Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, goshan_che said:

எனக்கு ஒரு விபரீத ஆசை.

இப்படி நடக்ககூடாது, ஆனால் ஒரு சிலருக்கு தாம் கொப்பில் இருந்து மரத்தை வெட்டியதன் பலனை பார்த்து…கோஷான் ராசா நீங்கள் சொன்னது சரிதான் அப்பு என ஏற்கும் ஒரு நிலை வரவேண்டும் என என் மனது சில சமயம் விபரீதமாக சிந்திப்பதுண்டு.

அது இதுதான்.

AfD ஆட்சிக்கு வரவேண்டும். ஜேர்மனியை ஈயுவில், ஐரோப்பிய மனித உரிமை சாசனத்தில் இருந்து AfD விலக்க வேண்டும்.

AKD ஆட்சிமாற்றம் அத்தோடு இலங்கையில் ஜனநாயகம் திரும்பி விட்டது என அறிவித்து, ஜேர்மனியில் இருந்து மீள வருவோர் அனைவருக்கும் இலங்கையில் நிபந்தனை அற்ற பொதுமன்னிப்பு என AfD, AkD ஒப்பந்தம் போட வேண்டும்.

இந்த ஒப்பந்தத்தின் படி 1945 க்கு பின் ஜேர்மனி வந்த அனைவரும், அவர்களின் வம்சாவழியினரும், ஜேர்மன் பாஸ்போர்ட் இருப்பினும் இலங்கைக்கு திருப்பி அனுப்பபட வேண்டும். ஜேர்மன் கலப்பின பிள்ளைகள் மட்டும் தங்கலாம்.

இலண்டன் லூட்டன் ஏர்போட்டில் சனம் அலை மோதும்.

அப்போ நான் அங்கே போய் I told you so என சொல்ல வேண்டும்.

இந்த விபரீத ஆசை நடக்கவே கூடாது. ஆனால் சிலசமயம் நடந்தால் நல்லா இருக்கும் என்றும் தோன்றும்.

பிகு

மேலே விபரித்த விடயம் அப்படி ஒண்டும் நடக்கவியலாத கற்பனை அல்ல. யூதருக்கு ஒரு final solution கொடுக்கபட்ட நாட்டில், அதே நிலை ஏனைய இனங்களுக்கு ஏற்படலாம்.

History doesn’t repeat itself but it often rhymes

- Mark Twain -

உங்களுக்கு ஆசை! எனக்கோ பிரார்த்தனை😎! (வேறெந்த வழியில் தான் இதைப் புரிய வைப்பது?)

3 minutes ago, குமாரசாமி said:

சும்மா வெறிக்கதை எழுதக்கூடாது கோசான்..😂
இஞ்சை வந்த வெளிநாட்டுக்காரர் ஒழுங்காய் வேலைக்கு போய் வரியை கட்டிக்கொண்டு தாங்களும் தங்கட பாடும் எண்டு இருந்தால் ஏன் இந்த Afd போன்ற கட்சிகள் உருவாகப்போகுது? 😎

இதுக்குத் தான் நீங்கள் வாழும் நாடுகளின் வரலாற்றை சிற்றிசன்ஷிப் சோதனைக்கு மட்டுமில்லாமல், சொந்த அறிவுக்காகவும் வாசிக்க வேண்டுமென்பது. 30 களில் யூதர்கள் ஒழுங்காக ஜேர்மனிக்காக நீங்கள் உழைப்பதை விட அதிகம் உழைத்து, வரியெல்லாம் கட்டிக் கொண்டிருந்த போது தான் நாசிக் கட்சி உருவானது. அல்பேர்ட் ஸ்பியரின் புத்தகங்கள் ஜேர்மனியில் கிடைத்தால் வாசித்துப் பாருங்கள். 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
7 minutes ago, Justin said:

உங்களுக்கு ஆசை! எனக்கோ பிரார்த்தனை😎! (வேறெந்த வழியில் தான் இதைப் புரிய வைப்பது?)

