Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வருண் மாயஜாலம், அபிஷேக் அதிரடி: முதல் டி20 ஆட்டத்தில் இங்கிலாந்தின் பேஸ்பால் வியூகத்தை நொறுக்கிய இந்திய அணி

டி20 : இங்கிலாந்து Vs இந்தியா

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, இந்திய அணியின் கேப்டன் சூர்ய குமார் யாதவ் (வலது) உடன் வருண் சக்ரவர்த்தி (இடது) கட்டுரை தகவல்
  • எழுதியவர், க.போத்திராஜ்
  • பதவி, பிபிசி தமிழுக்காக

தமிழக வீரர் வருண் சக்ரவர்த்தியின் மாயஜாலப் பந்துவீச்சு, அபிஷேக் சர்மாவின் அதிரடியான பேட்டிங் ஆகியவற்றால் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நேற்று (ஜன. 22) நடந்த முதல் டி20 ஆட்டத்தில் இங்கிலாந்து அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது இந்திய அணி.

பேஸ் பால் வியூகத்துக்கும், ஸ்கைபால் வியூகத்துக்கும் இடையிலான ஆட்டமாக எதிர்பார்க்கப்பட்ட நிலையில் போட்டி ஒருதரப்பாகவே முடிந்தது.

முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி 20 ஓவர்களில் 132 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. 133 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 43 பந்துகள் மீதமிருக்கையில் 3 விக்கெட்டுகளை இழந்து 133 ரன்கள் சேர்த்து வென்றது.

இங்கிலாந்து அணிக்கு எதிராக அதிகமான பந்துகளை மீதம் வைத்து இந்திய அணி சேஸ் செய்துள்ளது. இதற்கு முன் 2012ம் ஆண்டு புனேயில் நடைபெற்ற டி20 போட்டியில் 13 பந்துகள் மீதமிருக்கையில், இந்திய அணி சேஸ் செய்திருந்தது, இந்த ஆட்டத்தில் 43 பந்துகள் மீதமிருக்கையில் சேஸ் செய்துள்ளது.

 

இந்திய அணியில் அதிரடியாக பேட் செய்த தொடக்க ஆட்டக்காரர் அபிஷேக் சர்மா 20 பந்துகளில் அரைசதத்தையும் 34 பந்துகளில் 79 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். பந்துவீச்சில் வருண் சக்ரவர்த்தி 4 ஓவர்கள் வீசி, 23 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றி ஆட்டநாயகன் விருதை வென்றார். இவர்கள் இருவரின் ஆட்டமும் வெற்றிக்கு முக்கியக் காரணங்களாக இருந்தன.

ஆட்டத்தின் நடுப்பகுதியில் கேப்டன் ஜாஸ் பட்லர், லிவிங்ஸ்டன், ஹேரி ப்ரூக் ஆகிய 3 முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தி, வருண் திருப்புமுனையை ஏற்படுத்தினார். அதிலும், வருண் வீசிய 8-வது ஓவரில் ஹேரி ப்ரூக், லிவிங்ஸ்டன் இருவருமே ஆட்டமிழந்தனர்.

இந்த வெற்றி மூலம் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் இருக்கிறது.

டாஸ் வென்றது உத்வேகம்

டி20 : இங்கிலாந்து Vs இந்தியா, அபிஷேக் சர்மா

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, அதிரடியாக பேட் செய்த தொடக்க ஆட்டக்காரர் அபிஷேக் சர்மா 20 பந்துகளில் அரைசதத்தையும் 34 பந்துகளில் 79 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார்

வெற்றிக்குப்பின் இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில் "டாஸ் வென்றபின் எங்களுக்குக் கிடைத்த உத்வேகம் தளத்தை அமைத்துக் கொடுத்தது. பந்துவீச்சாளர்களுக்கென தனித்திட்டம் இருந்தது, அதை சிறப்பாகச் செயல்படுத்தினார்கள். அதேபோல, பேட்டர்களும் அவர்களுக்குரிய திட்டத்தின்படி ஆடினர். தென் ஆப்பிரிக்காவில் நாங்கள் செய்த அதே விஷயங்களை இங்கும் மாற்றவில்லை" என்றார்.

மேலும் பேசிய அவர், "புதிய பந்தில் பொறுப்பெடுத்து ஹர்திக் பாண்டியா பந்துவீசினார், அதனால் கூடுதல் சுழற்பந்துவீச்சாளருடன் ஆடமுடிந்தது. வருண் சக்ரவர்த்தி சரியான நேரத்தில் ஃபார்முக்கு வந்துள்ளார், அர்ஷ்தீப் வெற்றிக்கான தளத்தை அமைத்துக் கொடுத்தார். அதிகமான சுதந்திரத்தை வீரர்களுக்குக் கொடுத்திருந்தோம், அதை சிறப்பாக வித்தியாசமாக வெளிப்படுத்தினர். ஃபீல்டிங்கில் மட்டும் அதிக கவனம் செலுத்தவேண்டும்" எனத் தெரிவித்தார்

அர்ஷ்தீப் சிங் மைல்கல்

அர்ஷ்தீப் சிங் , டி20 : இங்கிலாந்து Vs இந்தியா

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, அர்ஷ்தீப் சிங் பவர்ப்ளே ஓவருக்குள்ளாகவே 2 முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தி இங்கிலாந்து அணியை சிக்கலில் தள்ளினார்

கொல்கத்தா மைதானம் சுழற்பந்துவீச்சுக்கு சாதகமானது என்பதால், முகமது ஷமி தேர்வு செய்யப்படவில்லை. இருப்பினும், அர்ஷ்தீப் சிங் பவர்ப்ளே ஓவருக்குள்ளாகவே 2 முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தி இங்கிலாந்து அணியை சிக்கலில் தள்ளினார்.

அர்ஷ்தீப் சிங் வீசிய முதல் ஓவரிலேயே லென்த்தில் வீசிய பந்து பில் சால்ட் பேட்டில் எட்ஜ் எடுத்து விக்கெட் கீப்பர் சாம்ஸனிடம் கேட்ச்சானது. 3வது ஓவரில் பென் டக்கெட் விக்கெட்டை அர்ஷ்தீப் சிங் வீழ்த்தி சிக்கலை ஏற்படுத்தினார். இந்த விக்கெட்டை அர்ஷ்தீப் வீழ்த்தியபோது டி20 போட்டிகளில் 97 விக்கெட்டுகளைக் கைப்பற்றி, அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய பந்துவீச்சாளர் என்ற பெருமையைப் பெற்று யஜூவேந்திர சஹல் சாதனையான 96 விக்கெட்டுகளை முறியடித்தார்.

வருண் சக்ரவர்த்தி மாயஜாலம்

வருண் சக்ரவர்த்தி, டி20 : இங்கிலாந்து Vs இந்தியா

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, வருண் சக்ரவர்த்தி தனது மிகத்துல்லியமான லைன், லென்த்தில் பந்துவீசி இங்கிலாந்து பேட்டர்களை கட்டிப்போட்டார்

நடுப்பகுதி ஓவர்களில் வருண் சக்ரவர்த்தி, அக்ஸர் படேல், ரவி பிஸ்னாய் ஆகிய 3 சுழற்பந்துவீச்சாளர்களும் சேர்ந்து ஆட்டத்தைத் தங்கள் கைக்குள் கொண்டு வந்தனர். அதிலும், வருண் சக்ரவர்த்தி தனது மிகத்துல்லியமான லைனால், லென்த்தில் பந்துவீசி இங்கிலாந்து பேட்டர்களை கட்டிப்போட்டார். வருணின் பந்துவீச்சு ஸ்டெம்ப் டூ ஸ்டெம்ப் என்ற ரீதியில் இருந்ததால், இங்கிலாந்து பேட்டர்கள் சிறிய தவறு செய்தாலும் விக்கெட்டை இழக்க நேரிடும் என்ற நிலை இருந்தது. ப்ரூக், லவிங்ஸ்டோன் இருவருக்கும் வருண் வீசிய பந்து நிச்சயமாக ஆடுவதற்கு மிகக்கடினமானது, என்ன செய்வதென்று தெரியாமல் இருவரும் விக்கெட்டை இழந்தனர்.

சுழற்பந்துவீச்சில் அதிலும் கைமணிக்கட்டில் வீசப்படும் பந்துகளை ஆடுவதற்கு இங்கிலாந்து பேட்டர்கள் திணறுவார்கள் எனக் கூறப்பட்டது உண்மையானது. வருணின் பந்துவீச்சை எவ்வாறு விளையாடுவது, சரியான லென்த்தில் பந்தை பிக் செய்து ஷாட் அடிப்பது எனத் தெரியாமல் லிவிங்ஸ்டன், ப்ரூக் இருவரும் ஒரே ஓவரில் விக்கெட்டை இழந்தனர்.

ஜாஸ் பட்லர் ஐபிஎல் ஆடிய அனுபவம் என்பதால், வருண் பந்துவீச்சை ஓரளவுக்கு கணித்து ஆடினார், ஆனாலும், அவரால் துல்லியமான பந்துகளை எதிர்கொள்ள முடியாமல் கேட்ச் கொடுத்து பட்லர் வெளியேறினார். 24 பந்துகளை வீசியவரும் சக்ரவர்த்தி 14 டாட் பந்துகளை வீசினார், 23 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

அபிஷேக் அதிரடி தொடக்கம்

சஞ்சு சாம்ஸன்,டி20 : இங்கிலாந்து Vs இந்தியா

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, ஆர்ச்சர் வீசிய முதல் ஓவரை நிதானமாக ஆடிய சஞ்சு சாம்ஸன், அட்கின்சன் வீசிய 2வது ஓவரை வெளுத்து வாங்கினார்

சாம்ஸன், அபிஷேக் சர்மா இருவரும் அதிரடியான தொடக்கத்தை வழங்கினர். ஆர்ச்சர் வீசிய முதல் ஓவரை நிதானமாக ஆடிய சாம்ஸன், அட்கின்சன் வீசிய 2வது ஓவரை வெளுத்து வாங்கினார். அட்கின்சன் வீசிய 2வது ஓவரில் 4 பவுண்டரிகள், ஒரு சிக்ஸர் என 22 ரன்களை விளாசினார். ஆர்ச்சர் வீசிய 3வது ஓவரில் அபிஷேக் ஒரு சிக்ஸர், பவுண்டரி என 10 ரன்கள் சேர்த்தார்.

ஆர்ச்சர் வீசிய 5வது ஓவரில் ஸ்லோ பாலில் கேட்ச் கொடுத்து சாம்ஸன் 22 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்துவந்த கேப்டன் சூர்யகுமார் யாதவ், வந்தவேகத்தில் பெரிய ஷாட்டுக்கு முயன்று விக்கெட் கீப்பர் சால்ட்டிடம் கேட்ச் கொடுத்து டக்அவுட்டில் வெளியேறினார். பட்லர் வீசிய 5வது ஓவரில் 2 விக்கெட்டுகள் வீழ்ந்தன.

மார்க் உட் வீசிய 6வது ஓவரை வெளுத்து வாங்கிய அபிஷேக் சர்மா 2 சிக்ஸர்கள், ஒரு பவுண்டரி என 18 ரன்கள் சேர்த்தார். பவர்ப்ளே முடிவில் இந்திய அணி 2 விக்கெட் இழப்புக்கு 63 ரன்கள் சேர்த்திருந்தது.

அதில், ரஷித் வீசிய 8-வது ஓவரை அபிஷேக் சர்மா, 2 சிக்ஸர்கள், பவுண்டரி என 16 ரன்கள் சேர்த்தார். ஓவர்டன் வீசிய 9-வது ஓவரில் சிக்ஸர் விளாசி 20 பந்துகளில் அரைசதத்தை அபிஷேக் எட்டினார். 10 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 100 ரன்களை எட்டியது.

அட்கின் வீசிய 11-வது ஓவரை குறிவைத்த அபிஷேக் சர்மா ஒரு சிக்ஸர் பவுண்டரியும், திலக் வர்மா ஒரு பவுண்டரியும் என 16 ரன்கள் விளாசினர். ரஷித் வீசிய 12 ஓவரில் சிக்ஸர் விளாசிய அபிஷேக் அதே ஓவரில் ப்ரூக்கிடம் கேட்ச் கொடுத்து 79 ரன்களில் ஆட்டமிழந்தார். இவரின் கணக்கில் 4 பவுண்டரி, 8 சிக்ஸர்கள் அடங்கும்.

இரு கேட்ச் வாய்ப்புகள்

அபிஷேக் சர்மாவுக்கு நேற்றைய ஆட்டத்தில் மட்டும் இரு கேட்சுகளை இங்கிலாந்து வீரர்கள் தவறவிட்டனர். பெத்தல் ஒரு கேட்சையும், அதில் ரஷித் ஒரு கேட்ச் என இரு கேட்சுகளை அபிஷேக்குக்கு தவறவிட்டதை அவர் சரியாகப் பயன்படுத்திக்கொண்டார்.

அதன்பின், ஹர்திக் பாண்டியா(3), திலக் வர்மா(19) ரன்களுடன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்து 12.5 ஓவர்களில் அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர்.

மோசமான இங்கிலாந்து பேட்டிங்

பயிற்சியாளர் மெக்கலத்தின் பேஸ்பால் வியூகத்தால் இங்கிலாந்து பல அணிகளையும் மிரட்டி வந்ததால், இந்திய அணிக்கு எதிராகவும் அதிரடியாக பேட் செய்யும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இந்திய அணியின் சுழற்பந்துவீச்சுக்கு பயந்து தோல்வியை தழுவினர்.

பில் சால்ட், டக்கெட், ஹேரி ப்ரூக், லிவிங்ஸ்டன், ஜேக்கப் பெத்தெல் என பெரிய பேட்டிங் பட்டாளமே இருந்தும் ஒருவரும் ஜொலிக்கவில்லை. கேப்டன் பட்லருக்கு ஐபிஎல் விளையாடிய அனுபவம் இருந்ததால் எளிதாக இந்தியப் பந்துவீச்சை கையாண்டு அரைசதம் அடித்து 68 ரன்களில் ஆட்டமிழந்தார்.

இங்கிலாந்து அணியில் அதிகபட்சமே பட்லர் அடித்த 68 ரன்களும், ப்ரூக் 17, ஆர்ச்சர் 12 ஆகியவைதான், இந்த 3 வீரர்களும்தான் இரட்டை இலக்கத்தில் ரன்கள் சேர்த்தனர். மற்ற பேட்டர்கள் அனைவரும் ஒற்றை இலக்க ரன்னில் சொற்பமாக ஆட்டமிழந்தனர்.

இதே ஈடன் கார்டன் மைதானத்தில்தான் கடந்த 2016ம்ஆண்டு டி20 உலகக் கோப்பை இறுதி ஆட்டத்தில் மேற்கிந்தியத்தீவுகள் அணியிடம் ஃபைனலில் இங்கிலாந்து அணி கோப்பையை இழந்தது.

அதன்பின், 2024 டி20 உலகக் கோப்பையில் கயானாவில் நடந்த அரையிறுதி ஆட்டத்தில் இந்திய அணியிடம் தோற்று இங்கிலாந்து வெளியேறியது. குல்தீப் யாதவ், அக்ஸர் படேல், ரவீந்திர ஜடேஜா 3 பேரும் சேர்ந்து 11 ஓவர்கள் வீசி 58 ரன்கள் கொடுத்து 6 விக்கெட்டுகளை வீழ்த்தி இங்கிலாந்து வீழ்ச்சிக்குக் காரணமாகினர்.

அப்போதிருந்து, சுழற்பந்துவீச்சை கண்டு பயப்படும் இங்கிலாந்து பேட்டர்கள் அதற்கு ஏற்றார்போல் தங்களை மாற்றிக்கொள்ளவில்லை. இந்த ஆட்டத்திலும் 12 ஓவர்கள் சுழற்பந்து வீசப்பட்ட நிலையில், 5 விக்கெட்டுகளை இழந்து 67 ரன்கள்தான் இங்கிலாந்து அணி சேர்த்தது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

  • கருத்துக்கள உறவுகள்

அவிசேக் ச‌ர்மா அகோர‌ அடி..............த‌மிழ‌க‌ வீர‌ர் வ‌ருன் ச‌க்க‌ர‌வ‌த்தி சுழ‌ல் ப‌ந்து அந்த‌ மாதிரி.....................

  • கருத்துக்கள உறவுகள்

யுவ‌ராஜ் சிங் பாராட்டும் அள‌வுக்கு

அவுசேக் சர்மா வ‌ள‌ந்து விட்டார்

ஆர‌ம்ப‌த்தில் இவ‌ரின் விளையாட்டை பார்த்து இவ‌ர் சாதிக்க‌ வாய்பு இல்லையென‌ நினைச்சேன்

 

இருந்தாப் போல விஸ்ப‌ரூப‌ம் எடுத்து விட்டார்.........................

