Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பணயக் கைதிகளை விடுவிக்கக் காலக்கெடு விதித்த ட்ரம்ப் - இல்லையேல் போர் நிறுத்த ஒப்பந்தம் இரத்து?

காசாவில் இருந்து புலம்பெயர்ந்து வரும் அகதிகளை ஜோர்தான் மற்றும் எகிப்து ஆகிய நாடுகள் ஏற்றுக் கொள்ள வேண்டும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். 

அமெரிக்காவின் ஓவல் அலுவலகத்தில் ஊடகவியலாளர்களிடம் கருத்துத் தெரிவித்த, ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், காசாவில் சிறைபிடித்து வைக்கப்பட்டுள்ள பணய கைதிகள் அனைவரும் எதிர்வரும் சனிக்கிழமை நண்பகலிற்குள் விடுதலை செய்யப்பட வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார். 

அவ்வாறு அவர்கள் விடுவிக்கப்படவில்லை என்றால், போர்நிறுத்த ஒப்பந்தத்தினை இரத்து செய்ய வேண்டிய நிலை ஏற்படும் எனக் கூறியுள்ளார். 

காசாவில் இருந்து புலம்பெயர்ந்து வரும் அகதிகளை ஜோர்தான் மற்றும் எகிப்து ஆகிய நாடுகள் ஏற்றுக் கொள்ள வேண்டும்.

அவர்கள் இதனை ஏற்கவில்லை என்றால், அந்த நாடுகளுக்கான உதவியை நிறுத்தி வைக்க நேரிடும் என்றும் ட்ரம்ப் கூறியுள்ளார்.
 

https://www.hirunews.lk/tamil/396460/பணயக்-கைதிகளை-விடுவிக்கக்-காலக்கெடு-விதித்த-ட்ரம்ப்-இல்லையேல்-போர்-நிறுத்த-ஒப்பந்தம்-இரத்து

  • கருத்துக்கள உறவுகள்

காஸா போர் நிறுத்தம் நீடிக்குமா? ஹமாஸுக்கு எழுந்துள்ள சந்தேகம் இதுவா?

Hamas Released More Hostages

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, சனிக்கிழமை ஹமாஸ் விடுவித்த பணயக்கைதிகளின் உடல்நிலை மோசமாக இருந்தது. கட்டுரை தகவல்
  • எழுதியவர், பால் ஆடம்ஸ்
  • பதவி, பிபிசி
  • 5 மணி நேரங்களுக்கு முன்னர்

இஸ்ரேல் பணயக்கைதிகளின் அடுத்த குழு இன்னும் சில நாட்களில் விடுவிக்கப்பட இருந்த நிலையில், பணயக்கைதிகள் விடுவிப்பை நிறுத்தி வைப்பதாக ஹமாஸ் அறிவித்தது ஏன்?

"ஆக்கிரமிப்பாளர் (இஸ்ரேல்) தன் கடமைகளைச் செய்ய அழுத்தம் கொடுப்பதற்காக போதுமான நேரம் மத்தியஸ்தர்களுக்கு வழங்கப்படுகிறது" இஸ்ரேலுக்கு எச்சரிக்கை விடுப்பதாகக் கூறி ஹமாஸ் அமைப்பினர் தங்களின் டெலிகிராம் பக்கத்தில் விடுத்துள்ள அறிக்கை இது.

வரும் சனிக்கிழமை திட்டமிடப்பட்ட அடுத்தக்கட்ட பணயக்கைதிகள் விடுவிப்பை குறிப்பிட்டுள்ள ஹமாஸ், "கதவுகள் இன்னும் திறந்தே உள்ளன" என குறிப்பிட்டுள்ளது.

பிரச்னையில் முட்டுக்கட்டையாக இருக்கும் சிலவற்றை சுமூகமாக தீர்க்க இந்த குழு நேரம் கொடுப்பதாகத் தோன்றுகிறது.

ஆனால் அந்த முட்டுக்கட்டை என்ன?

