Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தென் ஆபிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடர்; இலங்கை குழாத்தில் ஓஷத, நிஷான்

image

- நெவில் அன்தனி

தென் ஆபிரிக்காவுக்கு எதிராக இந்த மாத இறுதியில் ஆரம்பமாகவுள்ள 2 போட்டிகள் கொண்ட ஐசிசி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரை முன்னிட்டு தெரிவு செய்யப்பட்ட 17 வீரர்களைக் கொண்ட இலங்கை டெஸ்ட் குழாத்தில் துடுப்பாட்ட வீரர் ஓஷத பெர்னாண்டோ, சுழல்பந்துவீச்சாளர் நிஷான் பீரிஸ் ஆகியோர் இடம்பெறுகின்றனர்.

நியூஸிலாந்துக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் பிரகாசிக்கத் தவறிய ரமேஷ் மெண்டிஸ் நீக்கப்பட்டுள்ளார்.

அணித் தலைவர் தனஞ்சய டி சில்வா உட்பட 10 வீரர்கள் ஏற்கனவே தென் ஆபிரிக்கா சென்று அங்கு நீல் மெக்கென்ஸியின் கீழ் விசேட பயிற்சிகளில் ஈடுபட்டுள்ளனர்.

எஞ்சிய 7 வீரர்கள் 22ஆம் திகதி வெள்ளிக்கிழமை இங்கிருந்து தென் ஆபிரிக்காவுக்கு புறப்பட்டுச் செல்லவுள்ளனர்.

இலங்கைக்கும் தென் ஆபிரிக்காவுக்கும் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி டேர்பன், கிங்ஸ்மீட் விiயாட்டரங்கில் நவம்பர் 27ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

தொடர்ந்து 2ஆவதும் கடைசியுமான டெஸ்ட் போட்டி கெபெர்ஹா, சென். ஜோர்ஜஸ் பார்க் அரங்கில் டிசம்பர் 2ஆம் திகதி ஆரம்பமாகும்.

இலங்கை டெஸ்ட் குழாம்

தனஞ்சய டி சில்வா (தலைவர்)

பெத்தும் நிஸ்ஸன்க

திமுத் கருணாரட்ன

தினேஷ் சந்திமால்

ஏஞ்சலோ மெத்யூஸ்

குசல் மெண்டிஸ்

கமிந்து மெண்டிஸ்

ஓஷத பெர்னாண்டோ

சதீர சமரவிக்ரம

ப்ரபாத் ஜயசூரிய

நிஷான் பீரிஸ்

லசித் எம்புல்தெனிய

மிலன் ரத்நாயக்க

அசித்த பெர்னாண்டோ

விஷ்வா பெர்னாண்டோ

லஹிரு குமார

கசுன் ராஜித்த

https://www.virakesari.lk/article/199136

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான தென் ஆபிரிக்க குழாத்தில் மீண்டும் டெம்பா

image

நெவில் அன்தனி

இலங்கைக்கு எதிராக அடுத்த வாரம் ஆரம்பமாகவுள்ள இரண்டு போட்டிகள் கொண்ட உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடருக்கான தென் ஆபிரிக்க குழாத்தில் மீண்டும் அணித் தலைவர் டெம்பா பவுமா இணைந்துகொண்டுள்ளார்.

இடது முழங்கையில் காயமடைந்ததால் அண்மையில் நடைபெற்ற பங்களாதேஷுக்கு எதிரான தொடரில் விளையாடாமல் இருந்த வழமையான அணித் தலைவர் டெம்பா பவுமா பூரண குணமடைந்ததை அடுத்து குழாத்தில் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளார்.

இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரை முன்னிட்டு 14 வீரர்களைக் கொண்ட குழாத்தை தென் ஆபிரிக்கா நேற்றுமுன்தினம் அறிவித்தது.

பங்களாதேஷுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடியவர்களில் மேலும் இருவர் நீக்கப்பட்டு மார்க்கோ ஜென்சென், ஜெரால்ட் கோயெட்ஸி ஆகியோர் அணிக்கு மீளழைக்கப்பட்டுள்ளனர்.

இந்தியாவுக்கு எதிராக இந்த வருட முற்பகுதியில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் விளையாடிய பின்னர் அவர்கள் இருவரும் முதல் தடவையாக டெஸ்ட் குழாத்தில் இடம்பெறுகின்றனர்.

'டெம்பா குணமடைந்த பிறகு அணியை மீண்டும் வழிநடத்த இணைந்திருப்பது மிகவும் மகிழ்ச்சி தருகிறது. அவரது தலைமைத்துவமும் திறிமையும் அணிக்கு விலைமதிப்பற்றவை' என தென் ஆபிரிக்க டெஸ்ட் அணியின் தலைமைப் பயிற்றுநர் ஷுக்ரி கொன்ரட் தெரிவித்தார்.

'டெம்பா ஓய்வில் இருந்தபோது பங்களாதேஷ் அணிக்கு எதிரான தொடரில் அணித் தலைமையைப் பொறுப்பேற்று அதனை வெற்றிகரமாக நிறைவேற்றிய ஏய்டனுக்கு நன்றிகூற விரும்புகிறேன்' எனவும் அவர் குறிப்பிட்டார்.

வேகப்பந்துவீச்சாளர்களான ஜென்சன், கோயெட்ஸீ ஆகியோரது மீள்வருகையும் அணிக்கு வலு சேர்ப்பதாக அவர் தெரிவித்தார்.

தென் ஆபிரிக்க ஆடுகளங்கள் வேகப்பந்துவீச்சுக்கு சாதகமாக அமையும் என்பதால் கெகிசோ ரபாடா, டேன் பேட்டர்சன், வியான் முல்டர் ஆகியோரும் குழாத்தில் இடம்பெறுகின்றனர். இதற்கு அமைய 5 பந்துவீச்சாளர்கள் குழாத்தில் இடம்பெறுகின்றனர்.

அதேவேளை, கேஷவ் மஹாராஜ், சேனுரன் முத்துசாமி ஆகிய இருவரும் பிரதான சுழல்பந்துவீச்சாளர்களாக அணியில் இடம்பெறுகின்றனர்.

நடப்பு உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டிக்கு தகுதிபெறுவதற்கான வாய்ப்புகள் இலங்கைக்கும் தென் ஆபிரிக்காவுக்கும் இருப்பதால் இந்த டெஸ்ட் தொடர் இரண்டு அணிகளுக்கும் முக்கியம் வாய்ந்ததாக அமையவுள்ளது.