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இந்தியா த்ரில் வெற்றி: ஒரே ஓவரில் ஆட்டத்தை மாற்றிய வாஷிங்டன் சுந்தர், கடைசி வரை நின்று சாதித்த திலக் வர்மா

இந்தியா - இங்கிலாந்து, திலக் வர்மா, வாஷிங்டன் சுந்தர்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த திலக் வர்மா ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். கட்டுரை தகவல்
  • எழுதியவர்,போத்திராஜ்
  • பதவி,பிபிசி தமிழுக்காக

சென்னை சேப்பாக்கத்தில் ஏற்கெனவே நடந்த 2 டி20 சர்வதேச போட்டிகளும் கடைசிப் பந்து வரை வந்துதான் இந்திய அணி வென்றிருந்தது. அதுபோலவே ஜனவரி 25-ஆம் தேதி அன்று நடந்த 3-வது டி20 ஆட்டத்திலும் முடிவைத் தெரிந்து கொள்ள ரசிகர்கள் கடைசி ஓவர் வரை காத்திருக்கும் பரபரப்பான ஆட்டமாக அமைந்தது.

வெற்றி யார் கைகளில் வேண்டுமானாலும் தவழலாம் என்ற சூழல் கடைசி ஓவர் வரை இருந்தது. ஆனால், திலக் வர்மா அடித்த பவுண்டரி அவரின் போராட்டத்துக்கு கிடைத்த வெற்றியாக மாறியது.

சேப்பாக்கத்தில் நேற்று நடந்த இங்கிலாந்து அணிக்கு எதிரான 2வது டி20 ஆட்டத்தில் இந்திய அணி வென்றது.

முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி, 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 165 ரன்கள் சேர்த்தது. 166 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 4 பந்துகள் மீதமிருக்கையில் 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது.

இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்திய அணி 2-0 என்ற கணக்கில் முன்னிலையில் இருக்கிறது. அதுமட்டுமல்லாமல் உள்நாட்டில் தொடர்ந்து 10-வது டி20 போட்டிகளில் வெற்றியை 2வது முறையாக இந்திய அணி பெற்றுள்ளது.

3-வது வீரராகக் களமிறங்கி, 55 பந்துகளில் 72 ரன்கள் சேர்த்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த திலக் வர்மா ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

 

ஒரு கட்டத்தில் இந்திய அணி 78 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தோல்வியின் பிடியில் இருந்தது. அந்த நேரத்தில் தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தருடன்(26) இணைந்து, 38 ரன்கள் பார்ட்னர்ஷிப், அர்ஷ்தீப் சிங்குடனும், ரவி பிஸ்னாயுடனும் சேர்ந்து தலா 20 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து திலக் வர்மா அணியை கரை சேர்த்தார்.

குறிப்பாக ரவி பிஸ்னாய் கடைசி இரு ஓவர்களில் அடித்த இரு பவுண்டரிகள், ஆட்டத்தில் இந்திய ரசிகர்களுக்கும், வீரர்களுக்கும் பதற்றத்தையும், அழுத்தத்தையும் 90 சதவீதம் குறைத்தது.

குறிப்பாக வாஷிங்டன் சுந்தர், அர்ஷ்தீப் சிங், ரவி பிஸ்னாய் ஆகியோருடன் கடைசி நேரத்தில் திலக் வர்மா பார்ட்னர்ஷிப் அமைத்து சேர்த்த ரன்கள்தான் ஆட்டத்தின் போக்கை மாற்றி, வெற்றியை இங்கிலாந்து அணியின் கரங்களில் இருந்து பறித்தது.

இங்கிலாந்து அணி கைமேல் கிடைத்த வெற்றியை கோட்டைவிட்டது என்றுதான் சொல்ல முடியும். 5 விக்கெட்டுகளை வீழ்த்தி இந்திய அணிக்கு நெருக்கடி அளித்த நிலையில், சரியான நேரத்தில் சரியான பந்துவீச்சாளர்களை கேப்டன் பட்லர் பயன்படுத்தாதது தோல்விக்கு காரணமாக அமைந்தது.

இந்தியா - இங்கிலாந்து, திலக் வர்மா, வாஷிங்டன் சுந்தர்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, இந்திய அணி 4 சுழற்பந்துவீச்சாளர்களை பயன்படுத்தியது.

சுழற்பந்துவீச்சு தாக்குதல்

இந்திய அணி இந்த ஆட்டத்தில் 4 சுழற்பந்துவீச்சாளர்களை பயன்படுத்தியது. வாஷிங்டன் சுந்தர், வருண் சக்ரவர்த்தி, அக்ஸர் படேல், ரவி பிஸ்னாய் என 14 ஓவர்களை சுழற்பந்தாக வீசி 118 ரன்களையும், 6 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

இங்கிலாந்து பேட்டர்கள், சுழற்பந்துவீச்சை எதிர்கொள்ள அச்சப்படுகிறார்கள் எனத் தெரிந்து அவர்களுக்கு 4 முனைத் தாக்குதலையும் சுழற்பந்துவீச்சு மூலம் இந்திய அணி கொடுத்தது.

ஆனாலும், ரன் சேர்க்கப் போராடிய இங்கிலாந்து அணி கடைசி நேரத்தில் நடுவரிசை பேட்டர்களின் பின்ச்ஹிட் ஆட்டத்தால் 165 ரன்களைச் சேர்த்தது. கடந்த போட்டியிலாவது இங்கிலாந்து கேப்டன் ஜோஸ் பட்லர் அரைசதம் அடித்திருந்தார், இந்த ஆட்டத்தில் அந்த அணியில் ஒருவரும் அரைசதம் அடிக்கவில்லை.

சேப்பாக்கம் மைதானம், சுழற்பந்துவீச்சுக்கு அதிகமாக ஒத்துழைத்தது என்று கூறமுடியாது. அதேசமயம், வேகப்பந்துவீச்சாளர்களை நன்கு பவுன்ஸ் செய்யவும், பேட்டர்களை நோக்கி பந்து வேகமாக வரவும் உதவியது.

இந்த மைதானத்தில் வேகத்தைக் குறைத்து வீசியிருந்தால் நிச்சயம் இந்திய பேட்டர்கள் விளையாட சிரமமாக இருந்திருக்கும். ஆனால் அதிவேகத்தில் இங்கிலாந்து பந்துவீச்சாளர்கள், பந்துவீசி ரன்களைத்தான் வாரிக் கொடுத்தனர்.

குறிப்பாக ஜோப்ரா ஆர்ச்சர் 4 ஓவர்கள் வீசி 60 ரன்களையும், மார்க்உட் 3 ஓவர்களில் 28 ரன்களையும், ஓவர்டன் 2 ஓவர்களில் 20 ரன்களையும் வாரி வழங்கினர். ஆனால் அதில் ரஷித் கட்டுக்கோப்பாகப் பந்துவீசி 4 ஓவர்களில் 14 ரன்கள் மட்டுமே வழங்கி ஒரு விக்கெட்டை வீழ்த்தினார்.

இந்தியா - இங்கிலாந்து, திலக் வர்மா, வாஷிங்டன் சுந்தர்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, இங்கிலாந்து அணி நடுவரிசை பேட்டர்களின் பின்ச்ஹிட் ஆட்டத்தால் 165 ரன்களைச் சேர்த்தது.

வாய்ப்பை தவறவிட்டதா இந்திய அணி?

இந்த ஆட்டத்திலும் அர்ஷ்தீப் சிங் கடந்த போட்டியைப் போன்று புதிய பந்தில் முதல் ஓவரிலேயே விக்கெட் வீழ்த்தினார். இந்த முறை பில் சால்ட்டுக்கு பவுன்ஸரை வீசிய நிலையில் ஹூக் ஷாட்டுக்கு முயன்று விக்கெட்டை இழந்தார்.

வாஷிங்டன் சுந்தர் வீசிய முதல் ஓவர் முதல் பந்திலேயே டக்கெட் விக்கெட்டை இழந்தார்.

வருண் சக்ரவர்த்தி பந்தை முதல்முறையாக கிரிக்கெட்டில் எதிர்கொண்ட ஹேரி புரூக், க்ளீன் போல்டாகி வெளியேறினார். அக்ஸர் படேல் கட்டுக்கோப்பாகப் பந்துவீசி ஜோஸ் பட்லர், லிவிங்ஸ்டோன் விக்கெட்டை வீழ்த்தினர். இவர்கள் 4 பேரும் சேர்ந்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆட்டத்தை முடிக்கும்நிலைக்கு கொண்டு வந்தனர்.

இங்கிலாந்து அணி 90 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. ஆனால் அதன்பின் கிடைத்த தருணத்தை இந்திய பந்துவீச்சாளர்கள் பயன்படுத்தவில்லை. ஜேம் ஸ்மித், பிரைடன் கார்ஸ் ஓரளவுக்கு ஸ்கோர் செய்து அணியைக் காப்பாற்றினர்.

அதிலும் பிரைடன் கார்ஸ் 17 பந்துகளில் 3 சிக்ஸர்கள் உள்பட 31 ரன்கள் சேர்த்து அணியின் ஸ்கோரை உயர்த்தினார். அதேபோல, ஜேம் ஸ்மித் 2 சிக்ஸர்கள், ஒரு பவுண்டரி என 12 பந்துகளில் 22 ரன்கள் சேர்த்து கடைசி நேரத்தில் இங்கிலாந்து அணிக்கு உதவினர்.

இந்தியா - இங்கிலாந்து, திலக் வர்மா, வாஷிங்டன் சுந்தர்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,பிரைடன் கார்ஸ் 17 பந்துகளில் 3 சிக்ஸர்கள் உள்பட 31 ரன்கள் சேர்த்து அணியின் ஸ்கோரை உயர்த்தினார்.

விக்கெட்டில் கவனம் இல்லை

இந்திய அணி இந்த ஆட்டத்தில் மளமளவென விக்கெட்டுகளை இழந்தமைக்கு பேட்டர்களின் தவறான ஷாட்களே முக்கியக் காரணம். இந்திய அணியில் திலக்வர்மா(72) ரன்களுக்கு அடுத்தபடியாக அதிகபட்ச ஸ்கோர் வாஷிங்டன் சுந்தர் சேர்த்த 26 ரன்கள்தான்.

களத்துக்கு வந்தவுடன் பெரிய ஷாட்டுக்கு முயற்சிக்கும் பேட்டர்கள், பந்துவீச்சையும், ஆடுகளத்தின் தன்மையையும் கணிக்க தவறிவிட்டனர்.

அபிஷேக் சர்மா 3 பவுண்டரிகளுடன் அதிரடியாகத் தொடங்கினாலும், அதிவேகமாகப் பந்துவீசிய மார்க் வுட் பந்துவீச்சை கணித்து ஆடாமல் கால்காப்பில் வாங்கி வெளியேறினார்.

சாம்ஸன் 5 ரன்னில் ஆர்ச்சரின் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார். கேப்டன் சூர்யகுமார் வந்தவேகத்தில் 3 பவுண்டரி அடித்தாலும் கார்ஸ் பந்துவீச்சில் வெளியேறினார்.

இந்த ஆட்டத்தில் முக்கியமான சேஸிங்கில் நிதானமாக பேட் செய்யாமல் தவறான ஷாட்களை ஆடினார். நடுவரிசையில் ஹர்திக் பாண்டியா(7), துருவ் ஜூரெல்(4) இருவரும் ஏமாற்றினர், இருவரும் ஓரளவுக்கு கைகொடுத்திருந்தால் இந்திய அணி சிரமமின்றி வெற்றி பெற்றிருக்கலாம்.

58 ரன்கள் வரை இந்திய அணி 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்திருந்தது, ஆனால் அடுத்த 20 ரன்களில் 3 விக்கெட்டுகளை வேகமாக இழந்தது.

இந்தியா - இங்கிலாந்து, திலக் வர்மா, வாஷிங்டன் சுந்தர்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,கேப்டன் சூர்யகுமார் வந்தவேகத்தில் 3 பவுண்டரி அடித்தாலும் கார்ஸ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

ஒரே ஓவரில் ஆட்டத்தை மாற்றிய வாஷிங்டன் சுந்தர்

இங்கிலாந்து சுழற்பந்துவீச்சாளர் அதில் ரஷித் 4 ஓவர்கள் வீசி இந்திய ரன்ரேட்டை கட்டுப்படுத்தினார். இருப்பினும் இவர் கோட்டை விட்ட கேட்ச் வெற்றிக்கு வழி வகுத்தது. வாஷிங்டன் சுந்தர் அடித்த கேட்சை ரஷித் தவறவிட்டதால்தான் திலக்-சுந்தர் பார்ட்னர்ஷிப் வலுவாக அமைந்தது.

மார்க் உட் வீசிய அந்த ஓவரை சரியாகப் பயன்படுத்திய சுந்தர் ஒரு சிக்ஸர், 2 பவுண்டரி விளாசி 18 ரன்களைச் சேர்த்து 19 பந்துகளில் 26 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். வாஷிங்டன் சுந்தரின் பிஞ்ச் ஹிட்டிங்தான் ஆட்டத்தின் போக்கையே மாற்றிய தருணமாகும்

இந்தியா - இங்கிலாந்து, திலக் வர்மா, வாஷிங்டன் சுந்தர்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,மார்க் உட் வீசிய அந்த ஓவரை சரியாகப் பயன்படுத்திய சுந்தர் ஒரு சிக்ஸர், 2 பவுண்டரி விளாசி 18 ரன்களைச் சேர்த்தார்.

கடைசி வரை களத்தில் நின்று சாதித்த திலக் வர்மா

கடைசி 3 ஓவர்களில் இந்திய அணி வெற்றிக்கு 20 ரன்கள் தேவைப்பட்டது. களத்தில் செட்டில் பேட்டர் திலக் வர்மாவும், டெய்லெண்டர் ரவி பிஸ்னாய் இருந்தனர். கார்ஸ் வீசிய 18-வது ஓவரில் ஏதாவது விக்கெட் இழந்துவிடுவோமா என அச்சப்பட்ட நிலையில் பிஸ்னாய் அருமையான பவுண்டரி அடித்து நெருக்கடியைக் குறைத்தார். கடைசி 2 ஓவர்களில் இந்திய அணி வெற்றிக்கு 13 ரன்கள் தேவைப்பட்டது.

19-வது ஓவரை லிவிங்ஸ்டோன் வீசினார். இந்த ஓவரை பிஸ்னாய், திலக் கட்டுக்கோப்பாக ஆடினர். லிவிங்ஸ்டோன் வீசிய 5வது பந்தில் பிஸ்னாய் பவுண்டரி அடிக்க பதற்றம் குறைந்தது. கடைசி ஓவரில் இந்திய அணி வெற்றிக்கு 6 ரன்கள் தேவைப்பட்டது. ஓவர்டன் வீசிய முதல் பந்தில் 2 ரன்களும், அடுத்த பந்தில் பவுண்டரி அடித்து திலக் வர்மா வெற்றிக்கு அழைத்துச் சென்றார்.

இந்தியா - இங்கிலாந்து, திலக் வர்மா, வாஷிங்டன் சுந்தர்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,யாரேனும் ஒருவர் பொறுப்பெடுத்து பேட் செய்வது மகிழ்ச்சியாக இருக்கிறது என்கிறார் கேப்டன் சூர்யகுமார்.

"பொறுப்புடன் ஆடியது மகிழ்ச்சி"

வெற்றிக்குப் பின் இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் கூறுகையில் " இந்த வெற்றியால் சிறிய மன நிம்மதி கிடைத்துள்ளது. 160 ரன்கள் நல்ல ஸ்கோர் என நினைத்தோம். நாங்கள் பந்துவீசியவிதமும் சிறப்பாக இருந்தது. கடந்த சில தொடர்களாக கூடுதலாக ஒரு பேட்டருடன் ஆட்டத்தை சந்தித்து வருகிறோம். அந்த பேட்டரும் எங்களுக்கு 3 ஓவர்கள் வரை பங்களித்துவிடுகிறார். ஆவேசமான கிரிக்கெட்டை விளையாடும் அதேநேரத்தில் இக்கட்டான நேரங்களில் வீரர்கள் சிறிய பார்ட்னர்ஷிப் அமைத்து ஆட்டத்தை திருப்பிவிடுகிறார்கள்.

யாரேனும் ஒருவர் பொறுப்பெடுத்து பேட் செய்வது மகிழ்ச்சியாக இருக்கிறது. பேட்டிங்கில் பங்களிப்பு செய்ய வேண்டும் என்பதற்காக ரவி பிஸ்னாய் அதிக பயிற்சியில் ஈடுபட்டார். பெரும்பகுதி அழுத்தத்தை களத்திலேயே குறைத்துவிடுவதால், ஓய்வு அறை மகிழ்ச்சியாக இருக்கிறது. இதுபோன்ற நாட்கள் திரும்பவராது, ஆனால், அதை தக்கவைண்டும் என்பது எங்களுக்குத் தெரியும். இதேபோன்ற ஃபார்மில் இருந்தால், நல்ல விஷயங்கள் தொடர்ந்து நடக்கும்" எனத் தெரிவித்தார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.

