Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

அநுர – மோடி கூட்டறிக்கையில் ’13’ஏன் இல்லை; ‘ இந்து பத்திரிகை ‘கேள்வி

anura-modu.jpg

இலங்கை ஜனாதிபதி அநுரகுமார திசா நாயக்க இந்தியாவுக்குமேற்கொண்டிருந்த விஜ யத்தின் போ து பாரதப்பிரதமர் நரேந்திர மோடியுடனான சந்திப்பை தொடர்ந்து வெளியிடப்பட்ட கூட்டறிக்கையில் மாகாண சபைகளுக்கு சுயாட்சியை வழங்கும் இலங்கை அரசியலமைப்பின் 13வது திருத்தம் குறித்து எந்தக் குறிப்பும் இல்லை என்று ‘ இந்து’ பத்திரிகை சுட்டிக்காட்டியுள்ளது .

”திரும்பவும் அதுவே: இலங்கை ஜனாதிபதியின் இந்திய விஜயம்” என்று மகுடமிட்டு நேற்று புதன்கிழமை ஆசிரியர் தலையங்கம் தீட்டியுள்ள அப்பத்திரிகை மேலும் தெரிவித்திருப்பதாவது,

இலங்கை ஜனாதிபதி அநு ரகுமார திசா நாயக்கவின் இந்தியவிஜய மானது பாரம்பரியத்திற்கு அமைவான அவரது முதலாவது வெளிநாட்டுப் பயணமாகும் .இந்தவிஜயம் இந்தியா-இலங்கை இருதரப்பு உறவுகளின் தொடர்ச்சியைக் குறிக்கிறது. இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடனான அவரது சந்திப்பின் பின்னரான கூட்டறிக்கையானது , 2023 இல் அவரது முன்னோடியான ரணில் விக்கிரமசிங்கவின் விஜயத்திற்குப் பின் வெளியிடப்பட்டிருந்த கூட்டறிக்கையில் உள்ளடக்கப்பட்டிருந்தவை போன்ற அம்சங்களை உள்ளடக்கியிருக்கிறது . இலங்கை தனது ஆ ட் புல எல்லையை இந்தியாவின் பாதுகாப்பு மற்றும் பிராந்திய ஸ்திரத்தன்மைக்கு பாதகமான முறையில் பயன்படுத்தஎந்தவிதத்திலும் அனுமதிக்காது என்ற திசாநாயக்கவின் உறுதிமொழியானது மேலோட்டமாகப் பார்க்கையில், கொழும்பின் நீண்டகாலநிலைப்பாட்டை மீண்டும் வலியுறுத்துவது போல் தோன்றுகிறது.

ஆனால் திசாநாயக்கா வின் மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) ஒரு இடது-சார்பு சீனா சார்பு கட்சி என்ற அபிப்பிராயத்தை கருத்தில் கொள்கையில் இது குறிப்பிடத்தக்கதொன்றாக இருந்தது. அடுத்த மாதம் முடிவடையவுள்ள அனைத்து “வெளிநாட்டு ஆய்வுக் கப்பல்கள்” பயணங்களுக்கும் விக்கிரமசிங்க அரசாங்கத்தின் ஓராண்டு தடைக்காலம் (இந்தியாவின் கவலைகளுக்குப் பிறகு) என்பதன்அடிப்படையில் , இலங்கைக்கு வருகை தரும் சீனக் கப்பல்களுக்கான அனுமதியில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய ஒன்றாகவே அவரது அவதானிப்பை இந்தியா கருதுகிறது. கடந்த 10 ஆண்டுகளில், சீனக் கப்பல்கள் அடிக்கடி வருவது இருதரப்பு உறவுகளில் எரிச்சலை ஏற்படுத்தியது. விக்கிரமசிங்கவின் ஆட்சி “சீனாவை மட்டும் தடுக்க முடியாது” என்று ஆறு மாதங்களுக்கு முன்பு நிலைப்பாடொன்றை எடுத்திருந்த நிலையில் இந்தியாவின் கவலைகளுக்கு ஆட்சி முறைமையானது எவ்வளவு தூரம் உணர்திறன் கொண்டதாக இருக்கும் என்பதைப் பார்க்க வேண்டியுள்ளது .

