Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
இலங்கை: பதிவு செய்யப்படாத கையடக்க தொலைபேசிகளுக்கு 28ஆம் தேதி முதல் நடக்கப் போது என்ன?

பட மூலாதாரம்,GETTY IMAGES

54 நிமிடங்களுக்கு முன்னர்

எதிர்வரும் 28ஆம் தேதிக்குப் பின்னர் கொள்வனவு செய்யப்படுகின்ற கையடக்கத் தொலைபேசிகள், இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குப்படுத்தல் ஆணைக்குழுவில் பதிவு செய்யப்பட்டுள்ளதை எவ்வாறு உறுதி செய்துகொள்வது என்பது தொடர்பில் தொலைத்தொடர்புகள் ஒழுங்குப்படுத்தல் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் ஓய்வுபெற்ற ஏயார் மார்ஷல் பந்துல ஹேரத்திடம் பிபிசி சிங்கள சேவை வினவியது.

''புதிய நடைமுறைக்கு அமைய, ஜனவரி மாதம் 28ஆம் தேதிக்குப் பின்னர் கொள்வனவு செய்யப்படுகின்ற கையடக்கத் தொலைபேசியில் சிம் அட்டையை உட்செலுத்தும்போது, அந்த கையடக்கத் தொலைபேசி இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குப்படுத்தல் ஆணைக்குழுவில் பதிவு செய்யப்படாததாக இருந்தால், அந்த தொலைபேசிக்கு குறுந்தகவல் ஒன்று கிடைக்கப் பெறும்."

''இந்த குறுந்தகவல் சிங்களம், தமிழ், ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளிலும் பயன்பாட்டாளர்களுக்கு அனுப்பி வைக்கப்படும். நாட்டில் இடம்பெறுகின்ற மோசடிகளுக்கு கையடக்கத் தொலைபேசிகள் மிக முக்கியமான காரணமாக அமைந்துள்ளன. அதனால், கையடக்கத் தொலைபேசிகள் சட்டரீதியானதாகக் காணப்படுகின்றமையானது, பயன்பாட்டாளர்களுக்கு மிகவும் பாதுகாப்பானதாகும்" என அவர் கூறுகிறார்.

'பொங்கல் வைக்க கூட அரிசி இல்லை' - இலங்கையில் அரிசித் தட்டுப்பாட்டால் மக்கள் திண்டாட்டம்

பரிசாக கிடைக்கும் செல்போன்களை என்ன செய்வது?

நாட்டிலுள்ள நபர் ஒருவருக்கு பரிசாக அல்லது வெளிநாட்டிலிருந்து மீண்டும் வருகை தரும் ஒருவர் தனிப்பட்ட பாவனைக்காக கொண்டு வருகின்ற கையடக்கத் தொலைபேசிகளை இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குப்படுத்தல் ஆணைக்குழுவில் பதிவு செய்தல் அத்தியாவசியமானது என இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குப்படுத்தல் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் ஓய்வுபெற்ற ஏயார் மார்ஷல் பந்துல ஹேரத் தெரிவிக்கின்றார்.

''இலங்கையிலுள்ள உறவினர் ஒருவருக்குப் பரிசு வழங்குவதற்கு அல்லது தமது பயன்பாட்டிற்காக வெளிநாட்டிலிருந்து கொண்டு வரப்படுகின்ற கையடக்கத் தொலைபேசிகளை எந்தவித தடையும் இன்றி பதிவு செய்வதற்கு அனுமதி வழங்கப்படுகின்றது. இந்த சந்தர்ப்பத்தில் குறித்த கையடக்கத் தொலைபேசிகளை கொள்வனவு செய்த பற்றுச்சீட்டு அல்லது அதனுடன் தொடர்புடைய ஆவணங்கள் இருக்குமானால் அந்த கையடக்கத் தொலைபேசியை எந்தவித தடையும் இன்றி பதிவு செய்துகொள்ள முடியும்" என அவர் குறிப்பிடுகின்றார்.