  • கருத்துக்கள உறவுகள்

நேற்றையான் விளையாட்டு இங்லாந் வெல்ல‌ வாய்ப்பு இருந்த‌து ஆனால் த‌மிழ‌க‌ வீர‌ர் வ‌ஸ்சின்ட‌ன் சுந்த‌ரும் தில‌க் வ‌ர்மா இருவ‌ரின் பாட்ன‌ சீப் தான் வெற்றிக்கு உத‌வின‌து👍................................

  • கருத்துக்கள உறவுகள்

ஆட்டத்தை மாற்றியது வாஷிங்க்டன் சுந்தர் இல்லை Adil  Rashid . பரதேசி லட்டு கேட்ச் ஒன்றை விட்டதன் விளைவே இங்கிலாந்தின் தோல்விக்கு காரணம்! 

  • கருத்துக்கள உறவுகள்

இப்ப‌ நிறைய‌ கிரிக்கேட் தொட‌ர தொட‌ந்து ந‌ட‌ப்ப‌தால் எதை பார்ப‌தென‌ கிரிக்கேட் ர‌சிக‌ர்க‌ளுக்கு குழ‌ப்ப‌ம்..........................

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஹாட்ரிக் வெற்றியுடன் டி20 தொடரை வெல்லும் முனைப்பில் உள்ள இந்திய அணிக்கு புதிய 'சிக்கல்'

இந்தியா - இங்கிலாந்து, மூன்றாவது டி20 போட்டி

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, இந்திய அணி கேப்டன் சூர்யகுமார் மற்றும் இங்கிலாந்து அணி கேப்டன் பட்லர் கட்டுரை தகவல்
  • எழுதியவர், போத்திராஜ்
  • பதவி, பிபிசி தமிழுக்காக
  • 2 மணி நேரங்களுக்கு முன்னர்

ராஜ்கோட்டில் இன்று நடக்கும் 3வது டி20 ஆட்டத்தில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி டி20 தொடரை கைப்பற்றும் முயற்சியில் சூர்யகுமார் தலைமையிலான இந்திய அணி களமிறங்குகிறது.

டி20 உலகக் கோப்பையில் சாம்பியன் பட்டம் வென்றபின் சூர்யகுமார் தலைமையிலான டி20 அணி இதுவரை எந்த டி20 தொடரையும் இழக்காமல் இருந்து வருகிறது. அந்த நற்பெயரை தக்க வைக்கும் முயற்சியில் விளையாடும் என நம்பலாம்.

டி20 உலகக்கோப்பைத் தொடருக்குப்பின் சூர்யகுமார் தலைமையிலான இந்திய அணி 17 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளது அதில் 15 ஆட்டங்களில் வென்று 2 ஆட்டங்களில் மட்டும் தோல்வி அடைந்துள்ளது. இந்த 17 போட்டிகளிலும் ஜஸ்பிரித் பும்ரா, குல்தீப் யாதவ், முகமது ஷமி இ்ல்லாமல்தான் இந்த வெற்றிகளைப் பெற்றுள்ளது.

5 போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி 2 வெற்றிகளைப் பெற்று 2-0 என்ற கணக்கில் முன்னிலையில் இருக்கிறது. இந்த ஆட்டத்தில் வென்றால், 3-0 என தொடரைக் கைப்பற்றும்.

ஸ்கை மீண்டும் சதம் அடிப்பாரா?

இந்திய அணியைப் பொறுத்தவரை கடந்த இரு போட்டிகளிலும் திலக் வர்மா, அபிஷேக் சர்மா இருவரின் ஆட்டம்தான் அணிக்கு வெற்றி தேடித்தந்தது.

சாம்ஸன், சூர்யகுமார் யாதவ், ரிங்கு சிங், ஹர்திக் பாண்டியா, அக்ஸர் படேல் என யாரும் தங்களின் பங்களிப்பை முழுமையாக வழங்கவில்லை.

அதிலும் கேப்டன் சூர்யகுமார் கடந்த 5 இன்னிங்ஸ்களிலும் 20 ரன்களைக் கூட தாண்டவில்லை. அவர் ஃபார்மின்றி தவிக்கிறாரா அல்லது கேப்டன் பதவிக்கான சுமையால் திணறுகிறாரா என்று தெரியவில்லை.

இதே ராஜ்கோட் மைதானத்தில்தான் கடந்த 2023-ஆம் ஆண்டு இலங்கை அணிக்கு எதிராக சூர்யகுமார் சதம் விளாசினார். அதே நினைவுகளுடன் இந்த ஆட்டத்திலும் விளையாடி அவர் பெரிய ஸ்கோரை எட்டினால் இந்திய அணிக்கு வெற்றி நிச்சயம்.

2வது ஆட்டத்தில் வெற்றிக்காக போராடிய இந்திய அணியை திலக்வர்மாவின் அற்புதமான பேட்டிங் காப்பாற்றியது. தொடக்க வீரர்களும் நடுவரிசை வீரர்களும் கடந்த இரு போட்டிகளிலும் பெரிதாக பங்களிப்பு செய்யவில்லை. சூர்யகுமார், சாம்ஸன், ஹர்திக் பாண்டியா, அபிஷேக் ஓரளவுக்கு சிறப்பாக ஸ்கோர் செய்தால் அடுத்து களமிறங்குவோருக்கு சுமை குறையும்.

இந்தியா - இங்கிலாந்து, மூன்றாவது டி20 போட்டி

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,இரண்டாவது ஆட்டத்தில் வெற்றிக்காக போராடிய இந்திய அணியை திலக்வர்மாவின் அற்புதமான பேட்டிங் காப்பாற்றியது.

ஷிவம் துபேவுக்கு வாய்ப்பு

இந்திய அணியில் நிதிஷ்குமார் ரெட்டி காயம் காரணமாக விலகியதால் அவருக்குப் பதிலாக ஷிவம் துபே சேர்க்கப்பட்டுள்ளார். சென்னையில் நடந்த ஆட்டத்தில் துருவ் ஜூரெல் சிறப்பாக ஆடாததால் இன்றைய ஆட்டத்தில் ஷிவம் துபேவுக்கு வாய்ப்புக் கிடைக்கலாம்.

வேகப்பந்துவீச்சாளர்களுக்கு இந்த மைதானத்தில் பெரிதாக வேலையிருக்காது என்பதால் அர்ஷ்தீப், ஹர்திக் பாண்டியா இருவருடன் மட்டும்தான் இந்திய அணி களமிறங்கும்.

அதேசமயம், அக்ஸர் படேல், ரவி பிஸ்னாய், வாஷிங்டன் சுந்தர், வருண் சக்ரவரத்தி ஆகிய 4 சுழற்பந்துவீச்சாளர்களுக்கு இடம் உறுதியாகும். ஷிவம் துபே இடம் பெற்றால், 7-வது பந்துவீச்சாளராக இருப்பார். அபிஷேக் சர்மா பந்துவீசினாலும் வியப்பில்லை.

இந்தியா - இங்கிலாந்து, மூன்றாவது டி20 போட்டி

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,ஷிவம் துபே இடம் பெற்றால், 7-வது பந்துவீச்சாளராக இருப்பார்.

இந்திய அணிக்கு புதிய 'சிக்கல்'

சூர்யகுமார் தலைமையில் விளையாடி வரும் அணியில் ஒவ்வொரு வீரர்களும் தங்களுக்குரிய இடத்தை வலிமையாக பிடித்துவிட்ட நிலையில் அபிஷேக் சர்மா, ஜெய்ஸ்வால், சாம்ஸன் ஆகிய மூவரிடையே தொடக்க வரிசைக்கு கடும் போட்டி நிலவுகிறது.

ரோஹித் சர்மா, ஜடேஜா, கோலி டி20 போட்டியிலிருந்து ஓய்வு அறிவித்த நிலையில் இவர்களின் இடத்தை நிரப்ப வீரர்களைத் தேர்வு செய்வதுதான் பயிற்சியாளர் கம்பீர் முன்னுள்ள மிகப்பெரிய பணியாக இருக்கிறது.

ஏனென்றால் ஒவ்வொரு வீரரும் ஏதாவது ஒரு ஆட்டத்தில் அணியின் வெற்றிக்கு உறுதுணையாக, காரணமாக அமைந்துவிடும் நிலையில் யாரை பெஞ்சில் அமர வைப்பது, ப்ளெயிங் லெவனில் இடம் அளிப்பது என முடிவு செய்வது கடினமான பணியாக மாறிவிட்டது.

இந்தியா - இங்கிலாந்து, மூன்றாவது டி20 போட்டி

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,அபிஷேக் சர்மா, ஜெய்ஸ்வால், சாம்ஸன் ஆகிய மூவரிடையே தொடக்க வரிசைக்கு கடும் போட்டி நிலவுகிறது.

இங்கிலாந்து அணியின் செயல்பாடு எப்படி?

இங்கிலாந்து அணியைப் பொறுத்தவரை 2019-ஆம் ஆண்டு 50 ஓவர் உலகக் கோப்பை, 2022 டி20 உலகக் கோப்பைத் தொடருக்குப்பின், அந்த அணியால் வெள்ளைப் பந்தில் நடக்கும் ஆட்டங்களில் பெரிதாக வெற்றியை குவிக்க முடியவில்லை.

ஜோஸ் பட்லர் கேப்டனாக நியமிக்கப்பட்ட பிறகு, 2023 உலகக் கோப்பை, 2024 டி20 உலகக் கோப்பை ஆகிய தொடர்களில் இங்கிலாந்து அணி மோசமாகவே செயல்பட்டது.

டெஸ்ட் அணிக்கு பயிற்சியாளராக வந்த பிரண்டென் மெக்கலம் ஒருநாள், டி20க்கும் சேர்த்து பணியைக் கவனித்த போதிலும் இவரின் பேஸ்பால் பாணி ஆட்ட முறை பெரிதாக கைகொடுக்கவில்லை. டி20 உலகக் கோப்பை, ஒருநாள் போட்டி உலகக் கோப்பையும் மோசமாக அமைந்தது. இந்திய அணிக்கு எதிராக இந்த டி20 தொடரும் கடும் சவாலாக மாறியுள்ளது.

இந்தியா - இங்கிலாந்து, மூன்றாவது டி20 போட்டி

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,வருண் வீசும் கூக்ளி பந்துகளை எதிர்கொள்ள முடியாமல் ஹேரி ப்ரூக், லிவிங்ஸ்டன் இருவரும் திணறுகின்றனர்.

இங்கிலாந்து அணியில் காயம் காரணமாக நீண்ட இடைவெளிக்குப் பின் வந்துள்ள ஜோப்ரா ஆர்ச்சர் பந்துவீச்சும் பெரிதாக பலன் அளிக்கவில்லை. மார்க் உட் பந்துவீச்சில் வேகம் இருக்கிறதே தவிர, பேட்டர்களை திணறடிக்கும் வகையில் சரியான இடத்தில் பந்தை பிட்ச் செய்வதில்லை (சரியான லைன் அன்ட் லென்த் இல்லை). ஆல்ரவுண்டர்களையும், ஸ்பெசலிஸ்ட் பேட்டர்களையும் வைத்திருந்தாலும் இரு ஆட்டங்களிலும் அந்த அணி பெரிதாக ரன் குவிக்கவில்லை.

இந்தியாவின் சுழற்பந்துவீச்சுப் படையைப் பார்த்து இங்கிலாந்து பேட்டர்கள் எப்படி ஆடுவது எனத் தெரியாமல் விக்கெட்டை இழக்கிறார்கள். அதிலும் வருண் வீசும் கூக்ளி பந்துகளை எதிர்கொள்ள முடியாமல் ஹேரி ப்ரூக், லிவிங்ஸ்டன் இருவரும் திணறுகின்றனர். இங்கிலாந்து அணிக்கு இந்திய வீரர்களின் சுழற்பந்துவீச்சை சமாளிப்பது பெரிய தலைவலியாக இருக்கும்.

இந்தியா - இங்கிலாந்து, மூன்றாவது டி20 போட்டி

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,இங்கிலாந்து அணிக்கு இந்திய வீரர்களின் சுழற்பந்துவீச்சை சமாளிப்பது பெரிய தலைவலியாக இருக்கும்.

மைதானம் யாருக்கு சாதகம்?

ராஜ்கோட் நிரஞ்சன் மைதானம் பேட்டர்களுக்கு சொர்க்கபுரி. தட்டையான பிட்சை கொண்டுள்ள இந்த ஆடுகளத்தில் வேகப்பந்துவீச்சாளர்கள் ஸ்விங் செய்ய படாதபாடு படவேண்டும். சரியான லைன் லெத்தில் (Line Length?) மட்டுமே பந்தை பிட்ச் செய்ய முயல வேண்டும், இல்லாவிட்டால் பந்தை பவுண்டரி லைனுக்கு வெளியேதான் பார்க்க முடியும்.

சுழற்பந்துவீச்சாளர்களுக்கு ஓரளவு ஒத்துழைக்கும், ஆனால் பந்து நன்றாக திரும்பும் எனக் கூற முடியாது. ஒட்டுமொத்தத்தில் பேட்டர்களுக்கு விருந்தாக இந்த ஆடுகளம் இருக்கும்.

இந்த ஆடுகளத்தில் குறைந்தபட்ச ஸ்கோரே 189 ரன்கள்தான். அதிகபட்சமாக 228 ரன் சேர்க்கப்பட்டுள்ளது. ஆதலால் டாஸ் வெல்லும் அணி முதலில் பேட்டிங்கை தேர்ந்தெடுத்து பெரிய ஸ்கோரை எட்டுவது பாதுகாப்பானது. இரவு நேர பனிப்பொழிவுதான் ஆட்டத்தின் போக்கை தீர்மானிக்கும்.

இந்த மைதானத்தில்இந்திய அணி இதுவரை 5 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளது. அதில் 4 போட்டிகளில் வென்று, ஒரு ஆட்டத்தில் தோல்வி அடைந்துள்ளது. இந்த 5 ஆட்டங்களிலும் 3 போட்டிகள் முதலில் பேட் செய்த அணிகள் வென்றுள்ளன, 2 ஆட்டங்களில் சேஸிங் செய்த அணிகள் வென்றுள்ளன.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

  • கருத்துக்கள உறவுகள்

@nunaviIan

என்ன‌ அண்ணா உங்க‌டையால் கிடைக்கிற‌ வாய்ப்பை ச‌ரியா ப‌ய‌ன் ப‌டுதுகிறார் இல்லை

 

நீங்க‌ள் சொன்ன‌  Jofra Archer அதிக‌ ர‌ன்ஸ்ச‌ விட்டு கொடுத்து விக்கேட் எதுவும் எடுக்கிறார் இல்லை

 

தொட‌ர்ந்து சுத‌ப்ப‌ல் ப‌ந்து வீச்சு

இவ‌ரை விட‌ ந‌ல்ல‌ ப‌ந்து வீச்சாள‌ர்க‌ள் இங்லாந் அணியில் இருக்கும் போது இவ‌ருக்கு வாய்ப்பு கொடுக்க‌ ப‌டுது..............இங்லாந் தேர்வுக்குழு ரொம்ப‌ ந‌ல்ல‌வை😁👍..........................

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, வீரப் பையன்26 said:

@nunaviIan

என்ன‌ அண்ணா உங்க‌டையால் கிடைக்கிற‌ வாய்ப்பை ச‌ரியா ப‌ய‌ன் ப‌டுதுகிறார் இல்லை

 

நீங்க‌ள் சொன்ன‌  Jofra Archer அதிக‌ ர‌ன்ஸ்ச‌ விட்டு கொடுத்து விக்கேட் எதுவும் எடுக்கிறார் இல்லை

 

தொட‌ர்ந்து சுத‌ப்ப‌ல் ப‌ந்து வீச்சு

இவ‌ரை விட‌ ந‌ல்ல‌ ப‌ந்து வீச்சாள‌ர்க‌ள் இங்லாந் அணியில் இருக்கும் போது இவ‌ருக்கு வாய்ப்பு கொடுக்க‌ ப‌டுது..............இங்லாந் தேர்வுக்குழு ரொம்ப‌ ந‌ல்ல‌வை😁👍..........................

ENG
171/9
IND FlagIND
(20 ov, T:172) 146/9

இந்தியா தோல்வி.

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, ஈழப்பிரியன் said:
ENG
171/9
IND FlagIND
(20 ov, T:172) 146/9

இந்தியா தோல்வி.

ஓம் ஈழ‌ப்பிரிய‌ன் அண்ணா

வாழ்த்துக்க‌ள் இங்லாந் அணிக்கு......................