மேலும் அதானி குழுமத்தின் திட்டங்களின் நிலைமை பற்றி எதிர்பார்க்கப்பட்டிருந்தநிலையில் இரு தலைவர்களின் அறிக்கைகளோ அல்லது கூட்டறிக்கையோ அது பற்றிக் குறிப்பிட்டிருக்க வில்லை. விவசாயம் மற்றும் டிஜிட்டல் பொருளாதாரம் போன்ற துறைகளில் இலங்கைக்கு உதவுவதற்கான இந்தியாவின் அர்ப்பணிப்பு குறித்து கூட்டறிக்கையில் பேசப்பட்டுள்ளது. விவசாயம் தொடர்பான கூட்டுப் பணிக்குழுவை அமைக்கும் திட்டம் வரவேற்கத்தக்கதாகும் . முன்மொழியப்பட்ட பொருளாதார மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு ஒப்பந்தம் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது .

அதுகுறித்து இதுவரை 14 சுற்று பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டுள்ளன. மீன்பிடி பிரச்சனையில், இரு தரப்பினரும் வெளிப்படையாக தங்கள் நிலைப்பாட்டில் நின்றதாக தென்படுகிறது , ஆனால் இரு நாடுகளிலும் உள்ள மீனவர் சங்கங்களுக்கிடையில் ஒரு விரைவான சந்திப்பை எளிதாக்குவதற்கு கொழும்பு உதவ வேண்டும். மிக முக்கியமாக, கூட்டாகஇடம்பெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் மோடியின் அறிக்கையின் ஆங்கிலத்திலான பதிப்பினை பொறுத்தவரை , ஒரு நுணுக்கமான மாற்றம் இருப்பதாகத் தெரிகிறது. நல்லிணக்கம்,இலங்கை தனது அரசியலமைப்பை “முழுமையாக அமுல்படுத்துவதற்கான ” கடப்பாடுகளை நிறைவேற்ற வேண்டியதன் அவசியம்,மாகா ணசபைகளுக்கு தேர்தலைநடத்துதல் போன்ற விடயங்களை மோடி உள்ளடக்கியிருந்த போதிலும், மாகாண சபைகளுக்கு சுயாட்சியை வழங்கும் இலங்கை அரசியலமைப்பின் 13வது திருத்தம் பற்றி எந்த குறிப்பும் இல்லை. 1987 இந்திய-இலங்கை ஒப்பந்தத்தின் விளைவாக, திருத்தத்திற்கு எதிராக ஜே.வி.பி ஒரு கடுமையான போராட்டத்தை மேற்கொண்டிருந்தது .

நவம்பர் 14 பாரா ளுமன்றத் தேர்தலில்திசாநாயக்கா தலைமையிலான கூட்டணி நாடு முழுவதும் பாரிய ஆணையைப் பெற்றுள்ளதால், இந்தியாவுடனான உறவுகளுக்கு ஒரு புதிய திசையைக் காண்பிக்கக்கூடிய சவுகரியமான நிலையில் அவர் உள்ளார். இரு நாடுகளுக்கும் இடையே யான கருத்து வேறுபாடுகளுக்கு தீர்வு காண்பதற்கு இதுவொரு வாய்ப்பாகும்.

 

https://akkinikkunchu.com/?p=303831

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இலங்கை, இந்திய தரப்புகளிடையேயான இந்தசந்திப்பு, வெறுமனே இந்திய நலன் மட்டும் கவனத்தில் கொள்ளப்பட்டுள்ளது, இலங்கைக்கு எந்த நலனும் கிட்டவில்லை, 13 இல்லை என்பதன் மூலம் இலங்கைக்கு நன்மை ஏற்பட்டுள்ளது என  இலங்கை தரப்பினை நம்பவைக்கப்பட்டுள்ளது.

