Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
16 JAN, 2025 | 10:34 AM
image

மன்னார் நீதவான் நீதிமன்றத்திற்கு அருகில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் இருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் இன்று வியாழக்கிழமை (16) காலை இடம்பெற்றுள்ளது.

மன்னார் நீதிவான் நீதிமன்றத்திற்கு அருகில் மோட்டார் சைக்கிளில் சென்ற இனந்தெரியாத இருவரால் இந்த துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

வழக்கு விசாரணை ஒன்று தொடர்பில் நீதிமன்றத்திற்கு வருகை தந்திருந்தவர்களே துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகியுள்ளதாக  பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

இதனால் அப்பகுதியில் பெரும் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

jk.jpg

trfg.jpg

gfh.jpg

7yui.jpg

https://www.virakesari.lk/article/203933

  • கருத்துக்கள உறவுகள்

போதைவஸ்து கடத்தலுடன் தொடர்புபட்ட பழைய கொலை வழக்காக இருக்கும். 

  • கருத்துக்கள உறவுகள்

இறந்தவர்கள் வழக்காளிகளா அல்லது சாட்சிகளா? குற்றவாளிகளாக இருக்க சான்ஸ் குறைவு

  • கருத்துக்கள உறவுகள்

மன்னார் பகுதியில் இப்படியொரு சம்பவம் ஏதும் முன்பு நடைபெற்றதாக தெரியவில்லையே. வன்முறை கலாச்சாரம் மன்னார்வரை வந்துவிட்டது போலும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மன்னார் நீதிமன்றுக்கு அருகில் துப்பாக்கிச் சூடு; இருவர் பலி, இருவர் காயம்

16 JAN, 2025 | 01:11 PM
image
 

மன்னார் நீதவான் நீதி மன்றத்துக்கு முன்பாக இன்று வியாழக்கிழமை (16) காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இருவர் உயிரிழந்ததுடன், மேலும் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.

வழக்கொன்றுக்காக நீதிமன்றத்திற்கு வருகை தந்தவர்களை இலக்கு வைத்து இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.

இதன்போது மூன்று ஆண்கள் மற்றும் ஒரு பெண் உள்ளிட்ட நால்வர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

இதன் போது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் படுகாயமடைந்த இரு ஆண்கள் உயிரிழந்துள்ளனர்.

உயிரிழந்தவர்கள் மன்னார் நொச்சிக்குளம் கிராமத்தைச் சேர்ந்த சவேரியன் அருள் வயது-(61) மற்றும் செல்வக்குமார் யூட்வயது-(42)  என தெரிய வந்துள்ளது. படுகாயம் அடைந்த ஆனொருவர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

உயிரிழந்த இருவரும், காயமடைந்த ஆண் ஒருவரும் இன்றைய தினம் மன்னார் நீதிமன்றத்தில் இடம் பெற இருந்த வழக்கு விசாரணைகளுக்காக வருகை தந்த போதே மோட்டார் சைக்கிளில் வந்தவர் துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டு விட்டு தப்பிச் சென்றதாக தெரிய வருகிறது. மேலதிக விசாரணைகளை மன்னார் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

மன்னார் நொச்சிக்குளம் பகுதியில் கடந்த 2022 ஆம் ஆண்டு நடைபெற்ற இரட்டை படுகொலையை தொடர்ந்து நொச்சிக்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் மீது தொடர்ச்சியாக தாக்குதல் சம்பவங்கள் இடம் பெற்று வந்த நிலையில் இவர்கள் மீதும் துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

jk.jpg

trfg.jpg

gfh.jpg

7yui.jpg

https://www.virakesari.lk/article/203933

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நியாயம் said:

மன்னார் பகுதியில் இப்படியொரு சம்பவம் ஏதும் முன்பு நடைபெற்றதாக தெரியவில்லையே. வன்முறை கலாச்சாரம் மன்னார்வரை வந்துவிட்டது போலும்.

