Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இன்றும் நாளையும் ஒன்றரை மணி நேரம் மின்வெட்டு

இன்றும் நாளையும் ஒன்றரை மணி நேரம் மின்வெட்டு

தற்போதைய சூழ்நிலையை கருத்தில் கொண்டு மின் விநியோகம் தடை செய்யப்பட வேண்டியுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

இன்றும் நாளையும் ஒன்றரை மணி நேரம் மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என அந்த சபை அறிவித்துள்ளது.

அதன்படி, இந்த மின் வெட்டு பிற்பகல் 3.30 மணி முதல் இரவு 9.30 மணிக்கு இடையில் நாடு முழுவதும் ஏற்படுத்தப்பட்டவுள்ளது.

நுரைச்சோலை நிலக்கரி அனல் மின் நிலையம் மீண்டும் தேசிய மின் கட்டமைப்புடன் இணைக்கப்படும் வரை இந்த மின்வெட்டை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதேவேளை, இலங்கை மின்சார சபைக்கு (CEB) சொந்தமான பாணந்துறை கிரிட் துணை மின்நிலையத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக செயலிழந்த நுரைச்சோலை அனல் மின் நிலையத்தில் உள்ள மூன்று மின் உற்பத்தி இயந்திரங்களை மீண்டும் இயக்க மூன்று முதல் நான்கு நாட்கள் வரை ஆகும் என இலங்கை மின்சார சபையின் பொறியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

மின்சாரம் துண்டிக்கப்பட்டதால், நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தின் மின் உற்பத்தி இயந்திரங்களின் பாதுகாப்பு அமைப்பு செயல்படுத்தப்பட்டு, அவை செயலிழந்து, அவற்றை மீண்டும் இயக்க பல நாட்கள் ஆகும் என்று பொறியாளர்கள் தெரிவித்தனர்.

இதற்குக் காரணம், நுரைச்சோலை அனல் மின் நிலையம் கட்டப்பட்டபோது, இதுபோன்ற சூழ்நிலை ஏற்பட்டால் மின் பிறப்பாக்கி அமைப்பை குளிர்விக்க எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும், கடந்த சில ஆண்டுகளாக நாடு முழுவதும் மின் தடை இருந்தபோதிலும், அந்த ஒரு சந்தர்ப்பத்தில் கூட குறிப்பிட்ட நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை என்றும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தில் உள்ள ஒரு மின் உற்பத்தி இயந்திரம் ஒரு நாளைக்கு சுமார் 270 மெகாவாட் மின்சாரத்தை தேசிய மின் கட்டமைப்புக்கு சேர்க்க முடியும் என்றும், அந்த மின் உற்பத்தி நிலையத்தின் மூன்று மின் உற்பத்தி இயந்திரங்களும் அதிகபட்ச திறனில் இயக்கப்பட்டால், ஒரு நாளைக்கு 800 மெகாவாட்களுக்கு மேல் தேசிய மின் கட்டமைப்புக்கு சேர்க்க முடியும் என்றும் பொறியாளர்கள் தெரிவித்தனர்.

இந்த இயந்திரங்கள் மீண்டும் இயக்கப்படும் வரை மின்சார விநியோகத்தை பராமரிக்க அனல் மின்சாரம் தற்போது தேசிய மின்கட்டமைப்போடு இணைக்கப்பட்டுள்ளது.

 

https://oruvan.com/power-outage-for-one-and-a-half-hours-today-and-tomorrow/

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் இன்று முதல் மின் தடை - மக்களை இருளில் தள்ளியதா குரங்கு? பின்னணி என்ன?

சித்தரிப்புப்படம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, சித்தரிப்புப்படம் கட்டுரை தகவல்
  • எழுதியவர், ரஞ்சன் அருண் பிரசாத்
  • பதவி, பிபிசி தமிழுக்காக
  • 3 மணி நேரங்களுக்கு முன்னர்

இலங்கையில் இன்று முதல் எதிர்வரும் ஓரிரு தினங்களுக்கு மின்சார தடையை ஏற்படுத்த இலங்கை மின்சார சபை தீர்மானித்துள்ளது.