13 நீக்கத்தினால் இலங்கையின் பொருளாதாரத்திற்கோ அல்லது அதன் பாதுகாப்பிற்கோ எந்த நன்மையும் ஏற்படவில்லை, தமிழர் தரப்பிற்கு இது ஒரு பின்னடைவு.

அதே வேளை இலங்கை தரப்பிற்கும் இந்த உடன்பாடுகளின் மூலம் பாதுகாப்பு அச்சுறுத்தல் அதிகரித்துள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

அவர்கள் பேசினாலோ இல்லையென்றாலும் 13ம் திருத்தம் இன்றும் எமது அரசியல் சாசன சட்டம் நடைமுறையில் உள்ளது. 

ஆனால் முழுமையாக நடைமுறைப் படுத்தப்பட முடியாது/மாட்டாது. 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 minute ago, RishiK said:

அவர்கள் பேசினாலோ இல்லையென்றாலும் 13ம் திருத்தம் இன்றும் எமது அரசியல் சாசன சட்டம் நடைமுறையில் உள்ளது. 

ஆனால் முழுமையாக நடைமுறைப் படுத்தப்பட முடியாது/மாட்டாது. 

வேறு ஒரு  திரியில் இந்த சந்திப்பின் பின்னணியில் இடம்பெற்ற பேரம் தொடர்பாக கோசான் குறிப்பிட்டுள்ளார்.

