Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

16 DEC, 2024 | 07:22 PM

image

(இராஜதுரை ஹஷான்)

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ பிரத்தியேக குளிர் அறையில் இரண்டு சட்டத்தரணிகளின் ஒத்துழைப்புடன் சட்டமாணி பரீட்சை எழுதினார் என்ற குற்றச்சாட்டு ஆதாரபூர்வமாக முன்வைக்கப்பட்டுள்ளது. இவ்விவகாரம் குறித்து முறையான விசாரணைகளை மேற்கொண்டு நாமல் ராஜபக்ஷவின் சட்டமாணி பட்டத்தை இரத்துச் செய்து முறைகேடான செயற்பாட்டுக்கு ஒத்தாசையளித்த அரச அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதியிடம் வலியுறுத்துவதாக இலஞ்ச, ஊழலுக்கு எதிரான மக்கள் அமைப்பின் தலைவர் ஜாமுனி காமந்த துஷாரா தெரிவித்தார்.

நாமல் ராஜபக்ஷவின் சட்டமாணி பட்டம் தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் திங்கட்கிழமை (16) முறைப்பாடளித்ததன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ 11 ஆண்டுகளுக்கு முன்னர் சட்டமாணி பரீட்சைக்கு தோற்றிய விவகாரம் இன்று வரை பேசப்படுகிறது. முறையற்ற வகையில் பரீட்சைக்கு தோற்றியதாகவும் குற்றஞ்சாட்டப்படுகிறது.

பாராளுமன்ற உறுப்பினர்களின் கல்வித் தகைமை தற்போது பிரதான பேசுபொருளாக காணப்படுகின்ற நிலையில் வெளிநாட்டில் இருந்து இலங்கையர் ஒருவர் நாமல் ராஜபக்ஷவின் சட்டமாணி பட்டத்தை சவாலுக்குட்படுத்தியுள்ளார்.

11 ஆண்டுகளுக்கு முன்னர் சட்டமாணி பரீட்சையின் போது  பிரத்தியேக குளிர் அறையில் இருந்தவாறு நாமல் ராஜபக்ஷ தோற்றியதாக குறித்த நபர் பரீட்சை நிலைய பொறுப்பதிகாரிக்கு முறைப்பாடளித்ததாகவும், அதனை அவர் கண்டு கொள்ளவில்லை என்றும் அதனைத் தொடர்ந்து  சட்டக்கல்லூரியின் அதிபரிடம் குறிப்பிடுவதற்கு சென்றபோது அவர் இருக்கவில்லை என்றும் கல்லூரியின் பதிவாளருக்கு குறிப்பிட்ட போதும் அவரும் அந்த முறைப்பாட்டை கவனத்திற் கொள்ளவில்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

இவ்விடயம் தொடர்பில் அப்போதைய நீதியமைச்சின் செயலாளர் சுஹத் கம்லத்திடம் குறிப்பிட்ட போதும் அவர் அந்த முறைப்பாட்டை எழுத்துமூலமாக பெற்றுக் கொள்ளவில்லை என்றும், அதன் பின்னர் இவ்விடயம் குறித்து கொழும்பு வாழைத்தோட்டம் பொலிஸ் நிலையத்துக்கு முறைப்பாடளிக்க சென்ற போது அங்கும் முறைப்பாட்டை ஏற்றுக் கொள்ளவில்லை என்று அந்த நபர் குறிப்பிட்டுள்ளார்.

2010.12.03 ஆம் திகதியன்று  பொலிஸ்மா அதிபரை சந்தித்து முறைப்பாடளிக்க முயற்சித்ததாகவும், அதுவும் பயனலிக்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவுக்கு முறைப்பாடளிப்பதற்கு சென்ற வேளை பெரிய மீன்கள் சிறிய மீன்களை விழுங்குவது இயல்பானது என்று அதிகாரிகள் குறிப்பிட்டதாக அந்த நபர் குறிப்பிட்டுள்ளார்.முறைப்பாடளிக்க முயற்சித்ததால் தனக்கு உயிரச்சுறுத்தல் ஏற்பட்டதாகவும் அதனால் தான் நாட்டை விட்டு வெளியேறியதாகவும் தெரிவித்துள்ளார்.

