Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

Published By: DIGITAL DESK 2   20 DEC, 2024 | 05:48 PM

image

(எம்.மனோசித்ரா)

இந்திய கடலோர பாதுகாப்பு படையின் 4 கப்பல்கள் கொழும்பு மற்றும் காலி துறைமுகங்களுக்கு விஜயம் செய்யவுள்ளன. இந்திய கடலோர பாதுகாப்பு படை கப்பல்களான வைபவ் மற்றும் அபிராஜ்   திங்கட்கிழமை (23) கொழும்பு துறைமுகத்தை வந்தடையவுள்ளன.

இக்கப்பல்கள் 23 - 27 வரை அங்கு நங்கூரமிடப்பட்டிருக்கும் என்பதோடு, ஏனைய இரு கப்பல்களும் 29ஆம் திகதி முதல் ஜனவரி 2ஆம் திகதி வரை காலி துறைமுகத்துக்கும் செல்லவுள்ளன.

இக்கப்பல்களின் கட்டளை அதிகாரிகள் இலங்கை கடலோரக் பாதுகாப்பு படையின் பணிப்பாளர் நாயகம் மற்றும் ஏனைய சிரேஷ்ட அதிகாரிகளை சந்திக்கவுள்ளனர்.  மேலும் தீயணைப்பு, அனர்த்தங்கள், கடல் மாசடைவை எதிர்கொள்ளல் உள்ளிட்ட பல்வேறு தொழில்முறை தொடர்புகள் பற்றிய கூட்டுப் பயிற்சி ஆகியவை விஜயத்தின் போது இடம்பெறவுள்ளன.  

இவை தவிர யோகா நிகழ்வுகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.  பிளாஸ்டிக் மாசுபாட்டிற்கு எதிரான விழிப்புணர்வை நோக்கிய பயணத்தின் போது கப்பல்கள் கடற்கரையை சுத்தம் செய்தல் மற்றும் நடைபயிற்சி போன்ற சமூக செயற்பாடுகளிலும் இக்கப்பல்கள் ஈடுபடவுள்ளன.  

இந்திய கடலோரக் காவல்படை மற்றும் அதன் திறனைப் பற்றிய விழிப்புணர்வை மக்களுடன் பகிர்ந்து கொள்வதற்கும் மேம்படுத்துவதற்கும், இலங்கை கடலோர பாதுகாப்பு பணியாளர்களுக்கு அவற்றை பார்வையிட அனுமதி வழங்கப்படவுள்ளது.  

பிராந்தியத்தில் கடல்சார் பாதுகாப்பிற்கான பகிரப்பட்ட சவால்களை திறம்பட எதிர்கொள்வதற்காக இலங்கை கடலோர பாதுகாப்பு படையின் திறன்களை மேம்படுத்துவதற்கு இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான ஒத்துழைப்பின் சாத்தியக்கூறுகளை கருத்தில் கொண்டு இந்த கப்பல்களின் விஜயம் அமைந்துள்ளது.

https://www.virakesari.lk/article/201761

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இந்த வாரம்தானே சீன மருத்துவ ஆராச்சிக்கப்பல் வருவதாக இருந்தது...இந்தியாவில் சொருகின ஆப்பு ஸ்ரங்கானதா?

  • கருத்துக்கள உறவுகள்
Posted
8 hours ago, alvayan said:

இந்த வாரம்தானே சீன மருத்துவ ஆராச்சிக்கப்பல் வருவதாக இருந்தது...இந்தியாவில் சொருகின ஆப்பு ஸ்ரங்கானதா?

ஆப்பு பின்பக்கமாக சொருகியிருந்தால் கொஞ்சம் கஸ்டமா தான் இருக்கும்....என்ன இருந்தாலும் நம்ம தோழர் சுழிச்சு வெட்டி ஓடுவார் என நினைக்கின்றேன்..அமெரிக்கா தென்னை ஆராச்சியில் உளவு பார்க்க ...இந்தியா கப்பலில் உளவு பார்க்கப்போயினம் போல......போனகிழமை அதானிக்கு ஆப்பு ,வெளியேற்றுவேன்,சகல திட்டங்களும் மீள்பரிசீலனை என்றார்கள் இந்த கிழமை அதாணிக்கு அப்பம் கொடுத்து வரவேற்கின்றனர்

  • Haha 1


  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Posts

  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.