போதைப்பொருள் கடத்தலை நொச்சிக்குளத்தைச் சேர்ந்த ஒரு பகுதியினர் காட்டிக்கொடுத்ததுடன் தொடர்புபட்ட கொலை. அத்துடன்  இதற்குள் சாதிப் பிரச்சனையும் ஒன்று சேர்ந்துள்ளது. 

முன்னர் கொல்லப்பட்டவர்கள் இருவரும் தற்போது கொல்லப்பட்டவர்களது ஊருக்குள் குறிப்பிட்ட ஆட்களைக்/சகோதரர்களைக் கொலை செய்ய முயற்சித்தபோது ஊரவர்களால்/குடும்பத்தவர்களின் பதில் தாக்குதலில் கொல்லப்பட்டவர்கள். 

துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்ட ஆட்களுக்கு மகிந்தவின் பிள்ளைகளதும் அவர்களது அரசியல் கட்சியினரின் பாதுகாப்பும் பொலிசாரின் அனுசரணையும்  கிடைக்கப்பெற்றுள்ளது. 

பிரச்சனையின் உண்மையான தொடக்கம் பல வடுடங்களுக்கு முன்னர் பொங்கலை முன்னிட்ட மாட்டுவண்டிச் சவாரிப் போட்டியில் தொடங்கியது. 

இது ஒரு பழி தீர்க்கும் வகையிலான தொடர்  கொலை. 

இப்போதைக்கு முடிவுக்கு வருவது போலத் தெரியவில்லை. 

Edited by Kapithan

  • கருத்துக்கள உறவுகள்

மன்னார் துப்பாக்கிச்சூடு - அதிர வைக்கும் பின்னணி

 

 

Freelancer   / 2025 ஜனவரி 16 , பி.ப. 08:25 - 0      - 101

facebook sharing button
twitter sharing button
print sharing button
whatsapp sharing button

மன்னார் நீதவான் நீதிமன்றத்துக்கு முன்பாக இன்றைய தினம் இருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் மேலதிக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதன்படி, நீண்ட காலமாக மன்னாரில் இடம்பெற்று வரும் கொலை சம்பவங்களின் தொடர்ச்சியே இந்த துப்பாக்கிச்சூட்டுக்கு காரணம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

மாட்டுவண்டி போட்டி தொடர்பில் மன்னாரில் உள்ள இரண்டு கிராமங்களுக்கு இடையே நிலவும் முறுகல் காரணமாக இதுவரையில் 7 பேர் உயிரிழந்தனர். 

இதற்கமைய, மன்னார் நீதிமன்றுக்கு அருகில் மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் 42 மற்றும் 61 வயதுடைய நொச்சிக்குளம் பகுதியைச் சேர்ந்த இருவர் இன்று உயிரிழந்தனர். 

இதன்போது நால்வர் காயமடைந்ததுடன் அவர்களில் இருவர் உயிரிழந்தனர். 

காயமடைந்தவர்களில் ஒருவர் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையிலும் மற்றுமொருவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

சம்பவத்தில் உயிரிழந்த இருவரும் 2022ஆம் ஆண்டு மன்னார் உயிலங்குளம் பகுதியில் இடம்பெற்ற இரட்டை கொலை சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்பது தெரியவந்துள்ளது. 

2022ஆம் ஆண்டு ஜுலை எட்டாம் திகதி உயிலங்குளத்தில் நடைபெற்ற மாட்டுவண்டி சவாரி போட்டி தொடர்பான முறுகல் ஒன்றை அடுத்து ஏற்பட்ட மோதலில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு சகோதரர்கள் படுகொலை செய்யப்பட்டனர். 

அதற்கு பழிவாங்கும் நடவடிக்கையாக 2023 ஆம் ஆண்டும் ஓகஸ்ட் மாதம் 23ஆம் திகதி மன்னார் அடம்பன் பகுதியில் இரண்டு பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். 