  • Like 1


  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நீங்கள் நினைப்பது போல் நானோ ரசோ அண்ணாவோ சும்முக்கு இதை அனுப்பி வைக்கும் அளவுக்கு அவரை தெரின்வர்கள் அல்ல🤣. அதே போல் சுமந்திரன் மீதான அதிருப்தி ஏன் என்பது பற்றி @ரசோதரன் எழுப்பிய கேள்விகள் மிக நியமானது. அதற்க்கான உங்கள் பதிலும்.  
    • சரி இனி என் நிலைப்பாட்டை சொல்கிறேன். அதற்கு முன் இரெண்டு பொறுப்பு துறப்புகள். 1. சும்மா எழுதுகிறேன் என்பதால் என்னை போராட எல்லாம் கூப்பிட கூடாது. பிறகு எழுதுவதையும் நிப்பாட்டி போடுவன். முன்னர் இன்னொரு திரியில் எழுதியது போல கூட்டாக புலம்பெயர்தேசத்தில் போராடும் போது ஒரு தலை என்பதுதான் என உச்ச எல்லை. 2. கீழே நான் சொல்லும் நிலைப்பாடு - வடக்கு கிழக்கில் தமிழ் மக்கள் பெரும்பான்மையாக தமிழ் தேசிய கட்சிகளை தேர்தலில் ஆதரிக்கும் மட்டும்தான். அவர்கள் கைவிடாமல் இவற்றை கைவிடும் அல்லது கைவிட கோரும் அதிகாரம் எமக்கு இல்லை என்பது என் நிலைப்பாடு. அதே போல் அவர்கள் கைவிட்டால் நானும் அக்னி, ஐலண்ட் போல உஜாலாவுக்கு மாறி விடுவேன்.  ஆனால் அந்த நிலைப்பாட்டை பற்றி பத்தி எழுதி மினகெடமாட்டேன், தேவையும் இல்லை. என நிலைப்பாடு 1. காணாமல் போனோர் போராட்டத்தை கைவிட வேண்டும்.  இல்லை. இப்போ காணாமல் போனோர் என எவரும் இல்லை அனைவரும் கொல்லப்பட்டார்கள் என நான் நம்புகிறேன். ஆனால் - கேள்வி 4க்கு இது முக்கியம். 2. நிலம் மீளளிப்பு கோரிக்கையை கைவிட வேண்டும்?  இல்லை. இதை தனியார் சட்ட, போராட்ட வழிகளில் போராடி பெற வேண்டும். இது அந்த மக்களின் தனியார் காணிகள். இதை அவர்கள் மீட்க மிகுதி அனைவரும் உதவ வேண்டும். 3. யுத்த குற்ற விசாரணையை கைவிட வேண்டும்? இல்லை - மேலே குசா அண்ணை சொன்னது போல் - இதில் இந்தியாவை மீறி இலங்கை தண்டிக்கபட வாய்ப்புகள் அரிது. ஆனால் இதுவும் கேள்வி 4 க்கு முக்கியம். 4. காணி அதிகாரம் கோரலை கைவிட வேண்டும்? இல்லை - இந்த கோரிக்கைதான் சகலதுக்கும் அச்சாணி. இதை கைவிட்டால் - குறைந்த பட்ச அதிகாரபரவலாக்கலை கூட கைவிட்டதற்கு சமன்.  காணாமல் ஆக்கப்பட்டோர், யுத்த குற்ற விசாரணை, புலம்பெயர் மென்வலு இவை அனைத்தையும் leverage பண்ணி இந்த அதிகாரத்தை பெறுவதே நமக்கான குறைந்த பட்ச தீர்வாக இருக்க முடியும்.  5. பொலிஸ் அதிகாரம் கோரலை கைவிட வேண்டும்? ஆம் - ஒரு கடைசி பேரம் பேசலில் காத்திரமன, மீள பெற முடியாத காணி அதிகாரத்தை பெறும் போது, ஒரு காம்ப்ரமைசாக, இனவாதிகளை சாந்தபடுத்த. இதை விட்டு கொடுக்கலாம் (வேறு வழியில்லை - தமிழர் பொலிசை எந்த சிங்களவனும் ஏற்க போவதில்லை). ஆனால் இதன் போது ஒரு பொறுப்பு கூறல் மிக்க, சேவை பிராந்தியங்களின் இன பரம்பலை ஒத்த பொலிஸார்ரை கொண்ட தேசிய பொலிஸ் சேவை அமைவதை வலியுறுத்தலாம்.  
    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்