ஹமாஸ் அமைப்பு தொடர்ச்சியான பல குற்றச்சாட்டுக்களை முன்வைக்கிறது. இடம் பெயர்ந்த மக்கள் வாழ்விடங்களுக்கு திரும்புவதில் இருக்கும் தாமதம், அவர்கள் மீது இன்னமும் தாக்குதல்கள் தொடர்வது மற்றும் சில மனிதாபிமான உதவிகளை அனுமதிக்க மறுப்பது உள்ளிட்டவை இஸ்ரேல் மீதான குற்றச்சாட்டுக்களாக உள்ளன.

ஹமாஸ் உடன் தொடர்பில் இல்லாத சில பாலத்தீன அதிகாரிகளின் கூற்றுப்படி, பெரும் எண்ணிக்கையிலான பாலத்தீனர்கள் வீடுகளை இழந்துள்ளனர். இந்தநிலையில் மக்கள் வசிப்பதற்கு தேவையான கேரவன்களை காஸாவுக்கு உள்ளே அனுமதிக்க இஸ்ரேல் மறுப்பதாக குற்றச்சாட்டு உள்ளது.

காஸாவிலிருந்து வெளியேற மக்களை ஊக்கப்படுத்துவதற்கான வழிகள் குறித்து இஸ்ரேலிய அரசு வெளிப்படையாக விவாதிக்கத் தொடங்கியுள்ள நேரத்தில், தற்காலிக குடியேற்றத்திற்குத் தேவையான அடிப்படை வசதிகளையும் அனுமதிக்க மறுப்பது, பாலத்தீனர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஹமாஸ்

பட மூலாதாரம்,REUTERS

அச்சத்தை அதிகரிக்கும் டிரம்ப்பின் வார்த்தைகள்

டிரம்பால் ஒவ்வொரு நாளும் காஸாவில் அச்சங்கள் அதிகரித்து வருகின்றன.

தொடக்கத்தில், காஸாவை மறு கட்டமைப்பு செய்ய பெரும்பாலான பாலத்தீனர்கள் வெளியேற வேண்டும் என டிரம்ப் கூறினார். பின்னர் அவரது கருத்து மாற்றம் பெற்று, "அனைவரும் வெளியேற வேண்டும், அமெரிக்கா காஸாவை கைப்பற்றி, சொந்தமாக்கிக்கொள்ளும்" என்பதாக மாறியது.

டிரம்ப்பின் தீ மூட்டும் பேச்சுகள் தொடரும் நிலையில், இரண்டாம் கட்ட போர் நிறுத்த பேச்சுவார்த்தை பயன்தரக் கூடியதா? என்ற கேள்வி ஹமாஸுக்கு ஏற்படலாம்.

டிரம்ப்பின் வார்த்தைகள் உண்மையிலேயே தீவிரத்தன்மை உடையதாக இருந்தால் காஸாவை பொதுமக்கள் அற்றதாக மாற்றித் தரும் வேலை இஸ்ரேலின் தலையில் விழும் என்பது பாலத்தீனர்களுக்கு தெரியும். அந்த சூழலில், அவர்களுக்கு வசிப்பிடம் கிடைப்பதை தடுப்பது மட்டும் போதுமானதாக இருக்காது. பலப் பிரயோகமும் கண்டிப்பாக தேவைப்படலாம்.

தற்போது டிரம்ப் கூறுவது என்னவென்றால் சனிக்கிழமைக்குள்ளாக காஸாவில் இருக்கும் அனைத்து பணயக்கைதிகளும் திரும்பவில்லை என்றால், போர் நிறுத்தத்தை ரத்து செய்ய தான் பரிந்துரைப்பேன் என எச்சரிக்கிறார்.

ஆனால், ''இது என்னுடைய கருத்துதான், இஸ்ரேல் தன்னுடைய முடிவை எடுக்கலாம்'' எனவும் கூறுகிறார் டிரம்ப்.

AFP

பட மூலாதாரம்,AFP

மீண்டும் போருக்கான முகாந்திரம் இருக்கும் சூழலில், எஞ்சிய பணயக் கைதிகளையும் விடுவிப்பதால் என்ன பலன் கிடைக்கப் போகிறது என ஹமாஸ் நினைக்கலாம்.