இதன்படி, இன்று (பிப்ரவரி 10) மற்றும் நாளை (பிப்ரவரி 11) ஆகிய இரு தினங்களில் ஒன்றரை மணிநேர சுழற்சி முறையில் மின்சாரத்தை தடை செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் நேற்றைய தினம் (பிப்ரவரி 09) ஏற்பட்ட முழு மின் தடையை அடுத்தே இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.

மின்சார தடையுடனான மின் விநியோக கட்டமைப்பில் ஏற்பட்ட சமநிலையற்ற நிலைமையை முகாமைத்துவம் செய்யும் நோக்கில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

 

நாடாளாவிய ரீதியில் நேற்றைய தினம் ஏற்பட்ட மின்சார தடையுடன் நுரைச்சோலை அனல் மின் நிலையத்தின் மூன்று மின் உற்பத்தி பிறப்பாக்கிகள் செயலிழந்துள்ளன.

இந்த மின்பிறப்பாக்கிகளை மீண்டும் தேசிய மின்சார கட்டமைப்புடன் இணைப்பதற்கு சில தினங்கள் தேவை என அறிவிக்கப்பட்ட நிலையில், இந்த தீர்மானத்தை இலங்கை மின்சார சபை எட்டியுள்ளது.

இலங்கை மின்சார சபை எட்டிய தீர்மானத்திற்கு, இலங்கை பொது பயன்பாட்டு ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.

இதன்படி, இன்று பிற்பகல் 3.30 முதல் இரவு 9.30 வரையான கால எல்லைக்குள் ஒன்றரை மணிநேர மின் தடையை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

நான்கு கட்டங்களின் கீழ் இந்த மின்சார தடை ஏற்படுத்தப்படவுள்ளதாக இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.

நாடு முழுவதும் மின்சார தடை

இலங்கை முழுவதும் நேற்றைய தினம் திடீரென மின்சார தடை ஏற்பட்டது.

நேற்று (பிப்ரவரி 09) முற்பகல் 11.30 அளவில் ஏற்பட்ட இந்த திடீர் மின் விநியோக தடையானது, மாலை 4.30 அளவில் வழமைக்கு கொண்டு வரப்பட்டது.

பாணந்துறை உப மின் உற்பத்தி நிலைய கட்டமைப்பில் குரங்கு பாய்ந்தமையே இந்த மின்சார தடைக்கான காரணம் என மின்சக்தி அமைச்சர் குமார ஜயகொடி ஊடகங்களுக்கு நேற்றைய தினம் தெரிவித்திருந்தார்.

''பாணந்துறை பகுதியிலுள்ள மின் பிறப்பாக்கி ஒன்றில் குரங்கொன்று மோதியுள்ளதை அடுத்து, ஏற்பட்ட கோளாறே இதற்கான காரணமாகியுள்ளது. அதனாலேயே நாடு முழுவதும் மின்சாரம் தடைப்பட்டுள்ளது.'' என மின்சக்தி அமைச்சர் குறிப்பிட்டார்.

குரங்கு பாய்ந்தமையே மின்சாரம் தடைப்பட காரணம் என மின்சக்தி அமைச்சர் கூறிய நிலையில், பாணந்துறை மின் உற்பத்தி நிலையத்தின் பாதுகாப்பு உத்தியோகத்தர் அதனை மறுத்துள்ளார்.

மின் பிறப்பாக்கி கட்டமைப்பில் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபட்ட அதிகாரி ஒருவரே இவ்வாறு இதனை நிராகரித்துள்ளார்.