திருடர்களை பிடிப்பதாக குறிப்பிட்டுக் கொண்டே இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தது. இந்த அரசாங்கத்தை திருடர்கள் பிடித்துக் கொண்டார்களா அல்லது திருடர்களை அரசாங்கம் பிடித்துக் கொண்டதா என்ற சந்தேகம் காணப்படுகிறது. நாமல் ராஜபக்ஷ  பிரத்தியேக குளிர் அறையில் இரண்டு சட்டத்தரணிகளின் ஒத்துழைப்புடன் சட்டமாணி பரீட்சை எழுதினார் என்ற குற்றச்சாட்டு ஆதாரபூர்வமாக முன்வைக்கப்பட்டுள்ளது.

இவ்விவகாரம் குறித்து முறையான விசாரணைகளை மேற்கொண்டு நாமல் ராஜபக்ஷவின் சட்டமாணி பட்டத்தை இரத்துச் செய்து முறைகேடான செயற்பாட்டுக்கு ஒத்தாசை அளித்த அரச அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதியிடம் வலியுறுத்துகிறேன் என்றார்.

https://www.virakesari.lk/article/201453

  • கருத்துக்கள உறவுகள்
Posted

சகல பாராளமன்ற உறுப்பினர்களின் பரீட்சை சான்றிதல்களும் சரிபார்க்கப் படவேண்டும். 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
48 minutes ago, RishiK said:

சகல பாராளமன்ற உறுப்பினர்களின் பரீட்சை சான்றிதல்களும் சரிபார்க்கப் படவேண்டும். 

அப்ப பார் சிறீதரன் எடுத்துப் பாஸ்பண்ணின GAQவுக்கும் ஆப்புத்தானா?😂

  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 minutes ago, வாலி said:

அப்ப பார் சிறீதரன் எடுத்துப் பாஸ்பண்ணின GAQவுக்கும் ஆப்புத்தானா?😂

இல்லையே அவர் பிஏ, எம்-எட் பட்டதாரி 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 minute ago, RishiK said:

இல்லையே அவர் பிஏ, எம்-எட் பட்டதாரி 

எந்த யூனிவேர்சிட்டியில எத்தினையாம் ஆண்டுவாக்கில பட்டம் பெற்றவராம்?

தயவுசெய்து விக்கிபீடியா ஆதாரம் வேண்டாம்!

  • கருத்துக்கள உறவுகள்
Posted
5 minutes ago, வாலி said:

எந்த யூனிவேர்சிட்டியில எத்தினையாம் ஆண்டுவாக்கில பட்டம் பெற்றவராம்?

தயவுசெய்து விக்கிபீடியா ஆதாரம் வேண்டாம்!

யாழ் பல்கலைக்கழகம், வெளிவாரிப்பட்டதாரி என நினைக்கின்றேன். 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

அதுதான் GAQ

  • கருத்துக்கள உறவுகள்
Posted
5 minutes ago, வாலி said:

அதுதான் GAQ

அது முதல் வருடப் படிப்பு, மூன்று வருடம் முடித்தால் , பிறகு உள்வாரிக்கும் வெளிவாரிக்கும் வித்தியாசம் இல்லை. 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, ஏராளன் said:

நாமல் ராஜபக்ஷ  பிரத்தியேக குளிர் அறையில் இரண்டு சட்டத்தரணிகளின் ஒத்துழைப்புடன் சட்டமாணி பரீட்சை எழுதினார் என்ற குற்றச்சாட்டு ஆதாரபூர்வமாக முன்வைக்கப்பட்டுள்ளது.

 

சபாநாயகர் பதவி விலக வேண்டும் என்று நாமலை அறிக்கை விடச் சொன்ன பொதுஜன பெரமுன முக்கியஸ்தர்களை நாமல் இப்பொழுது தேடிக் கொண்டிருப்பார் போல...................🤣

  • Like 1
  • Haha 3
  • கருத்துக்கள உறவுகள்
Posted
6 hours ago, ரசோதரன் said:

சபாநாயகர் பதவி விலக வேண்டும் என்று நாமலை அறிக்கை விடச் சொன்ன பொதுஜன பெரமுன முக்கியஸ்தர்களை நாமல் இப்பொழுது தேடிக் கொண்டிருப்பார் போல...................🤣

நாமல் அப்படி நடக்கவில்லை என்று சொல்லுறார்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
19 minutes ago, RishiK said:

நாமல் அப்படி நடக்கவில்லை என்று சொல்லுறார்.