"ஒவ்வொரு அறிக்கையும், பேச்சுக்களும் ஹமாஸின் பிடிவாதத்தை அதிகரிக்கும்" என பிபிசியிடம் கூறுகிறார் இஸ்ரேலைச் சேர்ந்த சல்மானோவிக் . இவருடைய மனைவியின் உறவினரான ஓமர் ஷெம் டோவ் , இன்னமும் ஹமாஸின் பிடியில் உள்ளார்.

"அவர் (டிரம்ப்) தனது அதீத செயல்பாட்டை கொஞ்சம் குறைக்க வேண்டும் என நான் விரும்புகிறேன்" என கூறுகிறார் சல்மானோவிக் .

ஹமாஸின் தாமதம் குறித்து இஸ்ரேல் தனக்கேயான சந்தேகங்களைக் கொண்டுள்ளது.

கடந்த வார இறுதியில் உடல் மெலிந்த நிலையில் பணயக்கைதிகள் விடுவிக்கப்பட்டனர். இந்தநிலையில், மற்ற பணயக்கைதிகளின் இன்னும் மோசான உடல்நிலையை உலக மக்கள் பார்ப்பதை ஹமாஸ் விரும்பாமல் இருக்கலாம்.

பட்டப்பகலில் ஆயுதம் தாங்கிய ஹமாஸ் குழுவினரின் அணிவகுப்பு காட்சிகள் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டது மற்றும் போரில் இழந்தவர்களை விடவும், அதிக எண்ணிக்கையில் நபர்கள் ஹமாஸ் அமைப்பில் சேர்க்கப்பட்டுள்ளனர் என்ற அமெரிக்க முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கனின் எச்சரிக்கை ஆகியவற்றால் போர் நிறுத்தம் தொடரலாம் அல்லது தொடரும் என்பதை அனைத்து இஸ்ரேலியர்களும் நம்பவில்லை.

மிகக்கவனமாக நடைபெற்ற பேச்சுவார்த்தைக்குப் பின்னர் செய்யப்பட்ட இந்த ஏற்பாடு உடையப்போகிறது என கூறுவதற்கு இது சரியான நேரமாக இருக்காது. ஆனால் பெரும்பாலானோர் யூகித்ததைப் போன்று ஆரம்பம் நன்றாக இருந்தாலும், தற்போது அழுத்தம் அதிகரிக்கிறது என்பது தான் உண்மை.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.

https://www.bbc.com/tamil/articles/c5y7dn8542yo

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

டொனால்ட் ட்ரம்பின் கருத்துக்கு ஹமாஸ் பதிலடி!

%E0%AE%9F%E0%AF%8A%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D+%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%B9%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%9F%E0%AE%BF%21+

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் மிரட்டல் பேச்சுகளைத் தாம் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை என ஹமாஸ் அமைப்பு தெரிவித்துள்ளது. 

போர் நிறுத்த ஒப்பந்தத்தை இரு தரப்பினரும் மதிக்க வேண்டும் என ஹமாஸ் அமைப்பு கூறியுள்ளது. 

அமெரிக்கா, எகிப்து மற்றும் கட்டார் ஆகிய நாடுகள் மேற்கொண்ட மத்தியஸ்த பேச்சுவார்த்தையின் பலனாக இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டது. 

இதன் அடிப்படையில் இஸ்ரேல் பணயக்கைதிகள் மற்றும் பாலஸ்தீனிய பணயக்கைதிகள் பரஸ்பரம் விடுவிக்கப்பட்டு வருகின்றனர். 

இந்நிலையில், அமெரிக்காவின் ஓவல் அலுவலகத்தில் ஊடகவியலாளர்களிடம் கருத்துத் தெரிவித்த அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், காசாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பணய கைதிகள் அனைவரும் எதிர்வரும் சனிக்கிழமை நண்பகலிற்குள் விடுதலை செய்யப்பட வேண்டும் என வலியுறுத்தினார். 