அதன் தொடர்ச்சியாகவே இன்றைய தாக்குதல் சம்பவமும் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார்  தெரிவிக்கின்றனர்.

உயிலங்குளம் பகுதியைச் சேர்ந்த ஜேசுதாசன் என்ற போதைப் பொருள் வர்த்தகர் என்றும், அவரது தரப்பினரே இந்த கொலையுடன் தொடர்புப்பட்டுள்ளதாகவும், அவர் தற்போது வெளிநாட்டில் உள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிடுகின்றனர். 

குறித்த நபரை கைது செய்வதற்கான சர்வதேச பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. R

Tamilmirror Online || மன்னார் துப்பாக்கிச்சூடு - அதிர வைக்கும் பின்னணி

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, பிழம்பு said:

உயிலங்குளம் பகுதியைச் சேர்ந்த ஜேசுதாசன் என்ற போதைப் பொருள் வர்த்தகர் என்றும், அவரது தரப்பினரே இந்த கொலையுடன் தொடர்புப்பட்டுள்ளதாகவும், அவர் தற்போது வெளிநாட்டில் உள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிடுகின்றனர். 

இதை எப்படி கோர்த்து விடலாம் ...தமிழர் ,மத ,அரசியல் சிக்கலுக்குள்

மாட்டுவண்டி சவாரி இது தமிழரின் பாரம்பரிய விளையாட்டுக்களில் ஒன்று ..இதை இல்லாதொழிக்க சிறிலங்கா பெளத்த வெறியர்கள் திட்டமிட்டு செயல்படுகின்றனர் ...மகிந்தா கும்பல் தமிழரிடையே பிளவை ஏற்படுத்த கிறிஸ்தவ மத அன்பர்களை உள்வாங்கி அவர்களை போதை பொருள் வியாபாரத்தில் ஈடுபட வைத்து ..இன்று புனித பூமியாக திகழும் மன்னாரில் பயங்கரவாத செயல்களை தூண்டுகிறார்கள்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மன்னார் நீதிமன்றத்திற்கு முன் துப்பாக்கிச் சூடு: மன்னார் பொலிஸார் முழுப் பொறுப்பையும் ஏற்க வேண்டும் - செல்வம் அடைக்கலநாதன் எம்.பி.

Published By: VISHNU   17 JAN, 2025 | 05:07 AM

image

மன்னார் நீதிமன்றத்திற்கு முன்னால் 16ஆம் திகதி வியாழக்கிழமை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் இருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் இருவர் படுகாயமடைந்துள்ள இச்சம்பவத்திற்கு மன்னார் பொலிஸார் முழுப் பொறுப்பையும் ஏற்க வேண்டும் என வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடுகையில்,,,

மன்னார் நீதிமன்றத்திற்கு முன் நடைபெற்ற துப்பாக்கி பிரயோகம் உண்மையிலேயே கண்டிக்கத்தக்க ஒரு விடயமாகவும், காட்டு மிராண்டித்தனமான ஒரு விடயமாகும். 

இந்த மிலேச்சத்தனமான செயலுக்கு மன்னாரில் உள்ள பொலிஸார் முழுப்பொறுப்பையும் எடுக்க வேண்டும்.

நொச்சிகுளம் மக்கள் தொடர்ந்து பழிவாங்கப்படுகிறார்கள். இன்றும் தொடர்ச்சியாக அந்த  நொச்சிகுளம் கிராமத்தின்  மக்கள் படிப்படியாக படுகொலை செய்யப்படுகின்ற சூழல் காணப்படுகிறது.

இந்த விடயத்தை கடந்த அரசாங்கத்தில் மக்கள் பாதுகாப்பு தொடர்பாடல் அமைச்சரோடு  நான் நேரடியாக பேசியிருந்தேன். காரணம் துப்பாக்கி  பாவிக்கப்பட்டுள்ளது. முன்னர் ஏ.கே 47 பாவிக்கப்பட்டுள்ளது.

