகளை ஐசிசி ஏற்பாடு செய்திருந்தது.

இந்த முறை அத்தகைய அணுகுமுறைக்கு பிசிபி தயாராக இல்லை என்று பாகிஸ்தானில் கூறப்படுகிறது. அப்படியிருக்கும் சூழலில் வேறு என்ன வாய்ப்புகள் உள்ளன?

இந்தியா, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியங்கள் கூறுவது என்ன?

பிடிஐ செய்தி முகமை, ஒரு வாரத்திற்கு முன்பு வெளியிட்ட செய்தி ஒன்றில் பிசிசிஐ அதிகாரி ஒருவர், "இந்திய அணியை பாகிஸ்தானுக்கு அனுப்பாது என்று ஐசிசியிடம் பிசிசிஐ கூறியதாக," குறிப்பிட்டிருந்தது.

இந்த வாரம், பிசிசிஐ துணைத் தலைவரும் காங்கிரஸ் தலைவருமான ராஜீவ் சுக்லா, "அரசு எங்களிடம் என்ன கூறுகிறதோ, எந்த உத்தரவுகளைப் பிறப்பிக்கிறதோ அதை நாங்கள் ஏற்று நடப்போம். அதையேதான் நாங்கள் ஐசிசி-யிடமும் கூறினோம்," என்று தெரிவித்தார்.

 
ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பைத் தொடர் 2025

பட மூலாதாரம்,ANI

படக்குறிப்பு, பிசிசிஐ தலைவர் ஜெய் ஷா வெள்ளிக்கிழமை ஐசிசியிடம் இந்த முடிவுக்கு ஆட்சேபம் தெரிவித்ததாகவும் பிடிஐ முகமை செய்தி வெளியிட்டிருந்தது.

நவம்பர் 8ஆம் தேதியன்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் மோஹ்சின் நக்வி செய்தியாளர்கள் சந்திப்பில் பேசியபோது, "கடந்த இரண்டு மாதங்களாக இந்தப் போட்டியில் இந்தியா பங்கேற்காது என்பதாகப் பல செய்திகள் வெளியாகியுள்ளன. இது போன்று ஏதாவது நடப்பதாக இருந்தாலோ அல்லது யாருக்கேனும் ஆட்சேபம் இருந்தாலோ, முறைப்படி எழுத்துப்பூர்வமாக அதை எங்களுக்குத் தெரிவிக்கவும்," என்று கூறியிருந்தார்.

கடைசியாக இந்திய அணி 2008ஆம் ஆண்டு ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் பங்கேற்க பாகிஸ்தானுக்கு சென்றது. நவம்பர் 2008இல் நடைபெற்ற மும்பை தாக்குதல்களுக்குப் பிறகு பாகிஸ்தானில் நடைபெறும் போட்டிகளில் பங்கேற்பதில்லை என்று இந்தியா முடிவு செய்திருந்தது.

கடந்த 2009ஆம் ஆண்டு பாகிஸ்தானுக்கு இலங்கை அணி சுற்றுப் பயணம் மேற்கொண்டபோது நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதல் அந்த நாட்டில் உள்ள பாதுகாப்பு குறித்துப் பல கவலைகளை எழுப்பியது.

போட்டிகளுக்கு வெறும் 100 நாட்கள்கூட இல்லாத நிலையில் அனைத்துப் போட்டிகளும் பாகிஸ்தானில்தான் நடக்குமா இல்லையா என்பது உறுதியாகத் தெரியவில்லை.

பாதுகாப்பு காரணங்களுக்காக பாகிஸ்தானுக்கு இந்திய அணியை அனுப்பத் தயாராக இல்லை என்று பிசிசிஐ மறுத்துள்ளது. பிசிசிஐயின் இந்த முடிவுக்குப் பிறகு போட்டிகளில் சில பாகிஸ்தானிலும், சில வெளிநாடுகளிலும் நடத்தப்படுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

ஆனால் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அனைத்து போட்டிகளும் பாகிஸ்தானில்தான் நடத்தப்படும் என்று அறிவித்துள்ளது.

கடந்த 2017ம் ஆண்டு இறுதியாக சாம்பியன்ஸ் கோப்பைத் தொடர் நடத்தப்பட்டது. இந்தியாவுக்கு எதிராக, லண்டனின் ஓவல் மைதானத்தில் நடந்த இறுதிப் போட்டியில் 180 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் வெற்றி பெற்று கோப்பையைக் கைப்பற்றியது.

கடந்த 2021ஆம் ஆண்டு அடுத்த சாம்பியன்ஸ் கோப்பைத் தொடரை, 2025ம் ஆண்டில் பாகிஸ்தானில் நடத்த ஐ.சி.சி. முடிவு செய்தது.

 

முன்னாள் பிசிபி தலைவர் கூறுவது என்ன?

ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பைத் தொடர் 2025

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, முன்னாள் தலைவர் நஜாம் சேத்தி

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் முன்னாள் தலைவர் நஜாம் சேத்தி இதுகுறித்துக் கூறுகையில், ஐசிசிக்கு மூன்று வாய்ப்புகள் மட்டுமே இருப்பதாகத் தெரிவித்தார்.

அவரது கூற்றுப்படி, முதலில் இந்தியா பாகிஸ்தானுக்கு வர வேண்டும், இரண்டாவது வாய்ப்பு ஹைப்ரிட் வடிவில் விளையாட வேண்டும். இவையிரண்டுமே ஏற்கப்படவில்லை என்றால், மூன்றாவதாக முழு தொடரும் பாகிஸ்தானுக்கு வெளியே நடத்தப்பட வேண்டும்.

பாகிஸ்தானின் தனியார் செய்தி சேனலுக்கு அவர் அளித்த பேட்டியில், "இந்தியா இதில் கடுமையான நிலைப்பாட்டை எடுத்துள்ளது. அவர்கள் வரப் போவதில்லை. கபடி அணியையும் பார்வையற்றோர் கிரிக்கெட் அணியையும் அனுப்பவில்லை. முன்பு டேவிஸ் கோப்பைக்காக டென்னிஸ் வீரர்கள் விளையாட வருவார்கள். இப்போது அவர்களும்கூட வருவதில்லை,” என்றார்.

நஜாம் சேத்தி, ”நம் முன் இருக்கும் இரண்டு வாய்ப்புகள் கிட்டத்தட்ட நிராகரிக்கப்பட்டுள்ளன, அத்தகைய சூழ்நிலையில் மூன்றாவது வாய்ப்பான, போட்டியை பாகிஸ்தானுக்கு வெளியே கொண்டு செல்வது மட்டுமே மீதமுள்ளது. ஆனால் ஒருவேளை பாகிஸ்தான் மீண்டும் போட்டியைப் புறக்கணிக்க முடிவு செய்யலாம்” என்றார்.

பாகிஸ்தானுக்கு இது மிகவும் சிக்கலான சூழ்நிலை என்கிறார் அவர். "பாகிஸ்தான் இந்தியாவின் கோரிக்கையை ஏற்றுக்கொண்டால், உள்நாட்டில் நிறைய விமர்சனங்களை எதிர்கொள்ளும். பாகிஸ்தான் தலைகுனிய வேண்டியிருந்ததாகப் பேசப்படும்" எனக் கருதுகிறார் நஜாம் சேத்தி.

ஐசிசி எப்போதும் பிசிசிஐ பக்கமே இருக்கும் என்கிறார் அவர். அதேவேளையில், “இந்தப் போட்டியை இலங்கை அல்லது துபாய்க்கு மாற்றி, அதில் பாகிஸ்தான் விளையாடாவிட்டால், ஐசிசிக்கு நஷ்டம் ஏற்படும். இதனால் இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கும் நஷ்டம் ஏற்படும். போட்டி வருவாயில் பெரும் பகுதி இந்தியாவுக்கும், சிறிய பகுதி பாகிஸ்தானுக்கும் செல்கிறது,” என்றார்.

 
ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பைத் தொடர் 2025

பட மூலாதாரம்,KIERAN GALVIN/NURPHOTO VIA GETTY IMAGES

படக்குறிப்பு, நடப்பு சாம்பியனான பாகிஸ்தான் 2017ஆம் ஆண்டு நடைபெற்ற சாம்பியன்ஸ் கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியாவை 180 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

இருப்பினும், இது இந்திய கிரிக்கெட் வாரியத்தைப் பாதிக்காது எனக் கூறும் அவர், பிசிசிஐ பணக்கார வாரியம் என்பதே அதற்குக் காரணம் எனக் குறிப்பிடுகிறார். ஆனால், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் நிலை அப்படியல்ல, அதை அதிகம் பாதிக்கும் என்றும், வெளிநாட்டிலும் விளையாடாவிட்டால், அது பண இழப்பை ஏற்படுத்தும் எனவும் அது பிரச்னையாக மாறும் எனவும் கூறுகிறார் நஜாம் சேத்தி.

அவரது கூற்றுப்படி, ஒருவேளை பாகிஸ்தான் அத்தகைய முடிவை எடுத்து, தன்னை ஐசிசியில் இருந்து ஒதுக்கிக் கொண்டால், ஏற்கெனவே குறைவாக இருக்கும் அதன் வருமானம் மேலும் பெருமளவு குறையும்.

சாம்பியன்ஸ் கோப்பை முஸாஃபராபாத் நகருக்கு எடுத்துச் செல்லப்படாதது ஏன்?

வழக்கமாக சர்வதேச போட்டிகள் நடைபெறும்போது சர்வதேச கிரிக்கெட் வாரியமான ஐ.சி.சி. போட்டி நடைபெறும் நாட்டில் உள்ள பல்வேறு நகரங்களில் அந்தக் கோப்பையை பொதுமக்கள் பார்வைக்கு வைப்பது வழக்கம்.

இஸ்லமாபாத்தில் சனிக்கிழமை (நவம்பர் 16) அன்று ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கோப்பையின் சுற்றுப் பயணம் ஆரம்பமானது. இந்தக் கோப்பை வரும் நாட்களில் பாகிஸ்தானில் 8 இடங்களில் பார்வைக்கு வைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பாகிஸ்தான் கிரிகெட் வாரியம் இந்தக் கோப்பையின் சுற்றுப்பயணம் குறித்து வெளியிட்ட அறிவிப்பில் முசாஃபராபாத்திலும் கோப்பை வைக்கப்படும் என அறிவித்திருந்தது. ஆனால் தற்போது அந்தப் பட்டியலில் இருந்து அந்நகரம் நீக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இந்த நகரம் அமைந்துள்ளதால், இந்தியா, பாகிஸ்தான் இடையே பிரச்னைக்குள்ளான பகுதியாக அது அறியப்பட்டுள்ளது.

 

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கூறியது என்ன?

ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பைத் தொடர் 2025

பட மூலாதாரம்,@THEREALPCB/X

படக்குறிப்பு,இறுதியாக பாகிஸ்தான் செல்வதற்கு முன், இறுதியாக கோப்பை இந்தியாவுக்கு வரும்

நவம்பர் 14ஆம் தேதியன்று தன்னுடைய எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்ட பதிவில், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் இந்தக் கோப்பையைப் பல்வேறு அழகான இடங்களுக்கு எடுத்துச் செல்வதாகக் கூறியிருந்தது.

கார்து மற்றும் ஹன்சா பள்ளத்தாக்கு (கில்ஜித், பல்டிஸ்தான்), முரி (ராவல்பிண்டி), முசாஃபராபாத் நகரங்களின் பெயரும் அந்தப் பட்டியலில் இடம் பெற்றிருந்தது.

பாகிஸ்தானின் இந்தக் கோப்பை சுற்றுப்பயண திட்டத்திற்கு இந்திய கிரிக்கெட் வாரியம்(பி.சி.சி.ஐ) எதிர்ப்பு தெரிவித்தது. பி.சி.சி.ஐ தலைவரான ஜெய் ஷா வெள்ளிக்கிழமை அன்று ஐ.சி.சி. அதிகாரிகளுடன் பேசியதாகவும், பாகிஸ்தானின் இந்த முடிவுக்கு ஆட்சேபம் தெரிவித்ததாகவும் பிடிஐ செய்தி முகமை செய்தி வெளியிட்டிருந்தது.

இதுதொடர்பாக, பெயர் கூற விரும்பாத பிசிசிஐ அதிகாரி ஒருவர் பிடிஐ முகமையிடம் பேசியபோது, "ஜெய் ஷா ஐசிசி அதிகாரிகளை அலைபேசியில் தொடர்புகொண்டு, இந்தக் கோப்பையை பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிக்கு எடுத்துச் செல்வது தொடர்பான பாகிஸ்தானின் முடிவை விமர்சித்துள்ளார். இந்த விவகாரத்தில் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் ஐசிசியிடம் கேட்டுக் கொண்டார்," என்று கூறியுள்ளார்.

"பிசிசிஐ செயலாளர், கோப்பையை இஸ்லமாத்திற்கு கொண்டு செல்வதில் எந்தப் பிரச்னையும் இல்லை எனவும், ஆனால் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் கோப்பை செல்லக்கூடாது என்றும் கூறியதாக" அந்த அதிகாரி பிடிஐ செய்தி முகமையிடம் கூறியுள்ளார்.

"இது தங்களின் தனிப்பட்ட முடிவல்ல. ஏற்கெனவே ஐசிசியுடன் கலந்து பேசி எடுக்கப்பட்ட முடிவுதான்," என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் வெள்ளிக்கிழமை கூறியதாக பிடிஐ மற்றொரு செய்தியை வெளியிட்டிருந்தது. ஆனால் இது தொடர்பாக ஐசிசி இதுவரை எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை.

 

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் முடிவு குறித்து எழும் கேள்விகள்

ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பைத் தொடர் 2025

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டன் முகமது ரிஸ்வான் மற்றும் பிசிபி தலைவர் மோஹ்சின் நக்வி

சாம்பியன்ஸ் கோப்பை போட்டிகள் தொடங்க இன்னும் 100 நாட்களே உள்ள நிலையில், கோப்பையின் சுற்றுப் பயணத்தை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தொடங்கியுள்ளது.

இந்தக் கோப்பை இந்தியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, தென் ஆப்ரிக்கா, வங்கதேசம், ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட எட்டு நாடுகளுக்குச் செல்லும். அதற்கு முன்பாக, சாம்பியன்ஸ் கோப்பை சுற்றுப்பயணம் இஸ்லாமாபாத்தில் இருந்து நவம்பர் 16 அன்று தொடங்கியது.

இந்தக் கோப்பையை பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்கு எடுத்துச் செல்வதற்கான அட்டவணை வெளியிடப்பட்டபோது, இந்தியா எதிர்ப்பு தெரிவித்தது.

கோப்பை சுற்றுப் பயணத்தில் பாகிஸ்தானால் நிர்வகிக்கப்படும் காஷ்மீரை சேர்ப்பது குறித்து நஜாம் சேத்தி கூறுகையில், "பிசிபி சொந்தமாக இதுபோன்ற முடிவுகளை எடுப்பதில்லை. அதற்கு இதுபோன்ற ஆலோசனைகள் கிடைத்திருக்க வேண்டும். முன்னதாக, எந்தக் கோப்பைகள் வந்தாலும், அவை மூன்று அல்லது நான்கு பாகிஸ்தான் நகரங்களுக்கே எடுத்துச் செல்லப்படும்,” என்றார்.

அதோடு, கில்ஜிட், பால்டிஸ்தான் போன்ற பகுதிகள் கோப்பை சுற்றுப் பயணத்தில் அட்டவணையில் சேர்க்கப்பட்டுள்ளதைப் பார்த்து ஆச்சரியப்பட்டதாகக் கூறுகிறார் நஜாம் சேத்தி. இது நன்கு யோசித்து எடுக்கப்பட்ட முடிவு என்றும் இது பிசிபியின் முடிவு அல்ல என்றும் அவர் கூறினார்.

இந்த முடிவை எடுக்கும்போது, இப்படி ஒரு எதிர்வினை வரும் என்பதும் பிசிபிக்கு தெரிந்திருக்க வேண்டும் என்கிறார் அவர்.

மேலும், “பாகிஸ்தான் ஒரு நடவடிக்கையை மேற்கொண்டது. அதைச் சாத்தியப்படுத்த தூதரக பேச்சுவார்த்தை மூலம் இந்தியாவைச் சமாளிக்க வைப்பதற்கான சாத்தியக்கூறுகளும் ஆராயப்பட்டிருக்க வேண்டும். ஆனால், அதிலிருந்து பின்வாங்கியுள்ளது. இப்போது இந்தியா கடுமையான நிலைப்பாட்டை எடுக்கும்,” என்றார் நஜாம் சேத்தி.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, ஏராளன் said:

சாம்பியன்ஸ் கோப்பை: பாகிஸ்தானில் விளையாட இந்தியா மறுத்தால் என்ன ஆகும்? அடுத்த திட்டம்?

ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பைத் தொடர் 2025

பட மூலாதாரம்,NEVILLE HOPWOOD/GETTY IMAGES

பாகிஸ்தானில் சாம்பியன்ஸ் டிராபி கோப்பைக்கான போட்டிகள் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. ஆனால் இந்தியாவின் வருகை குறித்து நிச்சயமற்ற நிலை உள்ளது.

சாம்பியன்ஸ் கோப்பை போட்டிகள், அடுத்த ஆண்டு பிப்ரவரி 19 முதல் மார்ச் 9 வரை பாகிஸ்தானில் நடைபெற உள்ளது, இதற்கான கோப்பை சுற்றுப் பயணமும் தொடங்கியுள்ளது.

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியமும் (பிசிபி) கோப்பை சுற்றுப் பயணத்தை பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள முசாஃபராபாத் நகருக்குக் கொண்டு செல்வதாக அறிவித்தது, ஆனால் ஐசிசி அதற்கு அனுமதி வழங்கவில்லை.

மேலும், பாதுகாப்பு காரணங்களுக்காக இந்திய அணி சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்காக பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளாது என இந்திய கிரிக்கெட் வாரியம் (பிசிசிஐ) ஐசிசியிடம் தெரிவித்துள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்தத் தகவலை பிசிபிக்கு ஐசிசி தெரிவித்துள்ளது.

இதுகுறித்து பாகிஸ்தானில் பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது. ஆசியக் கோப்பையைப் போன்று ஹைபிரிட் வடிவில், அதாவது சில போட்டிகள் பாகிஸ்தானிலும் இந்தியாவுடனான போட்டிகள் மட்டும் வேறு சில நாடுகளிலும் நடத்தப்படும் வகையில், சாம்பியன்ஸ் கோப்பைக்கான போட்டிகளை நடத்த பாகிஸ்தான் அனுமதிக்கக் கூடாது என்று அங்குள்ள ஊடகங்களில் பேசப்பட்டு வருகிறது.

முன்பு ஆசியக் கோப்பை தொடருக்காக பாகிஸ்தான் செல்ல இந்தியா மறுத்துவிட்டது. ஆகவே இலங்கையில் இந்தியாவின் போட்டிகளை ஐசிசி ஏற்பாடு செய்திருந்தது.

இந்த முறை அத்தகைய அணுகுமுறைக்கு பிசிபி தயாராக இல்லை என்று பாகிஸ்தானில் கூறப்படுகிறது. அப்படியிருக்கும் சூழலில் வேறு என்ன வாய்ப்புகள் உள்ளன?

இந்தியா, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியங்கள் கூறுவது என்ன?

பிடிஐ செய்தி முகமை, ஒரு வாரத்திற்கு முன்பு வெளியிட்ட செய்தி ஒன்றில் பிசிசிஐ அதிகாரி ஒருவர், "இந்திய அணியை பாகிஸ்தானுக்கு அனுப்பாது என்று ஐசிசியிடம் பிசிசிஐ கூறியதாக," குறிப்பிட்டிருந்தது.

இந்த வாரம், பிசிசிஐ துணைத் தலைவரும் காங்கிரஸ் தலைவருமான ராஜீவ் சுக்லா, "அரசு எங்களிடம் என்ன கூறுகிறதோ, எந்த உத்தரவுகளைப் பிறப்பிக்கிறதோ அதை நாங்கள் ஏற்று நடப்போம். அதையேதான் நாங்கள் ஐசிசி-யிடமும் கூறினோம்," என்று தெரிவித்தார்.

 

ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பைத் தொடர் 2025

பட மூலாதாரம்,ANI

படக்குறிப்பு, பிசிசிஐ தலைவர் ஜெய் ஷா வெள்ளிக்கிழமை ஐசிசியிடம் இந்த முடிவுக்கு ஆட்சேபம் தெரிவித்ததாகவும் பிடிஐ முகமை செய்தி வெளியிட்டிருந்தது.

நவம்பர் 8ஆம் தேதியன்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் மோஹ்சின் நக்வி செய்தியாளர்கள் சந்திப்பில் பேசியபோது, "கடந்த இரண்டு மாதங்களாக இந்தப் போட்டியில் இந்தியா பங்கேற்காது என்பதாகப் பல செய்திகள் வெளியாகியுள்ளன. இது போன்று ஏதாவது நடப்பதாக இருந்தாலோ அல்லது யாருக்கேனும் ஆட்சேபம் இருந்தாலோ, முறைப்படி எழுத்துப்பூர்வமாக அதை எங்களுக்குத் தெரிவிக்கவும்," என்று கூறியிருந்தார்.

கடைசியாக இந்திய அணி 2008ஆம் ஆண்டு ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் பங்கேற்க பாகிஸ்தானுக்கு சென்றது. நவம்பர் 2008இல் நடைபெற்ற மும்பை தாக்குதல்களுக்குப் பிறகு பாகிஸ்தானில் நடைபெறும் போட்டிகளில் பங்கேற்பதில்லை என்று இந்தியா முடிவு செய்திருந்தது.

கடந்த 2009ஆம் ஆண்டு பாகிஸ்தானுக்கு இலங்கை அணி சுற்றுப் பயணம் மேற்கொண்டபோது நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதல் அந்த நாட்டில் உள்ள பாதுகாப்பு குறித்துப் பல கவலைகளை எழுப்பியது.

போட்டிகளுக்கு வெறும் 100 நாட்கள்கூட இல்லாத நிலையில் அனைத்துப் போட்டிகளும் பாகிஸ்தானில்தான் நடக்குமா இல்லையா என்பது உறுதியாகத் தெரியவில்லை.

பாதுகாப்பு காரணங்களுக்காக பாகிஸ்தானுக்கு இந்திய அணியை அனுப்பத் தயாராக இல்லை என்று பிசிசிஐ மறுத்துள்ளது. பிசிசிஐயின் இந்த முடிவுக்குப் பிறகு போட்டிகளில் சில பாகிஸ்தானிலும், சில வெளிநாடுகளிலும் நடத்தப்படுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

ஆனால் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அனைத்து போட்டிகளும் பாகிஸ்தானில்தான் நடத்தப்படும் என்று அறிவித்துள்ளது.

கடந்த 2017ம் ஆண்டு இறுதியாக சாம்பியன்ஸ் கோப்பைத் தொடர் நடத்தப்பட்டது. இந்தியாவுக்கு எதிராக, லண்டனின் ஓவல் மைதானத்தில் நடந்த இறுதிப் போட்டியில் 180 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் வெற்றி பெற்று கோப்பையைக் கைப்பற்றியது.

கடந்த 2021ஆம் ஆண்டு அடுத்த சாம்பியன்ஸ் கோப்பைத் தொடரை, 2025ம் ஆண்டில் பாகிஸ்தானில் நடத்த ஐ.சி.சி. முடிவு செய்தது.

 

முன்னாள் பிசிபி தலைவர் கூறுவது என்ன?

ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பைத் தொடர் 2025

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, முன்னாள் தலைவர் நஜாம் சேத்தி

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் முன்னாள் தலைவர் நஜாம் சேத்தி இதுகுறித்துக் கூறுகையில், ஐசிசிக்கு மூன்று வாய்ப்புகள் மட்டுமே இருப்பதாகத் தெரிவித்தார்.

அவரது கூற்றுப்படி, முதலில் இந்தியா பாகிஸ்தானுக்கு வர வேண்டும், இரண்டாவது வாய்ப்பு ஹைப்ரிட் வடிவில் விளையாட வேண்டும். இவையிரண்டுமே ஏற்கப்படவில்லை என்றால், மூன்றாவதாக முழு தொடரும் பாகிஸ்தானுக்கு வெளியே நடத்தப்பட வேண்டும்.

பாகிஸ்தானின் தனியார் செய்தி சேனலுக்கு அவர் அளித்த பேட்டியில், "இந்தியா இதில் கடுமையான நிலைப்பாட்டை எடுத்துள்ளது. அவர்கள் வரப் போவதில்லை. கபடி அணியையும் பார்வையற்றோர் கிரிக்கெட் அணியையும் அனுப்பவில்லை. முன்பு டேவிஸ் கோப்பைக்காக டென்னிஸ் வீரர்கள் விளையாட வருவார்கள். இப்போது அவர்களும்கூட வருவதில்லை,” என்றார்.

நஜாம் சேத்தி, ”நம் முன் இருக்கும் இரண்டு வாய்ப்புகள் கிட்டத்தட்ட நிராகரிக்கப்பட்டுள்ளன, அத்தகைய சூழ்நிலையில் மூன்றாவது வாய்ப்பான, போட்டியை பாகிஸ்தானுக்கு வெளியே கொண்டு செல்வது மட்டுமே மீதமுள்ளது. ஆனால் ஒருவேளை பாகிஸ்தான் மீண்டும் போட்டியைப் புறக்கணிக்க முடிவு செய்யலாம்” என்றார்.

பாகிஸ்தானுக்கு இது மிகவும் சிக்கலான சூழ்நிலை என்கிறார் அவர். "பாகிஸ்தான் இந்தியாவின் கோரிக்கையை ஏற்றுக்கொண்டால், உள்நாட்டில் நிறைய விமர்சனங்களை எதிர்கொள்ளும். பாகிஸ்தான் தலைகுனிய வேண்டியிருந்ததாகப் பேசப்படும்" எனக் கருதுகிறார் நஜாம் சேத்தி.

ஐசிசி எப்போதும் பிசிசிஐ பக்கமே இருக்கும் என்கிறார் அவர். அதேவேளையில், “இந்தப் போட்டியை இலங்கை அல்லது துபாய்க்கு மாற்றி, அதில் பாகிஸ்தான் விளையாடாவிட்டால், ஐசிசிக்கு நஷ்டம் ஏற்படும். இதனால் இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கும் நஷ்டம் ஏற்படும். போட்டி வருவாயில் பெரும் பகுதி இந்தியாவுக்கும், சிறிய பகுதி பாகிஸ்தானுக்கும் செல்கிறது,” என்றார்.

 

ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பைத் தொடர் 2025

பட மூலாதாரம்,KIERAN GALVIN/NURPHOTO VIA GETTY IMAGES

படக்குறிப்பு, நடப்பு சாம்பியனான பாகிஸ்தான் 2017ஆம் ஆண்டு நடைபெற்ற சாம்பியன்ஸ் கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியாவை 180 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

இருப்பினும், இது இந்திய கிரிக்கெட் வாரியத்தைப் பாதிக்காது எனக் கூறும் அவர், பிசிசிஐ பணக்கார வாரியம் என்பதே அதற்குக் காரணம் எனக் குறிப்பிடுகிறார். ஆனால், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் நிலை அப்படியல்ல, அதை அதிகம் பாதிக்கும் என்றும், வெளிநாட்டிலும் விளையாடாவிட்டால், அது பண இழப்பை ஏற்படுத்தும் எனவும் அது பிரச்னையாக மாறும் எனவும் கூறுகிறார் நஜாம் சேத்தி.

அவரது கூற்றுப்படி, ஒருவேளை பாகிஸ்தான் அத்தகைய முடிவை எடுத்து, தன்னை ஐசிசியில் இருந்து ஒதுக்கிக் கொண்டால், ஏற்கெனவே குறைவாக இருக்கும் அதன் வருமானம் மேலும் பெருமளவு குறையும்.

சாம்பியன்ஸ் கோப்பை முஸாஃபராபாத் நகருக்கு எடுத்துச் செல்லப்படாதது ஏன்?

