Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ட்ரம்பின் ஹோட்டலுக்கு வெளியே வெடித்து சிதறிய டெஸ்லா சைபர்ட்ரக்!

ட்ரம்பின் ஹோட்டலுக்கு வெளியே வெடித்து சிதறிய டெஸ்லா சைபர்ட்ரக்!

அமெரிக்காவின் அடுத்த ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட டொனால்ட் ட்ரம்பின் லாஸ் வேகாஸில் (Las Vegas) அமைந்துள்ள ஹோட்டலுக்கு வெளியே டெஸ்லா சைபர்ட்ரக் வாகனம் ஒன்று வெடித்துச் சிதறியது.

புத்தாண்டு தினமான புதன்கிழமையன்று (01) இடம்பெற்ற இந்த வெடிப்பில் வாகனத்திற்குள் இருந்த அதன் சாரதி உயிரிழந்ததுடன், மேலும் 7 பேர் காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

skynews-tesla-las-vegas_6789653.jpg?ssl=

இந்த வெடிப்பு பயங்கரவாத தாக்குதலாக இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் அமெரிக்க புலனாய்வு அதிகாரிகள் தற்சமயம் விசாரணையை ஆரம்பித்துள்ளனர்.

வெடித்துச் சிதறிய டெஸ்லா சைபர்ட்ரக் எலோன் மஸ்க்கிற்கு சொந்தமானது.

அவர் டொனால்ட் ட்ரம்பின் நெருங்கிய நண்பராக இருந்து வருகிறார் – அவரது வெற்றிகரமான 2024 அமெரிக்க தேர்தல் பிரச்சாரத்திற்கு மில்லியன் கணக்கான நன்கொடைகளை பில்லியனர் வழங்கினார்.

அது மாத்திரமல்லாது அவர் ட்ரம்பின் அரசாங்க செயல்திறன் துறையை வழிநடத்தும் பணியையும் பெற்றுள்ளார்.

President-elect Donald Trump greets Elon Musk before the launch of the sixth test flight of the SpaceX Starship rocket Tuesday, Nov. 19, 2024 in Boca Chica, Texas. (Brandon Bell/Pool via AP)

இதனிடையே லாஸ் வேகாஸில் நடந்த சம்பவம் ஒரு சாத்தியமான பயங்கரவாத தாக்குதலாக பார்க்கப்படுவதாக மூன்று மூத்த அமெரிக்க சட்ட அமுலாக்க அதிகாரிகள் கூறியுள்ளனர்.

எனினும், வெடிப்புக்கான காரணத்தை இதுவரை அதிகாரிகள் கண்டறியவில்லை.

https://athavannews.com/2025/1414932

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, தமிழ் சிறி said:

டொனால்ட் ட்ரம்பின் லாஸ் வேகாஸில் (Las Vegas) அமைந்துள்ள ஹோட்டலுக்கு வெளியே டெஸ்லா சைபர்ட்ரக் வாகனம் ஒன்று வெடித்துச் சிதறியது.

அமெரிக்கர்கள் எப்பவும் புதுமையை நாடிநிற்பவர்கள். புதுவருடம் உதயத்தில் வெடி கொளுத்தி மகிழ்வது உலகெங்கும் சாதாரண விடையம். இந்த மகிழ்வை அடைவதற்குப் புதுமையாக வாகனம் ஒன்றைக் கொளுத்திப் போட்டு மகிழ்ந்துள்ளார்கள் அங்குள்ள மக்கள் அவ்வளவுதான்.💃🏼🕺

Edited by Paanch

  • கருத்துக்கள உறவுகள்

"அமெரிக்கா வீழ்ச்சியை நோக்கி செல்கின்றது" - விழித்துக்கொள்ளவேண்டிய தருணம் இது - டிரம்பின் ஹோட்டலின் முன்னால் வாகனத்தை வெடிக்க வைத்தவரின் கையடக்க தொலைபேசியில் குறிப்பு

05 JAN, 2025 | 11:38 AM
image
 

அமெரிக்காவின் லாஸ்வெகாசில் கடந்த வாரம் டொனால்ட் டிரம்பின் ஹோட்டலின் முன்னால் வெடித்து சிதறிய வாகனத்தை செலுத்திய நபர் அமெரிக்கா வீழ்ச்சியை நோக்கி செல்கின்றது என குறிப்பொன்றை எழுதிவைத்துள்ளமை விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.

மத்தியு லிவெல்ஸ்பேர்கெர் அமெரிக்கா விழித்துக்கொள்வதற்காக தான் இந்த வெடிப்பு சம்பவத்தில் ஈடுபட்டதாக எழுதியுள்ளார்.

