Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மாவையின் இறுதிச்சடங்கில் அநாமதேய பதாகையின் பின்னணியில் பல சக்திகள் ; தமிழரசுக்கட்சியை சிதைப்பதே நோக்கம் - சி.வி.சே.சிவஞானம்

Published By: Vishnu

11 Feb, 2025 | 02:28 AM
image

மறைந்த தலைவர் மாவை.சோ.சேனதிராஜாவின் இறுதிச்சடங்கு நடைபெற்ற மயானத்தில் கட்சியின் மூன்று பாராளுமன்ற உறுப்பினர்கள் உட்பட மத்திய குழு உறுப்பினர்கள் 18பேருக்கு எதிராக அநாமதேய பதாகையை காட்சிப்படுத்தியத்தின் பின்னணியில் உள்நாட்டு வெளிநாட்டு சக்திகள் பல காணப்படுகின்றன என்று இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பதில் தலைவர் சி.வி.சே.சிவஞானம் தெரிவித்துள்ளார்.

அத்துடன், எமது கட்சியை சிதைத்து ஓரங்கட்டுவதே அந்த சக்திகளின் பிரதான நோக்கமாக இருக்கின்றது என்பதை புரிந்து கொள்ள வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டியதோடு, அவ்விடயம் தொடர்பில் முழுமையான விசாரணைகள் அவசியம் என்றும் வலியுறுத்தினார்.

யாழ்.நல்லூரில் உள்ள அவரது இல்லத்தில் திங்கட்கிழமை (10) நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

இந்திய குடியரசு தினமான கடந்த 26ஆம் திகதி யாழ்.இந்திய துணைத்தூதரகத்தில் நடைபெற்ற நிகழ்வில் பங்கேற்பதற்கு செல்வதற்காக கட்சியின் பதில் பொதுச்செயலாளர் சத்தியலிங்கம் எனது வீட்டிற்கு வருகை தந்திருந்தார். அன்றையதினம் நானும், அவரும் சுகயீனமுற்றிருந்த சேனாதிராஜாவை நேரில் பார்வையிடுவதற்காகச் சென்றிருந்தோம்.

அப்போது அவருடைய உடல்நலன்கள் குறித்தே கலந்துரையாடினோம். எந்தவொரு சந்தர்ப்பத்திலும் நாம் அவருடன் கட்சி சார்ந்த விடயங்களையோ அரசியல்சார்ந்த விடயங்களையோ பேசியிருக்கவில்லை.

மேலும், அவர் எம்முடன் அன்னியோன்யமாகவே உரையாடினார். அவரது உடல்நலக்குறைவை பொருட்படுத்தாது நாம் விடைபெற்றபோது எம்மை வழியனுப்பி வைப்பதற்காகக் கூட அவர் வரமுன்றிருந்தார். அவ்விதமான நிலைமைகள் இருக்கின்றபோது எமக்கு எதிராக விசமத்தனமான பிரசாரம் செய்யப்படுகின்றது.

குறிப்பாக, சசிகலா ரவிராஜ் உள்ளிட்டவர்கள் கூட நாம், சேனாதிராஜாவுக்கு அழுத்தங்களை பிரயோகித்தோம் என்ற தொனிப்பட கருத்துக்களை ஊடகங்களில் பதிவிட்டுள்ளமையானது வருத்தமளிப்பதாக உள்ளது.

இதனையடுத்து எமது கட்சியின் மத்தியகுழுவின் அங்கத்தவர்களான 18பேரின் புகைப்படங்களுடன் கூடி பதாகையொன்று சேனாதிராஜாவின் இறுதிச்சடங்கு நடைபெற்ற மயானத்தில் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது. அதில் நாம் தான் சேனாதிராஜாவின் மரணத்துக்கு காரணமானவர்கள் என்ற அடிப்படையில் வசனங்களும் எழுதப்பட்டிருந்தது.

அந்தப்பாதாகை சம்பந்தமாக விசாரணைகளை மேற்கொள்ளுமாறு பொலிஸாரிடத்தில் முறைப்பாடு செய்துள்ளேன். அதுமட்டுமன்றி, இந்த விடயங்களுக்குப் பின்னால் கட்சியில் உள்ளவர்கள் மட்டுமல்ல எமக்கு எதிரான கட்சிகளில் உள்ளவர்கள், புலம்பெயர்ந்த நாடுகளில் உள்ளவர்கள் உள்ளிட்ட பல சக்திகள் உள்ளன.

இந்தச் சக்திகள் தமிழரசுக்கட்சியை பிளவடையச் செய்ய வேண்டும் அல்லது அரசியல் அரங்கிலிருந்து ஒதுக்க வேண்டும் என்று செயற்படுகின்ற தரப்புக்களாகும். ஆகவே இந்த விடயங்கள் சம்பந்தமாக உண்மைகள் கண்டறியப்பட்டு வெளிப்படுத்தப்படுகின்றபோது பின்னணியில் உள்ளவர்கள் அடையாளப்படுத்தப்படுவார்கள்.