''வழமையாக குரங்குகள் பாயும். குரங்குகள் பாயும் போது செயலிழந்து மீண்டும் வழமைக்கு திரும்பி விடும். ஆனால் குரங்கு பாயவில்லை. அப்படியென்றால் குரங்கின் உடல் இருக்க வேண்டும் அல்லவா? குரங்கை காணவில்லை. கடந்த மூன்று தினங்களுக்கு முன்னர் மூன்று குரங்குகள் பாய்ந்தன. உடனே இறந்து விட்டன. அதைவிடுத்து, இந்த இடத்தில் பாயவில்லை. குரங்கு பாயும் நேரங்கள் இருக்கின்றன. எனினும், இன்று பாயவில்லை.'' என பாணந்துறை மின் உற்பத்தி நிலையத்தின் பாதுகாப்பு அதிகாரி தெரிவித்துள்ளார்.

இலங்கை மின்சார தடை

பட மூலாதாரம்,MINISTRY OF ENERGY

படக்குறிப்பு, மின்சக்தி அமைச்சர் குமார ஜயகொடி

தேசிய மின்சார கட்டமைப்பை சமநிலையாக நடத்திச் செல்வது தொடர்பில் தெளிவின்றி கடந்த கால அரசாங்கங்கள் செயற்பட்டமையே இதற்கான காரணம் என மின்சக்தி அமைச்சர் குமார ஜயகொடி தெரிவிக்கின்றார்.

அறிக்கையொன்றின் ஊடாக அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

''பாணந்துறை உப மின் உற்பத்தி நிலையத்தில் திடீரென ஏற்பட்ட சமநிலையற்ற நிலைமையே நாடு முழுவதும் மின்சாரம் தடைப்பட காரணம். தேசிய மின்சார கட்டமைப்பை சமநிலையாக நடத்தச்செல்வது தொடர்பில் தெளிவின்றி கடந்த கால அரசாங்கங்கள் செயல்பட்டன. தொழில்நுட்பம் தொடர்பில் தெளிவற்ற வழிகாட்டல் இந்த நிலைமை ஏற்பட காரணம் என்பது முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. எவ்வாறாயினும், இந்த விடயம் தொடர்பில் மிக ஆழமாக ஆராய்ந்து மீண்டும் இவ்வாறான நிலைமை ஏற்படாத வகையில் தேவையான நடவடிக்கைகளை எடுக்கவுள்ளோம். மின்சார தடையினால் பாதிக்கப்பட்ட மக்களிடம் கவலையை தெரிவித்துக்கொள்கின்றோம்", என மின்சக்தி அமைச்சர் குறிப்பிடுகின்றார்.

இந்த மின்சார தடை தொடர்பில் இலங்கை மின்சார சபை தொடர்ந்து விசாரணைகளை நடத்தி வருவதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

இலங்கை மின்சார தடை

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, சித்தரிப்பு படம்

இலங்கையின் மின்சார தடை சர்ச்சை

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவின் ஆட்சி காலத்தில் இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக பல மாத காலம் தொடர் மின்சார தடையை ஏற்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருந்தது.

இதன்படி, 2022ம் ஆண்டு காலப் பகுதியில் நாளொன்றிற்கு சுமார் 12 மணிநேரத்திற்கு அதிக மின்சார தடை அந்த காலப் பகுதியில் ஏற்படுத்தப்பட்டமையினால், நாடு முழுவதும் வாழும் மக்கள் பாரிய அசௌகரியங்களை எதிர்நோக்கியிருந்தனர்.

இந்த நிலையில், ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க பதவியேற்றதை அடுத்து, மின்சார தடை படிப்படியாக குறைக்கப்பட்டு, மீண்டும் மின்சார விநியோகம் முழுமையாக வழமைக்கு கொண்டு வரப்பட்டது.

எவ்வாறாயினும், 2023ம் ஆண்டு டிசம்பர் மாதம் 09ம் தேதி கொத்மலை முதல் பியகம வரையான மின்சார விநியோக கட்டமைப்பில் மின்னல் தாக்கியதை அடுத்து, நாடு முழுவதும் மின்சார தடை ஏற்பட்டது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.

