Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
12 Dec, 2024 | 05:29 PM
image
 

வீட்டுப்பணிப்பெண் ஒருவரின் உரிமைகளிற்கு பாதிப்பு ஏற்படுத்தும் விதத்தில் செயற்பட்டமைக்காக அவுஸ்திரேலியாவிற்கான இலங்கையின் முன்னாள் பிரதி உயர்ஸ்தானிகருக்கு அவுஸ்திரேலிய நீதிமன்றம்117,000  அமெரிக்க டொலர் அபராதம் விதித்துள்ளது.

குறிப்பிட்ட வீட்டுப்பணியாளருக்கு செலுத்தாத சம்பளங்கள் மற்றும் அதற்கான வட்டியாக 500,000 அமெரிக்க டொலர்களை ஹிமாலி அருணதிலக செலுத்தவேண்டும் என நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தநிலையிலேயே இந்த அபராதத்தை விதித்துள்ளது.

2015 முதல் 2018 வரை அவுஸ்திரேலியாவிற்கான பிரதிஉயர்ஸ்தானிகராக பணியாற்றியிருந்த அவர் இலங்கையை சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தாயரான பிரியங்க தனரட்ணவை டீக்கினில் உள்ள தனது இராஜதந்திரிகளிற்கான இல்லத்தில் பணிப்பெண்ணாக வேலைக்கு அமர்த்தியிருந்ததார்.

அவுஸ்திரேலியாவிற்கு பிரியங்காவை வேலைக்கு அழைத்திருந்த ஹிமாலி அவுஸ்திரேலியாவின்  சம்பளங்கள் நிபந்தனைகளிற்கு ஏற்ப சம்பளம் வழங்கப்படும் என உறுதியளித்திருந்தார்.

எனினும் அந்த வீட்டில் தான் தனிமைப்படுத்தப்பட்டு  ஒடுக்குமுறைக்கு உட்படுத்தப்பட்டதாக அந்த பணிப்பெண் நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தார்.

மூன்று வருடங்கள் தான் வேலை பார்த்ததாகவும்,தன்னை சமையலறையில் எண்ணையை ஊற்றி கொழுத்திக்கொள்ள முயன்றதால்தான் சில நாட்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்ததாகவும் தெரிவித்திருந்தார்.

நாளாந்தம் அந்த பணிப்பெண் 14 மணித்தியாலங்கள் பணியாற்றினார் என கணக்கிடப்பட்டது,எனினும் அவரது வேலை இரவு 1 மணி வரை நீடித்தது.

மேலும் பிரதி உயர்ஸ்தானிகர் பணிப்பெண்ணின் கடவுச்சீட்டையும் தான் எடுத்துவைத்துக்கொண்டார்,அவர் வீட்டிலிருந்து வெளியேற அனுமதிக்கவில்லை.எப்போதாவது அயலில் உள்ள பகுதிகளிற்கு சிறிது நேரம் நடந்து செல்ல அனுமதித்தார்.

அவர் எனக்கு உரிய உணவையும்  உடையையும் வழங்கவில்லை ஒழுங்காக நடத்தவில்லை என்பது போல உணர்ந்தேன் என  அந்த பணிப்பெண் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

வீட்டுப்பணிப்பெண்ணின் உரிமைகளை மீறிய அவுஸ்திரேலியாவிற்கான இலங்கையின் முன்னாள் இராஜதந்திரி- 117,000 டொலர் அபராதம் விதித்தது நீதிமன்றம் | Virakesari.lk

  • கருத்துக்கள உறவுகள்

அபராத தொகையை யார் கட்டப்போகின்றார்கள்? மகிந்த ஆட்களும் இப்போது பதவியில் இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, பிழம்பு said:

அவுஸ்திரேலியாவிற்கான இலங்கையின் முன்னாள் பிரதி உயர்ஸ்தானிகருக்கு அவுஸ்திரேலிய நீதிமன்றம்117,000  அமெரிக்க டொலர் அபராதம் விதித்துள்ளது.

இன்று பலருக்கு தர்ம சங்கடம். மஹிந்த, ரணில் ஆட்சியில் இல்லாதது. இல்லையேல் அவுஸ்திரேலிய நீதிமன்றத்தை எச்சரிப்பார்களா? மைத்திரி பிச்சை எடுத்து கட்டவில்லையா? அவ்வாறே இவரும் செய்ய வேண்டியதுதான். இல்லையேல் பணிப்பெண்ணாக அவுஸ்திரேலியாவில் வேலைது செய்ய கட்டவேண்டியதுதான் யாரும் ஏற்றுக்கொண்டால்.  வெளிநாட்டில் இவ்வாறு அந்தப்பெண்ணை நடத்தியவர் உள்நாட்டில் எப்படி நடத்தியிருப்பார்? 

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

அவுஸ்திரேலிய நீதிமன்றத்தினால் குற்றஞ்சாட்டப்பட்ட இராஜதந்திரி ஹிமாலி அருணதிலக தவறிழைக்கவில்லை - வெளிவிவகார அமைச்சர் விளக்கம்

Published By: DIGITAL DESK 7   21 DEC, 2024 | 09:15 AM

image

(நா.தனுஜா)

வெளிநாடுகளில் பணியாற்றும் இராஜதந்திரிகளால் இலங்கையிலிருந்து அழைத்துச்செல்லப்படும் பணியாட்களுக்கான சம்பளத்தை அரசாங்கமே வழங்கும் என்றும், அச்சம்பளம் இலங்கையில் நடைமுறையிலிருக்கும் சம்பள நிர்ணய விதிகளுக்கு அமைவாகவே தீர்மானிக்கப்படும் என்றும் சுட்டிக்காட்டிய வெளிவிவகார அமைச்சர் விஜித்த ஹேரத், அதனடிப்படையில் நோக்குகையில் அண்மையில் சர்ச்சைக்குள்ளான ஹிமாலி அருணதிலகவினால் எவ்வித தவறும் இழைக்கப்படவில்லை என விளக்கமளித்தார்.

