Jump to content
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

2024 இல் சுற்றுலா பயணிகளின் வருகை 2 மில்லியனை விஞ்சியது!

2024 இல் சுற்றுலா பயணிகளின் வருகை 2 மில்லியனை விஞ்சியது!

2024 ஆம் ஆண்டு இலங்கைக்கு வருகை தந்த மொத்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை இன்று (26) இரண்டு மில்லியனைக் கடந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தாய்லாந்தை சேர்ந்த தம்பதியரே அந்த இலக்கை அடைந்ததாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தகவல்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

டிசம்பர் முதல் பாதியில் மாத்திரம் மொத்தம் 97,115 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளனர்.

அதாவது ஒரு நாளைக்கு சராசரியாக 6,474 சுற்றுலாப் பயணிகள் வந்துள்ளனர்.

https://athavannews.com/2024/1414160

  • கருத்துக்கள உறவுகள்
Posted

“அதாவது ஒரு நாளைக்கு சராசரியாக 6,474 சுற்றுலாப் பயணிகள் வந்துள்ளனர்”

?????

ஒருநாளைக்கு 6,474 என்றால் மணித்தியாலத்திற்கு 269 சுற்றாலாப்  பயணிகள். 

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
50 minutes ago, MEERA said:

“அதாவது ஒரு நாளைக்கு சராசரியாக 6,474 சுற்றுலாப் பயணிகள் வந்துள்ளனர்”

?????

ஒருநாளைக்கு 6,474 என்றால் மணித்தியாலத்திற்கு 269 சுற்றாலாப்  பயணிகள். 

அவர்கள்  எல்லோரும்... ஐரோப்பிய, அமெரிக்க சுற்றுலா பிரயாணிகளாக இருக்க வாய்ப்பில்லை.
இந்திய, ரஷ்ய, சீன, பாகிஸ்தானிய பிரஜைகளையும் சேர்க்க....  6,474 வரும் என்று நினைக்கின்றேன்.

வந்ததில் அரைவாசி.... புளிச்சாதமும், சப்பாத்தியும், பருப்புக் கறியும்  
ஊரில் இருந்தே, "பார்சல்" கட்டிக் கொண்டு வாற ஆட்கள். 😂 🤣

Edited by தமிழ் சிறி
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
4 hours ago, MEERA said:

“அதாவது ஒரு நாளைக்கு சராசரியாக 6,474 சுற்றுலாப் பயணிகள் வந்துள்ளனர்”

?????

ஒருநாளைக்கு 6,474 என்றால் மணித்தியாலத்திற்கு 269 சுற்றாலாப்  பயணிகள். 

2,000,000/365=5,479.452 நாளொன்றுக்கு

5,479.5/24=228.313 மணத்தியாலம் ஒன்றுக்கு

228/60=3.8  நிமிடத்துக்கு

——————-

கட்டுநாயக்காவில் நாளொன்றுக்கு சராசரியாக 85 விமானங்கள் வருகை/செல்கை.

5480/85=64.471 

ஒரு விமானத்தில் சராசரியாக 64 ஆட்கள் வந்தாலே வருடத்துக்கு 2 மில்லியனை எட்டி விடலாம்.

நாளுக்கு 6479 பேர் வந்தால் -

6479/85=76.224 

ஒரு விமானத்தில் 76 பேர் வந்தால் போதும்.

Edited by goshan_che
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

இலங்கையில் பிறந்தாலும் விருந்தினர் வீசாவூடாக செல்லும்போது நாங்களும் சுற்றுலா பயணிகள் தானே.

நானே 2024 இரண்டு தடவைகள் சென்று வந்தேன்.

கட்டுநாயக்கா விமான நிலையத்தில் ஆஸ்பத்திரியில் காணப்படும் கதிரைகள் போல அல்லாமல் கொஞ்சம் சாய்ஞ்சு படுக்கக்கூடியவாறு இருக்கைகள் அமைத்தால் நல்லது. 

விமான நிலையத்தில் இலங்கை காசை கொடுத்து சிற்றுண்டி, தேநீர் தவிர வேறு பொருட்கள் வாங்க முடியாது என்பது கொடுமை.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, நியாயம் said:

நானும் 3தரம் போய் வந்தேன். 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
10 hours ago, தமிழ் சிறி said:

அவர்கள்  எல்லோரும்... ஐரோப்பிய, அமெரிக்க சுற்றுலா பிரயாணிகளாக இருக்க வாய்ப்பில்லை.
இந்திய, ரஷ்ய, சீன, பாகிஸ்தானிய பிரஜைகளையும் சேர்க்க....  6,474 வரும் என்று நினைக்கின்றேன்.

வந்ததில் அரைவாசி.... புளிச்சாதமும், சப்பாத்தியும், பருப்புக் கறியும்  
ஊரில் இருந்தே, "பார்சல்" கட்டிக் கொண்டு வாற ஆட்கள். 😂 🤣

உக்ரேன் சுற்றுலாக்காரரும் எக்கச்சக்கம் எண்டதை உங்கள் கவனத்திற்கு கொண்டு வருகின்றேன். 😎

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, குமாரசாமி said:

உக்ரேன் சுற்றுலாக்காரரும் எக்கச்சக்கம் எண்டதை உங்கள் கவனத்திற்கு கொண்டு வருகின்றேன். 😎

இந்தியா, ரஸ்யா, யூகே, ஜேர்மனி,  முதல் 4 நாடுகளாக வருவதே வழமை.

உக்ரேன் அநேகம் 10 வதுக்கு பின்புதான்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

அடுத்த சில வருடங்களில் இரண்டு மில்லியன்களை நாலு மில்லியன்களாக அதிகரிக்க முடிந்தால், இலங்கை நிமிர்ந்துவிடும்...................👍.

ஆனாலும், வௌவாலில் இருந்து பரவின வைரஸ் போல, எங்களின் சக்திக்கு அப்பாற்பட்ட விசயங்கள் பலவும் இந்த உலகத்தில் நடந்து கொண்டிருக்கின்றன..................😁.  

Edited by ரசோதரன்

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.