Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

செங்கடலில் சொந்த போர் விமானத்தை தவறுதலாக சுட்டு வீழ்த்திய அமெரிக்கா!

செங்கடலில் சொந்த போர் விமானத்தை தவறுதலாக சுட்டு வீழ்த்திய அமெரிக்கா!

செங்கடலில் தனது சொந்த போர் விமானம் ஒன்றை ஞாயிற்றுக்கிழமை (22) அதிகாலை தவறுதலாக சுட்டு வீழ்த்தியதாக அமெரிக்க இராணுவம் கூறியது.

அந் நாட்டு நேரப்படி ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 03.00 மணியளவில் சுட்டு வீழ்த்தப்பட்ட F/A-18F போர் விமானத்தில் இருந்த இரு விமானிகளும் சிறு காயங்களுடன் மீட்கப்பட்டதாக அமெரிக்க இராணுவம் உறுதிப்படுத்தியது.

சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அமெரிக்க மத்திய கட்டளை ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

யேமனின் ஹவுத்தி கிளர்ச்சியாளர்களை குறிவைத்து அமெரிக்க இராணுவம் வான்வழித் தாக்குதல்களை நடத்தியதால் இந்த சம்பவம் நிகழ்ந்தது.

எனினும், அமெரிக்க இராணுவத்தின் மத்திய கட்டளை அந்த நேரத்தில் சுட்டு வீழ்த்தப்பட்ட விமானத்தின் விமானிகள் மேற்கொண்ட பணி என்ன என்பதை விவரிக்கவில்லை.

1200 பேரைக் கொன்று 250 பேரை பயணக் கைதிகளாகக் கைப்பற்றிய இஸ்ரேல் மீதான ஹமாஸின் திடீர் தாக்குதலுக்குப் பின்னர் 2023 ஒக்டோபரில் காசா பகுதியில் இஸ்ரேல்-ஹமாஸ் போர் தொடங்கியதில் இருந்து சுமார் 100 வணிகக் கப்பல்களை ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் மூலம் ஹவுத்திகள் குறிவைத்துள்ளனர்.

காசாவில் இஸ்ரேலின் தாக்குதலில் 45,000க்கும் அதிகமான பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே, காசாவில் ஹமாஸுக்கு எதிரான இஸ்ரேலின் போரை நிறுத்துவதற்கு இஸ்ரேல், அமெரிக்கா அல்லது ஐக்கிய இராச்சியம் ஆகியவற்றுடன் தொடர்புடைய கப்பல்களை குறிவைப்பதாக ஹவுத்திகள் கூறுகின்றனர்.

இந்த நிலையில் ஹவுத்திகளை குறிவைத்து அமெரிக்கா செங்கடல் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் தனது வான்வழித் தாக்குதல்களை முடுக்கிவிட்டுள்ளது.

https://athavannews.com/2024/1413449



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.