டெஸ்ட் சம்பியன்ஷிப் அணிகளுக்கான தரவரிசையில் அவுஸ்திரேலியா 62.50 சதவீத புள்ளிகளுடன் முதலாம் இடத்திலும் இந்தியா 58.33 சதவீத புள்ளிகளுடன் இரண்டாம் இடத்திலும் இலங்கை 55.56 சதவீத புள்ளிகளுடன் மூன்றாம் இடத்திலும் நியூஸிலாந்து 54.55 சதவீத புள்ளிகளுடன் நான்காம் இடத்திலும் தென் ஆபிரிக்கா 54.17 சதவீத புள்ளிகளுடன் ஐந்தாம் இடத்திலும் இருக்கின்றன.

தென் ஆபிரிக்காவுக்கும் இலங்கைக்கும் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி டேர்பனில் எதிர்வரும் 27ஆம் திகதியிலிருந்து 31ஆம் திகதிவரையும் இரண்டாவது  டெஸ்ட்   போட்டி போர்ட் எலிஸபெத்தில் எதிர்வரும் டிசம்பர் 5ஆம் திகதியிலிருந்து 9ஆம் திகதிவரையும் நடைபெறவுள்ளது.

தென் ஆபிரிக்கா டெஸ்ட் குழாம்

டெம்பா பவுமா (தலைவர்)

டேவிட் பெடிங்ஹாம்

ஜெரால்ட் கோயெட்ஸீ

டோனி டி ஸோர்ஸி

மார்க்கோ ஜென்சன்

கேஷவ் மஹராஜ்

ஏய்டன் மார்க்ராம்

வியான் முல்டர்

சேனுரன் முத்துசாமி

டேன் பெட்டர்சன்

கெகிசோ ரபாடா

ட்ரைஸ்டன் ஸ்டப்ஸ்

ரெயான் ரிக்கெல்டன்

கய்ல் வெரின்

https://www.virakesari.lk/article/199290

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

முதலாவது டெஸ்ட் - நாணய சுழற்சியில் இலங்கை அணி வெற்றி

முதலாவது டெஸ்ட்- நாணய சுழற்சியில் இலங்கை அணி வெற்றி

இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி இன்று (27) Durban மைதானத்தில் இடம்பெறுகிறது.

அதற்கமைய, போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடுவதற்கு தீர்மானித்துள்ளது.

உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரில் இறுதிப் போட்டிக்கு முன்னேறுவதற்கு இந்த தொடர் இலங்கை அணிக்கு தீர்மானமிக்கதாகும்.

https://tamil.adaderana.lk/news.php?nid=196500

  • கருத்துக்கள உறவுகள்

முத‌ல் நாள் விளையாட்டு ம‌ழையால் த‌டை ப‌ட்டு இருக்கு

நாளைக்கும் சிறு நேர‌ம் ம‌ழையால் த‌டை ப‌ட‌லாம்

மீத‌ம் மூன்று நாளும் வெய்யில்.......................

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தொடர் மழையினால் முதல் நாள் ஆட்டம் 20.4 ஓவர்களுடன் முடிவு; தென் ஆபிரிக்கா 80 - 4 விக்; பந்துவிச்சில் இலங்கையர் அபாரம்

27 NOV, 2024 | 07:49 PM
image

(நெவில் அன்தனி)

இலங்கை - தென் ஆபிரிக்க அணிகளுக்கு இடையில் டேர்பன், கிங்ஸ்மீட் விளையாட்டரங்கில் இன்று புதன்கிழமை (27) ஆரம்பமான முதலாவது ஐசிசி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் போட்டியின் முதல் நாள் ஆட்டம் தொடர் மழை காரணமாக 20.4 ஓவர்களுடன் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது.

2711_kamindu_takes_a_catch_at_slips.png

அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட தென் ஆபிரிக்கா பகல் போசன இடைவேளைக்கு சற்று முன்னர் மழையினால் ஆட்டம் தடைப்பட்டபோது அதன் முதல் இன்னிங்ஸில் 4 விக்கெட்களை இழந்து 80 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.

ஏய்டன் மார்க்ராம் (9), டோனி டி ஸோர்ஸி (4) ஆகிய இரண்டு ஆரம்ப வீரர்களும் ஸ்லிப் நிலையில் பிடிகொடுத்து ஆட்டம் இழந்தனர்.

அசித்த பெர்னாண்டோவின் பந்துவீச்சில் மார்க்ராமின் பிடியை ஏஞ்சலோ மெத்யூஸும் விஷ்வா பெர்னாண்டோவின் பந்துவீச்சில் டி ஸோர்ஸியின் பிடியை கமிந்த மெண்டிஸும் எடுத்தனர்.

2711rain_rain_rain.png

தொடர்ந்து ட்ரைஸ்டன் ஸ்டப்ஸ் (16), அணித் தலைவர் டெம்பா பவுமா ஆகிய இருவரும் 3ஆவது விக்கெட்டில் 32 ஓட்டங்களைப் பகிர்ந்திருந்தபோது ஸ்டப்ஸ் ஆட்டம் இழந்தார்.

லஹிரு குமாரவின் பந்துவீச்சில் ஸ்லிப் நிலையில் திமுத் கருணாவிடம் ஸ்டப்ஸ் பிடிகொடுத்தார். (46 - 3)

மொத்த எண்ணிக்கை 54 ஓட்டங்களாக இருந்தபோது லஹிர குமாவின் பந்துவீச்சில் டேவிட் பெடிங்ஹாம் (4) போல்ட் ஆனார்.

இதனிடையே ஏஞ்சலோ மெத்யூஸ் மிகத் துல்லியமாக இரண்டு ஓட்டமற்ற ஓவர்களை வீசினார்.

பகல் போசன இடைவேளைக்குப் பின்னர் மழை தொடர்ந்து பெய்ததால் பிற்பகல் 3.00 மணியளவில் முதல் நாள் ஆட்டம் முடிவுக்குக் கொண்டுவரப்படுவதாக மத்தியஸ்தர்கள் அறிவித்தனர்.

ஆட்டும் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டபோது தென் ஆபிரிக்க அணித் தலைவர் டெம்பா பவுமா 28 ஓட்டங்களுடனும் கய்ல் வெரின் 9 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காதிருந்தனர்.

பந்துவீச்சில் லஹிரு குமார 35 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் விஷ்வா பெர்னாண்டோ 17 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டையும் அசித்த பெர்னாண்டோ 22 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

https://www.virakesari.lk/article/199884

  • கருத்துக்கள உறவுகள்

முதல் டெஸ்ட் போட்டியில் தென் ஆபிரிக்கா வெல்ல போகுது ஹா ஹா😁....................