சேனாதிராஜாவுக்கும், எனக்கும் இடையில் எவ்விதமான தனிப்பட்ட முரண்பாடுகளும் கிடையாது. ஆகவே அவருடைய மரணத்துக்கு  என்றார்.

https://www.virakesari.lk/article/206361

Edited by கிருபன்

  • கிருபன் changed the title to மாவையின் இறுதிச்சடங்கில் அநாமதேய பதாகையின் பின்னணியில் பல சக்திகள் ; தமிழரசுக்கட்சியை சிதைப்பதே நோக்கம் - சி.வி.சே.சிவஞானம்
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கிருபன் said:

 

அந்தப்பாதாகை சம்பந்தமாக விசாரணைகளை மேற்கொள்ளுமாறு பொலிஸாரிடத்தில் முறைப்பாடு செய்துள்ளேன். அதுமட்டுமன்றி, இந்த விடயங்களுக்குப் பின்னால் கட்சியில் உள்ளவர்கள் மட்டுமல்ல எமக்கு எதிரான கட்சிகளில் உள்ளவர்கள், புலம்பெயர்ந்த நாடுகளில் உள்ளவர்கள் உள்ளிட்ட பல சக்திகள் உள்ளன.

இந்தச் சக்திகள் தமிழரசுக்கட்சியை பிளவடையச் செய்ய வேண்டும் அல்லது அரசியல் அரங்கிலிருந்து ஒதுக்க வேண்டும் என்று செயற்படுகின்ற தரப்புக்களாகும். ஆகவே இந்த விடயங்கள் சம்பந்தமாக உண்மைகள் கண்டறியப்பட்டு வெளிப்படுத்தப்படுகின்றபோது பின்னணியில் உள்ளவர்கள் அடையாளப்படுத்தப்படுவார்கள்.

 

https://www.virakesari.lk/article/206361

யாருமே இதனைச் செய்யவில்லை...நீங்களே செய்கின்றீர்கள்....அதனைவிட முனைப்புடன் அமைச்சர் சந்துமாமா செய்கின்றார்...நீங்கள் குசினியில் சண்டைபிடிக்க அமைச்சர் வீடுகட்டி குடுபுகுந்து ..குடியேறியும் விடுவார்...

Edited by alvayan

  • கருத்துக்கள உறவுகள்

எங்கள் சமூகத்தில் பிடிக்காத நபர் கூட மரண வீட்டுக்கு வந்தால் பரிகாசம் செய்வதில்லை. 

மாவை வீட்டு மரணச் சடங்கில் இப்படி இழி செயல் செய்தவர்கள் நிச்சயம் நல்ல குணாதிசயங்கள் கொண்டவர்கள் அல்ல. அதை ஆதரிப்பவர்களும் அதே ஆட்கள் தான் 

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, கிருபன் said:

இந்த விடயங்களுக்குப் பின்னால் கட்சியில் உள்ளவர்கள் மட்டுமல்ல எமக்கு எதிரான கட்சிகளில் உள்ளவர்கள், புலம்பெயர்ந்த நாடுகளில் உள்ளவர்கள் உள்ளிட்ட பல சக்திகள் உள்ளன.

ஆமா, சட்டப்படி, தார்மீகப்படி, கொள்கைப்படி, நடைபெற்ற போட்டியில் தெரிவு செய்யப்பட்ட தலைவரை ஏற்காமல் நீதிமன்ற வாசற்படி ஏறியதற்கும் நீங்கள் கூறும் இவர்கள்தான் காரணம். கட்சியில் நடைபெற்ற இழுபறிகள், குழிபறிப்புகள் வேறு யாருக்கும் தெரியாது, அவிழ்த்து விடுங்கோ. ஆமா..... நீங்கள் வந்து போனபின்தான் அவர் விழுந்தார், அதற்கு முதல் நீங்கள் சொல்வதுபோல் சுகவீனமுற்றிருந்ததாக செய்தி வரவில்லையே. அவர் சுகவீனமுற்றிருந்தால் வைத்தியசாலையிலல்லவா அனுமதிக்கப்பட்டிருப்பார்?

ஒரு மரணச்சடங்கிற்கு ஏன் போகிறோம்? எங்கள்அனுதாபத்தையும், ஆதரவையும், ஆறுதலையும் உறவுகளை இழந்து தவிப்பவர்களுக்கு தெரிவிக்கவே. ஆனால் சம்பந்தப்பட்டவரின் மரணத்திற்கு காரணமானவர்களால் அதை கொடுக்க, தெரிவிக்க முடியுமா? அவர் மரணத்திற்கு காரணமானவர்கள் அங்கு சமூகமளிக்கும்போது, உறவுகளின் மனநிலை எப்படியிருக்கும்? இவர்கள் அவரை நோகடிக்காமல் இருந்திருந்தால்; தமது உறவு இன்று எங்களோடு இருந்திருப்பாரே, என்கிற வேதனை வராதா? அவரை, நிஞாயத்துக்கு மாறாக பதவியிலிருந்து இறக்கி அவமானப்படுத்தியவர்கள் உள்ளத்தில், உண்மையான மரியாதை, கவலை இருக்குமா? போலிக்கு போய் தம்மை முதன்மைப்படுத்தவா? உறவுகள் மட்டுமல்ல, தனிப்பட்ட எவருமே பொறுத்துக்கொள்ள மாட்டார்கள். உங்கள் வீட்டில் இப்படி ஒன்று நிகழ்ந்திருந்தால் தெரிந்திருக்கும்.

அதுதான் பாத்தோமே, மரணச்சடங்கில் சி. வி .கே. எப்படி காட்சியளித்தாரென்று. முகத்தில் வெறுப்பு, கவலையில்லை. மறுபக்கம் முகத்தை  திருப்பி கையால மறைத்துக்கொண்டிருந்தாரே, இதற்கு போகாமலே இருந்திருக்கலாம். 

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.