    • பதிலுக்கு நன்றி. உங்கள் நக்கலில் உள்ள கேள்விக்கு நானே பதில் சொல்லி விடுகிறேன். இந்த நக்கல் நானே யாழில் பலதடவை அடித்ததுதான்🤣. புலம்பெயர் தமிழர் அப்படி எல்லாம் வரமாட்டார்கள். போராட்டம் நடக்கும் போதே எஸ் ஆனவர்கள் (வன்), இப்போ வருவார்களா (வேனா). அப்படி வந்தாலும் மனிசிமாரை டிவோஸ் எடுத்து போட்டுத்தான் வரவேண்டும் - பிள்ளயள் சொல்லவே வேண்டாம். உங்களுக்கு ஒன்று விளங்க வேண்டும் புலம்பெயர் தமிழர் ஊரின் அரசியலில் ஈடுபாடு காட்டுவது என்பது மிக வேகமாக அருகி வரும் ஒன்று. யாழில் எழுதுவோரை பார்த்து நீங்கள் முழு சமூகமும் இப்படி என எண்ணக்கூடாது. முதல் புலம்பெயர் தலைமுறை கொஞ்சம் கொஞ்சமாக விடை பெறுகிறது.  ஆகவே  ஊரில் உள்ள உங்களுக்கு இந்த புலம்பெயர் சமூகத்தின் வெளிநாட்டு இருப்பின் மூலமாக ஒரு அரசியல் அளுத்தம் கொடுத்து ஏதேனும் நல்லது நடப்பதற்கான காலச்சாளரம் (window of opportunity) மூடிக்கொண்டே வருகிறது. யூதர்கள் போல் இந்த உணர்வை, இருப்பின்பால் வரும் மென்வலுவை, அடுத்த சந்ததிகளில் நாம் கட்டிகாப்போமா, பயன்படுத்துவோமா என்பது பலத்த கேள்விக்குரியதே. புலம்பெயர் தமிழர் நாமும் அப்படி ஓர்மமாக இருக்க வாய்ப்பில்லை, நாம் அப்படி இருந்தாலும் புலத்தில் இருக்கும் நீங்கள் உங்கள் வாயால் போட்டடிப்பீர்கள், இதை இனவாதிகள் மேலும் தூண்டி விடுவார்கள். இதுதான் இந்த புலம்பெயர் தமிழர் மென்வலுவின் போக்குவழி (trajectory). நிற்க, ஆனால் மேலே கேட்ட கேள்வி இப்போதும் புலம்பெயர் தேசத்தில் ஊர் அரசியலில் ஆர்வமாக இருப்போரிடம் + ஊரில் இருந்து எழுதுவோரிடம்.   ஊரில் உள்ள மக்களில் இன்று வரை (கிழக்கில் அறுதி பெரும்பான்மை) தமிழ் தேசிய அரசியலை தேர்ந்து எடுத்துள்ள நிலையில் - அவரவர் நிலைப்பாடு என்ன என்பதையே. உண்மையில் சாத்தான் சொன்னது போல இது பொறி வைக்கும் கேள்வி அல்ல. நீங்கள் நக்கலாக இல்லை என சொன்னாலுக், மேலே உள்ள அனைத்தையும் ஆம் என்றே பதில் அளிப்பீர்கள் என தெரிந்ததே.  அதுதான்  யதார்தம். என்றைக்கு நீங்கள் கருணா/பிள்ளையான் வாக்காளராக மாறினீர்களோ அன்றே நீங்கள் இந்த நிலைப்பாட்டுக்கு வந்து விட்டீர்கள். ஆனால் உங்களிடம் வெளிப்படைத்தன்மை உள்ளது. அதே போல் வட கிழக்கு தமிழ் வாக்காளர் பெரும்பான்மை இந்த கேள்விகளுக்கு இல்லை என்றே வாக்களிக்கும் என கடந்த தேர்தல் முடிவை வைத்து ஒரு எடுகோளை எடுக்கலாம் என நினைக்கிறேன்.  இந்த சூழ்நிலையில் புதிதாக சிந்திப்போம் என கூறும் கு.சா அண்ணை, சாத்ஸ் போன்றோரை நோக்கியே எனது கேள்வி. நீங்கள் புத்தர் சிலை முளைத்தால், இனி என்ன செய்வது என கடந்து போக அல்லது அனுகூலம் வரின் நிண்டு கும்பிட தயாரான ஆள்…. ஆனால் உங்களை போல அல்ல இவர்கள். புத்தர் சிலை முளைத்தாலும் கெம்புகிறார்கள், அனுர இனவாதியாக செயல்பட்டார் என்பதையும் ஏற்கிறார்கள். ஆனால் புதிதாக முயல்வோம் என்கிறார்கள். அவகாசம் கொடுப்போம் என்கிறார்கள். ரணில், மைத்திரி காலத்தில் சுமந்திரன் எடுத்த நிலைப்பாட்டை எடுக்கும் இவர்களுக்குத்தான் என் கேள்விகள். உங்களுக்கோ, (எனது பார்வையில்) @islandக்கோ அல்ல.  தமிழ்தேசியத்தை பொறுத்த மட்டில் நீங்கள் இருவரும் பூட்ட கேசுகள். ரதி அன்ரியையும், யாழ், வன்னி, மட்டகளப்பில் என் பி பிக்கு போட்டவர்களையும் இந்த பூட்ட கேசு லிஸ்டில் சேர்க்கலாம். எனது கேள்வி இப்போதும் தமிழ் தேசிய அரசியல் நிலைப்பாட்டில் இருந்த படி அனுர ஆதரவு நிலையிலும் இருப்போருக்க்கே. ஊரில் தமிழ்தேசிய கட்சிகளுக்கு வாக்கு போட்டோருக்கும் என் கேள்விகள் அல்ல. அவர்கள் நிலைப்பாடும் உங்களை போலவே தெளிவானது. ஆனால் உங்களினற்கு நேர் எதிரானது.   எனக்கு எழும்பி பல்லு தீட்டவே சோம்பலா கிடக்கு…🤣
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.