வழக்கமாக சர்வதேச போட்டிகள் நடைபெறும்போது சர்வதேச கிரிக்கெட் வாரியமான ஐ.சி.சி. போட்டி நடைபெறும் நாட்டில் உள்ள பல்வேறு நகரங்களில் அந்தக் கோப்பையை பொதுமக்கள் பார்வைக்கு வைப்பது வழக்கம்.

இஸ்லமாபாத்தில் சனிக்கிழமை (நவம்பர் 16) அன்று ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கோப்பையின் சுற்றுப் பயணம் ஆரம்பமானது. இந்தக் கோப்பை வரும் நாட்களில் பாகிஸ்தானில் 8 இடங்களில் பார்வைக்கு வைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பாகிஸ்தான் கிரிகெட் வாரியம் இந்தக் கோப்பையின் சுற்றுப்பயணம் குறித்து வெளியிட்ட அறிவிப்பில் முசாஃபராபாத்திலும் கோப்பை வைக்கப்படும் என அறிவித்திருந்தது. ஆனால் தற்போது அந்தப் பட்டியலில் இருந்து அந்நகரம் நீக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இந்த நகரம் அமைந்துள்ளதால், இந்தியா, பாகிஸ்தான் இடையே பிரச்னைக்குள்ளான பகுதியாக அது அறியப்பட்டுள்ளது.

 

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கூறியது என்ன?

ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பைத் தொடர் 2025

பட மூலாதாரம்,@THEREALPCB/X

படக்குறிப்பு,இறுதியாக பாகிஸ்தான் செல்வதற்கு முன், இறுதியாக கோப்பை இந்தியாவுக்கு வரும்

நவம்பர் 14ஆம் தேதியன்று தன்னுடைய எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்ட பதிவில், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் இந்தக் கோப்பையைப் பல்வேறு அழகான இடங்களுக்கு எடுத்துச் செல்வதாகக் கூறியிருந்தது.

கார்து மற்றும் ஹன்சா பள்ளத்தாக்கு (கில்ஜித், பல்டிஸ்தான்), முரி (ராவல்பிண்டி), முசாஃபராபாத் நகரங்களின் பெயரும் அந்தப் பட்டியலில் இடம் பெற்றிருந்தது.

பாகிஸ்தானின் இந்தக் கோப்பை சுற்றுப்பயண திட்டத்திற்கு இந்திய கிரிக்கெட் வாரியம்(பி.சி.சி.ஐ) எதிர்ப்பு தெரிவித்தது. பி.சி.சி.ஐ தலைவரான ஜெய் ஷா வெள்ளிக்கிழமை அன்று ஐ.சி.சி. அதிகாரிகளுடன் பேசியதாகவும், பாகிஸ்தானின் இந்த முடிவுக்கு ஆட்சேபம் தெரிவித்ததாகவும் பிடிஐ செய்தி முகமை செய்தி வெளியிட்டிருந்தது.

இதுதொடர்பாக, பெயர் கூற விரும்பாத பிசிசிஐ அதிகாரி ஒருவர் பிடிஐ முகமையிடம் பேசியபோது, "ஜெய் ஷா ஐசிசி அதிகாரிகளை அலைபேசியில் தொடர்புகொண்டு, இந்தக் கோப்பையை பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிக்கு எடுத்துச் செல்வது தொடர்பான பாகிஸ்தானின் முடிவை விமர்சித்துள்ளார். இந்த விவகாரத்தில் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் ஐசிசியிடம் கேட்டுக் கொண்டார்," என்று கூறியுள்ளார்.

"பிசிசிஐ செயலாளர், கோப்பையை இஸ்லமாத்திற்கு கொண்டு செல்வதில் எந்தப் பிரச்னையும் இல்லை எனவும், ஆனால் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் கோப்பை செல்லக்கூடாது என்றும் கூறியதாக" அந்த அதிகாரி பிடிஐ செய்தி முகமையிடம் கூறியுள்ளார்.

"இது தங்களின் தனிப்பட்ட முடிவல்ல. ஏற்கெனவே ஐசிசியுடன் கலந்து பேசி எடுக்கப்பட்ட முடிவுதான்," என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் வெள்ளிக்கிழமை கூறியதாக பிடிஐ மற்றொரு செய்தியை வெளியிட்டிருந்தது. ஆனால் இது தொடர்பாக ஐசிசி இதுவரை எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை.

 

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் முடிவு குறித்து எழும் கேள்விகள்

ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பைத் தொடர் 2025

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டன் முகமது ரிஸ்வான் மற்றும் பிசிபி தலைவர் மோஹ்சின் நக்வி

சாம்பியன்ஸ் கோப்பை போட்டிகள் தொடங்க இன்னும் 100 நாட்களே உள்ள நிலையில், கோப்பையின் சுற்றுப் பயணத்தை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தொடங்கியுள்ளது.

இந்தக் கோப்பை இந்தியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, தென் ஆப்ரிக்கா, வங்கதேசம், ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட எட்டு நாடுகளுக்குச் செல்லும். அதற்கு முன்பாக, சாம்பியன்ஸ் கோப்பை சுற்றுப்பயணம் இஸ்லாமாபாத்தில் இருந்து நவம்பர் 16 அன்று தொடங்கியது.

இந்தக் கோப்பையை பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்கு எடுத்துச் செல்வதற்கான அட்டவணை வெளியிடப்பட்டபோது, இந்தியா எதிர்ப்பு தெரிவித்தது.

கோப்பை சுற்றுப் பயணத்தில் பாகிஸ்தானால் நிர்வகிக்கப்படும் காஷ்மீரை சேர்ப்பது குறித்து நஜாம் சேத்தி கூறுகையில், "பிசிபி சொந்தமாக இதுபோன்ற முடிவுகளை எடுப்பதில்லை. அதற்கு இதுபோன்ற ஆலோசனைகள் கிடைத்திருக்க வேண்டும். முன்னதாக, எந்தக் கோப்பைகள் வந்தாலும், அவை மூன்று அல்லது நான்கு பாகிஸ்தான் நகரங்களுக்கே எடுத்துச் செல்லப்படும்,” என்றார்.

அதோடு, கில்ஜிட், பால்டிஸ்தான் போன்ற பகுதிகள் கோப்பை சுற்றுப் பயணத்தில் அட்டவணையில் சேர்க்கப்பட்டுள்ளதைப் பார்த்து ஆச்சரியப்பட்டதாகக் கூறுகிறார் நஜாம் சேத்தி. இது நன்கு யோசித்து எடுக்கப்பட்ட முடிவு என்றும் இது பிசிபியின் முடிவு அல்ல என்றும் அவர் கூறினார்.

இந்த முடிவை எடுக்கும்போது, இப்படி ஒரு எதிர்வினை வரும் என்பதும் பிசிபிக்கு தெரிந்திருக்க வேண்டும் என்கிறார் அவர்.

மேலும், “பாகிஸ்தான் ஒரு நடவடிக்கையை மேற்கொண்டது. அதைச் சாத்தியப்படுத்த தூதரக பேச்சுவார்த்தை மூலம் இந்தியாவைச் சமாளிக்க வைப்பதற்கான சாத்தியக்கூறுகளும் ஆராயப்பட்டிருக்க வேண்டும். ஆனால், அதிலிருந்து பின்வாங்கியுள்ளது. இப்போது இந்தியா கடுமையான நிலைப்பாட்டை எடுக்கும்,” என்றார் நஜாம் சேத்தி.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

இந்த‌ தொட‌ர்

இந்தியாவில் ந‌ட‌க்க‌ கூடும் என்று த‌க‌வ‌ல் வ‌ருது அண்ணா

 

இந்தியா தொட‌ர்ந்து பாக்கிஸ்தானை வ‌ஞ்சிக்குது.............இது ந‌ல்ல‌துக்கு இல்லை

இந்தியாவின் அர‌சிய‌ல் இதில் வெளிச்ச‌த்துக்கு வ‌ருது குள்ள‌ ந‌ரிக‌ள்...........................

  • 3 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

'சம்பியன்ஸ்' கிண்ணம், எதிர்கால ஐசிசி சுற்றுப் போட்டிகளை ஈரிடங்களில் நடத்த இந்தியா, பாகிஸ்தான் இணக்கம்

image

(நெவில் அன்தனி)

சம்பியன்கள் கிண்ணம் (Champions Trophy), எதிர்கால ஐசிசி சுற்றுப் போட்டிகளை ஈரிடங்களில் நடத்தும் முறைமையை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையும் பாகிஸ்தான் கிரிக்கெட சபையும் ஒப்புக்கொண்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.

இதுகாலவரை ஏட்டிக்கு போட்டி மனப்பான்மையுடன் செயல்பட்டு வந்த இந்திய கிரிக்கட் கட்டுப்பாட்டுச் சபையும் பாகிஸ்தான் கிரிக்கட் கட்டுப்பாட்டுச் சபையும் அதிலிருந்து பின்வாங்கி, தங்களுக்கு இடையிலான ஐசிசி போட்டிகளை ஈரிடங்களில் விளையாட ஒப்புக்கொண்டுள்ளன.

இதன் காரணமாக அடுத்த வருடம் நடைபெறவுள்ள சம்பியன்கள் கிண்ண  பொட்டியை நடத்துவதற்கான வழிமுறையை, போட்டி அட்டவணையை தயாரிக்கும் ஐசிசியின் பணி எளிதாக்கப்பட்டுள்ளது.

2025 பெப்ரவரி 19ஆம் திகதியிலிருந்து மார்ச் 9ஆம் திகதிவரை நடைபெறவுள்ள சம்பியன்கள் கிண்ண கிரிக்கெட் போட்டி தொடர்பாக ஆராய்வதற்கான இணையவழி கூட்டம் ஒன்றை சர்வதேச கிரிக்கட் பேரவை கடந்த வெள்ளிக்கிழமை ஏற்பாடு செய்திருந்தது.

இந்தக் கூட்டத்தின்போது ஈரிடங்கள் முறைமை குறித்த ஒருமித்த முடிவுக்கு வந்து பின்னர் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையினதும் பாகிஸ்தான் கிரிக்கெட் சபையினதும் பிரதிநிதிகள் சனிக்கிழமையன்று பேச்சுவார்த்தை நடத்தினர்.

இந் நிலையில், இந்திய அரசாங்கம் அதன் அணியை பாகிஸ்தானுக்குச் செல்ல அனுமதிக்க மறுத்ததால் அடுத்துவரும் மூன்று வருடங்களில் இந்தியாவில் போட்டிகள் நடத்தப்படும்போது, அதே மாதிரியை தனது அணிக்கும் பயன்படுத்த விரும்புவதாக பாகிஸ்தான் கிரிக்கெட் சபை வலியுறுத்தியுள்ளது.

இந்தத் திட்டம் முழுமையாக செயல்படுத்தப்படுவதை உறுதிசெய்வதற்கான இறுதி அனுமதியை சர்வதேச கிரிக்கட் பேரவையின் பணிப்பாளர்கள் சபை வழங்க வேண்டும் என பாகிஸ்தான் கிரிக்கெட் சபை வலியுறுத்தியுள்ளது.

கடந்த வருடம் நடைபெற்ற ஒருநாள் உலகக் கிண்ணப் போட்டியில் பங்குபற்றுவதற்காக இந்தியாவுக்கு பாகிஸ்தான் அணி சென்னிறிருந்தது. அதன் பின்னர் ஈரிடங்கள் என்ற திட்டத்தை ஏற்கமுடியாது என்ற நிலைப்பாட்டில் பாகிஸ்தான் கிரிக்கெட் சபை உறுதியாக இருந்துவருகிறது.

தமது அணி எவ்வாறு உலகக் கிண்ணத்தில் பங்குபற்ற இந்தியாவுக்கு பயணித்ததோ அதேபோன்று சம்பியன்கள் கிண்ண போட்டியில் பங்குபற்ற தமது நாட்டிற்கு இந்தியா வரும் என பாகிஸ்தான் கிரிக்கெட் சபை எதிர்பார்த்தது.

1996 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியை இலங்கை, இந்தியாவுடன் இணைந்து கூட்டாக நட்த்திய பின்னர் பாகிஸ்தானில் நடைபெறவுள்ள முதலாவது ஐசிசி கிரிக்கெட் போட்டி சம்பியன்கள் கிண்ண கிரிக்கெட் போட்டியாகும். இந் நிலையில் எதிர்காலத்தில் தயவுதாட்சண்யங்களை எதிர்பார்க்கவேண்டாம் என்ற சமிக்ஞையை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபைக்கு பாகிஸ்தான் கொடுத்துள்ளது.

'ஆமாம், கடந்த கால அனுபவம் பாகிஸ்தானுக்கு கசப்பானது, எதிர்காலத்தில் ஈரிடங்கள் என்ற முறைமை நடைமுறைப்படுத்தப்படும் என்பதற்கு ஐசிசி உறுதியான உத்தரவாதத்தை நல்லெண்ணத்துடன் எழுத்துமூலம் அளிக்க வேண்டும். மேலும் எந்தவொரு பாகிஸ்தான் அணியும் ஐசிசியின் எந்தப் போட்டிகளிலும் விளையாட இந்தியாவுக்குச் செல்லாது. அதே மாதிரி இந்திய அணி பாகிஸ்தானுக்கு வருகை தராது'' என்று பாகிஸ்தான் கிரிக்கெட் சபையின் வட்டாரம் ஒன்று அந் நாட்டு ஊடகம் ஒன்றுக்கு தெரிவித்துள்ளது.

இரண்டு கிரிக்கெட் சபைகளும் பரஸ்பர புரிந்துணர்வடன் ஒரு முடிவை எட்டுமாறு ஐசிசி கேட்டுக்கொண்டதாக அந்த வாட்டாரம் மேலும் குறிப்பிட்டுள்ளது.

துபாயில் இணையவழி கூட்டம் ஒன்றை வெள்ளிக்கிழமை நடத்துவதற்கான ஏற்பாட்டை ஐசிசி செய்திருந்தது. ஆனால் அந்தக் கூட்டம் சனிக்கிழமைக்கு பிற்போடப்பட்டிருந்தது.

அன்றைய தினம்தான் (டிசம்பர் 1) ஐசிசியின் தலைவர் பதவியை இந்தியாவின் ஜெய் ஷா பொறுப்பேற்றார். அத்துடன் இரண்டு கிரிக்கெட் சபைகளும் ஆலோசகைகளில் ஈடுபட்டிருந்ததால் அன்றைய தினமும் இணையவழி கூட்டம் நடைபெறவில்லை.

ஐக்கிய அரபு இராச்சியத்தின் தேசிய தினம் அனுஷ்டிக்கப்படுவதால் நாளை செவ்வாய்க்கிழமைவரை அந் நாட்டில் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. அதன் பின்னர் எந்த நேரத்திலும் கூட்டம் நடத்தப்பட்டு முடிவு அறிவிக்கப்படலாம் என்று அந்த வட்டாரம் மேலும் தெரிவித்துள்ளது.

பாதுகாப்பு காரணங்களுக்காக பாகிஸ்தானுக்கு விஜயம் செய்வதை  இந்திய அரசு அனுமதிக்கவில்லை என்பதற்கான கடிதத்தை காட்டுமாறு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையிடம் பாகிஸ்தான் கிரிக்கெட் சபை கேட்டுக்கொண்டிருந்தது. ஆனால்,  அத்தகைய கடிதம் எதுவும் காட்டப்படவில்லை என்று அந்த வட்டாரம் மேலும் தெரிவித்துள்ளது.

'அரசாங்கத்திடம் இருந்து எந்தக் கடிதமும் இல்லை என்றும் அக்டோபர் 21ஆம் திகதி நடைபெற்ற ஐசிசி கூட்டத்தில் வழங்கப்பட்ட சம்பியன்கள் கிண்ணத்துக்கான முதன்மை பாதுகாப்பு திட்டத்தை ஒப்புக்கொண்டது என்றும் ஒருவேளை, விளையாட்டுத்துறை நியாயாதிக்க சபையிடம் பாகிஸ்தான் கிரிக்கெட் சபையை அணுகி வழக்கு தொடுத்தால் அது இந்தியாவுக்கு பலவீனமதாகவே இருக்கும் என்றும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டச் சபையை மறைமுகமாக பின்வாசல் வட்டாரங்கள் எச்சரித்துள்ளன' என கூறப்படுகிறது.

ஐசிசியின் மிகவும் செல்வாக்கு மிக்க உறுப்பினராக இந்தியா உள்ளது. கிரிக்கெட்டின் நிர்வாகக் குழுவின் வருமானத்தில் பெரும்பங்கை இந்தியா பெறுகிறது எனவும் இரண்டு அணிகளும் மோதும் போட்டிகளின் மூலமே அதிக வருவாய் கிடைப்பதால் பாகிஸ்தான் அதிக பங்கைக் கேட்கலாம் எனவும் அந்த வட்டாரம் மேலும் தெரிவித்துள்ளது.

'சம்பியன்கள் கிண்ண சிக்கல் தீர்க்கப்பட்டவுடன் எதிர்கால வருமானத்திலிருந்து தனக்கு சேரவேண்டிய சரியான பங்கை பெறும் வகையில் சர்வதேச கிரிக்கெட் பேரவையிடம் இந்த விடயங்களை பாகிஸ்தான் எடுத்துக்கூறும்'  எனஅந்த வட்டாரம் கூறி முடித்துள்ளது.

https://www.virakesari.lk/article/200267

  • கருத்துக்கள உறவுகள்

பாக்கிஸ்தான் கிரிக்கேட் வாரிய‌ம் இந்தியாவிட‌ம் ம‌ண்டியிட்ட‌து...........................

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஐசிசியிடம் எழுத்துபூர்வமான உத்தரவாதம் கேட்ட பாகிஸ்தான் கிரிக்கெட் சங்கம்

அடுத்த ஆண்டு நடக்கவிருக்கும் சம்பியன்ஸ் கிண்ண தொடருக்கான சலசலப்பு இன்னும் நிறைவடையாமல் உள்ள நிலையில், பாகிஸ்தான் கிரிக்கெட் சங்கம், ஐசிசியிடமிருந்து எழுத்துபூர்வமான உத்தரவாதத்தை கோரியுள்ளது.

அடுத்த ஆண்டு பெப்ரவரி மாதம் 19 ஆம்திகதியிலிருந்து மார்ச் 9 ஆம் திகதி வரை சாம்பியன்ஸ் கோப்பை தொடர் நடைபெறவிருக்கிறது. இந்த தொடரை பாகிஸ்தான் கிரிக்கெட் சங்கம் ஏற்று நடத்துகிறது. ஆனால் இந்த தொடருக்காக பாகிஸ்தான் செல்ல இந்திய கிரிக்கெட் சங்கமான பிசிசிஐ மறுத்து வருகிறது.

மேலும், இந்திய அணிக்கான போட்டிகளை, ‘ஹைபிரிட்’ மாடலில் வேறு நாட்டில் நடத்த வேண்டும் எனவும் ஐசிசிக்கு பிசிசிஐ கடிதம் எழுதியிருந்தது. இந்த கோரிக்கையை ஐசிசி ஏற்றுக்கொள்ளும் என்றே கூறப்படுகிறது.

இந்த நிலையில், இனி வரும் காலங்களிலும், ஐசிசி தொடர்களில் இந்தியா – பாகிஸ்தான் விளையாடும் போட்டிகளை ‘ஹைபிரிட்’ மாடலிலேயே நடத்த வேண்டும். அதற்கான உத்தரவாதத்தை ஐசிசி எழுத்துப்பூர்வமாக கொடுக்க வேண்டும் என பாகிஸ்தான் கிரிக்கெட் சங்கம் கோரிக்கை வைத்துள்ளது. ஐசிசி இதை கொடுக்கும் பட்சத்தில், இனி இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதும் ஐசிசி தொடர்கள் என்றுமே ஹைபிரிட் மாடலில் தான் நடத்தப்படும் என கூறப்படுகிறது.

இதற்கிடையில், பாகிஸ்தான் கிரிக்கெட் சங்கத்தின் தலைவர் மொஹ்சின் நக்வி, பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஹெரிபை சந்தித்து பேசியுள்ளார். இந்த விவகாரத்தில் பாகிஸ்தான் அரசின் வழிமுறைகளை தான் பாகிஸ்தான் கிரிக்கெட் சங்கம் பின்பற்றும் என ஏற்கனவே பாகிஸ்தான் கிரிக்கெட் சங்கம் கூறியது குறிப்பிடத்தக்கது.

வரவிருக்கும் சாம்பியன்ஸ் கோப்பை தொடரில், இந்திய அணி விளையாடும் போட்டிகளை, துபாயில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் அதற்கான அட்டவணை நாளை வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

https://thinakkural.lk/article/313493

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாகிஸ்தானிலும் ஐக்கிய அரபு இராச்சியத்திலும் ஐசிசி சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் 2025

Published By: VISHNU   25 DEC, 2024 | 12:08 AM

image

(நெவில் அன்தனி)

ஐசிசி சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி எங்கெங்கு, என்னென்ன திகதிகளில் நடைபெறும் என்பதை சர்வதேச கிரிக்கெட் பேரவை செவ்வாய்க்கிழமை (24) உத்தியோகபூர்வமாக அறிவித்தது.

2412_icc_champions_trophy_schedule.jpg

பாகிஸ்தான் சம்பந்தப்பட்ட போட்டிகள் பாகிஸ்தானிலும் இந்தியா சம்பந்தப்பட்ட போட்டிகள் ஐக்கிய அரபு இராச்சியத்திலும் நடத்தப்படும் எனவும் இப் போட்டிகளுக்கான வரவேற்பு நாடு என்ற உரிமையை பாகிஸ்தான் கொண்டிருக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

2412_icc_champions_trophy_2017_Pak_champ

2017க்குப் பின்னர் மீண்டும் சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி சர்வதேச அரங்கில் அரங்கேற்றப்படவுள்ளது. இந்தியா, இலங்கை ஆகியவற்றுடன் கூட்டிணைந்து 1996 உலகக் கிண்ணப் போட்டியை நடத்திய பாகிஸ்தானில், 28 வருடங்கள் கழித்து முதல் தடவையாக ஐசிசி போட்டி நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.

2412_icc_champions_trophy_2017_Pak_champ

2017இல் நடத்தப்பட்ட சம்பியன்ஸ் கிண்ண போட்டி முறைமையே 2025இலும் பின்பற்றப்படவுள்ளது.

சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டியில் பங்குபற்றும் 8 அணிகள் இரண்டு குழுக்களாக வகுப்பட்டு முதல் சுற்ற லீக் முறையில் நடத்தப்படும்.

கடைசியாக ஐக்கிய இராச்சியத்தில் கியா ஓவல் விளையாட்டரங்கில் நடைபெற்ற 2017 ஐசிசி சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டியில் சம்பியனான  பாகிஸ்தான், இரண்டாம் இடத்தைப் பெற்ற இந்தியா ஆகியவற்றுடன் நியூஸிலாந்து, பங்களாதேஷ் ஆகியன ஏ குழுவிலும் ஆப்கானிஸ்தான், அவுஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆபிரிக்கா ஆகியன பி குழுவிலும் இடம்பெறுகின்றன.

இந்த இரண்டு குழுக்களிலும் லீக் சுற்று முடிவில் முதல் இரண்டு இடங்களைப் பெறும் அணிகள் அரை இறுதிகளில் விளையாட தகுதிபெறும்.

இந்தியா அரை இறுதிக்கு முன்னேறினால் அப் போட்டி துபாய் சர்வதேச விளையாட்டரங்கில் நடைபெறும். அத்துடன் இறுதிப் போட்டியில் விளையாட இந்தியா தகுதிபெற்றால் அப் போட்டியும் துபாயிலேயே நடைபெறும். ஒருவேளை இந்தியா தகுதிபெறாவிட்டால் அப் போட்டிகள் பாகிஸ்தானில் அரங்கேற்றப்படும்.

இந்தியா சம்பந்தப்படாத போட்டிகள் யாவும் லாகூர், கராச்சி, ராவல்பிண்டி ஆகிய இடங்களில் நடத்தப்படும்.

இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான ஆடவர் மற்றும் மகளிர் ஐசிசி கிரிக்கெட் போட்டிகள் யாவும் நடுநிலையான மைதானத்தில் நடத்தப்படும் என்பதை சர்வதேச கிரிக்கெட் பேரவை உறுதி செய்ததை அடுத்து ஐசிசி சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டிக்கு நடுநிலையான இடமாக ஐக்கிய அரபு இராச்சியம் தெரிவுசெய்யப்பட்டது.

இந்தத் தீர்மானத்திற்கு அமைய அடுத்த வருடம் இந்தியாவில் நடைபெறவுள்ள மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி உட்பட 2027வரை இந்தியாவில் நடைபெறவுள்ள அனைத்து ஐசிசி கிரிக்கெட் போட்டிகளிலும் பாகிஸ்தான் பங்குபற்றினால் அதன் போட்டிகள் யாவும் நடுநிலையான மைதானத்தில் நடத்தப்படும்.

இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான அரசியல் பதற்றம் நிலவுவதால் இருதரப்பு கிரிக்கெட் போட்டிகள் கடந்த பல்லாண்டுகளாக நிறுத்தப்பட்டுள்ளது.

போட்டி அட்டவணை

ஏ குழு

பெப். 19: பாகிஸ்தான் எதிர் நியூஸிலாந்து (லாகூர்)

பெப். 20 பங்களாதேஷ் எதிர் இந்தியா (துபாய்)

பெப். 23: பாகிஸ்தான் எதிர் இந்தியா (துபாய்)

பெப். 24: பங்களாதேஷ் எதிர் நியூஸிலாந்து (ராவல்பிண்டி)

பெப். 27: பாகிஸ்தான் எதிர் பங்களாதேஷ் (ராவல்பிண்டி)

மார்ச் 2: நியூஸிலாந்து எதிர் இந்தியா (துபாய்)

 

பி குழு

 

பெப்: 21: ஆப்கானிஸ்தான் எதிர் தென் ஆபிரிக்கா (கராச்சி)

பெப். 22: அவுஸ்திரேலியா எதிர் இங்கிலாந்து (லாகூர்)

பெப். 25: அவுஸ்திரேலியா எதிர் தென் ஆபிரிக்கா (ராவல்பிண்டி)

பெப்; 26: ஆப்கானிஸ்தான் எதிர் இங்கிலாந்து (லாகூர்)

பெப். 28: ஆப்கானிஸ்தான் எதிர் அவுஸ்திரேலியா (லாகூர்)

மார்ச் 1: தென் ஆபிரிக்கா எதிர் இங்கிலாந்து (கராச்சி)

 

அரை இறுதிகள்

மார்ச் 4: ஏ1 எதிர் பி2 (துபாய்)

மார்ச் 5: பி1 எதிர் ஏ2 (லாகூர்)

 

இறுதிப் போட்டி

மார்ச் 9 லாகூர் (அல்லது துபாய்)

https://www.virakesari.lk/article/202085

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

இந்த தொட‌ர‌ ந‌ட‌த்த‌ பாக்கிஸ்தான் கிரிக்கேட் வாரியம் சிர‌ம‌ப் ப‌டுகின‌ம்

இப்ப‌ தென் ஆபிரிக்காவும் புது பிர‌ச்ச‌னைய‌ உருவாக்கி இருக்கின‌ம்............................

  • கருத்துக்கள உறவுகள்

@வீரப் பையன்26 , யாழ்கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி வைக்கலாம் என்று நினைக்கின்றேன். 10 பேர் பங்குபற்றுவார்களா?

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, கிருபன் said:

@வீரப் பையன்26 , யாழ்கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி வைக்கலாம் என்று நினைக்கின்றேன். 10 பேர் பங்குபற்றுவார்களா?

போட்டி கேள்விக‌ளை நீங்க‌ள் த‌யார் ப‌டுத்தினால் வ‌ழ‌மை போல் போட்டியில் க‌ல‌ந்து கொள்ளும் உற‌வுக‌ள் க‌ல‌ந்து கொள்ளுவின‌ம்...................இன்னும் மூன்று கிழ‌மை இருக்கு தானே இந்த‌க் கிழ‌மை நேர‌ம் இருக்கும் போது போட்டி கேள்விய‌ த‌யார் ப‌டுத்துங்கோ பெரிய‌ப்பு 🙏👍....................