இவ்வாறான சந்தர்ப்பங்களில் வர்த்தகர்கள் தமது வர்த்தக அபிலாஷைகளை நிறைவேற்றுவதைத் தடுப்பதற்கு விசேட வேலைத் திட்டம் ஒன்று நடைமுறைப்படுத்தப்பட்டு இருப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இலங்கை வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு இந்த சட்டம் அமலாகுமா?

இலங்கை: பதிவு செய்யப்படாத கையடக்க தொலைபேசிகளுக்கு 28ஆம் தேதி முதல் நடக்கப் போது என்ன?
படக்குறிப்பு, நாட்டில் இடம்பெறுகின்ற மோசடிகளுக்கு கையடக்கத் தொலைபேசிகள் மிக முக்கியமான காரணமாக அமைந்துள்ளன என்கிறார் ஓய்வுபெற்ற ஏயார் மார்ஷல் பந்துல ஹேரத்

இலங்கைக்கு வருகை தருகின்ற சுற்றுலாப் பயணிகள் தமது தனிப்பட்ட பாவனைக்காக கொண்டு வருகின்ற கையடக்கத் தொலைபேசிகளைப் பதிவு செய்ய வேண்டுமா என இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குப்படுத்தல் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் ஓய்வு பெற்ற ஏயார் மார்ஷல் பந்துல ஹேரத்திடம் வினவினோம்.

''இலங்கைக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகள் கொண்டு வருகின்ற கையடக்கத் தொலைபேசிகள் சுங்கப் பிரிவில் பதிவாகும். அந்த வெளிநாட்டு பிரஜைகள் அவர்களது தொலைபேசிகளுக்காக சிம் அட்டையை தமது கடவுச்சீட்டை (பாஸ்போர்ட்) பயன்படுத்தி கொள்வனவு செய்வார்கள். அந்த சிம் அட்டையை வாங்கும்போது, தொலைபேசியின் IMEI இலக்கம் பதிவு செய்யப்படும்."

''அவ்வாறு கொள்வனவு செய்யப்படும் சிம் அட்டையானது, வெளிநாட்டு பிரஜை நாட்டைவிட்டு வெளியேறும்போது பயன்பாட்டிலிருந்து அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். சில சந்தர்ப்பங்களில் குறித்த வெளிநாட்டு பிரஜை தனது தொலைபேசியை இலங்கையிலுள்ள ஒருவருக்கு பரிசாக வழங்குவாராக இருந்தால், அவர் புதிய சிம் அட்டையை உட்செலுத்த வேண்டும். அப்போது அந்த தொலைபேசிக்கு பதிவு செய்யப்படாத கையடக்கத் தொலைபேசி என்ற குறுந்தகவல் கிடைக்கும். தொலைபேசியை பதிவு செய்துகொள்ளுமாறு அறிவிக்கப்படும்" என்று அவர் குறிப்பிடுகின்றார்.

குறைந்த விலையில் செல்போன்களை வாங்க முடியாதா?

இலங்கை: பதிவு செய்யப்படாத கையடக்க தொலைபேசிகளுக்கு 28ஆம் தேதி முதல் நடக்கப் போது என்ன?

இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குப்படுத்தல் ஆணைக்குழுவில் பதிவு செய்யப்பட்ட கையடக்கத் தொலைபேசிகளை விற்பனை செய்யும் முகவர்களை விடவும், பதிவு செய்யப்படாத கையடக்கத் தொலைபேசிகளை விற்பனை செய்யும் முகவர்கள் குறைந்த விலையில் கையடக்கத் தொலைபேசிகளை விற்பனை செய்து வருவதை சந்தையில் காண முடிகின்றது.

இந்த நிலையில், புதிய சட்டத்தின் பிரகாரம், இலங்கைக்கு கையடக்கத் தொலைபேசிகளைக் கொண்டு வரும்போது முன்னெடுக்கப்படுகின்ற பதிவு நடவடிக்கைகள் காரணமாக, மக்களுக்குக் குறைந்த விலையில் கையடக்கத் தொலைபேசிகளை கொள்வனவு செய்வதற்கு காணப்படுகின்ற சந்தர்ப்பம் இல்லாது போகுமா என அவரிடம் வினவினோம்.