இப்பொழுது எந்த வகையான துப்பாக்கி பாவிக்கப்பட்டுள்ளது என்பது தெரியப் படவில்லை.  இந்த  துப்பாக்கி பிரயோகம் நொச்சிகுளம் மக்களை பார்த்து தான் பிரயோகிக்கப்படுகிறது எல்லோருக்கும் தெரிந்த விடயம்.

மன்னார் பொலிசாருடைய மெத்தனப் போக்கும் இதில் அடங்கியிருக்கிறது. அந்த கிராமத்து மக்கள் அச்சத்தோடு வாழும் சூழலிலே மீண்டும் மன்னார் நீதி மன்றத்திற்கு முன் இந்த படுகொலைகள் நடைபெற்றிருக்கிறது. ஆகவே இது கண்டிக்கத்தக்கது.

இவ் விடயம் சம்பந்தமாக ஜனாதிபதி அவர்களினதும்  கவனத்திற்கும்,பாராளுமன்ற கவனத்திற்கும் முக்கியமான விடயமாக கொண்டு வரவுள்ளேன்.

ஏனென்றால் இது தொடர்ச்சியாக நடைபெறுகிற விடயமாக இருக்கிறது.

போன உயிர்களை மீளப் பெற முடியாது. துப்பாக்கி பிரயோகத்தால் உயிர் நீத்த குடும்பங்கள் பல இ அந்த கிராம மக்கள் அச்சத்தோடு வாழுகின்ற நிலமை  தொடர்கின்றது.

ஆகவே இதன் முழுப்பொறுப்பையும் போலீசார் எடுக்க வேண்டும் .இந்த சம்பவத்திற்கு  காரணம் பொலிசாருடைய கவனயீனம் அசமந்தப்போக்கு என்பதை இங்கு நான் குறிப்பிட விரும்புகிறேன். முப்படைகள் அங்கே பாதுகாப்பு நடவடிக்கையில் இருக்கும் நிலையில் போன்று காட்டிக்கொண்டு இவ்வாறான விடயங்கள் நடைபெறுவது கேள்விக்குறியாகவே இருக்கிறது. அந்த வகையில் இவ்வாறான சம்பவங்கள் நிறுத்தப்பட வேண்டிய விடயங்களாகும்.

சம்மந்தப்பட்டவர்கள் உடனடியாக கைது செய்யப்பட்ட வேண்டும். இதற்கான குழு அடங்கிய புலனாய்வு துறை நடவடிக்கைகளை பொலிசார் உடனடியாக ஆரம்பித்து செயலில் இறங்க வேண்டும். மன்னாரில் உள்ள பொலிசாரை மட்டும் வைத்து இதற்குரிய நடவடிக்கைகளை செய்து கொள்வது முடியாத காரியமாகும். எனவே கொழும்பில் இருந்து விசேட குழு அடங்கிய பொலிசார் வரவழைக்கப்பட்ட வேண்டும். 

ஆகவே இந்த சம்பவத்தில் உயிர்நீத்தவர்களுக்கு எனது அஞ்சலியை செலுத்துவதுடன் பொலிசார் அதற்கான நடவடிக்கையை துரிதப்படுத்த வேண்டுவதுடன் சம்பந்தப்பட்டவர்கள் உடனடியாக கைது செய்யப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் என்பதே எனது கோரிக்கை.என அவர் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

https://www.virakesari.lk/article/204017

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஏராளன் said:

இந்த சம்பவத்தில் உயிர்நீத்தவர்களுக்கு எனது அஞ்சலியை செலுத்துவதுடன்

இனி என்ன ....சிறிலங்கன்ஸ் உங்கள் விவாதத்தை தொடங்கலாம்😀 ... போதை பொருள் வியாபாரிக்கு தமிழ் தேசிய வாதி எப்படி அஞ்சலி செலுத்த முடியும் ...இவருக்கும் அவருக்கும் கொனக்சன் ..

