Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

'அமெரிக்கா, இஸ்ரேலின் வான் பாதுகாப்பு அமைப்புகளை முறியடிக்கும்' - இந்திய ஹைபர்சோனிக் ஏவுகணையின் சிறப்பு என்ன?

இந்தியாவின் ஹைபர்சோனிக் ஏவுகணை சோதனை

பட மூலாதாரம்,EPA

  • எழுதியவர், அபினவ் கோயல்
  • பதவி, பிபிசி செய்தியாளர்

இந்தியா நீண்ட தூரம் சென்று தாக்கும் ஹைப்பர்சோனிக் ஏவுகணையை வெற்றிகரமாக பரிசோதித்துள்ளது.

பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இதை மிகப்பெரிய சாதனை மற்றும் வரலாற்று சிறப்புமிக்கது என கூறியுள்ளார்.

நீண்ட தூர ஹைப்பர்சோனிக் ஏவுகணை 1500 கிலோ மீட்டர் தூரம் உள்ள இலக்கைத் தாக்கும் வல்லமை கொண்டது.

இந்த ஏவுகணை மூலம் காற்று, நீர் மற்றும் நிலம் என எப்பகுதியில் இருந்தும் எதிரியை தாக்கலாம்.

 

இந்தியாவின் `பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு’ (டிஆர்டிஓ) நீண்ட காலமாக இந்த ஹைப்பர்சோனிக் ஏவுகணையைத் தயாரிக்கும் பணியில் ஈடுப்பட்டு வருகிறது.

2020 ஆம் ஆண்டில், டிஆர்டிஓ ஒரு `ஹைப்பர்சோனிக் டெக்னாலஜி டெமான்ஸ்ட்ரேட்டட் வாகனத்தை’ (HSTDV) வெற்றிகரமாக சோதித்தது .

தற்போது இந்த ஹைப்பர்சோனிக் ஏவுகணைச் சோதனையை வெற்றிகரமாக நிகழ்த்தி, இந்தியா இத்தகைய மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பம் கொண்ட நாடுகளின் பட்டியலில் இடம்பிடித்துள்ளது.

ஹைப்பர்சோனிக் ஏவுகணை என்றால் என்ன?

இந்த ஏவுகணை காற்று, நீர் மற்றும் நிலம் ஆகிய மூன்று இடங்களிலிருந்தும் தாக்கும் திறன் கொண்டது

இந்த ஹைப்பர்சோனிக் ஏவுகணை ஒலியை விட ஐந்து மடங்கு வேகமாக பயணம் செய்து இலக்கைத் தாக்கக் கூடிய திறன் கொண்டது.

அதேசமயம், சப்சோனிக் ஏவுகணைகள் ஒலியின் வேகத்தை விட வேகமாக கடக்க முடியாது. சூப்பர்சோனிக் ஏவுகணைகள் ஒலியின் வேகத்தை விட இரண்டு முதல் மூன்று மடங்கு வரை மட்டுமே வேகமாகப் பயணிக்க முடியும்.

பிபிசியிடம் பேசிய பாதுகாப்பு நிபுணரான, ஓய்வு பெற்ற ஏர் கமாண்டர் அஷ்மிந்தர் சிங் பாஹ்ல் கூறுகையில், ``ஹைப்பர்சோனிக் ஏவுகணை முதலில் வானத்தில் சுமார் 100 கிலோமீட்டர் வரை செல்கிறது, அதாவது அது முதலில் பூமியின் வளிமண்டலத்தை கடக்கிறது. பின்னர், விண்வெளியில் இருந்து மீண்டும் புவியின் வளிமண்டலத்தை அடைந்து தன் இலக்கை நோக்கி அது பயணம் செய்கிறது" என்று விவரித்தார்.

இந்தியாவின் ஹைபர்சோனிக் ஏவுகணை சோதனை

பட மூலாதாரம்,GETTY IMAGES

ஹைப்பர்சோனிக் ஏவுகணை அணு ஆயுதத்தை (nuclear warhead) சுமந்தும் செல்லும் திறனுடையதா என்பதே தற்போதைய கேள்வி!