''குறைந்த விலைக்கு கையடக்கத் தொலைபேசிகளை கொள்வனவு செய்வதற்கு காணப்படுகின்ற சந்தர்ப்பம் இந்தப் புதிய நடைமுறையின் ஊடாக இல்லாது போகின்றது எனச் சிலரால் கூற முடியும். எனினும், இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குப்படுத்தல் ஆணைக்குழுவில் பதிவு செய்யப்பட்ட ஸ்டிக்கரை காண்பித்து இன்றும் அதிக விலையில் கையடக்கத் தொலைபேசிகள் விற்பனை செய்யப்படுகின்றன."

இலங்கை: பதிவு செய்யப்படாத கையடக்க தொலைபேசிகளுக்கு 28ஆம் தேதி முதல் நடக்கப் போது என்ன?

பட மூலாதாரம்,GETTY IMAGES

''எனினும், நாட்டிற்குக் கொண்டு வரப்படுகின்ற அனைத்து கையடக்கத் தொலைபேசிகளையும் பதிவு செய்து, பயன்பாட்டாளர்களுக்கு எந்தவொரு இடத்திலும் கையடக்கத் தொலைபேசிகளை கொள்வனவு செய்யும் சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுக்கவே நாங்கள் முயல்கின்றோம்.'

''ஒரே ரகமான கையடக்கத் தொலைபேசிகள் பல விலைகளில் விற்பனை செய்யப்படுவதை நாங்கள் காண்கின்றோம். குளிரூட்டப்பட்ட விற்பனை நிலைகளிலும், சாதாரண விற்பனை நிலையங்களிலும் இரண்டு விதமான விலைகளைச் சொல்ல முடியாத நிலை ஏற்படும். விற்பனையாளர்களுக்கு மத்தியில் ஏற்படுகின்ற போட்டித் தன்மை காரணமாக, பொது மக்களுக்குக் குறைந்த விலையில் கையடக்கத் தொலைபேசிகளைக் கொள்வனவு செய்வதற்கான சந்தர்ப்பம் கிடைக்கும்."

''பாரியளவிலான கையடக்கத் தொலைபேசிகளை இறக்குமதி செய்கின்ற நிறுவனங்கள் அதிகளவான லாபம் ஈட்டுகின்றன. பாரியளவிலான தொலைபேசிகளை இறக்குமதி செய்யும்போது கிடைக்கின்ற சலுகைகளின் பிரகாரம் அதிக லாபத்தைப் பெறுகின்றனர். எனினும், அந்தச் சலுகை பொது மக்களுக்கு கிடைப்பதில்லை" என்று இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குப்படுத்தல் ஆணைக் குழுவின் பணிப்பாளர் நாயகம் ஓய்வுபெற்ற ஏயார் மார்ஷல் பந்துல ஹேரத் தெரிவிக்கிறார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

  • கருத்துக்கள உறவுகள்

சுத்த பைத்தியக்காரத்தனம்.

 

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, ஏராளன் said:

இலங்கைக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகள் கொண்டு வருகின்ற கையடக்கத் தொலைபேசிகள் சுங்கப் பிரிவில் பதிவாகும். அந்த வெளிநாட்டு பிரஜைகள் அவர்களது தொலைபேசிகளுக்காக சிம் அட்டையை தமது கடவுச்சீட்டை (பாஸ்போர்ட்) பயன்படுத்தி கொள்வனவு செய்வார்கள். அந்த சிம் அட்டையை வாங்கும்போது, தொலைபேசியின் IMEI இலக்கம் பதிவு செய்யப்படும்."

நான் ரீ மோபில் TMobile     மூலமாக பாவிக்கிறேன்.எனக்கு உலகம் முழுவதும் போன் வேலை செய்யும்.இலவச ரெக்ஸ் மெசேச்சும் இருக்கிறது.

இனிமேல் நான் இலங்கை போகும் காலங்களில் எப்படி கை தொலைபேசியை பாவிக்கலாம்.