மேலும் இவ்வாறு குறித்த காலப்பகுதிக்குள் விடுவிக்கப்படவில்லை எனில் போர்நிறுத்த ஒப்பந்தத்தை இரத்து செய்து விடுதாக அமெரிக்க ஜனாதிபதி எச்சரிக்கை விடுத்தார். 

காசாவில் இருந்து புலம்பெயர்ந்து வரும் அகதிகளை ஜோர்தான் மற்றும் எகிப்து நாடுகள் ஏற்றுக் கொள்ள வேண்டும் எனவும் அவர்கள் இதனை ஏற்கவில்லை என்றால், அந்த நாடுகளுக்கான உதவியை நிறுத்தி வைக்க நேரிடும் என்றும் கூறினார். 

அவருடைய இந்த கருத்துக்கு ஹமாஸ் அமைப்பு பதிலடி கொடுத்துள்ளது. 

ஹமாஸ் அமைப்பின் மூத்த செய்தி தொடர்பாளர் சமி அபு ஜூரி அளித்துள்ள பதிலில், மிரட்டல் விடுப்பது என்ற பேச்சுக்கே இடமில்லை எனக் கூறியுள்ளார். 

ட்ரம்பின் கருத்துகள், போர் முடிவுக்கு வருவதற்கான பேச்சுவார்த்தைகளைக் கடினம் ஆக்குவதற்கு வழிவகுப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். 

போர் நிறுத்த ஒப்பந்தம் என ஒன்று உள்ளதாகவும் அதற்கு இரு தரப்பினரும் மதிப்பளிக்க வேண்டும் எனவும் ஹமாஸ் அமைப்பின் மூத்த செய்தி தொடர்பாளர் சமி அபு ஜூரி வலியுறுத்தியுள்ளார்.

 

https://www.hirunews.lk/tamil/396584/டொனால்ட்-ட்ரம்பின்-கருத்துக்கு-ஹமாஸ்-பதிலடி

  • கருத்துக்கள உறவுகள்

'சனிக்கிழமைக்குள் பணயக்கைதிகளை விடுவிக்காவிட்டால்..' - இஸ்ரேல் எச்சரிக்கை; ஹமாஸ் கூறுவது என்ன?

இஸ்ரேல், ஹமாஸ், பாலத்தீனம், காஸா, அமெரிக்கா

பட மூலாதாரம்,REUTERS

படக்குறிப்பு, காஸாவுக்கு உள்ளேயும் அதைச் சுற்றியும் ராணுவத்தைக் குவிக்குமாறு இஸ்ரேலிய படைகளுக்கு உத்தரவிட்டுள்ளதாக பெஞ்சமின் நெதன்யாகு கூறினார் கட்டுரை தகவல்
  • எழுதியவர், டேவிட் கிரிட்டன்
  • பதவி, பிபிசி நியூஸ்
  • 56 நிமிடங்களுக்கு முன்னர்

"பாலத்தீன ஆயுதக் குழுவான ஹமாஸ், வரும் சனிக்கிழமைக்குள் (பிப்ரவரி 15) பணயக்கைதிகளை எங்களிடம் ஒப்படைக்கவில்லை என்றால், போர் நிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவருவோம்'' என இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதைத் தொடர்ந்து, காஸாவில் மீண்டும் போர் தொடங்கக்கூடும் என்ற கவலை அதிகரித்து வருகிறது.

மூன்று வாரங்களுக்கு முன் கொண்டுவரப்பட்ட, போர் நிறுத்த ஒப்பந்தத்தின் விதிமுறைகளை இஸ்ரேல் மீறியதாக ஹமாஸ் ஆயுதக்குழு குற்றம்சாட்டியது. 'மறு அறிவிப்பு வரும் வரை' இஸ்ரேல் பணயக்கைதிகளை விடுவிப்பதை நிறுத்திவைக்கப்போவதாகவும் ஹமாஸ் அறிவித்திருந்தது.