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

42 ஓட்டங்களுக்கு சுருண்ட இலங்கை அணி

42 ஓட்டங்களுக்கு சுருண்ட இலங்கை அணி

தென்னாபிரிக்காவுடன் இடம்பெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி தனது முதலாவது இன்னிங்ஸில் 42 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுக்களையும் இழந்துள்ளது.

போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்திருந்தது. 

அதற்கமைய, தனது முதலாவது இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க அணி, சகல விக்கட்டுக்களையும் இழந்து 191 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.

தென்னாபிரிக்க அணி சார்பாக அதிகபட்சமாக அவ்வணியின் தலைவர் பவுமா 70 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார்.

இலங்கை அணியின் பந்துவீச்சில் அசித பெர்னாண்டோ மற்றும் லஹிரு குமார ஆகியோர் தலா 3 விக்கட்டுக்கள் வீதம் கைப்பற்றினர்.

இந்நிலையில், தனது முதலாவது இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 42 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுக்களையும் இழந்தது.

இலங்கை அணி சார்பாக அதிகபட்சமாக கமிந்து மெண்டிஸ் 13 ஓட்டங்களைப் பெற்றுக் கொடுத்தார்.

தென்னாபிரிக்க அணியின் பந்துவீச்சில் மார்கோ ஜென்சன் 7 விக்கட்டுக்களை கைப்பற்றியமை குறிப்பிடத்தக்கது.

அதன்படி, தென்னாபிரிக்க அணி இலங்கை அணியை விட 149 ஓட்டங்கள் முன்னிலையில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

டெஸ்ட் போட்டியொன்றில் இலங்கை அணி பெற்றுக்கொண்ட மிகக் குறைந்த ஓட்ட எண்ணிக்கை இதுவாகும்.

முன்னதாக ஆகக்குறைந்த ஓட்ட எண்ணிக்கையாக பாகிஸ்தான் அணிக்கு எதிராக 1994ஆம் ஆண்டு 71 ஓட்டங்களை இலங்கை அணி பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

https://tamil.adaderana.lk/news.php?nid=196561

  • கருத்துக்கள உறவுகள்
55 minutes ago, ஏராளன் said:

42 ஓட்டங்களுக்கு சுருண்ட இலங்கை அணி

42 ஓட்டங்களுக்கு சுருண்ட இலங்கை அணி

தென்னாபிரிக்காவுடன் இடம்பெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி தனது முதலாவது இன்னிங்ஸில் 42 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுக்களையும் இழந்துள்ளது.

போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்திருந்தது. 

அதற்கமைய, தனது முதலாவது இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க அணி, சகல விக்கட்டுக்களையும் இழந்து 191 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.

தென்னாபிரிக்க அணி சார்பாக அதிகபட்சமாக அவ்வணியின் தலைவர் பவுமா 70 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார்.

இலங்கை அணியின் பந்துவீச்சில் அசித பெர்னாண்டோ மற்றும் லஹிரு குமார ஆகியோர் தலா 3 விக்கட்டுக்கள் வீதம் கைப்பற்றினர்.

இந்நிலையில், தனது முதலாவது இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 42 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுக்களையும் இழந்தது.

இலங்கை அணி சார்பாக அதிகபட்சமாக கமிந்து மெண்டிஸ் 13 ஓட்டங்களைப் பெற்றுக் கொடுத்தார்.

தென்னாபிரிக்க அணியின் பந்துவீச்சில் மார்கோ ஜென்சன் 7 விக்கட்டுக்களை கைப்பற்றியமை குறிப்பிடத்தக்கது.

அதன்படி, தென்னாபிரிக்க அணி இலங்கை அணியை விட 149 ஓட்டங்கள் முன்னிலையில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

டெஸ்ட் போட்டியொன்றில் இலங்கை அணி பெற்றுக்கொண்ட மிகக் குறைந்த ஓட்ட எண்ணிக்கை இதுவாகும்.

முன்னதாக ஆகக்குறைந்த ஓட்ட எண்ணிக்கையாக பாகிஸ்தான் அணிக்கு எதிராக 1994ஆம் ஆண்டு 71 ஓட்டங்களை இலங்கை அணி பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

https://tamil.adaderana.lk/news.php?nid=196561

ப‌டு கேவ‌ல‌ம் அண்ணா

அனுப‌ வீர‌ர்க‌ள் ஆன‌

ஜ‌ஞ்சிலோ ம‌த்தியூஸ் டினேஸ் ச‌ண்டிமால் போன்ர‌ திற‌மையான‌ வீர‌ர்க‌ள் இருந்தும் இவ‌ர்க‌ளால் பெரிய‌ இஸ்கோர் அடிக்க‌ முடிய‌ வில்லை........................ 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, வீரப் பையன்26 said:

ப‌டு கேவ‌ல‌ம் அண்ணா

அனுப‌ வீர‌ர்க‌ள் ஆன‌

ஜ‌ஞ்சிலோ ம‌த்தியூஸ் டினேஸ் ச‌ண்டிமால் போன்ர‌ திற‌மையான‌ வீர‌ர்க‌ள் இருந்தும் இவ‌ர்க‌ளால் பெரிய‌ இஸ்கோர் அடிக்க‌ முடிய‌ வில்லை........................ 

https://www.youtube.com/watch?v=Mo2quoPY4pM

வேகப்பந்துவீச்சிற்கு சாதகமான மைதானம் போல!

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, ஏராளன் said:

https://www.youtube.com/watch?v=Mo2quoPY4pM

வேகப்பந்துவீச்சிற்கு சாதகமான மைதானம் போல!

ம‌ழை கார‌ன‌மாய் பிச் மாறு ப‌ட்டு இருக்க‌ கூடும் அண்ணா.........................

  • கருத்துக்கள உறவுகள்

இல‌ங்கை அணி தோல்வி உறுதி

இனி வ‌ரும் இர‌ண்டு நாளில் ம‌ழை பெய்யாது

தென் ஆபிரிக்கா சிம்பிலா வென்று விடுவின‌ம்........................

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஜென்சனின் 7 விக்கெட் குவியலால் இலங்கை 42 ஓட்டங்களுக்கு சுருண்டது; இலங்கையின் 42 வருட டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் பதிவான மிகக் குறைந்த மொத்த எண்ணிக்கை

29 NOV, 2024 | 12:11 AM
image

(நெவில் அன்தனி)

டேர்பன், கிங்ஸ்மீட் விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் தென் ஆபிரிக்காவுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் மார்க்கோ ஜென்சனின் வேகப்பந்துவீச்சில் சிக்கித் திணறிய இலங்கை அதன் முதல் இன்னிங்ஸில் சகல விக்கெட்களையும் இழந்து 42 ஓட்டங்களுக்கு சுருண்டது.