இதற்கு பதிலளித்த பாதுகாப்பு வல்லுநர் ராகுல் பேடி, ஹைப்பர்சோனிக் ஏவுகணைகளில் வழக்கமான மற்றும் அணு ஆயுதங்களை நிறுவ முடியும் என தெரிவித்துள்ளார்.

அவர் கூறுகையில்," 1700 கிலோ மீட்டர் தூரம் வரை இந்த ஏவுகணை தாக்குதல் நடத்தக் கூடிய திறனுடையது. இது நிச்சயமாக ஒரு வரலாற்று சிறப்புமிக்க ஏவுகணையாகக் கருதப்படுகிறது." என்றார்.

"ஹைப்பர்சோனிக் ஏவுகணையைப் பயன்பாட்டிற்குக் கொண்டுவர இந்தியாவிற்கு இரண்டு முதல் மூன்று ஆண்டுகள் வரை ஆகும்” என்றும் அவர் கூறினார்.

அவர் கூறுகையில், "ஒரு காரை உருவாக்குவது போல, முதலில் ஒரு முன்மாதிரி உருவாக்கப்படும், அதன் பின்னர் அது சோதனைக்கு உட்படுத்தப்பட்டு பிறகு, அது உற்பத்திக்கு கொண்டு வரப்படுகிறது. எனவே இந்தியாவில் இந்த ஏவுகணை செயல்பாட்டுக்கு வர கால அவகாசம் எடுக்கும்." என்று விளக்கினார்.

 
இந்தியாவின் ஹைபர்சோனிக் ஏவுகணை சோதனை

பட மூலாதாரம்,@RAJNATHSINGH

ஹைப்பர்சோனிக் ஏவுகணையின் சிறப்பம்சம் என்ன?

ஹைப்பர்சோனிக் ஏவுகணை மிக வேகமாக செல்லும் என்பதால், ஏவுகணை எதிர்ப்பு அமைப்பால் இதனை கண்டறிந்து தடுப்பது கடினம்.

இந்த ஏவுகணை ஒலியை விட வேகமாக பயணம் செய்வதால் மட்டும் இந்த சிறப்பம்சத்தை பெறவில்லை.

பிபிசி உடனான கலந்துரையாடலில் பாதுகாப்பு வல்லுநர் ராகுல் பேடி, இது மிக நவீன ஏவுகணைத் தொழில்நுட்பம் என்றார்.

அவர் கூறுகையில், "இந்த ஹைப்பர்சோனிக் ஏவுகணை மிகவும் வேகமாக அதன் இலக்கை நோக்கி பறந்து செல்லக் கூடியது, இதனை ஏவுகணை எதிர்ப்பு அமைப்பால், கண்டறிய முடியாது." என்றார்.

அதே நேரம் பாதுகாப்பு வல்லுநர் பாஹல், “ஹைப்பர்சோனிக் ஏவுகணைப் பாலிஸ்டிக் ஏவுகணைப் போல் இல்லாமல், அவை பயணம் செய்யும் பாதை அல்லது எங்கிருந்து வந்தது என்பதை வெளிப்படுத்தாது. இதனால் இதன் இலக்கைக் கணிப்பது மிகக் கடினம்” என்கிறார்.

அமெரிக்கா உருவாக்கிய உயர் பாதுகாப்பு முனையங்கள் (The'Terminal High Altitude Area Defense' -THAAD) மற்றும் இஸ்ரேலின் வான் பாதுகாப்பு அமைப்பான ‘அயர்ன் டோம்’ ஆகியவற்றால் கூட இந்த ஹைப்பர்சோனிக் ஏவுகணையைத் தடுக்க முடியாது என்கிறார்.

"ஹைப்பர்சோனிக் ஏவுகணையை அவர்கள் கண்டறிந்தாலும், அதனை சுட்டு வீழ்த்துவது கடினம். ஏனெனில் இதற்கு இணையான வேகத்தில் பயணம் செய்யும் வகையிலான மற்றொரு ஏவுகணை தேவை. இதற்கு ஒரு நாடு, ஏரோ வெப்பன் சிஸ்டம் Arrow Weapon System (AWS) வைத்திருக்க வேண்டும். இதன் வரம்பு 2,500 கிலோ மீட்டர்" என பாஹல் தெரிவித்தார்.