  • 4 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சாம்பியன்ஸ் கோப்பை 2025: பும்ரா இல்லாமல் இந்திய அணியால் தாக்குப் பிடிக்க முடியுமா?

சாம்பியன்ஸ் கோப்பை 2025: பும்ரா இல்லாத இந்திய அணி எப்படி சமாளிக்கும், தாக்குப் பிடிக்குமா?

பட மூலாதாரம்,GETTY IMAGES

கட்டுரை தகவல்
  • எழுதியவர், க.போத்திராஜ்
  • பதவி, பிபிசி தமிழுக்காக

"ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பையில் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா இந்திய அணியில் இல்லாதது, உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் கிறிஸ்டியானோ ரொனால்டோ விளையாடாதது போல் இருக்கும்."

இதைக் கூறியவர் இங்கிலாந்து அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் ஸ்டீவ் ஹார்மின்சன்தான்.

பும்ரா ஏற்படுத்திய தாக்கத்தின் ஆழத்தை, போட்டியின் சுவாரஸ்யத்தை இவ்வளவு அழகாக, எளிமையாகக் கூற முடியாது. 9வது ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பைத் தொடர் வரும் 19ஆம் தேதி பாகிஸ்தானில் தொடங்கி மார்ச் 9ஆம் தேதி வரை நடக்கிறது.

இதில் 'ஏ' பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, வங்கதேசம் அணிகளும், 'பி' பிரிவில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான் அணிகளும் இடம் பெற்றுள்ளன.

சாம்பியன்ஸ் கோப்பைக்கான உத்தேச இந்திய அணியில் தொடக்கத்தில் ஜஸ்பிரித் பும்ரா இடம் பெற்றிருந்தாலும், இறுதி செய்யப்பட்டு நேற்று முன்தினம் பிசிசிஐ வெளியிட்ட அறிவிப்பில் இந்திய அணியில் ஜஸ்பிரித் பும்ராவுக்கு இடமில்லை.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பார்டர் கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரில் ஒவ்வொரு போட்டியையும் தோளில் தூக்கிச் சுமந்த பும்ரா, அதிக பணிப்பளு காரணமாக கடைசி டெஸ்டில் முதுகு வலியால் அவதிப்பட்டார். ஏற்கெனவே பும்ராவுக்கு முதுகுவலிப் பிரச்னை இருந்து அறுவை சிகிச்சை செய்துள்ளார்.

இதனால் 2022 செப்டம்பர் முதல் 2023 ஆகஸ்ட் வரை 11 மாதங்கள் கிரிக்கெட்டில் இருந்து பும்ரா ஒதுங்கி ஓய்வில் இருந்தார். ஆஸ்திரேலியா தொடருக்குப் பின் இங்கிலாந்துக்கு எதிரான டி20 மற்றும் ஒருநாள் தொடரிலும் பும்ரா இடம் பெறவில்லை.

இப்போது பும்ராவுக்கு உடல்நிலை தேறிவிட்டாலும், அணியின் எதிர்காலம் கருதி பிசிசிஐ அவரை சாம்பியன்ஸ் கோப்பைக்குத் தேர்வு செய்யவில்லை.

குறுகிய கால இலக்குகளை மனதில் கொண்டு எடுக்கப்படும் முடிவுகளின் நீண்டகால தாக்கத்தை பிசிசிஐ கவனத்தில் கொண்டு பும்ராவை சேர்க்கவில்லை.

சாம்பியன்ஸ் கோப்பை 2025: பும்ரா இல்லாத இந்திய அணி எப்படி சமாளிக்கும், தாக்குப் பிடிக்குமா?

பட மூலாதாரம்,GETTY IMAGES

ஜஸ்பிரித் பும்ராவுக்குப் பதிலாக தமிழக வீரர் வருண் சக்ரவர்த்தி சேர்க்கப்பட்டுள்ளார். இந்திய அணியின் பந்துவீச்சை வழிநடத்தக் கூடியவரான பும்ரா சாம்பியன்ஸ் கோப்பையில் விளையாடாததால் அவரின் சுமை அனைத்தும் முகமது ஷமி மீது விழுந்துள்ளது.

இந்திய அணியில் ஷமி தவிர்த்து அர்ஷ்தீப் சிங், ஹர்சித் ராணா, ஹர்திக் பாண்டியா ஆகிய வேகப்பந்துவீச்சாளர்கள் இருந்தாலும், இந்த 3 பந்துவீச்சாளர்களும் ஷமிக்கு ஆதரவாக இருக்க முடியுமே தவிர பிரதானமாகச் செயல்பட முடியாது. ஏனென்றால், சாம்பியன்ஸ் கோப்பைத் தொடரில் விளையாடிய அனுபவம் இதில் இரண்டு வீரர்களுக்கு இல்லை. ஹர்திக் பாண்டியா ஆல் ரவுண்டராகவே அணியில் இடம்பெறுகிறார்.

சாம்பியன்ஸ் கோப்பை என்பது ஏறக்குறைய மினி உலகக்கோப்பை போன்றதுதான். இதில் பந்துவீச்சுக்கு தலைமை வகிக்கும் பந்துவீச்சாளர் தேவைப்படும் நேரத்தில் விக்கெட் வீழ்த்துவது, எதிரணி ஸ்கோரை கட்டுப்படுத்தும் வகையில் பந்துவீசுவது, புதிய பந்தில் விக்கெட்டுகளை வீழ்த்துவது, டெத் ஓவர்களில் சக பந்துவீச்சாளர்களை வழிநடத்துவது, ஆலோசனைகள் தருவது என முக்கியப் பணிகளைச் செய்ய வேண்டும்.

ஜஸ்பிரித் பும்ரா இருந்திருந்தால், இந்தப் பணிகளை அவர் செய்திருப்பார், அவர் இல்லாத நிலையில் ஷமி அந்த இடத்தை நிரப்ப வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்.

பும்ரா ஏன் தேவை?

சாம்பியன்ஸ் கோப்பை 2025: பும்ரா இல்லாத இந்திய அணி எப்படி சமாளிக்கும், தாக்குப் பிடிக்குமா?

பட மூலாதாரம்,GETTY IMAGES

இந்திய அணியின் பந்துவீச்சில் முக்கிய அச்சாணியாகவும், துருப்புச் சீட்டாகவும் ஜஸ்பிரித் பும்ரா இருக்கிறார்.

சிறந்த உதாரணத்தைக் கூற வேண்டுமென்றால், டி20 உலகக்கோப்பைத் தொடரில் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்திலும், இறுதிப் போட்டியில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஆட்டத்திலும் தேவைப்படும் நேரத்தில் விக்கெட்டை எடுத்துக் கொடுத்து அணியை அடுத்த கட்டத்துக்கு நகர்த்தியதில் பும்ராவுக்கு நிகர் பும்ராதான்.

பும்ரா இடத்தில் வேறு எந்த வேகப்பந்துவீச்சாளர் இருந்தாலும் இதைச் செய்திருக்க முடியாது என்பதை ரசிகர்கள் அறிவர்.

சக பந்துவீச்சாளர்கள் மீது அழுத்தம் வராமல் எதிரணியின் எந்த பேட்டரை எப்படி வெளியேற்றுவது, புதிய பந்தில் விக்கெட்டை வீழ்த்தி எதிரணியினரைச் சுற்றலில் விடுவது என பும்ராவின் பணிகள் மகத்தானது.

இந்திய அணி ஏ பிரிவில் நியூசிலாந்து, பாகிஸ்தான், வங்கதேசம் அணிகளுடன் மோதவிருக்கிறது. இதில் வங்கதேசம் அணி திடீரென அதிர்ச்சியளிக்கும் வகையில் விளையாடினாலும், பும்ரா இல்லாமல் இருந்தால்கூட இந்திய அணி சமாளித்து வெற்றி பெற்றுவிடும்.

ஆனால், பாகிஸ்தான், நியூசிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் பும்ரா இருப்பது இந்திய அணிக்கு மிகப்பெரிய பலமாக அமையும்.

சாம்பியன்ஸ் கோப்பை 2025: பும்ரா இல்லாத இந்திய அணி எப்படி சமாளிக்கும், தாக்குப் பிடிக்குமா?

பட மூலாதாரம்,GETTY IMAGES

இந்த 3 அணிகளுக்கு எதிராகவும் பும்ரா அதிகமான போட்டிகளை ஆடாவிட்டாலும், அவரின் பந்துவீச்சு இந்த அணிகளுக்கு சிம்மசொப்பனமாக இருந்தது என்பதைப் புள்ளிவிவரங்கள் வாயிலாக அறியலாம்.

  • பாகிஸ்தானுக்கு எதிராக 8 ஒருநாள் போட்டிகளில் 51 ஓவர்கள் வீசிய பும்ரா 7 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார், 4.5 எக்கானமி வைத்துள்ளார்.
  • அதேபோல நியூசிலாந்துக்கு எதிராக 13 ஒருநாள் போட்டிகளில் விளையாடிய பும்ரா 121 ஓவர்களை வீசியுள்ளார், 15 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார், 4.8 எக்கானமி வைத்துள்ளார்.
  • வங்கதேச அணிக்கு எதிராக 5 போட்டிகளில் 47 ஓவர்கள் வீசிய பும்ரா 12 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார், 4.4 எக்கானமி வைத்துள்ளார்.

இந்த 3 அணிகளுக்கு எதிராகவும் குறைவான போட்டிகளில் பும்ரா பந்து வீசியிருந்தாலும், அவர் வைத்திருக்கும் எக்கானமி ரேட் அற்புதமானது. ஒருநாள் போட்டிகளில் எந்தப் பந்துவீச்சாளரும் இதுபோலக் குறைவான எக்கானமி ரேட் வைத்திருப்பது கடினம்.

குறிப்பாக, பாகிஸ்தான், நியூசிலாந்து அணிகளுக்கு எதிரான ஆட்டத்தில் 50 ஓவர்கள் போட்டிகளில் நடுப்பகுதி ஓவர்கள் மிகவும் முக்கியமானது. ஓர் அணியின் ஸ்கோர் மேலே உயர்வதும், கட்டுப்படுத்தப்படுவதும் இந்த நடுப்பகுதி ஓவர்களில்தான் தீர்மானிக்கப்படும்.

இதுபோன்ற முக்கியமான கட்டத்தில் பந்துவீசுவதற்கு பும்ரா எனும் பிரம்மாஸ்திரம் இந்திய அணியில் இருக்க வேண்டும். இப்போது பும்ரா இல்லாததால் நடுப்பகுதி ஓவர்களிலும், டெத் ஓவர்களிலும் அவர் இடத்தை நிரப்ப சரியான வீரரைத் தேர்ந்தெடுப்பது அவசியம்.

இந்திய அணிக்கு எது முக்கியம்?

சாம்பியன்ஸ் கோப்பை 2025: பும்ரா இல்லாத இந்திய அணி எப்படி சமாளிக்கும், தாக்குப் பிடிக்குமா?

பட மூலாதாரம்,GETTY IMAGES

சாம்பியன்ஸ் கோப்பைத் தொடருக்கான இந்திய அணியில் ஜஸ்பிரித் பும்ரா இல்லாததைப் போல் உலக சாம்பியன்ஸ் ஆஸ்திரேலிய அணியில் கேப்டன் கம்மின்ஸ் பங்கேற்கவில்லை. அவரோடு, ஹேசல்வுட், மிட்ஷெல் ஸ்டார்க் உள்பட 3 முக்கியப் பந்துவீச்சாளர்களே அந்த அணியில் விளையாடவில்லை.

ஆஸ்திரேலிய அணிக்கு உலக அரங்கில் வெற்றியை தேடித் தந்ததே இந்த மூன்று பந்துவீச்சாளர்கள்தான். இவர்கள் இல்லாத நிலையில் ஸ்மித் தலைமையில் அனுபவமில்லாத இளம் பந்துவீச்சாளர்களை வைத்துக் கொண்டு அந்த அணி களமிறங்குகிறது. ஆஸ்திரேலிய அணியின் வீரர்கள் தேர்வு உணர்த்துவது நம்பிக்கையை மட்டும்தான்.

அதேபோல பும்ரா இல்லாத சூழலிலும் ஷமி தலைமையில் ஒவ்வொரு போட்டியையும் வெல்ல முடியும் என்ற நம்பிக்கையோடு இந்திய அணி அணுக வேண்டும்.

இடதுகை வேகப்பந்துவீச்சில் அர்ஷ்தீப் சிங், அனுபவ வீரர் ஷமி புதிய பந்தில் பந்து வீசினாலும், நடுப்பகுதியில் சுழற்பந்துவீச்சாளர்களைத் தவிர்த்து ஹர்திக் பாண்டியா, ஹர்சித் ராணா ஆகிய 2 வேகப்பந்துவீச்சாளர்களும் உள்ளனர்.

இவர்கள்தான் நடுப்பகுதி ஓவர்களில் ஆட்டத்தை கட்டுப்படுத்தக் கூடியவர்கள். பும்ரா இல்லாத இடத்தை நிரப்புவது கடினம் என்ற போதிலும், நம்பிக்கையுடன் அனுகுவது அவசியம்.

ஐந்து சுழற்பந்துவீச்சாளர்கள்

சாம்பியன்ஸ் கோப்பை 2025: பும்ரா இல்லாத இந்திய அணி எப்படி சமாளிக்கும், தாக்குப் பிடிக்குமா?

பட மூலாதாரம்,GETTY IMAGES

இந்திய அணி, சாம்பியன்ஸ் கோப்பைத் தொடரில் ரவீந்திர ஜடேஜா, அக்ஸர் படேல், குல்தீப் யாதவ், வருண் சக்ரவர்த்தி, வாஷிங்டன் சுந்தர் ஆகிய 5 சுழற்பந்துவீச்சாளர்களுடன் களமிறங்குகிறது.

துபை மைதானம் சுழற்பந்துவீச்சாளர்களுக்கு ஏற்றதுதான் என்றாலும், போட்டியை நடத்தும் பாகிஸ்தான் அணி ஒரேயொரு முழுநேர சுழற்பந்துவீச்சாளருடன்தான் களமிறங்குகிறது.

இதில் பும்ராவுக்கு பதிலாக கடைசி நேரத்தில் சேர்க்கப்பட்டுள்ள தமிழக வீரர் வருண் சக்ரவர்த்தி மீது கேப்டன் ரோஹித் சர்மா, பயிற்சியாளர் கெளதம் கம்பீர் பெரிய நம்பிக்கை வைத்துள்ளனர்.

அதனால்தான் இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் வாய்ப்பளித்து வருணை பரிசோதித்துப் பார்த்தனர். டி20 போட்டிகளில் 4 ஓவர்கள் வீசி அனுபவப்பட்ட வருண், எவ்வாறு 10 ஓவர்களை வீசுவார் என்பது ஒரு சில போட்டிகளை வைத்து முடிவு செய்வது கடினம்தான்.

ஆனாலும், வருணின் புதிரான, மாயாஜால பந்துவீச்சு துபை போன்ற சுழற்பந்துவீச்சு ஆடுகளத்தில் நன்றாக எடுபடும் என நம்புகிறார்கள்.

நடுப்பகுதி ஓவர்களில் எதிரணியின் ரன்களை கட்டுப்படுத்துவதில் சினாமென் அல்லது மணிக்கட்டைப் பயன்படுத்தி பந்துவீசும் பந்துவீச்சாளர்கள் பங்கு முக்கியமானது.

இதில் குல்தீப் யாதவ் பந்துவீச்சு பெரியளவு பலன் அளிக்கும் என்றாலும், இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் குல்தீப்புக்கு பெரிதாக வாய்ப்பு வழங்கவில்லை.

கடந்த 2023 ஒருநாள் உலகக்கோப்பை, 2024 டி20 உலகக்கோப்பைத் தொடரில் நடுப்பகுதி ஓவர்களில் குல்தீப் பந்துவீச்சு எந்த அளவுக்கு முக்கியமாக இருந்தது என்பதைப் புரிந்து அவருக்கு வாய்ப்பளிக்க வேண்டும்.

ஆதலால் பும்ரா எனும் கருப்புக் குதிரை இல்லாத நிலையில் வெற்றியைப் பெற இந்திய அணி சற்று கடினமாகப் போராட வேண்டியிருக்கும்.

வெற்றி வாய்ப்பு குறையுமா?

சாம்பியன்ஸ் கோப்பை 2025: பும்ரா இல்லாத இந்திய அணி எப்படி சமாளிக்கும், தாக்குப் பிடிக்குமா?

பட மூலாதாரம்,GETTY IMAGES

இந்திய அணியில் பும்ரா இல்லாதது குறித்து முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி ஐசிசிக்கு அளித்த பேட்டியில், "இந்திய அணியில் பும்ரா இல்லாததால் இந்திய அணி சாம்பியன் வெல்லும் வாய்ப்பு 30 முத்ல 35 சதவீதம் பாதிக்கும் என்பது நிதர்சனம்.

பும்ரா ஒருவேளை விளையாடும் உடல் தகுதியைப் பெற்றால் நிச்சயம் டெத் ஓவர்கள் வேறு மாதிரியாக இருக்கும், முக்கியமான தருணத்தில் பும்ராவின் பந்துவீச்சு அற்புதமாக இருக்கும்," என்று தெரிவித்துள்ளார்.

அதோடு, பும்ராவின் உடல்நிலை தேறினாலும் இந்த நேரத்தில் அவரை அணிக்குள் சேர்ப்பது மிக ஆபத்தானது எனவும் அவர் தெரிவித்தார்

ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் கூறுகையில், "பும்ரா இந்திய அணியில் இல்லாத நிலையில் கவனத்தை ஷமி மீது செலுத்த வேண்டும்.

ஆஸ்திரேலிய பயணத்தில் பும்ராவுக்கு பக்கபலமாக ஷமி போன்ற பந்துவீச்சாளர் இல்லாததுதான் அவர் உடல்நலக்குறைவு ஏற்படக் காரணமாக இருந்தது" எனத் தெரிவித்துள்ளார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சாம்பியன்ஸ் டிராபி 2025: பலமான வேகப்பந்துவீச்சை நம்பி களம் இறங்கும் பாகிஸ்தான், நியூசிலாந்து பேட்டர்கள் கரை சேர்ப்பார்களா?

சாம்பியன்ஸ் டிராபி 2025

பட மூலாதாரம்,GETTY IMAGES

கட்டுரை தகவல்

  • எழுதியவர், போத்திராஜ்

  • பதவி, பிபிசி தமிழுக்காக

  • 52 நிமிடங்களுக்கு முன்னர்

பாகிஸ்தானில் ஐசிசி சார்பில் சாம்பியன்ஸ் டிராபி தொடர் இன்று தொடங்குகிறது.

கராச்சி நகரில் நேஷனல் பேங்க் ஏரினா மைதானத்தில் இன்று பகலிரவாக நடக்கும் முதல் ஆட்டத்தில் போட்டியை நடத்தும், நடப்பு சாம்பியன் பாகிஸ்தானை எதிர்த்து நியூசிலாந்து அணி களமிறங்குகிறது.

உள்ளூர் ரசிகர்கள் ஆதரவு, பலமான வேகப்பந்துவீச்சு, குறிப்பிட்ட சில பேட்டர்களின் ஃபார்ம் ஆகியவற்றை நம்பி பாகிஸ்தான் அணி களமிறங்குகிறது

25 ஆண்டுகள் தாகம்

29ஆண்டுகளுக்குப்பின் உலக அணிகள் விளையாடும் கிரிக்கெட் தொடர் என்பதால், அந்நாட்டு ரசிகர்களோடு சேர்ந்து பாகிஸ்தான் அணியினரும் தீவிரமாகத் தயாராகியுள்ளனர். சாம்பியன்ஸ் டிராபி பட்டத்தை தக்கவைக்கும் நோக்கில் முகமது ரிஸ்வான் தலைமையிலான அணி களமிறங்குகிறது.

அதேசமயம், 2000ம் ஆண்டுக்குப்பின் நியூசிலாந்து அணியால் ஐசிசி சார்பில் நடத்தப்பட்ட எந்த போட்டித்தொடரிலும் பட்டத்தை வெல்ல முடியவில்லை. ஏறக்குறைய 25 ஆண்டுகளாக அந்த அணியால் ஒரு பட்டம் கூட வெல்லாமல் கடும் வறட்சியைச் சந்தித்துள்ளது.

குரூப் ஏ பிரிவில் இருக்கும் இரு அணிகளும், இன்று முதல் லீக் ஆட்டத்தில் மோதுகின்றன. இந்த முறை சாம்பியன்ஸ் டிராபி பட்டத்தை வெல்ல வாய்ப்புள்ளதாகக் கூறப்படும் இரு அணிகளுமே முதல் போட்டியில் மோதுவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வலுவான வேகப்பந்துவீச்சை வைத்திருக்கும் பாகிஸ்தான் அணியும், 8-வது வீரர் வரை பேட்டரை வைத்திருக்கும் நியூசிலாந்து அணியும் களத்தில் மோதும்போது அனல் பறக்கும்.

முகமது ரிஸ்வான்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,முகமது ரிஸ்வான்

இதுவரை நடந்தவை

பாகிஸ்தான் அணியும், நியூசிலாந்து அணியும் இதுவரை 118 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளன. இதில் பாகிஸ்தான் அணி 61 போட்டிகளிலும், நியூசிலாந்து அணி 53 ஆட்டங்களிலும் வென்றுள்ளது.

சாம்பியன்ஸ் டிராபியைப் பொருத்தவரை பாகிஸ்தானுடன் 3 முறை மோதியுள்ள நியூசிலாந்து அணி அனைத்திலும் வென்றுள்ளது.

இன்று போட்டி நடக்கும் கராச்சி மைதானத்தில் நியூசிலாந்தும், பாகிஸ்தான் அணியும் 9 முறை மோதியுள்ளன. இதில் பாகிஸ்தான் அணி 4 வெற்றிகளையும், நியூசிலாந்து அணி 5 வெற்றிகளையும் பெற்றுள்ளது.

நியூசிலாந்துக்கு எதிராக முதலில் பேட் செய்து 31 முறையும், சேஸிங் செய்து 30 முறையும் பாகிஸ்தான் வென்றுள்ளது. அதேசமயம் பாகிஸ்தானுக்கு எதிராக முதலில் பேட் செய்து நியூசிலாந்து அணி 26 முறையும், சேஸிங் செய்து 27 முறையும் வென்றுள்ளது.

மிரட்டும் வேகப்பந்துவீச்சு

இந்த சாம்பியன்ஸ் டிராபியில் பாகிஸ்தான் அணியின் வேகப்பந்துவீச்சாளர்கள்தான்.

ஷாகின் ஷா அப்ரிதி, நசீம் ஷா, ஹாரிஸ் ராப், முகமது ஹஸ்னைன் ஆகிய 4 வேகப்பந்துவீச்சாளர்களும் நிச்சயமாக நியூசிலாந்து அணிக்கு குடைச்சல் கொடுப்பார்கள். குறிப்பாக தொடக்கத்தில் ஷாகீன் அப்ரிதியும், நடுப்பகுதியில் நசீம் ஷா, ஹாரிஸ் ராப் இருவரின் பந்துவீச்சும் சவாலாக இருக்கும்.

குறிப்பாக அப்ரிதி 2023 உலகக் கோப்பைத் தொடருக்குப்பின் 21 விக்கெட்டுகளை வீழ்த்தி சாம்பியன்ஸ் டிராபியில் முன்னணி பந்தவீச்சாளராகத் திகழ்கிறார்.

2023 உலகக் கோப்பைத் தொடரில் இந்தியாவிடம் அடைந்த தோல்விக்குப்பின் பாகிஸ்தான் அணி உயிர்தெழுந்து விளையாடி வருகிறது. இதுவரை ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா, ஜிம்பாப்வேவுக்கு எதிரான ஒருநாள் தொடர்களை பாகிஸ்தான் கைப்பற்றியுள்ளது.

சமீபத்தில் முடிந்த முத்தரப்புத் தொடரில் நியூசிலாந்திடம் தோற்றிருந்தாலும், பாகி்ஸ்தானின் பேட்டர்கள் ஃபார்முக்கு வருவதற்கு அந்தத் தொடர் உதவியாக இருந்தது.

2017ம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபியில் சாம்பியன் பட்டம் வென்ற பாகிஸ்தான் அணியில் விளையாடியவர்களில் பாபர் ஆஸம், முகமது ரிஸ்வான், பகீம் அஸ்ரம் ஆகியோரைத் தவிர மற்ற அனைத்து வீரர்களும் புதியவர்கள். முதல்முறையாக சாம்பியன்ஸ் டிராபியில் விளையாடும் அனுபவத்தைப் பெறுகிறார்கள்.

சுழற்பந்துவீச்சில் சக்லைன் முஸ்தாக், முஸ்தாக் அகமது போன்ற பந்துவீச்சாளர்கள் இல்லாமல் இருந்தாலும், குஷ்தில் ஷா, சல்மான் அகா, கம்ரான் குலாம் ஆகியோரின் சுழற்பந்துவீச்சு பாகிஸ்தானுக்கு சமீபத்தில் முடிந்த முத்தரப்புத் தொடரில் மிகுந்த நம்பிக்கையை அளித்தது.

பேட்டிங்கைப் பொருத்தவரை பாபர் ஆஸம் கடந்த 21 இன்னிங்ஸ்களாக ஒரு சதம்கூட அடிக்கவில்லை. ஆனால், முத்தரப்புத் தொடரில் சிறப்பாக ஆடி இழந்த ஃபார்மை பாபர் ஆஸம் மீட்டுள்ளார்.

ஃபக்கர் ஜமான், முகது ரிஸ்வான் மட்டுமே ஓரளவுக்கு நம்பிக்கைக்குரிய , நிலைத்தன்மையான ஆட்டத்தை வெளிப்படுத்தக்கூடியவர்கள். நடுவரிசையில் சவுத் சகீல், சல்மான் சஹாவின் ஆட்டம் முக்கியத்துவம் வாய்ந்த இந்த தொடரில் எவ்வாறு இருக்கும் என்பதை பார்க்க வேண்டும்.

உள்நாட்டில் போட்டி நடப்பது, ரசிகர்களின் ஆதரவு, கராச்சி மைதானத்தில் அதிகமாக விளையாடிய அனுபவம் ஆகியவை பாகிஸ்தானுக்கு நிச்சயம் கைகொடுக்கும்.

பாகிஸ்தான் அணியின் பலமே இந்த சாம்பியன்ஸ் டிராபில் அந்த அணியின் வேகப்பந்துவீச்சாளர்கள்தான்.

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,பாகிஸ்தான் அணியின் பலமே இந்த சாம்பியன்ஸ் டிராபியில் அந்த அணியின் வேகப்பந்துவீச்சாளர்கள்தான்.

வலுவான பேட்டிங் வரிசை

நியூசிலாந்து, பாகிஸ்தானுக்கும் சாம்பியன்ஸ் டிராபியில் ஒர் ஒற்றுமை இருக்கிறது. 2000ம் ஆண்டில் நியூசிலாந்து அணியும், 2017ம் ஆண்டில் பாகிஸ்தான் அணியும் இறுதிப்போட்டியில் இந்திய அணியை வீழ்த்திதான் சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றின.

நியூசிலாந்து அணிக்கு இந்தத் தொடர் தொடங்கும்போதே வேகப்பந்துவீச்சாளர்கள் லாக்கி பெர்குஷன், பென் சீர்ஸ் இருவரும் காயத்தால் விலகியது பின்னடைவுதான். பெர்குஷனுக்குப் பதிலாக ஜேமிஸன் சேர்க்கப்பட்டாலும் கராச்சிக்கு அவர் இன்னும் வராததால் முதல் போட்டியில் ஜேமிஸன் பங்கேற்கமாட்டார்.

முத்தரப்புத் தொடரில் கேட்ச் பிடிக்கும்போது தலையில் பந்துபட்டு காயமடைந்து, தேறிவரும் ரச்சின் ரவீந்திராவும் முதல் ஆட்டத்தில் விளையாடாதது நியூசிலாந்துக்கு பின்னடைவுதான்.