இலங்கை தனது 42 வருட டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ஓர் இன்னிங்ஸில் பெற்ற மிகக் குறைந்த மொத்த எண்ணிக்கை இதுவாகும்.

பாகிஸ்தானுக்கு எதிராக 1994ஆம் ஆண்டு கண்டி அஸ்கிரிய விளையாட்டரங்கில் இலங்கை பெற்ற 71 ஓட்டங்களே அதன் முந்தைய குறைந்த மொத்த எண்ணிக்கையாகும்.

2811_sl_lowest_score.png

இந்தப் போட்டியில் தென் ஆபிரிக்காவின் இரண்டாவது இன்னிங்ஸில் 7 விக்கெட்கள் மீதம் இருக்க அவ்வணி 281 ஓட்டங்களால் முன்னிலையில் இருக்கிறது. 

இதன் காரணமாக உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தகுதிபெறும் இலங்கையின் வாய்ப்பு ஊசலாட ஆரம்பித்துள்ளது.

ஜென்சனின் பந்துவீச்சில் ஆட்டம் இழந்த 7 இலங்கை வீரர்களில் நால்வர் ஓட்டம் பெறாததுடன் மூவர் ஒற்றை இலக்கங்களைப் பெற்றனர்.

துடுப்பாட்டத்தில் கமிந்து மெண்டிஸ் (13), லஹிரு குமார (10 ஆ.இ.) ஆகிய இருவரே இரட்டை இலக்க எண்ணிக்கைகளைப் பெற்றனர்.

தனஞ்சய டி சில்வா (7), பெத்தும் நிஸ்ஸன்க (3), திமுத் கருணரட்ன (2), ஏஞ்சலோ மெத்யூஸ் (1) ஆகிய நால்வர் ஒற்றை இலக்க எண்ணிக்கைகளைப் பெற்றதுடன் தினேஷ் சந்திமால், குசல் மெண்டிஸ், ப்ரபாத் ஜயசூரிய, விஷ்வா பெர்னாண்டோ, அசித்த பெர்னாண்டோ ஆகியோர் ஓட்டங்கள் பெறாமல் களம் விட்டகன்றனர்.

2811_marco_jansen...png

பந்துவீச்சில் மார்க்கோ ஜென்சன் ஒரு ஓட்டமற்ற ஓவர் அடங்கலாக 6.5 ஓவர்களில் 13 ஓட்டங்களைக் கொடுத்து 7 விக்கெட்களை வீழ்த்தினார்.

அத்துடன் ஜெரால்ட் கொயெட்ஸீ 18 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் கெகிசோ ரபாடா 10 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

முன்னதாக போட்டியின் இரண்டாம் நாளான இன்றைய தினம் தனது முதல் இன்னிங்ஸை 4 விக்கெட் இழப்புக்கு 80 ஓட்டங்களிலிருந்து தொடர்ந்த தென் ஆபிரிக்கா சகல விக்கெட்களையும் இழந்து 191 ஓட்டங்களைப் பெற்றது.

அணித் தலைவர் டெம்பா பவுமா 70 ஓட்டங்களையும் கேஷவ் மஹாராஜ் 24 ஓட்டங்களையும் பெற்றனர். அவர்கள் இருவர் மாத்திரமே 20 ஓட்டங்களுக்கு மேல் பெற்றனர்.

பந்துவீச்சில் அசித்த பெர்னாண்டோ 44 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் லஹிரு குமார 70 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் ப்ரபாத் ஜயசூரிய 24 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் விஷ்வா பெர்னாண்டோ 35 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

முதல் இன்னிங்ஸ் நிறைவில் 149 ஓட்டங்களால் முன்னிலையில் இருந்த தென் ஆபிரிக்கா, இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் அதன் இரண்டாவது இன்னிங்ஸில் 3 விக்கெட்களை இழந்து 132 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.

இதற்கு அமைய இரண்டாவது இன்னிங்ஸில் 7 விக்கெட்கள் மீதம் இருக்க, தென் ஆபிரிக்கா 281 ஓட்டங்களால் முன்னிலையில் இருக்கிறது.

ஏய்டன் மார்க்ராம் 47 ஓட்டங்களைப் பெற்றதுடன் டெம்பா பவுமா 24 ஓட்டங்களுடனும் ட்ரைஸ்டன் ஸ்டப்ஸ் 17 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காதுள்ளனர்.

பந்துவீச்சில் ப்ரபாத் ஜயசூரிய 48 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களைக் கைப்பற்றினார்.

ப்ரபாத் ஜயசூரிய 100 டெஸ்ட் விக்கெட்கள்

இந்தப் போட்டியில் இலங்கை மோசமான நிலையில் இருக்கின்றபோதிலும் இரண்டாவது இன்னிங்ஸில் டோனி டி ஸோர்ஸியின் விக்கெட்டைக் கைப்பற்றியதன் மூலம் ப்ரபாத் ஜயசூரிய தனது 17ஆவது டெஸ்ட் போட்டியில் 100 விக்கெட்களைப் பூர்த்திசெய்தார்.

2811_prabath_jaysuriya.png

இதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இரண்டாவது மிகக் குறைந்த போட்டிகளில் 100 விக்கெட்களைப் பூர்த்தி செய்த வீரர்கள் வரிசையில்  சார்ளி டேர்னர், சிட்னி பார்ன்ஸ், க்லெரி க்ரிம்மெட், யாசிர் ஷா ஆகியோருடன் ப்ரபாத் ஜயசூரிய இணைந்துகொண்டார்.

டெஸ்ட் கிரிக்கெட்டில் மிகக் குறைந்த 16 போட்டிகளில் 100 விக்கெட்களைப் பூர்த்திசெய்த வீரர் என்ற சாதனை தொடர்ந்தும் ஜோர்ஜ் லோமானுக்கு சொந்தமாக இருக்கிறது. 1896இல் நிலைநாட்டப்பட்ட இந்த சாதனை 128 வருடங்களாக முறியடிக்கப்படாமல் இருக்கிறது.

