பார் போமிட் வழங்கச் சிபார்சு செய்தவர்களும் சபாநாயகரைப் போல் பதவி விலக வேண்டும் – சுமந்திரன்
By
கிருபன்
in ஊர்ப் புதினம்
Share
-
Tell a friend
-
Topics
-
155
கிருபன் · தொடங்கப்பட்டது
-
Posts
-
இது வாலில்லை, தலைதான்! பயம் தெளிஞ்சு போச்சுது போல. கோசானுக்கு தெரியுமோ இந்த விஷயம்?
-
பயமா? முத்திரைக்கா? என்னை விட நீங்கள் அரசியல், சட்ட, பரந்த, இதர பல திறமையுடையவர். நான் ஒரு சாதாரணமான ஆள். எனது சொந்த சுற்றாடல் அனுபவத்தை வைத்தே எழுதுகிறேன். இவ்வளவும் கோசானின் தலைமையில் நடைபெற வேண்டும் என்பது எனது தாழ்மையான வேண்டுகோள்!
-
By அக்னியஷ்த்ரா · Posted
முக்கியமான விடயம் இங்கு நான் அசாத் ஆதரவாளனில்லை. மத்தியகிழக்கு முக்கியமாக எந்த முஸ்லீம் நாடும் நாடுகளுக்கிடையிலான போரினாலோ அல்லது சிவில் யுத்தத்தால் பாதிக்கப்பட்டாலோ நான் அவர்களை பற்றி கிஞ்சித்தும் கவலைப்படுவது கிடையாது. இதற்க்கு காரணம் அவர்களது 1400 ஆண்டுகளுக்கு முற்பட்ட முரண்பாடுகளின் மூட்டையை பற்றியும் அந்த மூட்டையை அவிழ்த்து தினந்தோறும் நுகர்பவன் எப்படியாக சிந்திப்பான் என்றும் போதுமான அறிவிருப்பதாலே. இங்கு நான் குறிப்பிட்டது புலிகள் மட்டும் ஒன்றும் தவறு செய்யாத உத்தமர்கள் அல்ல என்பதனையே. அசாத் போன்ற ஒரு கொடுங்கோலனுடன் புலிகளை ஒப்பிட முடியாது. ஆனால் புலிகளும் மனித உரிமை மீறல்களை படு சர்வசாதாரணமாக செய்துள்ளனர். கருணா புலிகளுடன் சேர்ந்து இயங்கிய காலம் முழுவதும் இழைத்த தவறுகளுக்கு தலைமைப்பீடம் மட்டுமே பொறுப்பு. நீங்கள் சொல்லவருவதைப்பார்த்தால் கிழக்கை கருணாவிடம் தூக்கிகொடுத்துவிட்டு தலைமைப்பீடம் அங்கே என்ன நடக்கிறது என்பதே தெரியாமல் விரல்சூப்பிக்கொண்டிருந்தது என்பது போல் இருக்கிறது. கருணா தலைமையின் கட்டளையை மீறி அனுமதிக்கப்படாத முறையில் நிதி வசூலித்திருந்தால் உடனடியாக தலைமை நடவடிக்கை எடுத்திருக்கவேண்டும் இது தலைமையின் பொறுப்பு. அளவுக்கதிகமான நம்பிக்கையை கருணாமீது வைத்து அவனை அவனது போக்கில் தான்தோன்றித்தனமாக ஆட அனுமத்திருந்தாலும் அதுவும் தலைமையின் பிழை. ஆம் நான் மேலே குறிப்பிட்ட STF இனால் கொல்லப்பட்ட போராளி வசூலித்த பணமூட்டைகளை ஒரு வீட்டில் பதுக்கி வைப்பது வழக்கம், குறிப்பிட்ட அளவு சேர்ந்தவுடன் அவை மொத்தமாக அனுப்பிவைக்கப்படும் இந்த ரகசியம் அந்த போராளி உட்பட இன்னும் இருவருக்கும் மட்டுமே தெரியும். STF வைத்த கண்ணியில் மூவரும் மாட்டி கொல்லப்பட அந்த வீட்டு உரிமையாளர் அவ்வளவு பணத்தையும் ஏப்பம் விட ஒரு காலத்தில் சாராயம் காய்ச்சும் தொழில் செய்தவர் இன்று இரண்டு பெட்ரோல் நிலையங்கள் மற்றும் பல வியாபார நிறுவனங்களுக்கு உரிமையாளர். பெரும் பணமுதலை. அதாகப்பட்டது மக்களிடம் அடித்து பிடுங்கி, எங்கேயோ இருந்த கள்ளச்சாராயக்காரனை கோடீஸ்வரனாக்கி விட்டிருக்கிறார்கள் புலிகள். என்ன செய்வது அவன் ஆடிய ஆட்டம் அப்படி. இவ்வளவிற்கும் இவன் புலிகளின் கப்டன் தர போராளி கூட இல்லை. கிழக்கில் புலிகளை விட புலிகளுடன் சேர்த்தியங்கிய இந்த On & Off வால்களால் மக்கள் பட்ட அவலங்கள் கொஞ்சநஞ்சமல்ல. இவர்களது ஆட்டத்தை புலிகளும் அனுமதித்திருந்தார்கள் . இப்போ நீங்கள் எமது