Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

(செ.சுபதர்ஷனி)

நாடளாவிய ரீதியில்  இவ்வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் மாத்திரம் சுமார் 10 ஆயிரத்துக்கும் அண்ணளவான நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

நிலவிவரும் மழையுடன் கூடிய காலநிலை மற்றும் பெரும்போக நெற்செய்கை ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் அடையாளம் காணப்படும் நோயாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக தொற்று நோய் பிரிவின் விசேட வைத்திய நிபுணர் குமுது வீரகோன்ன் தெரிவித்தார்.

எலிக்காய்ச்சல் பரவல் குறித்து புதன்கிழமை (11) சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தின் ஏற்பாடு செய்யப்பட்ட விசேட ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்,

அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,

கடந்த வருடம் மாத்திரம் நாடளாவிய ரீதியில் எலிக்காய்ச்சலால் பாதிப்புற்ற 9 ஆயிரம் பேர் அடையாளங்காணப்பட்டுள்ளதுடன் 200 பேர் உயிரிழந்தும் உள்ளனர். இரத்தினபுரி, குருநாகல், காலி, மாத்தறை, கொழும்பு ஆகிய மாவட்டங்களிலேயே அதிக நோயாளர்கள் கண்டறியப்பட்டுள்ளனர்.

10 தொடக்கம் 12 மாவட்டங்கள் அதி உயர் அபாயம் மிக்க பகுதிகளாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளன. இவ்வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் மாத்திரம் சுமார் 10 ஆயிரத்துக்கும் அண்ணளவான நோயாளர்கள் அடையாளங்காணப்பட்டுள்ளனர்.

நிலவிவரும் மழையுடன் கூடிய காலநிலை காரணமாக தொற்றாளர்களின் எண்ணிக்கையிலும் பாரிய அதிகரிப்பைக் காணக் கூடியதாக உள்ளது.

மழையுடன் கூடிய காலநிலை மற்றும் பெரும்போக நெற்செய்கை ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் அடையாளம் காணப்படும் எலிக்காய்ச்சல் நோயாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. லெப்டோஸ்பைரா எனப்படும் ஒருவகை பற்றீரியா தொற்றால் இக்காய்ச்சல் ஏற்படுகிறது. பெருமளவில், நோய்த் தொற்றுக்கு ஆளான எலிகளின் சிறுநீர் மூலம் மனிதர்களுக்கு பரவுவதால் எலிக்காய்ச்சல் என அழைக்கப்படுகிறது.

எனினும்  நாய், மாடு, பன்றி, ஆடு போன்ற விலங்குகளின் மூலம் இது பரவலாம். பற்றீரியா பரவியுள்ள நீர்நிலைகள், சதுப்பு நிலங்களில் நடமாடுதல், விளையாடுதல், பயிர்ச்செய்கை மற்றும் அகழ்வு பணிகளில் ஈடுபடுவதன் மூலம் தொற்று ஏற்பட அதிக வாய்ப்புள்ளது.

ஆகையால் பெரும்போக பயிர்செய்கையில் ஈடுபடும் விவசாயிகள் அவதானத்துடன் செயற்படுவது நல்லது. மேலும் சுற்றுலாவுக்காக செல்வோர் நீர் தேங்கியுள்ள பகுதிகள் மற்றும் பழக்கமில்லாத நீர்நிலைகளில் நீராடுதல், விளையாட்டு சாகசங்களில் ஈடுபடுவதையும் தவிர்த்துக் கொள்ளலாம்.

நீர், மண்ணில் கலந்துள்ள பற்றீரியா உடலில் உள்ள சிறு புண்கள், காயங்கள், கீறல்கள் மற்றும் அவ்வாறான நீரை அருந்துவதன் மூலமும் உடலை வந்தடைகின்றது.

நோய் அறிகுறிகள் வெளிப்பட சுமார் 7 தொடக்கம் 14 நாட்களாகக் கூடும். ஆகையால் அதானம் மிக்க பகுதிகளில் வசிப்பவர்கள் மற்றும் விவசாயம், இரத்தினக்கல் அகழ்வு பணியை மேற்கொள்பவர்கள் காய்ச்சல்கள் ஏதும் ஏற்படின் உடனடியாக வைத்தியசாலையை நாடுவது நல்லது. நோய்த் தொற்றுக்கு ஆளானவரிடம் கடுமையான காய்ச்சல், தலைவலி, உடல் வலி, கண் சிவத்தல், வாந்தியும் குமட்டலும் போன்ற அறிகுறிகள் தென்படலாம். 

நோய் நிலைமையை ஆரம்பத்தில் இனங்கண்டு சிகிச்சை பெறுவது நல்லது. இல்லையேல் கடுமையான விளைவுகளும் உயிரிழப்பும்  ஏற்படலாம். அத்துடன் நோய் தொற்று காரணமாக சிறுநீரகம், இதயம், மூளை, நுரையீரல், மண்ணீரல் உள்ளிட்ட உறுப்புகள் செயலிழப்பதற்கும் வாய்ப்புள்ளது.

விவசாயிகளின் நலன் கருதி சுகாதார மருத்துவ அதிகாரி அலுவலகங்கள் மூலம் நோய் எதிர்ப்பு மருந்து வழங்கப்படுகிறது. அவற்றை பொது சுகாதார அதிகாரிகளின் பரிந்துரைக்கமைய பெற்றுக் கொள்ளலாம். 