மார்க்கோ ஜென்சன் அபாரம்

2811_marco_jansen.png

இந்தப் போட்டியில் ஜென்சன் 41 பந்துகளில் 7 விக்கெட்களை வீழ்த்தியதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் மிகக் குறைந்த பந்துகளில் 7 விக்கெட்களை வீழ்த்திய இரண்டாவது வீரரானார். 120 வருடங்களுக்கு முன்னர் 1904இல் இங்கிலாந்துக்கு எதிரான மெல்பர்ன் டெஸ்ட் போட்டியில் அவுஸ்திரேலியாவின் ஹியூ ட்ரம்ப்லின் 41 பந்துகளில் 28  ஓட்டங்களுக்கு  7 விக்கெட்களை வீழ்த்தி இந்த மைல்கல் சாதனையை முதலாவது வீரராக நிலைநாட்டியிருந்தார்.

https://www.virakesari.lk/article/199964

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வெற்றியின் விளிம்பில் தென் ஆபிரிக்கா; டேர்பனில் முதலாவது தோல்வியை எதிர்கொண்டுள்ள இலங்கை

30 NOV, 2024 | 12:20 AM
image

(நெவில் அன்தனி)

தென் ஆபிரிக்காவுக்கு எதிராக டேர்பன் கிங்ஸ்மீட் விளையாட்டரங்கில் இதற்கு முன்னர் நடைபெற்ற 3 டெஸ்ட் போட்டிகளில் தோல்வி அடையாமல் இருந்த இலங்கை முதல் தடவையாக  இந்த விளையாட்டரங்கில் தோல்வியை நெருங்கிக் கொண்டிருக்கிறது.

இரண்டு அணிகளுக்கும் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் 2ஆம், 3ஆம் நாட்களில் ஆதிக்கம் செலுத்திய தென் ஆபிரிக்கா, 2 போட்டிகள் கொண்ட தொடரில் 1 - 0 என முன்னிலை அடையக்கூடிய பலமான நிலையில் இருக்கிறது.

அத்துடன் உலக டெஸ்ட் சம்பயின்ஷிப் இறுதிப் போட்டிக்கு தகுதிபெறும் இலங்கையின் எதிர்பார்ப்பும் கேள்விக்குறியாகியுள்ளது.

தென் ஆபிரிக்காவினால் நிர்ணயிக்கப்பட்ட 516 ஒட்டங்கள் என்ற மிகவும் கடினமான வெற்றி இலக்கை நோக்கி 2ஆவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிவரும் இலங்கை, இன்றைய 3ஆம் நாள் ஆட்டநேர முடிவில் 5 விக்கெட்களை இழந்து 103 ஓட்டங்களைப் பெற்றுள்ளது.

முன்வரிசை வீரர்கள் பெத்தும் நிஸ்ஸன்க (23), திமுத் கருணாரட்ன (4), ஏஞ்சலோ மெத்யூஸ் (25), கமிந்து மெண்டிஸ் (10) ஆகியோருடன் இராக்காப்பாளன் ப்ரபாத் ஜயசூரிய (1) ஆகியோரே ஆட்டம் இழந்தவர்களாவர்.

தினேஷ் சந்திமால் 29 ஓட்டங்களுடனும் அணித் தலைவர் தனஞ்சய டி சில்வா ஓட்டம் பெறாமலும் ஆட்டம் இழக்காதுள்ளனர்.

அவர்ளைவிட பிரதான வீரர்களில் குசல் மெண்டிஸ் மாத்திரமே எஞ்சியுள்ளார்.

பந்துவீச்சில் மாக்கோ ஜென்சென் 22 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கெகிசொ ரபாடா 34 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் ஜெரால்ட் கோயெட்ஸீ 39 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

முன்னதாக போட்டியின் மூன்றாவது நாளான இன்று காலை தனது 2ஆவது இன்னிங்ஸை 3 விக்கெட் இழப்புக்கு 132 ஓட்டங்களிலிருந்து தொடர்ந்த தென் ஆபிரிக்கா, 5 விக்கெட்களை இழந்து 366 ஓட்டங்களைப் பெற்றிருந்தபோது துடுப்பாட்டத்தை நிறுத்திக்கொண்டது.

ட்ரைஸ்டன் ஸ்டப்ஸ், அணித் தலைவர் டெம்பா பவுமா ஆகிய இருவரும் மிகவும் பொறுமையுடன் துடுப்பெடுத்தாடி சதங்கள் குவித்ததுடன் 4ஆவது விக்கெட்டில் 249 ஓட்டங்களைப் பகிர்ந்தனர்.

இலங்கைக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளில் தென் ஆபிரிக்கா சார்பாக 4ஆவது விக்கெட்டில் பகிரப்பட்ட அதிசிறந்த இணைப்பாட்டம் இதுவாகும்.

ட்ரைஸ்டன் ஸ்டப்ஸ் 221 பந்துகளை எதிர்கொண்டு 9 பவுண்டறிகள், 2 சிக்ஸ்களுடன் 122 ஓட்டங்களையும் டெம்பா பவுமா 228 பந்துகளை எதிர்கொண்டு 9 பவுண்டறிகளுடன் 113 ஓட்டங்களையும் பெற்றனர்.

தனது ஆட்டம் இழப்புடன் இரண்டாவது இன்னிங்ஸை நிறுத்திக்கொள்வதாக டெம்பா பவுமா அறிவித்தார்.

பந்துவீச்சில் விஷ்வா பெர்னாண்டோ 64 ஓட்டங்களுக்கு 2 விக்pகெட்களையும் ப்ரபாத் ஜயசூரிய 132 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

முதலாவது இன்னிங்ஸில் தென் ஆபிரிக்கா 191 ஓட்டங்களையும் இலங்கை 42 ஓட்டங்களையும் பெற்றன.

https://www.virakesari.lk/article/200049

  • கருத்துக்கள உறவுகள்

இல‌ங்கை ப‌டு தோல்வி☹️.................

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தென் ஆபிரிக்காவுடனான தோல்வியை அடுத்து டெஸ்ட் சம்பியன்ஷிப்பில் 5ஆம் இடத்திற்கு பின்தள்ளப்பட்டது இலங்கை

30 NOV, 2024 | 10:27 PM
image

(நெவில் அன்தனி)

தென் ஆபிரிக்காவிடம் டேர்பன் கிங்ஸ்மீட் விளையாட்டரங்கில் முதல் தடவையாக தோல்வி அடைந்ததால் உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் அணிகள் நிலையில் இலங்கை 5ஆம் இடத்திற்கு பின் தள்ளப்பட்டது.