இதுக்குத் தான் நீங்கள் வாழும் நாடுகளின் வரலாற்றை சிற்றிசன்ஷிப் சோதனைக்கு மட்டுமில்லாமல், சொந்த அறிவுக்காகவும் வாசிக்க வேண்டுமென்பது. 30 களில் யூதர்கள் ஒழுங்காக ஜேர்மனிக்காக நீங்கள் உழைப்பதை விட அதிகம் உழைத்து, வரியெல்லாம் கட்டிக் கொண்டிருந்த போது தான் நாசிக் கட்சி உருவானது. அல்பேர்ட் ஸ்பியரின் புத்தகங்கள் ஜேர்மனியில் கிடைத்தால் வாசித்துப் பாருங்கள். 

அன்றை நிலை இன்றில்லை. தினசரி செய்திகளை வாசியுங்கள். 
அன்றைய வரலாறுகள் இன்றைய நாட்களுக்கு சரிப்பட்டு வராது.

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, குமாரசாமி said:

அன்றை நிலை இன்றில்லை. தினசரி செய்திகளை வாசியுங்கள். 
அன்றைய வரலாறுகள் இன்றைய நாட்களுக்கு சரிப்பட்டு வராது.

அன்றைய நிலையின் மீளோட்டம் தான் இன்றைய நிலை. செய்தியில் மில்லியன் சிரியர்களில், ஒரு சிரியன் செய்த கொலை வீடியோவாக வெளிவர அதைப் பார்த்து விட்டு எல்லா சிரியனும் குற்றம் செய்கிறான் என்று AfD உங்கள் போன்றோரை மண்டை  கழுவுவர்!

  • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, குமாரசாமி said:

சும்மா வெறிக்கதை எழுதக்கூடாது கோசான்..😂
இஞ்சை வந்த வெளிநாட்டுக்காரர் ஒழுங்காய் வேலைக்கு போய் வரியை கட்டிக்கொண்டு தாங்களும் தங்கட பாடும் எண்டு இருந்தால் ஏன் இந்த Afd போன்ற கட்சிகள் உருவாகப்போகுது? 😎

இதில் வெறிக்கதை ஏதும் இல்லை. நடக்ககூடியதைதான் எழுதுகிறேன்.

சில நேரம் சொறிக்கதை என்பதை வெறிக்கதை என பிழையாக எழுதி விட்டீர்களோ🤣.

——-

நான் மட்டற்ற குடிவரவின் ஆதரவாளன் அல்ல. அதே போல் குற்ற செயல்களின் ஆதரவாளனும் அல்ல.

ஆனால் குடியேறிகள் அதிகம் வராத காலத்தில் கூட இந்த அமைப்பின் முன்னோடிகள் இதே கொள்கையுடந்தான் இருந்தார்கள் இல்லையா?

இவர்களுக்கு இனவாதம் ரத்தத்தில் ஊறியது. அண்மைய குடிவரவு அதிகரிப்பு ஒரு நல்ல ஊன்றுகோல். அவ்வளவே.

ஏதோ நேற்று வரை ஜேசு, புத்தர் போல் இருந்தவர்கள், கடந்த 10 வருடத்தில் இனவாதிகளாகி இந்த கட்சி பலமானது என்பது போல் நீங்கள் எழுதுகிறீர்கள்.

அது மட்டும் அல்ல, புட்டினும், ஏர்டோகனும், அசாத்தும் குடிவரவை ஒரு ஆயுதமாக பாவித்தமை கூட நீங்கள் அறியாததல்லவே?

குற்ற செயல்கள் எவர் செய்தாலும் தண்டிக்கபடவேண்டும். உள்ளூர்வாசி செய்தால் ஓக்கே, பழைய குடியேறி செய்தால் பாதி ஓக்கே, அண்மைய குடியேறி செய்தால் பிழை என்பதல்லவே. 

29 minutes ago, Justin said:

உங்களுக்கு ஆசை! எனக்கோ பிரார்த்தனை😎! (வேறெந்த வழியில் தான் இதைப் புரிய வைப்பது?)

அப்படி நடந்தாலும் அது எம்போன்றோருக்கு ஒரு pyrrhic victory ஆகவே அமையும். 

Edited by goshan_che

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.