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வருண் சக்ரவர்த்தி வித்தியாசமான சாதனை: இந்தியாவின் ஹாட்ரிக் வெற்றியை பறித்த 'மோசமான முடிவுகள்'

இந்தியா - இங்கிலாந்து, வருண் சக்ரவர்த்தி

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, வருண் சக்ரவர்த்தி 5 விக்கெட்டுகள் வீழ்த்தியும் இந்திய அணி ஹாட்ரிக் வெற்றியை தவறவிட்டது. கட்டுரை தகவல்
  • எழுதியவர், போத்திராஜ்
  • பதவி, பிபிசி தமிழுக்காக
  • ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

வருண் சக்ரவர்த்தி 5 விக்கெட்டுகள் வீழ்த்தியும், ராஜ்கோட்டில் நேற்று நடந்த 3வது டி20 போட்டியில் இந்திய அணியை 26 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது இங்கிலாந்து அணி.

முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 171 ரன்கள் சேர்த்தது. 172 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 145 ரன்கள் சேர்த்து 26 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தனர்.

இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்திய அணி 2 போட்டிகளிலும் இங்கிலாந்து அணி ஒரு ஆட்டத்திலும் வென்று 2-1 என்ற கணக்கில் தொடரை உயிர்ப்புடன் வைத்துள்ளது இங்கிலாந்து அணி.

ராஜ்கோட் மைதானத்தில் கடைசியாக 2017ம் ஆண்டு டி20 போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்திருந்தது. அதன்பின் 8 ஆண்டுகளுக்குப்பின் இப்போது தோற்றுள்ளது. அது மட்டுமல்லாமல் இந்திய மண்ணில் தொடர்ந்து 10 டி20 போட்டிகளாக வெற்றி நடை போட்டுவந்த இந்திய அணி, 446 நாட்களுக்குப் பின் தோல்வி அடைந்துள்ளது.

இங்கிலாந்து அணியின் நடுவரிசை பேட்டிங்கை குலைத்து திக்குமுக்காட வைத்து 4 ஓவர்கள் வீசி 24 ரன்கள் கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்திய வருண் சக்ரவர்த்திக்கு ஆட்டநாயகன் விருதுக்கு வழங்கப்பட்டது. இந்தத் தொடரில் 2வது முறையாக ஆட்டநாயகன் விருதை வருண் பெற்றுள்ளார்.

வருண் சக்ரவர்த்தியின் கணிக்க முடியாத பந்துவீச்சில் சிக்கி இங்கிலாந்து அணி ஒரு கட்டத்தில் 8 விக்கெட் இழப்புக்கு 127 ரன்கள் என்ற இக்கட்டான நிலையில் இருந்தது. 140 ரன்களுக்குள் இன்னிங்ஸ் முடிந்துவிடும் என்று கணிக்கப்பட்டது.

ஆனால், கடைசி நேரத்தில் லியாம் லிவிங்ஸ்டோனின் சிறப்பான பேட்டிங்கால் இங்கிலாந்து அணி கூடுதல் ரன்களை சேர்த்தது.

இந்தியா ஹாட்ரிக் வெற்றியை தவற விட்டது ஏன்?

ராஜ்கோட் மைதானம் பேட்டர்களுக்கு சொர்க்கபுரி. இந்த ஆடுகளத்தின் தன்மை குறித்து வர்ணனையாளர் முரளிகார்திக் கூறும் போதுகூட " என் தலை எவ்வாறு வழுக்கையாக இருக்கிறதோ அதுபோன்று இந்த ஆடுகளம்" என்றார். பேட்டர்கள் முதலில் நிதானமாக ஆடி, களத்தில் நிலைத்துவிட்ட பிறகு பெரிய அளவில் ரன்களை குவிக்க முடியும். இங்கிலாந்து அணி இங்கு சேர்த்த 171 ரன்கள் என்பது இந்த மைதானத்தில் சேர்க்கப்பட்ட சராசரி ஸ்கோரைவிட குறைவுதான்.

அப்படி இருக்கையில் இந்திய அணியின் பேட்டர்கள் எளிய ஸ்கோரை கூட சேஸ் செய்யாமல் தோற்றதற்கு பேட்டர்களின் பொறுப்பற்ற செயல்தான் காரணம். சாம்ஸன்(3), அபிஷேக் சர்மா(24), கேப்டன் சூர்யகுமார்(14), திலக் வர்மா(18), துருவ் ஜூரெல்(2), பாண்டியா(40) அக்ஸர் படேல்(15), வாஷிங்டன் சுந்தர்(6) என 8 பேட்டர்கள் வைத்திருந்தும் 171 ரன்களை சேஸ் செய்ய முடியவில்லை.

ஹர்திக் பாண்டியா(40), தவிர மற்ற எந்த பேட்டரும் 25 ரன்களைக் கடக்கவில்லை, ஒருவர் கூட அரைசதம் அடிக்கவில்லை. இந்த டி20 தொடரிலேயே இந்திய அணி சார்பில் இருவர் மட்டும்தான் அரைசதம் இதுவரை அடித்துள்ளனர்.

சாம்ஸன் தொடர்ந்து 3 டி20 போட்டிகளிலும் ஆர்ச்சர் பந்துவீச்சிலேயே ஆட்டமிழந்துள்ளார். சாம்ஸனின் பலவீனம் என்ன என்பதைத் தெரிந்து கொண்டு அவரின் மார்பு உயரத்துக்கு பவுன்ஸர் போடும்போது அதை தூக்கி அடிக்க முற்பட்டு ஒரே மாதிரியாக ஆட்டமிழந்துள்ளார்.

இந்தியா - இங்கிலாந்து, வருண் சக்ரவர்த்தி

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, சாம்ஸனின் பலவீனம் என்ன என்பதைத் தெரிந்து கொண்டு அவரின் மார்பு உயரத்துக்கு பவுன்ஸர் போடும்போது அதை தூக்கி அடிக்க முற்பட்டு ஒரே மாதிரியாக ஆட்டமிழந்துள்ளார்.

இந்தியாவின் ஹாட்ரிக் வெற்றியை பறித்த 'மோசமான முடிவுகள்'

கேப்டன் சூர்யகுமார் ஃபார்மின்றி தவிக்கிறாரா என்ற சந்தேகம் எழுகிறது. கடந்த 5 இன்னிங்ஸ்களிலும் ஸ்கே ஒற்றை இலக்க ரன்னில்தான் ஆட்டமிழந்துள்ளார். டி20 உலகக் கோப்பைத் தொடரிலிருந்தே அவரது பேட்டிங் பெரிதாக சொல்லும் அளவுக்கும், ஸ்கோரும் பெரிதாக எடுக்கவில்லை.

கேப்டன் பொறுப்பு அவரின் இயல்பான பேட்டிங்கிற்கு சுமையாக இருக்கிறதா எனத் தெரியவில்லை. இந்தத் தொடரிலும் களத்துக்கு வந்தவுடன் பெரிய ஷாட்டுக்கு முற்பட்டுதான் சூர்யகுமார் விக்கெட்டை இழந்துள்ளார். ஓரளவு நிலைத்து பேட் செய்திருந்தால் நடுவரிசை ஸ்திரப்பட்டு ரன்கள் வந்திருக்கும்.

பவர்ப்ளே முடிவதற்குள்ளே இந்திய அணி 48 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அதன்பின் வந்த பேட்டர்களும் ஓரளவு பொறுப்புடன் பேட் செய்திருக்கலாம். திலக் வர்மா கடந்த 5 இன்னிங்ஸ்களாக நாட்அவுட் முறையில் இருந்தே அணியை வெற்றிக்கு அழைத்து சென்ற நிலையில், அடில் ரஷித் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார்.

2024, நவம்பர் 10ம் தேதியிலிருந்து திலக் வர்மா பங்கேற்ற போட்டிகளில் நாட்அவுட் முறையில்தான் ஆடி வருகிறார், இந்த இடைப்பட்ட காலத்தில் 336 ரன்கள் சேர்த்துள்ளார், ஒரு சதம் மற்றும் அரைசதமும் அடித்த நிலையில் நடுவரிசையில் அவரின் மீது சுமையை ஏற்றுவது தவறாகும்.

அக்ஸர் படேல், வாஷிங்டன் சுந்தரைவிட சிறந்த பேட்டரான துருவ் ஜூரெலை 8வது வீராகக் களமிறக்கி நெருக்கடியில் தள்ளினர். இடது, வலது பேட்டர்கள் களத்தில் இருக்க வேண்டும் என்பதற்காக பேட்டிங் வரிசையை குழப்பி, முறையான பேட்டரை நடுவரிசையில் களமிறக்காமல் 8-வது வரிசையில் களமிறக்கி அவரை வீணடித்தனர்.

இந்தியா - இங்கிலாந்து, வருண் சக்ரவர்த்தி

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, துருவ் ஜூரெலை 8வது வீராகக் களமிறக்கி நெருக்கடியில் தள்ளினர்.

தொடக்க வீரர்கள் நல்ல அடித்தளத்தை அமைத்துக் கொடுத்தால்தான் அடுத்தடுத்து வரும் வீரர்களுக்கு சுமை, அழுத்தம் குறையும். ஆனால், கடந்த 3 போட்டிகளிலும பவர்ப்ளே ஓவர்களுக்குள் தொடக்க வீரர்களில் யாரேனும் ஒருவர் ஆட்டமிழந்துவிடும் போது, பவர்ப்ளே ஓவர்களை பயன்படுத்தும் வகையில் அடுத்துவரும் பேட்டர்கள் அதிரடி ஆட்டத்தை கையாள வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டு விக்கெட்டை இழக்கிறார்கள்.

ஒட்டுமொத்தத்தில் இந்திய அணியின் பேட்டர்களின் ஒட்டுமொத்த பங்களிப்பு கடந்த 3 போட்டிகளிலும் இல்லை. யாரேனும் ஒரு வீரர்தான் வெற்றியை தோளில் சுமந்து செல்ல வேண்டிய நிலைதான் இருந்தது. கடந்த இரு போட்டிகளில் அபிஷேக் சர்மா, திலக்வர்மா தோளில் சுமந்தநிலையில் இந்த ஆட்டத்தில் வெற்றியை சுமக்க யாரும் முன்வராத நிலையில் தோல்வி அடைந்துள்ளது.

அதுமட்டுமல்ல இங்கிலாந்து அணி 127 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியபோது கூட ஆட்டம் இந்திய அணியின் கைவசம்தான் இருந்தது. ரவி பிஸ்னாய் வீசிய 16வது ஓவர்தான் ஆட்டத்தின் போக்கை மாற்றி இங்கிலாந்தின் கை ஓங்கச் செய்தது. பிஸ்னாய் ஓவரில் லிவிங்ஸ்டன் அடித்த 3 சிக்ஸர் ஸ்கோரை உயர்த்தியது.

2023ம் ஆண்டுக்குப்பின் முகமது ஷமி இந்த ஆட்டத்தில் பந்துவீசியும் பெரிதாக எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை.

இந்தியா - இங்கிலாந்து, வருண் சக்ரவர்த்தி

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, முகமது ஷமி இந்த ஆட்டத்தில் பந்துவீசியும் பெரிதாக எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை.

வருண் சக்ரவர்த்தி வித்தியாசமான சாதனை

டி20 தொடர் தொடங்கியதிலிருந்து வருண் சக்ரவர்த்தியின் பந்துவீச்சு இங்கிலாந்து பேட்டருக்கு புரியாத புதிர் போன்று இருக்கிறது. இந்த ஆட்டத்தில் ஆர்ச்சர் போல்டான போது, பந்து எப்படி தனது கட்டுப்பாட்டை மீறி போல்டாகியது எனத் தெரியாமல் புலம்பிக்கொண்டே ஆட்டமிழந்து சென்றார். புதிராகப் பந்துவீசும் வருணின் உழைப்பை இந்திய அணி இந்த ஆட்டத்தில் பயன்படுத்தவில்லை. நடுப்பகுதி ஓவர்களில் இங்கிலாந்து ரன்ரேட்டை கட்டுப்படுத்தி விக்கெட்டுகளை வீழ்த்தி நல்ல அடித்தளத்தை வருண் அமைத்துக்கொடுத்தார்.

இந்திய அணிக்குள் மீண்டும் வந்ததில் இருந்து வருணின் பந்துவீச்சு மெருகேறி வருகிறது. கடந்த 10 போட்டிகளில் மட்டும் வருண் 27 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

இந்த ஆட்டத்தையும் சேர்த்து இந்திய சுழற்பந்து வீச்சாளர் வருண் சக்ரவர்த்தி சர்வதேச டி20 போட்டியில் 5 விக்கெட் எடுப்பது இது 2-வது (ஏற்கனவே தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக) முறையாகும். ஆனால் அந்த 2 போட்டிகளிலும் இந்திய அணி தோல்வியையே சந்தித்துள்ளது.

இதன் மூலம் சர்வதேச டி20 கிரிக்கெட் வரலாற்றில் தோல்வியடைந்த போட்டிகளில் இரண்டு முறை 5 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் பந்துவீச்சாளர் என்ற வித்தியாசமான சாதனையை வருண் சக்ரவர்த்தி படைத்துள்ளார்.

இந்தியா - இங்கிலாந்து, வருண் சக்ரவர்த்தி

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, கடந்த 10 போட்டிகளில் மட்டும் வருண் 27 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

"வெற்றியைத் தவறவிட்டோம்"

தோல்விக்குப்பின் இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் கூறுகையில் " பனியின் தாக்கம் லேசாக இருந்ததாக நினைக்கிறேன். அக்ஸர்-ஹர்திக் களத்தில் இருந்தபோது 24 பந்துகளில் 55 ரன்கள்தான் தேவைப்பட்டன. ஆட்டம் எங்கள் கைகளில் இருந்தது என நினைத்தோம். அதில் ரஷித் எங்ளை ரன் சேர்க்கவிடாமல் கட்டிப்போட்டார். ஒவ்வொரு போட்டியிலும் கற்றுக்கொள்கிறோம்.

127 ரன்களி்ல் 8 விக்கெட்டுகளை இங்கிலாந்து இழந்திருந்த நிலையில் 170 ரன்களை அடிக்க வைத்தது தவறுதான். பேட்டிங்கிலும் அதிகம் கற்றுக்கொண்டிருக்கிறோம். ஷமியின் பந்துவீச்சு சிறப்பாக இருந்தது, வருண் கடினமாக உழைக்கிறார், அதற்கான பலன் கிடைத்துள்ளது" எனத் தெரிவித்தார்.

இந்தியா - இங்கிலாந்து, வருண் சக்ரவர்த்தி

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, கடந்த 2 போட்டிகளிலும் செய்த தவறுகளை கேப்டன் பட்லர் செய்யவில்லை.

இந்திய பேட்டர்களை திணறவிட்ட ரஷித்

இங்கிலாந்து அணியின் சுழற்பந்துவீச்சாளர் ரஷித் அந்த அணியின் வெற்றிக்கு முக்கியக் காரணமாக அமைந்தார். நடுப்பகுதியில் ரன் ரேட்டை கட்டுப்படுத்தி இந்திய அணியை தோல்வியில் தள்ளினார். 4 ஓவர்கள் வீசி ரஷித் 15 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார், தனது ஓவரில் ஒரு பவுண்டரி, சிக்ஸரைக் கூட அடிக்க ரஷித் அனுமதிக்கவில்லை. அதிலும் திலக் வர்மாவை போல்டாக்கிய ரஷித்தின் பந்துவீச்சு, மறைந்த ஷேன் வார்ன் பந்துவீச்சுக்கு ஓப்பாக அமைந்தது.

மிகக் குறைந்த 75 கி.மீ வேகத்தில் பந்தை டாஸ் செய்யும் விதம், அதை அடிக்க முடியாமல் பேட்டர்கள் திணறுவது என ரஷித்தின் பந்துவீச்சு இந்திய பேட்டர்களுக்கு நேற்று சிம்மசொப்பனமாகவே இருந்தது. நடுப்பகுதியில் 7 முதல் 15 ஓவர்கள் வரை இந்திய அணி 2 விக்கெட்டுகளை இழந்து 57 ரன்கள் சேர்த்த நிலையில் இங்கிலாந்து 7 விக்கெட்டுகளை இழந்து 77 ரன்கள் சேர்த்தது.

இந்தியா - இங்கிலாந்து, வருண் சக்ரவர்த்தி

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, இங்கிலாந்து அணியின் சுழற்பந்துவீச்சாளர் ரஷித் அந்த அணியின் வெற்றிக்கு முக்கியக் காரணமாக அமைந்தார்.

4 பேர் 8 விக்கெட்டுகள்

ராஜ்கோட் மைதானம் வேகப் பந்துவீச்சுக்கும், ஸ்விங் பந்துவீச்சுக்கும் பெரிதாக ஒத்துழைக்காத நிலையில்கூட இங்கிலாந்து பந்துவீச்சாளர்கள் மைதானத்தை நன்கு புரிந்து அதற்கு ஏற்றபடி பந்துவீசினர். அதுமட்டுமல்லாமல் இந்திய பேட்டர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு திட்டத்துடன் களமிறங்கி கட்டம்கட்டி தூக்கினர்.