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் அண்மைய இந்திய விஜயத்தின்போது ஆராயப்பட்ட விடயங்கள் மற்றும் கைச்சாத்திடப்பட்ட ஒப்பந்தங்கள் குறித்துத் தெளிவுபடுத்தும் நோக்கிலான ஊடகவியலாளர் சந்திப்பொன்று வெள்ளிக்கிழமை (20) கொழும்பிலுள்ள அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அங்கு தற்போது ஐக்கிய நாடுகள் சபைக்கான இலங்கையின் நிரந்தர வதிவிடப்பிரதிநிதியாகப் பதவி வகித்துவரும் ஹிமாலி அருணதிலகவுக்கு எதிராக அவுஸ்திரேலிய பெடரல் நீதிமன்றத்தினால் விதிக்கப்பட்டிருக்கும் தீர்ப்பு குறித்தும், இவ்விடயத்தில் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டிருக்கும் நடவடிக்கைகள் குறித்தும் ஊடகவியலாளர் ஒருவரால் கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்குப் பதிலளித்த அமைச்சர் விஜித்த ஹேரத், இராஜதந்திரிகள் வெளிநாடுகளில் பதவிகளை வகிக்கும்போது, அவர்கள் தமக்கான வீட்டுப்பணியாட்களை இலங்கையிலிருந்து அழைத்துச்செல்லமுடியும் எனவும், அப்பணியாளர்களுக்கான சம்பளம் அரசாங்கத்தினால் வழங்கப்படுமே தவிர, குறித்த இராஜதந்திரியினால் வழங்கப்படமாட்டாது எனவும் விளக்கமளித்தார்.

அத்தோடு மேற்குறிப்பிட்டவாறு அரசாங்கத்தினால் பணியாட்களுக்கு வழங்கப்படும் ஊதியமானது இலங்கையின் சம்பள நிர்ணயங்களுக்கு அமைவாகவே வழங்கப்படும் என்றும், இருப்பினும் அவுஸ்திரேலியா போன்ற நாடுகளில் நிர்ணயிக்கப்பட்டிருக்கும் சம்பள அளவுகோல்களுடன் ஒப்பிடுகையில் அது மிகக்குறைவான தொகையாக இருக்கக்கூடும் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

'எனவே இராஜதந்திரி ஹிமாலி அருணதிலகவுடன் தொடர்புடைய பிரச்சினை இதனடிப்படையிலேயே தோற்றம் பெற்றிருக்கிறது. மாறாக அவர் அரசாங்கத்திடம் பணத்தைப் பெற்றுக்கொண்டு, அதனை பணியாளுக்கு வழங்காமல் இருக்கவில்லை. உண்மையில் இது நாட்டின் கொள்கை சார்ந்த பிரச்சினையாகும். ஆனால் ஹிமாலி அருணதிலகவுக்கு எதிராக ஊடகங்களால் மிகமோசமான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. அவற்றினால் அவர் தனிப்பட்ட ரீதியில் வெகுவாகப் பாதிக்கப்பட்டிருக்கிறார்' என்றும் விஜித்த ஹேரத் சுட்டிக்காட்டினார்.

மேலும் இந்த சம்பள நிர்ணய விடயத்தில் அரசாங்கம் கொள்கை ரீதியிலான தீர்மானத்தை எடுக்கவேண்டிய அவசியம் காணப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

ஐக்கிய நாடுகள் சபைக்கான இலங்கையின் நிரந்தர வதிவிடப்பிரதிநிதியாகத் தற்போது பதவி வகித்துவரும் ஹிமாலி அருணதிலக, 2015 - 2018 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் அவுஸ்திரேலியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகராகப் பணியாற்றியபோது அவரது கன்பரா இல்லத்தில் வீட்டுப்பணிப்பெண்ணாகப் பணிபுரிந்த இலங்கையைச்சேர்ந்த பிரியங்கா தனரத்ன என்பவருக்கு உரியவாறு ஊதியத்தைச் செலுத்தவில்லை என்றும், ஆகையினால் அவர் பிரியங்காவுக்கு 543,000 டொலர்களைச் செலுத்தவேண்டும் என்றும் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அவுஸ்திரேலிய பெடரல் நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது.

அதனைத்தொடர்ந்து அண்மையில் இவ்வழக்கில் மேற்கொள்ளப்பட்ட இறுதி சமர்ப்பணத்தை அடுத்து, இராஜதந்திரிகள் எதிர்வருங்காலங்களில் இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடுவதைத் தடுக்கும் நோக்கிலும், இவ்வழக்கு தொடர்பான நீதிமன்ற செயன்முறையில் ஹிமாலி அருணதிலக உரியவாறு பங்கேற்காததன் காரணமாகவும் அவர் மேலும் 117,000 டொலரை பிரியங்கா தனரத்னவுக்குச் செலுத்தவேண்டும் என அந்நீதிமன்றம் கடந்த வாரம் தீர்ப்பளித்தமை குறிப்பித்தக்கது. 

https://www.virakesari.lk/article/201752

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.