அப் போட்டியில் 233 ஓட்டங்களால் வெற்றிபெற்ற தென் ஆபிரிக்கா 3 இடங்கள் முன்னேறி 2ஆம் இடத்தை அடைந்துள்ளதுடன் உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் விளையாடுவதற்கான தனது வாய்ப்பை சற்று அதிகரித்துக்கொண்டது.

இலங்கைக்கு அதிர்ஷ்டகரமான விளையாட்டரங்கு என கருதப்பட்ட கிங்ஸ்மீட் மைதானத்தில் இதற்கு முன்னர் 3 போட்டிகளில் விளையாடிய இலங்கை 2 வெற்றிகளை ஈட்டியிருந்ததுடன் ஒரு போட்டியை வெற்றிதோல்வியின்றி முடித்துக்கொண்டிருந்தது. ஆனால், இந்த மைதானத்தில் இம்முறை இலங்கைக்கு பெரும் ஏமாற்றமே கிடைத்தது.

தென் ஆபிரிக்காவின் வெற்றியில் மாக்கோ ஜென்செனின் 11 விக்கெட் குவியல், ட்ரைஸ்டன் ஸ்டப்ஸ், அணித் தலைவர் டெம்பா பவுமா ஆகியோர் குவித்த சதங்கள் என்பன முக்கிய பங்காற்றின.

இந்த முதலாவது டெஸ்ட் போட்டியில் 516 ஓட்டங்களை வெற்றி இலக்காக இலங்கைக்கு நிர்ணயித்த தென் ஆபிரிக்கா 3ஆம் நாளன்று 5 விக்கெட்களைக் கைப்பற்றியிருந்ததால் நான்காம் நாள் வேளையோடு வெற்றியை ஈட்டிவிடலாம் என எண்ணியிருக்கக்கூடும்.

ஆனால், முன்னாள் அணித் தலைவர் தினேஷ் சந்திமால், சமகால அணித் தலைவர் தனஞ்சய டி சில்வா ஆகிய இருவரும் குவித்த அரைச் சதங்களும் குசல் மெண்டிஸின் நிதானமான துடுப்பாட்டமும் தென் ஆபிரிக்காவின் வெற்றியை தாமதம் அடையச் செய்தன.

போட்டியின் நான்காம் நாளான இன்று காலை தனது இரண்டாவது இன்னிங்ஸை 103 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்களிலிருந்து தொடர்ந்த இலங்கை சகல விக்கெட்களையும் இழந்து 282 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது.

கிட்டத்தட்ட 5 மணித்தியாலங்கள் துடுப்பெடுத்தாடிய தினேஷ் சந்திமால் 174 பந்துகளை எதிர்கொண்டு 12 பவுண்டறிகளுடன் 83 ஓட்டங்களைப் பெற்றார்.

சற்று ஆக்ரோஷமாக துடுப்பெடுத்தாடிய தனஞ்சய டி சில்வா 81 பந்துகளை எதிர்கொண்டு 9 பவுண்டறிகள், ஒரு சிக்ஸுடன் 59 ஓட்டங்களைப் பெற்றார்.

அவர்கள் இருவரும் 6ஆவது விக்கெட்டில் 95 ஓட்டங்களைப் பகிர்ந்தனர்.

தனஞ்சய ஆட்டம் இழந்த பின்னர் தினேஷ் சந்திமாலும் குசல் மெண்டிஸும் 7ஆவது விக்கெட்டில் ஜோடி சேர்ந்து 76 ஓட்டங்களைப் பகிர்ந்தனர்.

குசல் மெண்டிஸ் 9 பவுண்டறிகளுடன் 48 ஓட்டங்களைப் பெற்றார்.

பந்துவீச்சில் மாக்கோ ஜென்சென் 73 ஓட்ங்களுக்கு 4 விக்கெட்களையும் கெகிசோ ரபாடா 65 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

ஜெரால்ட் கோயெட்ஸீ, கேஷவ் மஹாராஜ் ஆகிய இருவரும் 67 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்கள் என்ற ஒரே விதமான பந்துவீச்சுப் பெறுதிகளைப் பதிவுசெய்தனர்.

இந்தப் போட்டியில் மொத்தமாக 86 ஓட்டங்களுக்கு 11 விக்கெட்களைக் கைப்பற்றிய மாக்கோ ஜென்சென் தனது அதிசிறந்த டெஸ்ட் பந்துவீச்சுப் பெறுதியைப் பதிவுசெய்ததுடன் ஆட்டநாயகன் விருதையும் வென்றெடுத்தார்.

தென் ஆபிரிக்க அணியில் வியான் முல்டர் உபாதைக்குள்ளானதால் 5ஆவது பந்துவீச்சாளர் இல்லாமல் விளையாட நேரிட்டது.

கடந்த புதன்கிழமை ஆரம்பமாகி நான்கு நாட்களுக்குள் முடிவடைந்த இந்த டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் முதலாவது இன்னிங்ஸில் தென் ஆபிரிக்கா 191 ஓட்டங்களையும் இலங்கை 42 ஓட்டங்களையும் பெற்றன.

தென் ஆபிரிக்கா தனது இரண்டாவது இன்னிங்ஸை 5 விக்கெட் இழப்புக்கு 366 ஓட்டங்களுடன் நிறுத்திக்கொண்டது.

இந்தப் போட்டி முடிவை அடுத்து உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் அணிகள் நிலையில் அவுஸ்திரேலியா, இலங்கை, நியூஸிலாந்து ஆகிய அணிகளை பின்தள்ளிய தென் ஆபிரிக்கா 5ஆம் இடத்திலிருந்து 2ஆம் இடத்திற்கு தாவியுள்ளது.

இதன் மூலம் உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தகுதியைப் பெறுவதற்கான தனது வாய்ப்பை தென் ஆபிரிக்கா சற்று அதிகரித்துக்கொண்டது.

இலங்கையின் உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப் போட்டி வாய்ப்பு கேள்விக்குறியாகிவிட்டது.

எண்ணிக்கை சுருக்கம்

தென் ஆபிரிக்கா 1ஆவது இன்: சகலரும் ஆட்டம் இழந்து 191 (டெம்பா பவுமா 70, கேஷவ் மஹாராஜ் 24, ட்ரைஸ்டன் ஸ்டப்ஸ் 16, அசித்த பெர்னாண்டோ 44 - 3 விக்., லஹிரு குமார 70 - 3 விக்., ப்ராபத் ஜயசூரிய 24 - 2 விக்., விஷ்வா பெர்னாண்டோ 35 - 2 விக்.)