குறிப்பாக சாம்ஸனுக்கு பவுன்ஸர் பந்துவீச்சு எரிச்சலைத் தரும் என்பதைத் தெரிந்து ஆர்ச்சர் தொடர்ந்து பவுன்ஸராக வீசி விக்கெட்டை வீழ்த்தினார். மார்க் உட்டின் 150 கி.மீ வேகத்தில் வீசப்படும் பந்துவீச்சு, சூர்யகுமார் விக்கெட்டை பதம் பார்த்தது. இந்தத் தொடரில் அறிமுகமாகிய பிரென்டன் கார்ஸ், ஓவர்டன் என இருவரும் இந்திய பேட்டர்களுக்கு சரியான லைன் லென்த்தில் வீசி திணறவிட்டனர்.

இந்தியா - இங்கிலாந்து, வருண் சக்ரவர்த்தி

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, இங்கிலாந்து அணியில் டக்கெட் அரைசதம் அடித்திருந்தார்.

இங்கிலாந்து வெற்றிக்கு காரணம் என்ன?

இங்கிலாந்து அணியினர் இந்திய பேட்டர்கள் ஒவ்வொருக்கும் ஒரு திட்டத்துடன் வந்து அதை களத்தில் சரியாகப் பயன்படுத்தினர். கடந்த 2 போட்டிகளிலும் செய்த தவறுகளை கேப்டன் பட்லர் செய்யவில்லை.

எந்த பேட்டருக்கு யாரை பந்துவீசச் செய்யலாம், எந்த பேட்டருக்கு எவ்வாறு பீல்டிங் அமைக்கலாம் எனத் தெரிந்து அதை சரியாக அமைத்தார். சூர்யகுமார் யாதவுக்கு அதிவேகமாக பந்துவீசினால் சிக்ஸர் அல்லது விக்கெட் இழப்பார் எனத் தெரிந்து மார்க் உட்டை பந்துவீசச் செய்தார். சாம்ஸனுக்கு விரித்த வலையில் அவரி எளிதாக வீழ்ந்தார். இதுபோல் ஒவ்வொரு வீரரையும் கட்டம்கட்டி இங்கிலாந்து அணி தூக்கியது.

இங்கிலாந்து அணியிலும் எந்த பேட்டரும் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. டக்கெட் மட்டுமே அரைசதம் அடித்திருந்தார். பட்லர் 24 ரன்கள் சேர்த்தார். நடுவரிசையில் லிவிங்ஸ்டோன் பிஞ்ச் ஹிட்டராக ஆடியவிதம் ஸ்கோரை ராக்கெட் வேகத்தில் உயர்த்தியது.

இந்த மைதானத்தில் 171 ரன்கள் எளிதாக சேஸ் செய்யக்கூடியதுதான். ஆனால் அதை சேஸ் செய்யவிடாமல் இங்கிலாந்து அணியினர் தங்களின் திட்டமிட்ட பந்துவீச்சால் டிபெண்ட் செய்துள்ளார்கள் என்பதில்தான் அவர்களது வெற்றியின் சூட்சுமம் இருக்கிறது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

IND vs ENG: இந்திய அணி டி20 தொடரை வென்றது எப்படி? ராணாவை களமிறக்கியது சர்ச்சையாவது ஏன்?

IND vs ENG T20 Series

பட மூலாதாரம்,GETTY IMAGES

கட்டுரை தகவல்
  • எழுதியவர், க.போத்திராஜ்
  • பதவி, பிபிசி தமிழுக்காக
  • 4 மணி நேரங்களுக்கு முன்னர்

புனேவில் நேற்று நடந்த நான்காவது டி20 போட்டியில் இங்கிலாந்து அணியை 15 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்து இந்திய அணி டி20 தொடரை கைப்பற்றியது.

முதலில் பேட் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 181 ரன்கள் சேர்த்தது. 182 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணி 19.4 ஓவர்களில் 166 ரன்களுக்கு ஆட்டமிழந்து 15 ரன்களில் தோல்வி அடைந்தது.

இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 3-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்று தொடரைக் கைப்பற்றியது. சூர்யகுமார் யாதவ் கேப்டன்சியில் இதுவரை தொடரை இழக்காமல் இந்திய அணி பயனித்துள்ளது.

அது மட்டுமின்றி 2019ஆம் ஆண்டிலிருந்து இதுவரை இரு நாடுகளுக்கு இடையிலான டி20 தொடரைத் தொடர்ந்து 17வது முறையாக இந்திய அணி வென்று புதிய சாதனை படைத்துள்ளது.

இந்திய அணி ஒரு கட்டத்தில் 12 ரன்களுக்கு 3 விக்கெட், 79 ரன்களுக்கு 5 விக்கெட் என இக்கட்டான நிலையில் இருந்தபோது, ஹர்திக் பாண்டியா, ஷிவம் துபே இடையிலான பார்ட்னர்ஷிப்தான் அணியை பெரிய ஸ்கோருக்கு இட்டுச் சென்றது.

ஹர்திக் பாண்டியா 30 பந்துகளில் 4 சிக்ஸர், 4 பவுண்டரிகள் உள்பட 53 ரன்களும், ஷிவம் துபே 33 பந்துகளில் 2 சிக்ஸர், 7 பவுண்டரிகள் உள்பட 53 ரன்களும் சேர்த்து ஆட்டமிழந்தனர். இருவரும் சேர்ந்து 6வது விக்கெட்டுக்கு 87 ரன்கள் சேர்த்து பெரிய ஸ்கோருக்கு உதவினர்.

பந்துவீச்சில் வருண் சக்கரவர்த்தி இரண்டு விக்கெட்டுகளையும், ஹர்சித் ராணா, ரவி பிஸ்னோய் இருவரும் தலா 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தி, ஆட்டத்தில் திருப்புமுனையை ஏற்படுத்தினர்.

குறிப்பாக களத்தில் வலுவாகக் காலூன்றிய ஹேரி ப்ரூக் ஆட்டத்தை இங்கிலாந்து பக்கம் திருப்பியபோது, அவரின் விக்கெட்டை வருண் வீழ்த்தியதோடு, அதே ஓவரில் கார்ஸ் விக்கெட்டை சாய்த்து ஒரே ஓவரில் 2 விக்கெட்டை வீழ்த்தியபோது இங்கிலாந்து தோல்விப் பாதைக்குள் பயணிக்கத் தொடங்கியது.

மேலும், 19வது ஓவரின் இறுதிவரை களத்தில் நின்று 53 ரன்கள் சேர்த்த ஷிவம் துபேவுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.

விமர்சனத்திற்கு உள்ளாகும் இந்திய அணியின் வெற்றி

ஆனால், இந்திய அணி வெற்றி பெற்றதில்தான் புதிய சர்ச்சை எழுந்துள்ளது. ஓவர்டன் வீசிய கடைசி ஓவரை எதிர்கொண்டபோது, 143 கி.மீ வேகத்தில் வீசப்பட்ட 5வது பந்து ஷிவம் துபேவின் தலைக் கவசத்தில் பட்டு பந்து தெறித்தது. இதுபோன்ற நேரத்தில் உரிய முதலுதவியும், தேவைப்பட்டால் வீரரின் உடல்நிலைக்கு ஏற்ப மாற்று வீரர் விளையாடுவதற்கான வாய்ப்பும் அளிக்கப்பட வேண்டும் என்பது ஐசிசி விதி.

இன்னிங்ஸ் முடிந்து பெவிலியன் சென்றபின் ஷிவம் துபேவுக்கு ஃபீல்டிங் செய்ய முடியாததால் அவருக்குப் பதிலாக வேகப்பந்துவீச்சாளர் ஹர்சித் ராணா கன்கசன் மாற்றுவீரராகக் களமிறக்கப்பட்டு பந்துவீச வைக்கப்பட்டார். ராணா எடுத்துக் கொடுத்த 3 விக்கெட்டுகளும் வெற்றிக்கு முக்கியமானவையாக, திருப்புமுனையாக மாறின.

ஐசிசி விதிப்படி, காயமடைந்த ஒரு வீரர் எந்தத் தகுதியில் இருக்கிறாரோ அதே தகுதியில்தான் கன்கசன் மாற்றுவீரரையும் களமிறக்க வேண்டும். ஒரு பேட்டர் கன்கசனில் வெளியேறினால் பேட்டரை களமிறக்கலாம், பந்துவீச்சால் காயமடைந்தால் அவருக்குப் பதிலாக பந்துவீச்சாளரையும், ஆல்ரவுண்டருக்கு பதிலாக ஆல்ரவுண்டரையும் களமிறக்கலாம்.

இந்நிலையில் ஷிவம் துபே ஒரு பேட்டர், ஆனால், அவருக்குப் பதிலாக பந்துவீச்சாளரான ஹர்சித் ராணாவை களமிறக்கி விளையாட வைத்து இந்திய அணி பெற்ற வெற்றியை ஏற்றுக்கொள்ள முடியாது என வர்ணனையாளர்களும், இங்கிலாந்து கேப்டன் ஜோஸ் பட்லரும் அதிருப்தி தெரிவித்தனர். மேலும், இங்கிலாந்து பயிற்சியாளர் பிரண்டென் மெக்கலமும் போட்டி முடிந்தபின் நடுவர்களுடன் மைதானத்தில் நீண்ட ஆலோசனை நடத்தினார்.

IND vs ENG T20 Series

பட மூலாதாரம்,GETTY IMAGES

இங்கிலாந்து கேப்டன் ஜோஸ் பட்லர் ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில் "எங்கள் தோல்விக்குப் பல காரணங்கள் இருக்கின்றன. ஆனால், கன்கசனில் லைக் டூ லைக் மாற்றுவீரர் சரியானதாக எனக்குத் தெரியவில்லை, அதில் விருப்பமும் இல்லை," என்று தெரிவித்தார்.

அதோடு, "இதில் எங்களுக்கு உடன்பாடு இல்லை. ஷிவம் துபேவால் 25 கி.மீ வேகத்தில்கூட பந்துவீச முடியாது. ஆனால், ஹர்சித் ராணா 145 கி.மீ வேகத்தில் பந்துவீசக் கூடியவர், பேட்டிங் சரியாக வராது. ஆனால், துபே சிறந்த பேட்டர். எப்படி இது சரியான கன்கசன் மாற்று வீரராக இருக்கும். இந்த ஆட்டத்தில் நாங்கள் உண்மையாக வென்றிருக்க வேண்டும். கன்கசனில் மாற்று வீரராகச் சேர்க்கப்பட்ட முடிவை நாங்கள் ஏற்கவில்லை," என்றும் கூறினார்.

மாற்று வீரராக இதுபோன்ற வீரரைக் களமிறக்கும் முன்பாக எதிரணியிடம் ஆலோசனை நடத்த வேண்டும் எனவும் ஆனால் தன்னிடம் எதுவும் கேட்கவில்லை எனவும் ஜோஸ் பட்லர் குறிப்பிட்டார்.

"நான் பேட்டிங் செய்ய வந்தபோது, திடீரென ஹர்சித் ராணா பந்துவீச வருகிறார். இவர் எப்படி பந்து வீசுகிறார் என்று எனக்கு குழப்பம் ஏற்பட்டது. இது உண்மையில் ஏற்க முடியாத முடிவு. சரியான மாற்று வீரர் முடிவும் அல்ல. இது போட்டி நடுவர் ஸ்ரீநாத் எடுத்த முடிவு என்று இந்திய அணி தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

இந்த விவகாரத்தில் போட்டி நடுவரிடம் சில கேள்விகளை எழுப்பி நாங்கள் எங்கள் நிலையைத் தெளிவுபடுத்துவோம். எங்களுக்கு வெற்றி பெறுவதற்குப் பல வாய்ப்புகள் இந்த ஆட்டத்தில் இருந்தன. ஆனால், பயன்படுத்த முடியாததற்குப் பல காரணங்கள் இருந்தாலும் அதில் இதுவும் ஒன்று" எனத் தெரிவித்தார்.

இந்திய அணி கூறியது என்ன?

IND vs ENG T20 Series

பட மூலாதாரம்,GETTY IMAGES

இந்திய அணியின் துணைப் பயிற்சியாளர் மோர்கல் கூறுகையில், "இது முற்றிலும் எங்களின் முடிவல்ல. கன்கசன் மாற்றுவீரராக ராமன்தீப் சிங், ஹர்சித் ராணா இருவர் பெயரைக் கொடுத்தபோது, போட்டி நடுவர் ஸ்ரீநாத் தேர்வு செய்ததுதான் இறுதி முடிவு. ராணாவின் பெயரைத் தேர்வு செய்தபோது, அவர் இரவு உணவு சாப்பிட்டுக்கொண்டிருந்தார் உடனடியாகக் களமிறங்க அவரை அவசரப்படுத்தினோம். இந்த முடிவு எங்களை மீறியது, பெயரை மட்டுமே நாங்கள் அளிக்க முடியும், முடிவெடுப்பது போட்டி நடுவர்தான்" எனத் தெரிவித்தார்.

அதுமட்டுமின்றி வர்ணணனையாளர்களாக இருந்த இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர்கள் கெவின் பீட்டர்சன், நிக் நைட் இருவரும், இந்திய அணி கன்கசன் மாற்றுவீரராக துபேவுக்கு பதிலாக ஹர்சித் ராணா களமிறங்கியது குறித்துப் பல்வேறு கேள்விகளை எழுப்பி விமர்சித்தனர்.

கன்சனில் செல்லும் வீரரின் தகுதிக்கு நிகரான மாற்றுவீரரைக் களமிறக்க வேண்டும், மாற்றுவீரரை களமிறக்கும் முன் எதிரணியினரிடம் ஆலோசிக்கலாம் என்ற இரு ஐசிசி விதிகளுமே நேற்று கடைபிடிக்கப்படவில்லை என்று சமூக ஊடகங்களில் விமர்சனங்கள் எழுகின்றன.

ஒருவேளை ஐசிசி விதியின்படி துபேவுக்கு மாற்றாக ராமன்தீப் சிங் அல்லது பேட்டரை களமிறக்கி இருந்தால், நேற்றைய ஆட்டம் இங்கிலாந்து அணியின் பக்கம் திரும்பியிருக்கக் கூடும்.

ஏனென்றால், ஹர்சித் ராணா கடைசி நேரத்தில் எடுத்துக் கொடுத்த 3 விக்கெட்டுகள்தான் ஆட்டத்தை இந்தியாவின் பக்கம் கொண்டு வந்தது. அப்படியிருக்கையில் ஹர்சித் ராணாவால் வெற்றி பறிபோனதை, இங்கிலாந்து வீரர்கள் ஏற்கவில்லை என்று அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

இந்திய அணி வெற்றி பெற்ற விதம் சரியானதா, இது நேர்மையானதா என்ற கேள்விகள், விமர்சனங்கள் சமூக ஊடகங்களில் ரசிகர்களால் முன்வைக்கப்படுகிறது.

இந்திய அணியின் டாப் ஆர்டர் தோல்வி

IND vs ENG T20 Series

பட மூலாதாரம்,GETTY IMAGES

இந்திய அணியின் பேட்டிங்கில் நேற்றும் வழக்கம்போல் டாப் ஆர்டர் தோல்வி அடைந்தனர். சாம்ஸன் தொடர்ந்து 4வது போட்டியில் மோசமான பேட்டிங்கை வெளிப்படுத்தினார். அபிஷேக் சர்மா அதிரடியாக ஆடினாலும் 29 ரன்களில் ரஷித் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார். கேப்டன் சூர்யகுமார் யாதவ் இந்தத் தொடரில் இரண்டாவது முறையாக டக்அவுட்டில் வெளியேறினார், இவரின் மோசமான ஃபார்ம் தொடர்ந்து வருகிறது. ரிங்கு சிங் 30 ரன்களில் ஆட்டமிழந்தார்.

இந்திய அணி, 12 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளையும், 78 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளையும் இழந்து மோசமான நிலையில் இருந்தது. 6வது விக்கெட்டுக்கு ஹர்திக் பாண்டியா, ஷிவம் துபே இருவரும் சேர்ந்து ஆட்டத்தைக் கையில் எடுத்தனர். இங்கிலாந்து பந்துவீச்சை வெளுத்து வாங்கி இருவரும், சரிந்திருந்த ரன்ரேட்டை உயர்த்தினர். ஹர்திக் 27 பந்துகளிலும், துபே 31 பந்துகளிலும் அரைசதம் அடித்தனர்.