  • கருத்துக்கள உறவுகள்

நுரைச்சோலை நிலக்கரி மின்னுற்பத்தி நிலையத்தின் மின்னுற்பத்தி இயந்திரங்கள் மீள இயங்க 4 நாட்கள் செல்லும்; சில பிரதேசங்களில் வரையறைகளுடன் மின் விநியோகம் - மின்சார சபை 

10 FEB, 2025 | 02:19 PM
image

(எம்.மனோசித்ரா)

நாடு முழுவதும் ஏற்பட்ட திடீர் மின் தடையால் செயலிழந்த நுரைச்சோலை நிலக்கரி மின் உற்பத்தி நிலையத்தின் 3 மின் உற்பத்தி இயந்திரங்களையும் மீண்டும் மின் உற்பத்தி கட்டமைப்பில் இணைப்பதற்கு சுமார் 4 நாட்கள் செல்லும் என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. 

இதன் காரணமான சில பிரதேசங்களில் மின் விநியோகத்தை சில வரையறைகளுடன் முகாமைத்துவம் செய்ய வேண்டியேற்படும் என்றும் மின்சார சபை தெரிவித்துள்ளது.

பாணந்துரை துணை மின் நிலையத்தில் ஏற்பட்ட அவசர நிலை காரணமாக நேற்று  ஞாயிற்றுக்கிழமை (9) நாடு முழுவதும் சில மணித்தியாலங்கள் மின் தடை ஏற்பட்டது. 

சுமார் 6 மணித்தியாலங்களின் பின்னர் நாடளாவிய ரீதியில் படிப்படியாக மின் விநியோகம் வழமைக்கு திரும்பிய போதிலும், சில பிரதேசங்களில் மீண்டும் இடைக்கிடை மின்தடை ஏற்பட்டது.

இந்நிலையிலேயே நுரைச்சோலை லக்விஜய நிலக்கரி மின்னுற்பத்தி நிலையத்தின் 3 மின்னுற்பத்தி இயந்திரங்களும் செயலிழந்தன. 

இதன் காரணமாக தேசிய மின் உற்பத்தியில் 900 மெகா வோல்ட் மின்சாரம் இழக்கப்பட்டது. எனவே இந்த இயந்திரங்கள் மீள இயங்கும் வரை சில பிரதேசங்களில் வரையறைகளுடன் மின் விநியோகத்தை முகாமைத்துவம் செய்ய வேண்டியேற்படும் என மின்சார சபை தெரிவித்துள்ளது.

இந்நிலையில் இலங்கை மின்சார சபை தலைவரும் மின்சக்தி அமைச்சரும் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவுக்கு கடிதத்தை அனுப்பி வைத்து உடனடியாக பதவி விலக வேண்டும் என்று மின்சாரத்தைப் பயன்படுத்துவோர் சங்கம் வலியுறுத்தியுள்ளது. 

கடந்த அரசாங்கத்தின் குறைகளை அறிந்து தான் மக்கள் தேசிய மக்கள் சக்திக்கு வாக்களித்தார்கள். எனவே முன்னைய ஆட்சியாளர்களை குறை கூறுவதை நிறுத்திவிட்டு பிரச்சினைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என அந்த சங்கம் மேலும் வலியுறுத்தியுள்ளது.

https://www.virakesari.lk/article/206304

  • கருத்துக்கள உறவுகள்

மின் வெட்டு குறித்து மின்சார சபை விசேட அறிவிப்பு

மின் வெட்டு குறித்து மின்சார சபை விசேட அறிவிப்பு

தமது பிராந்தியங்களில் மின்வெட்டு இடம்பெறும் முறை குறித்து அறிந்துக் கொள்வதற்காக புதிய முறைமை ஒன்றை இலங்கை மின்சார சபை நடைமுறைப்படுத்தியுள்ளது.

அதன்படி, மின்சார சபையால் அறிமுகப்படுத்தப்பட்ட https://dm.ceb.lk என்ற இணையதளத்திற்கு பிரவேசித்து அல்லது மின்சார சபையின் கைப்பேசி செயலி மூலம் அல்லது 1987 என்ற தொலைபேசி எண்ணுக்கு குறுஞ்செய்தி அனுப்புவதன் மூலம் அதை அறிந்துக் கொள்ள முடியும் என்று சபை தெரிவித்துள்ளது.