இலங்கை 1ஆவது இன்: 1ஆவது இன்: சகலரும் ஆட்டம் இழந்து 42 (கமிந்து மெண்டிஸ் 13, லஹிரு குமார 10 ஆ.இ., மாக்கோ ஜென்சென் 13 - 7 விக்., ஜெரால்ட் கோயெட்ஸீ 18 - 2 விக்., கெகிசோ ரபாடோ 10 - 1 விக்.)

தென் ஆபிரிக்கா 2ஆவது இன்: 366 - 5 விக். டிக்ளயாட் (ட்ரைஸ்டன் ஸ்டப்ஸ் 122, டெம்பா பவுமா 113, ஏய்டன் மார்க்ராம் 47, டேவிட் பெடிங்ஹாம் 21 ஆ.இ., உதிரிகள் 31, விஷ்வா பெர்னாண்டோ 64 - 2 விக்., ப்ரபாத் ஜயசூரிய 132 - 2 விக்.)

இலங்கை 2ஆவது இன்: சகலரும் ஆட்டம் இழந்து 282 (தினேஷ் சந்திமால் 83, தனஞ்சய டி சில்வா 59, குசல் மெண்டிஸ் 48, ஏஞ்சலோ மெத்யூஸ் 25, மாக்கோ ஜென்சென் 73 - 4 விக்., கெகிசோ ரபாடா 65 - 2 விக்., ஜெரால்ட் கோயெட்ஸீ 67 - 2 விக்., கேஷவ் மஹாராஜ் 67 - 2 விக்.)

3011_dinesh_chandimal_sl_vs_sa.png

3011_marco_jansen_sa_vs_sl.png

3011_test_championship_table.png

https://www.virakesari.lk/article/200106

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தென் ஆபிரிக்காவுக்கு உற்சாகமூட்டிய ரிக்ல்டன் சதம், பவுமா அரைச் சதம்

05 DEC, 2024 | 10:14 PM
image

(நெவில் அன்தனி)

இலங்கை - தென் ஆபிரிக்க அணிகளுக்கு இடையில் போர்ட் எலிஸபெத், சென் ஜோர்ஜ் பார்க் கெபெர்ஹா விளையாட்டரங்கில் வியாழக்கிழமை (05) ஆரம்பமான 2ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் தென் ஆபிரிக்கா அதன் முதல் இன்னிங்ஸில் 7 விக்கெட்களை இழந்து 269 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.

ஆரம்பத்தில் சிறு தடுமாற்றத்தை எதிர்கொண்ட தென் ஆபிரிக்காவுக்கு ரெயான் ரிக்ல்டன் குவித்த கன்னிச் சதம், அணித் தலைவர் டெம்பா பவுமா பெற்ற அரைச் சதம் என்பன உற்சாகத்தை கொடுத்தது.

உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் விளையாடுவதற்கான  தகுதியைப் பெறவேண்டும் என்ற குறிக்கோளுடன் இந்தத் தீர்மானம் மிக்க டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இரண்டு அணிகளும் மோதுகின்றன.

நாணய சுழற்சியில் வெற்றிபெற்றதும் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த தென் ஆபிரிக்காவின் ஆரம்பம் சிறப்பாக அமையவில்லை.

அசித்த பெர்னாண்டோ, லஹிரு குமார ஆகியோரின் திறமையான பந்துவிச்சுகளில் தடுமாற்றத்தை எதிர்கொண்ட தென் ஆபிரிக்கா ஒரு கட்டத்தில் 44 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களை இழந்திருந்தது.

டோனி டி ஸோர்ஸி (0), ஏய்டன் மார்க்ராம் (20), ட்ரைஸ்டன் ஸ்டப்ஸ் (4) ஆகிய முன்வரிசை வீரர்கள் துடுப்பாட்டத்தில் பிரகாசிக்கத் தவறினர்.

இந் நிலையில் ஜோடி சேர்ந்த ரெயான் ரிக்ல்டன், டெம்பா பவுமா ஆகிய இருவரும் நிதானத்துடன் துடுப்பெடுத்தாடி 4ஆவது விக்கெட்டில் 133 ஓட்டங்களைப் பகிர்ந்து அணிக்கு உற்சாகத்தைக் கொடுத்தனர்.

மிகத் திறமையாகத் துடுப்பெடுத்தாடிய டெம்பா பவுமா, தேநீர் இடைவேளைக்கு சற்று முன்னர் 78 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார்.

அவரைத் தொடர்ந்து டேவிட் பெடிங்டன் 6 ஓட்டங்களுடன் வெளியேறினார்.

எனினும் ரிக்ல்டன், கைல் வெரின் ஆகிய இருவரும் 6ஆவது விக்கெட்டில் 77 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியை சிறப்பான நிலையில் இட்டனர்.

ரிக்ல்டன் மிகவும் பொறுமையுடன் துடுப்பெடுத்தாடி  250 பந்துகளை எதிர்கொண்டு 11 பவுண்டறிகளுடன் 101 ஓட்டங்களைப் பெற்றார்.

அவர் ஆட்டம் இழந்த சற்று நேரத்தில் மார்க்கோ ஜென்சென் 4 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்க முதல் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது. 

கய்ல் வெரின் 48 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார்.

பந்துவீச்சில் லஹிரு குமார 54 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் அசித்த பெர்னாண்டோ 67 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் விஷ்வா பெர்னாண்டோ 46 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டையும் ப்ரபாத் ஜயசூரிய 74 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

https://www.virakesari.lk/article/200536

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

டெஸ்ட் கிரிக்கெட்டில் லஹிரு குமார 100 விக்கெட்கள்

06 DEC, 2024 | 03:35 PM
image

(நெவில் அன்தனி)

டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இலங்கை சார்பாக ஒன்பதாவது வீரராக லஹிரு குமார 100 விக்கெட்களைப் பூர்த்திசெய்து வரலாற்று ஏடுகளில் தனது பெயரைப் பொறித்துக்கொண்டார்.

தென் ஆபிரிக்காவுக்கு எதிரான போட்டியில் ஆரம்ப வீரர் ஏய்டன் மார்க்ராம் அவரது 100ஆவது விக்கெட்டாகப் பதவானது.

இந்தப் போட்டியில் லஹிரு குமார 4 விக்கெட்களைக் கைப்பற்றியுள்ளார்.

தனது 33ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் விளையாடும் லஹிரு குமார இதுவரை மொத்தமாக 103 விக்கெட்களைக் பைற்றியுள்ளார்.