இப்போதுள்ளது குடும்பத்திற்கு  (7 லைன்)பாவிக்கிறோம்.

பிள்ளைகள் AT&T     பாவிக்க விரும்புகிறார்கள்.இது கனடா மெக்சிக்கோ தவிர மற்றைய நாடுகளுக்கு பணம் கூடுதலாக கட்ட வேண்டும்.

இலங்கை போனால் ஈ சிம்காட் விமானநிலையத்தில் எடுக்கலாமா?இங்கு கூடுதலான கட்டணம் அறவிடுவார்களா?

இதுவரை சிம்காட்டே மாற்றியதில்லை.

ஈசிம்காட் எப்படி மாற்றுவது?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கையடக்க தொலைபேசிகள் / சாதனங்களுக்கான ஒப்புதல்

சிம் ஒன்றைபவித்து தொலைத்தொடர்பு வலையமைப்புகளுடன் இணைக்கப்பட்டுள்ள எந்த வகையான கையடக்கத் தொலைபேசிகளையும்/ சாதனங்களையும் இறக்குமதி செய்வதற்கு/கொண்டு வருவதற்கு இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவிடமிருந்து (TRCSL) அங்கீகாரத்தைப் பெற்றுக்கொள்ளல் அவசியமானதாகும்.

தனிப்பட்ட பயன்பாட்டிற்கான கையடக்க தொலைபேசிகள்  / சாதனங்கள்

  1. ஐந்து (5) அலகுகள் வரை மட்டுமே இறக்குமதி / தனிப்பட்ட பயன்பாட்டிற்கு கொண்டு வர முடியும்.
  2. விண்ணப்பமானது பின்வரும் ஆவணங்களை இணைத்து பரிசீலனைக்காக TRCSL க்கு எழுத்து மூலமாக சமர்ப்பிக்கப்படல் வேண்டும்.
    1. முறையாக பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவம்.
    2. பெறுனரின் பெயர் மற்றும் இறக்குமதி செய்ய/விடுவிப்பு செய்யவுள்ள உபகரணங்களின் விபரங்களை தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ள விலைப்பட்டியல் / தடுப்பு பற்றுச்சீட்டு (Detention Receipt) / விமான வழி பற்றுச்சீட்டு (Air way Bill) / பொருள் அனுப்பியதற்கான பற்றுச்சீட்டு (Parcel Receipt) .
    3. மேலே (ii) இல் குறிப்பிடப்பட்டுள்ள உபகரணங்களின் தொழில்நுட்ப விபரக்குறிப்பு (Specifications).
    4. தேசிய அடையாள அட்டை/கடவுச்சீட்டு/சாரதி அனுமதிப்பத்திரத்தின் பிரதி
    5. மேலே (ii) இல் குறிப்பிடப்பட்டுள்ள நபர் சார்பில் வேறு யாரேனும் அனுமதியைப் பெற வேண்டுமாயின் அதிகாரமளித்தல் கடிதம் மற்றும் இருவரினதும் தேசிய அடையாள அட்டை/ கடவுச்சீட்டின் பிரதிகள்.
  3. TRCSL இனால் செயல்முறைப்படுத்தப்படும் விண்ணப்பப் படிவம்.
  4. இறக்குமதிசெய்ய/விடுவிக்க உத்தேசித்துள்ள உபகரணத்திற்காக கட்டணங்கள் ஏற்புடையதாயின் வரி விலைப்பட்டியல் TRCSL மூலம் விண்ணப்பதாரருக்கு வழங்கப்பட வேண்டும் என்பதுடன் அங்கீகாரத்தை பெறுவதற்கு பணம் செலுத்தப்படவும் வேண்டும்.
  5. மேலே 2 (ii) இல் குறிப்பிடப்பட்டுள்ள உபகரணங்களை இறக்குமதி செய்வதற்கு அனுமதியளிக்கும் விண்ணப்பதாரிக்கு பின்வரும் இரண்டு கடிதங்கள் வழங்கப்படும்.
    1. ஏற்றுமதி மற்றும் கட்டுப்பாட்டாளருக்கு முகவரியிடப்பட்ட ஆட்சேபனை இல்லை கடிதம்.
    2. சுங்கப் பணிப்பாளர் நாயகத்திற்கு முகவரியிடப்பட்ட ஆட்சேபனை இல்லை கடிதம்.