மக்களுக்கு பரிதுரைக்கும் “நடக்க வேண்டியது வேலை” என்ன? 1. காணாமல் போனோர் போராட்டத்தை கைவிட வேண்டும். இல்லை 2. நிலம் மீளளிப்பு கோரிக்கையை கைவிட வேண்டும்? இல்லை 3. யுத்த குற்ற விசாரணையை கைவிட வேண்டும்? இல்லை 4. காணி அதிகாரம் கோரலை கைவிட வேண்டும்? இல்லை 5. பொலிஸ் அதிகாரம் கோரலை கைவிட வேண்டும்? இல்லை இவ்வளவும் நடக்கவேண்டும் இவ்வவளவும் நடக்க அவ்வளவு புலம்பெயர் தமிழர்களும் தங்கள் பிள்ளை குட்டிகளுடன் பெட்டிபடுக்கை எல்லாவற்றையும் கட்டிக்கொண்டு கட்டுநாயக்கா வந்திறங்கி நேரடியாக போராட்டத்தில் ஈடுபடவேண்டும். இலங்கையில் நடக்கவேண்டியவற்றிற்கு இலங்கையில் போராடுவது தானே முறை. அப்போதுதானே சர்வதேசத்திற்கு ஒரு கடும் தொனியில் செய்தியை சொல்லலாம். இலங்கையில் நான்கு கிழவிகளை தெருவோரம் உட்காரவைத்து ஒவ்வொன்றாக போட்டு தள்ளுவதை விட சர்வதேசம் தீர்வு தராததால் நாங்கள் சர்வதேசத்தையே துறந்துவிட்டோம் என்று நாம் சொல்லப்போகும் செய்தியால் சர்வதேசமே ஆட்டம்காணாதா ...? -
By goshan_che · Posted
🤣 இதே கேள்விகளுக்கு 2009 க்கு முன் டக்கு, டக்கு எண்டு எவரை பற்றியும் நினைக்காமல் பதில் சொல்லி இருப்பியள். இப்ப யோசிக்க வேண்டி கிடக்கு. நான் எந்த முத்திரை குத்தலுக்கும் பயப்படாமல் என் பதிலை நாளை எழுதுகிறேன். -
By goshan_che · Posted
யாராவது சுமந்திரனிடம் தொடர்பில் இருந்தால் சாத்ஸ்சின் இந்த பதிவை அவர் கண்ணில் காட்டி விடுங்கள். யாழில் பலர் சுமனை எதிர்க்க பல மறைமுக காரணங்கள் இருப்பது வெளிப்படை. ஆனால் சாத்ஸ் மேலே எழுதி இருப்பது ஒரு சராசரி தமிழனின் மனக்குமுறல்.
-
-
Our picks
-
"முதுமையில் தனிமை [Senior Isolation]"
kandiah Thillaivinayagalingam posted a topic in வாழும் புலம்,
"முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.-
- 4 replies
Picked By
மோகன், -
-
"சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"
kandiah Thillaivinayagalingam posted a topic in மெய்யெனப் படுவது,
"சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"
தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!
“ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
-
- 4 replies
Picked By
மோகன், -
-
வேதத்தில் சாதி இருக்கிறதா?
narathar posted a topic in மெய்யெனப் படுவது,
இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.
ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.-
- 4 replies
Picked By
மோகன், -
-
மனவலி யாத்திரை.....!
shanthy posted a topic in கதை கதையாம்,
மனவலி யாத்திரை.....!
(19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)
அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.-
- 1 reply
Picked By
மோகன், -
-
பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை
mooki posted a topic in சமூகச் சாளரம்,
பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்
Friday, 16 February 2007
காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.-
- 20 replies
Picked By
மோகன், -
-
Recommended Posts