ஆறாவது விக்கெட்டுக்கு 87 ரன்கள் சேர்த்தநிலையில் பாண்டியா 53 ரன்களில் ஆட்டமிழந்தார். கடைசிவரை களத்தில் இருந்த துபே 53 ரன்களில் ரன்அவுட் ஆனார். கடைசி ஓவரில் மட்டும் இந்திய அணி அக்ஸர் படேல், அர்ஷ்தீப், துபே ஆகிய 3 விக்கெட்டுகளை இழந்தது. 180 ரன்களுக்கு 6 விக்கெட்டுகள் என இருந்த இந்திய அணி ஒரு ரன்னுக்கு 3 விக்கெட்டுகளை பறிகொடுத்தது.

ஆட்டம் ஒரு கட்டத்தில் இங்கிலாந்து பக்கம் இருந்தது. 78 ரன்களுக்கு 5 விக்கெட்டுகள் என இக்கட்டான நிலையில் இருந்தபோது, ஹர்திக், துபேவின் ஆட்டம்தான் திருப்புமுனையாக மாறியது. அதேநேரம் இருவரும் பிரிந்த பிறகு களமிறங்கிய எந்த பேட்டரும் பெரிதாக ரன் சேர்க்கவில்லை. இந்தத் தொடரில் துணை கேப்டனாக நியமிக்கப்பட்ட அக்ஸர் படேல் இதுவரை ஒரு போட்டியில்கூட பெரிதாக ரன்கள் சேர்க்கவில்லை.

'சரியான திசையில் செல்கிறோம்'

வெற்றிக்குப் பிறகு இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் கூறுகையில், "அணியில் உள்ள ஒவ்வொருவரும் தொடக்கம் முதல் கடைசி வரை சிறப்பாகச் செயல்பட்டோம். 12 ரன்களுக்கு 3 விக்கெட்டை இழந்த தருணத்தில்கூட நம்பிக்கையை இழக்காமல் அதிரடியாகவே பேட் செய்தோம். துபே, பாண்டியா தங்களின் அனுபவத்தை இந்த ஆட்டத்தில் வெளிப்படுத்தியது சிறப்பு. இதைத்தான் வலைப்பயிற்சியில் பேசினோம், அதைச் செய்துள்ளனர்.

சரியான திசையில் நாங்கள் செல்வது மகிழ்ச்சியாக இருக்கிறது. பவர்ப்ளேவுக்கு அடுத்து வரும் ஓவர்கள் முக்கியமானவை என்று எனக்குத் தெரியும், அந்த நேரத்தில் ஆட்டத்தைக் கட்டுக்குள் கொண்டுவர முடிந்தது. சில விக்கெட்டுகளை வீழ்த்தினோம், ராணா 3வது பந்துவீச்சாளராக வந்து சிறப்பாகப் பந்துவீசினார்" எனத் தெரிவித்தார்.

இங்கிலாந்து தோல்விக்கு என்ன காரணம்?

IND vs ENG T20 Series

பட மூலாதாரம்,GETTY IMAGES

இங்கிலாந்து அணிக்கு தொடக்கம் அற்புதமாக இருந்தது, நடுவரிசையில் ஹேரி ப்ரூக்கின் ஆட்டமும் வெற்றியின் அருகே கொண்டு சென்றது. ஆனால், முக்கியமான தருணத்தை கைப்பற்றத் தவறியதே இங்கிலாந்து அணியின் தோல்விக்குக் காரணமாக அமைந்தது.

பென் டக்கெட், பில் சால்ட் இருவரும் அருமையான தொடக்கத்தை அளித்தனர். இந்தத் தொடரில் இதுவரை அதிரடியாக ஆடாத சால்ட் இந்த ஆட்டத்தில் நிதானமாக ஆடி பவுண்டரிகளை அடித்தார். பவர்ப்ளே முடிவில் 62 ரன்கள் சேர்த்து ட்கெட்(39) விக்கெட்டை பிஸ்னாயிடம் இங்கிலாந்து இழந்திருந்தது.

இங்கிலாந்து அணி வெற்றிக்கு 120 ரன்கள் தேவைப்பட்டது, 14 ஓவர்கள் இருந்தன, கைவசம் 9 விக்கெட்டுகள் இருந்தன.

அந்த நிலையில், அக்ஸர் படேல் வீசிய 7வது ஓவரில் சால்ட்(23) போல்டாகி ஆட்டமிழந்தார். அடுத்து வந்த கேப்டன் பட்லர் 2 ரன்னில் பிஸ்னாய் பந்துவீச்சில் விக்கெட்டை பறிகொடுத்தார். 62 ரன்கள் வரை விக்கெட் இழப்பின்றி இருந்த இங்கிலாந்து 67 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை பறிகொடுத்தது.

லிவிங்ஸ்டோன், ஹேரி ப்ரூக் இருவரும் களத்தில் நிலைக்கத் தொடங்கினர். ஹேரி பரூக் வழக்கத்துக்கு மாறாக இந்திய பந்துவீச்சை வெளுத்து வாங்கினார். குறிப்பாக ராணா பந்துவீச்சில் சிக்ஸர்கள், பவுண்டரி என 18 ரன்கள் சேர்த்து, 25 பந்துகளில் அரைசதம் அடித்தார்.

ராணா பந்துவீச்சில் 9 ரன்னில் லிவிங்ஸ்டோன் ஆட்டமிழந்தார். விக்கெட் சரிந்தபோதிலும் இங்கிலாந்து அணியை ஹேரி ப்ரூக் வெற்றியை நோக்கி அழைத்துச் சென்றார்.

வருண் 15-வது ஓவரை வீசினார். இதுதான் ஆட்டத்தின் திருப்புமுனையாக மாறியது. களத்தில் செட்டில் ஆன பேட்டர் ஹேரி ப்ரூக்கை(51) வீழ்த்தி, அதே ஓவரில் பிரைடன் கார்ஸும் விக்கெட்டை பறிகொடுத்தார். ஒரே ஓவரில் இரு விக்கெட்டுகளை இழந்து இங்கிலாந்து சற்று ஆட்டம் கண்டது.

அதன் பிறகு கடைசி வரிசை வீரர்கள் பெரிதாக பேட்டிங்கில் பங்களிக்கவில்லை, ஓவர்டன் 19 ரன்களில் ஆட்டமிழந்தார். ஹேரி ப்ரூக் ஆட்டமிழந்த பின், யாரேனும் ஒரு பேட்டர் பொறுப்பெடுத்து பேட் செய்திருந்தால் வெற்றி இங்கிலாந்து அணியின் கையிலிருந்து நழுவிச் சென்றிருக்காது.

கடைசி 3 ஓவர்களில் வெற்றிக்கு 36 ரன்களும், கடைசி 2 ஓவர்களில் 25 ரன்களும் தேவைப்பட்டன. இது டி20 போட்டிகளில் நிச்சயமாக அடைந்துவிடக்கூடிய ஸ்கோர்தான். ஆனால், இங்கிலாந்து அணியில் கடைசி வரிசை பேட்டர்கள் பொறுப்பெடுத்து பேட் செய்யாமல் இருந்தது தோல்விக்கான காரணங்களில் ஒன்று.

பந்துவீ்ச்சில் சிறப்பாகச் செயல்பட்டு இந்திய அணியின் 5 விக்கெட்டுகளை மளமளவென வீழ்த்திய நிலையில் அதன் பிறகு நெருக்கடி கொடுக்கத் தவறியதும் தோல்விக்கான காரணங்களில் ஒன்று. ஹர்திக் - துபே பார்ட்னர்ஷிப்பை தொடக்கத்திலேயே உடைத்திருந்தால், நிச்சயமாக இந்தப் போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற்றிருக்கக்கூடும்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

துடுப்பாட்ட சாதனையுடன் பந்துவீச்சிலும் அசத்திய அபிஷேக் ஷர்மா; இந்தியாவிடம் இங்கிலாந்து படுதோல்வி

03 FEB, 2025 | 06:09 PM
image

(நெவில் அன்தனி)

இங்கிலாந்துக்கு எதிராக மும்பை வான்கேட் விளையாட்டரங்கில் நேற்று (2) இரவு நடைபெற்ற ஐந்தாவது சர்வதேச ரி20 கிரிக்கெட் போட்டியில் அபிஷேக் ஷர்மா துடுப்பாட்ட சாதனையுடன் பந்துவீச்சிலும் பிரகாசிக்க, இந்தியா 150 ஓட்டங்களால் வெற்றியீட்டியது.

இந்த வெற்றியுடன் 5 போட்டிகள் கொண்ட சர்வதேச ரி20 கிரிக்கெட் தொடரை இந்தியா 4 - 1 என்ற ஆட்டங்கள் வித்தியாசத்தில் கைப்பற்றியுள்ளது.

இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்தியா 20 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்து 247 ஓட்டங்களைக் குவித்தது.

24 வயதுடைய அபிஷேக் ஷர்மா 37 பந்துகளில் சதம் குவித்து ஐசிசியில் பூரண அங்கத்துவம் பெற்ற நாடுகளுக்கான இரண்டாவது அதிவேக சதத்தை சர்வதேச ரி20 கிரிக்கெட் போட்டியில் பெற்றார்.

0302_abishek_sharma...png

பூரண அங்கத்துவம் பெற்ற நாடுகளின் வீரர்கள் வரிசையில் 35 பந்துகளில் சதம் குவித்த தென் ஆபிரிக்காவின் டேவிட் மில்லர், இந்தியாவின் ரோஹித் ஷர்மா ஆகியோருக்கு அடுத்ததாக அபிஷேக் ஷர்மா இரண்டாவது இடத்தில் உள்ளார்.

இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் 54 பந்துகளில் 7 பவுண்டறிகள், 13 சிக்ஸ்களுடன் 135 ஓட்டங்களைக் குவித்த அபிஷேக் ஷர்மா, இந்தியா சார்பாக சர்வதேச ரி20 கிரிக்கெட் போட்டியில் அதிக ஓட்டங்ளைப் பெற்ற தனிநபருக்கான சாதனையை நிலைநாட்டினார்.

நியூஸிலாந்துக்கு எதிராக 2023இல் ஷுப்மான் கில் குவித்த ஆட்டம் இழக்காத 126 ஓட்டங்களே இதற்கு முன்னர் இந்தியரால் பெறப்பட்ட அதிகூடிய ஓட்டங்களாக இருந்தது.

அது மட்டுமல்லாமல் சர்வதேச ரி20 கிரிக்கெட் போட்டியில் அதிக சிக்ஸ்கள் விளாசிய இந்திய வீரர் என்ற சாதனையையும் அவர் நிலைநாட்டினார். இதற்கு முன்னர் ரோஹித் ஷர்மா 10 சிக்ஸ்களுடன் இந்தியர்களில் முதலிடத்தில் இருந்தார்.

இந்த இன்னிங்ஸில்  அபிஷேக் ஷர்மா  17 பந்துகளில் 50 ஓட்டங்களைக் குவித்ததன் மூலம் இந்தியா சார்பாக சர்வதேச ரி20 கிரிக்கெட் போட்டியில் இரண்டாவது அதிவேக அரைச் சதத்தைப் பூர்த்திசெய்த வீரரானார். இங்கிலாந்துக்கு எதிராக 2012ல் யுவ்ராஜ் சிங் 12 பந்துகளில் அதிவேக அரைச் சதத்தைக் குவித்து சாதனை நிலைநாட்;டியிருந்தார்.

அபிஷேக் ஷர்மாவை விட ஷிவம் டுபே 30 ஓட்டங்களையும் திலக் வர்மா 24 ஓட்டங்களையும் பெற்றனர்.

இங்கிலாந்து பந்துவீச்சில் ப்றைடன் கார்ஸ் 38 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களைக் கைப்பற்றினார்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து 10.3 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 97 ஓட்டங்களைப் பெற்றது.

அபிஷேக் ஷர்மா பெற்ற எண்ணிக்கையைவிட இது 38 ஓட்டங்கள் குறைவாகும்.

பில் சோல்ட் மாத்திரமே திறமையாகத் துடுப்பெடுத்தாடி 23 பந்துகளில் 7 பவுண்டறிகள், 3 சிக்ஸ்களுடன் 55 ஓட்டங்களைப் பெற்றார்.

பந்துவீச்சில் மொஹம்மத் ஷமி 25 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் அபிஷேக் ஷர்மா 3 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் ஷிவம் டுகேப 11 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் வருண் சக்ரவர்தி 25 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

ஆட்டநாயகன்: அபிஷேக் ஷர்மா

0302_phil_salt.png

0302_mohammed_shami.png

 

0302_abishek_sharma.png

https://www.virakesari.lk/article/205727

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இந்தியா VS இங்கிலாந்து: இந்திய அணியை வெற்றிப் பாதையில் அழைத்துச் சென்ற மூவர் கூட்டணி

ஷ்ரேயாஸ் அய்யர், IND Vs ENG

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, அரை சதம் அடித்த மகிழ்ச்சியில் ஷ்ரேயாஸ் அய்யர்
7 பிப்ரவரி 2025, 02:47 GMT
புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர்

ஷ்ரேயாஸ் அய்யர், சுப்மான் கில், அக்ஸர் படேல் ஆகியோரின் அபாரமான அரை சதத்தால், நாக்பூரில் வியாழக்கிழமை (பிப். 06) பகலிரவாக நடந்த இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் ஆட்டத்தில் இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.

முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி 47.4 ஓவர்களில் 248 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. 249 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 38.4 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 251 ரன்கள் சேர்த்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.

இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 1-0 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலை வகிக்கிறது. இந்திய அணியின் வெற்றிக்கு நடுவரிசை பேட்டர்கள் ஷ்ரேயாஸ் அய்யர் (59), சுப்மான் கில் (87), அக்ஸர் படேல் (52) ஆகியோரின் அரைசதம் முக்கியக் காரணமாக அமைந்தது.

19 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இந்திய அணி இழந்து தடுமாறியபோது, 3-வது விக்கெட்டுக்கு ஷ்ரேயாஸ், சுப்மான் கில் சேர்ந்து பார்ட்னர்ஷிப் அமைத்து 94 ரன்கள் சேர்த்தது ஆட்டத்தின் போக்கைத் தீர்மானித்தது.

4-வது விக்கெட்டுக்கு சுப்மான் கில், அக்ஸர் படேல் பார்ட்னர்ஷிப் ஆட்டத்தை வெற்றிக்கு அருகே கொண்டு சென்றது, இருவரும் 4-வது விக்கெட்டுக்கு 108 ரன்கள் சேர்த்துப் பிரிந்தனர்.

இந்த 3 பேரும் சேர்ந்து அமைத்த இரு பார்ட்னர்ஷிப்கள்தான் வெற்றியை எளிதாக்கியது. சாம்பியன்ஸ் டிராஃபி நெருங்கி வரும் நேரத்தில் நடுவரிசை பேட்டர்கள் வலுவாக பிரகாசிப்பது இந்திய அணிக்கு பலமாகும். 96 பந்துகளில் 87 ரன்கள் சேர்த்த சுப்மான் கில் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

விராட் கோலி இல்லை

முன்னாள் கேப்டன் விராட் கோலிக்கு முழங்காலில் காயம் ஏற்பட்டுள்ளதால் அவர் இந்த ஆட்டத்தில் ஆடவில்லை. அவருக்கு பதிலாக ஜெய்ஸ்வால் சேர்க்கப்பட்டிருந்தார். "ஒருவேளை கோலி ஆடியிருந்தால், எனக்கு அணியில் இடம் கிடைத்திருக்குமா என்பது சந்தேகம், "என்று ஷ்ரேயாஸ் அய்யரே பேட்டியில் தெரிவித்தார்.

வெற்றிக்கு யார் காரணம்?

வெற்றிக்குப் பின் கேப்டன் ரோஹித் சர்மா கூறுகையில், "நீண்ட காலத்துக்குப் பின் ஒருநாள் போட்டியில் ஆடி வெற்றி பெற்றது மகிழ்ச்சியளிக்கிறது. விரைவாக இந்த ஃபார்முக்கு மாற வேண்டும், புரிந்துகொண்டு ஆடவேண்டும் என நினைத்தேன். நல்ல தொடக்கத்தை நாங்கள் வழங்கவில்லை, இருப்பினும் நடுவரிசை பேட்டர்கள் அற்புதமாக ஆடினர். பந்துவீச்சாளர்கள்தான் கட்டுக்கோப்புடன் பந்துவீசி இங்கிலாந்து அணியை குறைந்த ஸ்கோரில் சுருட்டினர்.

தொடர்ந்து கட்டுக்கோப்புடன் பந்துவீசியது, முக்கிய நேரத்தில் விக்கெட்டை வீழ்த்தியது, உத்வேகம் குறையாமல் இருந்தது வெற்றிக்கான காரணம்.