இருப்பினும் சமீபத்தில் நடந்து முடிந்த முத்தரப்பு ஒருநாள் தொடரிலும் பாகிஸ்தானை சொந்த மண்ணில் வீழ்த்தி நியூசிலாந்து வலுவாக இருப்பதால், பாகிஸ்தான் எச்சரிக்கையுடனே அணுக வேண்டியதிருக்கும்.

இதனால் டேவன் கான்வேயுடன் சேர்ந்து வில் யங் ஆட்டத்தைத் தொடங்குவார். மற்றவகையில் நியூசிலாந்து அணி வலுவான பேட்டிங் வரிசையை வைத்துள்ளது.

கேன் வில்லியம்ஸன், டேரல் மிட்ஷெல், கிளென் பிலிப்ஸ், டாம் லாதம், பிரேஸ்வெல், சான்ட்னர் வரை பேட்டர்கள் உள்ளதால், கடைசிவரை போராடக்கூடிய பேட்டிங் வரிசை இருப்பது பாகிஸ்தானுக்கு பெரிய தலைவலியாக மாறும். முத்தரப்புத் தொடரில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக வில்லியம்ஸன் சதம் அடித்து நல்ல ஃபார்மில் இருக்கிறார்.

சுழற்பந்துவீச்சில் நியூசிலாந்து அணியின் சான்ட்னர், பிரேஸ்வெல் ஆகியர் மட்டுமே இருக்கிறார்கள். சமீபத்தில் முடிந்த முத்தரப்புத் தொடரில் தென் ஆப்பிரிக்கா, பாகிஸ்தான் சுழற்பந்தவீச்சாளர்கள் ஓவருக்கு 5 ரன்களுக்கு மேல் வழங்கிய நிலையில் நியூசிலாந்தின் சான்ட்னர், பிரேஸ்வெல் 4 ரன்களுக்குள்தான் விட்டுக்கொடுத்து பந்துவீசினர். ஆதலால், இருவரின் பந்துவீச்சும் நடுப்பகுதி ஓவர்களில் பாகிஸ்தானுக்கு சவாலாக இருக்கும்.

பகுதிநேரப் பந்துவீச்சில் டேரல் மிட்ஷெல், பிலிப்ஸ் இருப்பது பலம். பாகிஸ்தானோடு ஒப்பிடும்போது நியூசிலாந்து அணியின் டிரன்ட் போல்ட், சவுத்தி, பெர்குஷன் இல்லாதது பலவீனமாக இருந்தாலும், மாட் ஹென்றி, ஜேக்கப் டஃபி, வில் ரூர்கே ஆகிய வேகப்பந்துவீச்சாளர்களை வைத்துதான் கரைகடக்க வேண்டும். மற்றவகையில் வலுவானபேட்டர்களை நம்பிதான் களமிறங்குகிறது நியூசிலாந்து அணி.

வலுவானபேட்டர்களை நம்பி களமிறங்குகிறது நியூசிலாந்து அணி

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,வலுவானபேட்டர்களை நம்பி களமிறங்குகிறது நியூசிலாந்து அணி

ஆடுகளம் எப்படி

கராச்சி ஆடுகளம் பேட்டர்களுக்கு சொர்க்கபுரி, பந்து பேட்டரை நோக்கி நன்கு எழும்பி வரும் என்பதால் அடித்து ஆடலாம். சமீபத்தில் முத்தரப்புத் தொடரில் தென் ஆப்பிரிக்க அணி 352 ரன்கள் குவித்தது..

இந்த மைதானத்தில் ஓவருக்கு சராசரியாக 5.90 ரன்கள்வரை பேட்டரால் சேர்க்க முடியும், ஒரு அணி சராசரியாக 230 முதல் 250 ரன்கள் வரை அடிக்க முடியும் அதை எளிதாகவும் சேஸிங் செய்யலாம் என்பதால், முதலில் பேட் செய்யும் அணி 300 ரன்களுக்கு மேல் அடிப்பது பாதுகாப்பானது.

அணிகள் விவரம்

பாகிஸ்தான்:

முகமது ரிஸ்வான்(கேப்டன்), பாபர் ஆஸம், ஃபக்கர் ஜமான், கம்ரான் குலாம், சவுத் சகீல், தயாப் தகிர், பஹீம் அஷ்ரப், குஷ்தில் ஷா, சல்மான் அலி அகா, உஸ்மான் காந், அப்ரார் அகமது, ஹரிஸ் ராப், முகமது ஹஸ்னன், நசீம் ஷா, ஷாகீன் ஷா அப்ரிடி

நியூசிலாந்து

மிட்ஷெல் சான்ட்னர்(கேப்டன்), மைக்கேல் பிரேஸ்வெல், மார்க் சாப்மேன், டேவன் கான்வே, லாக்கி பெர்குஷன், மாட் ஹென்றி, டாம் லாதம், டேரல் மிட்ஷெல், வில் ரூர்கோ, கிளென் பிலிப்ஸ், ரச்சின் ரவீந்திரா, நாதன் ஸ்மித், கேன் வில்லியம்ஸன், வில் யங், ஜேக்கப் டபி

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

சாம்பியன்ஸ் டிராபி 2025: பலமான வேகப்பந்துவீச்சை நம்பி களம் இறங்கும் பாகிஸ்தான், நியூசிலாந்து பேட்டர்கள் கரை சேர்ப்பார்களா?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மொத்த பணப்பரிசு இருநூறு கோடி ரூபாவை வாரி வழங்கும் சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் ஆரம்பம் - சம்பியனுக்கான 71 கோடி ரூபாவுக்கு குறிவைத்துள்ள 8 அணிகள்

19 FEB, 2025 | 10:17 AM

image

(நெவில் அன்தனி)

மொத்த பணப்பரிசு இருநூறு கோடி ரூபாவுக்கு மேல் வாரி வழங்கும் 9ஆவது ஐசிசி சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் அத்தியாயம் கராச்சியில் புதன்கிழமை (19) நடைபெறவுள்ள நடப்பு சம்பியன் பாகிஸ்தானுக்கும் நியூஸிலாந்துக்கும் இடையிலான போட்டியுடன் ஆரம்பமாகவுள்ளது.

இப் போட்டியில் சம்பியன் அணிக்கு வெற்றிக் கிண்ணத்துடன் கிடைக்கவுள்ள 71 கோடி ரூபாவுக்கு குறிவைத்து எட்டு முன்னணி அணிகள் இரண்டு குழுக்களில் போட்டியிடவுள்ளன.

துரதிர்ஷ்டவசமாக முன்னாள் சம்பியன்களான இலங்கையும் மேற்கிந்தியத் தீவுகளும் இந்த வருட சம்பியன்ஸ் கிண்ணப் போட்டியில் பங்குபற்ற தகுதிபெறவில்லை.

சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில் முதல் எட்டு இடங்களிலிருந்த அணிகளே சம்பியன்ஸ் கிண்ணத்துக்கான முதல் எட்டு அத்தியாயங்களில் விளையாட தகுதி பெற்றன.

ஆனால், 2025 சம்பியன்ஸ் கிண்ணத்துக்கான தகுதிகாண் சுற்றாக 2023 உலகக் கிண்ணப் போட்டி அமையும் என திடீரென ஐசிசி அறிவித்தது.

இதற்கு அமைய இந்தியா, தென் ஆபிரிக்கா, அவுஸ்திரேலியா, நியூஸிலாந்து, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், இங்கிலாந்து, பங்களாதேஷ் ஆகிய அணிகள் முதல் எட்டு இடங்களைப் பெற்று சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டியில் விளையாட தகுதிபெற்றன.

தனது கடைசி நான்கு போட்டிகளில் ஆப்கானிஸ்தான், இந்தியா, பங்களாதேஷ், நியூஸிலாந்து ஆகிய அணிகளிடம் இலங்கை தோல்வி அடைந்ததால் சம்பியன்ஸ் கிண்ணப் போட்டியில் பங்குபற்றும் தகுதியை இழந்தது.

மேற்கிந்தியத் தீவுகள் 2023 உலகக் கிண்ணப் போட்டியில் பங்குபற்றுவதற்கான தகுதியைப் பெற்றிருக்கவில்லை.

இந்த சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட்டில் பங்களாதேஷ், இந்தியா, நியூஸிலாந்து, பாகிஸ்தான் அகிய அணிகள் ஏ குழுவிலும் ஆப்கானிஸ்தான், அவுஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆபிரிக்கா ஆகிய அணிகள் பி குழுவிலும் பங்குபற்றுகின்றன.

ஒவ்வொரு குழுவிலும் முதல் சுற்றில் தலா 6 போட்டிகள் நடைபெறவுள்ளதுடன் முதல் சுற்று முடிவில் இரண்டு குழுக்களிலும் முதல் இரண்டு இடங்களைப் பெறும் 4 அணிகள் அரை இறுதிகளில் விளையாட தகுதிபெறும்.

இந்த வருடப் போட்டியை முன்னின்று நடத்தும் வரவேற்பு நாடாக நடப்பு சம்பியன் பாகிஸ்தான் விளங்குகிறது. ஆனால், இந்தியா சம்பந்தப்பட்ட போட்டிகள் யாவும் ஐக்கிய அரபு இராச்சியத்தின் துபாய் சர்வதேச விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளது.

இந்த சுற்றுப் போட்டியில் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போட்டி முழு கிரிக்கெட் உலகினாலும் வெகுவாக கவரப்படும் என்பதில் சந்தேகம் இல்லை.

இந் நிலையில் பங்குபற்றும் அணிகளின் தலைவர்கள் என்ன கூறுகிறார்கள் என்பதை இங்கு பார்ப்போம்.

ஏ குழு

நஜ்முல் ஹொசெய்ன் ஷன்டோ (பங்களாதேஷ்)

ஐசிசி போட்டி ஒன்றில் மூன்றாவது முறையாக பங்களாதேஷ் அணியை 26 வயதான ஷன்டோ வழிநடத்துகிறார். பங்களாதேஷ் தங்கள் முதலாவது சம்பியன் பட்டத்திற்கு குறிவைத்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

முன்னேற்றத்தை நோக்கி நகரும்  அணி மீது நம்பிக்கையை ஷண்டோ வெளிப்படுத்தியதுடன் சம்பியன்ஸ் கிண்ணப் போட்டியில் தமது அணி பலரை ஆச்சரியப்படுத்தும் எனவும் கூறினார்.

பங்காளதேஷுக்கு இந்தப் போட்டி எத்தகைய முக்கியம் வாய்ந்தது என்பதை விளக்கிய ஷன்டோ, 

'இப் போட்டி மிகவும் முக்கியமானது. நாங்கள் இங்கு வருவதற்கு முன்னர் கடந்த சில போட்டிகளில் சிறப்பாக விளையாடாததால் இந்த முறை கிண்ணத்தை வெல்ல விரும்புகிறோம். இந்த முறை எங்களுக்கு மிகச் சிறந்த அணி இருப்பதால் கிண்ணத்தை வென்றெடுக்க முடியும் என நினைக்கிறோம்'என்றார்.

'அது கடினமானது என்பது   எங்களுக்கு தெரியும். ஆனால். நாங்கள் எங்களது திட்டத்தை சரியாக செயற்படுத்தினால் உரிய தினத்தில் எங்களால் வெல்ல முடியும்' என ஷன்டோ மேலும் தெரிவித்தார்.

குழாம்: நஜ்முல் ஹொசெய்ன் ஷன்டோ (தலைவர்), சௌம்யா சர்க்கார், தன்ஸித் ஹசன், தௌஹித் ரிதோய், முஷ்பிக்குர் ரஹிம், மஹ்முத் உல்லா, ஜாக்கர் அலி ஆனிக், மெஹிதி ஹசன் மிராஸ், ரிஷாத் ஹொசெய்ன், தஸ்கின் அஹ்மத், முஷ்தாபிஸுர் ரஹ்மான், பர்வெஸ் ஹொசெய்ன் ஈமோன், நசும் அஹ்மத், தன்ஸிம் ஹசன் ஷக்கிப், நஹித் ராணா.

1_bangladesh_najmul_hossain_shanto.png

ரோஹித் ஷர்மா (இந்தியா)

தனது மூன்றாவது சம்பியன்ஸ் கிண்ணப் போட்டியில் விளையாடும் ரோஹித் ஷர்மா, முதல் தடவையாக இந்திய அணியின் தலைவராக விளையாடுகிறார்.

2023 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியை இறுதிப் போட்டிவரை சிறப்பாக வழிநடத்திய ரோஹித் ஷர்மா, கடந்த வருடம் நடைபெற்ற ரி20 உலகக் கிண்ணப் போட்டியில் இந்தியாவை உலக சம்பியனாக உயர்ந்த நிலையில் இட்டார். 

எட்டு அணிகளுக்கு இடையில் நடத்தப்பட்டுவரும் சம்பியன்ஸ் கிண்ண போட்டியில் ஏற்கனவே ரோஹித் ஷர்மா வெற்றியை ருசித்துள்ளார்.

இந்தியா இரண்டாவது முறையாக 2013இல் சம்பியன்ஸ் கிண்ணத்தை சுவீகரித்தபோது இந்தியாவின் துணிச்சல்மிக்க ஆரம்ப வீரராக ரோஹித் தனது வருகையை வெளிப்படுத்தினார். 

இந்த சுற்றுப் போட்டியில் முன்னிலை அடைய அனுகூலமான அணியாக விளங்கும் இந்தியா, தனது சொந்த மண்ணில் இங்கிலாந்துக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட தொடரில் முழுமையான வெற்றியை ஈட்டியிருந்தது. அந்தத் தொடரில் ரோஹித் உட்பட மற்றைய துடுப்பாட்ட வீரர்கள் ஓட்டங்களை வேகமாகக் குவித்து தங்களது திறமைகளை வெளிப்படுத்தி இருந்தனர்.

'ஆடுகளம் நுழைந்து தங்களது வழியில் விளையாடுவதற்கு தேவையான சிறிது  சுதந்திரம் குழாத்திற்கு இருக்கிறது' என ரோஹித் ஷர்மா கூறினார்.

'உலகக் கிண்ணம் அதற்கு ஒரு சரியான களமாக இருக்கும். அங்கு நாங்கள் அதைத் தொடர்ந்து செய்து அணியை கட்டியெழுப்ப விரும்புகிறோம். சில சமயங்களில் விஷயங்கள் சரியாக அமையாமல் போகலாம், ஆனால் அது பரவாயில்லை' என்றார் ரோஹித் ஷர்மா.  

குழாம்: ரோஹித் ஷர்மா (தலைவர்) ஷுப்மான் கில், விராத் கோஹ்லி, ஷ்ரேயாஸ் ஐயர், கே. எல். ராகுல், ரிஷாப் பான்ட், ஹார்திக் பாண்டியா, அக்சார் பட்டேல், வொஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், ஹர்ஷித் ராணா, மொஹமத் ஷமி, அர்ஷ்தீப் சிங், ரவிந்த்ர ஜடேஜா, வருண் சக்ரவர்த்தி.

2_india_rohit_sharma.png

மிட்செல் சன்ட்னர் (நியூஸிலாந்து)

மற்றுமொரு ஐ.சி.சி. போட்டியில் அணித் தலைவராக அறிமுகமாகிறார் சென்ட்னர். இந்த அனுபவம் வாய்ந்த சுழல்பந்துவீச்சாளர், ஏற்கனவே நேர்மறையான அறிகுறிகளை வெளிப்படுத்தி தலைமைப் பொறுப்பில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துள்ளார்.

சம்பியன்ஸ் கிண்ணத்திற்கு முன்பதாக பாகிஸ்தான் மற்றும் தென் ஆபிரிக்காவுக்கு எதிரான மும்முனை சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடரில் தோல்வி அடையாத சம்பியன் அணியாக நியூஸிலாந்தை சென்ட்னர் வழிநடத்தியிருந்தார்.

சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி ஆரம்பமாவதற்கு சில தினங்களுக்கு முன்னர் பாகிஸ்தானில் வெற்றிபெறுவதற்கு நியூஸிலாந்து வீரர்கள் சிலர் சிறந்த பங்களிப்பை வழங்கி  இருந்தனர். இது அணிக்கு நல்ல சமிக்ஞையாகும்.

'வெற்றி பெற்றது மகிழ்ச்சி அளிக்கிறது' என மும்முனை தொடரில் நியூஸிலாந்து வெற்றிபெற்ற பின்னர் சன்ட்னர் கூறியிருந்தார்.

'வெவ்வேறு நேரங்களில்  வெவ்வேறு  வீரர்கள் பிரகாசிப்பது வரவேற்கத்தக்கது. ஆனால், சம்பியன்ஸ் கிண்ணப் போட்டியில் முதலாவது ஆட்டத்தை விளையாடும் வரை அது ஒன்றுமில்லை' என்றார் மிச்செல் சென்ட்னர்.  

குழாம்: மிச்செல் சென்ட்னர் (தலைவர்), மிச்செல் ப்றேஸ்வெல், மார்க் செப்மன், டெவன் கொன்வே, கய்ல் ஜெமிசன், மெட் ஹென்றி, டொம் லெதம், டெரில் மி ச்செல், வில் ஓ'ரூக், க்லென் பிலிப்ஸ், ரச்சின் ரவிந்த்ரா, நேதன் ஸ்மித், கேன் வில்லியம்சன், வில் யங், ஜேக்கப் டஃபி.

3_new_zealand_mitchel_santner.png

மொஹம்மத் ரிஸ்வான் (பாகிஸ்தான்)

சொந்த மண்ணில் சம்பியன் பட்டத்தை தக்கவைக்க முயற்சிக்கும் பாகிஸ்தான் அணியை ஐசிசி போட்டியில் முதல் முறையாக அணித் தலைவராக ரிஸ்வான் வழிநடத்தவுள்ளார்.

பாகிஸ்தான் அணித் தலைவராக கடந்த வருடம் பொறுப்பேற்ற ரிஸ்வான், ஏற்கனவே அவுஸ்திரேலியா மற்றும் தென் ஆபிரிக்காவில் வரலாற்று சிறப்புமிக்க ஒருநாள் தொடர் வெற்றிகளை ஈட்டிக்கொடுத்துள்ளார்.

சம்பியன்ஸ் கிண்ணத்திற்கு முன்பதாக நடைபெற்ற மும்முனை சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தானை இறுதிப் போட்டிக்கு ரிஸ்வான் வழிநடத்தியிருந்தார். ஆனால், நியூஸிலாந்திடம் பாகிஸ்தான் தோல்வி அடைந்தது.

போட்டியை முன்னின்று நடத்தும் வரவேற்பு நாடாக சம்பியன் பட்டத்தை தக்கவைத்துக்கொள்வதற்கு கிடைத்துள்ள அரிய வாய்ப்பு குறித்து கருத்து வெளியிட்ட ரிஸ்வான்,

'கிரிக்கெட்டை நேசிக்கும் நாடு என்ற வகையில் இந்த வருடம் ஐசிசி சம்பியன்ஸ் கிரிக்கெட் போட்டியை நடத்துவதில் நாங்கள் அனைவரும் மிகவும் உற்சாகமாக இருக்கிறோம். அண்மைக் காலத்தில் ஒருநாள் போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டது, இந்த மெகா போட்டியை நோக்கிய உற்சாகத்தையும், உத்வேகத்தையும் அதிகரிக்கச் செய்கிறது. மேலும் எங்கள் சொந்த மைதானத்தில் நடைபெறும் எட்டு அணிகள் கொண்ட இந்த போட்டியில் திறமையாக விளையாட நாங்கள் ஆவலுடன் உள்ளோம்' என்றார்.  

குழாம்: மொஹமத் ரிஸ்வான் (தலைவர்) பாபர் அஸாம், பக்கார் ஸமான், கம்ரன் குலாம், சவூத் ஷக்கீல், தய்யப் தாஹிர், பாஹீம் அஷ்ரப், குஷ்தில் ஷா, சல்மான் அலி அகா, உஸ்மான் கான், அப்ரார் அஹ்மத், ஹரிஸ் ரவூப், மொஹம்மத் ஹஸ்னைன், நசீம் ஷா, ஷஹீன் ஷா அப்றிடி. 

 4_pakistan_mohmmed_rizwan.png

பி குழு

ஹஷ்மத்துல்லா ஷஹிதி (ஆப்கானிஸ்தான்)

இந்தியாவில் நடைபெற்ற 2023 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் ஆப்கானிஸ்தானை வெற்றிகரமாக வழிநடத்திய அணித் தலைவர். அவரது வழிநடத்தலில் பலம்வாய்ந்த அணிகளான இங்கிலாந்து, பாகிஸ்தான், இலங்கை ஆகியவற்றை அதிரவைத்து ஆப்கானிஸ்தான் வெற்றி பெற்றிருந்தது.

சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டியில் அறிமுகமாகும் ஆப்கானிஸ்தானுக்கு கடந்த வருடம் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் அரஙகு வெற்றிகரமாக அமைந்தது.

சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட்டில் ஆப்கானிஸ்தான் அறிமுக அணியாக பங்குபற்றுகின்றபோதிலும், நாங்கள் ஆதிக்கம் செலுத்தும் நாளில் எத்தகைய அணியையும் வெற்றிகொள்ளும் திறன் கொண்டது என்று ஷஹிதி நம்புகிறார்.

'ஒவ்வொரு வடிவத்திலும் ஒவ்வொரு அணியையும் வெற்றிகொள்ளும் திறமை எங்களிடம் இருப்பதால் நாங்கள் முன்னேற முயற்சிப்போம்,' என்று அவர் அண்மையில் கூறினார்,

சம்பியன்ஸ் கிண்ணப் போட்டிக்காக தங்களது திறமையை வளர்துக்கொண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

'எங்களது அடுத்த பெரிய சவால் சம்பியன்ஸ் கிண்ணம். இது எங்களுக்கு ஒரு பெரிய போட்டி. எனவே அதனை நாங்கள் எதிர்கொள்ள தயாராக இருக்கிறோம்' என்றார் அவர்.

குழாம்: ஹஷ்மத்துல்லா ஷஹிதி (தலைவர்), இப்ராஹிம் ஸத்ரான், ரஹ்மானுல்லா குர்பாஸ், சிதிக்குல்லா அத்தல், ரஹ்மத் ஷா, இக்ரம் அலிகில், குல்பாதின் நய்ப், அஸ்மத்துல்லா ஓமர்ஸாய், மொஹமத் நபி, ராஷித் கான், நங்கேயாலியா கரொத், நூர் அஹ்மத், பஸால்ஹக் பாறூக்கி, பரித் மாலிக், நவீத் ஸத்ரான்.

5_afghanistan__hashmatullah_shahidi.png

ஸ்டீவ் ஸ்மித் (அவுஸ்திரேலியா)

அவுஸ்திரேலிய அணியின் முழுநேர தலைவர் பெட் கமின்ஸுக்குப் பதிலாக, துடுப்பாட்ட நட்சத்திரம் ஸ்டீவன் ஸ்மித் நடப்பு ஒருநாள் உலக சம்பியன் அவுஸ்திரேலியாவை சம்பியன்ஸ் கிண்ணப் போட்டியில் வழிநடத்துகிறார். சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட்டில் அவர் தலைமை வகிப்பது இது இரண்டாவது தடவையாகும்.

2017 சம்பியன்ஸ் கிண்ண போட்டியில் அவுஸ்திரேலிய அணியின் தலைவராக செயற்பட்ட ஸ்மித், ஒரு தலைவராக ஏராளமான அனுபவங்களுடன் சம்பியன் கிண்ணத்தை எதிர்கொள்கிறார்.

அவுஸ்திரேலிய அணியில் பெட் கமின்ஸ், ஜொஷ் ஹேஸ்ல்வூட், மார்க்கஸ் ஸ்டொய்னிஸ் ஆகிய முக்கிய வீரர்கள் இடம்பெறாதது அவ்வணிக்கு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக கருதப்படுகிறது. ஆனால், அவர்களுக்குப் பதிலாக அணியில் சேர்க்கப்பட்ட வீரர்கள் மீது ஸ்மித் நம்பிக்கை கொண்டுள்ளார்.

'அவர்கள் அனைவருக்கும் அவரவருக்கு ஏற்ற தனித்துவமான திறமைகள் இருப்பதாக நான் நினைக்கிறேன். நான் அவர்களை வழிநடத்துவது, அவர்களுடன் கலந்துரையாடுவது, சரியான நேரத்தில் அவர்களிடமிருந்து சரியானவற்றைப் பெற முயற்சிப்பது என்பனவே எனது பணி ஆகும். எமது அணியில் அனுபவம்வாய்ந்த வீரர்கள் பலர் இடம்பெறுவதால் எங்களால் சாதிக்க முடியும் என நம்புகிறேன்' ஸ்மித் கூறினார்.

குழாம்: ஸ்டீவ் ஸ்மித் (தலைவர்), சோன் அபொட், அலெக்ஸ் கேரி, பென் த்வாஷுய்ஸ், நேதன் எலிஸ், ஜேக் ப்ரேஸர் மெக்கேர்க், ஆரொன் ஹாடி, ட்ரவிஸ் ஹெட், ஜொஷ் இங்லிஸ், ஸ்பென்சர் ஜோன்சன், மானுஸ் லபுஷேன், க்லென் மெக்ஸ்வெல், தன்வீர் சங்கா, மெத்யூ ஷோர்ட், அடம் ஸம்ப்பா.

6_australia_steven_smith.png

ஜொஸ் பட்லர் (இங்கிலாந்து)

2022ஆம் ஆண்டு நடைபெற்ற ஐசிசி ரி20 உலகக் கிண்ணப் போட்டியில் இங்கிலாந்தை சம்பியனாக்கிய ஜொஸ் பட்லர், 2019 உலகக் கிண்ண வெற்றியில் ஒரு சிறந்த வீரராகத் திகழ்ந்தவர்.

அதிரடி ஆட்டக்காரரான பட்லர், தனது மூன்றாவது சம்பியன்ஸ் கிண்ணத் தொடரில் பங்கேற்கிறார்.

சம்பியன்ஸ் கிண்ணத்தில் முதல் முறையாக சம்பியனாகும் குறிக்கோளுடன் முழு வீச்சில் இங்கிலாந்து களம் இறங்கவுள்ளது.

இந்தியாவில் அண்மையில் நடைபெற்ற 3 போட்டிகள் கொண்ட சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடரில் தோல்வியடைந்த போதிலும், இந்த சுற்றுப் போட்டியில் இங்கிலாந்து அணியின் வாய்ப்புகள் குறித்து பட்லர் நம்பிக்கையுடன் உள்ளார்.

'நாங்கள் இன்னும் எங்களுக்கு இருக்க வேண்டிய திறமையை அண்மிக்கவில்லை. தனித்தனியாகவோ அல்லது கூட்டாகவோ திறமையாக விளையாடினால் எங்களால் சிறந்த இடத்தில் இருக்க முடியும் என்பதை அறிவோம். சம்பியன்ஸ் கிண்ணப் போட்டியில் நாங்கள் சவால் மிக்க அணியாக இருக்க முடியும் என்று நம்புகிறோம்' என இந்தியாவுக்கு எதிரான தொடருக்குப் பின்னர் பட்லர் கூறியிருந்தார்.

குழாம்: ஜொஸ் பட்லர் (தலைவர்), ஜொவ்ரா ஆச்சர், கஸ் அட்கின்சன், டொம் பென்டன், ஹரி ப்றூக், ப்றைடன் கார்ஸ், பென் டக்கட், ஜமி ஓவர்ட்டன், ஜமி ஸ்மித், லியாம் லிவிங்ஸ்டோன், ஆதில் ராஷித், ஜோ ரூட், சக்கிப் மஹமூத், பில் சோல்ட், மார்க் வூட்.

7_england_jos_buttler.png

டெம்பா பவுமா (தென் ஆபிரிக்கா)

2023 உலகக் கிண்ணப் போட்டியில் தென் ஆபிரிக்காவை அரை இறுதிக்கு வழிநடத்திய டெம்பா பவுமா, அதனைத் தொடர்ந்து சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டியில் முதல் தடவையாக விளையாடவுள்ளார். அங்குரார்ப்பண சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட்டில் 1998இல் சம்பியனான தென் ஆபிரிக்காவுக்கு 27 வருடங்களின் பின்னர் கிண்ணத்தை மீண்டும் வென்று கொடுக்க டெம்பா பவுமா முயற்சிக்கவுள்ளார்.