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, பிழம்பு said:

மன்னார் துப்பாக்கிச்சூடு - அதிர வைக்கும் பின்னணி

 

 

Freelancer   / 2025 ஜனவரி 16 , பி.ப. 08:25 - 0      - 101

facebook sharing button
twitter sharing button
print sharing button
whatsapp sharing button

மன்னார் நீதவான் நீதிமன்றத்துக்கு முன்பாக இன்றைய தினம் இருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் மேலதிக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதன்படி, நீண்ட காலமாக மன்னாரில் இடம்பெற்று வரும் கொலை சம்பவங்களின் தொடர்ச்சியே இந்த துப்பாக்கிச்சூட்டுக்கு காரணம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

மாட்டுவண்டி போட்டி தொடர்பில் மன்னாரில் உள்ள இரண்டு கிராமங்களுக்கு இடையே நிலவும் முறுகல் காரணமாக இதுவரையில் 7 பேர் உயிரிழந்தனர். 

இதற்கமைய, மன்னார் நீதிமன்றுக்கு அருகில் மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் 42 மற்றும் 61 வயதுடைய நொச்சிக்குளம் பகுதியைச் சேர்ந்த இருவர் இன்று உயிரிழந்தனர். 

இதன்போது நால்வர் காயமடைந்ததுடன் அவர்களில் இருவர் உயிரிழந்தனர். 

காயமடைந்தவர்களில் ஒருவர் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையிலும் மற்றுமொருவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

சம்பவத்தில் உயிரிழந்த இருவரும் 2022ஆம் ஆண்டு மன்னார் உயிலங்குளம் பகுதியில் இடம்பெற்ற இரட்டை கொலை சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்பது தெரியவந்துள்ளது. 

2022ஆம் ஆண்டு ஜுலை எட்டாம் திகதி உயிலங்குளத்தில் நடைபெற்ற மாட்டுவண்டி சவாரி போட்டி தொடர்பான முறுகல் ஒன்றை அடுத்து ஏற்பட்ட மோதலில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு சகோதரர்கள் படுகொலை செய்யப்பட்டனர். 

அதற்கு பழிவாங்கும் நடவடிக்கையாக 2023 ஆம் ஆண்டும் ஓகஸ்ட் மாதம் 23ஆம் திகதி மன்னார் அடம்பன் பகுதியில் இரண்டு பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். 

அதன் தொடர்ச்சியாகவே இன்றைய தாக்குதல் சம்பவமும் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார்  தெரிவிக்கின்றனர்.

உயிலங்குளம் பகுதியைச் சேர்ந்த ஜேசுதாசன் என்ற போதைப் பொருள் வர்த்தகர் என்றும், அவரது தரப்பினரே இந்த கொலையுடன் தொடர்புப்பட்டுள்ளதாகவும், அவர் தற்போது வெளிநாட்டில் உள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிடுகின்றனர். 

குறித்த நபரை கைது செய்வதற்கான சர்வதேச பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. R

Tamilmirror Online || மன்னார் துப்பாக்கிச்சூடு - அதிர வைக்கும் பின்னணி

இதை கதையாக வைத்து ஒரு படம் எடுக்கலாம் போல இருக்கே, அவ்வளவு ருவிஸ்ட்

  • கருத்துக்கள உறவுகள்

மன்னார் சம்பவத்தை ஏற்றுக் கொள்ள முடியாது ; பதில் பொலிஸ்மா அதிபர் அதிரடி

மன்னார் நீதிமன்றத்தின் முன் வியாழக்கிழமை(16) இடம்பெற்ற துப்பாக்கி சூட்டில் இருவர் உயிரிழந்துள்ள சம்பவத்தை  வழி நடத்தியவர் வெளிநாட்டில் இருப்பதாகவும், அவருக்கு எதிராக   சிவப்பு எச்சரிக்கையை பெற்றுள்ளதாக பதில் பொலிஸ்மா அதிபர் சட்டத்தரணி பிரியந்த வீர சூரிய நேற்று தெரிவித்துள்ளார்.