இதையடுத்து பெஞ்சமின் நெதன்யாகுவின் பாதுகாப்பு அமைச்சரவை செவ்வாய்க்கிழமை (பிப்ரவரி 11) அன்று கூடியது.

மீதமுள்ள 76 பணயக்கைதிகளையும் விடுவிக்க நெதன்யாகு கோருகிறாரா அல்லது இந்த சனிக்கிழமை விடுவிக்கப்படவிருந்த மூவரை மட்டும்தான் கோருகிறாரா என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.

 

இதற்கு பதிலளித்த ஹமாஸ், 'போர் நிறுத்த ஒப்பந்தத்தில் தாங்கள் உறுதியாக இருப்பதாகவும், இதில் சிக்கல்கள் அல்லது தாமதங்கள் ஏற்பட்டால், அதற்கு இஸ்ரேல்தான் பொறுப்பு' என்றும் கூறியது.

இஸ்ரேலுக்கு எதிரான புகார்களின் பட்டியலை மத்தியஸ்தர்கள் குழு பரிசீலிக்க வேண்டும் என்று ஹமாஸ் கோரியுள்ளது. இந்தப் புகார்களில் 'கூடாரங்கள் போன்ற முக்கிய மனிதாபிமான உதவிகளை இஸ்ரேல் தடுக்கிறது' போன்றவை அடங்கும். ஆனால் இந்தக் குற்றச்சாட்டுகளை இஸ்ரேல் மறுத்துள்ளது.

இந்த ஒப்பந்தத்தை மீண்டும் நடைமுறைப்படுத்த அரபு நாடுகள் ஹமாஸுக்கு அழுத்தம் கொடுத்து வருவதாக தெரிகிறது.

இஸ்ரேல், ஹமாஸ், பாலத்தீனம், காஸா, அமெரிக்கா

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, 'காஸாவில் மோதல் முடிவுக்கு வந்ததும், அது இஸ்ரேலால் அமெரிக்காவிடம் ஒப்படைக்கப்படும்' என்று டிரம்ப் சமூக ஊடகங்களில் தெரிவித்துள்ளார்.

இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு கூறியது என்ன?

காஸாவின் மறுகட்டமைப்புக்கான 'ஒரு விரிவான தொலைநோக்குப் பார்வையை' முன்வைக்கத் திட்டமிட்டுள்ளதாக எகிப்து தெரிவித்துள்ளது.

ஆனால் அது அமெரிக்க அதிபர் டிரம்ப் முன்வைத்த திட்டத்தைப் போலல்லாமல், அதாவது மக்களை வேறு பகுதிக்கு அப்புறப்படுத்தாமல் காஸாவை சீரமைப்பது ஆகும்.

ஹமாஸின் முடிவு, இந்த வார இறுதியில் நிகழவிருந்த பணையக்கைதிகளின் விடுதலையை தாமதப்படுத்தியுள்ளது.

"சனிக்கிழமைக்குள் அனைத்து பணயக்கைதிகளும் விடுதலை செய்யப்படாவிட்டால், போர் நிறுத்த ஒப்பந்தத்தை இஸ்ரேல் ஒட்டுமொத்தமாக ரத்து செய்ய வேண்டும். அதனால் பேரழிவு ஏற்பட்டாலும் பரவாயில்லை" என்று டிரம்ப் தெரிவித்துள்ளார்.

செவ்வாயன்று நடைபெற்ற இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சரவையின் நான்கு மணி நேர கூட்டத்திற்கு பிறகு, ''அமெரிக்க அதிபர் டிரம்பின் கோரிக்கையை வரவேற்பதாக'' ஒரு காணொளி வாயிலாக தெரிவித்தார் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு.

"ஹமாஸ் நமது பணயக்கைதிகளை விடுவிக்கப் போவதில்லை என்றும் அறிவித்ததை அடுத்து, நேற்று இரவு காஸா பகுதிக்குள் மற்றும் அதைச் சுற்றி படைகளை குவிக்குமாறு இஸ்ரேல் ராணுவத்துக்கு நான் அறிவுறுத்தினேன்." என்றும் அவர் கூறினார்.