முத்தையா முரளிதரன், ரங்கன ஹேரத், சமிந்த வாஸ், சுரங்க லக்மால், டில்ருவன் பெரேரா, ப்ரபாத் ஜயசூரிய, லசித் மாலிங்க, டில்ஹார பெர்னாண்டோ ஆகியோரைத் தொடர்ந்து இலங்கையர்களுக்கான 100 விக்கெட்கள் பட்டியலில் லஹிரு குமார இணைந்துகொண்டுள்ளார்.

https://www.virakesari.lk/article/200594

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தென் ஆபிரிக்காவிடம் 2ஆவது டெஸ்டில் 109 ஓட்டங்களால் தோல்வி அடைந்த இலங்கை, தொடரைப் பறிகொடுத்தது

09 DEC, 2024 | 03:38 PM
image

(நெவில் அன்தனி)

தென் ஆபிரிக்காவுக்கு எதிராக போர்ட் எலிஸபெத், சென் ஜோர்ஜ் பார்க் கெபெர்ஹா விளையாட்டரங்கில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 109 ஓட்டங்களால் தோல்வி அடைந்த இலங்கை, தொடரை 0 - 2 என பறிகொடுத்தது.

இந்த வெற்றியுடன் உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் அணிகள் நிலையில் தென் ஆபிரிக்கா 63.33 சதவீத புள்ளிகளுடன் மீண்டும் முதலாம் இடத்திற்கு முன்னேறியுள்ளது.

ஏற்கனவே 50.00 சதவீத புள்ளிகளுடன் 4ஆம் இடத்திலிருந்த இலங்கையின் சதவீத புள்ளிகள் 04.55 சதவீதத்தால் குறைந்துள்ளது. எனினும்  45.45 சதவீத புள்ளிகளுடன்   தொடர்ந்தும் அதே இடத்தில் இருக்கிறது.

அவுஸ்திரேலியா 60.71 சதவீத புள்ளிகளுடன் 2ஆம் இடத்திலும் இந்தியா 57.29 சதவீத புள்ளிகளுடன் 3ஆம் இடத்திலும் இருக்கின்றன.

இரண்டாவது போட்டியில் 348 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு 2ஆவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய இலங்கை சகல விக்கெட்களையும் இழந்து 238 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது.

download.jpg

போட்டியின் நான்காம் நாள் ஆட்ட நேர முடிவில் 5 விக்கெட்களை இழந்து 205 ஓட்டங்களைப் பெற்றிருந்த இலங்கையின் வெற்றிக்கு கடைசி நாளன்று மேலும் 143 ஓட்டங்களும் தென் ஆபிரிக்காவின் வெற்றிக்கு 5 விக்கெட்களும் தேவைப்பட்டது.

அணித் தலைவர் தனஞ்சய டி சில்வா, குசல் மெண்டிஸ் ஆகிய இருவரும் கடைசி நாள் ஆட்டத்தை தலா 39 ஓட்டங்களுடன் தொடர்ந்தனர்.

அவர்கள் இருவரும் நிதானத்துடன் துடுப்பெடுத்தாடி இலங்கை அணிக்கு நம்பிக்கை ஊட்டிக்கொண்டிருந்தனர்.

ஆனால், மொத்த எண்ணிக்கை 219 ஓட்டங்களாக இருந்தபோது குசல் மெண்டிஸ் நிதானத்தை இழந்தவராக தனது விக்கெட்டை கேஷவ் மஹாராஜிடம் தாரைவார்த்தார்.

குசல் மெண்டிஸ், தனஞ்சய டி சில்வா ஆகிய இருவரும் 6ஆவது விக்கெட்டில் 103 ஓட்டங்களைப் பகிர்ந்தனர்.

குசல் மெண்டிஸ் 46 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்த சொற்ப நேரத்தில் தனஞ்சய டி சில்வா (50) ஆட்டம் இழக்க இலங்கையிடம் இருந்த வெற்றிக்கான சொற்ப வாய்ப்பும் அற்றுப் போனது.

கேஷவ் மஹாராஜ் கடைசியாக வீழந்த 5 விக்கெட்களில் நான்கை கைப்பற்றி தென் ஆபிரிக்காவுக்கு வெற்றியை வேளையோடு கிடைக்கச் செய்தார்.

எண்ணிக்கை சுருக்கம்

தென் ஆபிரிக்கா 1ஆவது இன்: சகலரும் ஆட்டம் இழந்து 358 (கய்ல் வெரின் 105, ரெயான் ரிக்ல்டன் 101, டெம்பா பவுமா 78, லஹிரு குமார 79 - 4 விக்., அசித்த பெர்னாண்டோ 102 - 3 விக்., விஷ்வா பெர்னாண்டோ 65 - 2 விக்.)

இலங்கை 1ஆவது இன்: சகலரும் ஆட்டம் இழந்து 328 (பெத்தும் நிஸ்ஸன்க 89, கமிந்து மெண்டிஸ் 48, தினேஷ் சந்திமால் 44, ஏஞ்சலோ மெத்யூஸ் 44, டேன் பெட்டர்சன் 71 - 5 விக்., கேஷவ் மஹாராஜ் 65 - 2 விக்., மார்க்கோ ஜென்சென் 100 - 2 விக்.)

தென் ஆபிரிக்கா 2ஆவது இன்: சகலரும் ஆட்டம் இழந்து 317 (டெம்பா பவுமா 66, ஏய்டன் மார்க்ராம் 55, ட்ரைஸ்டன் ஸ்டப்ஸ் 47, டேவிட் பெடிங்டன் 35, ப்ரபாத் ஜயசூரிய 129 - 5 விக்., விஷ்வா பெர்னாண்டோ 47 - 2 விக்.)

இலங்கை 2ஆவது இன்: - வெற்றி இலக்கு 348 ஓட்டங்கள் - சகலரும் ஆட்டம் இழந்து 238 (தனஞ்சய டி சில்வா 50, குசல் மெண்டிஸ் 46, கமிந்து மெண்டிஸ் 35, ஏஞ்சலோ மெத்யூஸ் 32, தினேஷ் சந்திமால் 29, கேஷ்வ் மஹாராஜ் 76 - 5 விக்., டேன் பெட்டர்சன் 33 - 2 விக்., கெகிசோ ரபாடா 63 - 2 விக்.)

ஆட்டநாயகன்: டேன் பேட்டர்சன்

தொடர்நாயகன்: டெம்பா பவுமா

https://www.virakesari.lk/article/200815

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்

வெளி நாடுக‌ளில் இல‌ங்கை வீர‌ர்க‌ளால் தொட‌ரை வெல்ல‌ முடியாது................அது நியுசிலாந் தொட‌ரிலும் தொட‌ர்ந்த‌து.......................

 

 

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.