இதற்கு, பின்வரும் முறைமைகள் ஊடாக குறித்த தகவல்களைப் பெற்றுக் கொள்ள முடியும்.

1. Power Cut Schedule in CEB Website
URL: https://dm.ceb.lk

Check updates and schedules under the Power Cut Schedule page

2. CEBCare Outage Map
o URL: https://cebcare.ceb.lk/Incognito/OutageMap

o Customer can check interruption schedules specific to their areas

3. CEBCare Web Customer Portal
o URL: https://cebcare.ceb.lk

 CEBAssist Mobile App (Android Only)

5. SMS Request to 1987Send an SMS to 1987 with the following format to receive your interruption schedule: INT [electricity account number]

6. SMS Notifications
Receive SMS alerts with demand management schedules specific to your area.

https://tamil.adaderana.lk/news.php?nid=199955

  • கருத்துக்கள உறவுகள்

வலதுசாரி குரங்கு போல இருக்கின்றது ...வழமையாக இடப்பக்கம் பாயும் இந்த குரங்கு தோழர் இன்று எதிர்கட்சி,மற்றும் முன்னாள் அரசுகளின் தூன்டுதலினால் வலப்பக்கமாக பாய்ந்து..ஜெ.வி.பி தோழர்களின் ஆட்சிக்கு ஆப்பு வைக்க முயற்சித்துள்ளது..

On 11/2/2025 at 03:31, ஏராளன் said:

குரங்கு பாய்ந்தமையே மின்சாரம் தடைப்பட காரணம் என மின்சக்தி அமைச்சர் கூறிய நிலையில், பாணந்துறை மின் உற்பத்தி நிலையத்தின் பாதுகாப்பு உத்தியோகத்தர் அதனை மறுத்துள்ளார்.

 

  • கருத்துக்கள உறவுகள்

நுரைச்சோலை மின்னுற்பத்தி இயந்திரங்கள் மீண்டும் செயற்பட ஆரம்பித்தன

15 FEB, 2025 | 04:34 PM
image

(எம்.மனோசித்ரா)

நாடளாவிய ரீதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (09) ஏற்பட்ட மின்தடையால் செயலிழந்த நுரைச்சோலை லக்விஜய நிலக்கரி மின்னுற்பத்தி நிலையத்தின் மூன்று மின்பிறப்பாக்கி இயந்திரங்களும் திருத்தப்பட்டு மீண்டும் செயற்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளன.

அதற்கமைய 3 இயந்திரங்களும் தேசிய மின் கட்டமைப்பில் இணைக்கப்பட்டுள்ளன. கடந்த 9ஆம் திகதி நாடளாவிய ரீதியில் ஏற்பட்ட திடீர் மின் தடையால், நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தின் 3 மின் உற்பத்தி இயந்திரங்களும் செயலிழந்தன.

இதன் விளைவாக, தேசிய மின்கட்டமைப்பில் 900 மெகாவாட் மின்சாரம் இழக்கப்பட்டது. நிலைமையை முகாமைத்துவம் செய்வதற்காக கடந்த 10, 11 ஆகிய இரு தினங்களில் தலா ஒன்றரை மணிநேரமும், கடந்த 13ஆம் திகதி ஒரு மணிநேரமும் மின்சாரத்தை துண்டிக்க இலங்கை மின்சார சபை நடவடிக்கை எடுத்தது.

எவ்வாறாயினும் வெள்ளிக்கிழமை (14)  காலை நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தின் மூன்றாவது இயந்திரமும் இயங்க ஆரம்பித்ததையடுத்து, இதன் காரணமாக நாளாந்த மின்வெட்டு முடிவுக்கு கொண்டுவரப்படுவதாக மின்சக்தி அமைச்சினால் அறிவிக்கப்பட்டது.

https://www.virakesari.lk/article/206761

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.