உலக கிரிக்கெட் அரங்கில் தென் ஆபிரிக்காவை புகழ்பெறச் செய்வதில் முக்கிய பங்காற்றியுள்ள பவுமா, ஏற்கனவே 2025ஆம் ஆண்டு ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தனது அணியை வழிநடத்தியுள்ளமை குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய விடயமாகும்.

சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி சவால்மிக்கதாக இருந்தாலும், தென் ஆபிரிக்காவால் சம்பியன் பட்டத்தை வெல்ல முடியும் என்பதில் பவுமா நம்பிக்கையுடன் உள்ளார்.

'உலகக் கிண்ணத்தில் போட்டிகள் அதிகம் என்பதால் திட்டங்களை வகுத்து முன்னேறுவதற்கு நேரம் இருக்கிறது. ஆனால், சம்பியன்ஸ் கிண்ணத்தில் முதல் சுற்றில் 3 போட்டிகள் மாத்திரம் இருப்பதால் அப்படி செய்ய முடியாது. எனினும், சம்பியன்ஸ் கிண்ணப் போட்டியில் ஒரு படி முன்னே நகர்வோம் என நம்புகிறோம்' என்று தென் ஆபிரிக்க அணித் தலைவர் டெம்பா புவுமா தெரிவித்தார்.

குழாம்: டெம்பா பவுமா (தலைவர்), டோனி டி ஸோர்ஸி, மார்க்கோ ஜென்சன், ஹென்றிச் க்ளாசன், கேஷவ் மஹராஜ், ஏய்டன் மார்க்ராம், டேவிட் மில்லர், வியான் முல்டர், லுங்கி நிகிடி, கெகிசோ ரபாடா, ரெயான் ரிக்ல்டன், தப்ரெய்ஸ் ஷம்சி, ட்ரைஸ்டன் ஸ்டப்ஸ், ரசி வென் டேர் டுசென், கோபின் பொஷ்

8_south_africa_temba_bavuma.png

மொத்த பணப்பரிசு இருநூறு கோடி ரூபாவை வாரி வழங்கும் சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் ஆரம்பம் - சம்பியனுக்கான 71 கோடி ரூபாவுக்கு குறிவைத்துள்ள 8 அணிகள்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

LIVE

1st Match, Group A (D/N), Karachi, February 19, 2025, ICC Champions Trophy

New Zealand FlagNew Zealand 320/5

Pakistan FlagPakistan (2.5/50 ov, T:321) 5/0

Pakistan need 316 runs from 47.1 overs.Stats view

Current RR: 1.76  • Required RR: 6.69

Win Probability:PAK 26.64% • NZ 73.36%

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சாம்பியன்ஸ் டிராஃபி 2025: பாகிஸ்தான் சொந்த மண்ணிலேயே தோல்வியை தழுவ என்ன காரணம்?

சாம்பியன்ஸ் டிராபி 2025, Nz Vs Pak,

பட மூலாதாரம்,GETTY IMAGES

கட்டுரை தகவல்

  • எழுதியவர், க.போத்திராஜ்

  • பதவி, பிபிசி தமிழுக்காக

  • 2 மணி நேரங்களுக்கு முன்னர்

பாகிஸ்தானில் 29 ஆண்டுகளுக்குப்பின் ஐசிசி சார்பில் முதல் கிரிக்கெட் தொடரை காண ரசிகர்கள் நேற்று (பிப். 19) ஆவலுடன் காத்திருந்த நிலையில் அது சோகத்தில் முடிந்தது.

கராச்சியில் நேற்று நடந்த சாம்பியன்ஸ் டிராஃபியின் முதல் ஆட்டத்தில் பாகிஸ்தான் அணியை 60 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது நியூசிலாந்து அணி. ஏற்கெனவே முத்தரப்பு ஒருநாள் தொடரில் பாகிஸ்தானை வீழ்த்திய நிலையில் சாம்பியன்ஸ் டிராஃபியிலும் சாய்த்துள்ளது.

முதலில் பேட் செய்த நியூசிலாந்து அணி 50 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 320 ரன்கள் குவித்தது. 321 ரன்கள் எனும் கடின இலக்கைத் துரத்திய பாகிஸ்தான் அணி, 47.2 ஓவர்களில் 260 ரன்களுக்கு ஆட்டமிழந்து 60 ரன்களில் தோல்வி அடைந்தது.

சவாலான ஆட்டங்கள்

இதன் மூலம் குரூப் ஏ பிரிவில் நியூசிலாந்து அணி 2 புள்ளிகளுடன் முதலிடத்துக்கு நகர்ந்தது. அடுத்ததாக நியூசிலாந்து அணிக்கு வங்கதேசத்துடனும், இந்திய அணியுடனும் லீக் ஆட்டம் இருக்கிறது. இதில் வங்கதேச அணி நியூசிலாந்து அணிக்கு பெரும் சவாலாக இருக்காது என கருதப்படுகிறது. ஆனால் இந்தியாவுடனான ஆட்டம் சவாலாகவே அமையும்.

இந்த வெற்றி மூலம் நியூசிலாந்து அணி சாம்பியன்ஸ் டிராஃபி தொடர்களில் பாகிஸ்தானுடன் ஆடிய 4 ஆட்டங்களிலும் ஒன்றில்கூட தோல்வி அடையாத அணி என்ற பெருமையை தக்கவைத்துள்ளது.

அதேபோல, பாகிஸ்தான் அணிக்கு அடுத்துவரும் இரு ஆட்டங்களுமே சவாலாக மாறும். இந்திய அணியுடனான ஆட்டம் எப்போதுமே பாகிஸ்தான் வீரர்களுக்கு சவாலாக இருந்துள்ளது. அடுத்ததாக, வங்கதேசமும் வெற்றியை பாகிஸ்தானுக்கு எளிதாக விட்டுக்கொடுக்காது. போராடித்தான் பாகிஸ்தான் வெல்ல வேண்டியதிருக்கும்.

ஆதலால், பாகிஸ்தான் அணிக்கு அடுத்த 2 ஆட்டங்களிலும் வெற்றி என்பது எளிதாகக் கிடைக்கும் அம்சமாக இருக்காது. கரணம் தப்பினால் மரணம் என்ற ரீதியில்தான் விளையாட வேண்டியதிருக்கும். பாகிஸ்தான் அரையிறுதிக்கு தகுதி பெறுவது கூட பெரும் சவாலாகவே இருக்கும்.

ICC Champions Trophy cricket, சாம்பியன்ஸ் டிராபி 2025, Nz Vs Pak,

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,பாகிஸ்தான் அணிக்கு அடுத்த 2 ஆட்டங்களிலும் வெற்றி என்பது எளிதாகக் கிடைக்கும் அம்சமாக இருக்காது

நியூசிலாந்து கேப்டன் சான்ட்னர் கருத்து

போட்டியின் வெற்றிக்குப்பின் நியூசிலாந்து கேப்டன் சான்ட்னர் பேசுகையில் " பாகிஸ்தான் அணி நடுப்பகுதியில் நன்றாகப் பந்துவீசினர்கள் என்று நினைக்கிறேன். ஆனால், வில் யங், லேதம் இருவரும் ஸ்ட்ரைக்கை ரொட்டேட் செய்து ரன்களை சேர்த்தனர். 280 ரன்கள்தான் சேர்ப்போம் என நினைத்தேன், ஆனால் 320 ரன்களை எட்டிவிட்டோம். விக்கெட்டுகள் கைவசம் அதிகம் இருந்தது ஒரு காரணம்.

முதல் 10 ஓவர்களிலும் நாங்கள் சிறப்பாகப் பந்துவீசி பாகிஸ்தானை கட்டுப்படுத்தினோம். ரன்ரேட்டில் அழுத்தத்தை, நெருக்கடியை ஏற்படுத்தி விக்கெட்டை வீழ்த்தினோம். கிளென் பிலிப்ஸிடம் இருந்து இப்படி ஒரு அற்புதமான கேட்சை நான் எதிர்பார்க்கவில்லை. ரிஸ்வானை ஆட்டமிழக்கச் செய்து திருப்புமுனையை ஏற்படுத்தினார்.

பனிப்பொழிவுக்குப் பதிலாக காற்று இருந்தது. இந்த காற்றைப் பயன்படுத்தி பந்துவீசினோம். ஃபீல்டிங் அற்புதமக இருந்தது. இதனால் எந்த பேட்டரையும் செட்டில் ஆகவிடவில்லை" எனத் தெரிவித்தார்.

நியூசிலாந்து வெற்றிக்குக் காரணம் என்ன?

நியூசிலாந்து அணியின் வெற்றிக்கு அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் வில் யங், டாம் லேதம் அடித்த சதம், கிளென் பிலிப்ஸ் கேமியோ ஆடி அரைசதம் அடித்தது மிகப்பெரிய ஸ்கோருக்கு கொண்டு சென்றது.

அதேசமயம், பந்துவீச்சில் ரூர்க், கேப்டன் சான்ட்னர் எடுத்த தலா 3 விக்கெட்டுகள், ஹென்றி வீழ்த்திய 2 விக்கெட்டுகள் வெற்றிக்கு முக்கியக் காரணமாக அமைந்தன.

அது மட்டுமல்லாமல் ரூர்க், ஹென்றி இருவரும் தொடக்கத்திலிருந்தே கட்டுக்கோப்பாகவும், துல்லியமான பந்துவீச்சை லைன் லென்த்தில் வீசியும் பாகிஸ்தான் பேட்டர்களை நிலைகுலையச் செய்தனர். இவர்கள் இருவரின் ஓவர்களில் பாகிஸ்தான் பேட்டர்கள் ரன்களைச் சேர்க்க சிரமப்பட்டனர்.

இதனால் பவர்ப்ளே முடிவதற்குள் தொடக்க ஆட்டக்காரர் சகீலையும், கேப்டன் ரிஸ்வான் விக்கெட்டையும் வீழ்த்தி பாகிஸ்தானுக்கு நெருக்கடி அளித்தனர் நியூசிலாந்து பந்துவீச்சாளர்கள். நியூசிலாந்து அணியின் நன்கு திட்டமிட்ட வியூகத்தை களத்தில் வெற்றிகரமாக செயல்படுத்தியதை பாகிஸ்தான் அணியினரால் எதிர்கொள்ள முடியவில்லை.

நியூசிலாந்து பந்துவீச்சின் வியூகத்தை உடைக்கும் விதத்தில் ஒரு ஓவரில்கூட பேட் செய்ய முடியாதது பாகிஸ்தானுக்கு பின்னடைவாக அமைந்தது. குறிப்பாக, நியூசிலாந்து அணி தங்கள் வியூகத்தை உடைக்கும் வகையில் பாகிஸ்தான் பேட்டர்களை களத்தில் யாரையும் நிலைக்கவிடவில்லை என்பதுதான் அவர்கள் வெற்றிக்கான முக்கியக் காரணமாகும்.

நடுப்பகுதி ஓவர்களில் பிரேஸ்வெல், சான்ட்னர், கிளென் பிலிப்ஸ் ஆகிய 3 சுழற்பந்துவீச்சாளர்களும் சேர்ந்து பாகிஸ்தான் பேட்டர்களின் கரங்களுக்கு விலங்கிட்டதுபோல் பந்துவீசினர்.

நடுப்பகுதி ஓவர்களில் ரன்களை சேர்க்கவிடாமல் நெருக்கடி தரும் வகையில் மும்முனைத் தாக்குதல் தொடுத்து பாகிஸ்தானை பெரிய நெருக்கடிக்குள் தள்ளினர். பாகிஸ்தான் அணி 28-வது ஓவரில் தான் 100 ரன்களையே எட்டியது.

அந்த அளவு பாகிஸ்தான் ரன்ரேட்டை நியூசிலாந்து பந்துவீச்சாளர்கள் இழுத்துப்பிடித்தனர். ஆனால், அடுத்த 13 ஓவர்களில் பாகிஸ்தான் அணி 200-வது ரன்களையே எட்டியது. தொடக்கத்திலேயே பாகிஸ்தான் பேட்டர்களை திக்குமுக்காடச் செய்து பந்துவீசி, நியூசிலாந்து பந்துவீச்சாளர்கள் வெற்றிக்கு அடித்தளமிட்டனர்.

ICC Champions Trophy cricket, சாம்பியன்ஸ் டிராபி 2025, Nz Vs Pak,

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,ரூர்க், கேப்டன் சான்ட்னர் எடுத்த தலா 3 விக்கெட்டுகள், ஹென்றி வீழ்த்திய 2 விக்கெட்டுகள் வெற்றிக்கு முக்கியக் காரணமாக அமைந்தன

திருப்புமுனை தந்த வீரர்

இந்த ஆட்டத்தில் பந்துவீச்சு, ஃபீல்டிங், பேட்டிங் ஆகிய 3 பிரிவுகளிலும் திருப்புமுனையை ஏற்படுத்தியவர் கிளென் பிலிப்ஸ்தான். இந்த ஆட்டத்தில் கடைசி நேரத்தில் கேமியோ ஆடி 34 பந்துகளில் அரைசதம் அடித்து நியூசிலாந்து ஸ்கோர் உயர்வுக்கும் பிலிப்ஸ் முக்கியக் காரணமாகினார்.

ஃபீல்டிங்கில் ரிஸ்வான் ஆஃப்சைடில் விலக்கி அடித்த ஷாட்டில் தாவிச்சென்று பிலிப்ஸ் பிடித்த கேட்ச் ஆட்டத்தின் போக்கையே மாற்றி, நியூசிலாந்து கட்டுப்பாட்டுக்குள் வந்தது.

ஃபிலிப்ஸ் பிடித்த கேட்சால் கேப்டன் ரிஸ்வான் எனும் மிகப்பெரிய விக்கெட் இழப்பிலிருந்து பாகிஸ்தான் மீளமுடியவில்லை. இந்த கேட்சை பிலிப்ஸ் பிடிப்பார் என ரிஸ்வானும் நினைக்கவில்லை, களத்திலிருந்து ஏமாற்றத்துடன் சென்றார். இதுதான் ஆட்டத்தின் திருப்புமுனையாக அமைந்தது.

அற்புதமான சதங்கள்

நியூசிலாந்து அணியைப் பொருத்தவரை தொடக்க வீரர் வில் யங் அடித்த 107 ரன்கள், டாம் லாதம் அடித்த 118 ரன்கள், பிலிப்ஸ் சேர்த்த 61 ரன்கள்தான் ஸ்கோரை உச்சத்துக்குக் கொண்டு சென்றன. தொடக்க வீரராக ரச்சின் ரவீந்திரா களமிறங்க வேண்டிய நிலையில் அவர் காயத்திலிருந்து முழுமையாக குணமடையாததால் வில் யங் அந்த வாய்ப்பைப் பெற்றார்.

இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் வில்லியம்ஸனுக்குப் பதிலாக இடம்பெற்ற வில் யங், தொடர் நாயகன் விருது பெற்றார். நியூசிலாந்து 3-0 என்று டெஸ்ட் தொடரை வெல்லவும் வில் யங் காரணமாக அமைந்திருந்தார்.

சாம்பியன்ஸ் டிராஃபி அறிமுகப் போட்டியிலேயே சதம் அடித்த 8-வது வீரர் என்ற சாதனையை பதிவு செய்தார் வில் யங். இதற்கு முன் சாம்பியன்ஸ் டிராஃபியின் அறிமுகப் போட்டியில் நியூசிலாந்து தரப்பில் எந்த வீரரும் சதம் அடித்ததில்லை. அதை வில் யங், டாம் லேதம் செய்துள்ளார்.

டாம் லேதம் நடுவரிசையில் களமிறங்கி நிதானமாக ஆடி சதம் அடித்தார். முத்தரப்பு தொடரில் 3 டக்அவுட்களைச் சந்தித்து டாம் லேதம் கடும் விமர்சனத்தை எதிர்கொண்ட நிலையில் அவர் அடித்த இந்த சதம் விமர்சனங்களுக்கு பதில் அளித்துள்ளது.

பிலிப்ஸுடன் இணைந்து 107 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த டாம் லேதம் ஆட்டம் ஸ்கோர் உயர்வுக்கும் காரணமாக அமைந்தது. அதேநேரம், 18 பந்துகளில் 10 ரன்கள் என்றிருந்த பிலிப்ஸ் ,அடுத்த 16 பந்துகளில் அரைசதத்தை எட்டி, கேமியோ ஆடியது ஸ்கோரை உச்சத்துக்குக் கொண்டு சென்றது.

ICC Champions Trophy cricket, சாம்பியன்ஸ் டிராபி 2025, Nz Vs Pak,

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,நியூசிலாந்து 8-வது வீரர் வரை வகைவகையான பேட்டர்களை வைத்திருப்பது அந்த அணிக்கு மிகப்பெரிய பலம்

6 ஆண்டுகளில் முதல்முறை

நியூசிலாந்து 8-வது வீரர் வரை வகைவகையான பேட்டர்களை வைத்திருப்பது அந்த அணிக்கு மிகப்பெரிய பலம். இந்த ஆட்டத்தில் கேன் வில்லியம்ஸ் (1) ரன்னில் ஆட்டமிழந்தார்.

ஒற்றை இலக்க ரன்னில் கேன் வில்லியம்ஸன் கடந்த 2019-ஆம் ஆண்டு ஜனவரி மாதத்துக்குப்பின் நேற்றுதான் ஆட்டமிழந்தார். இந்த இடைப்பட்ட காலத்தில் 35 இன்னிங்ஸ்களில் ஆடிய வில்லியம்ஸன் 34 இன்னிங்ஸ்களிலும் இரட்டை இலக்க ரன்கள் சேர்த்துதான் ஆட்டமிழந்துள்ளார்.

பாகிஸ்தான் தோல்விக்குக் காரணம் என்ன?

ICC Champions Trophy cricket, சாம்பியன்ஸ் டிராபி 2025, Nz Vs Pak,

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,பக்கர் ஜமான், பாபர் ஆசம், முகமது ரிஸ்வான் தங்களின் இயல்பான ஆட்டத்தை ஆடியிருந்தால், பாகிஸ்தான் வெற்றி சாத்தியமானது என நம்பியிருக்கலாம்

பாகிஸ்தான் தோல்விக்கு பல காரணங்களைக் கூறலாம். 30 ஆண்டுகளுக்குப்பின் சொந்த மைதானத்தில் வரலாற்றுசிறப்பு மிக்க ஐசிசி தொடர் நடக்கும்போது, ரசிகர்களை கவர்ந்திழுக்கம் வகையில் ஆட்டத்தை ஆடாமல் பல தவறுகளை பாகிஸ்தான் அணி செய்தது.

பாகிஸ்தான் அணியோடு ஒப்பிடுகையில் குறைந்த தவறுகளையே நியூசிலாந்து செய்தது. ஆனால், பாகிஸ்தான அணி பந்துவீச்சிலும், பேட்டிங்கிலும், ஃபீல்டிங்கிலும் பல தவறுகளைச் செய்தது.

குறிப்பாக பந்துவீச்சில் பாகிஸ்தான் வீரர்களிடம் கட்டுக்கோப்பு, துல்லியம் என எதுவுமே இல்லை. உலகத் தரம் வாய்ந்த வேகப்பந்துவீச்சாளர்களான ஹாரிஸ் ராப், ஷாகித் அஃப்ரிடி இருந்தும், பந்துவீச்சு படுமோசமாக இருந்ததாக பார்க்கப்படுகிறது.

ஹாரிஸ் 83 ரன்களையும், அப்ரிடி 68 ரன்களையும் வாரி வழங்கினர். பாகிஸ்தான் தரப்பில் அப்ரார் அகமது மட்டுமே 4 ரன்ரேட்டில் நேற்று பந்துவீசி விக்கெட் வீழ்த்தினார். மற்ற அனைத்துப் பந்துவீச்சாளர்களும் ஓவருக்கு 6 ரன்கள் வீதம் வாரி வழங்கியதுதான் தோல்விக்கு முதல் காரணம்.

இரண்டாவதாக பாகிஸ்தான் சந்தித்த டாட் பந்துகள். இந்த ஆட்டத்தில் மட்டும் பாகிஸ்தான் அணி, 162 டாட் பந்துகளை சந்தித்தது, அதாவது ஏறக்குறைய 27 ஓவர்களில் ரன்கள் ஏதும் அடிக்கவில்லை என்பது இதன் அர்த்தம். இலக்கு பெரிதாக இருக்கிறது, ஓவருக்கு 6 ரன்களுக்குமேல் வெற்றிக்கு தேவைப்பட்டபோது, 27 ஓவர்களை டாட் பந்துகளாக விட்டது பாகிஸ்தான் தோல்விக்கு 2வது காரணம்.

3வது காரணம் பாபர் ஆஸம். பாகிஸ்தான் வெற்றிக்கு பல போட்டிகளில் காரணமாக இருந்தவர், பல போட்டிகளில் ஒற்றை மனிதராக இருந்து வெற்றிக்கு அழைத்துச் சென்ற பாபர் ஆஸம் ஏன் இப்படி பேட் செய்தார் என்று கேட்கும் அளவு மோசமாக இருந்தது. 90 பந்துகளில் 64 ரன்கள் சேர்த்து பாபர் ஆஸம் ஆட்டமிழந்தார். 81 பந்துகளில்தான் பாபர் ஆஸம் அரைசதத்தையே நிறைவு செய்தார். பாபர் ஆஸம் மிகவும் மெதுவாக ஆடியது, ரன் சேர்க்க வேகம் காட்டாதது தோல்விக்கு இட்டுச் சென்றது.

நியூசிலாந்து அணியின் கட்டுக்கோப்பான பந்துவீச்சு பாகிஸ்தான் பேட்டர்களை நிலைகுலைய வைத்து. பவர்ப்ளேயில் 2 விக்கெட் இழப்புக்கு 22 ரன்களும், 17-வது ஓவர்வரை 73 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து பாகிஸ்தான் தடுமாறியது.

2019-ஆம் ஆண்டு மார்ச் மாதத்துக்குப்பின் நடந்த ஒருநாள் போட்டிகளில் பாகிஸ்தான் அணி முதல் 10 ஓவர்களில் சேர்த்த குறைந்த பட்ச ஸ்கோர் நேற்று சேர்த்ததாகும், சாம்பியன்ஸ் டிராஃபியில் 3வது குறைந்தபட்ச ஸ்கோராக அமைந்தது. அணியின் மெதுவான ரன் சேர்ப்பு தோல்வியை உறுதி செய்தது.

நியூசிலாந்து அணியின் நேற்றைய உலகத்தரமான ஃபீல்டிங்கோடு ஒப்பிடுகையில் பாகிஸ்தான் சற்று குறைவாகவே விளையாடியது. நியூசிலாந்து அணி ஃபீல்டர்கள் மட்டும் நேற்று 20 ரன்களையாவது சேமித்திருப்பார்கள். நியூசிலாந்து அணியின் ராணுவ ஒழுக்க ஃபீல்டிங் பாகிஸ்தான் அணியை நிலைகுலைய வைத்தது, எதிர்பார்த்த எந்த ஷாட்டிலிருந்தும் பாகிஸ்தான் பேட்டர்களுக்கு பவுண்டரி கிடைக்காமல் பார்த்துக்கொண்டனர்.

பக்கர் ஜமானைப் போல் பாகிஸ்தான் அணியில் பல பேட்டர்கள் தொடக்கத்திலேயே தடுமாறி, ரன் சேர்க்க முடியாமல் சிரமப்பட்டனர். பக்கர் ஜமானும் ஃபீல்டிங் செய்யும்போது கையில் காயம் ஏற்பட்டு, நீண்டநேர ஓய்வுக்குப்பின் விளையாட வந்தார்.

மற்ற வகையில் பாகிஸ்தான் அணியில் பக்கர் ஜமான்(24), சல்மான்(42), குஷ்தில் ஷா(69) ஆகியோரைத் தவிர மற்ற பேட்டர்கள் பெரிதாக ரன் சேர்க்கவில்லை. அதிலும், குஷ்தில் ஷா கடைசி நேரத்தில் அதிரடியாக பேட் செய்து ரன் சேர்க்காமல் இருந்தால், பாகிஸ்தான் அணி 200 ரன்களில் சுருண்டிருக்கும்.

குறிப்பாக பக்கர் ஜமான், பாபர் ஆசம், முகமது ரிஸ்வான் தங்களின் இயல்பான ஆட்டத்தை ஆடியிருந்தால், பாகிஸ்தான் வெற்றி சாத்தியமானது என நம்பியிருக்கலாம். ஆனால், இவர்கள் 3 பேருமே தோல்வி அடைந்து, அணியையும் தோல்விக் குழியில் தள்ளிவிட்டனர்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

சாம்பியன்ஸ் டிராஃபி 2025: பாகிஸ்தான் சொந்த மண்ணிலேயே தோல்வியை தழுவ என்ன காரணம்?ணைந்திருங்கள்.)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இந்திய அணி வென்றபோதும் ரோஹித் மன்னிப்புக் கேட்டது ஏன்?

IND Vs BAN, CHAMPIONS TROPHY 2025

பட மூலாதாரம்,GETTY IMAGES

21 பிப்ரவரி 2025, 02:15 GMT

புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர்

துபையில் நேற்று (பிப். 20) நடந்த சாம்பியன்ஸ் டிராஃபி போட்டியின் 2வது ஆட்டத்தில் வங்கதேச அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது இந்திய அணி.

முதலில் பேட் செய்த வங்கதேச அணி 49.4 ஓவர்களில் 228 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. 229 ரன்கள் எனும் எளிய இலக்கைத் துரத்திய இந்திய அணி, 21 பந்துகள் மீதமிருக்கையில் 4 விக்கெட் இழப்புக்கு 231 ரன்கள் சேர்த்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த வெற்றி மூலம் குரூப் ஏ பிரிவில் நியூசிலாந்து, இந்திய அணிகள் தலா 2 புள்ளிகளுடன் உள்ளனர். இதில் குறைந்த இலக்கை கடைசிவரை போராடி சேஸ் செய்ததால் ரன்ரேட்டில் நியூசிலாந்தைவிட இந்திய அணி பின்தங்கியுள்ளது. நியூசிலாந்து 1.200 நிகர ரன்ரேட்டில் இருக்கும் நிலையில் இந்திய அணி 0.408 நிகர ரன்ரேட்டில் இருக்கிறது.

இந்தப் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற இருவர் முக்கியக் காரணமாக அமைந்தனர். ஒருவர் சதம் அடித்த சுப்மான் கில் (101), மற்றொருவர் முகமது ஷமி. இதில் பேட்டிங்கில் தொடக்க வீரராகக் களமிறங்கி கடைசிவரை களத்தில் இருந்த சுப்மான் கில் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இந்தப் போட்டியில் பெரும் சாதனைக்கான கேட்சை தவறவிட்டதற்காக ரோஹித் மன்னிப்புக் கேட்டுக் கொண்டார்.

ஷமி மைல்கல்

பந்துவீச்சில் ஒருநாள் போட்டிகளில் 6-வது முறையாக 5 விக்கெட்டுகளை வீழ்த்தி கம்பேக் கொடுத்துள்ளார் முகமது ஷமி. அதுமட்டுமல்லாமல், வேகமாக 200 விக்கெட்டுகளை எட்டிய பந்துவீச்சாளர் என்ற பெருமையையும் ஷமி பெற்றார்.

102 போட்டிகளில் ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர் மிட்ஷெல் ஸ்டார்க், அதிவேகமாக 200 விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர்களில் முதலிடத்தில் உள்ளார். ஷமி, 104 போட்டிகளில் 200 விக்கெட்டுகளை வீழ்த்தி 2வது இடத்தில் பாகிஸ்தான் முன்னாள் வீரர் சக்லைன் முஸ்டாக்குடன் இடத்தைப் பகிர்ந்துள்ளார்.

இந்த 200 விக்கெட்டுகளை வீழ்த்த ஷமி 5126 பந்துகளை வீசியுள்ளார். ஆனால், ஸ்டார்க் 5240 பந்துகளை வீசித்தான் 200 விக்கெட்டுகளை சாய்த்தார்.