அவர் அப்படி நடக்கவில்லை என்று முன்னரும் சொல்லியிருக்கின்றார். குற்றம் சொல்பவர்களும் சொல்லிக்கொண்டே இருக்கின்றனர். அவருடன் பாடசாலையில், கல்லூரிகளில் படித்தவர்கள் என்று பலர் இருக்கின்றார்கள் என்று நினைக்கின்றேன்............. நாமலிடம் பரீட்சைகளில் சித்தி எய்தும் திறமை அவ்வளவாகக் கிடையாது என்பது ஒரு அபிப்பிராயமாகவே இருந்து வருகின்றது.

அவருடைய சாதாரணதர, உயர்தர மற்றும் வேறும் சில பரீட்சை முடிவுகள் பொதுவெளியில் கிடைக்கக் கூடியதாக இருக்கும் என்று நினைக்கின்றேன்.............................

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, ரசோதரன் said:

நாமலிடம் பரீட்சைகளில் சித்தி எய்தும் திறமை அவ்வளவாகக் கிடையாது என்பது ஒரு அபிப்பிராயமாகவே இருந்து வருகின்றது

கல்வித்தகமை அரசியலுக்கு தேவையில்லை. மக்களுக்கு கொடுத்த வாக்கை நிறைவேற்றத்தெரிந்தாலே போதும். ஏன் கல்வி கற்றவர்கள் செய்யும் வேலையை, சேவையை அங்கு யாரும் செய்வதில்லை. அடாவடி பேசுவபவர், ஏமாற்றுபவர், கதையை, கொள்கையை திரிப்பவர்  வக்கீலுக்கு படிக்கத்தேவையில்லை. ஆனால் நாமலின், அவரின் சகோதரர்களின் மற்ற திறமைகளை கேட்டுப்பாருங்கள்; அவர்களின் கல்வித்தகமையை தாண்டியதாக இருக்கும். இவர்கள் செய்யும் கொலை கொள்ளைகளுக்கு அரசியல் பெயர், துணை.        

  • கருத்துக்கள உறவுகள்
Posted
11 minutes ago, satan said:

கல்வித்தகமை அரசியலுக்கு தேவையில்லை. மக்களுக்கு கொடுத்த வாக்கை நிறைவேற்றத்தெரிந்தாலே போதும். ஏன் கல்வி கற்றவர்கள் செய்யும் வேலையை, சேவையை அங்கு யாரும் செய்வதில்லை. அடாவடி பேசுவபவர், ஏமாற்றுபவர், கதையை, கொள்கையை திரிப்பவர்  வக்கீலுக்கு படிக்கத்தேவையில்லை. ஆனால் நாமலின், அவரின் சகோதரர்களின் மற்ற திறமைகளை கேட்டுப்பாருங்கள்; அவர்களின் கல்வித்தகமையை தாண்டியதாக இருக்கும். இவர்கள் செய்யும் கொலை கொள்ளைகளுக்கு அரசியல் பெயர், துணை.        

நீங்கள் சொல்வது சரியே..... 

ஆனாலும், சிலர் தலைக்கு  ஒரு விக் வைத்திருப்பார்கள், உதாரணம்: ஸ்டாலின். அந்த விக்கால் அவருக்கு என்ன பயன், அதன் தேவை தான் என்ன..... அது போலவே பட்டங்களும் சிலருக்கு தேவைப்படுகின்றன போல...