 

எந்தெந்த நாடுகளிடம் ஹைப்பர்சோனிக் ஏவுகணை உள்ளது?

சில குறிப்பிட்ட நாடுகள் மட்டுமே ஹைப்பர்சோனிக் ஏவுகணைகளை வைத்துள்ளன. வல்லுநர்கள் இதைப்பற்றி மாறுபட்ட கருத்துகளைக் கொண்டுள்ளனர்.

ஹைப்பர்சோனிக் ஏவுகணையை தற்போது சீனா மற்றும் ரஷ்யா வைத்துள்ளன. அதேசமயம் அமெரிக்காவும் இந்தியாவைப் போல நடைமுறைக்குக் கொண்டு வரும் முயற்சியில் ஈடுப்பட்டுள்ளதாக, பாதுகாப்பு வல்லுநர் பாஹல் தெரிவித்தார்.

மேலும், “ சில நாடுகள் தாங்கள் ஹைப்பர்சோனிக் ஏவுகணையை வைத்துள்ளதாக கூறுகின்றன. ஆனால் அதன் உண்மைத்தன்மை உறுதிப்படுத்தப்படவில்லை. அத்தகைய சூழலில், இந்த நவீன தொழில்நுட்பத்தைக் கொண்ட நாடுகளின் பட்டியலில், இந்தியா மூன்றாவது நாடாக இருக்கும்” என்றார் .

பாதுகாப்பு வல்லுநர் ராகுல் பேடி கூறுகையில், "ரஷ்யா, சீனா மற்றும் இந்தியாவைத் தவிர்த்து அமெரிக்கா, பிரான்ஸ் மற்றும் பிரேசில் ஆகிய நாடுகளிடம் ஹைப்பர்சோனிக் ஏவுகணை இருப்பதாக நம்பப்படுகிறது. இதைத் தவிர்த்து இரான் ஹைப்பர்சோனிக் ஏவுகணை வைத்திருப்பதாக தெரிவித்துள்ளது” என்றார்.

இந்தியாவின் ஹைபர்சோனிக் ஏவுகணை சோதனை

பட மூலாதாரம்,GETTY IMAGES

 

"யுக்ரேன் உடனான போரில் ரஷ்யா கிஞ்சால் ஹைப்பர்சோனிக் ஏவுகணையைப் பயன்படுத்தியது. ஏனெனில் அவற்றைப் தடுப்பது மிகக் கடினம்," என ராகுல் பேடி கூறினார்.

2022 மார்ச்சில், யுக்ரேனின் மேற்கு பகுதியில் உள்ள ஆயுத கிடங்கை ஹைப்பர்சோனிக் ஏவுகணை கொண்டு தாக்கியதாக ரஷ்யா கூறியது.

சில வல்லுநர்கள் இஸ்ரேல் மீது இரான் சமீபத்தில் நடத்திய தாக்குதலில் ஹைப்பர்சோனிக் ஏவுகணையைப் பயன்படுத்தியதாக கருதுகின்றனர்.

பாலிஸ்டிக் மற்றும் குரூயிஸ் ஆகிய இரு ரகங்களிலும் ஃபதா ஹைபர்சோனிக் ஏவுகணையை அறிமுகப்படுத்திய முதல் நாடு தாங்கள்தான் என்றும் இரான் கூறுகிறது.

அல்-பதாஸ் ஹைப்பர்சோனிக் ஏவுகணை 1,400 கிலோ மீட்டர் வரை தாக்கக் கூடியது என்றும், எதிர்ப்படும் வான் பாதுகாப்பு அமைப்புகளை தாண்டி இலக்கை தாக்கக் கூடியது என்றும் இரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை கூறுகிறது.

2021-ஆம் ஆண்டு, வடகொரியா அதன் உச்ச தலைவர் கிம் ஜாங்-உன் முன்னிலையில் ஏவுகணைச் சோதனை மேற்கொண்டது.

தாங்கள் தயாரித்த ஹைப்பர்சோனிக் ஏவுகணை 1,000 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இலக்கை "துல்லியமாக" தாக்கியதாக வடக்கொரியா கூறியது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.