வங்கதேசத்தின் 10 விக்கெட்டுகளில் 8 விக்கெட்டுகளை இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர்கள் முகமது ஷமி, ஹர்சித் ராணா இருவரும் பகிர்ந்துகொண்டனர். ஷமி 10 ஓவர்கள் வீசி 53 ரன்கள் கொடுத்து 5 விக்கெட்டுகளையும், ராணா 7.4 ஓவர்கள் வீசி 31 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளையும் சாய்த்தனர்.

முகமது ஷமி, IND Vs BAN, CHAMPIONS TROPHY 2025

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, பந்துவீச்சில் ஒருநாள் போட்டிகளில் 6-வது முறையாக 5 விக்கெட்டுகளை வீழ்த்தி கம்பேக் கொடுத்துள்ளார் முகமது ஷமி

வாய்ப்புகளைத் தவறவிட்ட வங்கதேசம், இந்தியா

சாம்பியன்ஸ் டிராஃபியின் முதல் ஆட்டத்திலேயே இரு அணிகளும் தங்களுக்குக் கிடைத்த பல கேட்ச் வாய்ப்புகளையும், ஃபீல்டிங்கை தடுப்படுதிலும் கோட்டைவிட்டனர். வங்கதேச அணி டாஸ் வென்ற நிலையில், ஆடுகளம் காய்ந்து பேட்டிங்குக்கு சாதகமாக இருந்தது. ஆனால், தொடக்கத்திலேயே விக்கெட்டுகளை இழந்து பவர்ப்ளே முடிவுக்குள் 5 விக்கெட்டுகளை பறிகொடுத்தது வங்கதேசம்.

ஆனால், 6வது விக்கெட்டுக்கு தவ்ஹித் ஹிர்தாய், ஜேக்கர் அலி சேர்ந்து அமைத்த கூட்டணி அணியை மிகப்பெரிய ஸ்கோருக்கு இட்டுச் சென்றது. இருவரும் 6-வது விக்கெட்டுக்கு 154 ரன்கள் சேர்த்துப் பிரிந்தனர். இந்திய அணிக்கு எதிராக எந்த விக்கெட்டுக்கும் எதிரான அதிகபட்ச ஸ்கோராக அமைந்தது.

வங்கதேச அணி ஆடுகளத்தின் தன்மையை பயன்படுத்தி, தொடக்கத்திலேயே விக்கெட்டுகளை இழக்காமல் விளையாடியிருந்தால் ஆட்டம் ஒருதரப்பாக முடிந்திருக்காது. வங்கதேச அணியும் தங்களுக்குக் கிடைத்த வாய்ப்பை தவறவிட்டனர்.

இந்திய அணி தொடக்கத்தில் வங்கதேசத்தின் விக்கெட்டுகளை வீழ்த்தி ஆட்டத்தை தங்கள் பக்கம் வைத்திருந்தாலும், ஹிர்தாய்-ஜேக்கர் அலி கூட்டணியைப் பிரிக்க முடியாமல் மிகுந்த சிரமப்பட்டனர்.

தவ்ஹித் ஹிர்தாய், IND Vs BAN, CHAMPIONS TROPHY 2025

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, 6வது விக்கெட்டுக்கு தவ்ஹித் ஹிர்தாய், ஜேக்கர் அலி சேர்ந்து அமைத்த கூட்டணி அணியை மிகப்பெரிய ஸ்கோருக்கு இட்டுச் சென்றது

அக்ஸரிடம் மன்னிப்புக் கேட்ட ரோஹித்

இந்திய வீரர் அக்ஸர் படேலுக்கு சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் பெரும் சாதனை புரிவதற்கான வாய்ப்பு இந்தப் போட்டியில் கிடைத்தது.

9-ஆவது ஓவரின் இரண்டாவது பந்தில் தன்சித் ஹசனை வெளியேற்றினார் அக்ஸர். அடுத்து களமிறங்கிய முஷ்ஃபிகுர் ரஹ்மானை வெளியேற்றினார். இந்த இருவரின் கேட்ச்களையும் விக்கெட் கீப்பர் கே.எல். ராகுல் பிடித்தார்.

அடுத்த பந்திலும் இதேபோன்றதொரு வாய்ப்புக் கிடைத்தது. புதிதாக களமிறங்கிய ஜேக்கர் அலிக்கு அக்ஸர் வீசிய பந்து பேட்டில் பட்டு ஸ்லிப்பை நோக்கிச் சென்றது. அங்கு நின்றிருந்த ரோஹித் சர்மா அந்த கேட்சை தவறவிட்டார். இந்திய வீரர்கள் அதிர்ச்சியடைந்த அந்த வேளையில், தரையில் கையால் அடித்து தனது கோபத்தை வெளிப்படுத்தினார். கையைக் கட்டி அக்ஸரிடம் மன்னிப்புக் கேட்டுக் கொண்டார்.

ரோஹித் சர்மா தவறவிட்டதால்தான் ஹிர்தாய், ஜேக்கர் அலி 154 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைக்க முடிந்தது.

அதேபோல, ஒருநாள் போட்டியில் 228 ரன்களை சேஸிங் செய்வது என்பது எளிதானது. இந்த குறைவான ரன்களை சேஸிங் செய்வதற்கு 44 ஓவர்கள் வரை இழுத்துக்கொண்டு செல்லத் தேவையில்லை. குறைவான ரன்களை சேஸிங் செய்ய அதிக நேரம் எடுத்துக்கொண்டதால் இந்திய அணியின் நிகர ரன்ரேட் மிகவும் குறைந்துள்ளது.

மேலும், 2023 உலகக் கோப்பைக்குப்பின், நடுப்பகுதி ஓவர்களில் விக்கெட் இழக்காமல் இந்திய அணி இருந்தது இப்போட்டியில் தான். 2002ம் ஆண்டிலிருந்து இந்திய அணி 5வதுமுறையாக நடுப்பகுதிகளில் விக்கெட் வீழ்த்தாமல் விளையாடியது.

ரவீந்திர ஜடேஜா பந்துவீச்சில் கிடைத்த ஸ்டெம்பிங் வாய்ப்பை கே.எல்.ராகுல் தவறவிட்டதால் ஜேக்கர் அலி தப்பித்தார். ஜேக்கர் அலி அப்போது 24 ரன்களுடன் களத்தில் இருந்தார்.

இந்திய அணியின் ஃபீல்டிங், கேட்ச் பிடிக்கும் திறன் நேற்று வழக்கத்துக்கும் குறைவாக இருந்தது. அதிலும், ரோஹித் சர்மா 2023-ஆம் ஆண்டிலிருந்து 10 கேட்சுகளை தவறவிட்டுள்ளார். நியூசிலாந்தின் டாம் லேதம் 11 கேட்சுகளையும் தவறவிட்டிருந்தார். ரோஹித் சர்மாவின் கேட்ச் பிடிக்கும் சதவிகிதம் 54.55% குறைந்துவிட்டது. 22 கேட்ச் வாய்ப்புகளில் 12 கேட்சுகளை மட்டுமே ரோஹித் சர்மா பிடித்துள்ளார்.

அதேசமயம், விராட் கோலி 156 கேட்சகளைப் பிடித்து முன்னாள் கேப்டன் அசாருதின் சாதனையுடன் சமன் செய்தார். முதலிடத்தில் இலங்கை முன்னாள் கேப்டன் ஜெயவர்த்தனா (218) கேட்சுகளையும் பாண்டிங் 161 கேட்சுகளையும் பிடித்துள்ளார்.

விராட் கோலி, IND Vs BAN, CHAMPIONS TROPHY 2025

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, விராட் கோலி 156 கேட்ச்களைப் பிடித்து முன்னாள் கேப்டன் அசாருதீன் சாதனையுடன் சமன் செய்தார்

கேட்ச் தவற விட்டதற்கு தண்டனை என்ன?

வெற்றிக்குப்பின் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா கூறுகையில் "இங்கு வந்து எந்த போட்டியும் விளையாடுவதற்கு முன் நம்பிக்கையுடன் இருக்க வேண்டும். சேஸிங்கில் லேசாக சறுக்கியபோது கே.எல். ராகுல், கில் இருவருக்கும் அதிகமான அனுபவம் இருந்ததால், சேஸிங்கை எளிமையாக்கினர்.

இந்த ஆடுகளத்தில் ரன் சேர்ப்பது கடினம். அதிகமான புற்கள் இல்லை என்பதால் ஆடுகளம் மந்தமாக இருக்கும் என நினைத்தோம். இந்த சூழலுக்கு ஏற்றாற்போல் அணியினர் பழகிவிட்டனர். பந்துவீச்சும், பேட்டிங்கும் சிறப்பாக இருந்து. குறிப்பாக ஷமியின் பந்துவீச்சைப் பார்க்க நீண்டகாலம் காத்திருந்தோம். சிறப்பான பந்துவீச்சை அளித்தார்.

சுப்மான் கில் அற்புதமாக பேட் செய்தார். நான் அக்ஸர் படேலுக்கு கேட்சை தவறவிட்டு ஹாட்ரிக் வாய்ப்பை கெடுத்துவிட்டேன். இதற்கு தண்டனையாக அவரை இரவு விருந்துக்கு அழைத்துச் செல்வேன். எளிமையான கேட்சுதான். அதை நான் பிடித்திருக்க வேண்டும். ஹிர்தாய், ஜேக்கர் அலி அருமையான பார்ட்னர்ஷிப் அமைத்தனர். ஆடுகளத்தைப் பற்றி நான் ஏதும் கூற முடியாது, 23-ம் தேதி ஆடுகளம் எவ்வாறு இருக்கும் என்பது தெரியும்" எனத் தெரிவித்தார்

ரோஹித் சர்மா,  IND Vs BAN, CHAMPIONS TROPHY 2025

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, "அக்ஸர் படேலுக்கு கேட்சை தவறவிட்டு ஹாட்ரிக் வாய்ப்பை கெடுத்துவிட்டேன்" - ரோஹித் சர்மா

பந்துவீச்சில் கடும் போட்டி

இந்திய சுழற்பந்துவீச்சாளர்கள் அக்ஸர் படேல், ஜடேஜா, குல்தீப் சேர்ந்து 28 ஓவர்களை வீசி, 123 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகள்தான் எடுத்தனர். எக்கானமி ரேட்டும் 4.29 ஆக அதிகரித்தது. ஆனால், வங்கதேச சுழற்பந்துவீச்சாளர்கள் 20 ஓவர்கள் வீசி 3.75 எக்கானமி ரேட் வைத்திருந்தனர்.

அதேசமயம், இந்திய வேகப்பந்துவீச்சாளர்கள் ஷமி, ராணா இருவரும் 8 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். ஆனால், வங்கதேச அணியில் வேகப்பந்துவீச்சாளர்கள் 26.3 ஓவர்கள் வீசி 2 விக்கெட்டுகள்தான் எடுக்க முடிந்தது, 5.88 எக்கனாமி வைத்தனர்.

மந்தமான பேட்டிங்

இந்திய அணியின் பேட்டிங்கைப் பொருத்தவரை துபை மைதானம் மந்தமானது எனக் கூறப்பட்டாலும் ரோஹித் சர்மா, சுப்மான் கில் கூட்டணி அருமையான தொடக்கத்தை அளித்தனர். பவர்ப்ளே ஓவர்களுக்குள் இந்திய அணி 69 ரன்கள் சேர்த்து ரோஹித் சர்மா (41) விக்கெட்டை இழந்தது.

அனுபவ வீரர் விராட் கோலி மீது மிகுந்த எதிர்பார்ப்பு இருந்தநிலையில் கவர் திசையில் வந்த பந்தை தூக்கி அடிக்க முற்பட்டு, கோலி 22 ரன்களில் ஆட்டமிழந்தார். லெக் ஸ்பின்னுக்கு கோலி இன்னும் திணறுகிறார் என்பது நேற்று தெளிவாகத் தெரிந்தது.

லெக் ஸ்பின் பந்துகளை எவ்வாறு கையாள்வது, ஃபீல்டிங் இடைவெளிக்குள் தட்டிவிடத் தெரியாமல் தவித்தார். அடுத்துவந்த ஷ்ரேயாஸ் (15), அக்ஸர் படேல்(8) ரன்களில் பெவிலியன் திரும்பினர். கடைசி 3 விக்கெட்டுகள் 20 ஓவர்களில் 75 ரன்களுக்குள் இந்திய அணி இழந்தது.

69 பந்துகளில் அரைசதம் அடித்த சுப்மான் கில் 125 பந்துகளில் சதம் விளாசினார். சுப்மான் கில் சதம் அடித்தபோதிலும் அதில் வேகமில்லை, கே.எல்.ராகுல் 41 ரன்களுடன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

இந்திய அணி வெற்றி பெற்றாலும் அதன் சேஸிங் திறன் இன்னும் உத்வேகமெடுக்கவில்லை. 229 ரன்களை 35 ஓவர்களுக்குள் சேஸிங் செய்யாமல் 46 ஓவர்கள் வரை இழுத்தனர். பவர்ப்ளேயில் இந்திய அணி 69 ரன்கள் சேர்த்தபோது, வங்கதேசம் அணி 39 ரன்கள் மட்டுமே சேர்த்திருந்தது.

ஆனால், நடுப்பகுதி ஓவர்களில் சிறப்பாக ஆடிய வங்கதேச பேட்டர்கள் விக்கெட்டுகள் ஏதும் இழக்காமல் இந்திய அணியை விட நடுப்பகுதி ஓவர்களில் கூடுதலாக 6 ரன்கள் சேர்த்தது.

நடுப்பகுதி ஓவர்களில் இந்திய பேட்டர்கள் ரன் சேர்க்கத் திணறினர். இந்திய பேட்டர்களை வங்கதேச சுழற்பந்துவீச்சாளர்கள் கட்டிப்போட்டனர்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.virakesari.lk/article/207277

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அபார ஆற்றல்களை வெளிப்படுத்தி ஆப்கானிஸ்தானை 107 ஓட்டங்களால் வென்றது தென் ஆபிரிக்கா

Published By: VISHNU

22 FEB, 2025 | 02:17 AM

image

(நெவில் அன்தனி)

கராச்சிய தேசிய விளையாட்டரங்கில் இன்று வெள்ளிக்கிழமை (21) நடைபெற்ற பி குழுவுக்கான முதலாவது சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டியில் ஆப்கானிஸ்தானை எதிர்கொண்ட தென் ஆபிரிக்கா சகல துறைகளிலும் அற்புதமான ஆற்றல்களை வெளிப்படுத்தி 107 ஓட்டங்களால் அமோக வெற்றியீட்டியது.

2202_toss_bavuma_and_h_shahidi_with_matc

ரெயான் ரிக்ல்டன் குவித்த சதம், டெம்பா பவுமா, ரெசி வென் டேர் டுசென், ஏய்டன் மார்க்ராம் ஆகியோர் பெற்ற அரைச் சதங்கள் என்பன தென் ஆபிரிக்காவின் வெற்றிக்கு வித்திட்டன. தென் ஆபிரிக்காவின் களத் தடுப்பும் மிக அற்புதமாக இருந்தது.

அப் போட்டியில் துடுப்பாட்டத்தை தெரிவுசெய்த தென் ஆபிரிக்கா 50 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 315 ஓட்டங்களைக் குவித்தது.

மொத்த எண்ணிக்கை 28 ஓட்டங்களாக இருந்தபோது டோனி டி ஸோர்ஸி (11) ஆட்டம் இழந்தார்.

ஆனால், ரெயான் ரிக்ல்டன், அணித் தலைவர் டெம்பா பவுமா ஆகிய இருவரும் மிகத் திறமையாகத் துடுப்பெடுத்தாடி இரண்டாவது விக்கெட்டில் 129 ஓட்டங்களைப் பகிர்ந்து அணிக்கு உரமூட்டினர்.

நிதானத்துடன் துடுப்பெடுத்தாடிய டெம்பா பவுமா 58 ஓட்டங்களைப் பெற்றார்.

ரெசி வென் டேர் டுசெனுடன் 3ஆவது விக்கெட்டில் மேலும் 44 ஓட்டங்களைப் பகிர்ந்த ரெயான் ரிக்ல்டன் துரதிர்ஷ்டவசமாக ரன் அவுட் ஆனார்.

அவர் 7 பவுண்டறிகள், ஒரு சிக்ஸுடன் 103 ஓட்டங்களைப் பெற்று இந்த சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டியில் சதம் குவித்த 5ஆவது வீரரானார்.

நியூஸிலாந்தின் வில் யங், டொம் லெதம், பங்களாதேஷின் தௌஹித் ரிதோய், இந்தியாவின் ஷுப்மான் கில் ஆகியோர் சதம் குவித்த முதல் நான்கு வீரர்களாவர்.

ரெசி வென் டேர் டுசென் 52 ஓட்டங்களைப் பெற்று ஆட்டம் இழந்தார்.

அடுத்து டெவிட் மில்லர் 14 ஓட்டங்களை மாத்திரம் பெற்றபோதிலும் 5ஆவது விக்கெட்டில் ஏய்டன் மார்க்ராமுடன் சரியாக 50 ஓட்டங்களைப் பகிர்ந்தார்.

ஏய்டன் மார்க்ராம் 36 பந்துகளில் 6 பவுண்டறிகள், ஒரு சிக்ஸ் உட்பட 52 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார்.

பந்துவீச்சில் மொஹமத் நபி 51 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களைக் கைப்பற்றினார்.

316 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் 43.3 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 208 ஓட்டங்களைப் பெற்றது.

துடுப்பாட்டத்தில் ரஹ்மத் ஷாவைத் தவிர வேறு எவரும் 20 ஓட்டங்களைக் கடக்கவில்லை.

ஆறு வீரர்கள் இரட்டை இலக்க எண்ணிக்கைகளைப் பெற்ற போதிலும் அவர்களால் பெரிய எண்ணிக்கைகளை நோக்கி செல்ல முடியவில்லை.

2202_rahamat_shah.png

தனி ஒருவராகப் போராடிய ரஹ்மத் ஷா 9 பவுண்டறிகள், ஒரு சிக்ஸுடன் 92 ஓட்டங்களைப்  பெற்று  கடைசியாக ஆட்டம் இழந்தார்.

பந்துவீச்சில் கெகிசோ ரபாடா 36 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் வியான் முல்டர் 36 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் லுங்கி எங்கிடி 56 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

ஆட்டநாயகன்: ரெயான் ரிக்ல்டன்.

https://www.virakesari.lk/article/207332

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சாம்பியன்ஸ் டிராபியில் ஆதிக்கம் செலுத்தும் பாகிஸ்தான் - இந்திய அணிக்கு கவலை தரும் 8 விஷயங்கள்

இந்தியா - பாகிஸ்தான், சாம்பியன்ஸ் டிராபி

பட மூலாதாரம்,AFP

படக்குறிப்பு,சாம்பியன்ஸ் டிராபியில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் நாளை துபையில் பலப்பரீட்சை நடத்துகின்றன.

கட்டுரை தகவல்

  • எழுதியவர், போத்திராஜ்

  • பதவி, பிபிசி தமிழுக்காக

  • 2 மணி நேரங்களுக்கு முன்னர்

உலகக் கிரிக்கெட் ரசிகர்கள் எதிர்பார்த்த போட்டி, அனல் பறக்கும் பந்துவீச்சு, இருக்கையின் நுனியில் அமர வைக்கும் ஓவரின் ஒவ்வொரு பந்து, த்ரில்லான முடிவு என அனைத்துக்கும் தீனி கொடுக்கும் ஆட்டம் நாளை துபையில் நடக்கிறது.

துபையில் நாளை (23ம்தேதி) நடக்கும் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியின் 5வது லீக் ஆட்டத்தில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் கோதாவில் இறங்குகின்றன.

ஐ.சி.சி. நடத்தும் உலகக்கோப்பைப் போட்டிகளில் இந்தியா ஆதிக்கம் செலுத்தும் அதே வேளையில், சாம்பியன்ஸ் டிராபியில் இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் அணி ஆதிக்கம் செலுத்துகிறது. சாம்பியன்ஸ் டிராபியில் இரு அணிகளும் இதுவரை 5 போட்டிகளில் மோதியுள்ளன. அதில், பாகிஸ்தான் அணி 3 ஆட்டங்களிலும், இந்திய அணி 2 ஆட்டங்களிலும் வென்றுள்ளன.

ஓர் ஆண்டுக்குப் பின்..

இந்திய அணியும், பாகிஸ்தான் அணியும் கடைசியாக 2023-ஆம் ஆண்டு ஐசிசி உலகக் கோப்பைப் போட்டியில் அகமதாபாத் நகரில் நடந்த ஆட்டத்தில் மோதின. அதன்பின் மீண்டும் ஓர் ஆண்டு இடைவெளிக்குப் பின் சாம்பியன்ஸ் டிராபியில் விளையாடுகின்றன.

சாம்பியன்ஸ் டிராபிக்கு பாகிஸ்தான் செல்ல முடியாது என்று பிசிசிஐ தெரிவித்துவிட்டதால், இந்திய அணி விளையாடும் போட்டிகள் அனைத்தும் துபைக்கு மாற்றப்பட்டன. அரையிறுதி மற்றும் இறுதிப்போட்டிக்கு இந்தியா தகுதி பெற்றால் அந்த ஆட்டங்களும் துபையில் நடக்கும் வகையில் அட்டவணை தயாரிக்கப்பட்டுள்ளது.

துபையில் நேற்று முன்தினம் நடந்த முதல் ஆட்டத்தில் வங்கதேச அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி தோற்கடித்து உற்சாகத்துடன் இருக்கிறது. நாளை நடக்கும் 2வது ஆட்டத்தில் பாகிஸ்தான் அணியை எதிர்த்து இந்திய அணி களமிறங்குகிறது.

மறுபுறம் பாகிஸ்தானைப் பொருத்தவரை, சமீபத்தில் நடந்த முத்தரப்பு தொடரில் நியூசிலாந்து அணியிடம் தோற்றாலும் அந்தத் தொடர் முழுவதும் பாபர் ஆஸம், பக்கர் ஜமான், சகா ஆகியோர் சிறப்பாக பேட் செய்தனர்.

இந்தியா - பாகிஸ்தான், சாம்பியன்ஸ் டிராபி

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,சாம்பியன்ஸ் டிராபி

இந்திய அணிக்கு கவலை தரும் 8 விஷயங்கள்

சாம்பியன்ஸ் டிராபியில் பாகிஸ்தான் அணி தனது முதல் ஆட்டத்தில் நியூசிலாந்திடம் தோற்றாலும், அந்த அணியில் இளம் வீரர்களின் ஆட்டம் சிறப்பாகவே இருந்தது. இந்தியாவுக்கு எதிரான ஆட்டம் பாகிஸ்தானுக்கு முக்கியமான ஆட்டமாகும். இதில் தோல்வி அடைந்தால், தொடரை விட்டே வெளியேற நேரிடும் என்பதால் பாகிஸ்தான் அணி கவனமாக விளையாடும்.

இந்திய அணி சாம்பியன்ஸ் டிராபியை வெற்றியுடன் தொடங்கியுள்ளது. ஆனாலும், வங்கதேசத்துக்கு எதிரான முதல் ஆட்டத்தின் மூலம் இந்திய அணியின் தவறுகள், சரிசெய்ய வேண்டிய விஷயங்கள், சவால்கள் ஆகியவை வெளிச்சத்திற்கு வந்துள்ளன. அது குறித்து விரிவாகப் பார்க்கலாம்.

1. விராட் கோலி மோசமான ஃபார்ம்

கடந்த நியூசிலாந்து, ஆஸ்திரேலியத் தொடர்களில் இருந்து எழுப்பப்படும் கேள்வி விராட் கோலியின் பேட்டிங் ஃபார்ம். விராட் கோலி மிகப்பெரிய மேட்ச்வின்னர்தான். பல போட்டிகளை இவர் ஒற்றை ஆளாக வென்று கொடுத்துள்ளார் என்ற வாதங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டாலும் இன்று இவரின் ஃபார்ம் மீது விமர்சனங்கள் வைக்கப்படுகின்றன.

இங்கிலாந்து தொடரில் ஒரு அரைசதம் மட்டுமே அடித்தார், வங்கதேசத்துக்கு எதிரான ஆட்டத்திலும் 38 பந்துகளில் 21 ரன்களில் கோலி ஆட்டமிழந்தார்.

வேகப்பந்துவீச்சில் ஆப் திசையில் விலகிச் செல்லும் பந்துக்கு விராட் கோலி ஆட்டமிழப்பதும், சுழற்பந்துவீச்சில் லெக் ஸ்பின்னுக்கு ஆட்டமிழப்பதும் தொடர்கதையாகி வருகிறது. கடந்த சில ஆண்டுகளாக விராட் கோலி பெரிய இன்னிங்ஸ் எதையும் ஆடவில்லை.

2023 உலகக் கோப்பையில் அதிக ரன் அடித்தவர் என்ற பெயரை கோலி பெற்றிருந்த போதிலும் அதற்கான நம்பிக்கையை சமீபத்தில் எந்தத் தொடரிலும் அவர் வெளிப்படுத்தவில்லை.

வங்கதேசத்துக்கு எதிரான ஆட்டத்தில் லெக் ஸ்பின்னர் ரிசாத் ஹூசைனின் பந்துவீச்சில் தொடக்கத்திலிருந்தே தடுமாறிய கோலி அவர் பந்துவீச்சில்தான் ஆட்டமிழந்தார்.

2024-ஆம் ஆண்டு ஒருநாள் தொடரில் கோலி விளையாடத் தொடங்கியதிலிருந்து லெக் ஸ்பின்னர்களின் 51 பந்துகளைச் சந்தித்து அதில் 31 ரன்கள் மட்டுமே கோலி அடித்துள்ளார். அதேசமயம், 5 முறை லெக்ஸ்பின்னர்களிடம் கோலி விக்கெட்டை இழந்துள்ளார். ஆதலால் கோலியின் பேட்டிங் ஃபார்ம் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் கவலைக்குரியதாக இருக்கும்.

இந்தியா - பாகிஸ்தான், சாம்பியன்ஸ் டிராபி

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,கோலியின் பேட்டிங் ஃபார்ம் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் கவலைக்குரியதாக இருக்கும்.

2. கவலை தரும் சுழற்பந்துவீச்சு

துபை மைதானம் சுழற்பந்துவீச்சுக்கு ஏற்றது. எப்போதும் இல்லாத வகையில் இந்திய அணி 5 சுழற்பந்துவீச்சாளர்களை இந்த முறை தேர்ந்தெடுத்துள்ளது. அப்படியிருக்கும் போது வங்கதேசத்துக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய சுழற்பந்துவீச்சாளர்களின் பந்துவீச்சு எதிர்பார்த்த அளவுக்கு பெரிதாக அச்சுறுத்தலை தரவில்லை.

அக்ஸர் படேல் 9-வது ஓவரை வீசிய போது ஹாட்ரிக் விக்கெட் வாய்ப்புக் கிடைக்க வேண்டியது கேப்டன் ரோஹித் சர்மாவால் தவறியது. அதன்பின் 27 ஓவர்களை சுழற்பந்துவீச்சாளர்களே மாறிமாறி வீசியும் ஒரு விக்கெட்டைக் கூட வீழ்த்த முடியவில்லை.

ஜடேஜா 9 ஓவர்கள் வீசி சிக்கனமாக 37 ரன்கள் மட்டுமே கொடுத்தாலும் விக்கெட் இல்லை. குல்தீப் யாதவ் 10 ஓவர்களை முழுமையாக வீசி 43 ரன்கள் கொடுத்து விக்கெட் எதுவும் வீழ்த்தவில்லை.

சுழற்பந்துவீச்சில் இந்திய பந்துவீச்சாளர்களைவிட, வங்கதேச வீரர்கள் சிறப்பாகவே செயல்பட்டனர். இந்திய சுழற்பந்துவீச்சாளர்கள் அக்ஸர் படேல், ஜடேஜா, குல்தீப் சேர்ந்து 28 ஓவர்களை வீசி, 123 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகள்தான் எடுத்தனர். எக்கானமி ரேட்டும் 4.29 என இருந்தது.