மேலும் யாழ்ப்பாணத்தில் மர்ம காய்ச்சலால் ஐவர் உயிரிழந்துள்ளனர். சுவாசக் குழாயில் ஏற்பட்ட தொற்றுக் காரணமாக அவர்கள் உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது. எவ்வாறெனினும் எலிக்காய்ச்சல் காரணமாக மரணம் சம்பவித்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

இது தொடர்பில் தற்போது பரிசோதனைகள் இடம்பெற்று வருகிறது. பரிசோதனை அறிக்கை கிடைக்க பெற்ற உடன் உறுதியான காரணம் வெளியிடப்படும் என்றார். 

எலிக்காய்ச்சலால் பாதிப்புற்றவர்களின் எண்ணிக்கை 10 ஆயிரமாக அதிகரிப்பு | Virakesari.lk

  • கருத்துக்கள உறவுகள்
Posted

 

1031353316.jpg

 
தொடர் சுகவீனம்; இளம் தாய் சாவு!
 

ஐந்து நாள் காய்ச்சலினால் பாதிக்கப்பட்ட இளம் தாய் ஒருவர் நேற்று உயிரிழந்துள்ளார். பருத்தித்துறையில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இதில் பருத்தித்துறை ஓடக்கரையைச் சேர்ந்த 33வயதுடைய சுரேஷ்குமார் ரஞ்சிதா என்பவரே உயிரிழந்தவராவார்.

கடந்த மூன்று தினங்களாக இவருக்கு காய்ச்சல் ஏற்பட்டதைத் தொடர்ந்து பனடோல் உட்கொண்டுள்ளார். காய்ச்சல் குணமடையாத நிலையில் நேற்று முன்தினம் திங்கட்கிழமை பருத்தித்துறை ஆதார மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட போது அவர் மயங்கியுள்ள நிலையில் உடனடியாக யாழ். போதனா மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட நிலையில் நேற்று மதியம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

மரணம் தொடர்பில் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேமகுமார் விசாரணைகளை மேற்கொண்டார்.

   https://newuthayan.com/article/தொடர்_சுகவீனம்;_இளம்_தாய்_சாவு!
 

 

1631289163.jpg

யாழில் பரவி வரும் மர்மக் காய்ச்சல் ; சுகாதார அமைச்சின் தொற்றுநோய் பிரிவு!
 

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் மர்மக் காய்ச்சல் பரவி வருவதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோய் பிரிவு தெரிவித்துள்ள நிலையில், இது சுகாதார அதிகாரிகள் மத்தியில் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.


பொதுவாக‘எலிக்காய்ச்சல்’எனப்படும் லெப்டோஸ்பிரோசிஸ் நோயுடன் இது தொடர்புடையதா என்பதை கண்டறிவதற்கான பரிசோதனைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் இன்று காலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தொற்றாநோய் பிரிவின் மருத்துவர் குமுது வீரகோன் இந்த விடயத்தை தெரிவித்தார்.

பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள நோயாளிகள் காய்ச்சல் மற்றும் சுவாசக் கோளாறுகளுடன் உள்ளனர். நோய்க்கான சரியான காரணத்தை உறுதிப்படுத்த சுகாதார அதிகாரிகள் குறிதத் நபர்களிடமிருந்து மாதிரிகளை சேகரித்து வருவதாகவும் அவர் இதன்போது தெரிவித்தார்.


இதேவேளை, லெப்டோஸ்பிரோசிஸ் இலங்கையில் தொடர்ந்தும் ஒரு முக்கிய சுகாதார பிரச்சினையாக உள்ளது. கடந்த 2023 ஆம் ஆண்டில், நாட்டில் 9ஆயிரத்துக்கும் மேற்பட்ட எலிக்காய்ச்சல் வழக்குகள் பதிவாகியுள்ளன, இதன் விளைவாக கிட்டத்தட்ட 200 பேர் உயிரிழந்தும் உள்ளனர்.
இந்த ஆண்டு பதிவாகிய வழக்குகளின் எண்ணிக்கை, கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் பதிவானதை விட அதிகரித்துள்ளதாகவும் மருத்துவர் இதன்போது சுட்டிக்காட்டினார். (ச)

 

https://newuthayan.com/article/யாழில்_பரவி_வரும்_மர்மக்_காய்ச்சல்_;_சுகாதார_அமைச்சின்_தொற்றுநோய்_பிரிவு!

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வடமாகாணத்தில் உயிரிழந்தோரின் பரிசோதனை அறிக்கை வெளியானது

வடமாகாணத்தில் உயிரிழந்தோரின் பரிசோதனை அறிக்கை வெளியானது

வடமாகாணத்தில் அடையாளம் காணப்படாத காய்ச்சலால் உயிரிழந்த 07 பேரிடம் எடுக்கப்பட்ட பல மாதிரிகளில் எலிக்காய்ச்சல் அல்லது லெப்டோஸ்பிரோசிஸ் வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தொற்றுநோயியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கொழும்பில் இன்று (12) நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்ட அதன் சமூக சுகாதார நிபுணர் டாக்டர் துஷானி பெரேரா இதனைத் தெரிவித்தார்.

உயிரிழந்த 7 பேரின் மாதிரிகள் தேசிய மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் கண்டி தேசிய வைத்தியசாலை ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், ஆய்வுப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், பல நோயாளிகளின் மாதிரிகள் எலிக்காய்ச்சல் என உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், ஏனைய ஆய்வுப் பணிகள் இடம்பெற்று வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

https://athavannews.com/2024/1411918



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.