அக்ஸர் படேலை நடுவரிசையில் களமிறக்க விரும்பினோம், அவரும் சிறப்பாக பேட் செய்தார். கடந்த சில ஆண்டுகளில் அக்ஸர் பேட்டிங் மேம்பட்டுள்ளது. சாம்பியன்ஸ் டிராஃபி வரும் நேரத்தில் நடுவரிசை பேட்டிங் வலுப்பெறுவது நல்ல அம்சம். ஒரு அணியாக சரியான திசையில் செல்கிறோம், பேட்டிங், பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட்டுள்ளோம்" எனத் தெரிவித்தார்

ரோஹித் சர்மா, IND Vs ENG

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, முக்கிய நேரத்தில் விக்கெட்டை வீழ்த்தியது வெற்றிக்கான காரணம் என ரோஹித் சர்மா கூறினார்

அனுபவம், இளமை

இந்திய பந்துவீச்சில் அனுபவமும், இளமையும் கலந்திருந்தது. முதல் ஒருநாள் போட்டியில் அறிமுகமாகிய ஹர்சித் ராணா 3 விக்கெட்டுகளையும், அனுபவ வீரர் ரவீந்திர ஜடேஜா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

அதிலும் ஜடேஜா 9 ஓவர்கள் வீசி ஒரு மெய்டன், 26 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளை சாய்த்து தனது அனுபவத்தை வெளிப்படுத்தினார். ஷமி 8 ஓவர்களில் ஒரு மெய்டன் 38 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டைக் கைப்பற்றினார்.

இந்திய அணி பந்துவீச்சைப் பொருத்தவரை ராணா, ஷமி இருவருமே சிறப்பாகப் பந்துவீசினர். தொடக்கத்தில் ராணா பந்துவீச்சை இ்ங்கிலாந்து பேட்டர்கள் அடித்தாலும் அதன்பின் கட்டுக்கோப்பாக வீசினார். அதேநேரம், அறிமுகப் போட்டியில் ஒரே ஓவரில் 26 ரன்கள் கொடுத்த மோசமான சாதனையையும் ராணா பதிவு செய்தார். அக்ஸர் படேல், ஹர்திக் பாண்டியா, குல்தீப் யாதவ் என 3 பேருமே ஓரளவுக்குக் கட்டுக்கோப்பாகவே பந்துவீசினர்.

சுழற்பந்துவீச்சுக்கு இங்கிலாந்து பேட்டர்கள் திணறுவது இந்த ஆட்டத்தில் தெளிவாகத் தெரிந்தது. ஜடேஜாவின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் ஜோ ரூட், பெத்தல் ஆகிய இரு முக்கிய விக்கெட்டுகளும் ரஷித் விக்கெட்டும் வீழ்ந்தது. பவர்பிளே ஓவர்களில் இந்திய பந்துவீச்சாளர்கள் ஓரளவுக்கு ரன்கள் கொடுத்தாலும், நடுப்பகுதி ஓவர்களில் குல்தீப், அக்ஸர், ஜடேஜா ஆகியோரின் ஓவர்கள் இங்கிலாந்து ரன்ரேட்டை இழுத்துப் பிடித்தது.

ரோஹித் சர்மா, ஹர்சித் ராணா, IND Vs ENG

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, இங்கிலாந்து வீரர் ஹாரி ப்ரூக்கின் விக்கெட்டை வீழ்த்திய மகிழ்ச்சியில் ரோஹித் சர்மா, ஹர்சித் ராணா

திறம்பட விளையாடாத ரோஹித்

இந்திய பேட்டிங்கில் ஜெய்ஸ்வால், ரோஹித் சர்மா கூட்டணி ஏமாற்றம் அளித்தது. 19 ரன்களுக்குள் இருவருமே ஆட்டமிழந்து நெருக்கடியான சூழலை ஏற்படுத்தினர். கேப்டன் ரோஹித் சர்மா நியூசிலாந்து, ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடர், ரஞ்சிக் கோப்பைத் தொடர் இரண்டிலும் திறம்பட விளையாடாத நிலையில் இந்த ஒருநாள் தொடர் அவருக்கு கடைசி வாய்ப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், 2 ரன்னில் ரோஹித் சர்மா ஆட்டமிழந்து ஏமாற்றினார்.

கடந்த 10 இன்னிங்ஸில் ரோஹித் சர்மா 70 ரன்கள் மட்டுமே சேர்த்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஜெய்ஸ்வால் 15 ரன்களில் விக்கெட்டை இழந்தார்.

ஷ்ரேயாஸின் அனல்பறக்கும் அரைசதம்

2 விக்கெட்டுகள் விரைவாக இழந்த நிலையில் களமிறங்கிய ஷ்ரேயாஸ் அய்யர் தொடக்கம் முதலே அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அதிலும், ஜோப்ரா ஆர்ச்சர் பந்துவீச்சில் தொடர்ந்து 2 சிக்ஸர்களைப் பறக்கவிட்டு, ரன் ரேட்டை குறையவிடாமல் கொண்டு சென்றார்.

பவர்பிளேயை சரியாகப் பயன்படுத்திய ஷ்ரேயாஸ் அய்யர் அணியின் ஸ்கோரை வேகமாக உயர்த்தினார். 8 பவுண்டரி, 2 சிக்ஸர்களுடன் 30 பந்துகளில் அரைசத்தை ஷ்ரேயாஸ் அய்யர் நிறைவு செய்தார். ஷ்ரேயாஸ் களத்தில் இருந்தவரை அணியின் ரன்ரேட் 7-க்குக் குறையாமல் சென்றது.

36 பந்துகளில் 59 ரன்கள் சேர்த்த ஷ்ரேயாஸ் அய்யர், பெத்தல் பந்துவீச்சில் கால்காப்பில் வாங்கி ஆட்டமிழந்தார். ஷ்ரேயாஸ் அய்யர் களத்தில் இருந்த 45 நிமிடங்களில் ஆட்டத்தில் ஸ்கோர் வேகமாக உயர்ந்தது.

ஷ்ரேயாஸ் அய்யர், சுப்மான் கில், IND Vs ENG

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, ஷ்ரேயாஸ் அய்யர் மற்றும் சுப்மான் கில்

கில், அக்ஸர் பொறுப்பான அரைசதம்

4-வது விக்கெட்டுக்கு சுப்மான் கில், அக்ஸர் படேல் கூட்டணி நிதானமாக ஆடி அணியை வெற்றிக்கு அருகே கொண்டு சென்றனர். அக்ஸர் படேல் வழக்கமாக 7-வது பேட்டராக களமிறங்கிய நிலையில், அவரை நடுவரிசையில் களமிறக்கினர். தனக்குக் கொடுக்கப்பட்ட வாய்ப்பை சிறப்பாகப் பயன்படுத்திய அக்ஸர் படேல் கட்டுப்பாடின்றி, சுதந்திரமாக ஷாட்களை அடித்தார்.

சுப்மான் கில் 38 ரன்கள் சேர்த்திருந்தபோது லிவிங்ஸ்டன் பந்துவீச்சில் கால்காப்பில் டிஆர்எஸ் அப்பீல் சென்று தப்பித்தார். அதன்பின் விழித்துக்கொண்டு ஆடிய கில், மிகுந்த கவனத்துடன் ஷாட்களைத் தேர்ந்தெடுத்து ஆடி 14-வது அரைசதத்தையும், இங்கிலாந்துக்கு எதிராக முதல் அரைசதத்தையும் பதிவு செய்தார்.

சுப்மான் கில், IND Vs ENG

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, 4வது விக்கெட்டுக்கு சுப்மான் கில், அக்ஸர் படேல் கூட்டணி நிதானமாக ஆடி அணியை வெற்றிக்கு அருகே கொண்டு சென்றனர்

மிகுந்த பொறுப்புடன் ஆடிய அக்ஸர் படேல் 46 பந்துகளில் தனது முதல் அரைசதத்தையும் நிறைவு செய்தார். 28 ஓவர்களில் இந்திய அணி 200 ரன்களை எட்டியது. ரஷித் பந்துவீச்சில் அக்ஸர் படேல் 52 ரன்களில் க்ளீன்போல்டாகி ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய கே.எல்.ராகுல் 2 ரன்னில் ரஷீத் பந்துவீச்சில் அவரிடமே கேட்ச் கொடுத்து விக்கெட்டை இழந்தார்.

சுப்மான் கில் 87 ரன்கள் சேர்த்திருந்தபோது மெஹ்மூத் பந்துவீச்சில் பட்லரிடம் கேட்ச் கொடுத்து பெவிலியன் திரும்பினார். 221 ரன்கள் வரை 3 விக்கெட்டுகளை இழந்து வலுவாக இருந்த இந்திய அணி, அடுத்த 14 ரன்களுக்குள் விரைவாக 3 விக்கெட்டுகளை இழந்தது. ஹர்திக் பாண்டியா (9), ஜடேஜா (12) இருவரும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்து அணியை வெற்றிக்குக் கொண்டு சென்றனர்.

அக்ஸர் படேல், IND Vs ENG

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, மிகுந்த பொறுப்புடன் ஆடிய அக்ஸர் படேல் 46 பந்துகளில் தனது முதல் அரைசதத்தையும் நிறைவு செய்தார்

அதிரடி தொடக்கமும், திடீர் சரிவும்

இங்கிலாந்து அணியைப் பொருத்தவரை பில் சால்ட், டக்கெட் இருவரும் அதிரடியான தொடக்கத்தை அளித்தனர். தொடக்கத்திலிருந்தே ராணாவின் திறமையாக பந்துவீசினார். ராணாவின் ஒரே ஓவரில் 6 சிக்ஸர்கள், 3 பவுண்டர்கள் என 26 ரன்கள் சேர்த்து சால்ட் அதிரடியாக ஆடினார்.

இதனால் விரைவாகவே ராணாவின் ஓவரை நிறுத்திவிட்டு அக்ஸர் படேலை பந்துவீச கேப்டன் ரோஹித் அழைத்தார்.

ஹர்திக் பாண்டியா வீசிய 9-வது ஓவரில் அவுட்சைட் ஆஃப் திசையில் தட்டிவிட்டு சால்ட் ரன் ஓடினார். 2 ரன்கள் ஓடியநிலையில், 3வது ரன் ஓடத் தொடங்கும்போது, ஷ்ரேயாஸ் ஃபீல்டிங் செய்து பந்தை விக்கெட் கீப்பர் ராகுலிடம் எறிந்தார். ஆனால், சால்ட் ஓடிய வேகத்துக்கு, டக்கெட் ஒத்துழைக்கவில்லை.

இதனால், பில் சால்ட் 26 பந்துகளில் 43 ரன்கள் சேர்த்து ரன் அவுட் ஆகினார். டக்கெட்டுடன் தகவல் பரிமாற்றம் சரியாக அமையாததால் சால்ட் விக்கெட்டை இழந்தார். ஒருவேளை சால்ட் ஆட்டமிழக்காமல் இருந்திருந்தால் இங்கிலாந்து அணி பெரிய ஸ்கோரை எட்டியிருக்கும்.

75 ரன்கள் வரை விக்கெட் இழப்பின்றி ஆடிய இங்கிலாந்து அணி, அடுத்த 2 ரன்கள் சேர்ப்பதற்குள் சால்ட், டக்கெட், ஹேரி ப்ரூக் விக்கெட்டுகளை பறிகொடுத்து 77 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அனுபவ வீரர் ஜோ ரூட் 2023 உலகக் கோப்பைப் போட்டிக்குப்பின் விளையாடியதால், ஏதாவது தாக்கத்தை ஏற்படுத்துவார் என கருதப்பட்டது. ரூட் 19 ரன் சேர்த்திருந்தபோது, ஜடேஜா பந்துவீச்சில் கால்காப்பில் வாங்கி வெளியேறினார். 111 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளையும் இழந்து இங்கிலாந்து நிலைகுலைந்தது.

அதன்பின், கேப்டன் பட்லர், ஜேக்கப் பெத்தல் இருவரும் நடுவரிசையில் விக்கெட்டை ஸ்திரப்படுத்தி, நிதானமாக பேட் செய்தனர். நிதானமாக ஆடிய பட்லர் 58 பந்துகில் அரைசதம் அடித்து (52), ரன்களில் அக்ஸர் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார். 5-வது விக்கெட்டுக்கு 59 ரன்கள் சேர்த்து பட்லர், பெத்தல் கூட்டணி பிரிந்தது.

பொறுமையாக பேட் செய்த பெத்தல் 2வது அரைசதம் அடித்து (51) ரன்களில் ஜடேஜா பந்துவீச்சில் ஆட்டமிழந்தனர். இவர்கள் இருவரும் ஆட்டமிழந்தபின், இங்கிலாந்து அணியின் கடைநிலை பேட்டர்கள் லிவிங்ஸ்டோன் (5), பிரைடன் கார்ஸ் (10), ரஷித் (8), மெஹ்மூத் (2) என சீரான இடைவெளியில் விக்கெட்டை இழந்தனர்.

206 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்திருந்த இங்கிலாந்து அணி அடுத்த 42 ரன்களில் மீதமிருந்த 4 விக்கெட்டுகளையும் இழந்து 248 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

305 ரன் இலக்கை ஊதித் தள்ளிய இந்தியா - இங்கிலாந்தை சிதறடித்து புதிய மைல்லை எட்டிய ரோஹித் சர்மா

இந்தியா - இங்கிலாந்து, 2-வது ஒருநாள் போட்டி

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, ரோஹித் சர்மாவின் அற்புதமான சதத்தால் இங்கிலாந்தை இந்திய அணி எளிதில் வீழ்த்தியது. கட்டுரை தகவல்
  • எழுதியவர், போத்திராஜ்
  • பதவி, பிபிசி தமிழுக்காக
  • 3 மணி நேரங்களுக்கு முன்னர்

ரோஹித் சர்மாவின் அற்புதமான சதத்தால் இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரை 2-0 என்ற கணக்கில் வென்றது இந்திய அணி.

ஒடிசா மாநிலம் கட்டாக்கில் நேற்று பகலிரவாக நடந்த 2வது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது இந்திய அணி.

முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி 49.5 ஓவர்களில் 304 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. 305 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 33 பந்துகள் மீதமிருக்கையில் 6 விக்கெட் இழப்புக்கு 308 ரன்கள் சேர்த்து, 4 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.

இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 2-0 என்ற கணக்கில் இந்திய அணி வென்று ஒருநாள் தொடரைக் கைப்பற்றியது. இதன் மூலம், இந்திய அணி இங்கிலாந்து அணிக்கு எதிராக 10-வது சர்வதேச தொடரை வென்றுள்ளது. ரோஹித் சர்மா அதிரடி சதத்தால் மிகப்பெரிய இலக்கை இந்தியா எளிதில் எட்டியது எப்படி?

சொதப்பிய இங்கிலாந்து அணி

டாஸ் வென்ற இங்கிலாந்து அணிக்கு பென் டக்கெட், பில் சால்ட் அருமையான தொடக்கம் அளித்தனர். பவர்ப்ளே முடிவில் 80 ரன்களுக்கு மேல் குவித்து வலுவான அடித்தளம் அமைத்தனர். சால்ட் 26 ரன்களில் வருண் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார். பென் டக்கெட் அரைசதம் அடித்து 65 ரன்களில் ஜடேஜா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

3-வது விக்கெட்டுக்கு ஜோ ரூட், ஹேரி ப்ரூக் கூட்டணி ஓரளவுக்கு நிலைத்து ஆடி ஸ்கோரை உயர்த்தி 66 ரன்கள் சேர்த்துப் பிரிந்தனர். ஹேரி ப்ரூக் 31 ரன்னில் ராணா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

அடுத்துவந்த கேப்டன் பட்லர், ஜோ ரூட்டுடன் சேர்ந்து 51 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தார். ஜோ ரூட் 60 பந்துகளில் அரைசதம் எட்டினார். பட்லர் 34 ரன்களில் ஹர்திக் பாண்டியா பந்துவீச்சில் விக்கெட்டை பறிகொடுத்தார்.

இங்கிலாந்து அணி பேட்டிங் செய்ததைப் பார்த்தபோது 330 ரன்களை எட்டிவிடும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், கடைசி 85 ரன்களுக்குள் 7 விக்கெட்டுகளை இழந்து 304 ரன்களில் ஆட்டமிழந்தது. லிவிங்ஸ்டன் கடைசி நேரத்தில் கேமியோ ஆடி 32 பந்துகளில் 2 பெரிய சிக்ஸர்கள் உள்பட 41 ரன்கள் சேர்த்தார்.

இந்தியா - இங்கிலாந்து, 2-வது ஒருநாள் போட்டி

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, ஜோ ரூட் 60 பந்துகளில் அரைசதம் எட்டினார்.

இந்திய அணியும் பல வாய்ப்புகளை இழந்தது. பில் சால்ட் 12 ரன்களில் இருந்தபோது கொடுத்த கேட்சை அக்ஸர் படேல் நழுவவிட்டார், ரூட் 16 ரன்களில் இருந்த போது அக்ஸர் பந்துவீச்சில் கால்காப்பில் வாங்கினார், இதற்கு அப்பீல் செய்திருந்தால் அவுட் கிடைத்திருக்கும். ஆனால், கேப்டன் ரோஹித் டிஆர்எஸ் முடிவை எடுக்கவில்லை. இதுபோன்ற வாய்ப்புகள் கிடைத்தும் அதை இங்கிலாந்து பயன்படுத்தவில்லை.