ஆனால், வங்கதேச சுழற்பந்துவீச்சாளர்கள் 20 ஓவர்கள் வீசி 3.75 எக்னாமி வைத்திருந்தனர். ஆக இந்திய அணி 5 சுழற்பந்துவீச்சாளர்களை எந்த நம்பிக்கையில் எடுத்ததோ அந்த நம்பிக்கையை காப்பாற்ற வேண்டிய கடமை சுழற்பந்து வீச்சாளர்களுக்கு இருக்கிறது.

இந்தியா - பாகிஸ்தான், சாம்பியன்ஸ் டிராபி

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,இந்திய சுழற்பந்துவீச்சாளர்கள் அக்ஸர் படேல், ஜடேஜா, குல்தீப் சேர்ந்து 28 ஓவர்களை வீசி, 123 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகள்தான் எடுத்தனர்.

3. ரோஹித் சர்மாவின் பெரிய இன்னிங்ஸ் எங்கே?

ரோஹித் சர்மா 2023-ஆம் ஆண்டு உலகக் கோப்பையில் ஓரளவுக்கு நல்ல ஃபார்மில் ஆடி வந்தார். ஆனால், ஏதேனும் பெரிய ஷாட்டுக்கு முயலும் போது விக்கெட்டை இழப்பதும், நீண்டநேரம் களத்தில் நிலைத்திருக்காமல் ஆடுவது, பெரிய இன்னிங்ஸை வழங்காமல் இருப்பது அவரின் இயல்பான ஆட்டத்தின் மீது கேள்வியை எழுப்புகிறது.

வங்கதேசத்துக்கு எதிரான ஆட்டத்தில்கூட ரோஹித் 36 பந்துகளில் 7 பவுண்டரிகள் உள்பட 41 ரன்களுடன் பவர்ப்ளே முடியும் போது வெளியேறினார். ரோஹித் பெரிய ஷாட்டுக்கு முயன்ற போது கேட்ச் பிடிக்கப்பட்டு ஆட்டமிழந்தார்.

2023 உலகக் கோப்பைத் தொடருக்குப்பின் 18 ஒருநாள் போட்டிகளில் அவர் விளையாடியுள்ளார். அதில் 6 முறை 40 முதல் 50 ரன்களுக்குள்ளாகவே ஆட்டமிழந்து, அரைசதத்தை நிறைவு செய்யமுடியாமல் வீழ்ந்துள்ளார்.

2023 உலகக் கோப்பை இறுதிப்போட்டியில்கூட ரோஹித் சர்மா 48 ரன்னில் ஆட்டமிழந்தார். கேப்டன் விரைவாக ஆட்டமிழக்கும் போது, இயல்பாகவே நடுவரிசை பேட்டர்கள் தன்னம்பிக்கையை அது அசைத்துப் பார்த்துவிடும்.

இந்தியா - பாகிஸ்தான், சாம்பியன்ஸ் டிராபி

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,ரோஹித் 36 பந்துகளில் 7 பவுண்டரிகள் உள்பட 41 ரன்களுடன் பவர்ப்ளே முடியும் போது வெளியேறினார்.

4. பேட்டிங்கில் மந்தம்

இந்திய அணி 8-வது வீரர் வரை வலிமையான பேட்டிங் வரிசையை கொண்டுள்ளது. இருப்பினும் வங்கதேசத்துக்கு எதிரான ஆட்டத்தில் 40 ஓவர்களில் சேஸிங் செய்ய வேண்டிய இலக்கை 46 ஓவர்கள் வரை இந்திய பேட்டர்கள் இழுத்தடித்தனர். இதனால், இந்திய அணி வென்றாலும், நிகர ரன்ரேட்டில் பின்தங்கியது.

கேப்டன் ரோஹித் அதிரடியான தொடக்கத்தை அளித்துவிட்டு ஆட்டமிழந்தபின், அதைத் தொடர விராட் கோலி, ஸ்ரேயாஸ் அய்யர் இருவரும் தவறிவிட்டனர். முதல் பவர்ப்ளேயில் 75 ரன்கள் சேர்த்த இந்திய அணி அடுத்த 20 ஓவர்களில் 75 ரன்கள் மட்டுமே சேர்த்தது.

இந்திய அணியின் மந்தமான பேட்டிங்தான் எளிமையாக சேஸ் செய்ய வேண்டிய ஸ்கோரை 46 ஓவர்கள் வரை ஆட்டம் நீடிக்க காரணமானது. ஆதலால், நடுப்பகுதி ஓவர்களில் ஸ்ட்ரைக்கை ரொட்டேட் செய்து வேகமாக ரன் சேர்ப்பதில் இந்திய அணி கவனம் செலுத்த வேண்டும்.

இந்தியா - பாகிஸ்தான், சாம்பியன்ஸ் டிராபி

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,முதல் பவர்ப்ளேயில் 75 ரன்கள் சேர்த்த இந்திய அணி அடுத்த 20 ஓவர்களில் 75 ரன்கள் மட்டுமே சேர்த்தது.

5. நடுப்பகுதியில் விக்கெட் வீழ்த்த முடியாமல் திணறல்

கேப்டன் ரோஹித் ஏற்கெனவே ஒரு பேட்டியில் கூறுகையில் " ஒருநாள் கிரிக்கெட்டில் நடுப்பகுதி ஓவர்கள்தான் முக்கியமானது. இந்த ஓவர்கள்தான் டெத் ஓவரை நிர்ணயிக்கும் ஓவர்கள், ஆட்டத்தையும் திருப்பும் ஓவர்கள், இதில் கவனம் செலுத்துவது அவசியம்" என்று தெரிவித்திருந்தார்.

வங்கதேசத்துக்கு எதிரான ஆட்டத்தில் ஜாகீர் அலி, தவ்ஹீத் இருவரையும் 154 ரன்கள்வரை பார்ட்னர்ஷிப் அமைக்க இந்திய பந்துவீச்சாளர்கள் அனுமதித்ததால்தான் அந்த அணியால் பெரிய ஸ்கோரை எட்ட முடிந்தது.

நடுப்பகுதியில் விக்கெட் வீழ்த்த இந்திய பந்துவீச்சாளர்கள் தவறிவிட்டால், எதிரணி பேட்டர்கள் நங்கூரம் அமைத்து களத்தில் நிலைத்து நின்று ஆட்டத்தை தட்டிப் பறிக்க வாய்ப்பாக அமைந்துவிடும்.

ஆதலால், நடுப்பகுதி ஓவர்களில் எந்த பந்துவீச்சாளருக்கு ஓவரை வழங்கலாம், எதிரணியின் பலவீனம் என்ன என்பதை உணர்ந்து வியூகம் அமைத்து பந்துவீசுவது அவசியம்.

இந்தியா - பாகிஸ்தான், சாம்பியன்ஸ் டிராபி

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,நடுப்பகுதியில் விக்கெட் வீழ்த்த இந்திய பந்துவீச்சாளர்கள் தவறிவிடுகின்றனர்.

6. பீல்டிங்கில் தேர்ச்சி அவசியம்

மோசமாக பீல்டிங் செய்வது யார் என்பதில் பாகிஸ்தானுடன் போட்டியிடும் அளவுக்கு இந்திய அணியின் பீல்டிங் மோசமாகியுள்ளது. வங்கதேசத்துக்கு எதிரான ஆட்டத்தில் ரோஹித் கைக்கு கிடைத்த கேட்சை தவறவிட்டார்.

ரவீந்திர ஜடேஜா பந்துவீச்சில் கிடைத்த ஸ்டெம்பிங் வாய்ப்பை விக்கெட் கீப்பர் கே.எல்.ராகுல் தவறவிட்டதால் ஜாகீர் அலி தப்பித்தார். இந்திய அணியின் பீல்டிங் வங்கதேசத்துக்கு எதிரான ஆட்டத்தில் மோசமாகவே இருந்தது.

கேப்டன் ரோஹித் 2023-ஆம் ஆண்டிலிருந்து 10 கேட்சுகளை கோட்டை விட்டுள்ளார். 22 கேட்ச் வாய்ப்புகளில் 12 கேட்சுகளை மட்டுமே ரோஹித் பிடித்துள்ளார்.

இந்தியா - பாகிஸ்தான், சாம்பியன்ஸ் டிராபி

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,கேப்டன் ரோஹித் 2023-ஆம் ஆண்டிலிருந்து 10 கேட்சுகளை கோட்டை விட்டுள்ளார்.

7. வலதுகை சுழற்பந்துவீச்சு தேவை

துபை ஆடுகளத்தை நம்பி இந்திய அணி முகமது ஷமி, ஹர்சித் ராணா ஆகிய இரு வேகப் பந்துவீச்சாளர்களை மட்டுமே வைத்துக்கொண்டு வங்கதேசத்தை எதிர்கொண்டது. ஆனால், பாகிஸ்தான் அணியிடம் வலுவான வேகப் பந்துவீச்சு இருக்கிறது.

துபை ஆடுகளத்தை பாகிஸ்தான் வீரர்கள் நன்கு அறிந்தவர்கள் என்பதால், அவர்களுக்கு எதிராக இந்திய அணி வேகப் பந்துவீச்சில் கூடுதல் கவனம் செலுத்துவது அவசியம். ஹர்திக் பாண்டியா பகுதிநேரப் பந்துவீச்சாளராக இருந்தாலும், ராணாவுக்குப் பதிலாக அர்ஷ்தீப் சிங் அல்லது இருவரையும் சேர்த்து 3 வேகப்பந்துவீச்சாளர்களுடன் களமிறங்கலாம்.

சுழற்பந்துவீச்சில் சினாமேன் எனப்படும் ரிஸ்ட் ஸ்பின்னர்களை விளையாடி பாகிஸ்தான் வீரர்கள் பெரிதாக பழகவில்லை என்பதால், வலது கை சுழற்பந்துவீச்சாளர்களை வைத்துக்கொள்வது சிறந்ததாக இருக்கும். பாகிஸ்தான் அணியில் இடதுகை பேட்டர்கள் 4 பேர் இருப்பதால் வலதுகை சுழற்பந்துவீச்சாளர்களுடன் செல்வது அவசியம்.

தற்போது அணியில் இருக்கும் அக்ஸர், குல்தீப், ஜடேஜா மூவருமே இடதுகை சுழற்பந்துவீச்சாளர்கள். பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் வருண் சக்ரவர்த்தி, அல்லது வாஷிங்டன் சுந்தர் இருவரில் ஒருவரை சேர்த்து, குல்தீப் யாதவை பெஞ்சில் அமர வைக்கலாம்.

இந்தியா - பாகிஸ்தான், சாம்பியன்ஸ் டிராபி

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் வருண் சக்ரவர்த்தி, அல்லது வாஷிங்டன் சுந்தர் இருவரில் ஒருவரை சேர்க்கலாம்.

8. பும்ரா இல்லாததால் பலவீனம்

பிரதான வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா இல்லாத நிலையில் மினி உலகக் கோப்பையை இந்தியா சந்திக்கிறது. தேவைப்படும் நேரத்தில் எதிரணி ரன் ரேட்டைக் குறைப்பது, விக்கெட் வீழ்த்துவது என பும்ரா சிறப்பாகவே செயல்பட்டு வந்துள்ளார்.

அவரின் இடத்தை நிரப்ப வேண்டிய கட்டாயத்தில் ஷமி இருக்கிறார் முதல் ஆட்டத்திலேயே 5 விக்கெட்டுகளை வீழ்த்தி ஷமி தனது ஃபார்மை நிரூபித்தது நம்பிக்கையளித்தாலும், அடுத்த போட்டியில் கிடைக்கும வெற்றி அரையிறுதிக்கு கொண்டு செல்லும்.

அதற்கு ஷமி, அர்ஷ்தீப் சிங், ராணா ஆகிய மூவரின் வேகப்பந்துவீச்சு சிறப்பாக இருத்தல் அவசியம்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/c0egnlx8d8lo

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சேவாக் சாதனை சமன்: இங்கிலாந்துக்கு எதிராக 352 இலக்கை எட்டிப் பிடித்து வரலாறு படைத்த ஆஸ்திரேலியா

கட்டுரை தகவல்

  • எழுதியவர், க.போத்திராஜ்

  • பதவி, பிபிசி தமிழுக்காக

  • 9 மணி நேரங்களுக்கு முன்னர்

ஆஸ்திரேலியா - இங்கிலாந்து, சாம்பியன்ஸ் டிராபி

பட மூலாதாரம்,GETTY IMAGES

லாகூரில் பிப்ரவரி 22 அன்று நடந்த ஐசிசி சாம்பியன்ஸ் டிராபிக்கான பி பிரிவில் நடந்த ஆட்டத்தில் இங்கிலாந்து அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது ஆஸ்திரேலிய அணி.

முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 351 ரன்கள் குவித்தது. 352 ரன்கள் எனும் இமாலய இலக்கைத் துரத்திய ஆஸ்திரேலிய அணி 15 பந்துகள் மீதமிருக்கும் நிலையில் 5 விக்கெட் இழப்புக்கு 356 ரன்கள் சேர்த்து வரலாற்று வெற்றியைப் பதிவு செய்தது.

ஆஸ்திரேலிய அணி தொடக்கத்திலேயே 27 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்தவுடன் லாகூர் கடாபி அரங்கில் கூட்டம் கலையத் தொடங்கியது. சிலர் நின்று கொண்டு ஆட்டத்தைப் பார்க்கத் தொடங்கினர்.

ஆனால், நேரம் செல்லச் செல்ல வீட்டுக்கு புறப்படலாம் என நினைத்த ரசிகர்களை ஆஸ்திரேலிய பேட்டர்கள் தங்கள் ஆட்டத்தின் மூலம் கட்டிப்போட்டனர். வெளியே செல்லலாம் என நினைத்த ரசிகர்களும் ஆட்டத்தின் போக்கை கேள்விப்பட்டு மீண்டும் இருக்கைக்கு வந்து ஆட்டத்தை ரசித்தனர்.

பாகிஸ்தானின் பலவீனம் இந்தியாவின் பலமாக மாறுமா? கோலி, ரோகித் சரியாக பயன்படுத்துவார்களா?

இந்தியாவை அச்சுறுத்தும் பாகிஸ்தானின் 5 வீரர்கள் - இந்தியாவின் துருப்புச் சீட்டு எது?

சாம்பியன்ஸ் டிராபியில் ஆதிக்கம் செலுத்தும் பாகிஸ்தான் - இந்திய அணிக்கு கவலை தரும் 8 விஷயங்கள்

இந்திய அணி வென்றபோதும் ரோஹித் மன்னிப்புக் கேட்டது ஏன்?

உண்மையில் நேற்றைய ஆட்டத்தை, சாத்தியமில்லாத வெற்றியை ஆஸ்திரேலிய இளம் பேட்டர்கள் சாதித்துக் காட்டினர் என்று தான் அழைக்க வேண்டும். இங்கிலாந்து அணியினர் மனம் நொந்திருக்க வேண்டும். இவ்வளவு பெரிய ஸ்கோர் அடித்தும் வெற்றி பெற முடியவில்லையே என்ற ஏக்கம் அவர்களின் முகத்தில் தெரிந்தது.

ஆஸ்திரேலியாவின் வெற்றி சாத்தியமானது எப்படி?

சாம்பியன்ஸ் டிராபியில் ஆஸ்திரேலிய அணியில் கேப்டன் கம்மின்ஸ், ஹேசல்வுட், மிட்ஷெல் ஸ்ட்ராக் ஆகிய 3 பிரதான வேகப்பந்து வீச்சாளர்களும் இல்லை. ஸ்டாய்னிஷ் ஓய்வு பெற்றுவிட்டார். கேமரூன் கிரீன், மிட்ஷெல் மார்ஷ் இல்லை.

இத்தகைய இக்கட்டான சூழலில் பிக்பாஷ் லீக்கில் விளையாடிய வீரர்களையும், ஷெப்பீல்ட் ஷீல்ட் தொடரில் விளையாடிய வீரர்களையும் அணியில் சேர்த்து, சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு அனுப்பியது ஆஸ்திரேலியா.

சமையலில் அவசரத் தேவைக்கு உப்புமா செய்வதைப் போல், அவசர கேப்டனாக ஸ்டீவ் ஸ்மித்தை நியமித்து சாம்பியன்ஸ் டிராபிக்கு ஆஸ்திரேலிய அணியை அந்நாட்டு நிர்வாகம் அனுப்பிவைத்தது.

ஆனால், சர்வதேச போட்டிகளில் 20 ஆட்டங்களுக்கும் குறைவாக ஆடிய வீரர்களை வைத்து அற்புதமான வெற்றியை ஆஸ்திரேலியா பெற்றுள்ளது. இதில் ஸ்பென்ஸர் ஜான்சன், இங்கிலிஸ், வாரிஷிஸ் ஆகியோர் 10 போட்டிகளுக்கும் குறைவாக விளையாடியவர்கள். ஆனால், இவர்களின் ஆட்டம் அற்புதமாக இருந்தது.

1996ஆம் ஆண்டு லாகூரில் கடைசியாக பேட்டர்கள் ஆதிக்கம் செய்த போட்டியைப் பார்த்த ரசிகர்கள் அதன்பின் ஏறக்குறைய 29 ஆண்டுகளுக்குப்பின் இப்படிப்பட்ட ஆட்டத்தை ரசித்துள்ளனர்.

ஆஸ்திரலேிய அணி தொடக்கத்திலேயே டிராவிஸ் ஹெட், ஸ்மித் விக்கெட்டை இழந்து 27 ரன்களுக்கு 2 விக்கெட்டுகள் எனத் தடுமாறியது. இவ்வளவு பெரிய ஸ்கோரை எவ்வாறு சேஸ் செய்யப் போகிறார்கள், அனுபவமான பேட்டர்களும் இல்லை, வெற்றி சாத்தியமாகுமா என்று ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டனர். ஆனால், மேத்யூ ஷார்ட், லாபுஷேன் அமைத்த 95 ரன்கள் பார்ட்னர்ஷிப் லேசான நம்பிக்கையை அளித்தது.

ஆஸ்திரேலியா - இங்கிலாந்து, சாம்பியன்ஸ் டிராபி

பட மூலாதாரம்,GETTY IMAGES

அதன்பின் அலெக்ஸ் கேரே, இங்கிலிஸ் இருவரும் 5-வது விக்கெட்டுக்கு அமைத்த144 ரன்கள் பார்ட்னர்ஷிப் ஆஸ்திரேலியாவுக்கு வெற்றி சாத்தியம் என்பதை நிரூபித்தது. லாபுஷேன்-மேத்யூ ஷார்ட், அலெக்ஸ் கேரே-இங்கிலிஸ், இங்கிலிஸ்-மேக்ஸ் இந்த 3 கூட்டணிதான் ஆட்டத்தின் போக்கை மாற்றி வெற்றி தேடித்தந்தது.

இதில் சதம் அடித்த இங்கிலிஸ் பூர்வீகத்தில் இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்தவர். ஆஸ்திரேலியாவில் செட்டில் ஆனதால் ஆஸ்திரேலிய அணிக்காக ஆடி வருகிறார். இப்போதும் அவரின் உறவினர்கள் இங்கிலாந்தில் வசிக்கிறார்கள். இங்கிலாந்தின் பென் ஸ்டோக்ஸ் பூர்வீகம் நியூசிலாந்து. ஆனால், பிறந்து வளர்ந்தது இங்கிலாந்தில் என்பதால் இங்கிலாந்து அணிக்காக ஆடிவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடக்கத்திலேயே 2 விக்கெட்டுகளை இழந்துவிட்டோம் என ஆஸ்திரேலிய பேட்டர்கள் மனம் தளரவில்லை. லாபுஷேன், மேத்யூ ஷார்ட் இருவரும் நிதானமாக ஆடத் தொடங்கினர். ஆடுகளம் பேட்டர்களுக்கு சொர்க்கபுரியாக இருந்ததால், இங்கிலாந்து வேகப் பந்துவீச்சை இருவரும் வெளுத்து வாங்கினர். மேத்யூ ஷார்ட் 47 பந்துகளில் அரைசதம் அடித்தார்.

லாபுஷேன் 47 ரன்கள் சேர்த்து அரைசதத்தை நெருங்கிய நிலையில் ஆதில் ரஷித் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார். அதன்பின் சிறிது நேரம் மட்டுமே களத்தில் நீடித்த ஷார்ட் 63 ரன்கள் சேர்த்திருந்த போது லிவிங்ஸ்டன் பந்துவீச்சில் அவரிடமே கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

அதன்பின் அலெக்ஸ் கேரே, ஜோஸ் இங்கிலிஸ் கூட்டணி சேர்ந்தனர். இருவரும் நிதானமாகத் தொடங்கி பின்னர் இங்கிலாந்து பந்துவீச்சை வெளுக்கத் தொடங்கினர். மெல்லமெல்ல ஆட்டம் தங்கள் கரங்களை விட்டு நகர்வதை இங்கிலாந்து வீரர்கள் உணரத் தொடங்கினர். கேரே, இங்கிலிஸ் ஆட்டத்தில் நேரம் செல்லச்செல்ல ஆக்ரோஷமும் காணப்பட்டது.

இங்கிலிஸ் 41 பந்துகளிலும், கேரே 49 பந்துகளிலும் அரைசதத்தை எட்டினர். ஆஸ்திரேலிய அணியும் வெற்றியை மெல்ல நெருங்கியது. ஆஸ்திரேலிய அணி ஆட்டத்தை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து 50 பந்துகளில் வெற்றிக்கு 70 ரன்கள் தேவை என்ற நிலைக்கு வந்தது.

ஆஸ்திரேலியா - இங்கிலாந்து, சாம்பியன்ஸ் டிராபி

பட மூலாதாரம்,GETTY IMAGES

42-வது ஓவரில் அலெக்ஸ் கேரே 69 ரன்களில் கார்ஸ் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார். இதன்பின் இங்கிலாந்து வீரர்கள் நிம்மதி அடைந்து ஆட்டத்தை தங்கள் பக்கம் இழுக்க முயன்றனர். ஆனால், மேக்ஸ்வெல் களத்துக்கு வந்து, இங்கிலிஸூடன் சேர்ந்தார்.

இதன்பின் இருவரின் ஆட்டமும் இன்னும் வேகமெடுத்தது, ஆர்ச்சர் பந்துவீச்சில் ஒரு சிக்ஸர் விளாசி இங்கிலிஸ் 77 பந்துகளில் முதல் சதத்தை நிறைவு செய்தார். 41 பந்துகளில் 50 ரன்களை எட்டிய இங்கிலிஸ், 46 பந்துகளில் சதத்தை எட்டினார்.

மேக்ஸ்வெல் தனக்கே உரிய ஸ்டைலில் 2 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகள் என 15 பந்துகளில் 32 ரன்கள் சேர்த்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இங்கிலிஸ் 86 பந்துகளில் 120 ரன்கள் சேர்த்து(6சிக்ஸர், 8 பவுண்டரி)அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்று இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

ஆஸ்திரேலியப் பந்துவீச்சிலும் பெரிதாக எந்த நெருக்கடியும் இங்கிலாந்து வீரர்களுக்கு வழங்கவில்லை. ஸ்பென்சர் ஜான்சன், நேதன் எல்லீஸ், வாரிஷ், மேக்ஸவெல், ஜம்பா என அனைவருமே ஓவருக்கு 6 ரன்களுக்கு மேல்தான் வாரி வழங்கினர். ஆஸ்திரேலிய அணியில் வலுவான பேட்டிங் இருந்ததால் தோல்வியிலிருந்து தப்பித்தது.

இங்கிலாந்து தோல்விக்கு காரணம் என்ன?

இங்கிலாந்து அணி 351 ரன்கள் சேர்த்து அதை டிபெண்ட் செய்ய முடியவில்லை என்பது வேதனைக்குரியது. அந்த அணியின் வேகப்பந்துவீச்சு உயிரற்ற நிலைக்கு சென்றுவிட்டது என்றுதான் கூற முடியும்.

இங்கிலாந்து வேகப்பந்துவீச்சாளர்கள் மட்டும் நேற்றைய ஆட்டத்தில் 26.3 ஓவர்கள் வீசி 226 ரன்களை வாரி வழங்கினர். 8.52 எகானமி ரேட் வைத்திருந்தனர். அதாவது ஓவருக்கு 8.50 ரன்களை இங்கிலாந்து வேகப் பந்துவீச்சாளர்கள் வாரி வழங்கினர்.

ஆர்ச்சர் மீது மிகுந்த நம்பிக்கை வைத்திருந்த இங்கிலாந்து அணி அதை நேற்றோடு மறந்திருக்கலாம். ஆர்ச்சர் 10 ஓவர்கள் வீசி 82 ரன்களைக் கொட்டிக் கொடுத்தார், மார்க்வுட் நானும் சளைத்தவர் இல்லை என்ற ரீதியில் 75 ரன்களும், கார்ஸ் 7 ஓவர்கள் வீசி 69 ரன்களை வாரிக்கொடுத்தனர். அதில் ரஷித் ஒருவர் மட்டுமே 4.7 ரன்ரேட்டில் பந்துவீசியிருந்தார். லிவிங்ஸ்டன், ஜோ ரூட் இருவருமே 6 ரன்களுக்கு மேல் வழங்கினர். மார்க்வுட், ஆர்ச்சர் பந்துவீச்சில் வேகம் இருந்ததே தவிர ஸ்விங், கட்டர்கள், லைன் அன்ட் லென்த் ஏதுமில்லை.

இங்கிலாந்து அணியின் ஒட்டுமொத்த தோல்விக்கு அந்த அணியின் பந்துவீச்சாளர்கள்தான் பொறுப்பேற்க வேண்டும் என்றுதான் கூற முடியும். அது மட்டுமல்லாமல் ஜோஸ் இங்கிலிஸ் அளித்த கேட்சை ஆர்ச்சர் பிடிக்காமல் கோட்டை விட்ட போதே ஆட்டம் அவர்களை விட்டு நகர்ந்துவிட்டது.

இங்கிலாந்து அணி மிகப்பெரிய ஸ்கோர் அடிப்பதற்கு அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் பென் டக்கெட் முக்கியக் காரணம். ஆஸ்திரேலியப் பந்துவீச்சை துவைத்து எடுத்து பென் டக்கெட் 165 ரன்கள் சேர்த்தார். இதில் 17 பவுண்டரிகள் 3 சிக்ஸர்கள் அடங்கும். சாம்பியன்ஸ் டிராபியில் அதிகபட்ச தனிநபர் ஸ்கோரையும் பென் டக்கெட்(165) பதிவு செய்தார். இதற்கு முன் நியூசிலாந்து வீரர் நாதன் ஆஸ்லே 145 ரன்கள் சேர்த்ததுதான் அதிகபட்சமாக இருந்தது.

அவருக்கு துணையாக ஜோ ரூட் இருந்து 68 ரன்களில் ஆட்டமிழந்தார். இருவரும் அடித்த ஸ்கோர்தான் இங்கிலாந்து அணிக்கு உயிரூட்டியது. மற்ற வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களுக்குள் ஆட்டமிழந்தனர்.

ஆஸ்திரேலியா - இங்கிலாந்து, சாம்பியன்ஸ் டிராபி

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,இங்கிலாந்து அணியின் ஒட்டுமொத்த தோல்விக்கும் அந்த அணியின் பந்துவீச்சாளர்கள்தான் பொறுப்பேற்க வேண்டும்

சாம்பியன்ஸ் ட்ராஃபி கோப்பை 2025: Aus Vs Eng

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,சாம்பியன்ஸ் டிராபியில் அதிகபட்ச தனிநபர் ஸ்கோரையும் பென் டக்கெட்(165) பதிவு செய்தார்

சேவாக் சாதனையை சமன் செய்த ஜோஸ் இங்கிலிஸ்

86 பந்துகளில் 120 ரன்கள் சேர்த்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்து அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்ற ஜோஸ் இங்கிலிஸ் ஆட்டநாயகன் விருது பெற்றார். இந்த போட்டிக்கு முன்புவரை சாதாரண பேட்டராக மட்டுமே அறியப்பட்ட இங்கிலிஸ் ஒரே ஆட்டத்தில் உச்சத்துக்கு சென்றுவிட்டார். சர்வதேச அரங்கில் தனது முதல் சதத்தையும் பதிவு செய்தார்.