"தற்போது மேற்கொள்ளப்படும் இந்த நடவடிக்கை, மிக விரைவில் நிறைவடையும்." என்றார் நெதன்யாகு.

பின்னர் அவர் ஒரு இறுதி எச்சரிக்கையை வெளியிட்டார். பாதுகாப்பு அமைச்சரவையின் ஒருமித்த ஒப்புதலுடன் இது வெளியிடப்படுவதாகவும் கூறினார்.

"சனிக்கிழமை (பிப்ரவரி 15) நண்பகலுக்குள் ஹமாஸ் எங்களது பணயக்கைதிகளை திருப்பி அனுப்பவில்லை என்றால், போர்நிறுத்தம் முடிவுக்கு வரும். ஹமாஸின் முழுமையான வீழ்ச்சி நிகழும் வரை நீடிக்கக்கூடிய, ஒரு தீவிரமான சண்டையை இஸ்ரேல் ராணுவம் மீண்டும் தொடங்கும்." என்று அவர் எச்சரித்தார்.

இஸ்ரேல், ஹமாஸ், பாலத்தீனம், காஸா, அமெரிக்கா

பட மூலாதாரம்,EPA

படக்குறிப்பு, 16 மாத கால போரில் காஸா நகருக்கு வடக்கே உள்ள ஜபாலியாவின் பெரும்பகுதி அழிக்கப்பட்டுள்ளது

மீதமுள்ள அனைத்து பணயக்கைதிகளையும் ஹமாஸ் விடுவிக்க வேண்டும் என்று நெதன்யாகு விரும்புகிறாரா இல்லையா என்பது குறித்து இஸ்ரேலிய அதிகாரிகளிடமிருந்து முரண்பட்ட செய்திகள் வந்தன.

திட்டமிட்டபடி சனிக்கிழமை அன்று மூன்று பணயக்கைதிகள் கொண்ட அடுத்த குழு விடுவிக்கப்பட்டால், போர் நிறுத்தத்தைத் தொடரத் தயாராக இருப்பதாக இஸ்ரேலிய செய்தித்தாள் ஹாரெட்ஸிடம் ஒரு வட்டாரம் தெரிவித்துள்ளது.

ஒப்பந்தத்தின் முதல் கட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள, மீதமுள்ள ஒன்பது பணயக் கைதிகளை (உயிருடன் உள்ளவர்கள்) விடுவிக்க வேண்டும் என்ற நிபந்தனை வைக்கப்பட்டுள்ளதாக பின்னர் செய்திகள் வெளியாகின.

ஆனால், இஸ்ரேலின் போக்குவரத்து அமைச்சரும் போர் அமைச்சரவை உறுப்பினருமான மிரி ரெகேவ் தனது எக்ஸ் தள பதிவில், "நாங்கள் மிகத் தெளிவான முடிவை எடுத்துள்ளோம். பணயக்கைதிகள் விடுதலை தொடர்பான அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் கருத்தை நாங்கள் பின்பற்றுகிறோம். சனிக்கிழமைக்குள், அனைவரும் விடுவிக்கப்படுவார்கள்" என்று அவர் தெரிவித்தார்.

'இஸ்ரேல் சாமர்த்தியமாக செயல்பட முயற்சிக்கிறது'

இஸ்ரேல், ஹமாஸ், பாலத்தீனம், காஸா, அமெரிக்கா

பட மூலாதாரம்,REUTERS

இதற்கிடையில் இஸ்ரேல் ராணுவம், அதன் தெற்கு கட்டுப்பாட்டு தளத்தை தயார்நிலையில் வைத்திருப்பதாகத் தெரிவித்துள்ளது. இந்த தளமே காஸா செயற்பாடுகளுக்கு பொறுப்பு என்பதால், இருப்புப் படையினர் உட்பட கூடுதல் துருப்புகள் மூலம் இது வலுப்படுத்தப்படும் என்றும் கூறியுள்ளது.