கையடக்க தொலைபேசிகள்/  சாதனங்களின் மொத்த இறக்குமதி

  1. TRCSL இனால் வழங்கப்பட்ட செல்லுபடியாகும் வியாபாரி உரிமம் இருக்க வேண்டும்.
  2. இந்த வகையின் கீழ் அங்கீகரிக்கப்பட்ட கையடக்க தொலைபேசிகள்  / சாதனங்கள் மட்டுமே இறக்குமதி செய்ய அனுமதிக்கப்படுகின்றன. வகை ஒப்புதல் பெறுவதற்கான விவரங்கள்
  3. விண்ணப்பபடிவமானது பரிசீலனைக்காக பின்வரும் ஆவணங்களுடன் TRCSL க்கு எழுத்து மூலமாக சமர்ப்பிக்கப்படல் வேண்டும்.
    1. இறக்குமதி செய்ய உத்தேசித்துள்ள உபகரணங்களின் விபரங்களைக் குறிக்கும் கோரிக்கைக் கடிதம்
    2. முன்மாதிரி விலைப்பட்டியல் (Pro-forma Invoice) (அசல் + 3 நகல்கள், அசல் சரிபார்பின் பின் மீளளிக்கப்படும்)
    3. வகை ஒப்புதல் இலக்கம் மற்றும் திகதி அல்லது வகை அனுமதி தொடர்பாக TRCSL ஆல் வழங்கப்பட்ட வேறு ஏதாவது ஆவணங்கள் (ஏற்புடையதாயின்)
    4. செல்லுபடியாகும் விற்பனையாளர் உரிமத்தின் நகல்
  4. பாதுகாப்பு அனுமதிக்காக (ஏற்புடையதாயின்) விண்ணப்பம் பாதுகாப்பு அமைச்சகத்திற்கு (MOD) அனுப்பப்படும்
  5. வரி விலைவிவரப் பட்டியல் TRCSL இனால் தயாரிக்கப்பட்டு விண்ணப்பதாரிக்கு வழங்கப்படுகின்றது (கட்டணங்கள் ஏற்புடையதாக இருப்பின்)
  6. TRCSL விடயங்கள் 3(i) மற்றும் 3(ii) இல் குறிப்பிடப்பட்டுள்ள உபகரணங்களை இறக்குமதி செய்வதற்கு அனுமதியளித்து கட்டுப்பாட்டாளர்/இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கட்டுப்பாட்டாளருக்கு ஆட்சேபனை இல்லை கடிதத்தை அனுப்பி வைக்கும்.
  7. கீழ்குறிப்பிடப்பட்ட  ஆவணங்களை சமர்ப்பித்ததன் பின்னர் TRCSL சுங்கப் பணிப்பாளர் நாயகத்திற்கு முகவரியிடப்பட்ட ஆட்சேபனை இல்லை கடிதமொன்றை விண்ணப்பதாரருக்கு வழங்கும் .
    1. கட்டுப்பாட்டாளரினால் வழங்கப்பட்ட அதிகாரமளித்தல் கடிதத்தின் பிரதி (இறக்குமதி உரிமம்)
    2. வணிக விலைப்பட்டியல் (அசல் +3 பிரதிகள், அசல் சரிபார்த்தத்தின் பின்னர் மீள்ளளிக்கப்டும்  அல்லது LC இன் TT ஆல் பணம் அனுப்பப்பட்டது / பணம் செலுத்தப்பட்டது என்பதை உறுதிப்படுத்தும் வங்கியால் முறையாக சான்றளிக்கப்பட்ட வணிக விலைப்பட்டியலின் நகல்)
    3. கட்டுப்பாட்டாளர்/இறக்குமதி மற்றும் ஏற்றுமதிக்கு முகவரியிடப்பட்ட TRCSL யால் வழங்கப்பட்ட  கடிதத்தின் பிரதி (மேலே 6 வது விடயம்)
    4. படிவ விலைவிவரப் பட்டியலின் பிரதி (மேலே உள்ள விடயம் 3(ii) )
    5. கையடக்க தொலைபேசி /சாதனங்களின் IMEI எண்களை இணைப்பு 1 வடிவத்தில் trives@trc.gov.lk மின்னஞ்சல் செய்ய வேண்டும்
    6. மேலே 05 ஆம் விடயத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விலைவிவரப் பட்டியலுக்கு முழுமையாக பணம் செலுத்துவதற்கான ஆதாரம்  (ஏற்புடையதாயின்)
  8. கையடக்கத் தொலைபேசிகள்/ சாதனங்கள் இறக்குமதி விடயத்தில் TRCSL குறிப்பு இலக்கமொன்றை வழங்குவதுடன் அது கையடக்கத் தொலைபேசியின்/ சாதனத்தின் பெட்டியில் வாடிக்கையாளர் குறிப்புக்கான (மாதிரி ஸ்டிக்கர்) ஸ்டிக்கர் வடிவில் ஒட்டப்படும்.