ஆஸ்திரேலிய பேட்டர் ஜோஸ் இங்கிலிஸ் 77 பந்துகளில் சதத்தை எட்டி, சாம்பியன்ஸ் டிராபியில் அதிவேகமாக சதம் அடித்த வீரர் வரிசையில் இந்தியாவின் வீரேந்திர சேவாக் சாதனையை சமன் செய்தார். 2002ல் கொழும்புவில் இங்கிலாந்துக்கு எதிராக 77 பந்துகளில் சேவாக் சதம் அடித்திருந்தார்.

இங்கிலாந்து செல்ல மாட்டார் ஜோஸ் இங்கிலிஸ்

ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் கூறுகையில் " எங்கள் வீரர்கள் சிறப்பாக பேட் செய்தனர். ஷார்ட் ஆட்டம் அற்புதம். ஆடுகளத்தின் தன்மையை நாங்கள் பந்துவீச்சிலேயே கண்டுபிடித்தோம், இதில் 350 ரன்களை எளிதாக அடையலாம் எனத் தெரி்ந்துவிட்டது. 400 ரன்களை எட்டுவார்கள் என எதிர்பார்த்தோம்.

ஆனால், எங்கள் வீரர்கள் கட்டுக்கோப்பாகப் பந்துவீசினர். கேரே, இங்கிலிஸ் இருவரின் ஆட்டம் அழகாக இருந்தது, இங்கிலிஸ் அடித்த ஷாட்கள் மைதானத்தின் அனைத்து திசைகளிலும் பறந்தன. ஜோஸ் இங்கிலிஸிடம் பிரிட்டன் பாஸ்போர்ட் இருந்தாலும் அவர் இனிமேல் அங்கு செல்ல மாட்டார்" எனத் தெரிவித்தார்.

ஆஸ்திரேலியா - இங்கிலாந்து, சாம்பியன்ஸ் டிராபி

பட மூலாதாரம்,GETTY IMAGES

புதிய வரலாறு படைத்த ஆஸ்திரேலியா

சாம்பியன்ஸ் டிராபி வரலாற்றில் இங்கிலாந்து அணி 351 ரன்கள் குவித்து வரலாறு படைத்திருந்தது. ஆனால், அந்த சாதனையை வெறும் 3 மணிநேரம் மட்டுமை நிலைக்க வைத்திருந்த ஆஸ்திரேலியா 356 ரன்கள் குவித்து புதிய வரலாறு படைத்தனர். இதற்கு முன் 2004ல் அமெரிக்காவுக்கு எதிராக 347 ரன்கள் சேர்த்து நியூசிலாந்து சாதனை படைத்திருந்தது.

352 ரன்களை ஆஸ்திரேலியா சேஸ் செய்தது என்பது, ஐசிசி ஒருநாள் போட்டிகளில் ஆஸ்திரேலிய அணியின் அதிகபட்ச சேஸிங்காக மாறியது. இதற்கு முன் 2023 உலகக் கோப்பையில் இலங்கைக்கு எதிராக 345 ரன்களை பாகிஸ்தான் சேஸிங் செய்ததே அதிகபட்சமாக இருந்தது, அதை ஆஸ்திரேலியா நேற்று முறியடித்தது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/cwye4j1l3v8o

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கோலி சாதனை சதம்: இந்தியா பெற்ற வெற்றியால் பாகிஸ்தான் சாம்பியன்ஸ் டிராபியில் இருந்தே வெளியேறுமா?

இந்தியா - பாகிஸ்தான், விராட் கோலி, சாம்பியன்ஸ் டிராபி

பட மூலாதாரம்,GETTY IMAGES

கட்டுரை தகவல்

  • எழுதியவர், க.போத்திராஜ்

  • பதவி, பிபிசி தமிழுக்காக

  • 23 பிப்ரவரி 2025

விராட் கோலியின் ஆகச் சிறந்த சதத்தால் துபையில் நடந்த ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி ஆட்டத்தில் பாகிஸ்தான் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது இந்திய அணி.

முதலில் பேட் செய்த பாகிஸ்தான் அணி 241 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. 242 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 45 பந்துகள் மீதமிருக்கையில் 4 விக்கெட் இழப்புக்கு 244 ரன்கள் சேர்த்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியில் 3-2 என்ற கணக்கில் பாகிஸ்தான் முன்னிலையில் இருந்தநிலையில் தற்போது 3-3 என்ற கணக்கில் இந்தியா-பாகிஸ்தான் சமநிலையில் இருக்கிறது.

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடங்குவதற்கு முன்பு வரை விராட் கோலியின் பேட்டிங் ஃபார்ம் பெரிய கவலையாக இருந்தது.

பெரும்பாலான கிரிக்கெட் விமர்சகர்கள் கோலியின் ஃபார்ம் பற்றி குறிப்பிடத் தவறவில்லை, விமர்சிக்கத் தவறவில்லை. ஆனால், அனைத்துக்கும் இந்த ஒற்றை சதத்தின் மூலம் கோலி பதில் அளித்துள்ளார்.

சதம் மூலம் பதில்

விராட் கோலி போன்ற ஆல்டைம் கிரேட் பேட்டர்கள், இதுபோன்ற ஏதாவது ஒரு இன்னிங்ஸ் சிக்கிவிட்டால் இழந்த ஒட்டுமொத்த ஃபார்மையும் கண்முன் கொண்டு வந்து நிறுத்திவிடுவார்கள்.

ரசிகர்கள் கிங் கோலி என்பதற்கு விளக்கமாக இன்றைய கோலியின் ஆட்டம் அமைந்திருந்தப்பதாக சமூக ஊடகங்களில் கொண்டாடி வருகின்றனர்.

இந்தியா - பாகிஸ்தான், விராட் கோலி, சாம்பியன்ஸ் டிராபி

பட மூலாதாரம்,GETTY IMAGES

பாகிஸ்தானுக்கு எதிராக எப்போதும் சிறப்பாக ஆடக்கூடிய விராட் கோலி இந்த ஆட்டத்திலும் தனது மாஸ்டர் கிளாஸ் ஆட்டத்தை வெளிப்படுத்தத் தவறவில்லை.

சதம் அடிப்பாரா, அதற்கான வாய்ப்பு இருக்குமா என்ற நிலையில் கடைசியில் பவுண்டரி அடித்து 100 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் கோலி இருந்தார். அவருக்கே ஆட்டநாயகன் விருது அறிவிக்கப்பட்டது. சர்வதேச அரங்கில் தனது 51வது ஒருநாள் சதத்தையும் கோலி நிறைவு செய்துள்ளார்.

இந்தியா - பாகிஸ்தான், விராட் கோலி, சாம்பியன்ஸ் டிராபி

பட மூலாதாரம்,GETTY IMAGES

இந்தியா பெற்ற வெற்றியால் பாகிஸ்தான் வெளியேறுமா?

இந்திய அணி அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்துவிட்டது. அதேநேரம் பாகிஸ்தான் அணி ஏறக்குறைய சாம்பியன்ஸ் டிராபியில் இருந்து வெளியேறிவிட்டது.

பாகிஸ்தான் அணிக்கு ஒரே வாய்ப்புதான் இருக்கிறது, வங்கதேச அணியை பெரிய ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடிக்க வேண்டும், நியூசிலாந்து அணி அடுத்த 2 ஆட்டங்களிலும் தோற்க வேண்டும். இப்படி நடந்தால் அரையிறுதிக்குள் பாகிஸ்தான் செல்ல வாய்ப்பு இருக்கிறது. ஆனால், இது நடக்குமா என்பது நிச்சயமில்லை.

இந்திய அணியின் வெற்றிக்கு முக்கியக் காரணமாக இருந்தவர்களில் சுப்மன் கில்(46), ஸ்ரேயாஸ் அய்யர்(56) ஆகியோரின் பேட்டிங்கும் குறிப்பிடத்தக்கது.

இருவரும் சேர்ந்து கோலியுடன் அருமையான பார்ட்னர்ஷிப் அமைத்தனர். சுப்மன் கில், கோலி கூட்டணி 70 ரன்களும், ஸ்ரேயாஸ், கோலி கூட்டணி 114 ரன்களும் சேர்த்தது.

ஹர்திக் அற்புதமான பந்துவீச்சு

இந்தியா - பாகிஸ்தான், விராட் கோலி, சாம்பியன்ஸ் டிராபி

பட மூலாதாரம்,GETTY IMAGES

இந்திய அணியின் பந்துவீச்சும் வெற்றிக்கு முக்கியக் காரணமாக இருந்தது. பாபர் ஆசம் விக்கெட்டை வீழ்த்தி ஹர்திக் பாண்டியா தொடங்கி வைத்தார். பாண்டியாவின் பந்துவீச்சில் இன்று ஏகப்பட்ட வேரியேஷன்கள், ஸ்லோபால், ஸ்விங் என அற்புதமாக இருந்தது. 8 ஓவர்களையும் 3.4 ரன்ரேட்டில் பந்துவீசி 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார் பாண்டியா.

ஜடேஜா, அக்ஸர், குல்தீப் ஆகியோர் சேர்ந்து 26 ஓவர்களை வீசி, 129 ரன்கள் கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இந்த 3 பேருமே, 4 ரன்ரேட்டுக்கு மேலாக ரன்களை வழங்கவில்லை.

குறிப்பாக நடுப்பகுதியில் விக்கெட் வீழ்த்தாமல் இந்திய அணி திணறுகிறது என்ற விமர்சனத்துக்கு இந்த முறை பதில் அளித்து நடுப்பகுதியில் விக்கெட்டை வீழ்த்தி ஆட்டத்தைத் திருப்பினர்.

'கோலியின் ஆட்டம் வியப்பைத் தரவில்லை'

இந்தியா - பாகிஸ்தான், விராட் கோலி, சாம்பியன்ஸ் டிராபி

பட மூலாதாரம்,GETTY IMAGES

வெற்றிக்குப் பிறகு இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா கூறுகையில் "பந்துவீச்சில் சிறப்பாகச் செயல்பட்டு அருமையாகத் தொடங்கினோம். இந்த விக்கெட் பற்றி நன்கு தெரியும் என்பதால் எங்கள் பேட்டர்கள் நிதானமாக ஆடினர். குல்தீப், அக்ஸர், ஜடேஜா சிறப்பாகப் பந்துவீசினர். ரிஸ்வான், சவுத் நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்தனர். ஷமி, ஹர்திக் மற்றும் ராணா சரியான நேரத்தில் சிறப்பாகப் பந்துவீசினர்.

ஒவ்வொரு வீரரும் என்ன விதமான பணியைச் செய்ய வேண்டும் என்பதை அறிந்து செயல்பட்டனர். பேட்டர்களுக்கு யார் அதிகமாக தொந்தரவு கொடுப்பார்கள் என்பதை அறிந்து பந்துவீசச் செய்தேன். கோலி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திவிட்டார். ஓய்வறையில் இருப்போர் கோலியின் ஆட்டத்தைப் பார்த்துப் பெரிதாக வியப்படையவில்லை" எனத் தெரிவித்தார்.

5 முறை ஆட்டமிழப்பு

இந்திய அணி, 242 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கியது. ரோஹித் சர்மா, சுப்மன் கில் ஆட்டத்தைத் தொடங்கினர். ரோஹித் சர்மா வழக்கம்போல் 3 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என அதிரடியாகத் தொடங்கினார்.

ஆனால், அப்ரிடி வீசிய 5வது ஓவரின் கடைசிப் பந்து கணிக்க முடியாத வகையில் வந்த இன்-ஸ்விங் யார்க்கரில் ரோஹித் சர்மா க்ளீன் போல்டாகி 20 ரன்களில் ஆட்டமிழந்தார்.

டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் 8 முறை அப்ரிடி பந்துவீச்சை சந்தித்துள்ள ரோஹித் சர்மா, அதில் 5 முறை ஆட்டமிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

அதன்பின் விராட் கோலி களமிறங்கி, சுப்மன் கில்லுடன் சேர்ந்தார். அப்ரிடி வீசிய 7வது, 9வது ஓவர்களில் 4 பவுண்டரிகள் விளாசினார். பவர்ப்ளே ஓவர்கள் முடிவில் இந்திய அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 64 ரன்கள் சேர்த்த்தது.

சச்சினை முந்திய கோலி

இந்தியா - பாகிஸ்தான், விராட் கோலி, சாம்பியன்ஸ் டிராபி

பட மூலாதாரம்,GETTY IMAGES

ஹாரிஸ் ராஃப் வீசிய 13வது ஓவரில் கோலி பவுண்டரி அடித்தபோது, ஒருநாள் கிரிக்கெட்டில் அதிவிரைவாக 14 ஆயிரம் ரன்களை எட்டி, சச்சின் டெண்டுல்கரின் சாதனையை கோலி முறியடித்தார். சச்சின் 350 இன்னிங்ஸிலும், சங்கக்கரா 378 இன்னிங்ஸிலும் இந்தச் சாதனையைச் செய்த நிலையில், கோலி 287 இன்னிங்ஸில் 14 ஆயிரம் ரன்களை எட்டினார். அதே ஓவரில் கோலி கவர் டிரைவில் அற்புதமான பவுண்டரியும் விளாசினார்.

அப்ரார் அகமது வீசிய 18வது ஓவரில் கில் 46 ரன்கள் சேர்த்திருந்த நிலையில் க்ளீன் போல்டாகி வெளியேறினார்.

கோலி 2வது அரைசதம்

அடுத்து வந்த ஸ்ரேயாஸ் அய்யர், கோலியுடன் இணைந்தார். 20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 2 விக்கெட் இழப்புக்கு 109 ரன்கள் சேர்த்திருந்தது. 25 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 2 விக்கெட் இழப்புக்கு 126 ரன்கள் சேர்த்தது.

நசீம் ஷா வீசிய 27வது ஓவரில் டீப் கவர் திசையில் பவுண்டரி அடித்து தனது 74வது அரைசதத்தை கோலி நிறைவு செய்தார். கடந்த 3 போட்டிகளில் விராட் கோலி அடித்த 2வது அரைசதம் இது.

இந்திய அணி, 36வது ஓவரில் 200 ரன்களை எட்டியது. நிதானமாக ஆடிய ஸ்ரேயாஸ் அய்யர் 63 பந்துகளில் அரைசதத்தை நிறைவு செய்தார். ஸ்ரேயாஸ் அய்யர் 56 ரன்கள் சேர்த்திருந்தபோது, குஷ்தில் வீசிய 39வது ஓவரில் இமாம் உல்ஹக்கிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ஹர்திக் பவுண்டரி அடித்தநிலையில் 8 ரன்களில் அப்ரிடி பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார்.

அக்ஸர் படேல் 3 ரன்களிலும், கோலி பவுண்டரி அடித்து சதத்தை நிறைவு செய்தும் இந்திய அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர். 42.3 ஓவர்களில் இந்திய அணி 4 விக்கெட் இழப்புக்கு 244 ரன்கள் சேர்த்து இலக்கை அடைந்தது.

பாகிஸ்தான் தோல்விக்கு காரணம் என்ன?

இந்தியா - பாகிஸ்தான், விராட் கோலி, சாம்பியன்ஸ் டிராபி

பட மூலாதாரம்,GETTY IMAGES

பாகிஸ்தான் அணி கவனமாக ஆட வேண்டும், விக்கெட்டை இழந்துவிடக்கூடாது என்ற கவனத்தோடு ஆடியதே தவிர ரன்சேர்ப்பில் கவனம் செலுத்தவில்லை.

தொடக்கத்தில் இருந்தே மந்தமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். பவர்ப்ளேவில் 2 விக்கெட் இழப்புக்கு 52 ரன்களை எடுத்த பாகிஸ்தான் அடுத்த 10 ஓவர்களில் 27 ரன்களையே சேர்த்தது.

பாகிஸ்தான் தரப்பில் சவுத் ஷகில்(62), கேப்டன் ரிஸ்வான்(42) தவிர வேறு எந்த பேட்டர்களும் பெரிதாக ரன்களை சேர்க்கவில்லை

இந்திய பந்துவீச்சாளர்கள் ஹர்திக், குல்தீப், அக்ஸர், ஜடேஜா ஆகிய 4 பந்துவீச்சாளர்களும் நடுவரிசையில் பாகிஸ்தான் ரன்ரேட்டை இறுக்கிப் பிடித்ததால் பாகிஸ்தான் பேட்டர்களின் பேட்டிலிருந்து பெரிய ஷாட்களும் வரவில்லை, பெரிதாக ரன்களும் வரவில்லை.

இந்தியா - பாகிஸ்தான், விராட் கோலி, சாம்பியன்ஸ் டிராபி

பட மூலாதாரம்,GETTY IMAGES

கேப்டன் ரிஸ்வான் ஆட்டமிழந்தவுடன் பாகிஸ்தான் அணியின் வீழ்ச்சி தொடங்கியது. அவர் ஆட்டமிழந்தபின் அடுத்த 11 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை பாகிஸ்தான் இழந்து தடுமாறியது. நடுவரிசை மீது மிகுந்த நம்பிக்கை வைத்து பாகிஸ்தான் தொடக்க ஆட்டக்காரர்களும், கேப்டன் ரிஸ்வானும் ரன் சேர்ப்பதில் கவனம் செலுத்தாமல் விக்கெட்டை தக்க வைப்பதிலேயே கவனம் செலுத்தினர். ஆனால், அவர்கள் நினைப்புக்கு மாறாக நடுவரிசை பேட்டர்கள் சொதப்பலாக பேட் செய்தனர்.

பாகிஸ்தான் அணி, 200 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்திருந்தது. அடுத்த 41 ரன்களுக்கு மீதமிருந்த 5 விக்கெட்டுகளையும் இழந்தது. நடுவரிசை பேட்டர்களை நம்பி பாகிஸ்தான் கேப்டனும், தொடக்க வீரர்களும் ஏமாந்தனர்.

பாகிஸ்தான் அணி தேவையின்றி பந்துகளை வீணடித்தது அந்த அணியின் ஸ்கோர் குறைவுக்கு முக்கியக் காரணம். பாகிஸ்தான் அணி இந்தப் போட்டியில் மட்டும் 152 டாட் பந்துகளை விட்டுள்ளது, இது ஏறக்குறைய 25 ஓவர்களுக்கு சமம். ஒருநாள் போட்டியில் இந்த அளவு டாட் பந்துகளை விடுவது ஸ்கோரை பெரிய அளவு பாதிக்கும். டாட் பந்துகளை விட்டதற்கு விலையாக பாகிஸ்தான் அணி ஸ்கோரை பறிகொடுத்துள்ளது.

பாகிஸ்தான் அணியின் ஃபீல்டிங் படுமோசமாக இருந்தது. சுப்மன் கில், விராட் கோலி, ஸ்ரேயாஸ் என 3 பேருக்கும் கேட்சை கோட்டைவிட்டனர். இந்த கேட்சுகளை பிடித்திருந்தாலே ஆட்டத்தை நெருக்கடியில் கொண்டு சென்றிருக்கலாம்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/cx2gppq980go

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பங்களாதேஷை வீழ்த்திய நியூஸிலாந்துடன் ஏ குழுவிலிருந்து இந்தியாவும் அரை இறுதிக்கு முன்னேறியது; பாகிஸ்தானும் பங்களாதேஷும் முதல் சுற்றுடன் வெளியேற்றம்

Published By: VISHNU

25 FEB, 2025 | 12:05 AM

image

(நெவில் அன்தனி)

ராவல்பிண்டி தேசிய விளையாட்டரங்கில் திங்கட்கிழமை (24) நடைபெற்ற ஏ குழுவுக்கான 4ஆவது சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டியில் பங்களாதேஷை 5 விக்கெட்களால் வெற்றிகொண்ட நியூஸிலாந்து அரை இறுதியில் விளையாட தகுதிபெற்றது.

இந்தப் போட்டி முடிவுடன் ஏ குழுவிலிருந்து இந்தியாவும் அரை இறுதிக்கு முன்னேறியதுடன் வரவேற்பு நாடனான பாகிஸ்தானுடன் பங்களாதேஷும் முதல் சுற்றுடன் வெளியேறுகின்றன.

001.png

003.png

பங்களாதேஷுக்கு எதிரான போட்டியில் மைக்கல் ப்றேஸ்வெல் பதிவுசெய்த 4 விக்கெட் குவியலும் ரச்சின் ரவிந்த்ரா குவித்த சதமும் நியூஸிலாந்தை இலகுவாக வெற்றி அடையச் செய்தன.

பங்களாதேஷினால் நிர்ணயிக்கப்பட்ட 237 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்து 46.1 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 240 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது.

எவ்வாறாயினும் நியூஸிலாந்தின் ஆரம்பம் சிறப்பாக அமையவில்லை.

வில் யங் (9), கேன் வில்லியம்சன் (5) ஆகிய இருவரும் முதல் 4 ஓவர்களுக்குள் ஆட்டம் இழந்தனர். (15 - 2 விக்.)

இந் நிலையில் டெவன் கொன்வே (30), ரச்சின் ரவிந்த்ரா ஆகிய இருவரும் 3ஆவது விக்கெட்டில் 57 ஓட்டங்களைப் பகிர்ந்து வீழ்ச்சியை சீர் செய்தனர்.

தொடர்ந்து ரச்சின் ரவிந்த்ரா, டொம் லெதம் ஆகிய இருவரும் 4ஆவது விக்கெட்டில் 129  ஓட்டங்களைப்   பகிர்ந்து நியூஸிலாந்தின் மொத்த எண்ணிக்கைக்கு பலம் சேர்த்தனர்.

ரச்சின் ரவிந்த்ரா 105 பந்துகளை எதிர்கொண்டு 12 பவுண்டறிகள், ஒரு சிக்ஸுடன் 112 ஓட்டங்களைக் குவித்தார்.

இந்த வருடம் இதுவரை நடைபெற்ற 6 சம்பியன்ஸ் கிண்ணப் போட்டிகளிலும் சதம் குவிக்கப்பட்டுள்ளது விசேட அம்சமாகும்.

ரவிந்த்ராவைத் தொடர்ந்து டொம் லெதம் 55 ஓட்டங்களுடன் வெளியேறினார். (214 - 5 விக்.)

அதன் பின்னர் வெற்றிக்கு தேவைப்பட்ட 23 ஓட்டங்களை க்லென் பிலிப்ஸ் (21 ஆ.இ), மைக்கல் ப்றேஸ்வெல் (11 ஆ.இ.) ஆகிய இருவரும் பெற்றுக்கொடுத்தனர்.

முன்னதாக இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட பங்களாதேஷ் 50 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்து 236 ஓட்டங்களைப் பெற்றது.

முன் வரிசையிலும் மத்திய வரிசையிலும் ஆறு வீரர்கள் துடுப்பாட்டத்தில் வழங்கிய சிறந்த பங்களிப்பு பங்களாதேஷுக்கு கௌரவமான மொத்த எண்ணிக்கையைப் பெற உதவியது.

தன்ஸித் ஹசன் (24), அணித் தலைவர் நஜ்முல் ஹசன் ஷன்டோ ஆகிய இருவரும் 45 ஓட்டங்களைப் பகிர்ந்து நல்ல ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர்.

தன்ஸித் ஹசன் ஆட்டம் இழந்ததுடன் சீரான இடைவெளியில் மெஹிதி ஹசன் மிராஸ் (13), தௌஹித் ரிதோய் (7), முஷ்பிக்குர் ரஹிம் (2) மஹ்முதுல்லா (4) ஆகியோர் ஆட்டம் இழந்தனர்.

இதனிடையே தௌஹித் ரிதோயுடன் 3ஆவது விக்கெட்டில் 33 ஓட்டங்ளையும் ஜாக்கர் அலியுடன் 6ஆவது விக்கெட்டில் 45 ஓட்டங்களையும் பகிர்ந்த ஷன்டோ 77 ஓட்டங்களைப் பெற்று ஆட்டம் இழந்தார்.

மத்திய வரிசையில் ஜாக்கர் அலி 45 ஓட்டங்களையும் ரிஷாத் ஹொசெய்ன் 26 ஓட்டங்களையும் தஸ்கின் அஹ்மத் 10 ஓட்டங்களையும் பெற்றனர்.

ஜாக்கர் அலி 8ஆவது விக்கெட்டில்  தஸ்கின்  அஹ்மத்துடன் 35 ஓட்டங்களைப் பகிர்ந்தார்.

002.png

பந்துவீச்சில் மைக்கல் ப்றேஸ்வெல் 26 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் வில் ஓ'றூக் 48 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

ஆட்டநாயகன்: மைக்கல் ப்றேஸ்வெல்

https://www.virakesari.lk/article/207578

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அவுஸ்திரேலியா - தென் ஆபிரிக்க போட்டி மழையினால் முழுமையாக கைவிடப்பட்டது; பி குழுவில் அரை இறுதிக்கு நான்கு அணிகளும் போட்டி

Published By: VISHNU

25 FEB, 2025 | 08:58 PM

image

(நெவில் அன்தனி)

அவுஸ்திரேலியாவுக்கும் தென் ஆபிரிக்காவுக்கும் இடையில் ராவல்பிண்டி கிரிக்கெட் விளையாட்டரங்கில் இன்று செவ்வாய்க்கிழமை (25) நடைபெறவிருந்த பி குழுவுக்கான சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி சீரற்ற காலநிலை காரணமாக நாணய சுழற்சி நடத்தப்படாமல் கைவிடப்பட்டது.

பிற்பகல் 2.30 மணிக்கு ஆரம்பமாக வேண்டிய இப் போட்டி மழை காரணமாக கைவிடப்படுவதாக மாலை 5.30 மணிக்கு உத்தியோகபூர்மாக அறிவிக்கப்பட்டது.

இப் போட்டி கைவிடப்பட்டதால் இக் குழுவிலிருந்து நான்கு அணிகளும் அரை இறுதிக்கு செல்வதற்கான வாயில் திறந்த வண்ணம் இருக்கிறது.

ஏ குழுவில் இருந்து இந்தியாவும் நியூஸிலாந்தும் ஏற்கனவே அரை இறுதியில் விளையாட தகுதி பெற்றுவிட்டன.

பி குழுவில் இன்றைய போட்டி கைவிடப்பட்ட நிலையில் தென் ஆபிரிக்கா 3 புள்ளிகளுடன் நிகர ஓட்ட வேக வித்தியாச அடிப்படையில் முதல் இடத்தில் இருக்கிறது.

அவுஸ்திரேலியாவும் 3 புள்ளிகளுடன் 2ஆம் இடத்தில் இருக்கிறது.

b_group_poits_table.jpg

இங்கிலாந்தும் ஆப்கானிஸ்தானும் தலா ஒரு தோல்வியுடன் முறையே 3ஆம், 4ஆம் இடங்களில் இருக்கின்றன.

இந்த இரண்டு அணிகளும் லாகூரில் நாளை மோதவுள்ளன. அப் போட்டியில் வெற்றிபெறும் அணிக்கு அரை இறுதி வாய்ப்பு சற்று அதிகரிப்பதுடன் தோல்வி அடையும் அணி முதல் சுற்றுடன் வெளியேற வேண்டிவரும்.

இதேவேளை, தென் ஆபிரிக்கா, அவுஸ்திரேலியா ஆகிய இரண்டு அணிகளும் தங்களது கடைசிப் போட்டிகளில் முறையே இங்கிலாந்தையும் ஆப்கானிஸ்தானையும் வெற்றிகொண்டால் அரை இறுதிகளில் விளையாட தகுதிபெறும்,

தோல்வி அடைந்தால்  புள்ளிகளும் நிகர ஓட்ட வேகமும் அரை இறுதிக்கு செல்லும் அணிகளைத் தீர்மானிக்கும்.

a_groug_points_table.jpg

ஏ குழுவில் இந்தியாவும் நியூஸிலாந்தும் தலா 2 வெற்றிகளுடன் அணிகள் நிலையில் 4 புள்ளிகளைப் பெற்று அரை இறுதிக்கு முன்னேறியுள்ளன.

https://www.virakesari.lk/article/207690

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.