சில இஸ்ரேலிய ஆய்வாளர்கள், இஸ்ரேல் சாமர்த்தியமாக செயல்பட முயற்சிக்கிறது என்று கருத்து தெரிவிக்கின்றனர். அதாவது, வெள்ளை மாளிகைக்கு தங்களது விசுவாசத்தைக் காட்டுவது மற்றும் ஒப்பந்தத்தையும் பின்பற்றுவது.

இந்த வார இறுதியில் திட்டமிடப்பட்டுள்ள பணயக்கைதிகள் விடுதலை தொடர்பான விவகாரத்தில் ஒரு சமரசம் எட்டப்பட இப்போதும் சாத்தியம் உள்ளது என அவர்கள் கூறுகின்றனர்.

இஸ்ரேலும் ஹமாஸும், மத்தியஸ்தர்கள் மூலமாக இதைச் செய்யலாம் என்றும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

அமெரிக்கா காஸாவை கைப்பற்றி, அங்கு வசிக்கும் 2 மில்லியன் பாலத்தீனர்களை நிரந்தரமாக இடமாற்றம் செய்து மறுசீரமைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்ற டொனால்ட் டிரம்பின் சர்ச்சைக்குரிய முன்மொழிவை ஹமாஸ் செவ்வாய்க்கிழமை அன்று மீண்டும் நிராகரித்தது

1948இல் இஸ்ரேல் உருவாக்கப்பட்டதைத் தொடர்ந்து நடந்த போருக்கு முன்னரும் போரின் போதும் நூறாயிரக்கணக்கான பாலத்தீனர்கள் தப்பி ஓடினர் அல்லது தங்கள் வீடுகளில் இருந்து விரட்டப்பட்டனர். அது போன்ற 'நக்பா' (பேரழிவு)மீண்டும் நிகழுமோ என்று பாலத்தீனியர்கள் அஞ்சுகின்றனர்.

ஐ.நா தகவலின்படி, அந்த பாலத்தீன அகதிகளில் பலர் காஸா போய் சேர்ந்தனர். அங்கு அவர்களும் அவர்களுடைய சந்ததியினரும், மொத்த மக்கள்தொகையில் நான்கில் மூன்று பங்காக உள்ளனர்.

மேலும் 9,00,000 பதிவு செய்யப்பட்ட அகதிகள் ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் வாழ்கின்றனர். 3.4 மில்லியன் பேர் ஜோர்டான், சிரியா மற்றும் லெபனானில் வாழ்கின்றனர்.

'டிரம்பின் கருத்து இன சுத்திகரிப்புக்கான அழைப்பு'- ஹமாஸ்

இஸ்ரேல், ஹமாஸ், பாலத்தீனம், காஸா, அமெரிக்கா

பட மூலாதாரம்,GETTY IMAGES

டிரம்பின் கருத்துக்கள் 'இனவெறி மற்றும் பாலத்தீனிய அடிப்படையை அழிப்பதை நோக்கமாகக் கொண்ட இன சுத்திகரிப்புக்கான அழைப்பு' என்று ஹமாஸ் விவரித்தது.

ஐ.நா, அரேபிய நாடுகள் மற்றும் பிற உலகத் தலைவர்களும், மனித உரிமைக் குழுக்களும், பாலத்தீன ஆணையமும் அவரது கருத்துக்குக் கண்டனம் தெரிவித்தனர்.

'எந்தவொரு கட்டாய இடப்பெயர்வும் சர்வதேச சட்டத்தின் கீழ் தடை செய்யப்படும் என்றும், அது இன சுத்திகரிப்புக்கு சமமானதாகும்' என்று ஐ.நா. எச்சரித்தது.

''காஸா குறித்த அமெரிக்க அதிபரின் புரட்சிகர பார்வையை பாராட்டுவதாக'' நெதன்யாகு தெரிவித்துள்ளார்.

முன்னதாக செவ்வாய்க்கிழமை அன்று, ஹமாஸின் மூத்த அதிகாரி பசிம் நயீம் பிபிசியிடம் பேசியபோது, "அமெரிக்கா, கத்தார் மற்றும் எகிப்து நாடுகளின் மத்தியஸ்தர்கள் தலையிட்டு போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீண்டும் நடைமுறைப்படுத்துவதற்கான வழி இன்னும் திறந்திருக்கிறது" என்று கூறினார்.