30 நிமிடங்கள் ஆட்டம் நிறுத்தம்

இந்திய அணி சேஸிங்கில் ஈடுபட்டு நல்ல ஃபார்மில் இருந்தது. 6.1 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 48 ரன்கள் சேர்த்திருந்தது இந்திய அணி. அப்போது மின்விளக்கில் திடீரென பழுது ஏற்பட்டு, ஒருபகுதி மின்விளக்குகள் சரியாக எரியவில்லை. இதனால் போதிய வெளிச்சம் இல்லாத காரணத்தால் ஆட்டம் நிறுத்தப்பட்டு 30 நிமிடங்களுக்குப் பிறகு மீண்டும் தொடங்கியது.

இந்தியா - இங்கிலாந்து, 2-வது ஒருநாள் போட்டி

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, போதிய வெளிச்சம் இல்லாத காரணத்தால் ஆட்டம் நிறுத்தப்பட்டு 30 நிமிடங்களுக்குப் பிறகு மீண்டும் தொடங்கியது.

ரோஹித் சர்மாவின் அதிரடி ஆட்டம்

ரோஹித் சர்மா, தன் ஃபார்ம் மீது இதுவரை சந்தேகம் எழுப்பியவர்களை, இந்த ஒரே ஆட்டத்தின் மூலம் அமைதி ஆக்கிவிட்டார். அடுத்த வாரம் தொடங்க இருக்கும் சாம்பியன்ஸ் டிராபி தொடரில், அணியை வழிநடத்த தனக்கு தகுதி இருக்கிறது என்பதை ரோஹித் சர்மா ஒரே ஆட்டத்தில் நிரூபித்தார்.

கடந்த ஆட்டத்தில் பேட்டில் எட்ஜ் எடுத்து ரோஹித் சர்மா ஆட்டமிழந்தார். இந்தப் போட்டியில், தொடக்கத்தில் நிதானமாக பேட் செய்து அட்கின்சன் பந்துவீச்சில் டீப் தேர்டு திசையில் ரோஹித் பவுண்டரி அடித்தபின் இயல்பான ஆட்டத்தை ஆடத் தொடங்கினார். மெஹ்மூத் முதல் ஓவரை கட்டுக்கோப்பாக வீசிய நிலையில் அடுத்த ஓவரில் ரோஹித் சர்மாவின் பேட்டுக்கு பதில் சொல்ல முடியாமல் சிக்ஸர்களை வாரிக்கொடுத்துச் சென்றார்.

அதில் ரஷித் ஓவரில் நிதானமாக ஆடிய ரோஹித் சர்மா 2 பவுண்டரிகளை விளாசி 30 பந்துகளில் அரைசதத்தை விளாசினார். அதன்பின் பொறுமையாக பேட் செய்யத் தொடங்கினார். 30 பந்துகளில் அரைசதம் எட்டிய ரோஹித், அடுத்த 50 ரன்களை 46 பந்துகளில் நிதானமாகச் சேர்த்து 32வது சதத்தை நிறைவு செய்தார்.

ரோஹித் சர்மா இழந்த ஃபார்மை மீட்டு சாம்பியன்ஸ் டிராபிக்கு தயாராகி இருப்பது மற்ற அணிகளுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக, சவாலாகவும் இருக்கும். அடுத்ததாக இந்திய அணிக்கு மிகப்பெரிய கவலை விராட் கோலியின் ஃபார்ம்தான்.

இந்தியா - இங்கிலாந்து, 2-வது ஒருநாள் போட்டி

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, ரோஹித் சர்மா, தன் ஃபார்ம் மீது இதுவரை சந்தேகம் எழுப்பியவர்களை, இந்த ஒரே ஆட்டத்தின் மூலம் அமைதி ஆக்கிவிட்டார்.

கில், ஸ்ரேயாஸ் பொறுப்பான ஆட்டம்

ரோஹித் சர்மாவுடன் இணைந்து ஆட்டத்தைத் தொடங்கிய சுப்மான் கில் மிகுந்த பொறுப்பான ஆட்டத்தை ஆடி, தொடர்ந்து 2வது அரை சதத்தைப் பதிவு செய்தார். 45 பந்துகளில் அரைசதம் அடித்த சுப்மான் கில் 60 ரன்கள் சேர்த்த நிலையில் ஓவர்டன் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். முதல் விக்கெட்டுக்கு ரோஹித்- கில் கூட்டணி 136 ரன்கள் சேர்த்து வலுவான அடித்தளம் அமைத்துக் கொடுத்தனர்.

ஸ்ரேயாஸ் அய்யர், அணியில் இருந்து நீக்கப்படலாம் என்று சந்தேகங்கள் எழுப்பிய நிலையில் அவர் தனக்கு கிடைத்த வாய்ப்பை சரியாகப் பயன்படுத்தினார். ரோஹித் சர்மாவுடன் இணைந்து 70 ரன்கள் பார்ட்னர்ஷிப்பை ஸ்ரேயாஸ் ஏற்படுத்தி 6 ரன்களில் 2வது அரைசதத்தை தவறவிட்டார். ஸ்ரேயாஸ் 44 ரன்களில் ரன்அவுட் ஆனார்.

இந்திய அணியின் நடுவரிசை பேட்டிங்கும் மெல்ல ஸ்திரப்பட்டு வருகிறது. இரு ஆட்டங்களிலும் ஸ்ரேயாஸ் பேட்டிங் அதற்கான நம்பிக்கையை அளித்து வருகிறது.

பந்துவீச்சிலும் 7 பந்துவீச்சாளர்களைப் பயன்படுத்தியும் இந்திய பேட்டர்களைக் கட்டுப்படுத்த முடியவில்லை. அதில் ரஷீத் பந்துவீச்சு கட்டுக்கோப்பாக இருந்தாலும், அவரால் பெரிதாக சாதிக்க முடியவில்லை. வேகப்பந்துவீச்சில் அட்கின்சன், மார்க்உட் இருவருமே ரன்களை வழங்கினர். லிவிங்ஸ்டன் மட்டும் 7 ஓவர்கள் வீசி 29 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தி சிக்கனமாகப் பந்துவீசினார்.

இந்தியா - இங்கிலாந்து, 2-வது ஒருநாள் போட்டி

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, ரோஹித்- கில் கூட்டணி 136 ரன்கள் சேர்த்து வலுவான அடித்தளம் அமைத்துக் கொடுத்தது.

ஆல்ரவுண்டராக மாறும் அக்ஸர் படேல்

அக்ஸர் படேல் சுழற்பந்துவீச்சு மட்டுமல்ல, டெஸ்ட், ஒருநாள், டி20 போட்டிகளிலும் சிறப்பாக பேட் செய்ய முடியும் என்று தன்னை வெளிப்படுத்தி வருகிறார். கடந்த ஆட்டத்தில் முதல் அரைசதத்தை நிறைவு செய்த அக்ஸர், இந்தப் போட்டியில் 41 ரன்களுடன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். ஒரு பந்துவீச்சாளராக அறிமுகமாகிய அக்ஸர் படேல் ஆல்ரவுண்டராக மாறிவருவது இந்திய அணிக்கு பெரிய பலமாகும்.

ரோஹித் சர்மா- புதிய மைல்கல்

இந்த ஆட்டத்தில் 30 பந்துகளில் அரைசதத்தையும், 76 பந்துகளில் சதம் அடித்து, 90 பந்துகளில் 119 ரன்கள் (7 சிக்ஸர், 12 பவுண்டரி) சேர்த்து ஆட்டமிழந்த கேப்டன் ரோஹித் சர்மா ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார். ரோஹித் சர்மா தனது ஒருநாள் போட்டி வாழ்க்கையில் 32-வது சதத்தை இன்று பதிவு செய்தார்.

கடந்த 2023ம் ஆண்டு நவம்பர் மாதம் நடந்த உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்குப் பின் ரோஹித் சர்மா பங்கேற்ற 5வது ஒருநாள் போட்டியாகும். இலங்கைக்கு எதிரான ஒருநாள் போட்டியில் 2 அரைசதங்களை அடித்திருந்தாலும், சதம் அடிக்கவில்லை. உலகக் கோப்பைத் தொடரில் ரோஹித் சர்மா சதம் அடித்தபின், ஏறக்குறைய ஒன்றறை ஆண்டுகளுக்குப்பின் தற்போது சதம் அடித்துள்ளார்.

அது மட்டுமல்லாமல் ரோஹித் சர்மா இந்த ஆட்டத்தில் 7 சிக்ஸர்கள் விளாசினார். இதன் மூலம் சர்வதேச ஒருநாள் போட்டிகளில் அதிக சிக்ஸர்கள் அடித்த பேட்டர்கள் வரிசையில் கிறிஸ் கெயில் (331) சாதனையை முறியடித்து 338 சிக்ஸர்கள் விளாசி, ரோஹித் சர்மா 2வது இடத்தைப் பிடித்தார். பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் ஷாகித் அப்ரிடி 351 சிக்ஸர்களுடன் முதலிடத்தில் உள்ளார்.

அது மட்டுமல்லாமல் ஒருநாள் போட்டிகளில் அதிக சதங்களை விளாசிய இந்திய பேட்டர்களில் ரோஹித் சர்மா 32 சதங்களுடன் 3வது இடத்தில் உள்ளார். முதலிடத்தில் கோலி 50 சதங்களுடனும், 2வது இடத்தில் உள்ள சச்சின் டெண்டுல்கர் 49 சதங்களுடனும் உள்ளனர்.

இந்தியா - இங்கிலாந்து, 2-வது ஒருநாள் போட்டி

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, ரோஹித் சர்மா இந்த ஆட்டத்தில் 7 சிக்ஸர்கள் விளாசினார்.

வருணின் முதிர்ந்த அறிமுகம்

தமிழகத்தைச் சேர்ந்த வருண் சக்ரவர்த்தி தனது முதல் ஒருநாள் போட்டியில் அறிமுகமானார். தற்போது வருணுக்கு 33 வயது 164 நாட்களாகிறது. அதிகமான வயதில் ஒருநாள் போட்டியில் அறிமுகமாகிய 2வது வீரர் என்ற பெருமையை வருண் பெற்றார். இதற்கு முன், பரூக் எஞ்சினியர் 36-வது வயது 138 நாட்களாக இருந்தபோது ஒருநாள் தொடரில் அறிமுகமாகினார்.

இந்தியப் பந்துவீச்சு - பலவீனம்

இந்திய வேகப்பந்துவீச்சின் சுமை முகமது ஷமி மீது விழுந்துள்ளது. ஷமிக்கு துணையாக பந்துவீச ஹர்சித் ராணா கொண்டுவரப்பட்டாலும் அவரால் துல்லியத் தன்மையை கொண்டுவர முடியவில்லை. அர்ஷ்த்தீப் வந்தால் ஷமியின் சுமை குறையலாம். மற்றவகையில் பும்ரா உடல்நலன் சாம்பியன்ஸ் டிராபிக்குள் தேறினால், பந்துவீச்சில் இந்திய அணி முழுவலிமையைப் பெறும்.

சுழற்பந்துவீச்சில் வருண் சக்ரவர்த்தியின் அறிமுகம் சிறப்பாக இருந்தது. டி20 போட்டிகளில் ஸ்பெஷலிஸ்ட் பந்துவீச்சாளராக இருக்கும் வருண், சாம்பியன்ஸ் டிராபிக்கும் தேர்ந்தெடுக்கப்படலாம்.

இந்தியா - இங்கிலாந்து, 2-வது ஒருநாள் போட்டி

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, தமிழகத்தைச் சேர்ந்த வருண் சக்ரவர்த்தி தனது முதல் ஒருநாள் போட்டியில் அறிமுகமானார்.

73 வினாடிகளில் ஒரு ஓவர்

உள்நாட்டுப் போட்டிகளில் விளையாடியபின் ஜடேஜாவின் பந்துவீச்சு சிறப்பாக இருந்து வருகிறது. இந்த ஆட்டத்தில் ஜடேஜா 10 ஓவர்கள் வீசி, ஒரு மெய்டன் 35 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டையும் வீழ்த்தினார். துல்லியத்தன்மை, வேகமாகப் பந்துவீசுவது என ஜடேஜாவின் பந்துவீச்சு மிரட்டலாக இருக்கிறது.

ஜடேஜா 24-வது ஓவரை வெறும் 73 வினாடிகளில் வீசி முடித்தார். ஹேரி ப்ரூக்கிற்கு எதிராக ஒரு ரன்கூட வழங்காமல் அந்த ஓவரை மெய்டன் ஓவராக ஜடேஜா மாற்றினார். ஜடேஜாவின் பந்துவீச்சில் இருக்கும் வேகம், துல்லியத்தன்மை சாம்பியன்ஸ் டிராபியில் மிரட்டலாக இருக்கும்.

இந்தியத் தரப்பில் ஜடேஜா தவிர்த்து, ஷமி, ராணா, வருண், பாண்டியா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர்.

இந்தியா - இங்கிலாந்து, 2-வது ஒருநாள் போட்டி

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, ஜடேஜா 24-வது ஓவரை வெறும் 73 வினாடிகளில் வீசி முடித்தார்.

நடுப்பகுதி ஓவர்கள் முக்கியம்

வெற்றிக்குப்பின் ரோஹித் சர்மா பேசுகையில், "அணிக்காக சிறப்பாக ஆடியது, ரன்கள் சேர்த்துக் கொடுத்தது எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது. ஒருநாள் தொடரில் மிக முக்கியமான ஆட்டம் இது என்பதால், நான் எவ்வாறு பேட் செய்ய வேண்டும் என்பதில் தீவிரமாக இருந்தேன். டி20 போட்டியைவிட பெரியது, டெஸ்ட் போட்டியைவிட சிறியது ஒருநாள் போட்டி என்பதால் அதற்கு ஏற்றார்போல் விளையாட நினைத்தேன். நீண்டநேரம் களத்தில் நின்று பேட் செய்வது என் நோக்கமாக இருந்தது." என்றார்.

"கருப்பு மண் கொண்ட ஆடுகளத்தில் பந்து பேட்டை நோக்கி வேகமாக வரும், இந்த ஆடுகளத்தில் நாம் வேகமாகவும், பேட்டை இறுக்கமாகவும் பிடித்து பேட் செய்தால்தான் நினைத்த ஷாட்களை ஆட முடியும்." என்று அவர் குறிப்பிட்டார்.

தொடர்ந்து பேசிய ரோஹித் சர்மா, "நான் பேட் செய்தபோது என் உடம்புக்கும், ஸ்டெம்புக்கும் இங்கிலாந்து பந்துவீச்சாளர்கள் பந்துவீசினர். அவர்களின் நுட்பத்தை புரிந்து கொண்டு, திட்டத்தைத் தெரிந்து என் திட்டத்தை வகுத்தேன். கில், ஸ்ரேயாஸிடம் இருந்து நல்ல ஒத்துழைப்பு கிடைத்தது. கில்லுடன் பேட்டிங் செய்தது நல்ல அனுபவம்." என்றார்.

இந்தியா - இங்கிலாந்து, 2-வது ஒருநாள் போட்டி

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, "நான் பேட் செய்தபோது என் உடம்புக்கும், ஸ்டெம்புக்கும் இங்கிலாந்து பந்துவீச்சாளர்கள் பந்துவீசினர்."

"நடுப்பகுதி ஓவர்கள்தான் முக்கியம், இதுதான் ஆட்டத்தை எந்தப் பக்கம் கொண்டு செல்லும் என்பதை தீர்மானிக்கும். நடுப்பகுதி ஓவர்களை வெளுத்து வாங்கினாலே, டெத் ஓவர்கள் குறித்து பெரிதாகக் கவலைப்படத் தேவையில்லை. நாக்பூர் ஆட்டத்தில் கூட நடுப்பகுதி ஓவர்களுக்கு நாங்கள் முக்கியத்துவம் அளித்தோம், விக்கெட்டுகளை வீழ்த்தினோம். நடுப்பகுதி ஓவர்களில் விக்கெட்டுகளை வீழ்த்திவிட்டால் டெத் ஓவர்களில் ரன் சேர்ப்பது கடினமாகிவிடும்."

"ஒவ்வொரு வீரரும் சிறப்பாக ஆட வேண்டும், அணியாக முழுமையாக பங்களிப்பு செய்ய வேண்டும் என திட்டமிட்டோம். அதை சிறப்பாகச் செய்தோம். அணியில் உள்ள வீரர்களும் தங்களின் திட்டத்தை சிறப்பாகச் செய்து முடித்தனர்" என ரோஹித் சர்மா தெரிவித்தார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

  • கருத்துக்கள உறவுகள்

த‌மிழ‌க‌ வீர‌ரின் விளையாட்டு மிக‌வும் அருமை...................

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.