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இவர்களுக்கு தானே பா.உ பட்டத்தை மக்கள் கொடுத்திருக்கினம் பிறகு ஏன் கலா பட்டம் வேணும் என்று அடம் பிடிக்கினம்
    • அடடா... என்ன அழகு, என்ன கம்பீரம். அது சரி ....., கடைக்கு போன மனுஷனை கொண்டுபோய் இந்தியாவில இறக்கிவிட்டார்களோ? இல்லை.... எந்தவொரு ஆடம்பரமுமில்லாத உடை, நடை கெத்தில்ல! மற்றையவர் கடந்த காலங்களில் வெளிநாட்டுக்கு உத்தியோகபூர்வ பயணம் போனால் உடை, நடை, படை, என தனி விமானத்தில்  போய் சொகுசு விடுதிகளில் தங்கி உல்லாசம் அனுபவித்து வருவார்கள். இவர் எத்தனை பேருடன் போனாராம்? வரவேற்பு என்னவோ பிரமாதமாகத்தான் இருக்கிறது. ஆனால் சந்தித்தவர்கள் ஏன் இப்படி மூஞ்சியை இறுக்கமாக வைத்திருக்கிறார்கள்? எல்லாருக்கும் முன்பாக அழைத்து விருந்து கொடுத்து மருந்தும் கொடுத்துவிடுவார்கள். அனுராவுக்கு நன்கு தெரியும் இந்தியாவின் சகுனித்தனம். பாப்போம் எப்படி வெட்டியாடுகிறாரென்று! கவிழ்க்கப்போகிறார்கள் என்று அர்த்தம் சாமியார்! அனுராவின் வீரியம் தெரியும் அவர்களுக்கு போனவுடன் கோயிலில் விழுந்து கும்பிடும்  கூட்டமல்ல இவர். வீட்டுக்கு வீரன், காட்டுக்கு கள்ளன் ரணில் என்னத்தை சொல்லுறது? எத்தனை நாடகம் தந்திரம் துரோகம் பவ்வியம் பிரிச்சாளுகை? என்ன செய்தாலும் ஒருமுறையாவது தனது ஆட்சிக்காலத்தை முழுமையாக, நிம்மதியாக, வெற்றியாக  நிறைவு செய்ய முடியவில்லையே இவரால். பிறர்க்கிடும் பள்ளம் தான் விழும் குழி.     
    • எத்தியோப்பியா £5 பில்லியன் செலவில் "மிகப்பெரும் விமான நிலையத்தை" உருவாக்குகிறது, இது ஆப்பிரிக்காவின் மிகப்பெரிய விமான நிலையமாகவும், உலகளவில் பரபரப்பான விமான நிலையமாகவும் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அடிஸ் அபாபாவில் இருந்து 25 மைல் தொலைவில் உள்ள பிஷோப்டுவில் அமைந்துள்ள புதிய விமான நிலையம், 2029 இல் நிறைவடைந்ததும் ஆண்டுதோறும் 110 மில்லியன் பயணிகளால் பயண்படுத்தப்படும் அல்-ஹண்டாசா ஆலோசகர்களுடன் இணைந்து எத்தியோப்பியன் ஏர்லைன்ஸ் தலைமையிலான இந்த திட்டம், ஒரு அதிநவீன முனையம் மற்றும் நான்கு ஓடுபாதைகளைக் கொண்டுள்ளது. தற்போது, அடிஸ் அபாபாவின் போலே சர்வதேச விமான நிலையம், கடல் மட்டத்திலிருந்து 2,334 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது, எத்தியோப்பியா ஒரு உலகளாவிய விமானப் போக்குவரத்து மையமாக அதன் நிலையை உறுதிப்படுத்துவதால் நெரிசலை எதிர்கொள்கிறது. "மெகா ஏர்போர்ட் சிட்டி" இந்த நெருக்கடியைத் தணிப்பது மட்டுமின்றி எத்தியோப்பியாவின் பொருளாதாரத்தை உயர்த்தும், சர்வதேச வணிகம் மற்றும் சுற்றுலாத்துறையில் நாட்டை ஒரு முக்கியப் பங்காளராக நிலைநிறுத்துகிறது. துபாய் மற்றும் ஹீத்ரோ போன்ற உலகளாவிய விமான நிலையங்களுக்கு போட்டியாக இந்த புதிய திட்டம் உள்ளது          
    • எது கோஷனுக்கு   மிக்சரா. அல்லதுஅந்த.   .........?????? 🤣
    • நீங்கள் சொல்வது சரியே.....  ஆனாலும், சிலர் தலைக்கு  ஒரு விக் வைத்திருப்பார்கள், உதாரணம்: ஸ்டாலின். அந்த விக்கால் அவருக்கு என்ன பயன், அதன் தேவை தான் என்ன..... அது போலவே பட்டங்களும் சிலருக்கு தேவைப்படுகின்றன போல...
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.