"இந்த ஒப்பந்தம் தோல்வியடைவதை நாங்கள் விரும்பவில்லை. இதில் எந்தவொரு தடைகளையும், சவால்களையும் தவிர்க்க நாங்கள் அதிகபட்சமாக முயற்சி செய்கிறோம். எனவே மத்தியஸ்தர்கள் மூலம் நிலைமை சரிசெய்யப்பட்டால், அடுத்த சனிக்கிழமை கைதிகளை ஒப்படைக்க நாங்கள் தயாராக இருக்கிறோம்." என்றும் அவர் கூறினார்.

வடக்கு காஸாவில் உள்ள பகுதிகளுக்கு பாலத்தீனியர்கள் திரும்புவதை பலமணிநேரங்கள் தாமதப்படுத்தியது முதல் உணவு, மருத்துவம் மற்றும் தங்குமிடம் போன்ற அவசர உதவிகளின் விநியோகங்களை தடுத்தது உட்பட, இஸ்ரேல் போர்நிறுத்த உடன்படிக்கையை தொடர்ந்து மீறுவதாக அவர் குற்றஞ்சாட்டினார்.

இதுவரை விடுவிக்கப்பட்டவர்கள் எத்தனை பேர்?

இஸ்ரேல், ஹமாஸ், பாலத்தீனம், காஸா, அமெரிக்கா

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, முதல் கட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தின்படி 33 இஸ்ரேலிய பணயகைதிகள் விடுவிக்கப்பட வேண்டும். அதில் 16 பேர் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

இஸ்ரேல் - ஹமாஸ் போர் நிறுத்தம் கடந்த மாதம் அமலுக்கு வந்தது. போர் நிறுத்த ஒப்பந்தப்படி, இஸ்ரேல் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள பாலத்தீன கைதிகள் விடுதலைக்கு ஈடாக, ஒவ்வொரு கட்டமாக ஹமாஸ் தன் வசமுள்ள இஸ்ரேலிய பணயக்கைதிகளை விடுவிக்கும்.

விடுவிக்கப்படும் ஒவ்வொரு இஸ்ரேலிய பணயக்கைதிக்கும் 30 பாலத்தீன கைதிகளை இஸ்ரேல் சிறைகளில் இருந்து விடுவிக்க வேண்டும் என்பது நிபந்தனை.

முதல் கட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தின்படி 33 இஸ்ரேலிய பணயகைதிகள் விடுவிக்கப்பட வேண்டும். அதில் 16 பேர் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். 17 இன்னும் விடுவிக்கப்பட உள்ளனர்.

அந்த 17 பேரில் 8 பேர் இறந்துவிட்டதாக இஸ்ரேல் கூறுகிறது. மற்றொரு ஒப்பந்ததின்படி தாய்லாந்தை சேர்ந்த 5 பேரை ஹமாஸ் விடுவித்தது.

இதற்கு இணையாக 1900 பாலத்தீன கைதிகளை இஸ்ரேல் விடுவிக்கும். அதில் நூற்றுக்கணக்கானவர்கள் விடுதலையாகியுள்ளனர்.

கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் 7ஆம் தேதி இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய எல்லை தாண்டிய தாக்குதலில் 1,200 பேர் கொல்லப்பட்டு, 251 பேர் பணயக்கைதிகளாக கொண்டு செல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, ஹமாஸை ஒழிப்பதற்கான நடவடிக்கைகளில் இஸ்ரேல் இறங்கியது.

இந்த தாக்குதலில் காஸாவில் 46,700 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என்று ஹமாஸ் நடத்தும் சுகாதாரத்துறை தெரிவித்தது. அங்குள்ள 23 லட்சம் மக்கள்தொகையில் பெரும்பாலானவர்கள் இடம்பெயந்தனர். மேலும் அங்கு பரவலான சேதம் ஏற்பட்டுள்ளது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.