மன்னார் நீதிமன்றத்தின் முன்னால் வியாழக்கிழமை(16) இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தின் போது இருவர் உயிரிழந்துள்ளனர். மாட்டு வண்டி சவாரியை அடிப்படையாக கொண்டு  முரண்பாடு காணப்பட்டது.

முதல் சம்பவத்தில் 2022ஆம் ஆண்டு இருவர் உயிரிழந்தனர். அதனைத் தொடர்ந்து  ஒருவர் வாகனத்தினால் மோதப்பட்டு கொலை செய்யப்பட்டார். 2023 ஆம் ஆண்டு இருவர் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்தனர்.

இறுதியாக வியாழக்கிழமை(16) மன்னார் நீதிமன்றத்திற்கு முன் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் இருவர் உயிரிழந்தனர்.

இவர்கள் இருவரும் முதலாவதாக இடம் பெற்ற இருவரின் மரணத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களாவர்.

எவ்வாறாக இருந்தாலும் அதை ஏற்றுக் கொள்ள முடியாது. சம்பவம் தொடர்பில் துரித விசாரணைகளை முன்னெடுத்துள்ளோம்.

குறித்த சம்பவத்தை வழி நடத்தியவர் வெளிநாட்டில் இருக்கின்றார். அவருக்கு எதிராக நாம் சிவப்பு எச்சரிக்கையை பெற்றுள்ளோம் என தெரிவித்தார்.

இதேவேளை மன்னார் நீதிமன்றத்தின் முன்னால் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பாக விசாரணைகளை முன்னெடுக்க நான்கு பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். R
 

https://www.tamilmirror.lk/வன்னி/மன்னார்-சம்பவத்தை-ஏற்றுக்-கொள்ள-முடியாது-பதில்-பொலிஸ்மா-அதிபர்-அதிரடி/72-350496

  • கருத்துக்கள உறவுகள்

மன்னார் துப்பாக்கிச் சூடு ; சந்தேக நபர்களை கைது செய்ய பொதுமக்களிடம் உதவி கோரும் பொலிஸார்

18 Jan, 2025 | 12:33 PM

image

மன்னார் நீதவான் நீதிமன்றத்துக்கு முன்பாக கடந்த வியாழக்கிழமை (16) காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய இரண்டு துப்பாக்கி தாரிகளை கைது செய்ய மன்னார் பொலிஸார் பொதுமக்களிடம் உதவி கோரியுள்ளனர். 

மன்னார் நீதவான் நீதிமன்றத்துக்கு முன்பாக மோட்டார் சைக்கிளில் சென்ற இருவர், அங்கு இருந்த நான்கு நபர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்றிருந்தனர்.

துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நால்வரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் அவர்களில் இருவர்  உயிரிழந்தனர்.

இதனையடுத்து விசாரணைகளை ஆரம்பித்த பொலிஸார், நீதிமன்றத்துக்கு முன்பாக மோட்டார் சைக்கிளில் சென்ற இரண்டு துப்பாக்கி தாரிகளின் தேற்றத்திற்கு சமமான இரண்டு படங்களை வெளியிட்டுள்ளனர்.

இந்த படங்களில் உள்ள நபர்கள் தொடர்பில் ஏதேனும் தகவல்கள் கிடைத்தால் மன்னார் பொலிஸ் நிலையத்தின் 071 859 1363 அல்லது 023 222 3224 என்ற தொலைபேசி இலக்கங்களுக்கு தொடர்பு கொள்ளுமாறு பொலிஸார் தெரிவித்துள்ளனர். 
 

https://www.virakesari.lk/article/204145

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.