லாஸ்வெகாசில் டொனால்ட் டிரம்பின் ஹோட்டலிற்கு வெளியே வெடித்து சிதறிய டிரக் வண்டியின் வாகனச்சாரதி அமெரிக்க இராணுவத்தில் பணிபுரிபவர் என விசாரணைகளை மேற்கொள்ளும் தரப்பை சேர்ந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

வாகனத்தை செலுத்தியவர் மத்தியுஅலன் லிவல்ஸ்பேர்கெர் இவர் அமெரிக்க இராணுவத்தின் விசேட படைப்பிரிவான கிறீன் பெரெட்டில் பணியாற்றியவர் என விசாரணையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

விசேட படைப்பிரிவின் சிரேஸ்ட தரத்தில் உள்ள ஒருவர் ஜேர்மனியில் பணியில் உள்ள இவர் சம்பவம் இடம்பெற்றவேளை விடுமுறையில் இருந்தார் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மரணித்த வேளை அவர் விடுப்பிலிருந்தார் என தெரிவித்துள்ள அமெரிக்க இராணுவம் எனினும் அவர் தன்னைதானே சுட்டுதற்கொலை செய்து கொள்ள முயன்றவேளை உயிரிழந்தார் என்பதை தெரிவிக்கவில்லை.

டிரம்ப் சர்வதேச ஹோட்டலிற்கு வெளியே இடம்பெற்ற வெடிப்பு சம்பவத்தின் நோக்கம் குறித்து கண்டறிவதற்காக அதிகாரிகள் மத்தியு லிவெல்ஸ்பேர்கெரின் இலத்திரனியல் சாதனங்களை தொடர்ந்தும் ஆராய்ந்து வருகின்றனர்.

las_vegas_bomb1.jpg

மத்தியு லிவெல்ஸ்பேர்கெரின் ஐபோனில் கண்டெடுக்கப்பட்ட குறிப்புகளில் அவரது தனிப்பட் துயரங்கள் மற்றும் அரசியல் எதிர்பார்ப்புகள் குறித்த பல விடயங்கள் காணப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

'இராணுவத்தில் உள்ள எனது சகாக்கள்முன்னாள் போர்வீரர்கள் மற்றும் அனைத்து அமெரிக்கர்களும் விழித்துக்கொள்ள வேண்டிய தருணம் இது. தங்களை வளப்படுத்திக்கொள்ளும் நோக்கத்துடன் மாத்திரம் செயற்படும் பலவீனமான தகுதியற்றவர்களால்  நாங்கள் ஆளப்படுகின்றோம்" என அவர் தெரிவித்துள்ளார்.

இரண்டாவது குறிப்பில் அவர் "நாங்கள் அமெரிக்காவின் மக்கள் உலகில் வாழ்ந்த தலைசிறந்த மக்கள்ஆனால் நாங்கள் தற்போது நோய்வாய்ப்பட்டு வீழ்ச்சியை நோக்கி சென்றுகொண்டிருக்கின்றோம்" என தெரிவித்துள்ளார்.

"இது ஒரு பயங்கரவாத தாக்குதல் இல்லை, இது விழித்துக்கொள்வதற்கான ஒரு அழைப்புஅமெரிக்கர்கள் விந்தையான வேடிக்கையான விடயங்கள் குறித்தும் வன்முறைகள் குறித்தும் கவனம் செலுத்துகின்றார்கள் இதன் காரணமாக இவ்வாறானதொரு சம்பவத்தின் மூலமே எனது செய்தியை தெரிவிக்க முடியும் என கருதினேன்" என அவர் குறிப்பிட்டுள்ளார்.

'நான்  ஏன் தனிப்பட்ட முறையில் இதனை செய்தேன்"? நான் இழந்த சகோதரர்கள் பற்றிய என் மனதை நான் தூய்மைப்படுத்தவேண்டும். நான் பலியெடுத்த உயிர்கள் குறித்த வாழ்க்கையின் சுமைகளில் இருந்து என்னை விடுவித்துக்கொள்ளவேண்டும" என அவர் தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/202998

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்கா செத்த கிளியாகி பல ஆண்டுகள் ஆகிவிட்டது😪,

வியாட்னம், ஆப்கான், ஈராக், லிபியாவில் ...இப்படி பல நாடுகளில் தலையிட்டு துண்டை காணம் துனியை காணமென ஓடி, வடிவேல் மாதிரி இப்ப வீர வசனங்கள் மட்டுமே😁

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.