வகை ஒப்புதலுக்கு விண்ணப்பிக்க வேண்டிய தேவைகள் கையடக்க தொலைபேசிகள்

கையடக்க தொலைபேசிகள் பற்றிய தகவல்கள்

பதினைந்து இலக்க சர்வதேச கையடக்க உபகரண அடையாளம் (IMEI) என்பது பேட்டரியை அகற்றும்போது பொதுவாக உள்ளே காணப்படும் ஒவ்வொரு தொலைபேசிக்கும் வழங்கப்படும் தனித்துவமான எண் ஆகும். கையடக்க தொலைபேசியில் உள்ள கீபேடில் *#06# என உள்ளிடுவதன் மூலமும் இதை மொபைலின் திரையில் காண்பிக்க முடியும். வகை ஒதுக்கீடு குறியீடு (TAC) என்பது IMEI எண்ணின் முதல் எட்டு இலக்கங்கள் ஆகும், இது குறிப்பிட்ட சாதனத்தின் MARKETING பெயர் மற்றும் உற்பத்தியாளரை தனித்துவமாகக் குறிக்கிறது. மொபைல் தொலைபேசியின் IMEI எண்ணை பின்வரும் வடிவத்தில் 1909 க்கு SMS அனுப்புவதன் மூலம் சரிபார்க்கலாம்.

            IMEI (இடைவெளி) 15 இலக்க IMEI எண்

அனைத்து கையடக்க தொலைபேசி விற்பனையாளர்களும் TRCSL ஆல் வழங்கப்பட்ட செல்லுபடியாகும் விற்பனையாளர் உரிமத்தை வைத்திருக்க வேண்டும் என்பதுடன் அவர்களின் விற்பனை நிலையங்களில் உரிமம் காட்சிப்படுத்தப்படுதல் வேண்டும்.
அங்கீகரிக்கப்பட்ட கையடக்கத் தொலைபேசிகள்/ சாதனங்கள் TRCSL இணையத்தளத்தில் காணப்படுகின்றன www.trc.gov.lk
மேலதிக விபரங்களுக்கு  தொடர்பு கொள்க:

எஸ்.பி.புலத்கம
உதவிப் பணிப்பாளர் (ஸ்பெக்ட்ரம் முகாமைத்துவம் / IT)
இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுஇல
No. 276, எல்விட்டிகல
மாவத்தை, கொழும்பு 08
Extension   : +94 112689345 (Ext: 4105)
E-mail         : bulathgama@trc.gov.lk

https://www.trc.gov.lk/pages_t.php?id=63

28 ற்கு பின்பு வெளிநாட்டில் இருந்து Mobile phones கொண்டுவரும் நடைமுறை !! TRCSL approved check

 

  • கருத்துக்கள உறவுகள்

தகவலுக்கு மிகவும் நன்றி ஏராளன்.

இலங்கை போகிறவர்களுக்கு இது மிகவும் தேவையான பதிவு.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.